கோயம்புத்தூர் உதயகுமார் மலையாளிபோல ! இப்போது உனக்கு நேராகவே எழுதுகிறேன்..!
திராவிடம் என்பதை தெலுங்கர் ,மலையாளி ,கன்னடர் என்பதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். தமிழனுக்கு தமிழன் என்ற பெயர் அதையும் தாண்டி ஆதித்தமிழன் என்ற லுமேரிய ,குமரிகண்டம் கால தமிழனுக்கு திரவியன், திரவிடன், திராவிடன் என்ற வட பொருளற்ற பேர் தேவை இல்லை. நீர் மேற்சுமத்திய அனைத்தும் கற்பனை. தமிழ் மொழியியல் வல்லமையில் ஏய்க்கும் இந்த திராவிட குணம்தான் இன்று தமிழன் ஏமாந்து போகக காரணம். எங்கள் தமிழ் மொழியில் எங்களை அடிமையாக்கிய அயோக்கியர்கள்தான் திராவிடர்கள்.
இப்படி தமிழர்களை முட்டாளாக்கியா உங்கள வந்தேறிகள் தனம் எங்களுக்கு இதுவரை எதையும் கொடுக்கவில்லை ஆனால் அலிபாபா மாயையில் இன்றும் திருடியதுதான் அதிகம்.
தமிழ் நாட்டின் வந்தேறிகள் என் பாசையில் கையேந்தி இதரவர்கள் திராவிடம் என்ற மனோவியல் மதிப்பில் தமிழர்களை ஏமாற்றி தமிழ் நாட்டின் ஆட்சி ஆதிக்கத்தில் அதிகாரத்தில் அரசு பணிகளை மண்ணையும் பொருளாதாரத்தையும் கல்வி பெருந்தொழில்களையும் தமிழர்கள் போர்வையில் கைப்பற்றி ஏறியவர்கள்.
தமிழர் நீதிக்கட்சியை திராவிடர் கட்சியாக மாற்ற நடந்த சதி எல்லாம் இங்கு எழுதி தீராது….பெரியார் சிந்தனை தொகுதி -2 இயக்கங்கள் -1 பக்கம் 899 குடியரசு 29/01/1944 உரையில் பெரியார் திராவிடம் பார்பனர் எதிர்ப்பு என்று எங்கும் குறிப்பிடவில்லை . மாறாக தமிழர் என்றால் உங்கள் இதரவர்கள் ஏற்ற்றுகொள்ள மாட்டார்கள் என்று திராவிட சமுதாயம் என்று தமிழர் நாட்டில் வைக்க வேண்டிய அவசியமென்ன?
தமிழன் முந்தியா திராவிடன் முந்தியா? உன் திராவிடனுக்கு என்ன தாய் மொழி ? நீயும் உன் பெரியாரும் பேசியது எங்கள் தமிழ் தானே !?
அப்போது பேசியது திராவிட நாடு என்று சென்னை மாகாணம் மட்டுமே ! ஏன்? அதில் ஐதராபாத் நிசாம் ,மைசூர் சமாதானம்,திருவாங்கூர் கொச்சி சமாதானம் இல்லை ,அப்பாடியானால் திராவிட நாடு என்று கேட்ட முழு தமிழ் பகுதியும் ,சிறு தெலுங்கு பகுதியும் ,சிறு கனடா பகுதியும், சிறு மலையாலபகுதியும் இருந்தது. தமிழின முழுதாயகத்தை இழந்து சிறு பகுதிகளை கொண்டிருந்த தெலுங்கு, கனடா, மலையாளிகளுக்கு தமிழன் என்ற இனத்தின் பெயரையும் தமிழ்நாடு என்ற மாநில பெயரையும் இழக்க நேர்ந்தது என்ன அநியாயம்?
தொன்மையான் தமிழர்களுக்கு திராவிடன் என்ற கலப்பு இன கலப்பு மாநிலம் இழி நிலை ஏற்பட எங்கள் மரபணுவில் கை வைத்த இவனை மன்னிக்க முடியாது.
திராவிட குழுமத்தால் இதரவர்கள் பயன் அடைத்தது போல மண் உரிமைமிகு தமிழன் உறவுகளுக்கு இன்று வரை போராட்டமாகவே உள்ளது?
