கடந்த ஒரு வாரமாக தமிழ்ச் சமூகம் கொந்தளித்துப் போய் கிடக்கிறது. அறிக்கைகள் பறந்துக் கொண்டிருக்கின்றன. ஆளாளுக்குக் கண்டனம் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். அப்படி என்னதான் நடந்தது?
சம்பவம் 1
அவள் இரண்டாம் ஆண்டு மாணவி. நன்னெறி பாடவேளை. வகுப்பறையில் எதற்காக பேசினாள் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. வகுப்பறையில் பேசுவது அவ்வளவு குற்றமாக என்ற கேள்வியைக் கூட நாம் கேட்கலாம். வகுப்பறையில் பேசினாள் என்பதற்காக சமயக்கல்வி கற்றுத் தரும் ஆசிரியரால் காலணியால் தாக்கப்படுகிறாள். ஆசிரியர் தான் காலில் அணிந்திருந்த காலணியைக் கழற்றி இந்த மாணவியை நோக்கி விட்டெறிகிறார். அக்காலணி மிகச் சரியாக அவள் தலையைப் பகுதியைத் தாக்கி இரத்தம் கொட்டுகிறது. இச்சம்பவத்தை கண்ணுற்ற மற்றுமொரு ஆசிரியரும் அப்பள்ளியின் தலைமையாசிரியரும் அந்த மாணவியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்குள்ள மருத்துவர் கண்டிப்பாக காவல்துறை புகார் செய்யப்பட வேண்டும் என கூறியிருக்கிறார்.
அந்த மற்றுமொரு ஆசிரியரும் தலைமையாசிரியரும் அந்த மாணவியின் தந்தையைச் சந்தித்து சமரசம் பேச சென்றிருக்கின்றனர். அம்மாணவியின் தந்தை நகராண்மைக் கழகத்தில் பணிபுரிகிறார். அதற்குள் பள்ளியிலிருந்து தந்தைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார். மாணவிக்கு நெற்றியில் ஏற்பட்ட காயத்திற்கு மூன்று தையம் போடப்பட்டிருக்கிறது. அங்கும் சிலர் சமரசம் பேசப் போக விஷயம் பெரிதாகி வெளியே தெரியவந்திருக்கிறது.
அந்த நாளே அந்த குற்றவாளி ஆசிரியர் வேறொரு பள்ளிக்கு வேலை மாற்றப்பட்டிருக்கிறார்.
சம்பவம் 2
ஆசிரியர் ஒருவர் துடைப்பக் கட்டையால் மாணவர் ஒருவனை தாக்கியிருக்கிறார்.
இன்ன பிற சம்பவங்கள்
1. மாணவர்களைச் சாதிப்பெயர் சொல்லி திட்டுதல்
2. திருடன், கூலிக்காரன், வந்தேறி, குண்டர்கள் என இழிவாகத் திட்டுதல்
3. சமய நம்பிக்கைகளை கேலிக்குள்ளாக்குதல் – கேலி செய்தல்
4. கூடியபட்ச தண்டனைகள் வழங்குதல்
5. பிற மாணவர்களின் முன்பாக இழிவுபடுத்தல்
இப்படியான சம்பவங்கள் தொடர்ந்து ஆங்காங்கே பள்ளிகளில் நடந்து வருகின்றன. மிக முக்கியமாக நாட்டின் அடையாளமாக முன்மொழியப்படும் தேசியப் பள்ளிகளிலே இப்படியான சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன.
நாம் என்ன செய்கிறோம்?
1. துணைக்கல்வி அமைச்சர்
இப்படியான சம்பவம் நடந்திருக்கக் கூடாது. இது வருத்தமளிக்கும் விசயமாகும். சம்பந்தபட்ட ஆசிரியரிடம் விளக்கம் கோரும் கடிதம் கேட்கப்பட்டுள்ளது. அது கிடைத்தப்பிறகு மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
2. பிற சமூக தலைவர்கள் – ஆர்வலர்கள்
ஒரு வாரத்திற்குக் குறையாது பெரிய தலைவர் தொடங்கி சின்ன தலைவர் வரை கண்டன அறிக்கைகள் பறக்கும். காவல்துறை புகார்களும் செய்யப்படும். பின் எல்லாம் மறக்கப்படும்.
அதற்குள் அந்த சம்பந்தப்பட்ட ஆசிரியர் வேறொரு பள்ளியில் நலமே தன் பணியைத் தொடங்கியிருப்பார். இங்கு எனக்கு ஒன்று மிகத் தெளிவாகத் விளங்குகிறது. உடனடியாக பள்ளி மாற்றலை விரும்பும் ஆசிரியர்கள் மிக தைரியமாக நான் மேற்கூறிய ஏதாவதொன்றை செய்யலாம். உடனடியாக பள்ளி மாற்றல் செய்யப்படுவார்கள்.
