செம்பருத்தி வாசகர்களின் கவனத்திற்கு,
தற்போது செம்பருத்தியின் வாசகர்கள் அதிகமான கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். அவர்களின் கருத்து சுதந்திரத்தைச் செம்பருத்தி வரவேற்கிறது. அதன் எல்லை எது என்பதை நிர்ணயம் செய்யும் பொறுப்பையும் வாசகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
தணிக்கை என்ற பெயரில் உங்களின் கருத்துகளை முடக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. அதே வேளையில், சுதந்திரம் என்ற வேட்கைக்கு ஒரு பொறுப்புணர்ச்சி தேவை என்பதையும் உணர்கிறோம்.
செம்பருத்தி தணிக்கையற்ற கொள்கையை கடைபிடிப்பதால் சில வேளைகளில் எல்லையை தாண்டிய கருத்துகளும் பதிவேற்றம் கண்டதுண்டு. அதனால் பாதிப்பும் உண்டு.
எனவே, கருத்துகளை பதிவு செய்பவர்கள், கருத்து சுதந்திரத்திற்கும் – பொறுப்புணர்ச்சிக்கும் உள்ள தொடர்பை கருத்தில் கொண்டு, செம்பருத்தியின் தணிக்கையற்ற கொள்கைக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஆசிரியர் குழு.
நன்றி ஐயா !
ஓகே
தும்ப விட்டுட்டு வால பிடிக்கிற கதையா இருக்கு, முன்னரே இதை செய்திருக்கு வேண்டும். இருந்தாலும் இனியாவது, கருத்துகளில் கவனம் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியமைக்கு மிக்க நன்றி.
ஓகே ,பின்பற்றுகிறோம் .
நல்ல கருத்துக்களை செம்பருத்தி தணிக்கை செய்யாது என்கிற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. அதே வேலை தேவையில்லா அறுவை களை எங்களாலேயே பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நீங்கள் எப்படி……….. ஆக, ஒரு சில அசிங்க விஷயங்கள் தணிக்கை செய்வது நல்லதே. அதே வேலை நண்பர் சிம்மாதிரியின் கருத்துக்கள் தன் கைப்பட எழுதி அனுப்புவதை அப்படியே பிரசுரிக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. இப்படி ஒவ்வொருவருடைய கருத்துக்களும் தங்களது கைப்பட இருக்கும்கேயானால், அவனவன் லட்சணங்களை அறிந்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுமல்லவா?
நன்றி ஆசிரியர் அவர்களே. தங்களின் அறிவுரை செம்பருத்தியின் தரத்தை மேலும் உயர்த்தும் என்பதில் சந்தேகமில்லை. வளர்க.
ஒருசில கருத்துகளை தணிக்கை செய்வதே ஆசிரியர் குழுவுக்கு நல்லது. எம்சிஎம்சி எப்போ எப்போ என்று காத்துக் கொண்டிருக்கும் வேளையில், கொச்சை வார்த்தைகளையும் தரமற்ற குறைகூறல்களையும் தணிக்கை செய்வது ஊடகத்தின் தரத்தினை வழுபடுத்தும்…
நல்ல கருத்துபரிமாற்றங்கள் இடையில் சில அனாகரிய்ங்கல்லின் அறுவைகளை தாங்க முடியவில்லை ,
உண்மை தான் இல்லா விட்டால் போலீஸ் கேஸ் ஆயிரும்.நல்லதையும் உண்மையையுமே சொல்லுவோம் முறையாக.
நல்ல கருத்துகளை சொல்ல அனைவருக்கும் உரிமை உண்டு .ஆனால் இங்கு ஒருவரை ஒருவர் அநாகரிகமாக சாடி கொள்வதை தவிர்க்கவேண்டும் .தமிழில் பேச அவ்வளவு நல்ல வார்த்தைகள் உள்ளன .அதை விடுத்து .இப்படி அநாகரிகமாக பேசுவதை தடை செய்யவும் .
