சீனம், தமிழ், ஆகிய மொழிகளுக்கு அரசமைப்புச் சட்டத்தில் பாதுகாப்பு இருந்த போதிலும் அவை கற்பிக்கப்படுவதும், அவற்றின் வளர்ச்சியும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிப்பதாகச் சில அரசியல்வாதிகள் குற்றம் கண்டார்கள். இது நியாயமற்ற, ஆதாரமற்ற குற்றச்சாட்டு.
[தமிழ்க் கல்வியும் தமிழ்ப்பள்ளியும் நமது உரிமை – பகுதி 2]
பல நாடுகளில் பல மொழிகள் ஆட்சி மொழியாக இருப்பதும், அங்கே தேசிய ஒருமைப்பாடு செழுமையாக இருப்பதும் கண்கூடு. அரசமைப்புச் சட்டத்தில் பேச்சுரிமைக்கு பாதுகாப்பு கொடுத்திருப்பது உண்மையே. (காண்க: அரசமைப்புச் சட்டம் 10ஆம் ஷரத்து). பேச்சுரிமை என்பது உண்மையைச் சொல்லும், நியாயத்தைச் சொல்லும், அநியாயத்தைச் சுட்டிக்காட்டும், அடக்குமுறையை வெளிப்படுத்தும் தராதரத்தை வெளிப்படுத்துகிறது என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
இன துவேஷம், சமய துவேஷம், மொழி துவேஷம், அரசத் துரோகச்செயலை ஊக்குவிக்கும் பேச்சுகள் யாவும் குற்றமென்கிறது நாட்டின் 1948ஆம் ஆண்டின் அரசு நிந்தனைச் சட்டம். எனவே, பேச்சுரிமை என்பது பல கட்டுப்பாடுகளைக் கொண்டது என்பதை மனதில் கொண்டிருக்க வேண்டும்.
சீனம், தமிழ் மொழிகள் மீது கடும் தாக்குதல்
மலாய் மொழியைத் தவிர பிற மொழிகள்மீது, குறிப்பாக சீனம், தமிழ் ஆகியவை மீது, கடும் தாக்குதல் நிகழ்வது இக்காலகட்டத்தில் சர்வசாதாரணமாகிவிட்டது. பேச்சுரிமை என்றப் போர்வையின் கீழ் பிறமொழிகளின் அரசியல் ரீதியான பாதுகாப்பை குறை சொல்ல இயலுமா? அல்லது, பிற மொழிகள் கற்பிக்கப்படக்கூடாது என்று வலியுறுத்தலாமா? இவை மிகவும் சங்கடமான பிரச்சனைகளாகும்.
சீன, தமிழ் பள்ளிக்கூடங்களை மூடச்சொல்வது ஒருவகையில் பேச்சுரிமையாகக் கருதலாம், ஆனால் அப்படிப்பட்ட கோரிக்கை இனப் பிரச்சினை, இன துவேஷம் அல்லது இனக் கலவரம் ஆகியவற்றை ஏற்படுத்தும் சாத்தியக்கூறுகள் தென்பட்டால் அது குற்றமாகக் கருதப்படும். எனவே, பேச்சுரிமைக்கும் நிந்தனைச் சட்டத்திற்கும் இருக்கும் இடைவெளி மிகவும் குறுகியதாகும். அதைப் புரிந்துகொண்டு செயல்படவேண்டியது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகும்.
1971 ஆம் ஆண்டில், “தமிழ் அல்லது சீன இடைநிலைப்பள்ளிகளை ஒழிக்கவும்” என்று பிரபல நாடாளுமன்ற உறுப்பினரான மூசா ஹீத்தாம் உரைக்கு தலைப்பு கொடுத்துப் பிரசுரித்தது உத்துசான் மிலாயு நாளிதழ். உத்துசான் மிலாயுவின் தலைமை ஆசிரியரும், நாடாளுமன்ற உறுப்பினரின் உரைக்குத் தலைப்பு தந்த தலைப்புப் பொறுப்பாசிரியர் ஆகிய இருவரும் 1948 ஆம் ஆண்டு அரசுப் பகை ஊட்டும் சட்டத்தின் 4(1) (c) பிரிவுகளின் கீழ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.
இந்தப் பிரிவின்படி ஒருவர் அரசுக்கு எதிரான எதையாவது பிரசுரித்தால், வெளியிட்டால், விற்றால், விற்க அனுமதித்தால், விநியோகித்தால் என்பன போன்ற குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டால், முதற்தடவை குற்றம் எனின் ஐயாயிரம் ரிங்கிட்டை விஞ்சாத அபராதமும் மூன்றாண்டு விஞ்சாத சிறை தண்டனைக்கும் அல்லது இரண்டுக்கும் ஆளாவார் என்கிறது.
