கா. ஆறுமுகம். தீபாவும் வீரனும் 2003-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்து மத முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். அத்திருமணம் முறைப்படி திருமணச் சட்டத்தின் கீழ் பதிவும் செய்யப்பட்டது. ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு 2012-இல் வீரன் இஸ்லாத்தைத் தழுவினார். அவர்களுக்கு 6 வயதில் ஒரு மகனும் 9 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
தீபாவின் கதை
இஸ்வான் வீரன் அப்துல்லா என்று பெயர் மாற்றிக் கொண்ட தனது கணவருடன் தீபாவால் ஓர் இந்துவாக சட்டப்படி வாழ இயலாது.
தீபாவின் எதிர்காலம் சட்டப்படி எப்படி அமையும்? அவர்களது குழந்தைகள் இந்துவாக வளர்வார்களா அல்லது முஸ்லீமாக வளர்வார்களா? யாரிடம் வளர்வார்கள்?
இதற்கு யார் பதில் கூறினாலும் அதில் நீதியும் தர்மமும் இருந்தால் பதில் இதுவாகத்தான் இருக்கும்.
முதலாவதாக, தீபா இஸ்லாத்தைத் தழுவ விரும்பாததால் அவர் வீரனிடமிருந்து விவாகரத்தைப் பெற வேண்டும்.
இரண்டாவது, அவர்களின் குழந்தைகள் இருவரும் அவர்களது பெற்றோர் இந்துக்களாக வாழ்ந்த போது பிறந்ததால் அவர்கள் பிறப்பால் இந்துக்கள். எனவே அவர்கள் 18 வயதுக்குக் குறைவாக இருந்தால் அவர்கள் மதம் மாறுவதை அவர்களது பெற்றோர் அல்லது கவனிப்பாளர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று அரசமைப்பு சட்டம் 12 (3) சொல்கிறது.
இவர்களது பெற்றோர் வெவ்வேறு மதத்தில் இருப்பதால், அதை இருவரிமே முடிவு செய்ய இயலாத சூழ்நிலை உள்ளது. அதனால் அக்குழந்தைகளுக்கு 18 வயது வரும் வரையில் அவர்களை மதம் மாற்ற இயலாது. எனவே இரு குழந்தைகளும் 18 வயது வரை இந்துக்களாகவே இருக்க வேண்டும்.
அமைச்சரவையின் முடிவு (2009) இப்படித்தான் இருந்ததாக முன்னாள் நீதித்துறை அமைச்சர் முகமட் நஸ்ரி கூறுகிறார்.
ஆனால், இஸ்லாத்தைத் தழுவிய வீரன் 2012-இல் தனது இந்து மனைவியான தீபாவுக்குத் தெரியாமல் இந்துக்களாக இருந்த தனது குழந்தைகளின் மதத்தை இஸ்லாமாக மாற்றினார். பிறகு குழந்தைகள் இருவரும் தன் பாதுகாப்பில் வாழ்வதற்கான அனுமதியையும் சிரம்பான் ஷரியா நீதிமன்றத்தில் பெற்றார்.
இது சட்டப்படி தவறு என்றும், தனக்கு விவாகரத்தும் குழந்தைகளும் வேண்டும் என்றும் கடந்த ஆண்டு தீபா வழக்குத் தொடுத்தார்.
இரண்டு தரப்பினரையும் விசாரித்த சிரம்பான் உயர் நீதீ மன்ற நீதிபதி சபாரிய முகமாட் யுசோப், 7.4.2014-இல் தீபாவுக்கு நீதி வழங்கினார். அதாவது அவருக்கு விவாகரத்தும் இனி குழந்தைகள் அவரிடம் தான் இருக்க வேண்டும் என தீர்பளித்து, வீரன் வாரம் ஒரு முறை குழந்தைகளைக் காண அனுமதியளித்தார்.
இதன்வழி ஷரியா நீதிமன்றத்தின் முடிவு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் குழந்தைகளின் மதமாற்றம் பற்றிய முடிவை நீதிமன்றம் செய்யவில்லை.
இஸ்வான் என்ற வீரனின் கதை
வீரன் தான் ஒரு முஸ்லிம் என்றும் குழந்தைகளின் மதம் இஸ்லாம் என்பதால், இந்துவாக உள்ள தீபாவால் அவர்களை வளர்க்க இயலாது, அதற்கான தகுதி தனக்கு மட்டுமே உண்டு என்று வாதிட்டார். இஸ்லாமிய அரசு சார்பற்ற அமைப்பான காசே சயாங்கில் பணியாற்றும் வீரன் தீர்ப்பிற்குப் பின்னர் கோபத்துடன் காணப்பட்டார்.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்போவதாக அறிவித்தார்.
உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய இரண்டாவது நாள் காலையில் தீபாவின் வீட்டுக்குக் காரில் வந்த வீரன், தனது மகனைக் கைப்பற்றினார். தற்காக்க வந்த தீபாவை தள்ளிவிட்டு தன் மகனுடன் தப்பிச் சென்றார்.
குழந்தைகளைப் பாதுகாக்கும் தகுதியை ஷரியா நீதிமன்றம் தனக்கு கொடுத்துள்ளதாக வீரன் வாதிடுகிறார்.
உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக வீரன் செய்தது ஒரு கிரிமினல் ஆள்கடத்தல் குற்றம் என்று தீபா போலிஸில் புகார் செய்தார். ஆனால், போலிஸ் இது இரண்டு நீதிமன்றங்களுக்கும் இடையே உள்ள பிரச்சனை என்பதால் தலையிட இயலாது என கையைக் கழுவியது.