சரி
“தணிக்கையற்ற கொள்கை” சரி, பிறகு தனி மனித ஆதங்கம் என்று கை வைக்கிறீர்கள்? அதுவும் ஓகே ,அது உங்கள் உரிமை! ஒருவரின் கருத்தை வெட்டி ஒட்டி எழுத நம் எழுத்தாளர்களுக்கு கருத்துரை திறமை வேண்டும். கஷ்டப்பட்டு எழுதும் கட்டுரைகளின் மீது …குறிப்பா சிலரின் ஒரு வரி இரு வரி “எடுத்தாளும்” தெண்ட தாக்குதல்களை செம்பருத்தி நிறுவை செய்து அலசி போட வேண்டும். சும்மா “வாசகர் ” வெறும் வாசிக்கும் சூட்டுக்கு, மூட்ட பூச்சிகளின் கொடச்சல், குத்தல்,
அநாகரீக வார்த்தை வம்புகள் தவிர்ப்பது ஆ.குழுவின் கடமை.
நல்ல சமூக கட்டுரைகளுக்கு “தணிக்கையற்ற கொள்கை” ஓகே. வெட்டியான்கள் வெடிகள் இந்த இனத்தை வீணாக்கி விடும். ஆக எழுத்தாளர்களையும் “எடுத்தாளர்களையும்” கணித்து, பிரித்து, ஆய்ந்து
செம்பருத்தியை வளர்ப்போம். “இதுக்கும் எத்தாச்சும் எடுத்து” எழுதுவார்கள்..கவனியுங்கள். இதுக்கெல்லாம் நேரம் இல்லைங்க ஐயா!
இப்படி விளங்கும் படி எழுதினாலும் உங்களின் தனி “கையில்” தப்பிக்க
வேண்டுமே! தொடரட்டும்.
தனிக்கை என்பதை பொதுவில் பொருப்பாக செய்யவேண்டும்.மோசமான கருத்தும் நடமாடுவது எப்படி,பிற இனத்தை கேவலமாக விமர்சிக்கும் வாக்கியம் ஏன் அனுமதிக்கீர்.நாங்கள் பதில் கொடுக்கும் போது மட்டும் தனிக்கை.செம்பருத்தியில் வெளிவரும் விமர்சனத்தை வாசித்து பாரும்,அறம் அற்ற கருத்து,வீதி சண்டை போன்ற வாதம்.ஞாயம் பட்டதை செய்யும்,அறிக்கைக்கு நன்றி வாழ்க வும் தொண்டு,வாழ்க நாராயண நாமம்.
நல்ல முடிவு
ஒன்றை இருக்கு என்று சொல்வதற்கு ஒருவருக்கு ஆதாரமே இல்லாமல் உரிமை இருக்கும்போது அதை இல்லை என்று ஆதாரத்தோடு மறுப்பவருக்கு உரிமை கொடுக்கப்பட வேண்டும். மனம் புண்படும், புண்படுத்தும், புண்படுத்தலாம் என்று சொல்லியே உண்மையை அறிய முடியாதபடி தமிழினத்தின் அறிவுக்கண்கள் பன்னெடுங்காலமாகவே ஆதிக்க சக்திகளால் மூடப்பட்டு வந்துள்ளது. அதற்கு நவீன மீடியாக்களும் உடன்படக் கூடாது. கொச்சை வார்த்தைகளை அநாகரிகமாக பதிவு செய்வதும், பதிவு செய்யும் கட்டாயத்திற்குப் பிற பதிவாளரைத் தூண்டுவதும் நாகரிகமல்ல, மனிதப் பண்பாடுமல்ல. தம்முடைய தனிப்பட்ட கருத்தைப் பதிவு செய்யும்போது ஆதாரமே இல்லாமல் ஒரு நபரை (தலைவர்களை, பெரியவரகளை) மனம்போனப் போக்கில் குற்றம் சாட்டி எழத அனுமதிப்பதம் சுதந்திரமாகாது. கருத்துகள் மனதில் பகுத்தறிவைத் தூண்டிட வேண்டும். எந்த ஒரு கொள்கையையும் பரப்பும் விளம்பரத் தளமாக வாசகர்களின் கருத்துத்தளம் அமைய அனுமதிக்கக் கூடாது. அப்படி அனுமதித்தால் எதிர்கருத்தையும் பதிவு செய்யும் இக்கட்டான நிலை ஊடகங்களுக்கு ஏற்படும். அடுத்து, ஆசிரியர் குழுவினரின் தனிப்பட்ட கருத்துகளுக்கு முற்றிலும் மாறுபட்ட கருத்துகளை வாசகர்கள் வெளிப்படுத்தும்போது அவற்றை மதித்து பதிவிட அனுமதிக்க வேண்டும். நன்றி!
