ஆண்டியை அரவணைத்தான், அரசனை எதிர்த்தான், தலைமை நீதிபதியை நீயா நானா என்று கேட்டான் மாட்டுக்காரப் பையன் கர்பால் சிங்! அந்த கர்ஜிக்கும் சிங்கத்தின் குரல் இன்று அதிகாலையில் அடங்கிவிட்டது.
“குற்றம் புரிந்தவன் கொற்றவனேயானாலும் குற்றம் குற்றமே” என்று படித்திருக்கிறோம்; பலர் பேசக் கேட்டிருக்கிறோம். ஆனால், இந்நாட்டில் குற்றம் புரிந்த கொற்றவன் மீது குற்றம் சுமத்திய ஒரே ஒரு வழக்குரைஞர் கர்பால் சிங் மட்டுமே. அதற்காக அக்கொற்றவன் அவருடைய நாய்களில் ஒன்றுக்கு கர்பால் சிங் என்று பெயரிட்டார். புண்ணியம் செய்த நாய்!
சட்டம், நீதி ஆகியவற்றுக்காக ஆட்சியாளர்களுடன் மோதிய ஒரே வழக்குரைஞர் கர்பால் சிங். பேராக் மாநில அரசியல் நெருக்கடியின் போது அம்மாநில ஆட்சியாளர் மேற்கொண்ட முறை குறித்து கேள்வி எழுப்பி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதற்காக அரசால் தொடரப்பட்ட வழக்கின் முதல் சுற்றில் அவர் வெற்றி பெற்றாலும், மேல்முறையீட்டின் வழி கர்பால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எதையும் எதிர்க்கும் சிங்கம் அதையும் எதிர்த்தது. கர்பால் சிங்கை உள்ளே தள்ளி அவரது அரசியல் வாழ்க்கையை அழிக்க வேண்டும் என்று கனவு கண்ட அரசியல்வாதிகள், சமயவாதிகள் போன்றோரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டார் கர்பால். இனி அவரை யாரும் பிடிக்க முடியாத அளவிற்கு அவர் ஏழை எளிய மலேசிய மக்களின் நிரந்தர ஹீரோ ஆகிவிட்டார்.
பினாங்கில் ஒரு சாதாரண மாடு வளர்த்து பிழைத்து வந்த குடும்பத்தில் பிறந்த கர்பால் சிங்கையில் சட்டம் பயின்று வழக்குரைஞரானார்.
மே 13, இனக் கலவரத்திற்குப் பின்னர், நாட்டில் பல்லின சுபிட்சத்தை உருவாக்குவதற்காக தோற்றுவிக்கப்பட்ட டிஎபியில் 1970 ஆம் ஆண்டில் இணைந்தார்.
1974 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கெடா மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார். பின்னர், பினாங்கு சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்த்டுக்கப்பட்ட கர்பால் 21 ஆண்டுகளுக்கு அப்பதவியில் தொடர்ந்தார். 1999 இல் அவர் தோல்வி கண்டாலும், 2004 ஆண்டிலிருந்து இன்று வரையில் அவர் புக்கிட் குளுகுர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார்.
கர்பாலின் சட்ட மற்றும் நாடாளுமன்ற வாழ்க்கை சூறாவளி நிறைந்தது. அம்மன்றங்களின் உறுப்பினர் என்ற முறையில் தமது உரிமையை நிலைநிறுத்துவதில் அவர் விடாப்பிடி மன்னனாக இருந்தார்.