ஆம்,,, திராவிட இன வாதம் என்பது தமிழன் மீது இழியவன் நடத்திய திட்டமிட்ட பாசிச இனவாதமே ! பார்ப்பான் ஆதிக்காதை ஒழிக்கிறேன் என்று வடுகர்கள் தமிழனின் தோளில் ஏறியதற்கு முழு காரணம் அந்த ஈனபுததிகாரனின் ஆக்க்ரமிம்பு அறிவிலி கொடூரம்தான் காரணம்.
திராவிடம் என்பது பிற மொழி காரர்கள் ஆதிக்கம் தமிழர்கள் மீதும் தமிழர்களின் இறை நம்பிக்கை மீதும் கை வைத்தால் தமிழர்களை வீழ்த்தலாம் என்பது “ஈஇன்” அடிப்படை அரசியல் தனம். ஆனால் அரசியல் வேண்டாம் அவன் சார்ந்த குள்ள நரிகள் கூட்டத்தை அதில் இணைத்து இன்று வரை திராவிடம் பிறரின் அரசியல் அமைப்பு என்பதை நாங்கள் உணர்ந்து உள்ளோம். திராவிட வீரமணியின் சொத்து தமிழர்களின் உப்பு.
ஆம்,, தமிழர்கள் திராவிட குழப்பக்காரன் குழுமத்தில் இருந்து என்றோ வெளி ஏறி விட்டான். ஆனால் இன்னும் தப்பி ஒட்டிக்கொண்ட மரபணு
பாசத்தில் இன்றும் சில வேமானி தலைகள் உளறிக்கொண்டு உள்ளார்கள்.
திராவிடம் மரபினமல்ல ,மொழியினமல்ல ,பண்பாட்டு இனமல்ல , நாகரீக மடதனத்தில் சமையத்தை மறுத்து பார்பனை எதிர்ப்பில் எங்களை ஏமாற்றிய கள்ளன். மனிதன் செய்த நாத்திகம் இன்னும் வெல்ல வில்லை அதற்கு அந்த ஆன்மீகமும் ( சக்தி ) ,ஆண்மையும் இல்லை!
திராவிடத்தால் வடுகர் அரசியல் ஆதிக்கம் எங்கள் தமிழ் மண்ணில் தற்காலிக தளமிட்டுள்ளது…..தமிழர்களாகிய நாம் தமிழர் , தமிழர் தேசியம் போன்ற முன் எடுப்புகள் இன்று தமிழ் சொந்தங்களாக 2016ல் திரள்வோம்.
எங்கள் பகைவன் திராவிடன் இன்று மறைவான் தமிழினத்தை எழிச்சி யுர செய்வோம். உலக அரசியல் அரங்கில் தம் தேசிய இனமே தங்கள் தாய்மொழி இனமே தம் நாட்டை முகமாக கொண்டுள்ளது.அதுபோல 10 கோடி தமிழர்கள் வெளியாகும் நாள் தூரமில்லை. 1920 தமிழனுக்கும் 2020 தமிழனக்கும் உள்ள மரபணு உணர்வை நீ விரைவில் அறிவாய்.
திரவிடன் என்ற கால் விலங்கும் இந்தியன் என்ற கை விலங்கும் உடைபடும் நாளும் வந்துகொண்டு உள்ளது.
மொழி வழி தேசிய நாடுகள் வரிசையில் தமிழ் ஈழமும் தமிழர் நாடும் மலரும் . வானும் மண்ணும் கடல் பரப்பும் அவர் அவர் ஆட்சி அதிகாத்தில் வரும். மொழி வழி தேசியங்கள் உலகம் முழுதும் வளர்ந்து
திராவிடம் மண்ணை கௌவும். கணக்கில் வைத்துக்கொள்.தமிழர் நாடு குடியரசை படிக்க படைக்க அணி சேருவோம் அப்போது நீ சொன்ன இழி நிலை திருப்பி அடிக்க வேண்டாம் என்று இந்த தமிழன் வேண்டுவோம். காரணம் மானுட உலகில் மனிதன் மட்டும் மனிதானாக நல்ல தமிழனாக பேர் எடுக்க ஆசைப்படுகிறோம்.
