திங்கட்கிழமை, காலை மணி 7.25. மின்னல் பண்பலையில் பாடல் ஒலிக்கிறது.
லவ் லெட்டரு எழுத ஆசைப்பட்டேன்; இன்னும் எழுதல; அத உன்னிடம் கொடுக்க ஆசைப்பட்டேன்; கொடுக்க முடியல.
தொரத்தி தொரத்தி காதலிச்சேன்; வெறி பிடிச்ச நாயாட்டம்,
ஆசைய மூடி மறைக்காத; உங்கப்பன் பேச்சை மதிக்காத; ஐ லவ் யூ சொல்லிடு..
காலையில் பள்ளிகளுக்கு பிள்ளைகளை அழைத்துச் சென்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், முக்கிய பணிகள் குறித்து சிந்தித்தப்படி வாகனம் செலுத்தி கொண்டிருக்கும் நேரத்தில் இப்படி தரங்கெட்ட பாடல்கள் ஒலியேற்றப்பட்டால் எப்படி இருக்கும்?
அதுவும், மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசாங்க வானொலி இப்படியான பாடல்களை ஒலியேற்றினால் சமூக பொறுப்புமிக்க மக்கள் அதைக் கேட்டு கொண்டு சும்மா இருந்து விடுவார்கள் என்று நினைத்து விட்டார்கள் போலும்.
அண்மைய காலமாக மின்னல் பண்பலை நிகழ்ச்சிகளின் தரம் அதி பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை மட்டும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஒரு காலத்தில் இந்த நேரத்தில் இந்த நிகழ்ச்சி ஒலிபரப்படும் எனக் காத்திருந்து வானொலி கேட்டவர்கள் எல்லாம் இப்போது புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு நாளையும் துவக்கி வைக்கும் முக்கியமான வானொலி நிகழ்ச்சி காலைக்கதிர். அந்த காலைக்கதிர் நிகழ்ச்சி கொஞ்ச காலத்திற்கு முன்பு வரை ஒரு சில குறைப்பாடுகள் இருந்தாலும் தாராளமாக கேட்கலாம் என்ற நிலையிலேயே இருந்தது.
எப்போது புதுப்பொலிவுடன் ‘மின்னலின் காலைக்கதிர்’ என்ற அறிவிப்பு வெளிவந்ததோ அன்றுதான் எல்லா சிக்கல்களும் தொடங்கின. அறிவிப்பாளர்கள் தேவையில்லாத விசயங்களுக்கெல்லாம் சிரிக்கின்றனர். ஆண் அறிவிப்பாளரும் பெண் அறிவிப்பாளரும் தங்களுக்கிடையில் கிண்டல், கேலி என ஏகத்துக்கு கூத்தும் கும்மாளமுமாக காலைக்கதிர் நிகழ்ச்சி போய்க்கொண்டிருக்கிறது. கேட்டால் இளைஞர்களுக்கு ஏற்ற மாதிரி தருகிறார்களாம். எந்த இளைஞர்கள் உங்களிடம் வந்து இப்படி நிகழ்ச்சி நடத்த சொன்னார்கள் என்றுதான் தெரியில்லை.
இதில் உச்ச கட்ட கொடுமை என்னவென்றால் இந்த காலைக்கதிர் கூத்தடிப்புகளுக்கு இப்போது தனியாக தயாரிப்பாளர் வேறு. அவர் வேறு யாருமல்ல. முன்பு விழுதுகள் நிகழ்வில் தயாரிப்பாளராக இருந்தவர்தான் இப்போது காலைக்கதிர் நிகழ்வில் தயாரிப்பாளர். அவர், வந்தபிறகு காலைக்கதிர் நிகழ்ச்சி தனித்தன்மையோடு ஒலிபரப்படும் என எதிர்ப்பார்த்திருந்த பல நேயர்களில் நானும் ஒருவர். ஆனால், எங்கள் நம்பிக்கை வீணடிக்கப்பட்டதுதான் மிச்சம்.
விழுதுகள் நிகழ்வில் சிறப்பாக செயல்பட்ட அந்த தயாரிப்பாளர் ஏன் காலைக்கதிர் அங்கத்தில் ஏகப்பட்ட குழறுபடிகளைச் செய்து வருகிறார் என்றுதான் தெரியவில்லை.
மின்னல் பண்பலையில் இளைஞர் பட்டாளத்தை முன்னிறுத்துவது வரவேற்கப்பட வேண்டியது தான். அதற்காக பொறுப்போடு படைக்கப்பட வேண்டிய பல வானொலி நிகழ்ச்சிகள் தன் தரத்தை இழந்துக் கொண்டிருப்பதை நம்மால் எப்போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இவற்றின் உச்சகட்டமாக, சனி, ஞாயிறு காலைக் கதிர் அங்கத்தை படைக்கும் பெண் அறிவிப்பாளர் தேவையே இல்லாமல் கொஞ்சி கொஞ்சி பேசி ஏகத்துக்கு எரிச்சல் பட வைப்பார். அறிவிப்பு செய்வதற்குக் கொஞ்சல் மொழி எதற்கு. சொல்ல வந்ததைத் தெளிவாக சொல்லவேண்டியதுதானே ஒரு அறிவிப்பாளரின் முதல் தகுதி. எந்த தகுதியில் அடிப்படையில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற கேள்வியைப் பலர் இதுவரை என்னிடம் கேட்டுவிட்டனர்.
ஏற்கனவே, மின்னல் வானொலி செய்திகள் அரசாங்கத்தை மட்டுமே துதிபாடுகின்றன என்றும் மக்களுக்குத் தேவையான உண்மையான செய்திகளை வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்பட்டிருக்கும் நிலையில் மி;ன்னலின் 24 மணி நேர அறிவிப்பும் எந்தவொரு பயனையும் மக்களுக்குக் கொண்டு வருவதில்லை என்றே நான் கருதுகிறேன்.
அதைத் தவிர, இன்றைய நிலையில் மிக அதிகமான விளம்பர நிகழ்ச்சிகள் மின்னல் பண்பலையில் ஒலிபரப்பாகின்றன. முன்பிருந்ததைவிட இப்போது விளம்பரங்கள் அதிகரித்து விட்டன. மக்களின் அறிவினைத் தொடர்ந்து மழுங்கடிக்கச் செய்யும் விளம்பரங்களே தொடர்ந்து ஒலிபரப்பாகின்றன. சிவப்பழகு கிரிம்கள், மூடநம்பிக்கையின் உச்சகட்டமான பூஜை என்ணெய், தீப விளக்குகள், ஊதுபத்தி, சுற்றுலா நிறுவனங்கள் தொடர் விளம்பரங்கள் என மி;ன்னல் பண்பலை விளம்பரங்களின் கூடாராமாகிவிட்டது.