குழந்தைகளின் கதை
இந்துக்களாக இருந்த பெற்றோருக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளும் (மகன் 6 வயது மகள் 9 வயது) வீரனால் இஸ்லாத்திற்கு மாற்றப்பட்டனர். இப்போது மகன் தாயைப் பிரிந்தும் மகள் தந்தையை பிரிந்தும் சட்டத்திற்குப் புறம்பான வகையில் மதமாற்றம் செய்யப்பட்ட சூழலில் இருக்கின்றனர்.
சட்டத்தின் கதையிலுள்ள இயலாமை
ஒருவர் மேஜரான (வயது 18) பிறகுதான் தனது சமயத்தை முடிவு செய்யும் தகுதியைப் பெறுவர். ஆனால், ஒரு மைனர் (18 வயதுக்கு குறைவானவர்) மதமாற்றம் செய்ய, 1966 குழந்தை பராமரிப்பு சட்டமும் அரசமைப்பு சட்ட விதி 11(1), 12(3) மற்றும் 12(4) சட்டமும் அவருடைய கார்டியனின் (Guardian) அனுமதி வேண்டும் என்கிறது
இதை 1986-இல் சூப்ரிம் கோர்ட் ஒரு வழக்கில் நிலைநாட்டியது. சுசி தியோ என்பவர் தனது வயது 17 வயது 8 மாதம் இருக்கும் போது இஸ்லாத்தைத் தழுவினார். சுசி தியோவின் தந்தை தியோ யெங் ஹுவாட் மதமாற்றத்தை ஆட்சேபித்து அதைச்செய்த பாசிர் மாஸ் காடி மீது வழக்குத் தொடுத்தார்.
அந்த வழக்கு சூப்ரிம் கோர்ட் வரை சென்றது. அதன் முடிவு 18 வயதுக்கு குறைவானவரை மதமாற்றம் செய்யும் உரிமை பெற்றோர் அல்லது கார்டியனுக்கு மட்டுமே உள்ளது என்பதாகும்.
பெற்றோர்களில் ஒருவர் மட்டுமே மதமாற்றத்தைச் செய்ய முடியுமா?
முடியாது என்ற வகையில் சபா உயர் நீதிமன்றம் 2003-இல் தீர்ப்பு வழங்கியது. இது சாங் ஆ மீ (Chang Ah Mee) என்ற தாய், இஸ்லாத்தைத் தழுவிய தனது கணவர் தனது 2 வயது மகளை இஸ்லாத்துக்கு மாற்றியதை எதிர்த்து தொடுத்த வழக்காகும்.
2004-இல் ஷாமலா சத்தியசீலன் என்பவருக்கும் இதே கதிதான். இவரது கணவர் மருத்துவர் ஜெயகணேஷ் இஸ்லாத்தைத் தழுவியதோடு 8 மற்றும் 9 வயதுடைய அவர்களுடைய குழந்தைகளை இஸ்லாத்திற்கு மாற்றினார்.
இந்த வழக்கில் குழந்தைகளைப் பராமரிக்கும் உரிமை ஷாமலாவுக்கு வழங்கப்பட்டது ஆனால், அவர் சமயக்கல்வியையும் பன்றி உணவுகளையும் குழந்தைகளுக்கு வழங்கக்கூடாது என்றும் அப்படி செய்தால் பராமரிப்பு உரிமை ரத்து செய்யப்படும் என்று உத்தரவிடப்பட்டது.
அதோடு குழந்தைகளின் சமய உரிமை இரு பெற்றோருக்கும் இருக்கும் என்றது. முக்கியமாக ஷரியா நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை விசாரிக்கும் உரிமை கிடையாது என்றும் தீர்ப்பு வழங்கியது.
இந்த வழக்கு மேல் முறையீட்டுக்காக 2010 நவம்பர் 12ஆம் தேதி, கூட்டரசு நீதிமன்றத்திற்கு வந்த போது ஷாமலா ஆஜராக வில்லை (அவர் குழந்தைகளுடன் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார்). அதை காரணம்காட்டி நீதிபதிகள் தீர்ப்பு வழங்க மறுத்து விட்டனர். ஷாமலா ஆஜராகவில்லை என்பதற்காக முக்கியமானதாக கருதப்பட்ட மதம் மாற்றம் சார்புடைய சட்ட கேள்விகளுக்கு கூட்டரசு நீதிமன்றம் பதிலளிக்க தவறி விட்டது வருத்தத்தையும் அதன் இயலாமையையும் காட்டுவதாகவே உள்ளது.
இந்த வருடம் 2014இல் நாம் காண்பது தீபாவின் கதையாகும்.
சட்டம் எதைத்தான் சொல்கிறது?
தீபா-வீரன் இஸ்வான் வழக்கின் அடிப்படை மோதலுக்குக் காரணம் கூட்டரசு அரசமைப்பு சட்டம் 121(1A) படி சிவில் உயர் நீதிமன்றத்திற்கும் மற்றும் அதற்கு கீழ் உள்ள நீதிமன்றங்களுக்கும் ஷரியா நீதிமன்றங்களுக்கு உட்பட்ட தீர்ப்புகளுகளில் தலையிட இயலாது என்பதாகும்.