-பொன் ரங்கன்
இயக்குனர் ,உலகத் தமிழர் பாதுகாப்பு மையம்
உ.தலைவர் நாம் தமிழர் மலேசியா
பொன் ரங்கரே… வாதத்தை முன்வையும். அதைவிடுத்து வயதுக்கு மீறிய பேச்சு வேண்டாம். உதயகுமார் என்ன இனத்தான் என்பது இங்கே முக்கியமல்ல. உதயகுமாரின் வாதம் என்ன என்பதைப் பற்றி பேசும். மனம்போன போக்கிலெல்லாம் உங்கள் யூகத்திற்கு வாதத்தை முன் வைக்காதீர்கள்.
மலையாளத்திற்கு கேரளத்தமிழ் எனும் பெயர் இருப்பது தெரியுமா? கிரந்த எழுத்துகள் தென்னகத்தில் பயன்படுத்திய காலத்தில் மலையாள மொழிக்கு எழுத்துவடிவம் மாறிப்போனது தெரியுமா? இப்படி இருக்க கலை ,கலாச்சாரத்தில் அப்படியே இன்னும் சேரத்தமிழனாக வாழும் மலையாளியை தமிழன் என்று ஏற்கமாட்டேன் என்று சொல்லும் அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவன் யார்? சிலப்பதிகாரம்,பதிற்றுப்பத்தும், இன்னும் புறநானூற்றில் பல பாடல்களும் சேரநாட்டுத் தமிழ் என்பதை உம்மால் மறுக்க இயலுமா? அடாவடியாக மறுத்தால் உம்மோடு எப்படி வாதிடுவது. வாதிக் நான் தயார். ஆனால் ஆதாரமின்றி, கட்டுரை இலக்கணமின்றி , வாக்கிய ஒழுங்கின்றி வரும் பதிவிற்கு எப்படி புரிந்து பதில் எழுதுவது?
ஐயா தமிழன் ! நான் உம் போன்ற பழமைக்கு போக விரும்ப வில்லை. என் கட்டுரை கோயம்புத்தூர் உதய குமார் எழுதிய காலங் கடந்த பெரியாரின் வரலாறு , இதுபோலா விசாரிகாமல உள்ளே உட்ட வினைதான் இன்று தமிழர்கள் அனுபவிக்கும் அரசியல் பரிதாபம். அது முக்கியமில்லை என்றால் இங்கு எனக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.அது அவருக்கு தந்த கேள்விககணைகள். அதை அவரின் படிவத்தை நீங்கள் படித்து விட்டு என் மீது வரலாம்.
தென்னகம் என்பது முன்பு அந்த கேராளாவும் சேர்ந்து தமிழக மாநிலம் என்பது உங்களுக்கு தெரியாதா?
இங்கு எழுத்து இலக்கண கதை வேண்டாம் அது ஒரு பரிணாமம்.கலாச்சாரம் நாகரீகம் எல்லாம் தமிழர்கள் சொத்து என்று சொல்ல வரேன். அவர்களுக்கு என்று தனியாக இருந்தால் பகிரவும் தெரிந்துக்கொள்கிறேன்.
இன்று உலகத் தமிழனுக்கு மலையாளிகள் தாம் ஆப்பு அடிக்கிறார்கள் என்ற உண்மை ஏன் உங்கள் தமிழன் தரத்துக்கு எட்ட வில்லை? ஏன் உரிமை பேச்சில் கை வைக்க எந்த தமிழ் துரோகிக்கும் வக்கில்லை ! வட இதிகாசங்களை தமிழில் காட்டி இந்த தமிழனை தீபாவளி கொண்டாட வெச்ச வேடிக்கை என்ன? திராவிடன் இலக்கியம் இதுவரை தமிழனை அமுக்கி ஆண்டது போதும். இலக்கிய பழமையை தத்துவங்களை பேசி நாங்கள் இழந்து தொலைதன்தது போதும்.
தமிழர் விடியல் என்பது தமிழர் தனி நாடு அது இனம் சார்ந்த விசியம் மொழி சாந்த தமிழ் நாடு அல்ல ! எனக்கு மொழி இலக்கணம் எழுத தெரியாது காரணம் நான் மொழியில் PHD வைத்துக்கொண்டு அடுப்பு ஊதும் சாம்பல் அல்ல!
1000 ஆண்டுகளை கடந்தும் எங்கள் தமிழனிடம் இலக்கியம் பேசியே தமிழனுக்கு ஒரு தனி நாடு இல்லை. ஊடக ஒளியில் /ஒலியில் முன்னுக்க் வேடிக்கை பாக்கச்சொல்லி தமிழர்களை கேளிக்கை கூட்டமாய் பின்னால் குத்தி வரும் திராவிட துரோகிகளை நீங்கள் ஏன் இந்த வயதிலும் உணர முடியாத ஊனம்?
