“நள்ளிரவில் வாங்கினோம், இன்னும் எங்களுக்கு விடியவில்லை..” என்பவர்களும், ‘எங்கள் வீட்டு கம்பத்திற்குக் கொடி கொடுத்த விடுதலை எங்களுக்கு வீட்டை கொடுக்க வில்லை’ என்று புலம்புவர்களுக்கும் இடையே மலேசியா போன்ற ஒரு நாடு கிடைக்காது என்ற எண்ணத்தைக் கொண்டவர்களில் நானும் ஒருவன்.
ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்றதற்குப் பல காரணங்கள் இருப்பினும், நமது நாட்டிற்கு விடுதலை என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகும். இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிறகு ஆசியாவில் இருந்த ஆங்கிலேயர்களின் வெளியேற்றம் ஒரு நிர்பந்த நிகழ்வாகும். தேசிய உணர்வுக்கு உந்தப்பட்ட மக்கள் விடுதலைக் காற்றைச் சுவாசிக்க தயாரானார்கள்.
மலாயாவின் விடுதலை ஓர் உன்னதக் கனவாகும். இது எங்களின் தேசம். இந்த நாடு எங்கள் நாடு என உரிமை கொண்டு மார்தட்டும் ஒரு நிகழ்வாகும்.
அதுவே, நமது நாட்டுக்கு நாம்தான் இனி பொறுப்பு என மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து சொந்தமாக ஆட்சி செய்ய முடிவெடுத்த நாளாகும்.
நமக்கான சட்டம், நமக்கான நாடாளுமன்றம், அமைச்சரவை என மக்களே முடிவு செய்ய அரசமைப்பு சட்ட வழிமுறை வகுக்கப்பட்டது. அதில் மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுக்கப்பட்டு அதன் படி மக்களே தங்களை நிர்வகிக்கும் அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பையும் பெற்றனர்.
மக்கள் நினைத்தால் அரசாங்கத்தை மாற்றலாம். அதன்வழி பிரதமரை மாற்றலாம். அமைச்சர்களை மாற்றலாம். அரசமைப்பு முறையில் கூட மாற்றங்களைக் கொண்டு வரலாம். அதன்வழி சட்டங்களையும் மாற்றலாம். இவையெல்லாம் மக்களுக்குக் கிடைத்த அதிகாரம். இதற்கு பெயர்தான் சனநாயகம்.
இப்படி எதையும் செய்யும் ஆற்றலை மக்கள் பெற்றனர். இந்த ஆற்றலை கொண்டு அரசாங்கத்தை அமைத்து அதன் வழி நாட்டை செம்மை படுத்தி அதில் வாழும் மக்களுக்கு நாட்டின் தரதிற்கு ஏற்ற வாழ்க்கையும் வாழ்வாதாரமும் கிடைக்கும் சூழ்நிலையை உருவாக்கி இருக்க வேண்டும்.
அதுதான் மக்களின் உண்மையான விடுதலைக்கான அடையாளம் ஆகும்.
ஆனால், இனவாதமும் மதவாதமும் உள்வாக்கப்பட்ட நிலையில், ஓர் ஆதிக்க இனவாத அரசியல் முறையை உருவாக்க நாம் அனைவருமே இணைந்து பங்காற்றியுள்ளோம்.
பல்லின மக்களும் பல்வகை பண்பாடும் கொண்ட நமது நாட்டில் போதுமான வளங்கள் உள்ளன. ஆம், நம் நாடு ஒரு பணக்கார நாடு. இங்கு வறுமை இருந்தால் அது ஒரு மானக்கேடாகும்.
பல நிலைகளில் முன்னேற்றம் கண்டு, இன்று உலகில் வளரும் நாடுகளில் முன்னணி வகிக்கும் மலேசியா தன்னுள்ளே கொண்டுள்ள மோசமான குறைபாடுகளைக் களைய வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது. நீண்ட கால ஆட்சியை நடத்தும் ஒரே கட்சி, தொடர்ந்து நாட்டை குத்தகைக்கு எடுத்துக்கொண்டது போல் அரசாங்க இயந்திரத்தை தன்னுடமையாக்கி தன்னை தற்காத்துகொள்கிறது. இன-மத அடையாளங்கள் வழி பிரிவினைகளை ஆழமாக்கி, சிறுபான்மையினரை இரண்டாம்தர குடிமக்களாக மதிப்பீடு செய்கின்றனர்.
நாம் உருவாக்கிய விடுதலை மலேசியாவில் விடுதலை உணர்வு பெற்ற நாம் இன்று நமது நாட்டை மக்களுக்குகென மீட்டெடுக்கும் தாகத்தில் உள்ளோம்.