மற்றொரு பிரச்சனை, பிரிவு 3 மற்றும் பிரிவு 51(1) சீர்திருத்த சட்டம் (திருமணம் மற்றும் விவாகரத்து) சட்டத்தில் உள்ளது (LRA 1976). இச்சட்டம் முஸ்லீம்களுக்கு செயல்படுத்த முடியாதென பிரிவு 3 குறிப்பிடுகிறது. பிரிவு 51(1) படி சிவில் திருமணம் செய்து கொண்ட ஒருவர் இஸ்லாத்திற்கு மதம் மாறினால், மற்றொருவர் சிவில் நீதிமன்றத்தில் விவாகரத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்கிறது.
ஒருவர் இஸ்லாத்துக்கு மாறினால் அவருக்கு சிவில் சட்டத்தின் கீழ் தன் திருமணத்தை முறித்துக் கொள்ள எவ்வித உரிமையும் இல்லை. எனவே இஸ்லாத்தைத் தழுவிய வீரன் ஷரியா நீதிமன்றத்தின் வழிதான் திருமண முறிவை பெற இயலும்.
ஆனால் தனது இரண்டு பிள்ளைகளின் பராமரிப்பு உரிமையை சிவில் நீதிமன்றத்தில் பெற்ற தீபாவின் வெற்றி மிக குறுகிய காலமே நீடித்தது காரணம் வீரன் உயர் நீதிமன்றத்தின் ஆணையை மீறி ஒரு பிள்ளையைக் கடத்திச் சென்றார்.
முடிவுதான் என்ன?
திருமணத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வர விரும்புவர்கள் மத மாற்றத்தை ஒரு வழி முறையாக பயன் படுத்துவதை குற்றமாக்க வேண்டும். மதமாற்றம் என்பது முறையான விவாகரத்திற்கு பிறகுதான் என்றவகையில் இருக்க வேண்டும். அப்படி நடைமுறை படுத்த இயலவில்லை என்றால் மதம் மாறுபவரின் விவாகரத்து மனுவை சிவில் நீதிமன்றங்கள் செவிமடுக்க வேண்டும்.
அரசமைப்பு சட்டம் 121(1A) மாற்றப்பட வேண்டும். அதை மாற்றினால்தான் விவாகரத்து சார்ந்த வழக்குகளில் மதமாற்றம் செய்தவர்களும் சிவில் நீதிமன்றம் வழி நீதி கோரலாம்.
இதைச் செய்ய அரசியல் துணிவு வேண்டும். அது தற்போது இருப்பதாக தெரியவில்லை. இதற்கிடையில் ஹுடுட் சட்டம் வேண்டும் என்ற ஒரு முட்டாள்தனமான அரசியல் நாடகம் அரகேற்றம் கண்டுள்ளது!
அரசமைப்பு சட்டம் 121(1A) மாற்றப்பட வேண்டும். அதை மாற்றினால்தான் விவாகரத்து சார்ந்த வழக்குகளில் மதமாற்றம் செய்தவர்களும் சிவில் நீதிமன்றம் வழி நீதி கோரலாம்
இதைச் செய்ய அரசியல் துணிவு வேண்டும்.
துணிவில்லாதவர் ஏன் சமூக தலைமை ஏற்க வேண்டும் ?
தெருவில் போகிறவனா இதற்காக குரல் கொடுக்க முடியும் ?
சபை ஏறுமா ?
சமுதாயத்தை ஏமாற்றியது போதும் !உங்கள் கடமையை
செய்யுங்கள் !
அறிஞர்கள் என்று கூறிக்கொள்ளுபவர்கள் எந்தச் சட்டத்தையும் மதிப்பவர்களாக இல்லை. அதனாலயே பலப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. சமய அறிஞர்களுக்கு மாதத்திற்கு ஒருமுறையாவது “குர்சுஸ்’ தேவைப்படுகிறது. இங்கள்ள! வெளிநாடுகளில்!
நண்பர் ஆறுமுகம் அவர்களே! தீபாவின் நிலை குறித்து உங்களது வழக்கறிஞர் மன்றம் (Bar Council ) என்னதான் சொல்கிறது?
இது இஸ்லாத்தின் முறையற்ற ஒரு தீர்ப்பு எனலாம்…!சட்டம் என்ன சொல்லுதோ..அதன்படி செய்றதுதான் சரி…இங்கு என்ன சொல்லுதோ…
அதன்படி செய்றத்துக்கு நமக்கு இன்னும் மாக்கம் பத்தல….!!
மதம் மாற விரும்பினால், ஒரு சுலபமான வழி உள்ளது, பேசாமல்
கிறிஸ்துவ மதத்தில் சேருங்கள். அந்த வீட்டில் ஏசுநாதர் படமும்
இருக்கும், இந்து சாமி படங்களும் இருக்கும்,இதை நான் பல வீடுகளில்
பார்திருக்கிறேன், அங்கெல்லாம் பிரச்சனையே இல்லை ,நீதி மன்றம்
வரை போகவே இல்லை ,கேள்வி பட்டதும் இல்லை.
மதமாற்றமும், மனமுறிவும் சட்ட ரீதியின் அடிப்படையில் விளக்கிய கட்டுரைகளில் இதுவும் ஒன்று. இக்கட்டுரை சட்ட நுணுக்கங்களை சற்றே ஆழமாக விவரித்துள்ளது. கட்டுரையாளருக்கு நன்றி. சிலருக்குப் புரியலாம். பலருக்குப் புரியாமல் போகலாம்.