இன்று உங்கள் பாசையில் தமிழ் நாடு வைரமுத்துவின் இலக்கிய கற்பனைக்கு US 10,000.00 தரும் அந்த குப்பை கதையை பாருங்கள் இந்த தமிழ் இனம் எங்கு அழிக்கப்படுவது புரியும்.
இன்று மக்களுக்கு உள்ள மொழி அறிவியல் போதுமானது. எந்த இலகியவாதிய்ன் (வதியின்)எழுத்தில் பிழை இல்லை என்று சொல்லுங்கள் நான் உங்களிடம் வாதிட தயார்? கிரந்த எழுத்துக்கள் இல்லாமல் தமிழ் எழுத முடியாது ,என்ற உங்கள் ஊமைத்தனம் ஒன்றே போதுமே தங்கள் தமிழ் இலக்கிய சமத்து?
ஆமாம் அது என்ன என் பெயரில் பொன் ரங்கரே ? ஒரு காலத்தில் திரவிடத்தில் கொடுந் தமிழ், திசை மொழி என்பர் கிளை மொழி அது திரிந்த காலம் கி மு 1500 .இன்னதுதான் மொழி என்று தமிழில் வரையறை இல்லையாம்.
பொது உடமை கருத்தியலில் மொழியை பற்றிய வந்தேறிகள் கருத்துகளே நம்மை ஆட்கொண்டன. நான் என்ன தமிழ் இலக்கிய் பரிட்சையா எழுதப்போறேன் இலக்கண செம்மைக்கு. தெரிந்தவர்கள் எழுதுங்கள். ஆனால் ஒருவரின் பெயரில் கை வைக்கும் உரிமை உங்களுக்கு இல்லை என்ற அடிப்படை இலக்கிய ,இலக்கண ஒழுங்கை
நான் சொல்லித்தான் ஆகா வேண்டும்.
எண்ணத்தின் உடனடி மெய்மையே மொழி ..நான் காரமாக எழுதினாலும் அதில் பொறுப்பு உண்டு. உங்கள் மேல் மொழி மரியாதை உண்டு.காரணம் நான் தமிழன். இனிய நினைவில் வணக்கம் .
நன்றி தன்மான தமிழன் …நல்ல தேடல் ,,வாழ்த்துகள் .தமிழன் பார்க்கட்டும் .பிறகு எழுதுவார் காத்திருப்போம். உலகத தமிழர்கள் பார்க்க வேண்டிய படச்சுருள்.
பொன் ரங்கன் அவர்களுக்கு, தங்கள் தலையங்கத்தின் தொடக்க வரிகள் ,தங்கள் வாதத்தின் இயலாமையைக் கட்டுகிறது ,[ உதயக்குமார் ] என்பவன் தமிழனா ,.இல்லை மலையாளியா , இல்லை தெலுங்கனா ,இல்லை கன்னடத்தனா ,இல்லை இந்துவா ,காலம் சொல்லட்டும் ,தந்தைப் பெரியார் என்ற வயிரம் திட்ட, திட்ட ,தீட்ட தீட்ட ,ஒளிர்ந்து கொண்டே இருக்கும் இதில் எங்களுக்கு எந்தவித ஐயப்பாடுமில்லை ,தாங்கள் எழுதிய அழகு தமிழ் எழுத்தை நலினமாக மாற்றித் தந்தவர் தந்தை பெரியார் ,தாங்கள் எழுதிய எழுத்திலும் தந்தை பெரியார் இருக்கிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும் , அண்ணா, இந்தியாவின் மாநிலத்திலேயே தமிழ் நாடு என்ற பெயரை அரியாசனம் ஏற்றி வைத்தவர் , [ பிரபாகரன் என்ற மறவ சரித்திரத்தை ] திவ்விய முக்கோடியில் ,நீ எக்கோடியில் இருந்தாலும் திக்கெங்கும் தித்தித்து ஒலிக்கிறது பார் உம் இதயம் சுமந்த [ தமிழ் ஈழம் ] என்ற ஆதிச்சொல் இந்த வரிகளுக்கு சொந்தக்காரன் நான் , ஒன்றுபடு தமிழா ,ஒன்றுபடு தமிழா , நாம் வென்றெடுக்கும் காலமிது , ஒன்றுபடு தமிழா, ஒன்றுபடு தமிழா ,நாம் வேறுபட்டு நிற்பதினால் ,படமெடுத்து காசு பன்னப்பார்க்கிறான் ,பணம் காசு பன்னப்பார்க்கிறான் , இந்த வரிகளுக்கு சொந்தக்காரன் நான் , தமிழன் நிலையறியாமலும் ,தமிழ் நாட்டின் நிலையறியாமலும் , சாதகமென்று நினைத்து சாசகம் படைத்தால் ,நான் பொறுப்பல்ல, பத்துக்கோடி தமிழன் பெருமை படுகிறோமே கேளுங்கள் , ஈழத்தில் மரண ஓலங்கள் கேட்டபொழுது , எத்தனை தமிழன் வீதிக்கு வந்து போராடினான், எங்கே போயிற்று இனஉணர்வு , கருத்துபடம் எடுத்தவர் ஜெயலலிதா அவர்களை ஏன் கருத்தில் சேர்க்கவில்லை பாசமா இல்லை பயமா , செல்லும் பாதையில் தொய்வு ஏற்ப்படும் என்ற காரணத்தினால் சில வாதங்களை தவிர்க்கிறேன் , நான் கேட்பது இதுதான் , தந்தை பெரியார் அவர்களையும் ,அண்ணா அவர்களையும் , எம் ஜி ஆர் அவர்களையும் ,இவர்கள் கண்ட திராவிடத்தை எதிர்ப்பது உண்மை என்றால் ,நாம் தமிழர் கட்சி நிறுவனர் சீமான் அவர்களை, தமிழகத்தின் வீதிகளில் பேசச் சொல்லுங்கள், பத்திரிக்கைகளில் செய்தியை தரச்சொலுங்கள் ,பொன் ரங்கன் அவர்களே ,தமிழன் மரபனுவைப் பற்றி பேசி 2016 ,2020 , எடுத்துக் கொள்ளுங்கள் ,நாம் தமிழர் கட்சி சீமான் அவர்கள் கட்சி தமிழக ,தேர்தலில் தனியே நின்று பத்து சதவித சீட்டை பிடிக்கச் சொல்லுங்கள் , பிறகு பேசுவோம் திராவிடத்தைப்பற்றி . தமிழ் ஈழப்பாதைக்கு ஆதரவு தேடும் காலமிது இணைவுக்கரம் எங்கெல்லாம் இணைகின்றதோ இணைவோம் , இணைப்போம் [ மலரட்டும் தமிழ் ஈழம் ] .
ஏம்பா, இவ்வளவு கஷ்டம். உதயகுமார் ஒரு இலங்கைத் தமிழர். அவர் எழுத்துக்களைப் படித்தவர்களுக்கு இது புரியும்.
தமிழ், தமிழர் என்று நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தே பாடுகின்றோம். ஆனால் அவரவர் வழி வெவ்வேறு என்பதனால் நம்மிடையே சமரசம் செய்து கொள்வது நன்று. இல்லையேல் மாற்றான் நம்மைப் பார்த்து சிரிக்கும் நிலைக்கு செல்வோம். இது தேவையல்ல என்பது என் கருத்து.
தேனீக்கும் உதயகுமாருக்கும் மற்றும் உணர்வுள்ள உண்மை தமிழனுக்கும் நன்றி. தரமற்றவர்களின் படையெடுப்பு இப்பகுதியையும் அதிகமாக முந்தைய பகுதியையும் அசிங்கமாக்குவதைக் கண்டு இவர்களுக்கு பதில் எழுதுவது புத்திசாளித்தனமல்ல எனும் முடிவுக்கு வந்துவிட்டேன். தங்களின் கருத்தையும் மனதில் கொள்கிறேன். தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பது தமிழினத்திற்கும் பொருந்தும். இதை தமிழர்கள் புரிந்துகொள்ளும் காலம் வந்தும் அதை உணராது பிறர்மேல் பலிபோடும் எஸ்கேபிசத்தில் இருக்கின்றனர். எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு – குறள்110. எனும் குறளை உண்மையிலேயே தமிழர்கள் மனதில் வைக்கவேண்டும். பெரியாரும் அண்ணாவும் தமிழனுக்குச் செய்ததை துரோகமாகப் படம்பிடித்துக் காட்டி இப்போது மனங்களிப்பவர்களுக்கு நாளோன்று வரும். அப்போது இந்தக் கருத்துப் பிழைகளின் வழிகாட்டுதலில் பின் சென்றோர் உய்வின்றி தவிப்பர். செய்நன்றி மறப்பது,மறக்க வழிகாட்டுவதற்கான தண்டனையை அனுபவிப்பர். ( குறிப்பு:- பேரறிஞர் அண்ணாவையும் தந்தை பெரியாரையும் ஏதோ பெரிய தர்க்கம் செய்து நான் முட்டாள்தனமாக் காப்பாற்ற முயற்சிப்பதாக இங்கு சிலர் நினைக்கின்றனர். அவர்களைக் காப்பாற்ற அற்பனாகிய நான் தேவையில்லை. அவர்களின் உண்மைத் தொண்டே அவர்கள் இருவரின் புகழைக் காத்து நிற்கும் காலங்கள் உள்ள அளவும்) நன்றி. முற்றிலுமாக விடைபெறுகிறேன்!
