2008 தேர்தலில் படுதோல்வியடைந்த பாரிசான் 2009 முதல் 2013 வரையில் தமிழ்ப்பள்ளிகளுக்காக ரிம540 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்து புதிய சாதனையை உருவாக்கியது. இதோடு 2014-இல் இன்னொரு ரிம 50 மில்லியனும் ஒதுக்கப்பட்டது.
அதாவது சராசரி ஒரு தமிழ்ப்பள்ளிக்கு 1.15 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது என வைத்துக்கொள்ளலாம். இதுதான் வரலாற்றில் ஒதுக்கீடு செய்யப்பட்ட அதிகமானது ஆகும். இதற்கு முன்பு அதிகமாக 1990-இல் ரிம 27 மில்லியனும் 2006-இல் ரிம 56 மில்லியனும் ஒதுக்கப்பட்டது. 1990-இன் ஒதுகீடுக்கான காரணம் ஐபிஎப்-தான்.
அப்போது அது செமாங்காட்-46 என்ற துங்கு ரசாலியின் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தது. தேசிய முன்னணி இந்திய வாக்காளர்களைக் கவர மேற்கொண்ட நிதி ஒதுக்கீடாகும். 2006-இல் ஒன்பதாவது மலேசிய திட்ட்திற்கு ஒதுக்கப்பட்ட ரிம 56 மில்லியன் தற்போதுள்ள 540 மில்லியனின் ஒரு பகுதியாகும்.
கடந்த 13-வது பொதுத்தேர்தலை முன்னிட்டு வெளியிடப்பட்ட நம்பிக்கை கையேட்டில் 2009-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை 250-க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகளின் மறுசீரமைப்புப் பணிகளுக்காக ரிம 540 மில்லியன் நிதியைக் கூட்டரசு அரசாங்கம் வழங்கியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மறுசீரமைப்புப் பணிகள் தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய கட்டங்கள் எழுப்புவதையும், தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய இணைக்கட்டங்கள் எழுப்புவதையும், தமிழ்ப்பள்ளிகளை புதுப்பிப்பதையும் இலக்காக கொண்டுள்ளது.
எடுத்துக்காட்டிற்கு, கெடாவிலுள்ள சரஸ்வதி தமிழ்ப்பள்ளிக்கு 9 வகுப்பறைகளைக் கொண்ட மூன்று மாடி கட்டடம் கட்டுவதற்கு உத்தேச செலவு ரிம 2,000,000 ஒதுக்கீடு 2012-ஆம் ஆண்டுக்கான சிறப்பு ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய இணைக்கட்டங்கள் எழுப்புவதற்கான பரிந்துரையில் இடம்பெற்றுள்ளது. இதேபோல் சிலாங்கூர் சீபில்டு தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு ரிம 4,000,000 ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு 2 ஆண்டுகளை நெருங்கும் நிலையில் இன்றைய நிலையில் அவை இன்னமும் கட்டப்படவில்லை. இவ்வகையில் 48 பள்ளிகளுக்கு ரிம 84,000,000 ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் எத்தனை பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன என்பது தெரியவில்லை.
மேலும், இவை தற்போது கட்டுவதற்கு தேவைப்படும் நிதி சுமார் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிகிறது. எடுத்துக்காட்டிற்குச் சிலாங்கூரில் உள்ள ஒரு பள்ளியைக்
கட்ட ஒதுக்கப் பட்ட நிதி ரிம 4 மில்லியன், ஆனால் அதன் குத்தகை மதிப்பு ரிம 8.5 மில்லியன்.
இதேபோல் நம்பிக்கை கையேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் 250 தமிழ்ப்பள்ளிகளுக்கும் குறிப்பிடப்பட்டுள்ளது போன்ற வேலைத்திட்டமும் ஒதுக்கப்பட்ட தொகையும் செலவிடப்பட்டதா? என்ற கேள்வியும் எழுகிறது.
சுயாதீன தணிக்கை குழு வழி மஇகா செயலாற்றலாம்
ஒவ்வொரு ஆண்டும் தலைமை கணக்காய்வாளரின் அறிக்கை (Auditor General’s Report) நிதி பயன்பாட்டை அம்பலப்படுத்துகிறது. தமிழ்ப்பள்ளிகள் தொடர்பான சிக்கல்கள் நீண்ட காலம் நிலுவையில் இருப்பதால் இந்த சுயாதீன தணிக்கை குழு அவசியமாகிறது.