இந்த 57 ஆவது சுதந்திர தினம் நமக்கு ஒரு புதிய விழிப்புணர்சியை தூண்டும் நாள். இந்த நாடு நமது நாடு. இதில் பிறந்த நமக்கு வேறு நாடு கிடையாது. நமது நாட்டின் மண்வாசனை நிரம்பிய நமது ஒவ்வொரு சுவாசமும், நமது தேசப்பற்றையும் அதோடு கலந்த தேசப்பொறுப்பையும் உணர்த்தும்.
அந்தப் பொறுப்பு தாகமாகி செயலாக்கம் காணும் போது, விடுதலை அனைத்து மக்களுக்குமானது என்ற பரிணாமத்தை எட்டுகிறது.
எழுச்சி கொண்ட மக்களை எவராலும் தாழ்த்த முடியாது…
MERDEKA MERDEKA MERDEKA ,KA KA KA ..யாருக்கு மெர்டேகா ? யாருக்கு மெர்டேகா ? யாருக்கு மெர்டேகா ? மலாய்காரன் அப்பனுக்கும் மலாய்க்காரன் ஆத்தாளுக்குமா ? இல்ல சீனன் ஆத்தாளுக்கும் சீனன் அப்பனுக்குமா ?
சுதந்திரம் வாங்கி கொடுத்தது மூன்று இனம்தான் ,ஒரு இனம் மட்டும் கிடையாது ,அதுமட்டுமா ,ஒரு நாள் பிரதமராக கூட நம் தமிழர் துன் சம்மந்தன் இருந்திருக்கிறார் ,அப்படி என்றால் தமிழனும் இந்த நாட்டில் பிரதமராக ஆகலாம் ,ஒன்றாவது பிரதமர் ,இரண்டாவது பிரதமர் ,மூன்றாவது பிரதமர் என்று சொல்லுறாங்களே ,ஏன் துன் சம்மந்தன் இரண்டாவது பிரதமர் என்று சொல்லக்கூடாது ???எங்கடா போச்சி உங்க சமத்துவம் ?ஒரு இனத்தை ஒதுக்கி தள்ளும் இந்த நாட்டிலே ,என்ன மெர்டேகா கொண்டாட வேண்டும் ?
கடந்த ஐம்பது வருசமா இன்று வரையிலும் தமிழனுக்கு எந்த வகையிலே சுதந்திரம் கிடைத்து இருக்கிறது ? கேள்வி கேட்டா சம்மந்தன கேளு இல்ல சாமிவேலுவை கேளுன்னு சொல்லுவானுங்க நம் தமிழ் தலைவர்களை இந்த அம்னோ வாயை அடைத்து விட்டானுங்க ,கல்வியிலே தமிழனுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டதா ? பொருளாதாரத்தில் தமிழனுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டதா ? இந்த நாட்டில் தமிழனுக்கு சம பங்கு கிடைத்து விட்டதா ? அப்புறம் என்ன இதுக்குடா சுதந்திரம் கொண்ட்டாடுறேங்க ?சுதந்திரம் யாருக்கு கிடைத்து ? சும்மா உக்கார்ந்துகிட்டு கோடிக்கணக்கில் சீனனிடம் பணம் வாங்கி தின்னுகிட்டு இருக்கிற இந்த …..காரனுக்கும் ,ஒரு வெள்ளி பொருளை நூறு வெள்ளிக்கு விக்கிற ஜிங் ஜாக் போடும் சீனனுக்கும் தான் சுதந்திரம் ! தமிழனுக்கு ? ஊதான் !
மலாயகாரனும் “கெலிங்” என்ற சொல்லை சொல்லி வார்த்தைக்கு அர்த்தம் தெரியாம உளறிகிட்டு இருக்கானுங்க, சீனனும் அதேதான் செய்யுறான் “கேலிங்கா ” என்று சொல்லி ,அது ஒரு தப்பான வார்த்தை என்று அர்த்தம் தெரியாம உளறிகிட்டு இருக்கானுங்க. நம் தமிழர்களும் மெர்டேகா மெர்டேகா என்று கூவிகிட்டு இருக்கானுங்க! தமிழர்களின் நன்றியை மறந்து மெர்டேகா கொண்டாடும் அந்த தினத்தில் தமிழர்களுக்கு ……………. மெர்டேகா என்று குறிப்பிட வேண்டும்.முடிந்தால் நாம் தமிழர்கள் உலகிலேயே தலைசிறந்து விளங்குவதற்கு பாடுபடுவோம் .
1957-க்குப் பின் இங்கே பிறந்த அனைவரும் பூமிபுத்ராக்களே என்று நாமும் எல்லா சலுகைகளையும் இன பேதமின்றி அனுபவிக்கும் நாளே உண்மையான சுதந்திர நாள்…அந்த நாளும் வந்திடாதோ….!
