பகுதி 1. கல்வியின் முக்கியத்துவத்தை உணராத காலமும் இல்லை, நாடும் இல்லை, தீர்க்கத்தரிசிகளும் இல்லை, தத்துவஞானிகளும் இல்லை, முனிவர்களும் ரிஷிகளும் இல்லை. ஆனால் பல்லாயிரம் நூற்றாண்டுகளாக கல்வியானது எல்லா மக்களுக்கும் கிடைக்கவில்லை என்பது வரலாறு கூறும் உண்மை.
ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அக்டோபர், 2011வரை மக்களின் எண்ணிக்கை ஏழாயிரம் கோடியைத் தாண்டிவிட்டாலும், இன்றையக் காலக்கட்டத்தில் அந்த எண்ணிக்கையில் கணிசமான உயர்வைத்தான் நாம் எதிர்பார்க்க வேண்டும்.
கல்வியின்மையை ஒழிக்கவேண்டுமென்ற நோக்குடன் செயல்பட்டவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்கா. மனிதனின் சுதந்திரத்துக்கு கல்வி இன்றியமையாததாகும். கல்வி இருந்தால்தான் அவன் (அல்லது அவள்) சிந்திக்கும் ஆற்றலைப் பெறமுடியும். இங்கும் ஓர் எச்சரிக்கையைக் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்.
எப்படிப்பட்டக் கல்வி
கல்வி என்றால் அது எப்படிப்பட்டக் கல்வியாக இருக்கவேண்டும்? பொதுவாக எழுதப் படிக்கத் தெரியாதவரைக் கல்வியறிவு இல்லாதவர் என்று சொல்லிவிடுகிறோம். கல்வி என்றால் எழுதுவது, வாசிப்பது, பேசுவது என்பனப் போன்ற மூன்று தகுதிகளைக் கொண்டவரைப் படித்தவர் என்று நாம் கூறமுடியும். அது இயல்பே.
ஆனால், கல்வி என்கின்ற சொல் வெறும் எழுதுவது, வாசிப்பது, பேசுவது என்ற மூன்று தகுதிகளைக் கொண்டது என்றால் அது ஏற்புடையதாக இருப்பினும் உயர்மட்டத்துக்குப் போகவேண்டும் என்ற எண்ணம் துளிர் விடும்போது அது போதாது என்ற நிலை நம்மை வெறித்துப் பார்ப்பதை உணரலாம். எனவே, மலாயா (பிறகு மலேசிய) அரசமைப்புச் சட்டத்திற்கான வடிவமைப்புப் பேச்சுவார்த்தை நடந்தபோது கல்விக்கு முக்கியத்துவம் வழங்கவேண்டுமென்பதில் மிகுந்த விவேகமும் வேட்கையும் இருந்ததை காணமுடிகிறது.
அரசமைப்புச் சட்டம் ஷரத்து 12
நமது அரசமைப்புச் சட்டத்தின் 12ஆம் ஷரத்தைக் கூர்ந்து கவனித்தால் அது கல்விக்கு முக்கியத்துவம் தரும் அடிப்படை ஆதாரம் என்பது வெள்ளிடைமலை.
இன, மத, மரபு வழி போன்ற காரணங்களைக் காட்டி எந்த மலேசிய குடிமகனுக்கும் கல்வி கிடைப்பதில் பிரித்துப் பார்க்கும் தராதரம் இருக்காது என்பதை தெளிவுப்படுத்துகிறது அரசமைப்புச் சட்டத்தின் 12 ஆம் ஷரத்து. அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெறும் இந்த கருத்தாழமிக்க சட்ட நிபந்தனைச் சொற்றொடர் கல்விக்கு முக்கியத்துவம் தருகிறது. இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றுமொரு கருத்து என்னவெனில் அந்த ஷரத்து இரண்டு வகையான கல்வி முறையைச் சுட்டிக்காட்டுகிறது.