பிரிவு 51(1) சீர்திருத்த சட்டம் (திருமணம் மற்றும் விவாகரத்து) சட்டத்தில் உள்ளபடி சிவில் திருமணம் செய்து கொண்ட ஒருவர் இஸ்லாத்திற்கு மதம் மாறினால், மற்றொருவர் சிவில் நீதிமன்றத்தில் விவாகரத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்கிறது. ஏன் இந்த விவாகரத்து உரிமையை இஸ்லாம் மதம் மாறியவருக்கு பார்லிமென்ட் வழங்கவில்லை?. . இச்சட்டம் ஏற்படுத்தப்பட்ட காலத்தில் தே.மு. உறுப்புக் கட்சிகளான ம.இ.க. ம.சி.ச. கெரக்கான் போன்ற கட்சிகள் அம்னோவுக்கு கொடுத்த நெருக்குதலே காரணமாகும். இஸ்லாத்திற்கு மதம் மாறிய ஒருவர் தானே அக்காரணத்தைக் கொண்டு விவாகரத்து கேட்டு சிவில் நீதிமன்றத்தில் முறையிட வழி வகுத்தால் பின்னாளில் பலர் இவ்வழியைப் பின் பற்றி பல சிவில் திருமணங்களைப் பாழாக்கி விடக் கூடும் என்பதனாலேயே விவாகரத்து உரிமையை இஸ்லாத்துக்கு மதம் மாறியவருக்கு பார்லிமென்ட் கொடுக்கவில்லை. பார்லிமெண்டே கொடுக்காத அந்த உரிமையை கொல்லைப் புற வழியைக் கொண்டு எப்படி சரியா நீதிமன்றம் கொடுக்க முடியும். அதுவும் ஒரு தரப்பு (மதம் மாறியவர்) வாதத்தை மட்டுமே அடிப்படையாக் கொண்டு!. அப்படியானால் சரியா நீதிமன்றம் அரசியல் சாசனத்தில் இருக்கும் 121(1A) பிரிவுக்கு முரணாக செயல் படுகின்றது என்றுதானே அர்த்தம். சிவில் சட்ட முறைப்படி திருமணம் செய்துக் கொண்டவர்கள் சிவில் சட்ட முறைப்படிதானே விவாகரத்து செய்துக் கொள்ள முடியும். அங்கே சிவில் நீதிமன்றத்திற்கு உட்பட்ட அதிகாரத்தை எப்படி சரியா நீதி மன்றம் எடுத்துக் கொள்ள முடியும்?. சரியா நீதி மன்றத்தின் இக்கொள்கையானது அரசியல் சாசனத்தில் 121(1A) பிரிவை ஏற்படுத்தியதின் நோக்கத்திற்கு நேர் விரோதமாக உள்ளதுதானே?. மேற்கூறிய பிரிவு ஏற்படுத்தியதின் நோக்கம் சிவில் நீதிமன்றம் இஸ்லாம் தனிநபர் சட்டத்திற்கு உட்பட்ட விவகாரங்களில் தலை இடக் கூடாது என்பதுதானே. அவ்வாறே அதன் மறுபக்க நோக்கம் சரியா நீதிமன்றம் சிவில் நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்ட விடையங்களில் தன் மூக்கை நுழைக் கூடாது என்பதுதானே?. (“what is sauce for goose is sauce for the gender”). நிலைமை இவ்வாறு இருக்க சிவில் சட்ட முறைப்படி செய்த திருமணத்தைக் கலைக்க யார் சரியா நீதிமன்றத்திற்கு அதிகாரம் கொடுத்தது?. அப்படியே அந்த சிவில் திருமணத்தை சரியா நீதிமன்றம் கலைத்தாலும் அது மதம் மாறாத மற்றொரு நபரைக் கட்டுப் படுத்தாது என்று சட்ட வல்லுனர்களுக்குத் தெரியாதோ?. . அல்லது மாற்று வழியில் சிந்திக்க மறந்து விட்டார்களோ?.
ஆசிரியர் அவர்களுக்கு மேற்கூறிய கருத்தில் கீழிருந்து 9 -வது வரியில் இருக்கும் “சிவில் சட்டமன்றம்” என்ற வார்த்தையை “சிவில் நீதிமன்றம்” என்று திருத்தி விடும்படி கேட்டுக் கொள்கின்றேன். நன்றி.
இந்திய ஸ்ரீலங்கா ஐரோபிய நாடுகளில் (கவனிக்க இவைகள் இஸ்லாமிய நாடுகள் அல்ல ) இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறுபவர்கள் எந்தவொரு பிரட்சனைக்கும் ஆலகுவதில்லை,ஆனால் இங்கு ஏன் இவ்வளவு பிரச்சனைகளை சந்திகிறார்கள் என்பதை இஸ்லாமிய சமய இலாக்கா ஆராய வேண்டும். இங்கு சினார்க்களும்தான் அதிகம் பேர் இஸ்லாத்திற்கு மாறுகிறார்கள் ஆனால் அவர்கள் எந்தவொரு பிரச்சனைக்கும் ஆலகுவதில்லை.இஸ்லாமிய இலாக்க புதிதாக இஸ்லாத்திற்கு வருபவர்களுடையே பிரச்சனைகளை ஆராய்ந்து,அந்த பிரச்சனைகளை களைய வேண்டும்.
மதம் மனிதனை மதம் பிடிக்க வைக்கிறது
சட்ட நிபுணர்கள் பலர் இருந்தும் இதுப் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண முன்வர தயங்குகிறார்கள். இங்கே இரண்டு சட்ட விதிகள் மத சட்ட விதியில் தெளிவான விளக்கம் இல்லை அதனால்தான் இந்த குளறுப்படி..?