வாயளவில் MERDEKA!! MERDEKAA!!! என்று முழக்கமிட்டால் உண்மை சுதந்திரம் மலர்ந்திடுமா?????
அம்னோவிடம் அடிமையாகி விட்டது மலேசிய இந்தியனின் சுதந்திரம் !
விடுதலை! விடுதலை! விடுதலை! யாருக்கு??
வெள்ளைக் காரன் கொடுத்தான் நமக்கும்!! நடுநிலை அரசு ஆட்சி!! இன்னும்
நடக்கும் தெருவில் நிலம்கேட்டு நிற்கிறோம்!!!
அன்று கூவியதோ ” MERDEKA ” ” MERDEKA ” ” MERDEKA ”
இன்று கூவுவது ” MAUDUITKA ” ” MAUDUITKA ” ” MAUDUITKA ”
நாளை கூவபோவோதோ ” BRIMTADAKA ” ” BRIMTADAKA ” ” BRIMTADAKA ”
மோகனின் ஆதங்கம் புரிகிறது . அவர் நினைப்பது நடக்க முதன்முதலில் தமிழன் உணர்வாலும் செயலாலும் ஒன்றுபட வேண்டும்.
கட்டுரைக்கு வாழ்த்துகள் ,,,நிதர்சனமாம் “வேற்றுமையில் ஒற்றுமை” இந்த ஓடையில் எங்க சார் சுதந்திர மீன் பிடிப்பது ? நமக்கு மோரல் படிச்சி தரான், எனக்கு படிக்கும்போது சொல்லித்தராத பல்லின நாட்டில் பேசப்படாத ,எழுதப்படாத திடீர் அரசியல் இனத்தில் நாடும் இஸ்லாத்தும் அவர்களுடையதாம்.
இத வெச்சி பார்க்கையில் நாட்டில் சுய-தந்திரம் தான் தெரிகிறது. பல நாடுகளை போல அது ஒரு விழா. மனித நேயமும் ஜனநாயகமும் இன்னும் நாகரீகம் பெறவில்லை !உலக சண்டை ஓய்ந்தபாடில்லை!!
உலகத தலைவர்கள் சண்டைகளை நிறுத்த முடியவில்லை. மனித சுதந்திரம் தினம் தினம் சாவுது?
ஒரு முறை என் 17 வயது மகனை வேறோரு சம்ம்பவ்தில் கண்டித்த போது “எனக்கு சுதந்திரேமே இல்லையா ? ” என்று கோபம்கொண்டான்.
21 வயதுக்கு பின் அதைக கேளு என்றேன். இப்போது அவனுக்கு 29வயது இதுவரை என்னிடம் அதை கேக்கவே இல்லை ..29 வயதில் திருமணம் ஒரு ஆண் குழந்தை. நானே கேட்டேன் “17 வயதில் சுதந்திரம் கேட்டாயே ஏன் அதற்குப பிறகு கேற்க வில்லை? என்று , படித்த பட்டதாரிதான் அவனிடமிருந்து பதில் வரவில்லை ! என்னிடமும் நல்ல பதிலும் இல்லை.
உங்கள் கட்டுரையிலும் அதுதான் தெரிகிறது.வாசகர்கள் பொங்குவார்கள். இன்று தன் இன அடுப்பு எரிந்தால் போதும் என்ற போக்கில் இருக்கும் சுயமிகள் மிகுந்த மலேசிய இனபபிரியர்கள் மத்தியில் முதலில் மானுட சுதந்திரம் வேண்டும்.
நம்மை பொறுத்த மட்டில் சமுதாயம் தோற்று போய் இருந்தால் அடுத்த திசை தேடலாம் …. தோற்றுகொண்டே இருந்தால் சுதந்திரம் தொடர் தேடல்தான்.2020 அல்ல 3030 வந்தாலும் உலக விரிசலில் நாம்
சுதந்திர இன வேற்றுமையில் ஒற்றுமையின்றி ,மன சுத்தமின்றி விரிசோடிதான் கிடப்போம்.
மூன்றாம் உலக போரை வரவேற்க விரும்பும் மனிதன் உலக அழிவையும் பேசுகிறான். எந்த இனமும் மதமும் மனித சுதந்திரத்தை பற்றி ஆராயவில்லை. இனத்தால் அழியும் சுதந்திரம் மாறனும்.
ஒவ்வொரு வருடமும் புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதே நம் மெர்டேகா!