குழந்தைகளை ஒத்த தொடக்கப்பள்ளி மாணவர்களை அடித்தல் – துன்புறுத்தல் – இழிவுபடுத்துதல் என்பது கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும். இல்லையென்றால் மலேசிய கல்வி அமைப்பின் மீது நம்பிக்கை இழக்க நேரிடும். ஒரே மலேசியா, தேசிய கல்விக் கொள்கை என நாம் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும் நிலையிலேயே இப்படியான சம்பவங்கள் நடக்கின்றன.
யாருக்கு நடந்தால் நமக்கென்ன என்றில்லாமல் ஒட்டுமொத்த சமூகமும் இதற்காக ஒருங்கிணைந்து எதிர்வினையாற்றினால் மட்டுமே இப்படியான சம்பவங்களைக் குறைந்தபட்சமாவது தடுக்க முடியும். இல்லையேல், வழக்கமாக கூச்சலிட்டுவிட்டு இவர்கள் மறந்து விடுவார்கள் என சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கும்.
ஐயா ! பள்ளி மாணவருக்கு மட்டுமா இது நடக்கிறது ? துணை கல்வி அமைச்சர் கமலனாதனுக்கும் களுத்து கோணலாக போகும் அளவுக்கு குத்து விழுந்ததே ! இந்த இழிவு நிலைக்கு யார் காரணம் என்று மக்களுக்கு தெரியும் ! ஹிந்துக்களின் பிரதிநிதி ஒரு சீனன் , இன்னும் என்ன என்ன அவமானம் பட போகிறோமோ ? இன்னும் இவர்கள்தான் இந்தியர் பிரதிநிதி என்று உளறுவதுதான் பெரிய அவமானம் !
முதலில் நல்ல வழக்குரைஞரைக் கொண்டு ஒரு வழக்கைப் பதியவும். அனைத்தும் நலமே நடக்கும். கல்விச்சட்டம் தெளிவாக இருப்பதால் வெற்ரி நிச்சயம்…இதர நடவடிக்கைகள் பலன் தரா….
இலக்கியா கூறுவது முற்றிலும் உண்மை! ‘பழைய குருடி கதவை திறடி’ …… ‘மதிக்கப்படாத’ சமுதாயம் இப்படி ஊளையிடுவதால் தீர்வு பிறந்துவிடுமா? இப்படி எத்தனையோ அவமானங்கள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறன! சுப்பனும் குப்பனும் சத்தம் போடுவதால் ஒன்றும் நடக்கப் போவதில்லை! அமைச்சரே கூறிவிட்டார் ….. அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விட்டது! நடவடிக்கை எடுக்கப்படும்! அவர் என்ன செய்வார்! பாவம்! தன்னைக் குத்தியவனையே மன்னித்த மகாத்மா! ஒட்டு மொத்த இந்தியர்களையும் பிரதிநிதித்து ஒரே குரலில் நம் எதிர்ப்பைக் காட்டும் நாள் வாராதா!
துணிந்து பேச வேண்டும் என்றால் ; நம்மை அரசாங்கத்தில்
பிரதிநிதிக்கும் தலைமைகள் கோழைகள்!?
அடுத்து நமக்கு சங்கங்கள் ,மன்றங்கள் ,சமூக அமைப்புக்கள்
என எண்ணிலடங்கா சமுதாய துரோகிகள் !?
தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் (தலைவன் )என்று இந்த
சமூகம் தொடர்ந்தால் எவன் சொல் சபை ஏறும் !?
இவை எல்லாம் நம் மக்கள் …நாமே சோறு போட்டு வளர்த்து
விட்டு இப்போது குமுறி என்ன பயன் !?
இன்னும் பேசிக்கொண்டு தான் இருக்கிறோம் !?
அறிக்கை மன்னர்கள் நம்மில் பஞ்சமில்லாமல் உருவாகியுள்ளார்கள் !?
கொஞ்சம் நல்ல தலைமை வந்தாலும் நாமே செருப்பால் அடித்து
விரட்டு கிறோம் !?
கட்டுக்கோப்பு …???,தமிழன் இழந்து : நூறு …, நூறாண்டுகளுக்கு
மேல் கணக்கில்லாமல் மண் மூடி போச்சு !?
இனி ஒரு விடி வெள்ளி வெடித்து ;கீதை சொன்ன கண்ணன் போல்
புயலாக வருமா ?