ஒன்று பொது கல்வி – அதாவது சமயச் சார்பற்றக் கல்வி, மற்றது சமயச் சார்புடைய இஸ்லாமியக் கல்வியும் மற்ற சமயத்தினரின் கல்வியுமாகும். இஸ்லாமியக் கல்வியை மாநில அரசுகளும் நடுவர் அரசும் தங்களின் செலவில் நிர்வகிக்கும், ஆனால் இஸ்லாமியரல்லாதாரின் கல்வியை அந்தச் சமயத்தினரின் இயக்கங்களே ஏற்று நடத்தலாம். அதற்கு எந்தத் தடையுமில்லை. இந்த 12ஆம் ஷரத்தைக் குறித்து நான் எழுதிய கட்டுரை மயில் இதழில் மார்ச் 2014 வெளிவந்திருக்கிறது.
அரசமைப்புச் சட்டம் ஷரத்து 152(1)
சமயச் சாயலை ஒருபக்கம் ஒதுக்கிவைத்துவிட்டு பொதுவான கல்விமுறையைப் பற்றி அரசமைப்புச் சட்டத்தை வடித்தவர்கள் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தார்கள். அதை பிற்காலச் சந்ததியினருக்கு உணர்த்தும் தரத்தைக் கொண்டிருந்தது எனலாம். இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் அல்லது மறு உறுதி செய்யும் பொருட்டு விளக்கும் தன்மையைக் கொண்டிருக்கிறது 152(1) ஷரத்து.
இந்த ஷரத்தின்படி தேசிய மொழி மலாய் மொழி, அதன் எழுத்துவடிவத்தை நாடாளுமன்றம் நிர்ணயிக்கும் என்பதோடு நின்றுவிடாமல் பிறமொழியைக் கற்பிக்கவும், பயிலவும் யாதொரு தடையுமிருக்காது. ஆனால் அம்மொழிகள்அதிகார காரணங்களுக்காகப் பயன்படுத்த வழிகோலாது.
பிறமொழிகளைக் கற்பிக்கவும் பயிலவும் இந்த 152(1) ஆம் ஷரத்து அனுமதிக்கிறது. கல்வி பெறுவதில் எந்தத் தடங்களும் இருக்காது என்று உணர்த்தும் 12(1) ஷரத்தை இணைத்துப் படிக்கும்போது ஓர் உண்மை தெளிவாகிறது. அதாவது, எப்படிப்பட்ட கல்வியாக இருப்பினும் அது எந்த மொழியில் இருந்தாலும் அதைப் பயிலுவதை ஆதரிக்கும் ஓர் உயர்ந்த நோக்கத்தைத்தான் காணமுடிகிறது. நோக்கம் உயர்வானதாக இருப்பினும் நடைமுறையில் அது ஆக்கப்பூர்வமாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும்.
ஜனநாயகத்தில் ஏற்றத்தாழ்வுக்கு இடமில்லை என்றபோதிலும் பொருளாதாரத்தில், வாழ்க்கையில், கல்வி தரத்தில் பின்னடைவு கொண்டோரை முன்னுக்குக் கொண்டுவரும் முயற்சியில் அரசு கரிசனம் காட்டவேண்டும். அவ்வாறு பின்னடைவு நிலையில் வாழ்வோரின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு செயல்பட வேண்டுமென்பதை வலியுறுத்தும் வகையில் அரசமைப்புச் சட்டம் அமைக்கப்படுவது உண்டு.
இந்திய அரசமைப்புச் சட்டம் இதற்கு முன்னோடியாக விளங்குகிறது. அதாவது வாழ்க்கையில், கல்வியில், பொருளாதாரத்தில் பின்தள்ளப்பட்டவர்களை உயர்த்திவிடும் நோக்கத்துக்கு வலிவு தரும் வகையில் பல சலுகைகளை அரசமைப்புச் சட்டமே வழங்குகிறது.