உள்ளே உள்ள தூசீ படிந்த ஓட்டை உடைசல்களை பல2வென மினு2க்கும் பட்டுக் கம்பளத்தால் நன்கு மூடி மறைத்து, பார்ப்பவர் பிரமித்து, வியக்கும் வண்ணம் காட்டப்படும் ஒரு வித மாயாசால வித்தையே நமது விடுதலைத் தினக்கொண்டாட்டம். இது அதிகாரம் உள்ள ஆளும் வர்க்கம் ஆண்டுதோறும் செய்வது. தேச பற்றுடைய, சாமானியரான நாம் சுதந்திரதினமான இன்று, எப்பொழுதும்போல், நமது நாட்டின் மேலே தீய கைகளால் செயற்கையாய் சூழவைக்கப்படும் பல்வகை கருமேகங்கங்களின் சேர்க்கையை எண்ணி கலங்குகிறோம். செம்பருத்தி வாசகர்களுக்கு இனிய HARI MERDEKA.
வெள்ளைக்காரன் நம்மை சஞ்சி கூலிகளாக கொண்டு வந்து
நமது இரத்தைத்தை டிராகுலா போல உறிஞ்சி எடுத்து விட்டு
சுகந்திரம் கொடுக்கும் போது நமக்கு எந்த சலுகையையும் கொடுக்க வலியுறுத்தாமல் கொடுத்தது தான் சுகந்திரம் ,
சுகந்திரம் அடைந்த நாட்டில் நாம் இன்னமும் எங்களுக்கு
இத்தனை சதவிகிதம் சலுகை கொடு ,அரசாங்கத்தில் வேலை கொடு என்று அம்னோ விடம் கை ஏந்திக்கொண்டு
இருக்கிறோம் ,சுகந்திரம் கேட்ட போது ஏன் நம் இனத்தின்
சலுகையை துன் வீ .சம்பந்தன் கேட்க வில்லை ,அவர் ஒரு தமிழனாக இருந்தால் கண்டிப்பாக கேட்டு இருப்பார் ,நைனா
கட்டுரையின் தலைப்பு ஒன்றே ஆயிரம் கதைகள் சொல்லும். வெள்ளைக்காரனை நொந்து புண்ணியமில்லை. நமது பிரதிநிகள் சரியில்லை. எனக்கு இன்னும் ஞாபகமுண்டு. 1959ம் ஆண்டு பொதுத்தேர்தல். சுங்கை சிப்புட்டில் வீராசாமி திருஞான சம்பந்தனை எதிர்த்து அப்போதைய எதிர்கட்சியான ம.மு.க.வின் கா,அண்ணாமலை, போட்டியிட்டார். அப்போதெல்லாம் பொதுக்கூட்டங்களுக்கு தடையில்லை. ஒரு கூட்டத்தில் சம்பபந்தன் பேசுகிறார். ” இந்நாட்டில் இந்தியர்களுக்கு என்ன குறைவு. தோட்டப்புரங்கள் அனைத்தும் நமது கட்டுப்பாட்டில்தானே உள்ளது. அரசு வேளைகளில் குறைந்தது 70% இந்தியர்கள்தானே. இந்தியாவில் இருந்து இங்கே பிழைக்க வந்த நாம், இந்தியாவில் வாழ்வதை விட இங்கே வசதியாக வாழவில்லையா? ” என்றார். அவர் சொன்னது அப்போதைக்கு சரியாக இருந்தது. அதற்கு பின் வந்தவர்களெல்லாம் இதையே சொல்லி சொல்லி நம்மை கழுத்தறுத்து விட்டனர். அப்போதெல்லாம் எல்லா அரசு அலுவலகங்களின் பெயர் பலகையில் நம் நாட்டின் நாலு பிரதான மொழிகளும் இருந்தன. ஆனால் இன்று? அன்றிருந்த மொழிச்சுதந்திரம் இன்று இல்லை. யாரை நொந்து கொள்ள?
சார்! இவ்வளவு அருமையாக கருத்துக்களை எடுத்து வைக்கும் தாங்கள், இதற்கு முன் ‘டப்பாங்குத்து’ விஷயங்களையும், மரியாதை குறைவாக சொல்லலங்காரம் …கொச்சைப்படுத்தியும், கருத்துக்களை பகிர்ந்தீர். தற்போதைய இந்தப்பாணியை தொடருங்கள்.
எங்கே அம்னோ அடிவருடி kayee karuthu எழுத காணோம் ?
ஊரான் ஊரான் தோட்டத்திலே ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்காய் காசுக்கு ரெண்டு விக்க சொல்லி காகிதம் போட்டானாம் வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன் பணம் சின்னப்பணம் வேடிக்கை காட்டுதாம் வெள்ளிப்பணம். இது ஏன் பாட்டி எனக்கு சொல்லிகொடுத்த பாட்டு.(இப்பாடல் சுதந்திரத்துக்கு முன்புள்ள பாட்டு,பழைய காலத்தில் உள்ளவர்களுக்கு நன்றாக பரிட்சையமான பாடல்.) இது அன்றைய காலத்து கோட் பாடல் . இதை கொஞ்சம் மாற்றி இனி நாம் கோட் பாடலாக பாடலாக பாடவேண்டியதுதான்.