ஓகே…….
ஒருவர் அறிவுக்கு பொருத்தமில்லா கருத்துகளை எழுதினால்,அதை
இன்னொருவர் சுட்டி காட்டினால் தணிக்கை செய்விர்களா ?
நீங்கள் சொன்னால் சரியாகதான் இருக்கும் ஆசிரியரே
சரியான நல்ல முடிவுதான். அதோடு செம்பர்த்தி செய்திகளுக்கு கருத்துச் சொல்ல வருபவர்கள் அதையொட்டியே கருத்துகள் இருக்க வேண்டியது மிக முக்கியம். அதை விடுத்து தேவை இல்லாத சில கருத்துகள் திசை மாறி செல்வதையும் தடை செய்ய வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நல்ல தமிழில் எழுதுவதை கடமையாகக் கொள்ள வேண்டும்.
ஆமாம் சீரியன்,தடம் புரல்வதை நிருத்த வேண்டும்.முதலில் ஈபோர் தமிழ்பள்ளியில் நடக்கும் அராஜகத்தை நிருத்தும்.வருடாந்திர விளையாட்டு போட்டியில் நீர் தான் தலைமை தாங்கினீரோ.கோப்பை கை மாரியது எப்படி,இப்போ விசயம் பெருசாகி பி.பி.டி,வரை சென்றுள்ளது அடுத்து மீடியா,எஸ்.யூ.கே,போன்ற வாசல் கதவுகலை தட்டும்.தவரை சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்ளவேணும்,முரண்டு பிடிக்க கூடாது.இவர் என்ன செய்ய முடியும் யென்று அலட்சியம் நினையாதே.அடி முடி வரை தோன்டி விடுவோம்.ஞாயத்தை கேட்டால் பிள்ளையை படிக்க விட மாட்டீர்.நீயெல்லாம்..யாம் கடைசி வரை போராடி பெருவோம் கோப்பையை.நாராயண நாராயண.
ஆசிரியர் அவர்களே ! நோய் கடுமையாக இருந்தால் , வைத்தியமும் கடுமையாக இருக்கும் ! சிலருக்கு நான் அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பது ,கொடுத்தது என் சுய நலத்துக்கு அல்ல ! ஒருவாசகம் சொன்னாலும், அது திருவாசகமாக இருக்கவேண்டும் என்பதுதான் எனது கருத்து ,சிலர் இருவரியில் மறுப்பு சொல்லாமல் நீண்ட விளக்கம் சொல்கிறார்கள் , தமிழர் உணர்வையும் தூண்டி விடுகிறார்கள் ! தோழர் ஆசாமியின் கருத்தை ஆசிரியர் அவர்கள் கவனத்தில் கொள்ளவும் ! நன்றி, இப்படிக்கும், தமிழர் நந்தா !
எந்தக் கருத்தைச் சொன்னாலும் கொஞ்சம் நாகரிகமாக சொல்ல வேண்டும். சிலர் அதிகம் உணர்ச்சி வசப்படுகின்றனர். அதிகம் உணர்ச்சி வசப்பட்டு அடி உதை தான் வாங்குகிறோமே தவிர காரியங்கள் நடைபெறுவதில்லை. தணிக்கை என்பது சமயம் சார்ந்த விஷயங்களில் மட்டுமே. மற்ற பிரச்சனைகளில் அவர்கள் கை வைப்பதில்லை. ‘அஞ்சடித்தனமாக’ எழுதினால் கை வைத்துதான் ஆக வேண்டும். சிலர் தமிழர்களைத் தாக்குவதில் இன்பம் காண்கின்றனர். எனினும் வாசர்களுக்குப் பொறுப்புணர்ச்சி மிக முக்கியம்.
இப்போ யெல்லாம் பணம் தான் பேசுது,அடுத்தவர் மீது கை வைப்பது விலையாட்டல்ல,பின் பணத்தை வீசினா கதை சுலபமா முடிஞ்சுருது.கவணம்,இப்போ எல்லாம் முன்பு போல் கேள்வி யெதும் கிடையாது.ஞாயம் கிடையாது,பணம்,பணம் பணம்,வாழ்க நாராயண நாமம்.