இது தமிழ் பள்ளிகளை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் மீதான பொது மக்களின் நம்பிக்கையை உயர்த்தும். அதோடு அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் அல்லது வதந்திகள் அகற்றி நிதி மோசடி இருந்தால் அம்பலப்படுத்தும்.
ஒவ்வொரு முறையும் தமிழ்ப்பள்ளிகளின் நிலை குறித்து பேசுகிற பொழுது மீண்டும் மீண்டும் அரசாங்கம் ஒதுக்கியிருக்கும் நிதி குறித்து நினைவுறுத்தப்படுகிறது. இன்றைய நிலையில், கண்டிப்பாக அந்தத் தொகையில் பல மில்லியன்கள் செலவிடப்பட்டிருக்க வேண்டும். அதன் விபரங்கள் என்ன என்பதைத் தெளிவாக வெளியிட வேண்டியது அவசியமாகிறது.
கமலநாதனால் முடியும்
இந்த விபரங்களைப் பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டு வர வேண்டிய பணியைக் கல்வித் துணையமைச்சர் கமலநாதனின் செய்தால் அதுவே ஒரு பெரிய சாதனையாகும். நாம் வெளிப்படைத்தன்மையைப் (Transparency) பற்றி கருத்தில் கொண்டால் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு உடனடியாக அடைவுநிலைகளை பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட வேண்டும். அவர் அவற்றை தனது முகநூல் அல்லது டிவிட்டரில் தொடர் முன்னேற்றங்கள் குறித்த அறிவிப்புகள் பதிவிட வேண்டும்.
நான் மேற்கொண்ட ஓர் சிறிய ஆய்வின் படி ஆகஸ்டு 18 வரை கமலநாதன் 22,400 டிவிட் செய்திருக்கிறார். 25,000 பேர் அவரை டிவிட்டரில் பின்தொடர்கிறார்கள். அதுபோல முகநூலில் 4857 நண்பர்களும் 3658 பேர் பின் தொடர்பவர்களாகவும் இருக்கின்றனர். சிறந்த அடைவுநிலைகளையும் இவ்விரு தளத்திலும் பதிவிட்டுள்ள கமலநாதனுக்கு சுயாதீன தணிக்கை குழுவின் பலன் அவரை மேலும் பிரபலமாக்கும்.
ரிம 590 மில்லியன் பத்தாது
2015-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், 10 அக்டோபர் 2014 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதில் தமிழ்ப்பள்ளி மேம்பாட்டுக்கு மேலும் ஒதுக்கீடு தேவை என்ற விண்ணப்பம் கண்டிப்பாக இருக்கும். அதற்கு காரணம், மேலே குறிப்ப்ட்ட 48 பள்ளிகளை தவிர பிரதமர் கடந்த 2013 தேர்தல் காலங்களில் அறிவித்த ஏனைய பள்ளிகளை மேம்படுத்த மேலும் சுமார் ரிம 150 முதல் ரிம 200 மில்லியன் தேவைப்படும்.
இதை மஇகா செய்திருக்கும் என நம்புவோம். இதில் குறைந்தது ரிம 100 மில்லியன் கிட்டாவிட்டால் பிரதமர் அறிவித்த தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாடு முழுமையடைய வாய்ப்பில்லை.
மஇகா-வின் தலைவலி
அரசாங்கம் இந்திய சமுதாயதிற்கு ஒதுக்கிய மிகப்பெரிய கல்வி ஒதுக்கீட்டு தொகை இந்த ரிம 590 மில்லியன். இதை 2012 முதல் தரமாகவும் திறமையாகவும் கையாள இயலாததால் சமுதாயம் பாதிப்படைந்துள்ளது.
பிரதமர் அமைத்த சிறப்பு அமைச்சரவை குழு, இந்தியர்களுக்கான சிறப்பு செயலாக்க குழு மற்றும் அமைச்சர்கள் துணையமைச்சர்கள் இப்படி இத்யாதிகள் இருந்தும் எதனால் இந்த நிலை?
மஇகா தனது மானத்தை காப்பாற்ற மேற்குறிப்பிட்ட சுயாதீன தணிக்கை குழு ஒன்றை நிறுவ வேண்டும். அதன் முடிவுகளை அறிவிக்க வேண்டும். அதில் தவறாக ஈடுபட்டவர்களை அடையாளம் காண வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொடுத்து காச பாக்கெட்டிலே போட்டா ,தலைவலிதான் ,தமிழனுக்கு தமிழன் குழி பறிப்பு !
அரசியல் தெரிந்தவர் அரசியல் தெரியாதோரிடம் அரசியல் செய்கிறார்,நாராயண நாராயண.