மேலே குறிப்பிடப்பட்ட 1948 ஆம் ஆண்டு சட்டத்தின் 6(2) பிரிவின்படி குற்றம் சாட்டப்பட்டவர் பிரசுரிக்கப்பட்ட செய்திக்குப் பொறுப்பாக இருப்பினும் அது தம்முடைய அனுமதியோடும் அறிவாண்மையோடும் பிரசுரிக்கப்படவில்லை, தாம் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் நடந்துகொண்டதாகவும் அல்லது பிரசுரிக்கப்பட்ட செய்தி அரசுக்கு எதிரானது என நம்புவதற்கு யாதொரு காரணமும் இல்லை என்று அவர் நிரூபித்தால் அவரை குற்றவாளி எனத் தீர்மானிக்க முடியாது.
உத்துசான் மிலாயுவின் ஆசிரியரும் தலைப்பு ஆசிரியரும் முறையே குற்றவியல் நடுவரால் (மஜிஸ்ட்ரேட் – Magistrate) குற்றவாளிகள் எனத் தண்டிக்கப்பட்டு ரிம 500 தலைமை ஆசிரியருக்கும், ரிம 1000 தலைப்பு ஆசிரியருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இருவரின் மேல்முறையீட்டின் கேட்புரையின்போது அப்போதைய தலைமை நீதிபதி எச்.டி.ஓங் (H.T.Ong) தலைமை ஆசிரியர் கவனத்துடன் நடந்துகொண்டார் என்பதற்கு போதுமான சான்றுகள் இருப்பதாகவும் எனவே அவர் குற்றமற்றவர் என்றும் தீர்ப்பளித்து விடுவித்தார்.
அதாவது 1948 ஆம் ஆண்டு சட்டத்தின் 6(2) பிரிவின்படி தலைமை ஆசிரியர் குற்றமற்றவர் என்பதே உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு. ஆனால் தலைப்பு ஆசிரியரைப் பற்றி குறிப்பிடுகையில் அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு அவர் கொடுத்த தலைப்பைப் பற்றியதாகும், மூசா ஹீத்தாமின் உரையைப் பற்றியதல்ல.
தமிழ் – சீன மொழிகள் சார்ந்த வழக்குகள்
“இந்த நாட்டில் தமிழ் அல்லது சீன பள்ளிகளை ஒழிக்க வேண்டும்” என்ற கூற்று தெளிவானதாகும். அது அரசமைப்புச் சட்டத்தின் 152(1) பிரிவுக்குச் சவால் விடுவதாக அமைந்திருக்கிறது. மூசா ஹீத்தாம் தமது சாட்சியத்தில் தாம் தமிழ், சீன பள்ளிகளை ஒழிக்கவேண்டுமென சொல்லவில்லை என்றார் என்பதை உயர்நீதிமன்றம் தமது தீர்ப்பில் குறிப்பிட்டது.
1948 ஆம் ஆண்டு சட்டத்தின் 6(2) பிரிவின் வழி வழங்கப்படும் பாதுகாப்பும் தலைப்பு ஆசிரியருக்கு உதவவில்லை. எனவே, அவர் குற்றவாளி என உயர்நீதிமன்றம் உறுதிசெய்தது.
அடுத்து, 11.10.1978 இல் நாடாளுமன்றத்தில், உறுப்பினர் மார்க் கோடிங் உரையாற்றும்போது நாட்டில் சீன, தமிழ் பள்ளிகள் தொடர்ந்து இயங்குவதை அனுமதிக்கும் அரசின் நோக்கத்தைப் பற்றி கேள்வி எழுப்பினார். இரண்டாவதாக, சாலை விளம்பரங்களில் சீனமும் தமிழும் பயன்படுத்துவதைப் பற்றி கேள்வி எழுப்பினார். சீன, தமிழ் பள்ளிகளை மூடவேண்டுமென்று சொன்னதோடு விளம்பரப் பலகைகளில் அந்த இரு மொழிகளைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாடு வேண்டுமென்றார்.