தர்மம் கொன்ற கயவர் எல்லாம் காணாமல் போகும் காலம்
வருமா ?
நம்மை பிரதி நிதிக்கிறேன் என்று …,உள்ளொன்று வைத்து
புறம் ஒன்று பேசும் கபடதாரிகள் …;துண்டைக் காணோம் ,
துணியைக் காணோம் என்று ஓடும் நாள் விரைவில்
வருமா …? இறைவா வாழ்ந்து கெட்ட இந்த சமுதாயத்தை
காப்பாயா !?
ஒரூ பள்ளியில் ஆசிரியர் மாணவனைப பார்த்து :'”மாபோ ” என்று அழைத்து இருக்ன்றார் இப்பாடியே நடப்பது வாடிக்கையாக போய்விட்டது ? ஆசிரியர்கள் ஆறிவு கண்களை திறக்க வந்தார்களா? அல்லது ,குழந்தைகளை ஊனாமாககா வந்தார்களா ? குறிப்பாக இந்திய குழந்தைகளுக்கே இந்தகதி ? துணை கல்வி அமைச்சருக்கும் சூடு சொரணை இல்லை அவரை சார்ந்த அறிக்கை மன்னர்களுக்கும் ஒன்றும் இல்லை பெற்றோர்கள் டி எ பி வழக்கு அறிஞராகப பார்த்து வழகை பதியுயங்கள் தகுந்த பாடம் புகட்டினால்தான் மேலும் தொடராமல் இருக்க வகை செய்யும் ,
திரு லோசனி சொல்லுவது உண்மை . நாளைக்க்கு ம இ க இளைஜர் தலைவர் சிவராஜ் ம இ க அலுவலகத்தில் பத்திரிகை அறிக்கை வட போகிறார் .ம இ க வழக்ரிஞ்சர்கள் நாளைக்கு வந்து விளம்பரத்துக்காக கூடி விடுவார்கள் .அனால் இவர்கள் மதம் மாற்றம் . சமுதய பிரச்சனைகல் போன்ற வழக்குகள்லுக்கு வர மாட்டர்கள்
அவனா உங்கள் பிள்ளைகளை அவன் பள்ளிக்கு அனுப்ப சொன்னான் ?
இதுபோன்ற பிரச்சனைகள் சீனர்களுக்கு இல்லை .காரணம் அவர்கள்
பிள்ளைகள் மலாய் பள்ளியில் படிப்பதில்லை.
தகப்பனார் அரசாங்க ஊழியர். ஒரு அரசாங்க ஊழியர் மற்றொரு அரசாங்க ஊழியர் மீது புகார் கொடுப்பதில்லை. அப்படி செய்தால் வேலை போகும். (தயவு கூர்ந்து எழுத்துப் பிழைகளைச் சரிபார்த்து உங்கள் கருத்துகளைப் பதிவு செய்யுங்கள். இனி அதிகமான எழுத்துப் பிழைகளோடு வரும் கருத்துகள் அங்கீகரிக்கப்படாது என்பதை கவனத்தில் கொள்ளவும். ஆ.ர்)
நல்ல வழக்கறிஞாராக பார்த்து வழக்கை ஒப்படையுங்கள், ஏமாந்து விடாதீர்கள், வழக்கறிஞர்கள் என்னும் பெயரில் இன்று முதலைகள் அதிகம். பின்னாளில் வருத்தப்படாமல் இருக்க இது ஓர் எச்சரிக்கை.
அட போங்கப்பா, எங்க ஊரில் ஆசிரியர்களை பயமுறுத்தி அடக்கி வாசிக்க உத்தரவு போட்டிருக்கின்றார்கள் நம்மின மாணவர்கள். “இதோ பாருங்க டீச்சர் நான் போதை மாத்திரை விற்கின்ற விசயத்தில் தலை இட்டீர்களானால், நாங்களே உங்கள் கைப்பையில் போதை பொருளை வைத்து விட்டு போலீஸ்க்கு புகார் செய்வோம் அப்புறம் பள்ளிக் கூடத்தை விட்டு வெளியே போனா மாமியார் வீடுக்குத்தான் போகணும்”. இதனால் நாம் அறிவது என்னவென்றால் ஆடிக் கறக்கின்ற மாட்டை ஆடிக் கறக்கணும், பாடிக் கறக்கின்ற மாட்டை பாடிக் கறக்கணும். கட்டப் பஞ்சாயத்து செய்ய வேண்டிய இடத்தில் கட்டப் பஞ்சாயத்துதான் செய்யணும். இதுக்குப் போயி சட்டம் கிட்டமின்னு பேசிகிட்டிருந்த காரியம் ஆகாது.
