வாகன நெரிசல் பலரை கோபத்தின் விளிம்பிற்குப் கொண்டு செல்கிறது. நாள்தோறும் பொதுப் போக்குவரத்து சேவையைப் பயன்படுத்துகிற பட்சத்தில் என்னைவிட அதுகுறித்த அதிக தகவல்கள் உங்களிடம் இருக்கக்கூடும். மலேசியா சுதந்திரம் அடைந்து 57 ஆண்டுகள் நிறைவடையப் போகிற இன்றைய நிலையிலும் தரமானதொரு பொதுப் போக்குவரத்து சேவையை வழங்க முடியவில்லை என்பதே வருத்தமளிக்கும் மறுக்க முடியாத உண்மையாகும்.
இயற்கைப் பேரிடர்கள் அற்ற மலேசியாவில் தரமான அதே வேளையில் நிரந்தரமான பொதுப் போக்குவரத்து சேவை வழங்கப்பட முடியாமல் இருப்பதற்கு என்னதான் காரணம்?
இன்றைய நிலையில், தன் வாழும் நகரத்தைத் தன் தேவைகளுக்காக சுற்றி வருவதைத் தவிர வேறு பாதிப்பளிக்கும் விசயம் ஒரு நகர்ப்புறவாசிக்கு இல்லை என்றே நான் நினைக்கிறேன். மில்லியன் கணக்கான நகர வாசிகள் ஒவ்வொரு நாளும் வீட்டிலிருந்து வேலையிடத்திற்கு, வேலையிடத்திலிருந்து வீட்டிற்கு, தன் இன்ன பிற தேவைகளுக்கு என மிக முகாமையாக பொதுப் போக்குவரத்தினை நம்பி இருக்கின்றனர்.
நாட்டில் 70 விழுக்காட்டு மக்கள் நகர்புறங்களில் வசிக்கின்றனர். கோலாலம்பூரில் மட்டும் சுமார் 1.2 மில்லியன் மக்கள் தினசரி தேவைக்காக பேருந்து, விரைவு இரயில், கொம்யூட்டர் இரயில் சேவை போன்ற பொது போக்குவரத்து வசதிகளை நம்பியுள்ளனர்.
இன்றைய நிலையில், உலக முழுவதும் உள்ள மாநகர்களில் போக்குவரத்து நெரிசல் தலையாய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அதிகரித்து வரும் மக்கள் தொகையும் வாகனங்களின் எண்ணிக்கையும் இதற்கு முக்கிய காரணங்களாகின்றன. ஆற்றல் குறைந்த போக்குவரத்து முறை, நிலைமையை மேலும் கடுமையாக்குகிறது. கோலாலம்பூரைத்தவிர ஜொகூர் பாரு, ஈப்போ, ஜோர்ஜ்டவுன், கூச்சிங் போன்ற நகரங்களிலும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண தனிபட்ட கவனம் தேவைப்படுகிறது.
நாட்டில், பொதுப் போக்குவரத்தை சேவையை மேம்படுத்துவதற்குப் பல நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அவையெல்லாம் எந்தளவிற்கு போக்குவரத்தை நெரிசலைக் குறைக்க உதவியுள்ளன என்றால் நம்பிக்கையளிக்கும் பதிலினை நம்மால் வழங்க முடியவில்லை.
நாட்டில் பொது போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் தரைமார்க்க பொது போக்குவரத்து ஆணையம் SPAD அமைக்கப்பட்டதும் ஒன்று. தேசிய அடைவுநிலைக்கான முக்கிய துறைகளில் ஒன்றான பொது போக்குவரத்து முறையை தரம் உயர்த்தும் முக்கிய பங்கினை SPAD கொண்டுள்ளது.
கடந்தாண்டு இறுதியில் பரபரப்பான வேளைகளில் சராசரி 437 ஆயிரத்து 500 பயணிகள் பொது போக்குவரத்து சேவையைப் பயன்படுத்தினர். அடுத்தாண்டு முதல், பரபரப்பான நேரங்களில் 750 ஆயிரம் பேர் பொது போக்குவரத்தை பயன்படுத்தும் இலக்கை அரசாங்கம் கொண்டுள்ளது. அதேவேளை மக்களில் 75 விழுக்காட்டினர் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதற்கான வசதியை ஏற்படுத்தும் இலக்கும் நிர்ணயக்கப்பட்டுள்ளது.
நாட்டில், பொதுப் போக்குவரத்தை சேவையை மேம்படுத்துவதற்குப் பல நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அவையெல்லாம் எந்தளவிற்கு போக்குவரத்தை நெரிசலைக் குறைக்க உதவியுள்ளன என்றால் நம்பிக்கையளிக்கும் பதிலினை நம்மால் வழங்க முடியவில்லை.