இன உணர்ச்சி என்ற பேரில் மூளைக்கு வேலை கொடுக்காத நபர் பொன்ரங்கன் என்பது நன்கு தெரிகிறது. நாம் வாழும் நாட்டில் மலாய் காரன் அல்லாதவன் திமிர் பிடித்து அலைகிறான் என்று சொல்கிறான் ஒரு அமைச்சன். அவன் திராவிடனா தனித்தமிழ்னா என்று பார்க்க மாட்டான். அவனை பொருத்த மட்டில் எல்லாம் கில்லிங்தான் எல்லாம் பறையாதான். அவனிடம் காட்டுங்களேன் உங்கள் வீர முழக்கத்தை. நாளைக்கு இந்நாட்டில் வாழும் இந்திய வம்சாவளியின் நிலை அல்லாடிக் கொண்டு இருக்கும் போது தமிழ் நாட்டில் ஒரு கருத்துக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் ஏன். அதிலும் தனி ஒரு நபருக்கு எழுதும் கடித்தை நேராக அவருக்கே எழுதாமல் பொதுவில் வைக்க வேண்டிய தேவை என்ன? நான் பெரிய தமிழ் இன ‘புடுங்கி’ என்று பறைசாற்றவா? உங்களைப் போன்றவர்களின் எழுத்து உத்தியும் வெட்டிச் சவால் விடும் குடுட்டுத்தனமும் தமிழக மேடிகளில் நீங்கள் எதிர்க்கும் ‘திராவிட’ அரசியல் வாதிகளிடம் இருந்து வந்தது என்பதை முதலில் உணருங்கள். தமிழ் இனம் என்று மார் தட்ட்டும் நீர் கொஞ்சம் தமிழ் இன மாண்புடன் எழுதவும் பேசவும் பழகிக் கொள்வது நல்லது. மலேசிய தமிழனின் நிலையை மாற்றி அமைக்க ஒரு துப்பும் அற்ற உங்கள் செயல் கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போன கதைதான். 2020 தில் நீங்கள் தமிழ் குடியரசை அமைப்பது இருக்கட்டும்… இங்கு உங்கள் பிள்ளைகளுக்கு சம்பாதிக்க ஒரு வழி இருக்குமா என்று யோசியுங்கள்.
http://www.youtube.com/watch?v=R4x-j2flSRs
காய்த்த மரம் கல்லடிபடும் என்பது பழமொழி. அதற்காக பெரியார், அண்ணாவைப் பற்றிய பெருமைகளைச் சொல்வதில் தப்பில்லை தமிழனே. அவர்களை அறியாத சிறுசுகள் தூற்றுவதைக் கண்டு வருந்தி விலகுவதால், அறிவுடையோர்களை செம்பருத்தி இணையம் இழக்கும். நானும் தங்களைப் போலவே நினைப்பதுண்டு. ஆனால் செம்பருத்தி பல வேளைகளில் நமது நியாயமான, அறிவுப் பூர்வமான, சமுதாயத்திற்கு தேவையான கருத்துக்களை முன்வைப்பதற்கு வழி வகுத்துள்ளது. ஆகையால் சிறுசுகளைக் கண்டு பெருசுகள் விலகினால் அங்கே அனுபவ அறிவுக்கு குறைவு ஏற்படும். தேவை ஏற்படுமின் கருத்துக்களைத் தொடர்வோம்.
பெயரில்லாதவரின் கருத்துக்கு நன்றி.