கறக்குற விசியத்தில் ரோம்ப ஜாக்கிரதயா இருக்காய்ங்க பூ,வாழ்க நாராயண நாமம்.
தேனீ, அந்த தைரியம் மாணவியின் அப்பாவுக்கு இருந்திருக்க வேண்டும். இல்லை, நெருங்கிய உறவினர் யாராவது கலை பிடுங்கி இருக்கவேண்டும். ….முள்ளை முள்ளால் தான் எடுக்கனும்….
தலைப்பு சிறப்பு,எங்கே வுணரலாம் ஈபோர் தமிழ்பள்ளியில்.ஓலாராகாவான் கோப்பை ஏய்பை பற்றி கேட்டமைக்கு அம் மாணவனை பழி வாங்க துவங்கிவிட்டது இப் பள்ளி.பெற்றோர் ஆசிரியர் சங்கத்தில் விளக்கம் தந்தாகிவிட்டது,பள்ளியில் நீதி கிடைக்கவில்லை,அவர்கள் அனுமதியுடன் வழி காட்டுதலின் பேரில் பி.பி.டி,யில் பகார் செய்யப்பட்டது,அன்று தினம் முதல் மாணவனின் வகுப்பு ஆசிரியை தமிழ் சதீசிடம் யாரும் பேசகூடாது என்று சட்டம் போட்டதாகவும்.மாணவன் இப்போது மிகுந்த மன உலைசலுக்கு ஆலாகபட்டதாகவும்.இது தான் தமிழர் பண்பாடா,என்ன கேவலம்.நாங்கள் முறையாக எல்லா தரப்பையும் அனுகி பின் தான் பி.பி.டி,க்கு சென்றோம்.மாணவர்களை வீணே ஏவி விட்டு தமிழ் சதீசை வம்புக்கு இலுப்பதும் பின் தண்டிப்பதும் நடந்துவருகிறது.இது இன்று நேற்று நடக்கவில்லை. ஞாயத்தை பாருங்கள்,தமிழ்சதீஸ் ஒரு முதல் பரிசு,ஒரு மெடல்,ஒரு இரண்டாம் பரிசு ஆக மூன்று பரிசுகள்.ஆனால் கோப்பையை பெற்றவனோ ஒரு மெடல்,ஒரு இரண்டாம் பரிசு,சட்டப்படி யாருக்கு ஓலாராகாவான் கொடுத்திருக்கவேண்டும் இது நீதி.இப்போது ஞாயத்தை பார்ப்போம்,தமிழ்சதீஸ் ஆறாம் ஆண்டு மாணவன்,கிடைக்கும் சான்றிதழை அடுத்த வருடம் செல்லவிருக்கும் படிவம் ஒன்றில்(எஸ்.எம்.கே)வில் பயன்படுத்திகொள்ள உதவும்.என்ன வந்தது அவசியம் ஐந்தாம் ஆண்டு மாணவனுக்கு அவசர அவசரமாக கொடுக்கபட்டது,இப்போது புரிகிரதா நீதியும்/ஞாயம் யார் பக்கம் நாராயண நாராயண.
தாய் மொழி பள்ளியில் படிப்பதை விட்டு அடுத்தவன் பள்ளியில் படித்தால் இந்த நிலைமை தான். இது பத்தாது இன்னும் உதைக்கணும்.
பங்சா சென்டீரி டீ மின்தா மம்பூஸ்,அப்பா ஜெனீஸ் மாமாலியா இனி.நாராயண நாராயண.