அதேவேளையில், இலக்குகளை அடைவதற்கான சரியான தடத்தில் நாம் பயணிக்கிறோமா என்பது குறித்து நாம் மீள்பார்வை செய்ய வேண்டியது இன்றைய நிலையில் மிகவும் அவசியமாகிறது.
KTM சேவைக்கான ரயில் பெட்டிகள் அதிகரிக்கப்பட்டிருப்பது, விரைவு இரயில் சேவைக்கான இரயில் பெட்டிகள் அதிகரிக்கப்பட்டிருப்பது, எம்ஆர்டி துரித இரயில் சேவை நிர்மாணிப்பு, இலவச நகர் பேருந்துகள், BANDAR TASIK SELATAN ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் அமைக்கப்பட்டிருப்பது, புடுராயா பேருந்து நிலையம் மறுசீரமைப்பு போன்றவை நம்பிக்கையளித்தாலும் இன்னும் நாம் மேம்படுத்த வேண்டியது அதிகம் இருப்பதாகவே நடப்பு சூழல் நமக்குப் புலப்படுத்துகிறது.
விரைவு இரயில் சேவைகள் (Rapid KL LRT, KL Monorail, KLIA Express, KLIA Transit) சேவைகள் ஓரளவு திருப்தியளித்தாலும் மக்கள் அதிகம் பயன்படுத்தும் கொம்யூட்டர் இரயில் சேவை மற்றும் பேருந்து சேவைகள் இன்றுவரை குறைந்தபட்ச திருப்தியை அளிக்கக்கூடிய நிலையைக் கூட எட்டிப் பிடிக்க வில்லை.
மிக தாமதமாக வரும் இரயில்கள் மற்றும் பேருந்துகள், அறிவிக்கப்படும் நேரம் அடிக்கடி மாற்றப்படும் கொடுமை, அதிக மக்கள் வசிக்கும் இடங்களுக்குக் குறைந்தளவிலான பொதுப் பேருந்துகள், மக்கள் கூட்டத்தில் திக்கி திணறி ஓடிக் கொண்டிருக்கும் பேருந்துகள் என இத்தகைய குறைப்பாடுகள் களையப் படாதவரை பொதுச் சேவைகளை முதன்மை போக்குவரத்தாக பயன்படுத்துவதை கண்டிப்பாக ஊக்குவிக்க முடியாது.
மக்கள் நெரிசல் அதிகம் நிறைந்த பகுதிகளில் மக்கள் பொதுப்போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்துவதை ஊக்குவிக்க முதலில் பொதுப் போக்குவரத்து தரமுயர்த்தப்பட வேண்டும். இதன்வழி மட்டுமே சாலை நெரிசலைக் கட்டுப்படுத்த முடியும். இல்லையேல், வாகனங்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதை நம்மால் தவிர்க்க இயலாது.
கோலாலம்பூரில் வாகன நெரிசல் பிரச்னைக்கு விரைந்து தீர்வு காணாவிட்டால் வாழ்க்கைத் தர ரீதியில் அது மிகபெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். நிறைவளிக்கும் பொதுப் போக்குவரத்து சேவை இருக்கும் பட்சத்தில் மக்கள் அதனைப் பயன்படுத்துவதற்குத் தயங்க மாட்டார்கள். அரசாங்கம் அந்த நம்பிக்கையை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் துரிதமாக ஈடுபட வேண்டும். இல்லையேல், கட்டுப்படுத்த முடியாத சாலை நெரிசல் நமது நகரங்களின் அமைதியையும் அழகையும் கெடுத்து மக்களின் நிம்மதியையும் குலைத்து விடும் என்பது மட்டும் நிதர்சனம்.
குறைந்த முன் பணத்தில் கார் வாங்க வசதி செய்து தரப்பட்டதால்
நினைதவேரெல்லாம் கார் வாங்கி ரோட்டை நிரப்பி விட்டார்கள்.
அதனால் பஸ்களும் குறிப்பிட்ட நேரத்தில் போய் சேர முடிவதில்லை.
ப்ரோடான் சாகா , 9 வருட வாகன கொள்முதல் முக்கிய காரணம் ! வாகன நெரிசல் தொடங்கும் முன் ட்ராபிக் போலீசார் சம்பந்த பட்ட இடத்தில் இருக்கமாட்டார் ! சில சமயம் அறவே இருக்க மாட்டார் , வாகனம் ஓட்டுபவரின் பழக்க வழக்கம் . இவையே என் பார்வையில் முக்கிய காரணம் !