தன்மானத் தமிழா, திராவிடமா, தமிலியாமா எனும் கவிதை கேட்பதற்கு நன்றாக இருந்தது. திரிபு அடைந்த இந்நாளிய திராவிட தலைகள் செய்த தவற்றால், முன்னாளில் அதனால் பெற்ற நன்மைகள் மறைந்தன.
பெரியார் இல்லாவிட்டால்? என்ற லியோனின் கருத்தும் இனிமையாக இருந்தது திராவிடரே.
பொன்ரங்கன் போன்ற நுனிப்புல் மேய்பவர்கள் பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் தற்போதைய தமிழ் தேசியத்தின் எதிரிகள் என்ற மாயையை உருவாக்கி பெயர் தேட முயல்கிறார்கள். ஆனால், வரலாற்றை நன்கு கவனித்தால், இன்றைய தமிழ் தேசியவாதிகளின் உணர்வும் சிந்தனையும் அன்று திராவிட இயக்க பேரெழுச்சியின் நீட்சி என்பதை அறிந்து கொள்ள முடியும். திராவிட இயக்க சிந்தனை தோன்றி இருக்காவிட்டால் இன்றைய தமிழ் தேசியம் என்னும் இயக்கம் தோன்ற வாய்ப்பிருந்திருக்காது. பெரியார் தமிழனின் அடிப்படை தன்மான உணர்வை தூண்டிவிட்டவர் என்பதை யாராவது மறுத்தால் அவர் வரலாறு அறியாதவராக இருக்க வேண்டும் அல்லது நன்றி உணர்ச்சி அற்றவராக இருக்க வேண்டும். பெரியார் ஒரு கலகக்காரராகவே வாழ்ந்து மடிந்தவர். பிராமன ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் முக்கிய நோக்கத்தில் அவர் பிராமன சார்பு மொழி, கலை, மதம் தத்துவம் என எல்லா கூறுகளையும் கேள்விக்கு உட்படுத்தினார். அவர் பேசிய பேச்சிலும் எழுதிய கருத்திலும் ஒன்றில் பத்து கூட இன்றய அரசியல் சமூக சூழலில் பேச முடியாது. தமிழ் தேசியவாதிகள் அவரின் செயலூக்கத்தில் தூசி அளிவு கூட இன்னும் முன்னேற வில்லை. அன்றைய சூழல் அப்படி இருந்தது. அன்றைய தமிழனுக்கு பெரியார் கட்டாயம் தேவைபட்டார். அவர்கள் அன்று தெலுங்கன் மலையாளி கன்னடனால் பாதிப்புற்றதை விட மதப்பற்று கொண்ட மேல் சாதி தமிழனால்தான் வஞ்சிக்கப்பட்டான். அன்று தமிழனில் பெரும் பிரிவு தமிழன் மிருகத்திலும் கீழாக வழிநத்தப்பட்ட சூழலை எந்த எதிர்வினையும் இன்றி ஏற்றுக் கொண்ட மேட்டுக்குடியினரின் பெரும் பகுதி இன்று தமிழ் தேசியம் என்னும் பெயரில் பெரியாரை தாக்குவதை காணமுடிகிறது. எல்லா ஆளுமைகளுமே விமர்சனத்திர்குறியவர்கள்தான். காந்தி முதல் ஹிட்லர் வரை எல்லாருமே விமர்சனத்திற்கு உட்பட்டவர்கள்தான். மகாத்மா என்று ஒரு சாரார் புகழும் காந்தியை பெண்பித்தன் என்று கூறுவோரும் உண்டு. ஆகவே பெரியார் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல. ஆனால் அதற்கு போதுமான வாசிப்போ அனுபவமோ வேண்டும். மரம் இன்று சுவையான பழம் தருகிறது என்று வேரை இழிவுபடுத்துவதை விட மடத்தனம் இருக்க முடியாது. பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் பகைத்துக் கொண்டு தமிழர் நலம் பேசுகிறோம் என்பது வெறும் பசப்புதான்.