சிங்கம் நம் பிரதிநிகள் சரியில்லை என்ற கறுத்து சரியே..அதை சரிசெய்ய வேண்டும்..
மலேசியாவில் ஓர் இனத்தவர்கள் முன் மதியுடன் செயல்பட்டுள்ளனர் என்றே சொல்லவேண்டும். நாட்டுக்கு சுதந்திரம் கொடுக்கும்போது, அப்பொழுது இங்கிருந்த அனைத்து இந்தியர் மற்றும் சீனர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்று அமல் படுத்தினர். பிரிட்டிஷ் காரர்களின் கருத்துப்படி குடியுரிமை பெற்ற அனைவரும் எல்லா நிலையிலும் சமம். ஆக எல்லோரும் ஏற்றத்தாழ்வின்றி இருக்கவேண்டும் என்ற என்னத்தலேதான் நமக்கு குடியுரிமை வழங்க நிபந்தனை கொடுக்கப்பட்டது. அது அவர்களின் எண்ணம். இன்றும் அவர்கள் நாட்டில் உள்ள அனைத்து குடியுரிமை பெற்றவகளும் எல்லா நிலையிலும் சமமாகவே சலுகைகளையும் பெர்கின்றனர். அனால் இங்கு அப்படியில்லை. 1956 ஆண்டிலேயே ஒரு மொழி கல்வியை பரிந்துரைத்துள்ளார் நமது முன்னாள் பிரதமர் துன் அப்துல் ரசாக்.(ரசாக் கமிஷேன்). 1969க்கு முன் திறமைக்கு ஏற்ற பதவி, மற்றும் வேலை வாய்ப்புகள். அதனால் அனேக இந்தியர்கள் மேல் அதிகாரிகளாக பதவி வகித்துள்ளனர். ஆனால் அதற்குபின் எல்லாமே மாற்றம் கண்டது. 1969இல் அரசாங்க பணிமனைகளில் காலியாக உள்ள அனைத்து வேலை இடங்களும் பூமிபுத்ராக்களை (மலைகாரர்கள்) கொண்டு நிரப்பப்பட வேண்டுமென்று அன்றைய அரசாங்கம் பகிரங்கமாக பிரகடனபடுத்தி அமல் படுத்தியது.பாருங்கள் அவர்கள் எத்துனை முன் எச்சரிக்கையுடன் செயல்ப்பட்டுள்ளனர். நம்மவர்களுக்கு ஏன் காலத்தை முன் அறிய முடியாமல் போயிற்று. அன்று துன் V .T .சம்பந்தன் கூறியது போல நாம் பிழைக்க வந்த நாடு என்ற எண்ணத்திலேயே இருந்து நமது உரிமையை கேட்காமலேயே மௌனமாக இருந்து இன்று புரையோடி குணப்படுத்தமுடியாமல் தவிக்கிறோம். அன்று நாம் இல்லாமல் நாடு போருளாதாரித்திலும்
சரி கல்வியிலும், மற்றும் நிர்வாகத்திலும் சிறந்து விளங்கியிருக்காது. அன்று வங்கிகளை சீனர்கள் ஆக்கிரமித்து பெர்ம்பாலும் சீனர்களே எல்லா நிலையிலும் இருப்பார்கள். அன்று இன்றுபோல் இயந்திரங்களும் கணினிகளும் கிடையாது. ஆனால் இன்று மனித மூளையே தேவையில்லாத போது அங்கேயும் யார் அதிகமாக வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர்? முன்பு கப்பல் துறைமுகங்களிலும் பெரும்பாலும் உடல் உழைப்பு தேவைப்படும்போது இந்தியர்களே பணி புரிந்தனர். இன்று உடல் உழைப்பே தேவையில்லாத இயந்திர காலத்தில் நம்மவர்களுக்கு வேலை இல்லை. “நாம் பிழைக்க வந்த நாடு” என்ற சிந்தனைகுல்லேயே இருந்து எதையும் கேட்காமலேயே இருக்க நமது மூத்த தலைவர்கள் நம்மை முடக்கிவிட்டனர். இன்று இதுதான் நமக்கு நாடு என்று உணரும்போது அவர்கள் நம்மைவிட எவ்வளவோ முன்னேறிவிட்டார்கள். இனி அவர்களோடு சமமாக போட்டி போட முடியாதெனினும், நாம் எதிர்நீச்சல் போட்டுதான் ஆக வேண்டும். இன்று நாம் எவ்வகையிலும் அவர்களுக்கு தேவையற்றவர்கள் ஆகிவிட்டோம். ஆனால் நமக்கு அவர்கள் தேவையாகிவிட்ட்னர் . காலசக்கரம் சுழன்று நிலைமை எப்படி மாறிவிட்டது பார்த்தீர்களா? நாட்டின் அமைதியை குலைக்காமல் நாம் முயற்சியோடு முன்னேற இறைவன் நமக்கு ஆசீர் வழங்கி வழிநடத்துவாராக.