மூன்றாவதாக, சீன, தமிழ் பள்ளிகள் மூடுவதிலும் விளம்பரப் பலகைகளில் அம்மொழிகளின் உபயோகம் கட்டுப்படுத்துவதானது அரசமைப்புச் சட்டத்தின் 152ஆம் ஷரத்துக்குப் புறம்பாக இருக்குமென்றால் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொணர வேண்டும் என்றார். இந்த 152 ஆம் ஷரத்தின் சரியான வியாக்கியானம்தான் என்ன? இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி முகம்மது அஸ்மி தமது தீர்ப்பில் கூறியதாவது: தேசிய மொழி மலாய் என்பதை அரசமைப்புச் சட்டத்தின் 152(1) ஆம் ஷரத்து உறுதிப்படுத்துகிறது. மற்றமொழிகள் அதிகாரப் பூர்வமற்ற காரணங்களுக்காகப் பயன்படுத்துவதில் உத்திரவாதம் உறுதிப்படுத்துகிறது.
பிற மொழிகள் கற்பிப்பதிலும், கற்பதிலும் உறுதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பிற மொழிப் பள்ளிகளைப் பாதுகாக்கவேண்டும் என்கின்ற கருத்துக்கு இடமில்லை என்பதே 152 ஆம் ஷரத்தின் சாராம்சம் என்ற கருத்தை வலியுறுத்தி, மார்க் கோடிங்கின் சீன, தமிழ் பள்ளிகளை மூட வேண்டுமென்ற கோரிக்கை குற்றமல்ல என்றார். அதுபோலவே விளம்பரப் பலகைகளில் சீன, தமிழ், மொழிகள் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கின்ற கோரிக்கையும் குற்றமல்ல என்றார் நீதிபதி. அதோடு விவகாரம் முடிந்துவிடவில்லை.
மார்க் கோடிங் விடுத்த அடுத்த கோரிக்கையான மேலே குறிப்பிட்ட இரு பிரச்சினைகளும் அரசமைப்புச் சட்டத்தின் 152 ஆம் ஷரத்துக்குப் புறம்பானதாக இருக்குமென கருதினால் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டுமென்ற கோரிக்கை எப்படிப்பட்ட தரத்தைக் கொண்டது என்பதை ஆய்ந்து பார்த்தார் நீதிபதி.
தேசிய மொழி அமலாக்கத்தை அரசமைப்புச் சட்டத்தின் 152 ஆம் ஷரத்துக்கு இணங்கச் செய்யப்படும் பரிந்துரை குற்றமாகாது, ஆனால் அப்படிப்பட்ட பரிந்துரை சினமூட்டும் தன்மை கொண்டிருக்குமாயின் மக்களிடையே வேற்றுமை, பிரச்சனை, தகராறு, வெறுப்பு போன்ற பிரச்சனைகளை கிளப்புமானால் அது குற்றமே என்றார் நீதிபதி அஸ்மி.
நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் அந்த அவையில் தாம் கூறியதை குற்றப்படுத்த முடியாது என்ற வாதத்தொகுப்பை ஏற்றுக்கொள்ளவில்லை நீதிபதி: காரணம், நாடாளுமன்றத்தில் பேச்சுரிமை உண்டு என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. ஆனால் 1971ஆம் ஆண்டில் அரசமைப்புச் சட்டத்தின் 63 ஆம் ஷரத்துக்கு கொண்டு வரப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட திருத்தத்தில் நாடளுமன்ற பேச்சுரிமைக்கு வரம்பு விதித்துள்ளது.
இதை கூட்டரசு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. எனவே மார்க் கோடிங்கின் நாடாளுமன்ற சிறப்புரிமை வாதத்தொகுப்பும் எடுபடவில்லை. பொதுநலனைக் கருத்தில் கொண்டு மார்க் கோடிங் ஈராயிரம் வெள்ளி நன்னடத்தை பிணையத்தில் விடுவிக்கப்பட்டார். அவர் குற்றவாளி என்ற போதிலும் அது பதிவு செய்யப்படவில்லை.
மார்க் கோடிங் வழக்கு முடிந்து முப்பத்தொரு ஆண்டுகளாகிவிட்டன என்ற போதிலும் இந்த சீன, தமிழ் பள்ளிகள் இயங்குவதைப் பற்றி சிலர் பேசுவது பேச்சுரிமைக்கு உட்பட்டதாகக் கருதப்படலாம். ஆனால், அப்படிப்பட்ட பேச்சு எளிதில் இனப் பிரச்சினையையும் இன உணர்ச்சியையும் சீண்டிவிடும் என்பதை எல்லாரும் உணர்ந்திருத்தல் நல்லது. அரசும் பாராபட்சமின்றி செயல்படவேண்டும்.