அதுபோலவே, மலேசிய அரசமைப்புச் சட்டம் மலாய்க்காரர்களுக்குச் சிறப்பு சலுகைகளை உறுதிப்படுத்துகிறது. அவற்றின் அமலாக்கத்திற்கு ஏதுவாக அரசு பல சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது எல்லா இனத்தவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் உடன்பாடு. ஆனால், கல்வியில் வேறுபாட்டை ஆதரிப்பதும் வளர்த்துவதும் அதை ஓர் அரசியல் கொள்கையாக அமலாக்குவதும் ஜனநாயகக் கோட்பாட்டுக்கு முரணானதாகவே கருதப்படும். கல்வியில் பாகுபாடு இருக்காது என்று அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டு சில கல்விக்கூடங்களில் ஒரே இனத்தவரைமட்டும் அனுமதிக்கும் முறையானது ஜனநாயகக் கோட்பாட்டுக்கு எதிரானது மட்டுமல்ல அரசமைப்புச் சட்டத்துக்கும் முரணானதாகும்.
சமயக் கல்வியை இதில் சேர்க்கக் கூடாது. ஒரே தேசிய உணர்வை வளர்க்க இப்படிப்பட்ட போக்கு உதவாது. ஆனால், அரசியலில் எதுவும் நடக்கும், எதற்கும் காரணத்தைக் காட்டலாம் என்ற வழக்கம் வேரூன்றிவிட்ட நிலையில் சமுதாயத்தில் தாழ்ந்த நிலையில் கிடக்கும் சமூகத்தைக் தூக்கிவிட இப்படிப்பட்ட அணுகுமுறை தேவை என்று சொல்லும்போது அது ஏற்புடையதே. அதே சமயத்தில் பிற சமூகங்களிலும் பின்தங்கியவர்கள் இருக்கமாட்டர்கள் என்று நினைப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நிலைப்பாடாகும்.
மலேசியாவில் மலாய் மொழி தேசிய மொழியாகும், ஆங்கிலம் தொடர்பு மொழியாகவும் சீனம், தமிழ் மற்றும் பல மொழிகள் மலேசியர்களால் பேசப்படும் மொழிகளும் உள்ளன. இவையாவும் நாட்டில் கற்பிக்கப்படுவதிலும், பேசுவதிலும் யாதொரு தடையுமில்லை.
சீனம், தமிழ் ஆகிய மொழிகள் மலாய் மொழியோடு சமஅந்தஸ்து கொண்டிராவிட்டாலும் அவை பதுகாக்கப்பட வேண்டிய மொழிகள், மதிக்கப்பட வேண்டிய மொழிகள், வளர்க்கப்பட வேண்டிய மொழிகள் என்பதில் மாற்று கருத்து இருந்ததாகச் சொல்லமுடியாது. காரணம், சீனம், தமிழ் ஆகிய மொழிகள் கற்பிக்கப்படுவதற்கான செலுவுகளை நடுவர் அரசு ஏற்றுக்கொண்டு செயல்பட்டுவருகிறது.
இடைநிலைப்பள்ளியில் தமிழ்
தமிழ் பள்ளிப்படிப்பு ஆறாம் வகுப்போடு முடிந்து விடுகிறது. மேலும் இடைநிலைப்பள்ளிக்குப் போவதற்கான வசதிகள் குறைவாகவே காணப்படுகின்றன. குறிப்பாக ஒரு தமிழ் மாணவன் ஆறாம் வகுப்புக்குப் பிறகு இடைநிலைப்பள்ளி படிப்பை தேசிய மாதிரி இடைநிலைப்பள்ளிகளில் தொடரவேண்டுமானால் அங்கே குறைந்தது பதினைந்து மாணவர்கள் தமிழ் பயில பதிவுசெய்து கொண்டால்தான் இடைநிலைத் தமிழ் கற்பிக்கப்படும்.
இந்த மாணவர் எண்ணிக்கை கைகூடாவிட்டால் தமிழ் கல்வி தொடர்வதற்கான மேல் வசதி ஏதும் கிடையாது. இந்தக் குறைந்தபட்ச எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல் அதற்குக் குறைவான மாணவர்கள் இருப்பினும் தமிழ் ஆசிரியர்கள் தமிழ் கற்பிப்பதும் போற்ற வேண்டிய செயலாகும்.