தோழர் அவர்களே, இஸ்லாமிய இலாகா மதம் மாறுகிறவர் உடையே பின்னணியை அலசி ஆராயவேண்டும், இஸ்லாத்தை முழுமையாக அறிந்து மாறுகிறாரா அல்லது வேறு எதுவும் காரணத்திற்காக மாறுகிறாரா என்று ஆறயவேண்டும், குடும்பம் உள்ளவராக இருந்தால் முடிந்த அளவு அவருடைய குடும்பத்தினற்கும் இஸ்லாத்தை அறிமுகம் செய்யவேண்டும்.
ஒரு மண்ணுமில்லை.ஜாக்கிம் ஓர் ஆண்டுக்கு 10,000 பேரை மதம் மாற்றம் செய்ய வேண்டும் என்பது அரசாங்கக் கட்டளை. இது ஒரு 10 ஆண்டுகளுக்கு முன்னே! இப்போது இன்னும் கூடியிருக்கலாம். அதனால் தான் செத்தவன், பிழைத்தவன். ஏமாந்தவன், இளிச்சவாயன் இப்படி யாரையும் அவர்கள் விட்டு வைப்பதில்லை. மேலே குறிப்பிட்ட அந்த வீரன் ஒரு குடிகாரன். இனி அவன் வாழ்நாள் பூராவும் அரசாங்கத்தில் பிச்சை வாங்கிப் பிழைப்பான். அதனாலென்ன? நீங்கள் மதம் மாறியதும் சொர்க்கத்தில் ஒரு இடத்தை உங்களுக்குப் புக்கிங் செய்து விடுகிறார்கள். இது மதம் மாறியவனுக்கு மட்டும் தான்!
இவன் ஒரு கோழை. பிறந்த மதத்தில் வாழ்ந்து குடும்பத்தை நடத்தத்தெரியாத ஒரு கோழை. இவனுக்கும் கேவலம் இவன் குடும்பத்துக்கும் கேவலம் இவன் மாறிய மதத்துக்கும் கேவலம். சொந்த உழைப்பில் வாழ திராணியற்ற இவனை மனிதன் என்று சொல்லவே நா கூசுகிறது. மதம் மாறுவது அவரவர் விருப்பம். பிறந்த மதத்தின் சிறப்பை பற்றியே அறிந்திருக்காத இவன் மாறிய மதத்தை பற்றி என்னதான் தெரிந்துகொள்ள போகிறான்? உண்மையில் அந்த மதம் கூட இவனை மதிக்காது. இவனைப்போன்றவர்களால் எத்தனை பேருக்கு பிரச்சனை. எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை!!! இது போன்ற மத மாற்ற வழக்குகள் எத்தனையோ வந்துவிட்டது. நம் நாட்டு அரசாங்கமும் சட்டங்களும் இன்று வரை இதற்கு ஒரு முடிவை எடுத்ததாக தெரியவில்லை.( சிவில் சரியா நீதிமன்றங்களின் விளையாட்டு இது. ஒருவேளை நம் நாட்டு சட்டத்துறையில் திறம் படைத்த அறிவுஜீவிகள் இல்லையோ?
வீரன் என்ற இந்த கோழை ஒரு முட்டாள்.பொண்டாட்டியிடம் தோக்கா கூடாது என்படக்காக இஸ்லாம் மத்திக்குள் ஒளிந்துக் கொண்டு சண்டை போடுகிறார்.இந்த அம்னோ அரசு இஸ்லாம் மத்திக்கு ஆதவாக தான் செயல் படுகிறாது.இந்த ம இ கா, ம சி சா, கெரக்கான், முட்டாள் PPP , அடிமை IPF , கெட்டவன் என்ற நல்ல கருப்பன், அரசியல் விபச்சாரி தநேதிரன் எதக்கு கட்சி நடத்துகிறார்கள், என்று தெரிய வில்லை.மலேசியா இந்தியர்கள் முதலில் இவர்களை செருப்பால் அடிக்க வேண்டும்.
தங்களின் சட்டப்படியான பார்வைக்கு நன்றி .அதிகரரத்தில் உள்ளவர்கர்கள் தங்களின் கடமையை துணிச்சலாக ஆற்ற உடனியா தயாராகவேண்டும்,மிக்க நன்றி.aagabaram ipoh
என்ன tenali நைனா , வீடு தீ பற்றி எரியும் போது கையில் கிடைத்தை எடுத்துக்கிட்டு ஓடுகிறவன் போல பி என் கட்சியில் எதையாவது சுருட்டிகிட்டு ஓடுகிறவன் அறிவாளி ,
சாமிவேலு மாதிரி நம்மவர்களியே சுரண்டாமல் இருந்தால் சரி ,அரசியலில் ம.இ.கா அந்த திட்டம் இந்த திட்டம் என்று
கூறி நம்மை ஏமாற்றுகிறான் ,பி என் கட்சியில் கிடைத்தை
சுருட்டும் ம.இ.கா காரனை போல தமிழ் பத்திரிகையில்
கிடைத்த லாபத்தை சுருட்டும் ஆசிரியர்களும் ஒழிந்தால் தான் தமிழன் இந்த நாட்டில் தலை நிமிர்ந்து வாழமுடியும் நைனா .