அரசாங்க வானொலி ஏன் இவ்வளவு அதிகமான விளம்பர நிகழ்ச்சிகள் என்றுதான் எனக்குத் தெரியவில்லை. விளம்பர நிகழ்ச்சிகள் தயாரிக்கவும், அவர்களின் பொருள் விளம்பரத்திற்குக் குரல் கொடுக்கவும் முண்டியடிக்கும் அறிவிப்பாளர்கள் கொஞ்சம் மக்களுக்குப் பயனள்ள நிகழ்வுகள் செய்வதற்கும் மெனக்கெட்டால் நம்மையாவது கிட்டும்.
இதைப்பற்றியெல்லாம் பலரும் ஒவ்வொரு வாரம் ஞாயிறு தமிழ் நாளிதழ்களிலும் பல நேயர்கள் தொடர்ந்து எழுதியபடித்தான் இருக்கின்றனர். ஆனால், மாற்றம் நடப்பதற்கான எந்த அறிகுறியும் இதுவரை காணப்படவில்லை. கடந்த நம்நாடு நாளிதழில் கூட அதன் ஆசிரியர் வித்தியாசாகர் மிக நாசூக்காக மின்னல் பண்பலை குறைகள் குறித்து எழுதியிருந்தார். ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் இதையெல்லாம் வாசிப்பார்களா என்றுகூட தெரியவில்லை.
எனது புலம்பலை செவிமடுத்த ஒருவர், “முன்பு ஒரு முறை கோலாலம்பூர் கண்ணன் குழுவினர் தொலைகாட்சி பெட்டியை தெருவில் போட்டு உடைத்து ஆர்ப்பாட்டம் செய்தது போல் ஒரு வானொலியை ஆர்டிஎம் முன் போட்டு உடைத்தால், ஒரு வேளை அவர்கள் செவிகளுக்கு எட்டும்”, என்றார்.
சம்பந்தப்பட்டவர்கள் நம்மை அந்த நிலைமைக்கு கொண்டு செல்ல மாட்டார்கள் என நம்புவோம்.
ஆர்பாட்டமெல்லாம் வேண்டாம். நமது மின்னல் பண்பலை அன்பலையாக மாறி நற்சேவை வழங்கிட வேண்டும். அதுவே நாட்டுக்கும், மக்களுக்கும் செய்கிற பெரும் சேவையாகும்.
ஐய, என் இதய குமுறல்களை அப்படியே எழுதியிருகீர்கள். காலை கதிர் நிகழ்ச்சி கேட்கவே சகிக்க வில்லை , கண்டிப்பாக அது ஒரு கேலி கூத்து நிகழ்ச்சியே . ஒரு அருவருப்பான நிகழ்ச்சி அது . அறிவிப்பாளர் தகுதியே இல்லாதவர்கள் ஆனால் என்ன செய்வது . ஒருவேளை minnafm பொறுப்பாளர்களும் இப்படிதானோ ????? தலை சரியில்லை என்றால் வால் இப்படிதான் கண்டபடியெல்லாம் ஆடும் !!! கேவலமான காலை கதிர் நிகழ்ச்சி பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் ……….அநாகரிக சிரிப்பு காலையிலேயே கேட்கும் பொழுது இனி காலையில் வானொலி கேட்க வேண்ட்டம் என்ற முடிவிக்கே வந்துவிட்டேன் . நன்றி minnafm
பாட்டிற்கு ரேடியோவை உடைக்க வேண்டும் என்றால்…..அரசியலில் ஜாதி …திருமணத்தில் ஜாதி ……கோவிலில் ஜாதி …..நட்பில் ஜாதி ……..அப்போ எதை உடைக்க வேண்டும் /……………
பாட்டிற்கு ரேடியோவை உடைக்க வேண்டும் என்றால்…..அரசியலில் ஜாதி …திருமணத்தில் ஜாதி ……கோவிலில் ஜாதி …..நட்பில் ஜாதி ……..அப்போ எதை உடைக்க வேண்டும் /……………
நான் மின்னல் FM யை செவிமடுப்பதில்லை.தரமற்ற ஒலிபரப்பைக் கேட்பதைத் தமிழர்கள் தவிற்க வேண்டும்.
என் வயிற்று எரிச்சலும் இதுதாங்க ! மின்னல் எப் எம் காலை 9.00 மணிக்கு மேல் விளம்பர வானொலியாக மாறி விடுகிறது ! தினம் தினம் ஒரே மாதிரியான விளம்பரம் கடுப்பை கிளப்புகிறது , சமையலுக்கு தேவையான மூலிகை மெத்தை என் கடுப்பின் உச்சம் ! மூலிகை தைலம் வாசம் , ஊ……..தா தாங்கமுடியவில்லை சாமி ! மின்னல் எப் எம் பொருப்பாளர்களே , மாநகர் வாகன நெரிசலில் மாட்டிக்கொண்டு நாங்கள் படும் பாடு இருக்கே , அதுவே பெரிய வேதனை ! இதில் நீங்கள் போடும் விளம்பரம் என்னை கடுப்பின் உச்சிக்கே கொண்டு செல்கிறது ! மாலையிலும் இதே சேட்டைதான் செய்கிறீர் ! வீடு திரும்பும் போது மன இறுக்கம்தான் மிஞ்சுகிறது !
ஒரு காலத்தில், அசன் கனி, பைரோஜி நாராயணன், மைதீ சுல்தான், ரெ.சண்முகம், சந்திரா சண்முகம், உள்ளதைச் சொல்வான் போன்றோர் வானொலியில் பணியாற்றிய காலத்தில் வானொலி நிகழ்ச்சிகள், அறிவை வளர்க்கும் சிந்தனை களஞ்சியங்களாக திகழ்ந்தன.இப்போது வானொலியை திறந்தாலே, ‘கஞ்சா வெச்சக் கண்ணு;’ . ஆஹா, என்னமா தத்துவப் பாடல்கள். கண்ணதாசன் உயிரோடு இருந்தால், தற்கொலை செய்துக் கொள்வார்.
மலேசியாவில் இருக்கும் 2 தமிழ் வானொலி ஒலிபரப்புகளில் மின்னல்.FM நிகழ்ச்சிகள் கடந்த சில வருடங்கள் வரை நல்ல தமிழில்தான் போய் கொண்டிருந்தது. என்று இந்த THR ராகாகாரர்கள் வந்து தமிழை கொலை செய்து, ‘தங்க்லீஷ்’ என்றொரு தமிழ் ஆங்கிலம் கலந்த புதியதோர் மொழியில் பேச ஆரம்பித்தார்களோ அன்றே அந்த வியாதி மின்னல் FM -குக்கும் ஒட்டிக் கொண்டது போலும். இவர்களும் அவர்களுடன் விளம்பர வியாபார போட்டியை எதிர்கொள்ள வேண்டி ‘இருந்ததும் போச்சுதட நொல்லக்கன்னா” என்ற அளவிற்கு தங்ககளைத் தாங்களே தரம் தாழ்த்திக் கொண்டார்கள். மின்னல் FM, THR ராகாவை பின் பற்ற வேண்டிய அவசியம் என்ன?. தங்களுக்கே உரிய முறையில் மின்னல் FM உயர்ந்து நிற்க வேண்டும். அதுவே மின்னலுக்கு வெற்றியைத் தரும். THR ராக என்னும் இடியைப் பற்றி கவலைப் பட வேண்டாம். அது வெறும் வெத்து வேட்டு.