சீன இடைநிலைப்பள்ளிகள் காலம்காலமாக இருந்து வந்ததன் காரணமாக இன்றும் இயங்குகின்றன. சீன சமூகத்தின் மொழி ஆர்வம் அந்தப் பள்ளிகள் இயங்க உதவுகிறது. அந்தப் பள்ளிகளுக்காக சீனர்கள் பணத்தை வாரிவாரி வழங்குகிறார்கள். இதுவரை தமிழ் இடைநிலைப் பள்ளி இல்லாதது ஒரு பெரும் குறை எனின் அதுவும் நியாயமான முறையீடுதான். இந்த அவலநிலை குறித்து அரசின் நிலைப்பாடு உற்சாகம் தருவதாக இல்லை. மலாயா பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பிரிவு உண்டு. நல்ல அடிப்படைத் தமிழறிவு இருந்தால் பல்கலைக்கழகப் படிப்பு உய்வு தரும். [தொடரும்].
இந்தக் கட்டுரையை மறுபதிப்பு செய்பவர்கள் தயவு செய்து செம்பருத்தி.காம் அகப்பக்கத்தை மறக்காமல் குறிப்ப்டவும்.
ஐயா கி .சீலாதாஸ் அவர்களுக்கு வணக்கம் ,
நல்ல விளக்கமான கட்டுரைதான் , தொடரட்டும். நன்றி !
என்றாலும் கீழ் காணும் பாராவை மறுபடி யோசிக்கிறேன் ? “….”பார்க்கவும் ”மலேசிய அரசமைப்புச் சட்டம் மலாய்க்காரர்களுக்குச் சிறப்பு சலுகைகளை உறுதிப்படுத்துகிறது. அவற்றின் அமலாக்கத்திற்கு ஏதுவாக அரசு பல சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது எல்லா இனத்தவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் உடன்பாடு.”
எனும் தங்கள் கருத்து எனக்கு வியப்பாக உள்ளது? சீனர்களும் தமிழர்களும் 2014 – 2025 புதிய கல்வி கொள்கையை எதிர்த்து வருகிறோம். தாங்கள் எழுதிய பல ஓலங்கள் சொல்லியும் உள்ளோம்.நாங்கள் ஏற்றுககொண்டோம் என்பதை மாற்றி ஏமாற்றப்பட்டோம் என்று சொல்லுங்கள்.
அடுத்து உங்கள் நினைவுக்கு 1994ல் இரண்டாவது உலகத தமிழாசிரியர் மாநாடுகள் (பலவற்றில்) ஒன்று நடந்தது ,அங்கே “ஆய்வடங்கல்” என்ற நூலும் தமிழ் மொழிக்கு வேண்டிய பல முன் எடுப்புகளை பல படிநிலை அறிஞர்கள் 10 கட்டுரைகள் வழி தந்தார்கள், ஆனால் அதை முன்னெடுத்து கல்வி அமைச்சுக்கோ அரசுககோ விண்ணப்பம் செய்ததாக தெரியவில்லை.
அந்த ஆய்வடங்கல் 10 காடுரைகளை நூலாக வெளியிட்டவர் கல்வி அமைச்சில் தமிழ் பிரிவு அதிகாரி திரு A . சகாதேவன் என்பதும் குறிப்பிடததக்கது.
பிறகு 10 உலக தமிழ் ஆராச்சி மாநாடுகள்…பிறகு பல தமிழ் ஆசிரியர் மாநாடுகள் எல்லாம் வெறும் குப்பை கூளங்களாக இற்று போய் விட்டது.
மலேசியாவில் தமிழ் மொழிக்கு மாநாடு நடத்தி இதுவரை ஒன்றையாவது சாதித்தார்களா நமது அறிவர்கள் ?என்று வியக்க வைத்தது உங்கள் படைப்பு.
கடமையில் உள்ளவர்கள் ஒருத்தரும் வாயை திறக்க மாட்டார்கள். உங்கள் ஆதங்கம் தொடரட்டும்.நன்றி பாராட்டி கனவு காண்கிறேன்.