காசை வசூல் பண்றான் ,பத்திரிக்கை காரன் நிருபர்களுக்கு
சம்ளத்தை போடாமல் ஏமாற்றுகிறான் , தனக்கு பணத்தை
கொடுக்காதவனை பத்திரிகையில் சரமாரியாக தாக்குகிறான்
பெண்களுக்கு பேய் பிடித்து விட்டது அந்த பேயை ஓட்ட போலி சாமியாரின் விளம்பரத்தையும் கட்டுரையும் ஒவ்வொரு வாரமும் போட்டு பணம் சம்பாதிக்கிறான் கேட்டால் நாங்கள் தமிழ் மொழியை வளர்கிறோம் என்று கூறுகிறான் , கிலிசான்கள் , ஒவ்வொரு நாளும் கருமாதி செய்தியை இரண்டு ஏடுகளுக்கு போட்டு பணத்தை சம்பாதிக்கும் மலேசிய நண்பன் முஸ்லிம் முதலாளிகள் சொகுசு கார்களுக்கு முதலாளிகள் ,லம்போகினி ,பி எம் டபள்யு ,மேஜிடிஸ் கார்களுக்கு சொந்தகறான்
இஸ்வான் என்ற வீரன் ஒரு நடமாடும் பிணம்,அந்த பிணம் இன்னும் சில நாட்களில் நாரபோகிறது. இறைவ!!! அதற்க்கு நீதான் அருள் புரிய வேண்டும்.
நண்பர் சக்ரவர்த்தி கூரியது முற்றிலும் உண்மையே! அந்த வீரன் என் ஊரை சேர்ந்தவன் தான்.முன்பெல்லாம் சாமி ஆடிக்கொண்டும் குடித்து கொண்டும் அலைபவன் தான். அந்த மதத்தில் சேர்ந்தவுடன் அதிகாரிகள் கொடுக்கும் தைரியத்தில் தான் இப்படியெல்லாம் ஆடுகிறான்.போலிஸ் தலைவரே இதில் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லும் போது இவனுடைய ஆட்டத்துக்கு கேட்கவா வேண்டும்?பரதேசி பயலுங்கே…
ஆமாம் தமிழ் பித்தன் அவர்களே, உங்களது கூற்றில் உண்மை இருக்கு.இந்த நாட்டில் தற்போது 6 தமிழ் நாளிதழ்கள் வெளி வருகின்ற.இவை யாவும் யாருக்கா ? எதுக்கா ? வெளி வருகிறது என்று தெரிய வில்லை.6 தமிழ் நாளிதழ்களின் உரிமையாளர்களும் பணம் தின்னும் கழுகள் தான்.அதே போல் இந்த 6 நாளிதழில் ஆசிரியராக பணியாற்றுபவர்களும் கொள்கை இல்லாதவர்கள் தான்.இதில் பணியாற்றும் நிருபர்கள் புகைப்பட கலைஞர்கள் அனைவரும் கூலிக்கு மார் அடிக்கும் கொத்தடிமைகள் தான்.உரிமையாளர், ஆசிரியர்கள், நிருபர்கள் புகைபடகளைன்யர்கள் அனைவருமே இந்தியர்களை சுரண்டி, பணத்திக்கு, அரசியல் லாபத்திக்கு விற்று வயிறு வளர்க்கின்றனர்.
இவர்களை முதலில் தோல் உரிக்க வேண்டும்.இந்த முட்டாள்களுக்கு சீன மொழி பத்திரிக்கையாளர்களின் போராட்ட உணர்வு, பொது நோக்கம், துணிவு,அரசுக்கு வக்காலத்து வாங்காத நாடு நிலைமை, மொழி, இன உரிமைக்கு முதல் இடம் கொடுப்பாதை தமிழ் பத்திரிக்கையாளர்கள் கற்று கொள்ள வேண்டும்.மலேசியா இந்தியர்களுக்கு பொருளாதார அறிவே இல்லாமல் போனதுக்கு இந்த தமிழ் பத்திரிக்கைகள் தான் முதல் காரணம்.எனக்கு விவரம் தெரிந்த காலம் முதல் நான் தமிழ் பத்திரிக்கைகளை வாங்கி படித்து வருகிறேன்.அதாவது அன்று தமிழ் மலர் பத்திரிக்கை கருப்பு வெள்ளையில் வெளி வந்த காலம் முதல்.இந்த தமிழ் பத்திரிக்கைகளை படிதனால் நான் அரசியல் பேசுவதிலே அதிகமாக ஈர்க்கப்பட்டேன்.இந்தநாள் நான் இழந்தது தான் மிச்சம்.
கடந்த 40 ஆண்டுகளாக இந்த தமிழ் பத்திரிக்களால் எனக்கு பொருளாதார அறிவே கிடைக்கவில்லை.இதே கால கட்டத்தில் எனதி சீன நண்பர்கல்களுக்கு சீன மொழி பத்திரிகை வாயிலாக கிடைத்த பொருளாதார அறிவாள் பலர் பல விடுகளை, நிலங்களை, தொளிச்சாலைகளை, பங்கு சந்தையில் முதலிடு என வாழ்கையை முறையாக வலப்படுத்திக்கொண்டு விட்டனர்.ஆகவே இனி எந்த காரணத்தை கொண்டும் தமிழ் பத்திரிக்கைகளை பணம் கொடுத்து வாங்கி படிக்க கூடாது என தீர்க்கமான முடிவு எடுத்து விட்டேன்.
இன்னும் கொஞ்சகலத்திக்கு முறையாக பொண்டாட்டி பிள்ளைகளுக்காக பொருள் சேர்ப்போம் என்று முடிவு செய்து விட்டேன்.பொருள் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை என்று வள்ளுவன் கூரியதை கடைபிடிக்கிறேன் நயினா.
பணத்துக்கும் ,பதவிக்கும் முஸ்லிமாக மாறும் கேவலம் மலேசிய தமிழர்களிடம் மாத்திரமே உள்ளது ….