மின்னல் fm தட்டி கேக்க ஆளில்லையா?
தமிழினிக்கு வயதாகி விட்டது .அதனால்தான் காலையில் அந்த பாடலை அவரா ல் ரசிக்க முடியவில்லை . பலருக்கு அது மீண்டும் மலரும் …………!
தேனீ…. THR,… ராகா வெத்து அல்ல தமிழை சீர்குலைக்கும் தரம் இல்லாத தறுதலை ஒலி அலை …… அது மூடு விழா கண்டால் தமிழன்னை அகம் மகிழ்வாள் .
தமிழினி மிகச் சரியான கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். மின்னல் பண்பலையின் தலைவர் திரு குமரன் இதனை கவனத்தில் கொள்வாரா? மாற்றங்களுக்காகக் காத்திருக்கும் நேயர்களில் நானும் ஒருவன்.
அடுத்தவனை பார்த்து (தனியார் வானொலி) சூடு போட்டு கிட்டா இப்படிதான் ஆகும். முன்பெல்லாம் வேலை முடிந்து வீடு போகும்போது (மாலை 5.30-7மணி) எண்பதுகளின் இனிய பாடல்களை கேட்கலாம். இப்போது அதைவிட அதிகமாக உடல் கட்டமைப்பு ஆடை விளம்பரம்,கூவி கூவி புடவை விக்கிற விளம்பரத்தையும் தான் அதிகம் கேட்க முடியுது. இதுலே சில சமயம் ஏதோ முரிங்க ஜூஸ் விளம்பரம் வேற.குதிரை கத்துற சத்தத்தோடு…. ஐயோ. கேவலம்டா சாமீ… பேசாமே இப்பலாம் எம்.பி.3 ல பாடல் கேட்கே பழகிட்டேன்..மனம் நிம்மதியா இருக்கு. மின்னல் பண்பலை மீது இருந்த மதிப்பு அறவே போச்சு…
பணி இடம் ( மின்னல் fm ) ஒரு கோவிலாக இருந்தது அன்று !! காட்டானாக இருந்தவர்களை கண்ணியமானவர்களாக மாற்றியது RTM TAMIL VANOLI !! என்று சொல்லும் அளவிற்கு தோட்டப்புற மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தது . காரணம் அப்படிபட்ட பக்குவமான படைப்புக்களை அள்ளி பருக செய்தது அன்றைய தமிழ் வானொலி !! கோயிலுக்கு போகிறோமோ இல்லையோ ஆனால் வானொலி இல்லாத வீடும்மில்லை , கேட்காத நாளும்மிலை . தமிழ் பள்ளிகளில் வானொலியை முடிக்கிவிட்டு ,எப்படி வார்த்தையை உச்சரிப்பது என்பதை கேட்கசெய்வார் எனது ஆசான் . ( 1958 ). அப்படி உயர்ந்து இருந்த தமிழ் வானொலி – எங்கே போய்கொண்டிருகிறது ? மதிப்பிற்குரிய மூத்த படைப்பாளர்கள் ஐயா ஹசன் கனி , ஐயா மைதீன் சுல்தான் , ஐயா பூபாலன் இன்னும் என்னில் அடங்கா தமிழ் பற்றாளர்கள் யாவரும் முன்வந்து – தயவாய் கை கொடுங்கள் !! தமிழ் மொழியை காப்பாற்றுங்கள் !!
அன்புள்ள மின்னல் கீற்றுகளே !இதையும் படியுங்கள்….
” மன நலம் மண் உயிர்க்கு ஆக்கம்
இன நலம் எல்லாப புகழும் தரும்” நம்ப திருக்குறள் ஆசான்
சொன்னதுதான் நீங்கள் படிக்காமல் இல்லை …பக்குவப்படவில்லை. மீண்டும் வாருங்கள்.மீட்டு எடுங்கள்!
மின்னல் ஹஎப் எம் ,தி எச் ஆர் ராக அறிவிப்பாளர்களே உங்களின் தவறுகளை இங்கே சுட்டி காட்ட பட்டுள்ளது இன்னும் அவகாசம் இருக்கிறது நீங்கள் உங்கள் தவறுகளை திருத்தி கொள்ளுங்கள்.யார் தவறு செய்யவில்லை ஏதோ ஒரு இடதில் எல்லோரும் தவறு செய்திருப்போம் அதை திருத்தி கொள்ளவில்லையா?அப்படிதான் இதுவும் உங்கள் தவறுகள் நிங்கள்தான் சரி செய்ய வேண்டும் அதை நேயர்கள் கேட்டு மகிழ்சி அடையவேண்டும்.நன்றி
இங்கு எல்லாராது கருத்துகளும் ஏற்புடையவைதான். இப்படி எழுதியும் இந்த மின்னல் எப்.எம், வானொலி நிலையத்தார் கவனம் செலுத்துவார்களா என்பது தான் நமது கேள்விக்குறி. இது போன்று பலர் பல முறை தமிழ் நாளேடுகளில் இக்குறைகளை எழுதியும் வருகிறார்கள், ஆனால் என்ன பயன், செவிடன் காதில் ஊதிய சங்கு தான்.
இங்கு ஆரோக்கியமான கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இதக்கு மேல் சொல்வதக்கு ஒன்றுமில்லை. மின்னல் FM , THR ராக என்ற இரண்டடு குப்பை தொட்டிகள் தமிழ் மொழி கொலை செய்வதை வன்மையாக கண்டித்து எனது கருத்தை இங்கு பதிவு செய்கிறேன். தமிழினிக்கு எனது பாராட்டுக்கள்.
மின்னல் ((தாக்கிய) FM அதனால்தான் சமுதாயத்திற்கு தேவை இல்லாத நிகழ்ச்சிகள்ஒளிஏறுகிறதோ? முதலில் நல்ல இடி தாங்கியை(LIGHTNING ARRESTER) பொருத்துங்கள் தலைவரே ! ,பண்பலை ( பண்பற்ற அலை ). என்ன மானங்கெட்ட பிழைப்பு இது .