கார்களை ,தயாரித்து விற்க தெரிந்த இந்த அரசாங்கம் ,சாலை வசதிகள் எதிர்காலத்தை குறித்து மேம்பாடு செய்ய தவரிவிட்டதுதான் இதன் காரணம் .பொது போக்குவரத்து பேருந்து சேவை அட்டவணை நேரப்படி அதன் சேவையை வழங்காததும் ஒரு காரணம் .
KTM இந்த பிரச்சனையை தீர்க்கமுடியும்.தொடர் வண்டிகளின் பயண நேரத்தையும் ,கூடுதலான தொடர்வண்டிகளையும் மேம்படுத்த வேண்டும்.வடக்கிலிருந்து தெற்குவரை பயணிகளின் தொடர்வண்டியின் சேவையை தினம் நான்கு முறையாவது சேவையில் ஈடு படுத்தவேண்டும்.இதன் வழி துரித பேருந்துகளின் நெரிசலை குறைக்கமுடியும்.
நாட்டின் பல இடங்களில் வாகன நெரிசலுக்கு கீழ் கண்டவையே மிக முக்கிய காரணங்கள்.
1. சரியான திட்டமிடல் இல்லை. பெருகி வரும் வாகன எண்ணிக்கைக்கு ஏற்ப சாலைகள் அகலமாக இல்லை. சாலைகளை அகலப்படுத்தும் வரை புதிய வாகன விற்பனையையும் கார்களின் இறக்குமதியையும் அரசு குறைக்க முன் வரவேண்டும். 2. சின்ன சின்ன டப்பா கார்களை அறவே தடை செய்யவேண்டும்.
3. வாகனமோட்டிகளில் பலர் (பெரும்பாலானோர்) சாலை விதிகளை பின்பற்றுவதில்லை. குறிப்பாக ‘சிக்னல்’ போடுவதையும் அப்படி ஒன்று இருப்பதையும் அவர்கள் பொருட்படுத்துவதே இல்லை. 4.வியாபார நோக்கமும் லாப நோக்கமும் இல்லாமல் பொது நலம் ஒன்றையே குறியாகக் கொண்டு பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தி, அதிகமானோர் அவற்றை உபயோகப்படுத்தும் வகையில் குறைவான விலைகளில் பயணம் செய்வதை அரசு உறுதி செய்ய வேன்டும், பொது போக்குவரத்தை உபயோகிக்க மக்களை உற்சாகப்படுத்த வேண்டும்.
உங்களுக்கு என்ன ப்ரச்சனை,எப்போதும் பிரர் மீது குறையே சொல்கின்றீர்,நல்லது எதுவும் வும் கண்ணுக்கு படாதா,கார் ஓட்டலாம் ஆனால் கோபம் வரகூடாது,நெரிசலை தவிர்க அதிகாலை பிரயானத்தை தொடங்கினால் ப்ரோபலம் சோல்வ்,இதற்குபோய்… .நாராயண நாராயண.
இப்போது மலேசியாவில் உள்ள பேரு நகரங்களின் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமே அதிகமான ஒரு வழி பாதைகள் தான் . பக்கத்தில் இருக்கும் ஒரு இடத்துக்கு செல்ல வேண்டும் என்றாலும் 3-4 km சுற்றி செல்ல வேண்டும் .
போதுமான மேல் சாலைகளும் கிடையாது .
விபத்து நடந்தால் அதிகாரிகள் விரைவாக வருவதும் இல்லை . உச்ச நேரத்தில் சாலை பணிகளை மேற்கொள்வது .
இன்றைய வாகன நெரிசலுக்கு யார் காரணம் ? பதில் அரசு.நாடு துரித மேம்பாடு அடையும் வேளையில் வாகன நெரிசல் உருவாகும் என்பதை அரசு உணர்ந்து முறையான நடவடிக்கைகளை மேட்கொண்டிருக்க வேண்டும்.இதை முறையாக செய்ய தவறியதால் தான் இன்று மிக மோசமான வாகன நெரிசலை நாம் எதிர் நோக்குகிறோம்.UNDER GROUND TRAIN SYSTEM என்ற குகை வழி ரயில் பயணம் என்ற திட்டம் ஜப்பான் நாட்டில் 100 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டு விட்டது.ஐரோப்பா , அமெரிக்க , ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் 50 ஆண்டுகளுக்கு முன்பே இந்த குகை வழி ரயில் பயணம் தொடங்கப்பட்டு விட்டது.வாகன நெரிசல் அதிகரிப்பை தனது 5 ஆண்டு திட்டத்திலேயே அந்நாடுகள் நிவர்த்திக்கான நடவடிக்கைகளில் இறந்ங்கி வெற்றியும் பெற்று விட்டன.இப்படி தான் நமக்கு பின்பு மலேசியாவிலிருந்து வெளியேறிய சிங்கபோரும் இந்த வாகன நெரிசலை தவிர்ப்பதக்கு 1970 ஆண்டுகளிலேயே MRT சேவையை திடன்ன்கி விட்டது.