நான் இந்த பகுதிக்கு பல ஆண்டுகளாக எழுதுகிறேன் . எவ்வளவோ உண்மைகளை தணிக்கை என்ற பெயரில் குப்பையில் போட்டுவிட்டிர்கள். செம்பருத்தி ஒருதலை பட்சமாகவே இருக்கிறது. .ஒரு சிலர் யாரை வேண்டுமானாலும் சீண்டி பார்க்கலாம் , அனால் நாம் மட்டும் பேசகுடாது . ஆசிரியரே படித்த பின் இதையும் தணிக்கை செய்து விடுங்கள் . (குப்பையில் ) வாழ்க உங்கள் ஒருதலை பட்ச நியாயம் .
மேலே கருத்து சொன்னவணுங்க அனைவரும் கண்டிப்பாக MIC என்பது அறியபடுகிறது
மங்கை ஆசிரியரும் சாப்பிட வேண்டுமே.யாமும் பல கருத்துக்கலை எழுதினோம் குப்பைக்கே போயிற்று.திராவிட கொள்கை(விரண்டாவாதம்) சிந்தனை ஒழியும் வரை இவர்களும் வாழ முடியாது.பாட்ஷா படத்தில் ஜப்பான் காரண் வேலை செய்லன்னா செத்துருவான்,தமிழன் பேசலன்னா செத்துருவான்,அபார கை தட்டு.இப்போ தான் சீனன் கிட்டே போய்ரிச்சு அதிகாரம்,இனி திரமைசாலிக்கே வாய்ப்பு கொடுக்கப்படும்,பி.என்னை அசைக்க கூட முடியாது.அச்சமூட்டியே எச்சரிக்கை செய்யமுடியும்.இல்லையேல் ஆஸ்தீகர் வாழ முடியாது.தெய்வத்தை பற்றி என்ன தெரியும்,விமர்சிக்க.நாராயண நாராயண.
மச்சுவை,கெராக்கான் காரர்கள்.இறைவன் ஆனை அதுவானால்.வாழ்க நாராயண நாமம்.
மன்னிக்கவும்,முச்சுவைக்கு வாழ்க நாராயண நாமம்.
செம்பருத்தி ஆசிரியர் பெருமக்களின் கருத்தைக்கண்டு அகம் மகிழ்ந்தோம் ,வரும் வாசகர்களின் கருத்தின் ஆக்கம், தரமற்ற வார்த்தைகள் தவிர்த்து, எழுதும் கருத்துக்கள் மற்றவர்களை ஏக்கம் கொள்ள வைக்கட்டும் , தமிழ் மொழியாம், செம்மொழி என்ற வார்த்தை தேன் அமுதாய் மாறட்டும் , மலேசியா வாசகர்களின் தமிழ் ஆக்கம் மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாய் திகழட்டும் ,வாழ்க தமிழ் ,வளர்க தமிழ் என்று இவ்வையகம் போற்றட்டும் .
வேண்டும் ஒரு கடவுள் பகுதியில் ஒருவன் ப்ராமணன் மதத்தை கேவலமாக எழுதுவதை ப்ரசுரிக்கிறார் பதிலுக்கு எழுதிய கட்டுரையை மறுக்கிறார். நாராயண நாராயண.
பார்பானுக்கு அந்த பகுதியில் என்னவேலைன்கிறேன்?
தேவையேற்பட்டால் செம்பருத்தி அவசியம் தணிக்கை செய்யவேண்டும், அதுதான் எல்லோருக்கும் நல்லது.
பார்ப்பனனைக் குறை சொல்லி, குறை சொல்லி நம்மை நாமே கேவலப்படுத்திக் கொள்ளுகிறோம். குறை சொல்லப்பட்டவன் உயர்ந்து கொண்டே போகிறான். குறை சொல்லுகிறவன் தாழ்ந்த நிலையிலேயே இருக்கிறான். நம்முடைய கையாலாகத்தனத்திற்கு பிராமணனைக் குறை சொல்லுகிறோம். குறைகளையே சொல்லிக் கொண்டிருக்கிற நமது சமூகம் முன்னேற முடியாததற்கு பிராமணன் தான் அகப்பட்டான். வேறு யாரையும் குறை சொன்னால் உதை தான் கிடைக்கும் என்பதைப் புரிந்து வைத்திருக்கிறோம்!