மொழி பிரச்சினை மிகவும் உணர்ச்சி மிகுந்தது
மொழி பிரச்சினை மிகவும் உணர்ச்சி மிகுந்தது என்பது யாவரும் அறிவர், காலம் மாறிக் கொண்டே இருக்கிறது. இன்று பொருளாதார மேம்பாட்டை மட்டும் கருத்தில் கொண்டு அரசியல் கொள்கைகளை வகுக்க முடியாது, வழிநடத்திச் செல்லவும் முடியாது. தேசிய மொழிதான் முக்கியம் என்பதில் எந்தக் கருத்து வேறுபாடுமில்லை. ஆனால், பிற மொழிகளைக் கற்பதால் ஒருவரின் அறிவு வளர்ச்சி பன்மடங்கு உயருமே அன்றி குறையாது.
தாய் மொழியைக் கற்பவன், அதில் புலமை கொண்டவன் பிற மொழிகளைக் கற்று பலனடைகின்றான். பிறநாடுகளுடனான நட்பும், உறவும், உலகைச் சுருக்கிவிட்டது. பிற இனத்தவர்களோடும், சமயத்தினரோடும், பழக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அதைத் தவிர்க்க முடியாது. இனவாரியாக, சமயவாரியாக மக்களைப் பிரித்து செயல்பட நினைப்பது தென்னாப்பிரிக்காவின் கொடுமையான இன ஒதுக்கீடு கொள்கைக்கு ஒப்பானதாகும். அந்த நிலை, அதன் சாயல்கூட இந்த நாட்டில் பட அனுமதிக்கக்கூடாது. காலத்தின் மாற்றத்துக்கு ஏற்ப நாமும் மாறவேண்டும். சிந்தனையில் மாற்றம் வேண்டும். அவை நன்மைக்காக இருக்கவேண்டும். இதை எல்லா இனத்தவர்கள் மட்டுமல்ல அரசும் உணரவேண்டும்.
தமிழ் மொழிக்குப் பாதுகாப்பு இருக்கிறது என்பதில் எந்தச் சந்தேகத்துக்கும் இடமில்லை, ஆனால் தமிழர்கள் தாய் மொழி தமிழை கற்கத் தயாராக இருக்கிறார்களா என்பதே கேள்வி. அழகான வீணை இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு பெருமை அடைவதில் எந்தப் பலனும் இல்லை. வீணையை இயக்கக் கற்றுக்கொள்வதில்தானே மகிமை இருக்கிறது. கொடுக்கப்படிருக்கும் அரசமைப்பு பாதுகாப்பை வைத்துக்கொண்டு தமிழைப் பாதுகாக்கலாம். வளர்க்கலாம். தமிழ் இலக்கியங்களின் வளர்ச்சியைக் காணலாம், கலையிலும் முன்னேற்றம் காணலாம். தமிழ் மொழியின் எதிர்காலம் தமிழர்களிடத்தில்தான் இருக்கிறது. – முற்றும். முதல் பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
சுவிட்சர்லாந்தில் 4 ஐரோப்பிய மொழிகள் அரச மொழிகளாக உள்ளன ….இருந்தும் டிவி,ரேடியோ LICENCE சம்பந்தமான விளக்கங்கள் தமிழில் உண்டு ,அரச மருத்துவ மனைகளில் தேவையானால் தமிழ் மொழிபெயர்ப்பு ஏற்பாடு செயலாம் ,பொலிசார் தமிl மாத்திரமே தெரிந்த ஒருவரை விசாரிக்க தமிழ் மொழிபெயர்ப்பாளர் வந்த பின்னரே தொடங்குவார்கள் …சில பிராந்திய ரயில்வே பெட்டிகளில் நன்றி மீண்டும் வருக ,உங்கள் பயணம் மகிழ்வாக இருக்கட்டும் என்று தமிழிl அறிவித்தல் எழுத பட்டு உள்ளது .சில்a ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பிரபல super மார்க்கெட் 75 வருட கொண்டாடத்தில் தமிழில் போஸ்டர் அடித்து நாடு எங்கும் ஒட்டியது ..வர்த்தக விளம்பரங்கள் சில்a புகையிரத நிலையங்களில் தமிழில் உண்டு .மலேசியாவில் ?????
Zimbabwe க்கு அண்டை நாடானே மலேசியாவில் எதுவும் சாத்தியம்! Malaysia boleh!