பினாங்கு மாநில சட்டமன்ற தலைவர், கர்பாலை அவையிலிருந்து வெளியேற்ற உத்தரவு பிறப்பித்து அவரை வெளியேற்ற போலீசாரை அழைத்தார். அவையினுள் நுழைந்த போலீசாரிடம், “Don’t touch me. You have no business to be in this House” என்று கர்பால் முழங்கியதைக் கேட்டு போலீசார் திகைத்து நின்றனர். கர்பால் தாமாகவே வெளியேறினார். கர்பாலை வெளியேற உத்தரவிடுவது, அவரை நாடாளுமன்ற அவையிலிருந்து தள்ளி வைப்பது, ஆறு மாதங்கள் வரையில் கூட, போன்ற சம்பவங்கள் ஏராளம். ஆனால், இவை அனைத்தும் அவரின் திண்மையைச் சிதைப்பதில் தோல்வி கண்டன. சக்கர நாற்காலில் வாழ்ந்தாலும் “Singh is King” என்றார்!
மகாத்மா காந்தியாலும் ஜோன் கென்னடியாலும் கவரப்பட்ட கர்பால் சிங், மரண தண்டனையைக் கடுமையாக எதிர்த்தார். அதிலும், குறிப்பாக போதைப் பொருள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் கட்டாயமாக்கப்பட்டிருக்கும் மரண தண்டனையை அவர் எதிர்த்தார். பல வழக்குகளில், வெளிநாட்டவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் உட்பட, அவர் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
இரு விவகாரங்கள் கர்பாலுக்கு அவருடைய உயிருக்கும் மேலானதாக இருந்தன. இஸ்லாமிய ஹூடுட் சட்டத்தை கர்பால் கடுமையாக எதிர்த்தார். இந்த விவகாரத்தில் பாஸ் கட்சிக்கு சிம்மசொப்பனமாக இருப்பது கர்பால் சிங்தான். இனிமேல், ஹூடுட் சட்ட விவகாரத்தில் டிஎபியின் நிலைப்பாட்டில் ஆட்டம் காணலாம்.
மலேசியா ஒரு சமயசார்பற்ற நாடு. நமது அரசமைப்புச் சட்டம் நமது நாடு சமயச் சார்பற்ற நாடு என்று திட்டவட்டமாக உறுதிப்படுத்தியுள்ளது என்பதை வலியுறுத்தி வந்ததில் கர்பாலுக்கு இணை கர்பால்தான். பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும் தலைவர்களுக்கும் மலேசியா ஒரு சமயச் சார்பற்ற நாடு என்பது தெரியும். ஆனால், அவர்கள் வாய் திறப்பதில்லை. கர்பாலுக்கு மலேசியா ஒரு சமய சார்பற்ற நாடு என்பது அவரது உரிமை. அந்த உரிமைக்காக அவர் உயிர்விட தயாராக இருந்தார். இஸ்லாம் என்பது அதிகாரபூர்வ சமயம் என்பதை ஏற்றுக்கொண்ட அவர், மலேசியா ஓர் இஸ்லாமிய நாடு என்பதை தாம் இறந்தாலும் விடமாட்டேன் என்பதை வலியுறுத்த “over my dead body” என்று கர்ஜித்தார். இந்த ஒரு விவகாரத்தில் கர்பால் கிட்டத்தட்ட இந்நாட்டிலுள்ள அனைத்து சமயவாத கொள்கை கொண்ட அரசியல் கட்சிகளின் முதல் எதிரியாக விளங்கினார் என்று கூறினால் மிகையாகாது.
இன்னொரு விவகாரத்திலும் கர்பால் மிகக் கடுமையான கொள்கையைப் பின்பற்றினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட சட்ட மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலுக்குப் பின்னர் கட்சி தாவுதலை அவர் கடுமையாக எதிர்த்தார். அவ்வாறான செயல் மக்களையும் ஜனநாயக முறையையும் அவமதிப்பதாகும் என்பது அவரது நிலைப்பாடு.