பெற்றோர்கள் தயவுசெய்து காலையில் பிள்ளைகளை பள்ளிக்கு கூட்டி செல்லும்போது வண்டியில் மின்னல் எப்.எம். கேட்டு தொலைக்காதீர்கள்… காலையில் நல்ல செய்திகளே குழந்தைகள் மனதில் பதிய வேண்டும்… திருக்குறள்,அல்லது தமிழ்மொழியில் உள்ள இறைமந்திரங்கள், இறைவாழ்த்து பாடல்கள், அல்லது காதர் இப்ராஹீம் ஐயா போன்றோரின் தன்முனைப்பு உரை cd க்களை வாங்கி அதை பிள்ளைகளை கேட்க செய்யுங்கள்… இன்னும் எவ்ளோ பேர் சேர்ந்து இந்த இனத்தை சீரழிக்க போறான்களோ..புதிதாய் அந்த பணியில் இணைந்த பண்பற்ற அலைக்கு எனது பாராட்டுக்கள்…
இது ஒரு நீண்ட முயற்சி தோல்வியில் முடந்தது.
2010 என்று நினைக்கிறேன் ஒலி/ஒளி பரப்பு துறை அரசு மற்றும் தனியார் துறை சரியாக தமிழர்க்கும் தமிழ் மொழிக்கும் நல்ல படைப்புக்களை தர வேண்டும் என்று தான் ஸ்ரீ சோமா அரங்கில் “அலையோசை” என்ற பெயரில் மாபெரும் எதிர்ப்புககூட்டம் நடத்தினோம்.
அந்நாள் துணை அமைச்சர் கோகிலன் பிள்ளை Finas அதிகாரிகள் பலர் கலந்து 10 தீர்மானங்களை போட்டு கொடுத்தோம். அதிலே ஒளி /ஒலி பரப்பு மற்றும் நாடக சினிமா துறை சார்பு உள்ளவர்களுக்கு தமிழ்த்துறையில் வணிக வாய்ப்பு /வேலை வாய்ப்பு /ஊடக R & D போன்ற அனுகூலங்கள் தயாரிக்கப்பட்டு Astro /THR Raaga /மின்னல் FM / எல்லாவற்றுக்கும் வழங்கினோம்.
இதற்காக ஒரு ஒருங்கிணைப்பு நிறுவனமும் ALAIOSAI TAMIL FILM & BROADCAST SDN BHD என்று நினைக்கிறன் அமையும் ஆசையில் இருந்த போது சிலர் நம்மவர்கள் குறிப்பபா பட நிறுவன் அதிபர்கள்/இயக்குனர்கள்/பாடல் ஆடல் இயக்குனர்கள் /இசை துறை துரோகிகள் தனி தனியே பேரம் பேசி குதகையின் பேரில் ஓடி ஒளிந்து நம் திட்டத்தை சுய சுகத்துக்கு பாழாக்கினார்கள்.
இப்போது அது இல்லை இது இல்லை என்று மீண்டும் பி கு ஈ ஓட்ட காத்து இருகிறார்கள்.
இதெற்கெல்லாம் காரணம் மலேசியா நாட்டில் நமது தமிழ் மொழி
அழிப்பிற்கு ஒரு மறைமுக கூட்டம் வேலை செய்கிறது என்றால் நீங்கள் நம்ப மறுப்பீர்கள்.
இதன் அடிப்படை வேலைதான் 2014- 2015 புதிய கல்வி கொள்கையில் நமது தமிழ் மொழிக்கு ஆப்பு என்றல் ரொம்ப பேருக்கு விளங்க வில்லை.
இந்த இனத்தை வெறும் வேடிக்கை பார்க்கும் இனமாக தொலை காட்சி துறை கேட்டு கேட்டு மக்கி போகும் வானொலி துறைகள் நம்மை நம் மொழியை ஊடுருவி ஊடக வாயிலாக கொச்சையாக்கி இனமே இனத்தையும் மொழியையும் அளிக்கும் பின் புற ஆற்றல் அமைப்புகள் உருவாகி உள்ளதை நாம் உணர வேண்டும்.
நாம் மேலோட்டமாக நினைக்கும் FM விசியத்தில் அல்லது THR அஸ்ட்ரோ மொழி ஒலி /ஒளி ஊடக விசியத்தில் தமிழை மீட்டு எடுக்க அக்கப்பூரவ நடவடிக்கை ஆய்வு மீள் பார்வையும் கவனமும் இல்லையெனில் தமிழை டமியாகி மேய்க்க அதிகபேர் உள்ள்னர்ர். இதில் வேடிக்கை என்ன என்றால் வழி இல்லாமல் தமிழை படித்து பதவி பட்டம் அதிகாரம் என்ற இதரவர்கள் செய்யும் அநியாயம் இந்த கொடைச்சளுக்கு காரணம் என்பதை நீங்கள் உணர வேண்டும். இன வெறி ஆதிக்கம் இங்கு நம் மொழிக்கு முதல் ஆபத்தை தர தாயாராகி விட்டனர்.
இது பினற்றல் அல்ல பின் விளைவின் முதல் பக்கம்.ஆனால் உச்ச கட்டம். தமிழினிக்கு நன்றி பாராட்டுகள்.
நியாயமான கருத்துக்களை மின்னல் பண்பலை ஏற்பது அவசியம்தானே.
வானொலி நாடகங்களைக் கேட்டுப்பாருங்கள். இதுபோன்ற உபதேச நாடகங்கள் ஐம்பது வருடங்களுக்கு முன்னதாகவே கலை உலகில் நிறுத்தப்பட்டுவிட்டன. ஆனால் இன்றைய காலகட்டத்தில் இன்னமும் பழசைக் கட்டிக்கொண்டு அழுகிற தயாரிப்பாளர்களையும் மாற்றவேண்டும். ஒரு சிறிய வட்டத்தை வைத்துக்கொண்டு, சிறப்புநாட்களில் அவருக்குத் துதிபாடும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ஆஹா உங்களைப்போல் வருமா? ஆஹா நீங்கள்டே சிறந்த தயாரிப்பாளர், அற்புதமான தமிழ் உங்களிடம், நீங்கள்தான் சிறந்த நாடக ஒலிபரப்பாளர், மலேசியாவில் கலை உங்களால்தான் வாழ்கிறது என்று நேயர்களிடம் சொல்லிக்கொடுத்து உச்சரிக்கச்சொல்லி ஒலியேற்றுவார்கள். ஆபாசவசனங்களைக் கேட்பதுபோல் உடல் கூசும். இதுபோன்ற கேவலமான பிழைப்புக்கு, எங்கேயாவது அல்லூர் கூட்டலாம்.
அரசாங்க, தனியார் வானொலிப் பொறுப்பாளர்கள் செம்பருத்தி வாசகர்களின் மனக் குமுறல்களை நிவர்த்தி செய்வது அவசியம்; அவசரம்.