தென் ஆப்ரிக்காவில் 16 மொழிகள் அரச மொழியாக உள்ளன ..பல ஐரோப்பிய நாடுகளில் 3 மேற்பட்ட மொழிகள் அரச மொழியாக உள்ளன …சிங்கப்பூர் தமிழர் சிறுபான்மை இனமாக இருந்தும் தமிழை அரச மொழியாக வைத்து உள்ளது …இலங்கையில் சகல அரச பத்திரங்கள் ..வீதிகள் ..மந்த்ரிகள் அலுவலகங்கள் எல்லாவற்றிலும் தமிழ் உண்டு ..பாஸ்போர்ட் விண்ணப்ப பத்திரம் ..விமான நிலைய custom declaration pathiram உட்பட விரும்பினால் தமிழ்il நிரப்பலாம்
Mr.சோழன். பகலில் தூங்கும் பழக்கம் உண்டா? இனவாத மலேசியாவில் இருந்துகொண்டு பகல் கனவு காண்கிறீர்கள்! மலாயாவில் ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் [அறிவிப்பு பலகையில்]தமிழ், சீனம், ஜாவி, ஆங்கிலம் என நான்கு மொழிகளும் இருந்தன. மலாயா, மலேசியா ஆனது முதல், படிப்படியாக தமிழும், சீனமும் அழிக்கப்பட்டது. நம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு நான் ஆங்கில பள்ளியில் பயின்றேன். நான் வசித்த பட்டிணத்தில், ஒரே ஒரு மலாய் பள்ளி,இரண்டு ஆங்கிலப் பள்ளிகள், மூன்று சீனப் பள்ளிகள், மகாத்மா காந்தி கலாசாலை உட்பட சுற்று வட்டாரத்தில் பதிமூன்று தமிழ் பள்ளிகள். [ம்……பெருமூச்சு விடுவதைத் தவிர, வேறு என்னதான் செய்ய முடியும், இந்த இன வெறிப் பிடித்த நாட்டில்}
நாட்டின் ஒற்றுமைக்குக் குந்தகமாக இருப்பது சீன, தமிழ் ஆரம்ப பள்ளிகளே என்பது பலரது அபிப்பிராயம். இதனை சில மலாய் அரசியல்வாதிகளும் கல்விமான்களும் மட்டும் கூறவில்லை. உயர் நிலையில் உள்ள பல இந்தியர்களும், மிக சில சீனரும் இக்கருத்தையே கொண்டுள்ளனர். அந்த மலாய்த் தலைவர்கள் அப்படிக் கூறுவதன் காரணம், இந்த நாட்டில் ஏன் சீன, தமிழ்ப்பள்ளிகள் அரசாங்க மானியத்துடன் இயங்க வேண்டும் என்ற காழ்ப்பு உள்நோக்கமே. சில தமிழர் அல்லாத இந்தியர்களுக்கும் இந்த உணர்வு உண்டு.. ஆனால் சில தமிழர்கூட தமிழ்ப்பள்ளிகள் இந்த நாட்டில் தேவையற்றவை என கருதுவது தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடாக இருக்கலாம். இதில் முன்னிலையில் இருப்பது சில தமிழ்ப்பள்ளி ஆசிரியார்கள் என்பது நம்மை வருத்தம் கொள்ள செய்கிறது. தேசிய ஆரம்ப பள்ளிக்கு செல்லும் எல்லா தமிழ்மாணவரும் கல்வியில் சிறந்த நிலை அடைவதில்லை. அதேபோன்று தமிழ்ப்பள்ளி செல்லும் எல்லா மாணவரும் கல்வியில் கருகிப்போய் விடுவதும் இல்லை. இதற்கு நிறைய எடுத்துக்காட்டுகள். பொதுவாக ஒரு மாணவனின் கல்வி உயர்வில் அவரது குடும்ப சமூக-பொருளாதார சூழ்நிலையே முக்கியக் காரணியாக இருக்கிறது. அவர் செல்லும் ஆரம்பப் பள்ளி அல்ல. அதேபோல் நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகமாக இருப்பது சீன, தமிழ்ப்பள்ளிகள்தான் என்ற (காழ்ப்புமிக்க) கூற்றும் தவறே. 50, 60, 70களில் 4 மொழி ஆரம்பப் பள்ளிகள் இருந்தும் அப்போது பல்லின மக்களிடையே புரிந்துணர்வும் சகிப்புத் தன்மையும், பரஸ்பர மதித்தலும் மேலோங்கி இருந்ததே…!! அது எப்படி..?! தற்போதைய ஒற்றுமையின்மைக்கு முழுமுதல் காரணி இந்த இனதூவேசமிக்க அரசின் இன-சமய பாகுபாடு கொள்கைகளே. அதனை மறைக்க அவ்வப்போது அவர்கள் சீன, தமிழ்ப்பள்ளிகளை பலிகடாவாக்கின்றனர்.