2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர், “செப்டெம்பர் 16” இல் அன்வார் இப்ராகிம் ஓர் அரசாங்கத்தை அமைப்பதற்காக கட்சி தாவுதல்களுக்கு தீவிரமான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன என்ற தகவல் ஒவ்வொரு நாளும் வெளியாகிக் கொண்டிருந்த வேளையில், இக்கீழறுப்பு செயலுக்கு அன்வார்தான் பின்னணி என்று உணர்ந்த கர்பால், அன்வாரிடம் “Resign and Get out” என்று உத்தரவே இட்டார் என்று கூறலாம். அன்றே “செப்டெம்பர் 16” முடிவிற்கு வந்தது. அதன் வழி ஏற்பட்டிருக்கக்கூடிய ஒரு பெரும் கலவரம் நிறுத்தப்பட்டது. இதனைச் சாதிக்கக்கூடிய தகைமை பெற்றிருந்த ஒரே தலைவராக கர்பால் விளங்கினார். அதற்காக, இந்த நாடும் இந்நாட்டு மக்களும் கர்பாலுக்கு என்றென்றும் நன்றிக் கடன் பட்டுள்ளனர்.
மாட்டுக்கார பையன் கர்பால் மகத்தான தலைவரானார். இன்றைய தினத்திலிருந்து அவர் நம்முடன் இருக்க மாட்டார். ஆனால், நமது நாட்டின் மற்றும் நமது மக்களின் மகத்தான நல்வாழ்க்கைக்காக நமது நாடு ஒரு சமய சார்பற்ற நாடு என்பது நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பது போன்ற பல முக்கிய பொறுப்புகளை நம்மிடம் ஒப்படைத்துள்ளார். அவற்றுக்காக போராட வேண்டியது நமது கடமை. போராட்டம் ஒன்றே வெற்றிக்கான ஒரே வழி. “ஒருவர் எப்போதும் வெற்றி பெற்றுக் கொண்டே இருக்க முடியாது. ஆனால், அதற்காக முயற்சி செய்யாமலும் இருக்கக் கூடாது” என்று கர்பால் நமக்கு ஊக்க மூட்டியுள்ளார். நமது உரிமை, நீதி போன்றவற்றுக்காக நாம் போராடுவோம். அதன் வெற்றியை கர்பாலுக்கு காணிக்கையாக படைப்போம்.
– செம்பருத்தி குழுவினர்
சிறந்த மாமனிதர் !
இன்றைய நாள் மிகவும் வேதனையான ஒரு நாள், இவர் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் , மாபெரும் மலை சாய்ந்தது என்று UMNOKKARAN கூத்தும் கும்மாளமும் அடிப்பான் , இந்த விபத்து ஒரு சிறு குழந்தையை கேட்டாலும் சதி என்பதையே கூறும் .இறைவன் ஒருவன் இருக்கிறான் கர்பால் குடும்பத்தினரே இந்த விபத்துக்கு காரணமானவன் வெளி நாட்டிலே ஒளிந்து கொண்டு கொக்கரிக்கிறான் , சிங்க் இனத்தவர் இந்தியன் நல்ல தமிழன் நல்ல மலாய் இனத்தவன் நல்ல சீனர்கள் வெகுண்டெலெந்து குறிப்பிட்ட அவனையும் அவன் குடும்பத்தினரையும் காளி அவதாரம் கொண்டு அழித்திடல் வேண்டும்
I LOVE AND SALUTE YOU KARPAL I REALLY CANT TAKE IT ‘ MANY TIME I WANTED TO MEET YOU BUT I DIDNT MAKE IT , BUT WHEN I HEARD THE NEWS YOU AR GONE <NO WORDS TO EXPRESS MY SORROWness ' WHEN I WROTE THIS MY TEARS OUT . I AM INDIAN BUT I SALUTE YOU AS I BELIEVE TER IS NO RACE BARRIER BETWEEN NICE PEOPLE
கர்பால் சிங் வீட்டிற்கு செல்லவேண்டிய விலாசம் இதுவே,144-A , Jalan Utama , Western Road , Penang .
நெஞ்சி வலிக்குது ,,ஒரு புலியை இழந்து விட்டோம் என்று குமுறுது ,,,
ஓம் நாம சிவாய…!!!!!ஓம் நாம சிவாய…!!!!!ஓம் நாம சிவாய…!!!!!ஓம் நாம சிவாய…!!!!!ஓம் நாம சிவாய…!!!!!ஓம் நாம சிவாய…!!!!!ஓம் நாம சிவாய…!!!!!ஓம் நாம சிவாய…!!!!!