ஆறு தமிழ் பத்திரிக்கைகள் 1. மலேசிய நண்பன் முஸ்லிம் முதலைகளால் நடத்தப் படுகிறது ,ஆரதரவு கொடுப்பது மானம் கேட்ட நம்ம தமிழன் 2.நேசன் .இது ம.இ.கா பத்திரிக்கை முன்பு சாமிவேலுக்காக இப்போது பாரிக்காக
ஆதரவு ம.இ.கா மடயங்கள் . 3. மக்கள் ஓசை டான் ஸ்ரீ சுப்ரமணியம் பத்திரிக்கை இவன் மகன் அரசியலில் வெற்றி
பெற பாடு படும் பத்திரிக்கை ஆதரவு சில ம.இ.கா காரங்களும் , வேற பத்திரிக்கை இல்லாதலால் வாங்கி படிப்பவர்கள் இந்த மூன்று பத்திரிக்கைகளும் நிருபர்களுக்கு முறையா சம்பளத்தை போடுகிறார்கள் ,ஆனால் 4 வது பத்திரிக்கை உரிமையாளன் தமிழ் படிக்க தெரியாதவன் யாருடைய மகன் தெரியுமா ,பத்திரிக்கை உலகில் ஜாம்பவான் என்று பெயர் பெற்ற ஆதி குமானின் மகன் . இவனுக்கு தமிழ் பத்திரிக்கையை நடத்த தெரியாது அதனால் மக்கள் ஓசையின் முன்னாள் துணை ஆசிரியர் பி.,ஆர். ராஜனை தினக்குரலுக்கு ஆசிரியாக்கினான் அவனோ நம்பர் 1 மோசடி காரன் , நிருபர்களுக்கு 5 மாதம் சம்பளத்தை போடாமல் ஏமாற்றி தன் வயிற்றை நிரப்புகிரவன் , 5வது தமிழ் மலர் பெரியசாமி இவன் 2007ஆம் ஆண்டு ஜோகூர் கொத்தா தின்கியில் வெள்ளம் ஏற்பட்டபோது மக்களோசை ஆசிரியர் எம்.ராஜனுடன் கூட்டு சேர்ந்து பல ஆயிரம் வெள்ளியை வசூல் செய்து ஒத்தை காசு கூட வெள்ளத்தில் பாதிக்கப் பட்ட வர்களுக்கு கொடுக்காமல் ஏமாறி விட்டு அந்த பணத்தில் இப்போது தமிழ் மலரை நடுதுகிறான் ,இவனே சரியில்லை இதில் டத்தோ ஸ்ரீ குருஜியின் மோசடி ஊழலை தன் பத்திரிகையில் போட்டு தன்னை யோக்கியன் என்று காட்டுகிறான் . 6வது டத்தோ ஸ்ரீ கெண்ட்த் ஈஸ்வரன் இவன் ஒரு சிலோன் காரன் , இவன்
பத்திரிக்கை நம் நாடு ,இவனுக்கு எம்.ஜி.ஆர் என்று நாபகம்
வெள்ளி 1.00 பத்திரிகை விலை போட்டு மற்ற 5 பத்திரிக்கைகளை மூட பார்கிறான் .அதக்னால் தெனாலி நீங்க எடுத்த் முடிவும் சரிதான் ,நானும் உங்க பக்கம் நைனா
நான் எந்த தமிழ் பத்தி ரிக்கைகளையும் வாங்கு வது கிடையாது.
யாரும் நம்மவர்களுக்காக ஏதும் செய்வது இல்லை-செம்பருத்தியை தவற.
வீரன் என்ற துரோகிகளை என்ன செய்வது? இஸ்லாத்தில் மற்ற சமயங்களில் உள்ளோருக்கு எந்த நீதியும் கிடைக்காது — அதிலும் 1969 வரை இஸ்லாம் மதத்தினர் – அரசியல் வாதிகள் சிறிதளவாவது நீதிக்கு பயப்பட்டனர் ஆனால் அதன் பின் சிறிது சிறிதாக எல்லாம் மாற்றப்பட்டு இன்றைய நிலை அடைந்து நமக்கெல்லாம் இந்நாட்டின் உரிமையுள்ள பிரஜையாக தகுதி இல்லை என்ற நிலை அடைந்துள்ளது.அதிலும் காகாதிரின் பதவிகாலம் எல்லாவற்றையும் தலை கீழ் ஆக மாற்றியது. MIC MCA நம்மையெல்லாம் விற்று விட்டு அவன்களின் வங்கி கணக்கை ஏற்றி விட்டான்கள். நாம் நாரி போய் கிடக்கிறோம்- இந் நாட்டில் இன்று அடிமட்டத்தில் இருப்பது நாம் தான். தகுதியும் தரமும் இல்லா மலாய்க்காரன் கள் நம்மை எல்லாம் எட்டி தலையில் உதைத்து கொண்டிருக்கின்றான்கள்- நம் பிள்ளைகள் அவமானப்பட்டுகொண்டிருக்கின்றனர் தேசிய பள்ளிகளில்நாம் ஒருவருக்கு ஒருவர் எதிர்த்து கொண்டிருகின்றோம் ஏன் நம்மவர்களுக்கு இவ்வளவு பொறாமை பொச்சரிப்பு? .