ஆக, இவ்வளவு மோசமான சூழ்நிலையிலும் இந்தியர்களில் குஜாராத்தியரின் முன்னேற்றத்தில் எந்தத் தடையுமில்லை; பஞ்சாபியர்களின் முன்னேற்றத்திலும் எந்தத் தடையுமில்லை. ஏன்? நமது மலையாளிகளின் முன்னேற்றத்திலும் எந்தத் தடையுமில்லை. அவர்கள் கல்வியிலும், பொருளாதாரத்திலும் முனைப்புக் காட்டுகின்றனர். யாரோ நமக்கு உதவுவார்கள் என்னும் மனப்பான்மையை நாம் வளர்த்துக் கொண்டோம். அது களையைப்பட வேண்டும். நாம் ஒவ்வொருத்தருமே நமது பக்கத்தில் உள்ளவர்களுக்கு உதவும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். வழி தெரியாவதர்களுக்கு வழி காட்டும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். குறைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டுமென்றால் வேறு வழி இல்லை!
“பரிமாணமா” (dimension), “பரிணாமமா” (evolution)? தவறு இருப்பதுபோல் தோன்றுகிறது. நிற்க. ஆட்சியில் உள்ள கட்சி “இன-மத அடையாளங்கள்வழி பிரிவினைகளை ஆழமாக்கி, சிறுபான்மையினரை இரண்டாம்தர குடிமக்களாக மதிப்பீடு செய்கின்றனர்,” எனக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சிக்கல் ஒரு கட்சிக்கு அப்பாற்பட்ட சிக்கலாக நான் பார்க்கிறேன். ஆட்சிக்குப் பாஸோ நீதிக்கட்சியோ, அல்லது அவை அடங்கிய மக்கள் கூட்டணியோ வந்தால்கூட சிக்கல் நீடிக்கும் என்பதே என் கணிப்பு. அனைத்து அரசு இயந்திரந்திரங்களும் அந்த அளவுக்கு இன-மத அடையாளங்களில் மூழ்கிக் கிடப்பது அதற்கு ஒரு காரணம். இதனை மாற்றுவதுபற்றி எந்தக் கட்சியும் பேசுவதாகத் தெரியவில்லை. யார் ஆட்சிக்கு வந்தாலும் நாம் இரண்டாம் தரக் குடிகளாகவே கருதப்படுவோமென நினைக்கிறேன். இத்தகைய ஒரு கட்டமைப்பில் எவ்வாறு நாம் நம்மை (நமது உரிமைகளையும் சலுகைகளையும்) தற்காத்துக்கொள்வதோடு சமூகத் தேவைகளையும் நிறைவுசெய்யப் போகிறோம் என்பதே நம்முன் நிற்கும் சவால். இச்சவாலை வெற்றிகரமாகச் சந்திப்பது ஓரிரு தலைவர்கள் கையில் இல்லை. நாம் அனைவரும் நம் பங்கை ஆற்ற வேண்டும். நம் மக்கள் தேவைகளை நிறைவுசெய்யும் (அரசு சார்ந்த அல்லது சாராத) புதிய அமைப்புகள் பல நமக்குத் தேவைப்படும். அவற்றைச் செம்மையாக வழிநடத்தும் திறன் படைத்தோர் தேவைப்படுவார்கள். அவற்றுக்குத் தேவையான நிதியைத் திறட்டுவதற்குப் புத்தாக்க அணுகுமுறைகளும் தேவைப்படும். உங்கள் சிந்தனைக்கு…
அன்று துன் வி .டி. சம்பந்தன் ஒழிக என்று கோசம் போட்ட
நாம் அவரை நேரில் கண்டபோது அய்யா சாமி என்று நீங்கள்
தான் எங்கள் இனத்தின் தலைவர் என்றோம் .நேற்று டத்தோ
சாமி வேலு ஒழிக ,மக்கள் பணத்தை கொள்ளை யடித்த்வன்
ஒழிக ,அவன் குடும்பம் உருபடாது என்று கோசம்
போட்டோம் ,நேரில் கண்ட போது சாமி வேலு சாதனை தலைவர் என்று பாராட்டினோம் ,இன்று பழனிவேல் ஒழிக
சமுதாயத்திற்கு ஒன்றும் செயாமல் தூங்குகிறார் என்று
கோச மிடுகிறோம் .நேரில் கண்டால் சாமிவேலுவை விட
பழனிவேல் மேல் என்று பாராட்டுகிறோம் ,நம்மை முழுமையாக நம் அரசியல் வாதிகள் தெரிந்து வைத்துள்ளனர் நமது கோசங்கள் எதிர்ப்புக்கள் எல்லாம்
கொஞ்ச காலம் தான் எதையும் சீக்கிரத்தில் மறக்கும்
சமூதாயம் என்று தலைவர் கூறுகிறார் . அதனால் நாம்
என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று ம .இ.க
காரன் நினைக்கிறான் ,மலேசிய தமிழர்கள் நலமாக வாழ
வேண்டும் என்றால் ம இ.கா ஒழிய வேண்டும் என்று நாளை
நாம் கோச மிடாமல் இருக்க ம.இ.கா மாறுமா நைனா .