சனநாயக செயல் கட்சி சீறி குவாங் கிளையின் ஆழ்ந்த அனுதாபங்கள்.அன்னாரின் ஆன்மா அமைதி அடைய இறைவனை இறைஞ்சுகின்றோம்
பொருக்கி இப்ரலிம் அலி, ஜூல்கிப்லி இரூவரையும் அம்னோ ஆதரிக்கும் வரை அடுத்த தேர்தலில் பாரிசானுனுக்கு சங்குதான். நீண்ட இடைவேளைக்கு சந்திப்பதில் மகிச்சி.
சிங்கம் சாய்ந்தது! சிங்கம் சாய்ந்தது!! சில்லறைகள் இனி சீண்டலாம் சிறிது காலம் பொறுத்திருப்போம்; சிகரத்தை அடையும் நாள் வரும்!
சீக்கியராக இம்மண்ணில் பிறந்தார் சீர்மிகு மலேசியனாக் வாழ்ந்தார்!! சீக்கிரமாய் நம்மை விட்டுப் பிரிந்தாலும்; சீலமிகு தலைவனாய் நெஞ்சில் நிற்பார்!!!
துயரம் தங்காமல் வருகின்றது கண்ணீர், என்ன செய்வது கடவளின் அழைப்பு அதுவே , உனக்காக மன்றாடகிரும
அரசியல்வாதிகளே, இயன்றால் கர்பாலைப்போல் இமயமாய் வாழுங்கள்…. இறப்பினும், மாமனிதர் என்ற புகழோடு மக்களின் மனதில் என்றென்றும் நிலை கொள்வார் அன்னார் கர்ப்பால் அவர்கள்!!!! ஆழ்ந்த அனுதாபங்கள்…!!!!
சிங்கத்தின் கால்கள் பழுது பட்டிருந்தாலும் சீற்றம் குறையவில்லை. அதெப்படி.. முதல் விபத்து, கால்கள் பாதிப்பு, இரண்டாவது விபத்து உயிரே போச்சு..
வாழ்க வும் புகழ்,ஜனனாயக போராட்டவாதி,வருவார் வும் போல் ஒருவர்,சந்தேகமே.இருப்பினும் வும் பிம்பத்தை விட்டு சென்றிறுக்கிறீர்,தொடரட்டும் வும் பனியை.நல்லது செய்திருப்பின் வும் குரு வந்து அழைத்து செல்வார் சொர்கத்துக்கு,வாழ்க நாராயண நாமம்.
இந்தே நாட்டின் சிறேந்த தலைவர் அவர். என் சிறு வயிதிளிர்ருந்தே அவர் கர்ஜின்னைஏய் கேட்டுகொண்டிரிகிறேன். இனி இந்த நாட்டின் அப்படி ஒரு தலைவர் பிறப்பேது எப்போது?
நான் இதை சிறிதளவும் எதிர்பார்கவில்லை. SP சீனி சகோதரர்கள் இவருக்கு முன் சிம்ம சொப்பனமாக இருந்தனர் -அவர்களும் இப்போதில்லை. அம்னோ ஊழல்வாதிகளுக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கும் ஆனால் நாட்டு சிந்திப்பவர்களுக்கு?
சிறந்த மா மனிதர்……அன்னாருக்கும் அவர்தம் குடும்பத்தார்க்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்…….