வருத்தமுடன் ,
பொன் ரங்கன்,PJK
தலைவர் உலகத தமிழர் பாதுகாப்பு மையம்.
அம்பாங் தமிழ்ப்பள்ளி LPS துணைத தலைவர் .
குறிப்பு :எங்களது உ த ப இயக்கம் இனம் சார்த்து. மொழி எங்கள் நிபுணத்துவம் அல்ல !உறவும் உரிமையும்
சீலதாஸ் அவர்களே வணக்கம் , உங்கள் கருத்தை படித்தேன் ,நீங்கள் இதே கட்டுரையை புதிய பார்வையிலும் ,மலேசிய கினியின் செம்பருத்தியிலும் வெளியிட்டுலீர்கள் ,நீங்கள் ஒரு பத்திரிகையின் நிருபராக இருக்கும் உங்கள் செய்தியை முன்பு
தினக்குரலில் அடிகடி படித்துள்ளேன்,இப்போது புதிய பார்வையில் எழுதிய இதே செய்தியை செம்பருத்தியில் காணுகிறேன் , ஒரு நேர்மையான நிருபருக்கு இது தகுமா ?
முதலில் நீங்கள் ஏதாவது ஒரு pathirikaikku எழுதுங்கள் ,இல்லை endraal நீங்கள் உங்களின் விளம்பரதிற்க்காக எழுதும் ஒரு சாதாரண விளம்ப்ரத்தாரர் என்று நினைக்க
thondrukirathu .அதற்காக சாமூதயத்தின் மீது பற்று உள்ளவர்
போல nadiththu உங்கள் பத்திரிக்கைக்கு விளம்பரம் தேட
வேண்டாம் நைனா .
தினக்குரல் தான் இப்போது புதிய பார்வையாக வந்து கொண்டு
இருக்கிறது ,இந்த செய்தி தமிழ் பித்தனுக்கு தெரியாமல் போனது
எப்படி ?
உலக மக்களின் தொகை ஏழாயிரம் கோடி அல்ல. எழுநூறு கோடி அல்லது எழுநூற்று இருபது கோடி என்பதே சரி.
ஆசாமி தினக்குரல் இப்போது புதிய பார்வையாக வரவில்லை ,தினக்குரலின் உரிமம் கே. டி.என்னால் முடக்கப்பட்டதாலும் ,அதன் ஊழியர்களுக்கும் நிருபர்களுக்கும் 5 மாதம் சம்பளம்
போடாமல் ஏமாற்றிய அதன் ஆசிரியர் பி.ஆர். ராஜனை பற்றி கதையும் , வேறு வழியில்லாமல் ம .இ.காவின் முக்கிய புள்ளி ஒருவரின் பதிவில் இருந்து வந்த புதிய பார்வை தினக்குரலுக்கு பதிலாக வந்துகொன்றிருப்பதுவும் எனக்கு தெரியும் நைனா .ஆசாமி நைனா என் கருத்தை முழுமையாக படித்து தெரிந்துக்கொள்ளாமல் எனக்கு தெரியாது கூறுவது அறிவுடமையாகாது . மீண்டும் படியுங்கள் சீலதாசின் செய்தியை நான் முன்பு தினக்குரலில் இருந்து படித்துள்ளேன் என்று எழுதியுள்ளேன் , ஆமாம்
ஏன் என் கருத்துக்கு சீலதாஸ் பதில் கொடுக்காமல் இருக்கிறார் ஏன் அவருக்கு மட்டும் புதிய பார்வை சம்பளம் போட்டு விட்டார்களா , நைனா