ஆர் இட் எம் இல் மாலை ஆறு மணி எபொழுது வரும் காத்திருந்து காதுக்கு இனிய கானம் கேட்டு மெய் மறைந்த நாட்களை எண்ணி பார்கிறேன் அது ஒரூ பொன்னன்காலம் இப்பொழுது எல்லாம் நான் பகலில் ரேடியோவை கேட்பதே இல்லை காரணம் தற்போதைய எந்தெ படைப்பும் மனதை ஈர்க்கவில்லை விளம்பரம் !விளம்பரம் !! காதில் புகை வருகிறது முன்பு அதி காலை பக்தி காலை கருத்து< மாலையால் இன்மையான பாடல் இரவிலும் இன்பமான பாடல் இப்பொழுது எல்லாம் ஒர்ரே இரைச்சல் !!!!!!!!!!!!!1
அந்த காலத்தில் கின்னஸ் விளம்பரத்துடன் ‘இழந்த பலத்தை மீட்டுத் தருவது நாய் சாப் கின்னஸ் தௌட்” என்று இரவு 8 மணி முதல் வரும் நேயர் விருப்பத்தை நினைத்துப் பார்க்கின்றேன். வேறொரு பொழுது போக்கு சாதனம் இல்லாத அந்நாளில் இந்த மலேசியா வானொலியே நமது காதுகளுக்கு விருந்தாக அமைந்தது. தோட்டங்களில் ஓரிரு வீடுகளில் அதி சத்தத்துடன் இசைக்கும் தத்துவ, மெல்லிசை பாடல்கள் கேட்ட நாட்கள் இன்னும் நினைவில் நீங்காமல் நிற்கின்றது. சென்ற காலம் திரும்பி வரப் போவதில்லை. இன்றோ, அந்த இரவு 8 மணி நேயர் விருப்பத்தை அதிகமாக கேட்பவர்கள் தெலுங்கு வம்சாவளி மக்களே என்று எவனோ ஒரு கபோதி கொடுத்த ஆய்வின்படி, RTM இந்நேரத்தை தெலுங்கு நேயர் விருப்பம் போடும் அளவுக்கு பரிதாபமான நிலைக்குச் சென்று விட்டது தமிழின், தமிழனின் நிலை இந்நாட்டில்!.
வசந்தி தங்கள் கணவரிடம் சொல்லி இதை கொஞ்சம் நிவர்த்தி செய்யக் கூடாதா?.
ஊதா கலர் ரிப்பன் என்ற பாடல் ஊறுகாய் விளம்பரத்தில் வருகிறது
நம்பி ஒரு போத்தல் வாங்கினேன்,ஒரே chuka . சீரான ரத்த ஓட்டம் ,
மற்றும் இருமல் நின்றுவிடும் என்று tonic chap gajah , இருமல் நின்ன பாடு இல்லை, ஆண்மைக்கு குதிரை கனைக்கும் முருங்கை jus ,வாழ்க minnal
fm
தமிழ் நன்றாக பேசு கிறவர்கள் இன்னும் நிறைய பெரு இருக்கீறார்கள். அவர்கள் மின்னல் வாநூலிக்கு வர வேண்டும்
என்ஜோய்லா , ஹய்பெர்மாலை – இவை எந்த தமிழ் அகராதியிலுள்ள வார்த்தைகள் ?
இதைசொல்ல வாய் கூசவில்லையா ? THR ரகளை சகிக்க முடியவில்லை !!
விளம்பரத்தில் – ஒருவர் அறுபதை அரவது என்கிறார் . கடையில் ஏராளமான புது சேலைகள் இருக்கிறது . ஒருமை-பன்மை தெரியாத விளம்பரம் .விளம்பரம் செய்பவரை
சரியான உச்சரிப்பு செய்யும்படி தயாரிப்பாளர் கவனிப்பது இல்லையா ?
தலைவருக்கு வேறு என்ன வேலை ! அதிக விளம்பரம் செய்து மின்னலுக்கு லாபம் தேடுகிறார்களா.?
மின்னல் பண்பலை முன்பு இந்திய வானொலி என்று சொல்லப்பட்டது!? ஆனால் அன்றும் சரி, இன்றும் சரி வானொலி என்றால், வெறும் பாடலாகவே, இடையில் செய்திகள் விளம்பரங்கள் என்று இருக்கவேண்டும் எனும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. ஒரு இலக்கிய, சமைய உரை, சிந்தனைக்கு ஏற்ற செய்தி, வேலை வாய்ப்புகள் ம் மூச்சு விட முடியாது !! இப்படிப்பட்ட அறிவுக்கு எற்ற கருத்துக்களை சொல்ல முடியாத ஒரு பண்பலையை வழி நடத்தும் தலைமை எற்றிக்கும் திரு குமரன் அவர்கள் முன் வந்து நிலைமையை விளக்கவேண்டும்?? செய்வாரா!!
RTM – ல் விளம்பரத்துறை தனியாக செயல்படுகின்றது. இதனைக் கண்காணிக்கவோ, விளம்பரங்களை தடை செய்யவோ குமரன் அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்றே தோன்றுகின்றது. இந்திய பொது நல இயக்கங்கள் RTM உயர் அதிகாரிகளிடம் சந்திப்பு நடத்தி விளம்பரங்களில் இருக்கும் கோளாறுகளைச் சுட்டிக் காட்டி இவ்வாறான தவறுகள் மென்மேலும் நடக்காமல் இருக்க ஒரு தகுதியான தமிழ் மொழி புலமை உடைய நபரை நியமிக்கவோ அல்லது இத்தகைய தவறான/முறைகேடானா விளம்பரங்களை தணிக்கை செய்யவோ மின்னல் FM தலைவருக்கு அதிகாரத்தை கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்க வேண்டும். அதனை முறையாக செயல்படுத்துவதையும் நடைமுறை படுத்தவேண்டும்.
எல்லாம் அந்த தறுதலை THR கற்று கொடுத்தது
மின்னல் FM க்கு புத்தி எங்கே போனது?
மின்னல் FM மில் தமிழ் விளம்பரத துறை அது ஒரு RTM மில் பிரிவாகத்தான் செயல் படுகிறது . தனியாக அல்ல. ஆனால் விளம்பர தயாரிப்புகள் அதன் ஆடியோ விளம்பர செய்தி அல்லது SCRIPT APPROVAL கள் அனைத்தும் வெளி ஆதரவு அல்லது எஜன்சி கள் வைத்து RTM தமிழ் அதிகாரிகள் சரிபார்த்து அங்கும் ஒரு மலாய் அதிகாரி முடிவான approval தந்த பிறகே அம்சம் அரங்கேறும். எல்லாம் சரி புத்ரா ஜெயா தகவல் பிரிவு approve பண்ண இந்த RTM தமிழ் பிரிவு பண்ணைகள் வேளை என்ன? அல்லது வேலைதான் என்ன விலை.?