சிங்கம் எப்போது சிங்களா தான் வரும் என்பதக்கு ஏற்ப வாழ்ந்து காட்டியவர் மாண்புமிகு கர்பால் சிங் .நாடாளு மன்ற உறுப்பினராக , சட்டமன்ற உறுப்பினராக மக்கள் அவையிலும் சடமன்றதிலும் ஆளும் தேசிய முன்னணிக்கு எதிராக மா பெரும் சிங்கமாக கர்ஜித்து வந்தவர் நாம் நாட்டிலே கர்பால் சிங் மட்டுமே என்றல் அது மிகையாகாது.அவர் புந்து கலக்கியது சட்ட மன்றம் மற்றும் நாடாளு மன்றன் மட்டும் மல்ல , நீதி மன்றங்களில் தனது வாதத் திறமையால் பலரை துக்கு கைற்றிளிருந்து காப்பாற்றிய மா பெரும் சட்ட மேதை என்பதை இந்த நாட்டில் உள்ள அணைத்து குடிமகனும் எற்றுக் கொல்லப்பட்டவர்.
தனது வாழ் நாள் முழுவதும் கொள்கை பிடிப்போடு வாழ்ந்து காட்டியவர்.ஆட்சி அதிகாரத்திக்கு பயந்து நெளிந்து போகமாட்டார்.நியாயத்தை நிலை நாட்ட துணிந்து குரல் கொடுப்பார்.அது மன்னாக இருந்தாலும் குற்றமாக இருந்தால் எதிர்த்து குரல் கொடுப்பதில் அஞ்சா நெஞ்சன் கர்பால் மட்டுமே என்பதை இந்த நாடே அறியும்.பேரக் மாநில மன்னர்ரை 2009 ஆம் ஆண்டு எதிர்த்து குரல் கொடுத்த மா வீரன் என்ங்கல் கர்பால் என்று குரிக்கொல்வதில் நாட்டு மக்களே பெருமை கொள்வர்.
இப்படி பட்ட ஒரு மா பெரும் சட்ட மேதை இன்று நாடு இழந்து விட்டது என்பது மன வேதனைக்குரியாது.இந்த வேதனையோடு அவர் காட்டிய வழியில் தொடர்ந்து நாமும் குரல் கொடுப்போம்.நீதியான மலேசியாவை உருவாக்க பாடு படுவோம்.நம் நாடு சமய சார்பற்ற நாடு என்பதை உணர்ந்து அதனை நிலை நாட்ட போராடுவோம் என்று அலைகிறேன் வாரீர்.
நமது உரிமைக்காக நாம் போராட வேண்டும் என்றால் ம இ கா ,IPF , கெரக்கான் , PPP போன்ற கட்சி கலை விட்டு வெளியேறி DAP , KEADILAN போன்ற கட்சிகளில் இணைந்து போராடுவோம்.மேல் குறிப்பட பட்ட கட்சிகள் அனைத்தும் ஆமாம் சாமி போடும் கட்சிகள்.அவர்களுக்கு உரிமைக்காக போராட தெரியாது.அந்த கட்சி தலைவர்கள் அடிமையை இருப்பதில் சுகம் காணும் கொத்தடிமைகள்.ஆகவே கர்பால் போன்ற நல்ல தலைவர்களை உருவாகிய கட்சிகளில் இணைத்து போராடுவோம் என்று உறுதி எடுத்துக் கொள்வோம் .கர்பால் நாமம் வாழ்க, அவர் காட்டிய வழியில் இனி நமது பயணம் என்று முடிவு செய்து செயல் படுவோம் வாரீர் என்று அனைவரை அழைக்கிறேன் வாரீர்.
ஒரு சகாப்தம் இன்று உறங்கி விட்டாலும்.., அதன் விதை ஆழ மரமாய் பல விழுதுகளை உருவாகி உள்ளது ..!!!! அன்னாருக்கு என் மனம் நிறைந்த ஆத்ம சாந்தி….ஓம் நமசிவாய
RIP SIR !!!!!!