இந்த அரைவேக்காடு அம்னோ கம்மனாட்டிகள் சுதந்திரத்திற்கு முன் இதைப்பற்றி கூறியிருக்க வேண்டும் — அதிகாரம் தங்களின் கையில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் கூறுகின்றனர்,- MIC ஜால்றாக்களுக்கு இது எங்கே புரியப்போகின்றது?
இவங்களுக்கு என்ன தான் வேண்டும் .தமிழ் இவனோட மொழியை கெடுத்தத அல்லது தடுத்தத ? இருக்க மட்டதவனுக்கு
எல்லாமே தப்ப தானே தெரியும்..எங்கேயோ வந்த மொழியை வைத்துக்கொண்டு இப்படி துள்ரனே..கெடுவான் கேடு நினைப்பான்
தமிழ் பால் இத்துனை பற்று கொண்டுள்ள அனைத்து வாசகர்களுக்கும் எமது மனமுவந்த வாழ்த்துகள். தொடரட்டும் அன்பரே!!!!
ஆனால்,மூவினமும் சென்று தான் சுதந்திர சாசனத்தில்
கையெழுத்திட்டு …முழு திருப்தியோடு ,எல்லா நலனும்
நமக்கும் உண்டு என்று பறைசாற்றி ஆட்சியிலும்
பங்கு பெற்றபின் ஏன் இவ்வளவு கோளாறுகள் வளர
இந்த சீனத் தலைவரும் தமிழ்த் தலைவரும் வழி வகுத்தனர் ?/
இடம் கொடுத்தனர் ?
இவர்களிடம் தன் இனநலன் காக்கும் திறன் இல்லையேல்
அங்கே ஏன் வெறும் ஜடங்களாக அமர்ந்தார்கள் ?!
ஊழல் மலிந்த நாட்டில் இவர்களும் கை சுத்தம் இழந்தார்களா ?
அதனால் , தன் நலனுக்காக சமுதாயத்தை அடகு வைத்தார்களா ?
நண்பர் சுவிஸ் நாடு பற்றி எழுதியிருந்தார் …,அன்று நம்மை
கூலிகளாக கொண்டுவந்து தன் நாட்டை கோபுரமாக்கி கொண்ட
வெள்ளையன் நாட்டில் இன்று லட்சக் கணக்கில் தமிழர்கள் /
இந்தியர்கள் வாழுவது கண்டேன் .
அதே போல் ஐரோப்பிய உலகம் என்னும் எல்லா நாடுகளிலும்
நம் மக்கள் உரிமையோடு வாழுகிறார்கள் !முறையாகசென்றவர்.!
அவர்கள் குழந்தைகளின் கல்விக்காக சிறப்பு கவனம் செலுத்துகிறார்கள் !
இரண்டு மூன்று குடியிருப்பு பகுதிக்கு ஒரு /இரு கல்விக்கூடங்கள் அமைத்திருக்கிறார்கள் (பாலர் பள்ளி / 1 – 6 ம் வகுப்புக்கான மற்றது )
ஆங்கிலத்தோடு இன்னொரு மொழியும் கற்பிக்கிறார்கள்,நல்ல
ஆரோக்கியமான சூழல் .
காலையில் பெற்றோர் /பாதுகாவலர் குழந்தைகளை கொண்டுவந்து
பள்ளியில் விடுவதும் …,அங்கே வகுப்பு ஆரம்பிக்கும் முன் பெற்றோர் /ஆசிரியர் கண்டு உரையாடுவதும் தினமும் இருவேளை நிகழ்வுகளாகும் .
செருப்படி அங்கே மரண தண்டனை போல் .!பள்ளியில் பிள்ளை
தடுக்கி விழுந்தாலும் …வகுப்பு முடிந்து பிள்ளையை திரும்ப
அழைத்துச் செல்ல வரும் பெற்றோரிடம் அது பற்றி விளக்கிச்
சொல்லி, கையில் எழுத்து மூலமான கடிதமும் கொடுக்கும்
நிலை அங்கே !
மற்ற மொழி பிரிவில் ஒரு பிள்ளை இருந்து தமிழ் வேண்டும்
என்றால் அதற்கும் லண்டனில் சில இடங்களில் ஆசிரியர்
அமைதுக்கொடுக்கிரார்கள் .
ஆனால் பெரும்பாலோர் அவ்வாறு செய்யாமல் தனியே மாலை
நேர வகுப்புக்கு அனுப்பி சொந்த பணம் செலவிடுகிறார்கள் .
இன்னொன்று நம் இன தாழ்வுக்கு நாமே காரணம் !