நலன் கருதுக்கள் மிக நன்றி
ஆசாமி,அடக்கமில்லாதவனுக்கு ஒழுக்கம் வராது,ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்வு வாய்க்காது.வும்னோ போன்று இந்தியாவிலும் எல்லா நாடுகளிலும் தீவிர இனவாத இயக்கம் இயங்கிகொண்டுதான் இருக்கிறது.மெட்ராஸ் என்பது மத்ராசாவாமே அதாவது இஸ்லாம் பூமியாமே,உண்மையா.நீங்கள் அபகரித்துவிட்டீரோ,அதற்கு தான் தமிழ்நாடு என்று புது பெயர் சூட்டினீரோ.பினாங்கை கொடுக்கும் போது வேனாம் என்று ஒதுக்கிவிட்டு இன்று ஒப்பாரி நாடகம்.ரோம்ப நாள் வும்மை கேட்கவேணடும் என்று காத்திருந்தேன்,கடவுள் ஆண் / பெண் வித்யாசம் தேடினீர் கிடைத்ததா.திரந்து பார்துவிடவேண்டியது தானே.சிலர் பிறந்து சாகும் மானுடத்தை கடவுள் சொல்றாங்க அதாவது பெத்தவங்களை அதற்காக அவர்ளின் துணியை தூக்.. பார்க்கபோறீர்,நாராயண நாராயண.
வெள்ளைக்காரன் பணம் சின்னப்பணம் வேடிக்கை காட்டுதாம் வெள்ளிப்பணம். …யர்ருக்கும் அர்த்த்ம் தெரிந்தால் சொல்லுங்கள்…
நாடு 57 சுதந்திர தினத்தை கொண்டாடி முடித்து விட்டது.வருடா வருடம் சுதந்திர தின நாடகம் அரங்கேற்றப்படுகிறது .ஆனால் மலேசியா தமிழர்களின் வாழ்வில் எந்தவித முன்னேட்ட்ரமும் கிடையாது.அரசியல் உரிமை, பொருளாதார உயர்வு, கல்வி, பண்பாடு, என்று எந்த துறையிலும் மாற்றமோ முன்னேற்றமோ கிடையாது.
1954 ஆம் ஆண்டுவரை ம இ கா என்ற கட்சி அம்நோவுடன் இணையாமல் மலேசியா இந்தியர்களின் உரிமைக்காக போராடிவந்தது.அம்னோவின் அன்றைய தலைவரான துங்கு அப்துல் ரஹ்மானிடம் , இந்தியர்களின் உரிமைக்காக ம இ காவின் தலைவரான தேவாசர் எதிர்த்து போராடினர்.காரணம் தேவாசர் ஒரு முத்த வழக்கறிஞர்.ஆனால் துங்குவோ 9 ஆண்டுகள் லண்டனில் சட்டம் படித்த மா மேதை.துங்கு அரச பரம்பரை.இதனால் தேவாசர் இந்தியர்களின் உரிமை நிலை போராடும் நிலைக்கு தள்ளப்பட்டார்.இப்படி பட்ட காலத்தில் தான் ம இ காவில் தலைமைத்துவ போராட்டம் வெடித்தது.பெரும் பணவசதி படைத்த குடும்பத்தில் பிறந்து, செல்வா செழிப்புடன், உல்லாசமாக வளர்ந்தவர் தான் துன் சம்பந்தன்.
தேவாசர் ஒரு வாடா நாட்டான் அவருக்கு எதிராக ஒரு தமிழரை நிறுத்த வேண்டும் அதுவும் பெரும் பண வசதி படைத்தவரை நிறுத்த வேண்டும் என்று முடிவு செய்து கோடிஸ்வர விட்டு பிள்ளையான துன் சம்பந்தனை நிறுத்தி ம இ காவை வட நாட்டாநிடமிருந்து கைபற்றினர் அன்றைய தமிழர்கள்.செல்வா செழிப்பில் வளர்ந்த ஒருவர் எப்படி ஏழை தமிழினத்தின் தேவைகள் தெரியும்? புரியும்?.