நம்மிடையே மொழி உணர்வு இருந்தால் அனைத்தும் கைகூடும். பொன்.ரங்கன் கூட மொழி எங்கள் நிபுணத்துவம் அல்ல என்கிறார், இது தான் தமிழனின் பிரச்சனை. உலகத் தமிழனை ஒன்று சேர்ப்பதற்குத் தமிழ் தேவை அல்ல என்கிறார்! இலங்கைத் தமிழனுக்குத் தமிழ் தேவை இல்லை. பதவியில் உள்ளவனுக்குத் தமிழ் தேவை இல்லை. பணக்காரனுக்குத் தமிழ் தேவை இல்லை. அப்படியென்றால் யாருக்குத் தான் தமிழ் தேவை? இங்குள்ள இலங்கைத் தமிழன், தமிழை “கூலிக்காரன் மொழி” என்று முத்திரைக் குத்தி விட்டான். இவர்கள் மட்டும் தமிழ் எங்கள் தாய் மொழி என்று மார்பை நிமிர்த்தி, மொழிப்பற்றோடு, உரிமைக் கொண்டாடியிருந்தால் தமிழுக்கு இப்படி ஒரு அவல நிலைமை வந்திருக்காது. காரணம் இவர்கள் தானே அப்போதும் இப்போதும் உயர்ந்த இடத்தில் இருந்தார்கள், இருக்கிறார்கள். கி.சீலதாஸ் போன்ற வழக்கரிஞர்கள் இது போன்ற கட்டுரைகள் படைப்பது மனதுக்கு இதமாக உள்ளது. வாழ்த்துகள்!
சீலதாஸ் ஒரு வழகறிஞரா , புதிய பார்வையின் நிருபரா அதிசயம் சக்கரவர்த்தி நைனா , அவருக்கு என் பாராட்டுகள் ஆனால் ஒரே மனிதர் நிருபராகவும் வழக்கறிஞராகவும் இருப்பது பாராட்டகூடியது , ஒ அதனால் தான் அந்த பத்திரிக்கை நிருபர்களுக்கு முறையாக சம்பளம் போடாமல் இருகிறார்களா , சாதாரண நிருபர்கள் செய்தியை அனுப்பினால் செய்தியை போடாமல் அலைகளிக்கப்படுகிரார்களா , ஆஹா பேஸ் பி.ஆர்.ராஜன் ,நிருபர்களின் வயிற்றில் அடிக்கும் வக்கீல்களும் இருக்கிறார்களா ,என்ன செய்வது நைனா இப்போது எல்லாம் வக்கீல் தொழிலுக்கு வருமானம் குறைந்து விட்டதா ,நல்ல வேலை என் மகன் வக்கீலுக்கு படிபதா அல்லது இன்ஜிநியரிங் படிபதா என்று யோசித்துக்கொண்டு
இருந்தான் , வேண்டாம் வக்கீல் தொழில் நைனா
ஹலோ! தமிழ்ப்பித்தரே! கி.சீலதாஸ் அவர்கள் தமிழனின் முன்னேற்றம் கருதி தனது கருத்துக்களைக் கட்டுரை வடிவில் இந்தச் சமுதாயத்திற்குக் கொடுத்துக் கொண்டு வருகிறார். கிண்டல் செய்கிறீரே! சொல்லுகின்ற செய்தி போய்ச் சேர வேண்டும் என்று நினைக்கிறார். எந்த எந்தப் பத்திரிகைகளுக்குக் கொடுக்க முடியுமோ அந்தப் பத்திரிகளுக்குக் கொடுக்கிறார். அவருக்குச் சம்பளம் கொடுக்க நமது பத்திரிகைகளால் முடியாது! உங்கள் மகன் நிச்சயமாக வக்கீலுக்குப் படிக்கலாம். அதன் வெற்றி திறமையைப் பொறுத்தது!
சக்கரவர்த்தி அவர்களே ! தமிழ் மொழியே படிக்கத தெரியாத பேராசிரியர் ராமசாமி ITERNATIONAL TAMIL CONFERENCE என்ற மாநாட்டை ஒன்றை நவ /2014 நடத்துகிறார். அவருக்கு மொழி உணர்வா ? இன உணர்வா ? அரசியல் வியாபாரமா ? என்று கேட்டுசசொல்லுங்கள். பொன் ரங்கன் அவர்கள் தமிழ் மொழியில் தமது இயக்கம் நிபுநித்துவம் பெறவில்லை என்பதால் இனம் சார்த்த சேவையில் அவர்களின் உண்மையை ஏற்பது இகழேல்.