நாம் எங்கு சென்றாலும் ஒற்றுமை இலைமறை காய்தான்!
இன்று நம்மை இங்கே குடியேற்ற வாசிகள் என்று எவன் எல்லாமோ
சொல்லுகிறான் .அதை மறுத்து பேசுவாரில்லை!
( எதிர்கட்சியினர் தவிர்த்து )
வெள்ளையன் நாட்டில் இது போன்ற செயல் இல்லை .!அனைவரும்
குடியுரிமை பெற்ற பிரஜைகள் .அதே சலுகை .
பண்பட்டவர்களுக்கும் திடீர் பணக்காரர்களாக /உழைக்காமலே
பணக்காரர்களாக உயரத்தில் அமர்ந்தவர்களுக்கும் உள்ள வேறுபாடு
நன்றாக தெரிகிறது .
தனக்கென்று ஒரு எழுத்துக்கூட இல்லாதவன் இன்று தன் மொழியின் மேன்மை பேசுகிறான் ,தொன்மையான நம் மொழியை புறம் தள்ளுகிறான் .எல்லாம் காலத்தின் கோலம் !!!
தோட்டத்து தமிழ் பள்ளிகளு க்கு போதிய பிள்ளைகள் இல்லை ,
அவற்றை நகர் பள்ளிகளாக்க எவ்வித முனைப்பும் இல்லை .
தமிழ் பள்ளிக்குப் பின் இடைநிலை பள்ளியில் ஏராளமான நம்
மாணவ மாணவிகள் தொடர்பின்றி பாதியில் விலகுவதும் …,
அவர்களுக்கு நல்வழி காட்டும் நல்லோர் இல்லாமல் இருப்பதும்
இங்கே நமது சமுதாய சாபக்கேடு !
இங்கே சிலர் நல்ல கருத்தை முன் வைத்தது கண்டு
பெருமை படுகிறேன் !
குறிப்பாக சோழன் ,சிங்கம் ,காமபோ…அறிவார்ந்த
கருத்தை …,விளக்கத்தை கொடுத்துள்ளனர் .
நாம் இன்னும் தொடர்ந்து இழிவுக்குள்ளாவதும், பலவிதமான
சமூக சீர்கேடுகள் தொடர்வதும் …,வேறு யாராராலும் அல்ல !
நம்மை கை கழுவிவிட்ட / உரிமைகள் பறிபோகும் சமயம்
மௌனித்திருந்த நம் பிரதிநிதிகளே காரணம் !!!
சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி … தன் நலன் மட்டுமே பேணும் கபடர்கள் !
இன்னு மொரு விளக்கம் : சுவிஸ்சில் இருந்தும் தமிழ்
தொலைகாட்சி ஒலிபரப்பு உண்டு .
யாழ் தமிழர்கள் சில ஆண்டுகளிலேயே நிறைவான
மொழி பற்றுடன் வாழத் தொடங்கியுள்ளனர் .
அவர்கள் இலவச தமிழ் தினசரி கொடுக்கிறார்கள் .
சிலர் அதற்க்கு பணம் கொடுத்து ஆதரிப்பதும் உண்டு !
தீபம் ,யாழ் ஒளி என இலவச தொலைக்காட்சியும்
உண்டு .சிலரிடம் சந்தா பெறுவதும் உண்டு .
இன்னும் பல பெருமைப்படும் வளர்ச்சியும் உண்டு .
உலகப்பந்தில் ஏறக்குறைய பாதியை தன தாக்கிகொண்டு, சில நூறு
ஆண்டுகள் கொடுங்கோலனாக ஆட்சி புரிந்தவன், இன்று அவன்
பூமியில் எல்லா இனங்களையும் ஆதரிக்கிறான் .
அதிலும் இந்திய வம்சாவளி …,குஜராத்தி இனத்தினர் , ஒரு மாநகரில்
பெரும் பங்கு வகிக்கின்றனர் .
தமிழர்களுக்கும் அங்கே இரு கவுன்சிலர்கள் தேர்வுக்கு இடம்
கொடுத்துள்ளனர் !
ஊர் தோறும் ஆலயம் கட்டுவோம் என்பது அங்கும் நிறைவாக
இடம் பெற்றுள்ளது .
நம்மை நசுக்கியவன் இன்று பரிகாரம் காண்கிறானோ …,
என்னவோ …? நலமே வாழ இடம் கொடுத்துள்ளான் !
நம் வயோதிகர்களுக்கும், தொழில் புரிந்தார்களோ …இல்லையோ ,
மாதம் தோறும் ஓய்வூதியம் கொடுக்கிறான் !