காயீ..நீர் உண்மையில் உண்மை பேசக் கூடிய ஆளாக இருந்தால் எனது தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு இருக்கலாம். என்னுடைய கைபேசி எண்ணை உமக்கா இப்பகுதியில் கொடுத்தும் இருந்தேன். ஆனால் இது வரை தொடர்பு கொள்ள வில்லை. உண்மைக்கு புறம்பான செய்தியை இங்கு வெளியிட்டு மிரட்டுகிறீர்..? நீர் எங்கு சென்று புகார் செய்ய வேண்டுமோ செய்து கொள்ளவும். மீண்டும் இதோ எனது தொலைப் பேசி எண்-0166846207.
உங்கள் சவாளை ஏற்றுக்கொள்கிறேன் சீரியன் அவர்களே,சவால் எனக்கு பிடித்த விரும்பிய ஒன்று.பகவத் கீதை மீத ஆணை,அங்கு நாம் சொன்னது யெல்லாம் உண்மை,உண்மையை தவிர வேரொன்றும் இல்லை.ஈபோர் தமிழ் பள்ளி வரும் காலத்தில் வெகு பிரபலம் கானும்,சந்தேகமே இல்லை.நாராயண நாராயண.
ஆபிரஹாம்…நீங்கள் புரியால் பேசக்கூடாது. அடுத்தவங்களை வைவது தமிழனின் பண்பல்ல என்பது தமினக்கும் தெரியும். ஆனால் பாருங்க இந்த வைதீககக் கூட்டம் தமிழனை ஒரு மனநோயாளியாகவே ஆக்கிவிட்டான். எப்படினா… அன்மையில் ஒரு மனோதத்துவ டொக்யூமென்றி பார்தேன். அதுல ஒருவன் பழைய ஆடைகளை விற்பான். ஆடைகள் அழகா இருக்கிறது. விலையும் மலிவா இருக்கிறது என்று ஆளுக்கு ஒன்றை எடுத்து உடுத்திக்கொண்டு ரசிப்பார்கள் மகிழ்ச்சியாக. அப்போது அந்த மனோதத்துவர் சொல்வார் இந்த ஆடைகள் எல்லாம் செத்துப்போனவர்களின் ஆடைகள் என்பார். உடனே எல்லோரும் ஆடைகளைத் திருப்பித் தந்துவிட்டு எங்களுக்கு ஒரு மாதிரியா அருவருப்பாக இருக்கிறது என்பார்கள். இப்படித்தான் சாதியைச் சொல்லிச் சொல்லி ” நீ தாழ்ந்தவன், உன்னால் என் னைப்போல் வாழமுடியாது, காரணம் நீ இறைவனால் பஞ்சமன், சூத்திரனென்று என்று கடவுளின் சாபம் பெற்று பிறந்து விட்டாய். எங்களுக்கு அடிமையாக ஊழியம் செய்தால் ஒரு வேளை அடுத்தப் பிறவியில் எங்களைப் போன்று உயர்சாதிக்காரனாகப் பிறந்தாலும் பிறக்கலாம். இதோபார் நமது மத சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.” என்று அரசர்களின் அதிகார நிழலில் இருந்துகொண்டு ஒரு இனத்தையே மனோரீதியில் பைத்தியமாக்கி வைத்திருப்பவனை, அதிலிருந்து மீண்டு வந்தவன் திட்டத்தான் செய்வான். பெரிய மனதோடு இச்சதிச் செயலைச் செயதவன் பரம்பரை தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழன் இந்த இழிநிலையைத் தாங்கித் தாங்கித்தானே இந்த நிலையில் இருக்கிறான். ஒவ்வொரு நாளும் தெய்வ வணக்கம் செய்யும்போதும் தன்னை ஒரு இழிபிறவி என்பதைத் தானே தியானிக்கிறான். எப்படி அய்யா திட்டாமல் இருப்பான்? மற்றவனை நாங்கள் ஏன் குறை சொல்ல வேண்டும்? அடிக்கு பயப்படுபவன் அல்ல தமிழன் மிஸ்டர் ஆபிரஹாம். நீ நேரடியாக தமிழனை அடித்தால் திருப்பி உடனே அடிப்பான். ஆனால் கடவுள் பேரைச்சொல்லி நாள் பூராவும் அடித்தாலும் தாங்கிக்கொண்டு வணக்கம் செய்வான் எங்கள் தமிழன். அதனால்தான் திராவிடத்தமிழன் தினம் தினம் கொதித்துப்போய் கிடக்கிறான். புரியுதா மிஸ்டர் ஆபிரஹாம் தாரேக்!