நம்ப agency காரர்கள் பெரும் பாலோர் நம்ப முன்னால RTM ஜாம்பவான்கள் தான் அங்கு தமிழ் பிரிவு விளம்பர ஆசாமிகளும் அவர்கள் அச்சு தான். தமிழ் குரல் வளம், மொழிவளம், மொழி தரம், இசை CD எல்லாம் புத்ரா ஜெயா தகவல் பிரிவு தமிழ் ஆபீசர்கள் கவனிப்பதாக கேள்வி. ஒரு விளம்பரம் முறைப்படி செய்து முடிக்க 1மாதம் வேண்டும்.
ஆனால் THR ராகாவில் 7 நாட்களில் ஆல் ஓவர். தொலை பேசியில் இசையுடன் record செய்து அவர்கள் தொலை பேசிக்கு அனுப்பி வைத்து காசை வங்கியில் போட்டால் போதும் விசியம் அபேஸ்.
THR ரகவில் கவனிக்க வேண்டிய சமீப விளம்பரத்தில் நாய் “கத்துகிரதாம்” இனொரு விளம்பரம்.:…”நன் உங்க பேஸ் புகில் அட் பணலாமா ? எனேகு ரேண்டயிரம் ரிங்கி வேணெம் தருவேங்க்லா?”
இது தெலுங்கனே வெச்சி தமிழை சு அடிக்கிற தெலுங்கா?
ஐயோ இது எப்படி இருக்கு ? தெலுங்கன் தமிழர்களை கிண்டல் பண்ற வக்கர புட்டிகள்.
மின்னல் பண்பலை இரவு நேரங்களில் செவிகளுக்கு இனிய என்றோ கேட்டவை பழம் பாடல்கள் மிகவும் இனிமையானது .i அதிலும் நிகழ்ச்சி அறிவிப்பாளர்கள் நன்றாகவே படைகின்றார்கள். என்னை மிகவும் கவர்ந்தவர் சகோதரர் எம் .செல்வதுரை .வாழ்த்துகள் .வாழ்க நலம் .அன்புடன் எம் .எல்.சரவணன் சிரம்பான் .
டிஎச் ராஹா தமிழரல்லாதார் புகுந்துவிளையாடுகிரார்கள் !
அப லக்கி என்ஜோய்லா !!!
அப்புறம் ஒரு குப்பைபொறுக்கி காசுகொடுத்து டத்தோ பட்டம் வாங்கியவன் . அரவாணிகளிடம் நாட்டமுடையவன் தமிழனல்லாதவன் நாதாரி . தமிழ் அரவாணிகள் சங்கம் அமைகிறான் !
தமிழர் வரலாறுகளில் எங்கேயும் நாம் கண்டதில்லை .. ஆரிய இந்து ,திராவிடர்களின் வரலாறுகளில் கண்டுகொள்ள முடியும் .. அப்படி இருக்க தமிழ் அரவாணிகள் சங்கம் ஏன்? இந்து அரவாணிகள் சங்கம் ,இந்திய திருநங்கைகள் சங்கம் இப்படி வச்சிருக்கலாம் . தமிழன எப்படியெல்லாம் கேவலபடுதுகிறார்கள். அதற்கு ஆரிய திருநங்கைதான் தலைவி . அந்த நங்கை மின்னியடித்த எப் எமில் தமிழ் அ.சங்கம் கொள்கை சேவை விளக்கம் ஆரிய பாசையில் கர்மா அது இது ஒளருது.. தமிழர்களின் மொழி அந்நியர்களால் சீரழிகிறது .. சீரியல்களும் தெலுங்கு ராதிகா போன்றோரால் சீரழிகிறது சமுகம் ..
அனைத்திலும் திராவிடர்கள் ஆதிக்கம்.. மொழியாகட்டும் ,கலையாகட்டும்! தமிழர்கள் தங்கள் வியாபாரம் ,தொழில்துறைகள் மெதுவாக திராவிடர்கள் வசமாகி வருகிறது ,, இவர்களால் முடியாவிட்டால் தமிழ்நாட்டில் இருந்து வந்த திராவிடர்களின் கைகளில் கொடுகிறார்கள் . மலேசியாவில் பல வியாபாரத்தலங்கள் தமிழ்நாடு திராவிடர்கள் வசம் .. தமிழா உன் வியாபார தளத்தை ஒரு திராவிடனுக்கு கொடுத்தால் மீண்டும் உமக்கோ அல்லது வேறு ஒருதமிழனுக்கு கிடைக்காது . தமிழா நீ இன்றே சிந்திக்காவிட்டால் நாளை உன் சந்ததி இந்தியன் கடைமுன் நாய்சாப் குடித்துவிட்டு படுத்துகிடக்கும் .. தமிழ் நாட்டு நிலங்கள் அண்டைமாநிலத்தவர்களால் மலேசிய திராவிடர்களுடாக அசுரவேகத்தில் வாங்கபடுகிறது .. வானொலியில் கூவிகூவி விளம்பரம் செய்கிறார்கள் .. தலைநகர் சீதாராம் உணவகத்தில் முன்பதிவு !!!!!!
காலை நேரத்தில் ஒலிபரப்படும் பாடல்கள் லட்சக்கணக்கான மக்களிடம் போய்ச் சேர்கிறது என்பதை அது மின்னலாக இருந்தாலும் சரி டி.எச்.ஆர். ராகாவும் இருந்தாலும் சரி, கொஞ்சம் பொறுப்புணர்ச்சியோடு நடந்து கொள்ள வேண்டும். இதையெல்லாம் யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. அறிவிப்பாளர்கள் அனைவரும் படித்தவர்களே. அவர்களுக்குப் பொறுப்புனர்ச்சித் தானாக வரவேண்டும். காலை நேரத்திலேயே கேவலமானப் பாடல்களை ஒலிபரப்பும் அறிவிப்பாளர்களின் பின்னணியும் அப்படித்தானே இருக்க வேண்டும் என்று நாம் நினைத்தால் அது தவறில்லையே!
முதுமை,அருவை,பழமை இதுதான் மின்னல் எஃப்.எம், நிகழ்ச்சி அறிவிப்பாளர்கள் ஏன் சிரிக்கின்றார்கள்,ஏதற்காக சிரிக்கின்றார்கள் என்று தெரியவில்லை கேட்பதற்க்கு கேவலமாக இருக்கின்றது (குறிப்பாக காலை கதிர் நிகழ்ச்சி) மட்டுமல்ல ஹிந்தி தெரியவர்கள் ஹிந்தி படப்பாடல்களுக்கு விமர்சனம் செய்வது மிக கேவலம்,.அதுமட்டுமா மின்னல் பாடல் அப்படியே செம்மொழி பாடலை காப்பி அடித்து இருக்கின்றார்கள் ஏன் நம் நாட்டில் நல்ல இசை அமைப்பாளர்கள் இல்லையா? முதலில் நாம் எதாவது செய்யவேண்டும் இல்லையெனில் வரும்காலங்கள் …சொல்ல தேவையில்லை
சிங்கம் சார்! “கஞ்சா வெச்ச கண்ணு” என்று கிண்டலடித்தாலும் அடித்தீர்கள், அன்றிலிருந்து அந்த டப்பாங்குத்து பாடலில் “கஞ்சா வெச்ச” என்கிற அந்த வரியை, அந்தப் பாடலில் இருந்து அகற்றி விட்டது மின்னல் எப்.எம்.