International Tamil Conference (மொழி) சார்ந்த மாநாடு அங்கே மொழி ஆய்வுகள் நடக்குமா ? அல்லது இன ஆய்வுகள் அரசியல் அரட்டைகள் நடக்குமா? என்று இரண்டாம் இணை துணை முதல்வரை கேட்டுச சொல்லுங்கள்?
அதுவரை கப் சிப்!
மலேசியாவில் தமிழ் மொழியின் முன்னேற்றத்துக்கு ஊக்கம் அளிக்க முயற்ச்சி தராத முன்னாள் மஇக அரசியல்வாதிகள்தான் காரணம்.மலாய்க்காரர்களுக்கு எல்லா சலுகைகளும் பெற கையொப்பமிட்டவர்கள் இவர்கள்தானே! அவர்களைக் கேள்வி கேளுங்கள் .
வானம்பாடி சாரே….நான் தமிழை படிக்கற காலத்தல….தமிழை முன்னேறமல் தடுத்ததே… நம் தமிழ் மக்கள்தான்…சார்
சுதேசிகன் அவர்களே! அது ஏன் பேராசிரியர் ராமசாமியை மட்டும் குறிப்பாகச் சொல்லுகிறீர்? டி.ஏ.பி. தமிழர்கள் எத்தனையோ பேருக்குத் தமிழ் தெரியாதே! ம.இ.கா.தலைவருக்குக் கூடத் தமிழ் தெரியாதே! டத்தோ சுப்ரமணியம், ஆதி.குமணன் மகன்கள் கூடத் தமிழ் தெரியாதாமே! நான் சொல்ல வருவதெல்லாம் படித்தவன், பதவியில் உள்ளவன், வசதி உள்ளவன் தமிழ் தேவை இல்லை என்று நினைக்கிறான். அதனால் தான் தமிழ் இன்று கப் சிப்!
என் கேள்வி >>>>தமிழ் படிக்கத தெரியாதவர்கள் தமிழ் மாநாடு நடத்துவது பற்றியது ! தமிழர்களின் உரிமை பற்றி மோடியுடன் இப்போது கேளிக்கையான கேள்வி வேற? இங்கு மலேசியாவில் தமிழன் பாடும் உரிமையும் சிரிப்பா சிரிக்குது தோழா!
அப்பா அம்மா ஏதோ சில காரணங்களுக்காக அவர்கள் பிள்ளைகளைத் தமிழ்ப் பள்ளிகளில் சேர்க்கவில்லை. புரிகிறது. ஆனால் பிற்காலத்தில் அவர்கள் தமிழைப் படித்துக் கொள்ளலாமே. அதற்கான வாய்ப்புக்கள் இப்போது நிறையவே இருக்கிறதே. ஏன்? நீங்கள் கூட பேராசிரியர் ராமசாமிக்குத தமிழ் தெரியாதே என்கிறீர்களே. ஏன் அப்படி ஒரு நிலையை அவர் வைத்துக் கொள்ள வேண்டும்? தமிழைத் தெரிந்து கொண்டு தமிழ் மாநாடு நடத்தினால் என்ன கேட்டுப் போய்விட்டது? மலேசியாவில் தமிழன் பிழைப்பு சிரிப்பாய்ச் சிரிப்பதற்கு நீங்களும், நானும் ஒரு காரணம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இப்போது உலகத் தமிழர்களுக்காக/இந்தியர்களுக்காக பேசுக்கூடிய ஒரே சக்தி வாய்ந்த மனிதர் மோடி தான்!