theni அவர்களே உங்களின் ஆதங்கத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அதற்கு இப்படியா? வாள் எடுப்பவர் வாளாலேயே மடிவர். நாம் மற்றவர்களை தவறாக குறைகூரவில்லைய? மலைக்காரர்களை மாடு தின்பவன், பிலாசான், வளயாங்கட்டி மடையன் என்றெல்லாம் கூறி இருக்கிறோம். அவர்களுடைய முன்னாள் தலைவர்கள் மிகவும் சாதுர்யமாக விவேகமாக செயல்பட்டு, அவர்களுடைய சமூக முன்னேற்றத்திற்காக முன்மதியுடன் செயல் பட்டதால் இன்று அவர்கள் பல கோணத்தில் முன்னேறியிருக்கிறார்கள். இன்று அவர்களுடைய வாழ்கை தரத்தை பாருங்கள். அன்று கடையில் பொருள் வாங்கிவிட்டு அதற்க்கு வேண்டிய பணத்தை அவர்கள் துருவி துருவி தேடுவார்கள். இன்று பையை திறந்தவுடன் 50, 100 என்று நோட்டை கண் மூடி கொடுக்கிறார்கள். நமது அன்றைய தலைவர்கள் அவர்களின் அன்றைய தலைவர்களுக்கு எவ்விதத்திலும் கல்வியிலும் திறமையிலும் சளைத்தவர்களில்லை. இருந்தும் நமது தலைவர்கள் அன்றைய சுகத்திலேயே இருந்துவிட்டனர். நாம் எல்லா விஷயத்திலும் எந்த நிலையில் இருந்தோமோ அதே நிலையிலேதான் இருக்கிறோம் .ஆனால் அவர்கள் திட்டம் போட்டு நம்மை விட பல நூறு மடங்கு முன்னேறிவிட்டார்கள். அன்று முதல் இன்று வரை நாம் மற்றவரை எதிர்பார்த்தே வாழுகிறோம். பல சமூக மக்களை அங்கத்தினர்களாக கொண்ட அமைப்புகளில் நமது சமூகத்துனர் அதிகமாக இருந்தாலும் நாம் அனைவரும் சேர்ந்து திறமையற்ற மற்றவனைதானே அவ்வமைப்புக்கு தலைவராக ஆக்குவோம். பணியிடங்களில் கூட நம்மை நாம்தானே கீழே தள்ள முயற்சி செய்வோம். இன்னும் எத்தனை முறை செருப்பால் அடி வாங்கினாலும் தன்மானம் இழந்த நமக்கு அறிவும் வராது ரோஷமும் வராது. இறைவா நாங்கள் வாளேடுக்காமல் அனைவரும் புரிந்துணர்வுடனும் சகோதர அன்பில் நலமுடன் வாழ எம்மையும் எமது நாட்டையும் ஆசீர்வதியும்.
தொ.பா தங்கள் அறிவுரைக்கு நன்றி. இந்நாட்டில் சட்டம் ஒழுக்கம் கெட்டுள்ளதால், நீதிமன்றத்தில் நீதி இடிக்கும் என்று அறிந்து வைத்திருப்பதால், வழக்கு தொடுப்பதெல்லாம் வீண் பேச்சு ஐயா. எம் தங்கைகள் இருவரும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியராக வேலை செய்கின்றனர். அவர்கள் கொடுக்கும் தகவலை வைத்துப் பார்ப்பதில் இரு தரப்பிலுமே தவறு இருப்பது தெரிகின்றது. கட்டப் பஞ்சயாத்து என்றது ஆதங்கமே தவிர அறிவுரை இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாம் எல்லோரும் பேசுகிறோம். ஆனால் நம் தலைவர்களுக்கு மணி கட்ட நமக்கு துணிச்சல் இல்லை.
இது புதுப்படமில்லை ! ..உண்மை உணருவோம்!!
===========================================
சிவில் கட்டுமானம் துறையில் ஓர் வார்த்தை உண்டு IMPACT STUDY என்பார்கள். தாக்கு ,மோதல் ,முட்டுதல் என்பது இதன் பொருள்.ஆனால் சிவில் துறையில் இதற்கு சில விதிகள் வைத்து புவி அமைப்பு அல்லது புவி இயல் ஒழுங்கு அதன் சாதக பாதக ஆய்வை வைத்து ஒரு கட்டடத்தை கட்டுவதற்கு முன்பு இது காட்டி முடிந்தால் இது நடக்கும் ஆதலால் இதை எல்லாம் செய்துவிட்டு இதை செய்தால் தாக்கு பிடிக்கும். முட்டாது ,மோதாது என்பதால் நிபுணர்களை வைத்து இந்த IMPACT STUDY செய்வது அவசியம் . அரசு நிர்வாகம் குத்தகை நிறுவனங்கள் இன்னும் எல்லா துறை வல்லுணர்களும் அவர் அவர் தேவைகளுக்கு ஏற்ப வணிகயியலில் இதை முக்கிய கட்டமாக வைத்து முடிவு செய்வார்கள்.
ஆனால் ஒரு நாட்டை, தன மக்களை ஆள வேண்டிய அரசியல் தலைவனுக்கு இந்த தராதரம் எல்லாம் தேவை இல்லை. மன்னர் ஆட்சியானாலும், மக்கள் ஆட்சி (ஜனநாயக) ஆனாலும் கமுநிஸ்ட் ஆட்சியானாலும் சரி நாட்டு அரசியல் தலைவனுக்கு இந்த சமூகத்தை காத்து நிற்க வேண்டியவனுக்கு இந்த Social Impact Assesment (SIA ) விதி விளக்காய் போய் விட்டது.