மக்களை போட்டுக்குழப்பக்கூடாது.யாரிடமாவது சீனரைபோல் தன் சொந்த பணத்தை கொண்டு நிர்மாணித்த பின் மாண்யம் எதிர் பார்தால் தான் வேலை நடக்கும்.மாண்யம் கைக்கு வரவே குறைந்தது மூன்று வருடம் மேல் ஆகும் முதல் தவணை காசோலை வரும் மிஷின்கள் வந்து இரங்கும் பின் புரோஜேக் கேன்ஸ்சல் ஆகும் காரணம் திட்டம் இரண்டு வருடத்துக்குல் முழுமை பெறாததுவே.மீதி பணம் கருவூலத்திற்கு சென்றுவிடும்.கேட்டால் இடம் கொடுத்தாச்சு பணம் கொடுத்தாச்சு செய்தி வரும் பின் ஏஜன்ட்(ம.இ.க) மீது பழி,இது தெரிந்தும் ஏன் வீன் தொந்தரவு செய்கின்றீர்.உங்கள் நோக்கம் புரியவில்லை.நாராயண நாராயண.
சொல்லிகிட்டே இருத்த போதுமா..? ஹிந்ட்ரப் மாதிரி ரோட்ல எரகனும். தலைவர்களை விட மக்களுக்கு பலம் அதிகம் .
தமிழ் பள்ளி கட்டுவது ஒருபுறம் இருக்கட்டும். இந்திய மாணவர்களுக்கு உயர் நிலை பல்கலைகலகங்களில் படிக்கும் நிலை எப்படி இருக்கிறது என்று கவனிப்பது மிகவும் முக்கியம். அடிப்படை கல்வி மட்டும் நன்றாக இருந்தால் போதாது.
இதற்கு ஒரே தீர்வு, இந்தியர்களுக்காக நிறைய இடைநிலை பள்ளிகளும், உயர் நிலை கல்வி பல்கலைகலகங்களும் அமைக்கப்படவேண்டும்….
நடக்குமா ??
இனிமே ம.இ.கா தலைவர்கள் தமிழ்ப்பள்ளி வளாகத்திலேயே
வீட்டை கட்டி கொள்வார்கள் ,நல்ல வரவு இனிமேல் ஆரம்பம்
இனைகட்டிடம் ,பாலர்பள்ளி எல்லா டெண்டரும் இனி ம.இ க.மூலம் தான் , அதே வேலை தலைவர்கள் மெஸ் ,ஆஉடி இ
கார்களை புக் பண்ண இப்போதிலிருந்து கார் நிறுவனத்தில்
வருசையாக நின்றாலும் நிற்கலாம் .
இனி எத்தனை தலைவர்கள் வந்தாலும் மாஇகாவில் புதிதாக ஒன்றும் நடக்கப் போவதில்லை என்பது தெரிந்த ஒன்றுதான்! திருடனாய் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது . அரசியலில் இதெல்லாம் ஒன்றும் புதிது இல்லீங்க காலம் காலமா நடக்கிரதுதானேங்க நாம் பாவப்பட்ட சமுதாயம் சுருட்றவன் சுரிட்டிக்கிட்டுத்தாங்க இருப்பான்.ஏன்னா ஆட்சி அவுங்க கையில. ஒன்னும் செய்யமுடியாதுங்க.
கடவுள்
தான்
மக்களை
காக்க வேண்டும்
எப்பதான் இவனுங்க திருந்துவானுங்க ஆண்டவா, இந்த ஏழை சமுதாயத்தை ஈவு இரக்கமில்லாமல் இப்படி கொள்ளையடிக்கிறார்களே இவனுங்க குடும்பம் விளங்குமா. தேர்தலில் இந்திய சமுதாயத்தை எப்படியாவது பாரிசான் பக்கம் திருப்ப வேண்டும் என்று நஜிப் சுயநலத்துக்காக கொடுத்த அந்த பணத்தையும் மனசாட்சி இல்லாமல் அபேஸ் பண்ணிட்டானுங்களே இந்த மஇகா ப…னிகள்.
தேன் எடுப்பவன் புறங்கையை நக்காமல் இருக்காமாட்டான் மக்கள் சொத்தில் தின்று கொலுதவன்கள் நீதி தேவதைக்கு ஒருநாள் பதில் சொல்லியே ஆகவேண்டும் ‘அரசு அன்று கொள்ளும் தெய்வம் நின்று கொள்ளும் ‘மக்கள் சொத்துமகேசன் சொத்து ‘ சிவன் சொத்து குலநாசம் ‘ போல் அனுபவிப்பார்கள் !!!