தமிழ்ப்பித்தன், நீங்கள் சொல்லுவது சரிதான். தமிழ்ப் பத்திரிக்கைப் படித்தே பழக்கப்பட்டவன். அரசியல் தெரிந்த அளவு தொழில் பற்றித் தெரியவில்லை. மக்கள் ஓசை வாங்கலாம் என்றால் கோவில், கும்பாபிஷேகம், சங்கச்செய்திகள் தான். இதற்கு ஒரு பத்திரிகையா! கட்சிச் செய்திகளைப் போட்டு இங்குள்ள தமிழனும் கெட்டுப் போகிறான், தமிழ் நாட்டுத் தமிழனும் கெட்டுப் போகிறான்! எனக்குத் தெரிந்தவரை “நண்பன்” மட்டும் தான் படிக்கத் தரமாக இருக்கிறது. எதிகாலத்தில் அவர்களால் மட்டும் தான் தொழிற்சார்ந்த செய்திகளைப் போடக்கூடிய ஆற்றல் இருக்கிறது; வாசகர் வட்டம் பெரிதாக இருக்கிறது. பொருளாதாரப் பலம் இருக்கிறது. அவர்கள் செய்யக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது. அடுத்து கென் ஈஸ்வரனுக்கு பொருளாதாரப் பலம் இருக்கிறது. ஆனால் அவர் தனது வருமானவரியைச் சரிகட்டுவதற்காகப் பத்திரிகை நடத்துகிறார். ஐந்து இந்துக்கள் தமிழர்களைப் பற்றிக் கவலைப்படாமல் பத்திரிகை நடத்தும் போது, அரசாங்க ஆதரவு பத்திரிக்கையாக இருந்தாலும், ஒரு முஸ்லிம் தமிழர் ஏதோ கொஞ்சமாவது தரத்தோடு நடுத்துகிறாரே! தமிழன் என்றால் தவறான அர்த்தம் கொள்ளாதீர்கள். தமிழன் என்றால் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், பௌத்தர்கள், பாஹாய், இப்படித் தமிழர்களில் பல மதத்தினர் இருக்கின்றார்கள். மதத்தில் பிரிவுகள் இருந்தாலும் இனத்தால், மொழியால் தமிழர்கள் தான்.
நீதி வீழ்ந்ததால் அநீதி விளைந்தது. அநீதி நின்றதால் அதர்மம் நிலைத்தது. “தமிழன்” என்பதற்கு அவன் பண்பாட்டை விலக்கி தமிழ் பேசுபவன் என்றதனால், தமிழனுக்கு அநீதி விளைந்தது. அந்த அநீதி நின்றதனால், தமிழன் என்போன் தன் சமயத்தைச் சார்ந்த பண்பாட்டினை இழந்தான். இன்று அதர்மம் அவனைக் கவ்விக் கொண்டது.
வீரனும் தமிழன்தான். ஆனால் அவன் தமிழ் முஸ்லிம்?. மதம் மாறியவருக்கு, தன் தந்தையின் திருநாமத்தை மாற்றத் தெரிந்தது. ஆனால், அவன் இனத்தை மாற்றத் தெரியாமல் போனது ஏனோ?. இவன் மாற்ற விரும்பினாலும் இவன் இன மாற்றத்தை ஏற்போர் அங்கே இல்லை என்பதானால் அல்லவோ. தமிழன் ஏமாற்றப் பட்டான், தமிழன் ஏமாந்தான். எல்லாம் தன் பண்பாட்டை இழந்த “தமிழன்” என்ற அநீதியால்.
மதம் மாறினாலும் தமிழன், தமிழனே என்று வாதிடுபவர்களுக்கு, தயவு செய்து மதம் மாறிய வீரனை குறை கூறாதீர்கள். தீபாவுக்கும் தங்களின் அறிவுரை வழி மதம் மாறச் சொல்லுங்கள் அல்லது தாங்களே களத்தில் இறங்கி மதம் மாற்றி விடுங்கள். தீபா மதம் மாறினாலும் அவள் “தமிழச்சி”யே என்பதனால் எந்த ஒரு தீங்கும் விளைந்து விடப் போவதில்லை. அவர்தம் பிள்ளைகளின் மதத்தையும் மாற்றி விடுங்கள். தப்பில்லை. அப்பிள்ளைகளும் “தமிழர்கள்”. பாருங்கள், பிரச்சனை எவ்வளவு சுலபாமாக தீர்ந்து விட்டது!. இதைத்தான் மதம் மாறியவர்கள் “தமிழனுக்கு” ச் கோடரிக் கம்பாக வந்து செய்யும் அநீதி என்றது. அதர்மத்திர்க்காக இரட்டை வேடம் போட வேண்டாம்.
இஸ்லாம் மதத்திற்கு தேனி,ஆள் சேர்கிற மாதிரி இருக்கு.
இந்துவாகிய நாம் முதலில் “எம்மதமும் சம்மதம்” என்று சொல்வதை நிறுத்திவிட்டு இந்துவே நம்மதம் என்று பிள்ளைகளுக்கு எடுத்து உரைப்போம் .சிறு வயதிலேயே அவர்களுக்கு இதை நாம் சொல்லி கொடுக்க வேண்டும்.இந்துவாக பிறந்தோம் இந்துவாக இறப்போம்.
மானம்கெட்ட சில கூவைகல் தான் பணத்துக்காகவும் ,பதவிக்காகவும் இப்படி போகிறார்கள் .பியர் மத்தி அனக் ஜங்கன் மத்தி அடட்.
“என் மதம் சன் மதம்” என்று போட்ட சொற்றொடர் மருவி ” எம் மதமும் சம்மதம்” என்று ஆனது. மாறியது வார்த்தை?, மாற்றியவர் யாரோ?.