சரி இதை படியுங்கள்…..Definitions for “social impact assessment” vary by
different sectors and applications. According to the International Association for Impact Assessment, “Social impact assessment includes the processes of analyzing, monitoring and managing the intended and unintended social consequences, both positive and negative, of planned interventions (policies, programs, plans, projects) and any social change processes invoked by those interventions. Its primary purpose is to bring about a more sustainable and equitable biophysical and human environment.” (International Association for Impact Assessment).
இதெல்லாம் அரசியல் வாதிகளுக்கு தேவை இல்லைதான்.ஆனால் மாநில, நடுவண் அரசு பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு இந்த நாற்றமே இல்லை என்றால் இவர்கள் நிர்வாகம் மற்றவர்களை நம்பி நம்பி மக்களை நடு தெருவுக்கு போன பல மாநிலங்களை நாடுகளை நாம் பார்த்தது உண்டு.
இந்த நிலை சிலாங்கூர் மாநில மக்களுக்கு வரும் அபாய கண்டத்தில் நாம் உள்ளோம். தன் மனைவி பதவிக்கு வர வேண்டும் என்பதற்காக மக்களை அடகு வைக்கும் அளவிற்கு ஒரு கட்சியின் தலைவன் தரம் தாழ்ந்து உளான்.
இதுவரை நாமெல்லாம் ஏமாளிகள் இவன் ஒரு கோமாளி என்பதை தெரியாமல் நம்மை மாற்ற முயற்சிகள் செய்தோம் ஆனால் இவன் மாறிதான் போய் விட்டான். அந்த மக்கள் கூட்டணி தலைகள் ஆமாம் சாமியில் அரசியல் மோசடிகள் நம்மை துரத்துகின்றன ! தூரம் என்பது ஒரு எல்லைதான் எல்லை முடிந்தபின் திரும்பி எதிரடி வரும்போது துரத்தியவன் காணாமல் போவான். கால ஏமாற்றம் வேறு கால தேவதை வேறு.
நம் இனத்தை பிரதிநிதிக்கும் தலைவர்களுக்கே அடியும் உதையும் என்றால் நம் பிள்ளைகளுக்கு சொல்ல வேண்டியதில்லை.நம் தலைவன் வாங்கிய அடிக்கு அன்றே முறையான நீதி கிடைத்திருந்தால் இன்று நம் பிள்ளைகளுக்கும் இந்த நிலை வந்திருக்குமா? பெருமனதோடு ‘மன்னிப்போம் மறப்போம்’ என்ற நம் தலைவர்களின் கோழைத்தனமான கொள்கையால் வந்த விளைவு இது.மற்ற இனத்தைப்போல காலத்திகேற்றவாறு அடிக்கு அடி .உதைக்கு உதை என்ற கொள்கையோடு இருந்தால்தான் இங்கு நாம் பிள்ளை குட்டிகளோடு பேர் போட முடியும்.ஏனன்றால் சரித்திரமும் நாம் அளவுக்கு மீறியே முட்டி போட்டு விட்டோம் என்பதைத்தான் காட்டுகிறது.அதனால்தான் நம் மீது இன்னும் அக மற்றும் புற தாக்குதல்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.கோழையைக் கண்டால் மோளையும் பாயும் என்று சும்மாவா சொன்னார்கள்.
வீட்டு அரசியல் என்றால் அப்படி தான் இருக்கும்,சமுதாய அரசியலை சீனரிடம் பார்கலாம்.ஒரு அன்னியன் நம் தெருவிலே ஒரு தமிழனை போட்டு அடிக்கிறான் நாம் என்ன செய்வோம்,தெரியாத மாதிரி போய் வீட்டுக்கதவை சாத்திகிட்டு பொண்டாட்டி மடியில் படுத்துப்பாங்க,கீக்கி விசயத்தை பாருங்க பெர்காசா நிதி திரட்டி வுதவ முன்வந்தது,அவல் குற்றவாலி தெரிந்தும்.நாம் தான் நீதி காவலராச்சே,சத்தியவான்,தமக்கு தீங்கு வரும்போது எதுவும் ஞாயமே.ஒவ்வொறு கேம் கடை,ரெஸ்தோரன்,பாருங்கள் மலாய்கார கூட்டத்தை எந்த நேரமும் இலைஞர்கள் ஓன் லைனில் இருப்பர்,நாம் ஏதாவது பொது இயக்கத்தில் நோ நோ,அடா மஷ்ஷோக் பாரு போலே.எந்த ஒரு சமுகம் பணத்தை பார்குதோ அங்கே ஞாயம்,நீதி,அறம் செத்துவிடும்.தமிழரில் எல்லாம் மோசம் சொல்லவில்லை,ஒருவன் வானிபன் மற்றவன் தன் சமுகத்துக்காக வாழ்பவன்(அதிகம் கோயில் தலைவர்,நிர்வாகி)மூன்றாம் இருக்கிறானே எதுக்கும் லாயக்கில்லை,விரண்டாவாதி.நாராயண நாராயண.