கமலநாதனுக்கு எந்த அளவுக்குக் கல்வி அமைச்சில் மரியாதை இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. நாம் நூறு விழுக்காடு செயல் திட்டத்தை அவரிடம் எதிர்பார்க்கவில்லை. குறைந்த பட்சம் ஒரு பத்து விழுக்காடாவது அவர் உண்மையாக செயல் ஆற்றினால் இந்த சமுதாயம் அவருக்கு நன்றி சொல்லும். அவருக்கு எவ்வளவு இடையூறுகள் இருக்கும் என்பது நமக்குப் புரிகிறது. அதனைச் சமாளிக்க அவருக்குத் தெரியும் என நம்புவோம். எனது ம.இ.கா. நண்பர் ஒருவர் சாதாரண மலாய் பேசுபவர். ஆனாலும் நிறையக் காரியங்களைச் சாதித்திருக்கிறார். அது எப்படி…? கேட்டால்: ஆயிரம் துவான் போடுவேன். காப்பி வாங்கிக் கொடுப்பேன். பெருநாள் காலங்களில் அவர்களைத் தவறாமல் வீட்டுக்குக் கூப்பிடுவேன். நான் அவர்களுடன் அணுக்கமான உறவு வைத்திருக்கிறேன் என்பார். இப்படித் தான் நாம் காரியங்களைச் சாதிக்க வேண்டியிருக்கிறது. இது தான் அரசியல்? இந்த சமுதாயத்திற்காக கெட்டப்பெயர் வாங்கிக் கொண்டிருக்கும் கமலநாதன் நல்ல பெயர் எடுக்க வேண்டும். ஏதாவது நல்லதைச் செய்ய வேண்டும். சாமிவேலுவை முன்னுதாரணமாக எடுத்து செயல் பட்டால் …..எனது அனுதாபங்கள்!
1. RM540 மில்லியன் என்பது மிகப் பெரிய தொகை, ஓர் ஏழைச் சமுதாயத்தின் தலையெழுத்தையே மாற்றக் கூடிய தொகை. 2.
இது உண்மையிலே வெறும் ‘ஒதுக்கப்பட்ட’ தொகை தானா? அல்லது ‘கொடுக்கப்பட்ட’ தொகையா? ஒதுக்கப்பாட்டதாயிருந்து இன்னும் கொடுக்கப் படவில்லையென்றால் இந்நாட்டு இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் இது பற்றிப் பேசவும் (அ) தட்டி அதைக்,கேட்கவும் உரிமை உண்டு. அப்படிக் கொடுக்கப்படிருந்தால் அதையும் – ஒவ்வொரு ரிங்கிட்டுக்கும் கணக்கு கேட்க அனைத்தி இந்தியருக்கும் உரிமை உண்டு.3.
ஐ.பி எஃப்-க்கும் இந்த நிதி கிடைத்ததற்கும் சம்மந்தம் உண்டு என்றால், பிரதமர் அந்த தொகையைப் பகிர்ந்துக் கொடுத்திருக்க வேண்டும் காரணம் பிரச்சினை என்று வரும்போது ஓடிப்போய் முந்தானைக்குள் பதுங்கிக் கொள்ளும் ம.இ.கா இந்நாட்டு இந்தியர்களின் ஏகபோக பிரதிநிதி அல்ல.
4.இந்தையர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, 2008 தேர்தலில் வாக்கு சரிவுக்கு வித்திட்ட ஹிண்ட்ராஃபுக்கு இதில் பங்கில்லையா? யாரவது விள்ளக்கம் சொல்லுங்களேன்
கமல் நடிப்பை பார்திரிக்கியாலே ? ரஜினி ஸ்டைல பார்திரிக்கியாலே ? ஏன் சிங்கம் சூர்யா நடிப்ப பார்திரிக்கியாலே ?
முகிடின் கையிலே முத்தம் கொடுத்த பார்திரிக்கியாலே ?
அதே கையாலே எக்கி அம்னோ காரன் மூஞ்சில குத்து விட்டத பார்திரிக்கியாலே ? ஓடி போயி ஆஸ்பத்ரில படுத்த பார்திரிக்கியாலே ? கமலநாதன் நடிப்ப பார்திரிக்கியாலே ? பார்திரிக்கியாலே ? பார்திரிக்கியாலே ? இப்ப பாருலே என் நடிப்ப !