நண்பரே! நீங்கள் சொல்லுவதெல்லாம் தமிழ் நாட்டுத் தமிழனுக்குத் தான் பொருந்தும். அவன் தான் அனுதினமும் அந்தப் பிராமணனோடு வாழ்கிறான். இந்த நாட்டுத் தமிழனுக்கு என்னப் பிரச்சனை வந்தது? இங்கு சீனனையும், மலாய்க்காரனையும் பார்த்து பார்த்து அனுதினமும் நமது பிரச்சனைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இங்கு எந்தப் பிராமணன் உங்களை இழிபிறவி என்று தியானம் செய்யச் சொல்லுகிறான்? கையில் பணம், உயர் கல்வி இவைகள் இருந்தால் போதும். அனைத்து ஏற்றத்தாழ்வுகளும் அடிபட்டுப் போகும். இதனை நாம் தினசரி பார்த்துக் கொண்டிருக்கிறோம். உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளுங்கள். அது உங்கள் பிரச்சனை. காரணம் ஆயிரம் ஆண்டு பிரச்சனையை உங்களால் மறக்க முடியவில்லை. உங்கள் தியானம் உங்களை அப்படியே வைத்திருக்கிறது.. ஆனால் உங்கள் சுற்றுப் புறத்தினரையும் நீங்கள் அப்படிச் செய்யச் சொல்லுவதில் எந்த நியாயமும் இல்லை. மலேசியத் தமிழன் வாழ வேண்டும். தலை நிமிர வேண்டும். இன்று தமிழன் வளர முடியாததற்குக் காரணம் அவன் குடிகாரத் தமிழனாக மாறியது தான். பிராமணன் அல்ல!
குட்ட குட்ட குனிபவனும் குனிய குனிய குட்டுபவனும் அறிவிலிகள். ஏழையாய் வாழலாம் ஆனால், கோழையாய் வாழாதே. ஏமாளிகள் இருக்கும்வரை ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்வான். இது கலியுகமல்லவா!!!!
திருக்குறளில் கடவுள் வாழ்த்து எப்படி வந்தது,திருக்குறள் தமிழர் வழிகாட்டியாமே பட்சிகூட்டம் கின்டலடிச்சிட்டிருந்தது.இன்னோறு பட்சி சொன்னது அது வேதத்தை நன்கு கற்றுனர்ந்தவா எழுத்து என்றது.ஒரு அலுவலகத்துக்கு இருவர் போகிறார் வேலை தேடி,சம்மந்தபட்டவர் என்ன படித்திருக்கிறாய் சான்றிதழ் கேட்கிறார்.படிப்பரிவு இல்லை ஒய்ரீங்வேலை தெரியும் சொல்றார்,மற்றவர் ஒய்ரீங் படிச்சிறுக்கேன் அனுபவமில்லை சொல்லி நிரைய சான்றிதழ் பார்வைக்கு வைக்கிறார்.ஆனால் இறுவருக்கும் வேலை கிடைக்கிறது,படித்தவர்க்கு சம்பலம் ஆர்.எம்:15000,கார்,பங்லோ வீடு.படிக்காவர்க்கு ஆர்.எம்.2800,கம்பனி வேன்,ஓஸ்டல்,மற்றும் அதிகாரி,படிப்பில்லாவரை படித்தவர்க்கு எடுபுடியா இருயென்று சொல்லி.எடுபுடிக்கு காலை 06:30,வேன் வரும் ஏறிக்கொல்ல சொன்னார்.படித்தவரை அழைத்துச்சென்று காரையும் பங்லோ முகவரியையும் கொடுத்து காலை 10:00மணிக்கு வரசொன்னார் வாழ்த்துக்கள் சொன்னார்.கல்வி ஒன்றே மேல் சாதி கீழ் சாதி யென்ற வேற்றுமையை கலையவல்ல யுக்தி.இந்தியாவில் சாதியுரிமை கேட்டுவாங்கினர்.சாதிக்கு எல்லா துரையிலும் அதிகாரம்கேட்டு கிடைத்தது.அங்கு இப்போது ஜாதி கட்சி,மாநாடு போன்ற பெரிய அலவில் வளர்ந்துவிட்டனர்.போலீஸ் துரையில் கூட ஜாதிக்கு தனி தனி அதிகாரி இருக்கனும்.விசாரணைக்குகூட வேறு சாதி போலீஸ் அடித்துவிட்டால் வெளியில் கலவரமாம்.இங்கே ஏன்டா இந்த கீழ் சாதி வயிற்றில் பிறந்தோம் என்று ரத்தக்கண்ணீர் வடிக்கின்றனர்.மேல் சாதி பெண்னை துரத்தி திரிகின்றனர்.கீழ் சாதி தெரிந்து ஏன் ஆண்டவன் அவர்கள் வயிற்றில் குழந்தை பாக்கியம் கொடுக்கிறான்.ஆதலால் ஆண்டவன் கொடியவனா,நாராயண நாராயண.