இந்தியனாக பிறந்ததற்கு பெருமைப்பட்டேன் நேற்றுவரை. இன்றோ நிலைமை வேறு. என் இனம் என்று நினைத்தாலே வருத்தப்பட வைக்கிறது. சில சமயங்களில் கேவலமாகவும் இருக்கிறது. முன்னேற்ற சிந்தனை இல்லாத தலைவர்கள்!!! என்ன செய்கிறது என்றே தெரியாத நிலையில் இருக்கும் இயக்கங்கள்!!! இந்த இயக்கங்களும் கட்சிகளும் பல நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். அதனால் மக்கள் அடைந்த பலனோ என்ன??? . சுயநலம் கொண்ட நம் சமுதாயம் மாற யார் பூனைக்கு மணி கட்டுவது? சீரழிந்துக்கொண்டிருக்கும் , சீரழித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு இந்தியனும் இனப்பற்றோடு சற்று சிந்தியுங்களேன். எப்பொழுது தலை நிமிரும் என் இந்திய இனம்.
காய் நீங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்கள் ,எவன் சொன்னான்
ஒரு அரசாங்க ஊழியர் மீது இன்னொரு அரசாங்க ஊழியர் புகார் கொடுத்தால் வேலை போகும் என்று . எந்த அரசாங்க
சாசனத்தில் எழுதப்பட்டுள்ளது ,குற்றம் செய்பவர்கள் யார்
என்பதை சட்டம் பார்ப்பதில்லை புகார் கொடுப்பவர் யார்
என்றும் பார்பதில்லை . எதையாவது எழுத வேண்டும் என்பதற்காக தெரியாததை தெரிந்த மாதிரி எழுத வேண்டாம் ,
நான் முன்னால் அரசாங்க அதிகாரியிடம் உறுதி படுத்திய
பின்னே இந்த பதிலை பதிய வைக்கிறேன் .kaayee madraass
சட்டத்தில் இல்லை உண்மைதான்,வேலையில் சேரும்முன் சத்தியபிரமானம் கொள்வது.ஒலுங்கு நடவடிக்கை அடிப்படயானது.இதை அரசு அதிகாரியிடம் கேட்டால் கிடைக்குமா பதில்,ஊழியரை கேட்கவேண்டும்,பி.ஆரில் மோதிகொள்வது போல் அல்ல,ராமசாமி நாயக்கர் சொல்வது போல் பி.என் அரசில் கிடையாது,முடியாது செல்லாது.எஸ்.ஓ.பி,தெரிய வேனும்,அரசாங்க வாகனத்தை அரசாங்கம் எப்படி சம்மன் செய்யும்,பால சுப்ரமணியம் கதை தெரியும் தானே.நாராயண நாராயண.
ரேபோர்மாசி கூட்டத்தில் பங்கெடுத்த அரசாங்க ஊழியரை ஏன் வேலையைவிட்டு தூக்கவேண்டும் அப்போது என்ன விளக்கம் கொடுக்கபட்டது ஞாபகம் உண்டா,புரிகிறதா பித்தரே,வாழ்க நாராயண நாமம்.
எல்லாம் இந்த கமல நாதனால் வந்தது …!
இனம் மலகாக …நாற…..!,
நாதா ..! நாராயணா …!
எல்லாம் இந்த கமல நாதனால் வந்தது …!
இனம் மலமாக …நாற…..!,
நாதா ..! நாராயணா …!
மதம் மலமாக நாறுவதற்கு காரணம்,மதம் மலமாகியதால்.மதம் மலமானதற்கு தனி மணிதன் காரணமாகமுடியாது.பாஸ்காரன் கேவலமாக பேசினான் கோபம் வருது ஆனா கமலநாதனை அம்னோ காரன் அறைந்ததற்கு ஆர்பாட்டம் இல்லையே ஏன்.பயமா,அல்லது ஞாயமா,நாராயண நாராயண.