அரசியலுக்கு புதியவரான துன் சம்பந்தன் துங்குவின் வழி காட்டுதழலே ம இ காவியும் வழி நடத்தினர்.ஆனால் இவர் காட்டிய தலைதுவம் தான் தமிழர்களின் வீழ்ச்சிக்கும், ம இ காவின் அடிமை சிந்தனைக்கும் வழி வகுத்து விட்டது.துங்கு விக்கு துன் சம்பந்தன் YES MAN இருந்தார் அம்நோவிட்கும் அடிமையானார்.இந்திய சமுதாயத்தின் உரிமைக்க போராடியதாக எந்த குறிப்புகளும் கிடையாது.
1956 ஆம் ஆண்டு RISDA தொடங்காப் பட்டது..துன் அப்துல் ரசாக் இதக்கு தலைமை ஏற்று நடத்துகிறார். மலாய் காரர்களுக்கு தலா 10 ஏக்கர் நிலபரப்பில் ரப்பர் மாற கன்றுகளை நட்டு இலவசமாக வழங்கு கிறது அன்றைய கூட்டணி அரசு.யாருக்கு இந்த திடத்தில் முதலிடம் கொடுத்திருக்க வேண்டும் ?.இந்த நாட்டில் கடந்த 100 ஆண்டுகளாக ரப்பர் மரத்தை நட்டு பேணி காத்து, பின்னர் மரம் வளர்ந்த பிறகு மரம் சீவி பால் எடுத்து முறையாக சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்தவர்கள் மலேசியா தமிழர்கள்.ஆனால் RISDA திட்டத்தில் யாருக்கு இந்த வாய்ப்புகள் அள்ளி-அள்ளி கொடுக்கப் பட்டது தெரியுமா பெரும் நிலங்களுக்கு சொந்தக்காரர்களான மலாய் காரர்களுக்கு கொடுக்கப்பட்டது.எங்களுக்கும் கொடுக்க வேண்டும்.இந்த திடத்தில் நன்கு அனுபவம், திறம் பெற்றவர்கள் தமிழர்கள் ஆகவே இந்த திட்டத்தில் தமிழர்களுக்கு வாய்ப்பு அளியுங்கள என்று அன்றே ம இ கா போராட வில்லை.ஒரு அமைச்சராக இருந்த துன் எந்த உரிமைகளை இந்த kooddani அரசிடமிருந்த போராடி பெற்றார்.இந்த துன் சம்பந்தன்.ஊமை துறையாக அம்நோவிடம் 19 ஆண்டுகள் மண்டி இட்டு கை ஏந்தி யாசகம் பெற்று ம இ காவை வழி நடத்தினார்.தோட்டத்தில் உள்ள ஏழை தமிழரிடம் 10 , 10 வெள்ளியாக வசூல் செய்து தோட்டங்களை வங்கி கூட்டுறவு கலகத்திக்கு சொந்தமாக்கினார்.ஆனால் நாட்டு சொத்தை 10, 10 ஏக்கர் ரப்பர் மரங்களை நட்டு இலவசமாக மலாய் காரர்களுக்கு கொடுத்து மலாய் இனத்தை கொடிச்வரனாகினார் துன் அப்துல் ரசாக்.இந்தியகளின் உரிமைக்காக அன்றே கொட்டைவிட்டவர் தான் இன்று நாடு போட்டரும் இந்த துன் சம்பந்தன்.அவருக்கு பின் ம இ கா வின் தலைவராக வந்தவர் தன் ஸ்ரீ மாணிக்கவாசகம்.ஐவரும் துன் சம்பந்தன் காட்டிய வழியில் அம்நோவிக்கு YES MAN நாக வழி நடத்தினார்.இவரது பாதையில் பினர் 30 ஆண்டுகள் தலைவராக இருந்தவர் தான் டத்தோ ஸ்ரீ சம்ய்வேலூ.இவரும் அம்நோவிட்கு அடிமையாக இருந்து வழி நடத்தினார்.அன்றே அடிமை சாசனம் எழுதி வைத்து நம்மை அம்நோவிட்கு அடிமையாக்கிய மா பெரும் சேவை துன் சம்பந்தனுகே சேரும்……………. இந்த அம்னோ பிடியிலிருந்து என்று விடுதலை அடைகிறோமோ அன்று தான் மலேசியா இந்தியர்களுக்கு முழுமையான சுதந்திரம் கிடைக்கும்.