மலேசியன் இந்தியன் காங்கிரசின் கலை கலாசாரப் பகுதி இந்த வானொலிகளுக்கு உதவலாமே! நமக்கு வேண்டியது சிறந்த நிகழ்சிகள். நேயர்கள் பயனடைய வேண்டும் என்பதே முதன்மை நோக்கம்.
முதலில்
இந்த மின்னல் எப்.எம் சிறு வயது
தலைவரை
மாற்றி அனுபவம் உடைய நல்ல அதுவும்
தமிழ் சிறந்த
அனுபவம்
குறிப்பாக
முன்பு இருந்த
திரு பூபாலன், திரு பாலகிருஷ்ணன்
போன்ற தமிழ்
ஆர்வம் தமிழில் புலமை உள்ள சிறந்த
ஒரு
அனுபவம் உடைய தமிழ்
கல்விமானை கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும். அதோடு டி.எச்.ஆர். ராகா கலையில் அறிவுப்பு செய்பவர்களும் அளவுக்கு மீறி சிரிப்பு தனக்கு தனே வரவவலைது கொள்கிறார்கள்.
நீ ஒரு விரலை பிறர் நோக்கி நீட்டினால் நான்கு விரல் உம்மை நோக்கி எச்சரிக்கும்.சமுதாயத்தை திருத்த முடியாது முடிந்தால் உம்மையும் உம் வம்சத்தையும் பாதுகாத்துக்கொள்.நாராயண நாராயண.
மக்கள் இந்த ஒலியலையை முற்றாக நிராகரிக்க வேண்டும், மக்களை சீர்குலைக்கும் இப்படிப்பட்ட ஒலியலை நமக்கு தேவையில்லை.
மின்னல் fm அரசியல் சாயம் பூசம் பட்ட வானொலி நிலையம் என்பது உண்மை …ஆனால் தமிழ் மொழிக்கும் , மலேசியா இந்தியர்களையும் களங்கப் பதுத்தியது இல்லை…எண்ணிகையில் அடங்காத அளவுக்கு சமுதாய பார்வையுடனும் சிந்தனையுடனும் தான் செயல் படுகிறது….குறிப்பாக காலத்துக்கு ஏற்ப தரமான மாற்றமும் , தமிழ் மனம் குன்றாமல் நிகழ்சிகளை படைத்தது வருகிறார்கள்…..ஏதோ சில சமயங்களில் தவறு(கள்) நடந்திருக்கலாம், நடக்கும் (மனித இயல்புதானே..)…..புதிய தலைமைத்துவத்தின் கீழ் பல மாற்றங்கள், குறிப்பாக சொல்ல போனால் இளைஞர்களுக்கும், உள்ளூர் கலைஞர்களுக்கும் …கொண்டு வந்த மாற்றங்கள் மிகவும் அருமை……..THR raaga 10 வருடங்களுக்கு மேல் உதயா….ஆனந்த் …மாறன் ……போன்ற தமிழ் அறை குறைகளை வைத்து – மற்றவர்களுக்கும் வழி விடாமல் …..(சுருக்கமாக சொல்ல போனால்….சாமிவேலூவை போலே 30 வருடம்)……மலேசியா இந்தியர்களையும் தமிழையும் குழப்பி கொண்டு இருக்கிறார்கள் ….மின்னல் fm உலக தமிழ் ஊடகங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு……மலேசியா தமிழர்களாகிய நாம் …மலேசியா இந்தியர்களாகிய நாம்…….மின்னல் fm நிறைகளை மறைக்காமல்….. குறைகளை சுட்டி காட்டுவது மிகவும் நன்று…..
என்ன நைனா உன்னை நான் என்னதான் சொல்ல ,மின்னல்
எப் எம் , thr ராக பாடல்களை காலை ஆடிகிட்டு கேட்டுவிட்டு
இப்போ குறை சொல்லுறே ,என் நண்பன் பைதியகார மருத்துவ
மனைக்கு சென்று சில பைத்தியங்கள் ஒழுங்காக தமிழ்
பாடலை படவில்லை எனக்கு மனசு வலிக்குது என்று
சொன்னான் அது போல நீங்களும் பாதி மூளை வளர்ச்சி
அடைந்த அறிவிப்பாளர்களின் பாடல்கள் படைப்புகளை
கேட்டு விட்டு அருவருப்பாக இருக்கிறது என்று கூறலாமா
நைனா என் சவாலை உன்னால் ஏற்க முடியுமா ஒன்னு நீ
அவனுங்க படைப்புகளை கேட்காதே இல்ல உன் ரேடியோவை போட்டு உடைக்க முடியுமா நைனா ,முடியவில்லை என்றால் வாயை பொத்திகிட்டு சும்மா இரு.
முதலில் இது போன்ற வெற்று விதண்டாவாதங்களை விட்டு விளகுவோம். மின்னல் வானொலி சரி இல்லை என்று சொல்பவர்கள் முதலில் ராகாவை முற்றாக நிருத்திவிட்டு உங்கள் தமிழ் பற்றை நிலைநிருத்தி இருக்க வேண்டும். காலைக் கதிர் கன்டராவி என்பர்களுக்க்கு ‘ இது எப்படி இருக்கு’ இனிக்கிறதா? மின்னல் வானொலியை இப்படி பல பண்பாட்டு காவல்ர்கள் கட்டுப்படுத்தி வைத்து இருந்ததால் தான் கடந்த காலங்களில் உள்ளூர் கலைஞர்களுக்கு எந்த வாய்ப்பும் இல்லாமல் இருந்தது. மற்ற மொழி வானொலிகளையும் கொஞ்சம் கேளுங்கள். அவர்களின் போக்கும் அறிவிப்பு முறையும் எப்படி இருக்கிறது என்று பாருங்கள். மின்னல் பன்பலை காலத்தோடு ஒட்டி தன்னை மாற்றிக் கொள்வது கூடாது என்பது அபத்தம். விட்டால் மின்னல் தினமும் பியுசி, பாகவதர் பாடல்களை மட்டுமே ஒலிபரப்ப வேண்டும் என்று கூறக் கூட தயங்கமாட்டார்கள். ராகா போன்று கீழ்த்தர மொழியில் பேசாமலும் குழந்தைகள் முதல் வயோதிகர் வரை ரசிக்கும் பல நிகழ்ழ்சிகளைப் படைப்பதிலும் மின்னல் இன்றும் சிறந்து நிற்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் நமது வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் வந்ததை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட நாம் சமுதாயத்தின் குரலாக ஒலிக்க்கும் வானொலியை குறை சொல்வது ஞாயம் இல்லை.