மலேசிய அரசியல் அரங்கில் சிங்கமாக கர்ஜித்து வந்தவர் கர்பால் சிங் என்றால் அது மிகையாகாது. மலேசியர்கள் எல்லா இன மக்களாலும் பாராட்டப்பட்ட வழக்கறிஞர் கர்ப்பால் சிங் அவர்களின் புகழ் என்றென்றும் பேசப்படும். அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
புலியின் பாய்ச்சலும், சிங்கத்தின் கர்ஜணையும் அரசியல் அரங்கில் வலம் வருவது இனி நின்றுபோனாலும் கர்பால் என்ற அந்த மாமனிதர் மலேசியா மக்களுக்காக விட்டுசென்ற சட்ட அடையாளம் நம்மோடு காலகாலத்துக்கு உறவாடிக்கொண்டிருக்கும்.”கர்பால் த கிரேட்” என்று சொல்லத்தக்க வீரச்செயல்களை செய்து நம் உணர்வுகளில் ஐக்கியமாகிய அன்னாரின் ஆத்மா இறைவனடி இளைப்பாற பிரார்த்திப்போம்!
அவருடைய ஆத்மா சாந்தி அடைய பிராதிப்போம்
மலேசியா மக்கள் ஒரு உன்னத மா மனிதரை இழந்து விட்டது…அன்னாரின் ஆத்மா சாந்தி பெற இயற்ட்கை அன்னை அருள் புரிவாளாக..அன்னாரின் அகால மரண செய்தி கேட்டு கண்ணீர் மல்கிய அனைத்து மலேசியா மக்களுக்கும் அழ்ந்த அனுதாபங்கள் .
துணிச்சல் மிக்க கர்ப்பால் அவர்கள் என்றென்றும் மலேசியர்களின் உள்ளங்களில் இறவாப் புகழுடன் வாழ்வார். அண்ணாரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தியடைய பிரர்த்திப்போம்.
உங்களை மறவோம் நல்ல மானிடரே உங்களை வழியனுப்ப மனம் வரவில்லை வேதனை தாளவில்லை பட்டுவை இழந்தோம் டேவிட்டை இழந்தோம் உங்களையும் இழந்தோமே எங்கள் எதிர்பார்ப்பை அறியாமல் சென்றாயே எமது போற்றுதல் குரிய தலைவனே உம புலி உறுமலை இனி எங்கே கேட்பேன் , உங்களுக்கு விடை கொடுக்க என்னால் முடியாது .
இறுதிப் பயணம்
ஊரிருக்கும் உறவிருக்கும்
ஒற்றுமையாய்ச் சேர்ந்திருக்கும்
நார்தொடுத்த மலர்களெல்லாம்
நறுமணத்தை இறைத்திருக்கும்
சேர்ந்திருக்கும் மக்கள்விழி
திரள்மணிபோல் நீர்வடிக்கும்
யாரிருந்து என்னபயன?
என்பயணம் இறுதியென்பேன்
நல்லதிரு விளக்கிருக்கும்
நாற்புறமும் ஒளியிறைத்திருக்கும்
உள்ளமெலாம் தூய்மைபெற
ஊதுபத்தி மணமிருக்கும்
எல்லையிலா வேதனையில்
இதயம்பல துடித்திருக்கும்
நில்லென்றா லென்பயணம்
நிற்பதில்லை இறுதியென்பேன்
அலங்கரித்த தேரிருக்கும்
அதைத்தூக்க ஆளிருக்கும்
துலங்குமணிப் பெட்டியிலே
துயரறியா உடலிருக்கும்
கலங்கிடாத இதயமெல்லாம்
கண்ணீரால் நனைந்திருக்கும்
பலரிருந்தும் என்னபயன்?
பயணமிது இறுதியென்பேன்
வாழ்ந்தகதை தெரிந்திருக்கும்
வாய்கள்சில அதையளக்கும்
சூழ்ந்தசில உறவுவழி
தொகைக்கணக்கில் மிதந்திருக்கும்
வீழ்ந்தழுது மனைவிமக்கள்
வீதிவரை கலங்கிநிற்கும்
ஆழ்ந்ததுயில் அணைத்தவுடல்
அதன்பயணம் உறுதியென்பேன்- கவியரசு சோமசன்மா
எங்கள் சிங்கத்தின் கர்ஜனை ஓய்ந்தது…
இனி மலேசிய மண்ணில் ‘மதம்’ கொண்ட யானைகள் பிளிரல் அதிகரிக்குமே !!