பூணைக் கணகளை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டுவிடாது ஆபிரஹாம். இங்கே தாக்கம் கொஞ்சம் குறைவு என்று சொல்லுங்கள். ஏற்றுக்கொள்கிறேன். அதைவிடுத்து இங்கே சாதி இல்லை என்பது தன்னையே ஏமாற்றிக்கொள்ளும் செயலாகும். பெரிய பெரிய கோவில்கள் உயர் சாதியினர் என்று தங்களை கூறிக்கொள்பவர்களின் கைகளில். 90% சதவிகித தமிழரின் திருமணங்கள் சாதி திருமணங்கள். 95% வருமானம் வரும் கோவில்களில் யார் அர்ச்சகர்கள் என்று உமக்குத் தெரியாதா? இம்போர்ட் அர்ச்சகர்களை மலேசிய அரசு தடுத்த போது , இல்லை! இல்லை! எங்கள் கோவில்களுக்கு அந்த அர்ச்சகர்கள்தாம் வேண்டும் என்று அடம் பிடித்தவர்கள் நம்மவர்கள். இதற்கு வாக்காலத்து வாங்கி பேசிய முன்னாள் மந்திரி சுப்ரா அவர்கள் பிராமண அர்ச்சகர்கள் ஆச்சாரம் மிக்கவர்கள், உள்ளூரில் அந்தளவிற்கு ஆச்சாரமிக்கவர்களை காணமுடியாது என்று பத்திரிகையில் அறிக்கை விட்டதோடு அரசு அனுமதி மறுப்பதை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றார். இது தமிழனை தமிழனே மட்டம் தட்டுவது இல்லையா? இந்த அளவிற்கு தமிழனுக்கு உணர்வு மங்கிப்போனது இந்தியாவில் இல்லை தோழரே இந்த மலேசியாவில்தான் என்பதை ஆப்ரஹாம் புரிந்துகொள்ள வேண்டும். இப்படி எங்கும் எல்லோர் மனதிலும் சாதி வேரோடி இருக்க யார் காரணம்? எது காரணம்? நீர் சொல்லுவதைப்போல் பார்ப்பணர்கள் நேரடியாக தடுக்கவில்லை. ஆனால் அவர்களின் தத்துவம் அத்துனை சலபமாக தமிழினத்தை விட்டு ஓடிவிடாது. அதை விரட்டும் காரியத்தில் ஒரு நகர்வுதான் சைவ மாநாடு. நான் ஒரு பெரியாரியவாதியாக இருந்தாலும் தேனி பொன்றோரை ஆதரிப்பதும் அவர்களின் இந்த நோக்கத்திற்காகத்தான். தமிழனின் தளைகளை உடைக்கும் முயற்சியை எவர் மேற்கொண்டாலும் ஆதரிப்பதும் தமிழனின் உயர்வுக்காகவே என்பதை புரிந்துகொள்ளும்.
நண்பரே அனோன்! உங்கள் பணியைத் தொடருங்கள். சாதியத்தை உடைத்து எறியுங்கள். வாழ்த்துகள்! தமிழ் இனத்தின் உயர்வே எனது நோக்கம் என்பதால் எனது பணியை நான் செய்கிறேன். வருத்தப்பட ஒன்றுமில்லை! உங்கள் வழி வேறு எனது வழி வேறு! அவ்வளவு தான்!
சொல்ல விரும்பும் விஷயத்தை சுருக்கமாக ,அழகாக,நாகரிகமாக
சொல்லப் பழகிக் கொள்வோமே அய்யா
,செம்பருத்தியின் துணிகரமான சேவைக்கு உறுதுணையாய் இருப்போமே. என்ன சம்மதமா நண்பர்களே !!!???
,