பிள்ளைகள் இருந்தாலும் அவர்களுக்கு தனியே ஓய்வூதியம் உண்டு !
இலவச பயண அட்டைகள் …,டியுப் என்னும் தொடர் வண்டியில்
பயணிக்கவும் …,பேருந்தில் நிரந்தரமாக பயணிக்கவும் !
கல்விக்கூடங்களில் இலவச கல்வி ,அதற்கான உபகரண பொருட்கள்
என பல இலவசங்கள் !
குழந்தை பிறந்ததில் இருந்து அக்குழந்தைக்கும் நிதி …,
இன்று இவன் நல்லவனா ? இவன் போனால் நம் இன தலைவர்களால், நாம் பெரும் பேரு பெறுவோம் …,இன்னும் வளமாக
வாழ்வோம் என எண்ணிய நம்மை, பாழ்குழியில் தள்ளிய இந்த
நம்மவர்கள் நல்லவர்களா ???
நம்மில் சிலரைத் தவிர்த்து ,பெரும்பாலோர் இன்னும் ஏழ்மை நிலை
தான் !
அவன் நம் நன்மைக்காக ஆரம்பித்து வைத்துவிட்டு போன நல்லவைகள் கூட இந்த ஏழை மக்களின் உதவிக்கு இல்லையே !
சமீபத்தில் ஒரு வயோதிக நண்பரை சந்தித்தேன் ,
இந்த” சங்கத்தில்” இருந்து மாதம் 50 வெள்ளி பேங்க் கணக்கில் வருவது …, சில மாதங்களாக வரவில்லை !
இப்போதும் பேங்க் சென்று பார்த்தேன் …,இன்னும் வரவில்லை !
வருமுன் தொலைபேசியில் கேட்டேன் …,இரண்டொரு நாளில்
பாருங்கள் … என்று சொல்லி சில நாள்கள் கடந்தும்…, இன்னும்
காணோம் …என்று அலுத்துக்கொண்டார் !
இந்த நிலை அங்கு (ஆங்கிலேயர் நாட்டில் ) இல்லை !
ஏன் இந்த கேவலம் ? நம்பிய மக்களை அல்லல் பட விட்டு இவர்கள்
மட்டும் சுகவாசிகளாக சொர்க்கபுரியில் வாழ்வது …,
துரோகம் இல்லையா ?உயிரோடு உள்ளவர்களின் …,இயலாதவர்களின்…, இரத்தம் குடிப்பது போன்றில்லையா ???
சமுதாயத்தின் பணத்திலே சமுதாயத்திற்காக பணி செய்கிறேன்
என்னும் போலித்தனம் தேவையா ???
mauritius ,பிஜி தீவுகள் நாடுகளில் உள்ளa தமிழர்கள் தமிழ் பேசுவது இல்லை ஆனால் அங்கே பாடசாலைகளில் தமிழ் கற்பிக்க படுகின்றது ..இது அங்குள்ள தமில் மக்களின் ஆர்வம் காரணமாகவே ….ஆக ஆர்வம் இருந்தால் மொழி அழியாது ஒரு காலத்தில் படித்த தமிழர்க்கல் தங்கள் பிள்ளைகளை ஆங்கில மொழியில் கல்வி கற்பி தார்கள் …சிலவேளை மலேசியா உயர்மட்ட தமிழர் பிள்ளைகளை மலாய் மொழியில் படிப்பிக்க விரும்பலாம் ..இத்உ தற்காலிக மகிழ்வாகவே இருக்கும் ….இலங்கையல் தாய் பாஷை பாடசாலைகளில் கட்டாயமாக் அறிமுகபடுத்த பட்டதும் உயர் குடி மக்கள் கூட முழு கல்வியையும் தமிழிலேயே கற்க வேண்டிய நிலைக்கு தள்ள பட்டார்கள் காரணம் முள்உ புத்தகங்களும் தமிழில் பதிபிகபட்டன ….தேர்வுகள் தமிழில் மாத்திரம் எழுத்a வேண்டியa கட்டாயம்
ஜப்பான் நாட்டின் புதகநிளையத்தில் வாசல் அருகில் திருவள்ளுவபெருமானின் குரல் தமிழில் நீங்கள் பார்க்கலாம் Naigara waterfalls தமிழில் நன்றி மீண்டும் வருக என்று எழுதி உள்ளார்கள்.இந்த மடையர்களுக்கு என்ன தெரியும் ?
தொடரட்டும் செம்பருத்தித் தமிழ் தொண்டு.