சாத்தானின் அலறல்கள் ஓங்கி ஒலிக்குமே !!
அரசியல் ஆழம் அறிந்தவர்கள் இதை நன்கு உணர்ந்திருப்பர்..பல முறை ம.இ.கா இளைஞர் பிரிவுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மாண்புமிகு கர்ப்பால் மீது police புகார்க் கொடுக்கும் போது,இவர்களின் அறியாமையைக் கண்டு வேதனை அடைந்துள்ளேன்…அரசியல்வாதியாக அல்ல,இந்துப் பெண்ணாக !! நம் இன\சமய அடையாளங்களுக்குச் சட்டரீதியான காவலராக இருந்தவர் மாண்புமிகு கர்ப்பால்..அவரின் கனவு நனவாகுமா?
சிவகாமி தேவி சோமசன்மாவுக்கு எனது வாழ்த்துக்கள்..கவிஞர் சோமாவின் கவிதைகளை ரசித்தவன் ஐயா அவர்களை சந்தித்து பேசியும் உள்ளேன்.
சகோதரி சிவகாமி தேவி கூறியது, நம் இனத்திற்கு தோழர் கர்ப்ப்பால் ஆற்றியப் பங்கு என் நினைவிற்கு வருகிறது, 1983ம் ஆண்டு. ‘இந்தியனையும் பாம்பையும் கண்டால் முதலில் இந்தியனை அடித்துக் கொள்’, என நாடாளுமன்றத்தில், அன்றைய பாசிர் புத்தே பாரிசான் நாடாளுமன்ற உறுப்பினர் வான் நஜிப் என்பவன் கூறினான். வெகுண்டெழுந்த கர்ப்பால் சிங், ‘ தைரியமிருந்தால் நாடாளுமன்றத்தின் வெளியே வந்து சொல்லிப் பாருங்கள்,’ என சவால் விட்டார். அதுமட்டுமல்ல, ‘மாண்புமிகு சாமிவேலு அவர்களே, அவன் உங்களையும் சேர்த்துத் தான் சொல்கிறான், ஏன் மெளனமாக உட்காந்திருக்குரீர்கள்?’ என்று கத்தினார்.
சிவகாமி தேவியின் கவிதை மனதை கனமாக்கியது. தன்னகரில்லா மனிதர் மண்ணில் மறைந்தார்! அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை இறைஞ்சுகிறேன்.
இவர் மக்களை BN நம்பவேண்டாம் என்று இறுதியாக என்னிடம் கூறி சென்றதை இன்னும் என்னால் மறக்கமுடியவில்லை மக்களே BN கமுக்க நாம் அனைவரும் தர்ம யுத்தம் செய்வோமாக
நன் மக்கள் அனைவரும் ஒரே அணியாக barisan nasionalai விரட்டி அடிப்பதே மானுட தர்மம் அநீதிகளின் தலைவன்தான் najiB
நியாயம் அழியாது . அவர் வலி நடப்போம்
கர்பால் மனித நேயம் உள்ள மனிதர்கள் மறக்க முடியாத ஒரு மாமனிதர் என்பதுதான் உண்மை உலகில் வாழ்ந்து தன் வாழ் நாள் முழுவதும் நீதிக்காக போராடியவர் இவருடைய இறுதி ஆசை BN ஆட்சியிளிரிந்து நீக்க வேண்டும் என்பதையே அவருடைய இறுதி ஆசையாக என்னிடம் மத்தியான உணவுக்கு முன்னாள் கூறியதை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை
நீங்கா அன்பின் ஒளிவிளக்காய் என்றும் கர்பாலின் திருநாமம் மலேசியாவில் நிலைத்திருக்கும்.
வாழ்க உன் புகழ்