மின்னலில் சில குறைகள் இருந்தாலும் சிறப்பாகவே இருகின்றது .தமிழ் மொழியை கொலை செய்துகொண்டிருக்கும் டி ஆஜ் ரக விற்கு இலன்ஜர் பட்டாளம் குடுக்கும் அதரவு வேதனை அழிகின்றது.
THR Raaga வணிக நோக்கத்தோடு செயல்படும் தனியார் வானொலி. இதன் செயல்பாடுகள் மனநிறைவளிக்க வில்லையென்றால் அதன் உரிமையை மீட்டுக்கொள்வது அரசின் கடமை. ஆனால், Minnal FM அப்படியல்ல. அரசின் தகவல் அமைச்சால் – மக்களுக்கு பொழுது போக்கு அம்சங்களோடு சரியான தகவல்களும் போய்ச்சேர வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு நடத்தப்படும் வானொலி. எனவே இரண்டுக்கும் அதன் செயல்பாடுகளுக்கும் வேறுபாடு உண்டு. மேலும் பல்லாண்டுகளாக தூங்கி வழிந்துகொண்டிருந்த பழைய மின்னல் வானொலி, ராகாவின் வருகைக்குப் பிறகுதான் விழித்து எழுந்தது என்பது உண்மை. ஆனால் இப்போது அது ஒரு பிரச்சினையே அல்ல. 24 மணிநேர மும் தமிழ் பேசுகிறோம் என்று சொல்லிக்கொண்டு ஆங்கில வார்த்தைகளை கலப்பது முறையா? ஒரு சாலை விபத்தைப் பற்றிப் பேசும்போதுகூட நக்கலாக சிரிப்பது முறையா? 10 நிமிட செய்திகளை வாசிக்கும்போது 10 முறை உச்சரிப்பு தவறும் உளறல்களும் தேவையா? ஈப்போவில் இருந்து போகும் போது ‘தாப்பா’ இருக்கு இல்லையா? என்பது சரியா? தாப்பா அங்கே இருக்கா இல்லையா? நேற்றுவரை தாப்பா அங்கே தானே இருந்தது? இன்றைக்கு இருக்கு இல்லையா என்றால் என்ன அர்த்தம்? தாப்பாவை காக்கா தூக்கிக் கொண்டுப் போய்விட்டதா? இது போன்ற தவறுகளை நாங்கள் களையச் சொல்வது தவறா? நாங்கள் இப்படித்தான் இருபோம், மாறமாட்டொம் என்றுஓரே வார்த்தையில் அவர்கள் சொல்லிவிட்டால், இந்தப் பிரச்சினையை தகவல் அமைச்சுக்கு கொண்டு செல்லவும் – (நாட்டின் குடிமகன், நாங்களும் வரி செலுத்துகிறோம் என்ற முறையில்) எங்களால் முடியும். ஆனால் அதற்கு முன் நாங்கள் இந்த குறைகள் களையப்படும் என்று எதிர்பார்க்கிறோம்
வணக்கம், நான் சுமார் 7 வருடங்களாக தமிழ் வானொலிகளை கேட்பதில்லை காரணம் வாய்ப்பு கிடைக்கவில்லை. லாபுவானில் இருப்பதால். கடந்த பள்ளி விடுமுறைக்கு வந்த பொழுது மின்னல் மற்றும் ராகா வானொலிகளைக் கேட்க முடிந்தது. ராகாவின் மீது எனக்கு இருந்த வெறுப்பை விட மின்னல் மீது மிகவும் வெறுப்பாக இருந்தது. காரணம் தமிழ் அல்ல..அவர்கள் பேசும் முறை. போலி அறிவுரை, தேவை இல்லாத சிரிப்பு, அதிக கொஞ்சல் போன்றவை ஏன் மின்னல் இப்படி ஆகி போனது என்று சிந்திக்க வைத்தது. நானும் பிறர் போல் ஆகிறேன் என்று அவர்கள் செய்த மாற்றம் அவர்களுக்கே ஆப்பாகப் போகிறது என்பது திண்ணம். ராகாவை குறை சொல்ல ஒன்றும் இல்லை. நிறை என்று ஒன்று இருந்தால் தானே குறை ஒன்று உள்ளது என்று ஒப்பிட முடியும். அட போங்கப்பா. இவர்களை விட இலங்கை இணைய வானொலி, இந்திய இணைய வானொலிகள் எவ்வளவோ தேவலாம். விளம்பரம் என்ற பெயரில் இவர்கள் அடிக்கும் கூத்தை என்ன என்று சொல்ல…அறிவுரை, அறிவுரை, அறிவுரை….போதுமடா சாமி…தாங்கல. அதை முதலில் அவர்கள் கேட்டாலே வானொலிகள் சிறப்பாக இயங்கும். மீண்டும் அடுத்த வருடம் தான் நான் ஒலிப்பரப்புகளைக் கேட்பேன். நல்ல வேளை… நான் பிழைத்துக் கொண்டேன்….நன்றி
எந்த வானொலியானாலும் தமிழ் மொழியைச் சிதைக்க உரிமை இல்லை. தமிழ் மொழியில் பேசும்போது தமிழின் இலக்கண வரம்புக்குள்தான் இயங்க வேண்டும்;பண்பாட்டிற்குள்தான் இயங்கவேண்டும். இதை மீறுவோம் என்ன செய்ய முடியும் ? என்பது ஒரு வகை ரவுடித்தனமே! தமிழ்ப் பாடல்கள் என்று சொல்லிக்கொண்டு அறுவறுப்பான மொழியில் பாடல்களை எழுதுவதும் அவற்றை சினிமாவிலும் வானொலியிலும் ஒலியேற்றுவது தமிழ் மொழியைச் சிதைக்கும் செயலே! உண்மையிலேயே தமிழைப் பாதுகாப்பவர்களாக இருந்தால் தமிழைச் சிதைத்து மொழியை தங்களின் வர்த்தக நலனுக்காக குழப்புபவர்கள் மீது வழக்குப்போடவேண்டும். அதிலும் வர்த்தகர்கள் ஒரு மொழியைச் சிதைப்பது மன்னிக்க முடியாத குற்றம். அவ்வாறே கருத்துகளைப் ஊடகங்களில் பதிவிடும்போதும் தமிழ்ப் பண்பாடு காக்கப்பட வேண்டும். மனம்போன போக்கில், ஆபாசமாக கொச்சைத்தனமாக பதிவிடும்போது அதைப் புறந்தள்ளும் கடப்பாடு ஊடகங்களுக்கு உண்டு. நாங்கள் கவனிக்கமாட்டோம், அது எங்கள் வேலை இல்லை என்பது உடகங்கள் தமிழுக்குச் செய்யும் துரோகமும் பொறுப்பின்மையுமாகும்.