ஆகா ஆகா,சிலாங்கூர்ல தோத்ததை பார்தியாலே,எம்.பி, ஆக துடிச்சதை பாரதியாலே,இரண்டு எக்ஸ்கோவை திருடியதை கேட்டியாலே,இப்போ சிலாங்கூரில் ஜேச்சுட்டான் தெரியுமாலே,15,டூன் வெச்சிறுக்கான் தெரியுமாலே,அப்பவே திருடன் பொய்காரன் சொன்னேனே கேட்டியாலே கேட்டியாலே,நாராயண நாராயண.
கடவுள் வறம் கொடுத்தாலும், சாமியார்கள் விடுறதில்லை! அரசியலில் காமராஜர் பள்ளிகளை நிறுவி, செயல் படுத்த போராடினார். ஆனால் இன்று, எம் குல பிள்ளைகள் படிக்கச் அரசு பணவுதவி செய்தாலும், நாய்களின் மற்றும் நரிகளின் வாயிக்குள் அல்லவா செல்கிறது ! ஒவ்வொரு குடிமகன்களின் சாபத்தை ஏன்தான் இப்படி வாங்கி கொள்கிறார்களோ ?
நம் குறையை மறைத்து மற்றவரை கை காட்டுவது மாறவேண்டும்.நாம் பெற்ற பிள்ளையை அதுவும் இரண்டே பிள்ளையை படிக்கவைக்க முடியவில்லை என்றால் ஏன் பெற்றுக்கொள்ள வேண்டும்,இந்தியாவில் மக்கள் தொகை அசுர வேகத்தில் பெருகி வரும் நிலையில் எதற்கு குழந்தை,நாராயண நாராயண.
ரி ம 540 மில்லியனுக்கு நியாயம் கற்பிர்க்கும் நரி ,பேராக்கில் கொல்லைப்புறமாக ஆட்சியை பிடித்த சதியெல்லாம் மறந்து போச்சோ? சதா அனவரையும்,வன்ஹசிஷாயும் குறிப்பிட்டு ஊளை இடுவதேனோ?
தூங்குவதுபோல் நடிப்பவரே,பேராக் நெகிரி தானா மெலாயூ,பெர் சுல்தான்,மெஜோரிட்டி அடுன் புக்கான் மெலாயுவை வைத்து எப்படி அரசை அமைப்பீர்.ஏன் இம்முறை பேராவை கவர முடியவில்லை.நாராயண நாராயண.
மச்சான் சூப்பர் ரண ஜெக்ட்போர்ட்
என்ஜாய்-லாஹ்
பள்ளி கட்டுமானத்துக்கு குறுக்கே நிற்கும் எல்லோரையும் கலை எடுப்போம்..அரசாங்கம் அளித்த நிதி கால தாமதத்தால் வேறு இன பள்ளிக்கு போவது நிச்சயம்..
அதை சொல்லுங்கள் கே.ரமணி,தமிழ்,சீன,அராப் ஆரம்ப பள்ளிக்கு காலீட் அரசு சமார் ஆர்.எம் 90ஜூத்தா கொடுக்கப்பட்டதாக செய்தி, சிலாங்கூர் கீனியில் முன் பணம் போட்டு அரங்கேற்ற வேணும் இல்லையேல் தீர்வுகாண முடியாது கே.ரமணி.வெ.ராமசாமி நாயக்கர் தமிழ் மொழியை பற்றி ஏதோ எழுதி வந்ததாக படித்தேன்,பின் ?,வாழ்க நாராயண நாமம்.
உதவாக்கரை பமவான்கள் நிறைந்த கட்சி MIC யை அழிய வைக்கணும் அதை உடனை ஆரம்பியுங்கள் மக்களே
த்யாகம் ஒன்றே பிறர் நம்மை திரும்பிபார்க்க செய்யும் என்கிறார் வசந்தம் நிகழ்சியில் ச.சாமிவேலு.தமிழ்மொழி பற்றி வெறுமனே பேசினால் பயன் விளையாது, “த்யாகம்”செய்யுங்கள் அரசோ,என்.ஜி.ஓ,வோ,இயக்கங்களோ முன்வரும் கைகொடுக்க,இதற்கே பெரியோறை துணைக்கோடல் என்று ஶ்ரீ வல்லுவர் குறளில் குறிப்பிட்டுள்ளார்.திராவிடம் பேசி கலை கலாச்தாரத்தை மொழியை கொன்று புதைத்து வருகின்றனர்.மேலே மேலே போகும் போது வந்தவழியை பொறுட்படுத்துவதில்லை புறக்கணிப்பதாக சொல்கிறார்.ஆகையால் செய்வோம் த்யாகம்,வாழ்க நாராயண நாமம்.