இனிமேல் நம்மவர்கள் தங்களை சீர்படுத்திக் கொள்ள வேண்டுமானால், இந்திய சமூகத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் முதலில் தங்கள் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும். முதலில் தங்களை நம்புங்கள். சிறுத் துளி பேரு வெள்ளம் போல் – எல்லோரும் நம்பிக்கை வைத்தால் நிறைய நல்ல மாற்றங்களைக் கொண்டு வரலாம். இதற்கு முதற்ப் படியே அரசியலில் நம் வலிமையை வளப்படுத்தியும் வலுப்படுத்தியும் கொள்வதுதான்.இப்படிச் சொல்வது தீவிர அரசியலில் ஈடுபாடுக் கொள்ள வேண்டுமென்பதில்ல. ஈடுபாடில்லாமல் வலிமைப் பெற வேண்டின், எல்லா மலேசியர்களும் அவசியமாக கட்டாய வாக்குப் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். 21 வயதை அடைந்தால் தகுதியிருந்தும் நம்மில் பலர் இன்னும் வாக்காளார்களாக பதிவு செய்துக் கொள்ளவில்லை. இதற்கு மேற்ப்பட்ட வயதினர் பலரும் இன்னும் பதுவு செய்யாமலே யுள்ளனர். இதன் பின் விளைவுகளைத்தான் இன்றும் சந்தித்துக் கொண்டிருக்கின்றோம். நாம் பதிவு செய்துக் கொண்டால் மட்டும் போதுமானதல்ல. நம்மை சுற்றியுள்ளவர்களையும் பதிவு செய்துக் கொள்வதற்கு தூண்டுக்கொளாக இருக்க வேண்டும். இந்திய சமுதாயத்திற்கு சேவைகள் என்று சொன்னவர்கள் கடந்தக் காலங்களில் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அப்படி செய்திருந்தால் இந்நேரம் நல்ல மாற்றங்களை செய்திருக்கலாம். முதலில் இதை சமூகச் சேவையாக எடுத்துக் கொள்வோம். நாட்டுச் சேவையாகவும் மதிப்போம். சிந்திப்போம்; செயல்படுவோம்.
2. நாம் ஏழைகள்தான்; ஆனால் கோழைகளல்ல – இதை நமக்கு அன்றே சொல்லிச் சென்றவர் இன்றுவரைக்கும் நம் நெஞ்சங்களில் இனிதே வாழ்ந்துக் கொண்டிருக்கும் அமரத்துவம் பெற்ற துன் சம்பந்தன் அவர்கள். நல்ல மாற்றங்கள் வேண்டுமென்றால் மாற்றங்களை நாம்தான் செய்யவேண்டும். எங்கே நம் பலம் எங்கே நம் பலவீனங்கலென்று அடையாளம் காணவேண்டும்; அதையும் இன்றே செய்யவேண்டும். வலிமையான வாக்குவங்கியை ஏற்ப்படுத்திக் கொள்வதே நம் பலம்; இந்த லட்சியம்தான் நமது அடுத்த இலக்காக இருக்க வேண்டும். இந்த உண்மையை நாம் இன்னும் அறியாமலிருக்கின்றோம். இதுதான் நம் பலவீனம். போராடிக் கொண்டிருப்பதால் மட்டும் நிறைந்தப் பலன்கள் பெறமுடியாது! ஆட்சியாளர் கண்களுக்கு இந்திய மலேசிய சமுகம் தெரியாமலிருக்கலாம். வலிமையான வாக்கு சக்திப் பெற்ற மக்களை அவர்கள் அடையாளம் காணாமலிருக்கமுடியாது. அப்படிப்பட்ட மக்கள் சக்தியாக நாம் முதலில் உருவாக வேண்டும். அடுத்த ஆட்சியை அமைப்பதற்கு வலிமையான வாக்கு வங்கியைப் பெற்ற இந்திய மலேசியர்கள் அவர்களுக்கு கட்டாயம் தெரிந்துதான் ஆகவேண்டும். இன்று சிலாங்கூர் மாநிலத்தில் நடக்கும் அரசியல் அலங்கோலங்களைப் பார்க்கும்போது அடுத்த மாநிலத் தேர்தல் வருவதற்கு வாய்ப்பிருப்பதாகத் தெரிகின்றது. ஒருவேளை மாநிலத் தேர்தல் நடந்தால் தேர்தலின் போது நம் வாக்கு வங்கியும் வலுவாக இருக்க வேண்டும். இதுதான் நமக்கு மரியாதை. ஆதலால், இளைஞர்கள் அனைவரும் தகுதியிருந்தும் இதுநாள் வரை வாக்காளர்களாக பதிவு செய்யாமலிருந்தால் அருகிலுள்ள தபால் நிலையம் சென்று பதிவு செய்வதை இன்றே செய்யுங்கள். மற்றவர்களுக்கும் தூண்டுக்கொளாக இருக்கவேண்டும். “நம் நாடு” என்ற வட்டத்தில் இந்த சேவையை நாட்டுச் சேவையாக நினைத்து செய்தால் இனி நாம் என்றும் நல்லப் பலன்கள் பெறுவோம்.