மேலும் ஊராட்சி மன்றங்களில் உள்ள அதிகாரிகளும் தங்களது கடமையை முறையாக செய்ய வில்லை .குறிப்பாக பூசொங்க் சுற்று வட்டாரத்தில் குறைந்தது 100,000 வீடுகள் இருக்கும் , ஆனால பூசொங்க்கிலிருந்து வெளியேற ஒரே சாலை தான் LDP நெடுச்சாலை மட்டுமே .இதனால் தன அங்கு தினந்தோறோம் பெரும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதே நிலை தான் சுபாங் ஜெயாவிலும் 100,000 வீடு உள்ள வட்டாரத்தில் வெளியேற ஒரே வழி பாதை தான்..இதே நிலை தான் டமன்சார உத்தாமா , பந்தர் உத்தாமா, செராஸ் பெர்டன, கேப்பாங் போன்ற பகுதிகளிலும்.மா நகர் மன்ற அதிகாரிகள் பல வெளிநாடுகளுக்கு பயணம் சென்று வருகிறார்கள். இதற்காக அரசு பல கோடி ரிங்கிட் அவர்களுக்காக செலவு seikirathu .இருந்து அந்த வெளி நாடு கல்வி சுற்றுல்லா எந்தவிட nanmaiyum நாட்டு மக்களுக்கு கிடைக்க வில்லை. இந்த போக்குவரத்து வாகன நெரிசல் பிரச்சனைக்கு முழு பொறுப்பு அரசு தான்.இரண்டாவது தான் நாட்டு மக்கள்.சட்ட ஒழுங்கை அரசு uulaal illaamal நிலை naaddinaal எல்லா பிரச்சனைகளுக்கும் முறையான தீர்வு கிடைக்கும் என்பது திண்ணம்.அரசு தான் கடமையை முறையாக செய்ய வேண்டும்.
தெனாலியின் கருத்து சரியில்லை. kayee கருத்தே சரி . 9 மணி
வேலைக்கு காலை 5 மணிக்கு புறப்பட்டால் புரோபளம் சோல்.
சிங்கப்பூர்,ஜப்பான் போன்ற நாடுகளில் நிலப்பரப்பளவு குறைந்திப்பதால் வேறு வழியின்றி அனைத்தும் இடுக்கில் செயல்படுத்தவேண்டிய சூல்நிலை.ஆனால் நம்நாடு அப்படியா? அரசாங்க அலுவலகங்கள்,அரசாங்கத்தின் தானியார் அலுவலகங்கள்,தொழிற்சாலைகள்,மற்றும் புதிய தாமான்கள்,பள்ளிகூடங்கள் போன்றவற்றை,வேறு புதிய இடங்களில்,சாலைகள் பல அமைத்தும்,தொழில் தொடக்க நேரமும் முடிவு நேரமும் அனைவருக்கும் ஒரே சமையத்தில் அமையாதவாரும் மாற்றியமைக்கவேண்டும்,உதாரணத்திற்கு JKR தொழிலாளர்களை பார்க்கலாம் ஒரு சிறிய குழாயை சரிபடுத்த 10ல் இருந்து 15 பேர் ஒரே இடத்தில் நின்று சாலையை மறைத்து மக்களின் பயண நேரத்தையும் வினடிப்பார்கள்,அணைத்து துறையிலும் 2 அல்லது 3 குருப்பாக பிரித்து வித்தியாசமான நேரங்களில் செயல்படலாம்.
கார் விற்பனையை நிறுத்த இயலாது. சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும். இன்னும் அதிகமான மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகளை உருவாக்க வேண்டும். இதனால் அரசுக்கு அதிகமான
நிதிச்சுமை ஏற்படும் என்பது உண்மையே. பொதுபோக்குவரத்து சீரான முறையில் இயங்க வேண்டும். வேறு வழியில்லை.
கார் வோட்ட தெரியாமல் ஓட்ட வந்ததால் வந்த வினை சிக்நெல் left ரைட் வளையும் மஹா மக்குகள் அதிலும் கார் வோட்ட தெரியாமால் பின்னால் வந்து அடிப்பலுக!!!
காடி நாலா ரோட்டை மறைக்குது பேசாம எல்லாரும் சைக்கள் பாயக்கலமே யாருக்கும் பிரச்சனை வராது.