தமிழன் தன் தலைவனுக்கு தமிழ் தெரியுமா என்பது பற்றி கவலை இல்லை ,அவன் தனக்கு முதலாளியாகிவிட்டால்
சொல்லவேண்டும் அவனோடு சேர்ந்து மானகெட்ட தமிழனும்
தமிழை மொழியை படிக்க வேண்டாம் என்று நினைப்பான் ,இந்த நாட்டில் ஏழை தமிழன் இருக்கும் வரை தமிழுக்கு
அழிவு கிடையாது , ஆதிகுமன்னன் ,daththo ஸ்ரீ சுப்பிரமணியம்
மகன்கள் தமிழ் தெரியாதவர்களாக இருக்கலாம் ஆனால் தமிழ் அவர்களுக்கு சோறு போடுகிறது அதற்காக அவர்கள் தான் வெட்க படவேண்டும் ,சக்கரவர்த்தி நைனா அவன் தாயை காலால் எட்டி உதைத்தாலும் அந்த தாய் பசிக்கும்
பிள்ளைக்கு சோறு போடுவாள் ,அது போல தமிழ் தாய் தன்னை வெறுக்கும் பணக்கார பிள்ளைகளின் வயிற்று
சோறு போடுகிறாள் அது தான் எங்கள் தமிழ் தாய் , உன்னைமையிலே அவங்க அம்மா சோற்றில் uppu போட்டு
கொடுத்திருந்தால் இப்போதே போய் தமிழ் மொழியை படியுங்கள் இல்லை என்றால் தமிழ் பத்திரிகையை படித்தவர்களிடம் விற்றுவிட்டு ஆங்கில பத்திரிகையை nadathungada .
ஒரு கவிஞர் கூறக் கேள்விப்பட்டிருக்கிறேன்.’தமிழே, தமிழனுக்கு உயிராம். அந்தத் தமிழனே தமிழுக்குத் தூக்குக் கயிறாம்’. நம் மொழியை அழிக்க மாற்றான் வரவேண்டியதில்லை. நாமே போதும்.
சுதேசிகன் மலையாளத்தான் ,தெலுங்கன் தமிழா சிறப்பாக பேசுகிறான் தமிழனுக்கு நன்னா தொடர் நாடகங்கள் காம்பிகிரார்கள் . கூருகேட்டதமிழன் வாயபோழந்து பார்கிறான் ..
அந்நியன் 100வருசம் தமிழனோட தமிழ்பேசி தமிழ்கற்று கூடிவாழ்ந்தாலும் அவன் அந்நியன் அன்னியனே .
தமிழன் எங்கு பிறந்தாலும் தமிழன் தமிழனே ..
சம்பாதிக்கும் காலம் வரை தமிழரையும்; தமிழையும்
புகழும் நடிகர்கள்,
தங்கள் கஜான நிரம்பியதும்..
எதிரியாவார்கள் என்பதற்கு தற்போதைய உதாரணம் தான் சின்ன(பய)கலைவாணர் விவேக் பார்பான்.
தமிழே சம்ஸ்கிருத குடும்பத்தில் இருந்துதான் பிறந்தது என்ற பார்பனரின் வாயாக செயல்படும் விவேக்
கலை,,நடிகனுங்க ஒரு கூத்தாடி ,அது அவர்களின் தொழில் ,உங்களுக்கு வேற வேலைவெட்டி கிடையாதா ? நடிகனையே நோன்டுறேங்க ,தக்காளி ………..
மன்னிக்க வேண்டும் , மிகவும் வெக்கமாக இருக்கிறது உங்கள் கருத்துக்கள் : தமிழ் மொழி செம்மொழி யாகி பல ஆண்டகிவிட்டது ,இத்துடன் நிறுத்துங்கள் , இபொழுது நமக்கு தேவை இனம் ஒற்றுமை , இனம் பற்று ,
தமிழ் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் ,,இவர்கள் திருந்த வேண்டும் ,பிறகு தமிழ் பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதில் கவனம் காண்போம் , எதனை ஆசிரியர்களுக்கு தமிழ் பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த உணர்வு இருக்கிறது, உங்க;லுக்கு sillk
கி சிலதாஸ் அவர்களின் தொடர்பு எண் கிடைக்குமா?என் பெயர் யோஹநாதன் கருமான் 0125527989.நன்றி
.