மலையாளிகள் தங்கள் தமிழர் வழிவந்தவர்கள் என்றோ …மலையாளம் தமிழில் இருந்து வந்தது என்றோ Oத்து கொள்வதில்லை .மலையாளமும் செம்மொழி அந்தஸ்து பெற்று விட்டது ..அவர்கள் பிழைக்க தெரிந்தவர்கள் ..இந்திய அமைச்சு அலுவலகங்களில் 39 நிரந்தர செயலாளர்கள் மலையாளிகள் ..வெளிநாடு சேவையிலும் அவர்களே அதிகம் ..மத்திய கிழக்கு நாடுகில் உள்ள 9 billionaires களில் இருவr மலையாளிகள் ..தங்க தமிழன் எல்லோரும் அரபு நாடுகில் அழுக்கு அள்ளுகின்ரர்கள்
பெரியாரை விமர்சிக்க தகுதி வேண்டுமா ? நல்ல கதை ..உலகம் போற்றும் ராமாய… தகுதி அறியாமல் கூட கேலி செய்ய ..அதுகளை விமர்சிக்க தகுதி ஒரு கேடா ?
நான் தமிழன். மற்ற இனங்களுக்கு நிகராக கல்வி அறிவுடனும், பொருளாதார வசதியுடனும் வாழ்கின்றேன் சோழா. நன்றாக வாழும் தமிழர்களை நீங்கள் காண்பதில்லையோ?. தமிழர் அல்லாதவர் இந்நாட்டில் படும் அவதியை தாங்கள் கண்டதில்லையோ?.
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை வாங்கிக் கொடுத்து அதன் மதிப்பை இழக்கச் செய்தவர் கலைஞர். 1,000 வருடங்களுக்கு மேலாக நடப்பில் இருக்கும் மொழிக்கு செம்மொழி என்று இந்திய அரசாங்கம் ஒரு நற்சான்றிதல் வழங்குகின்றது. தமிழ் மொழியின் வரலாறு என்ன 1,000 வருடமா?. அந்த மதிப்பில்லாத வெற்றுக் காகிதத்திற்கு சோடை போனது அல்ல தமிழ். தமிழுக்கு அங்கிகாரம் கொடுக்க யாரும் தேவைப்படுவதில்லை. அது தன்னிலையில் தொன்மை மொழியாக அங்கீகாரம் பெற்றது.
பினாங்குகாரர் படிப்பதோடு சரி. கருத்து எழுத வேண்டாம் என்று தனக்குத் தானே கட்டளை இட்டுக் கொண்டீர்களோ?. அறிவார்ந்த கருத்துக்களை செம்பருத்தி வாசகர்கள் தங்களிடம் இருந்து எதிர் பார்கின்றனர்.
தமிழ், தமிழனின்பால் அக்கறை கொண்டு நல்ல கருத்துகளை தொகுத்து வழங்கும் எல்லா அன்பர்களுக்கும் ஆயிரம் நன்றிகள். தொடரட்டும்!!!!!!
மலேசியாவில் தோட்டம் பகுதியில் இருந்து விரடபட்ட லட்சம் மக்கள் இருப்பிடம் இல்லாமல் ,கல்வி இல்லாமல் வாழ்கின்றார்கள் இன்னும் தோட்டம் பகுதியில் வசிபவர்கள் பரம்பரம்பரையாக வாழ்ந்தும் ID இல்லாமல் இருகின்றார்கள் தமிழையும் ,தமிழ்
நாட்டையும் பற்றஇபேசி பொழுதை போக்காமல் இந்தA மக்களுக்கு உங்களால் முடிந்ததை செய்யவும்
தமிழர் உரிமைக்காக பாடுபடும் எம்மவருக்கு வணக்கம்! தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு! இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு! நம்மவர் வாய்ப்போர் நடத்திய அனைத்தையும் இழந்தோம்! இனியாவது செயல் போர் திறமையை காட்டுவோம்!
போர்! போர்! போர்!
சோழா எம்முடைய அலுவலகத்தை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்வது ஒரு சீன பெண்மணிதான். மாதா மாதம் அவருக்கு ஊதியத்தைக் கொடுப்பது இந்த தேனீ என்ற தமிழனின் கைதான். அதற்காக அந்த பெண்மணியை நான் இழிவாக பார்ப்பதில்லை. அவர் வேளையில் அவர் திறமை மிக்கவர் என்பதை அறிந்து பெருமைபடுகின்றேன். ஏன் உமக்கு அவ்வாறு நினைக்கு முடிவதில்லை. குறை, காண்போர் கண்களிலும் மனத்திலும்தான் உள்ளது.
சோழா, நான் தோட்டத்தில் பிறந்து வளர்ந்தவன். இன்று தோட்டத்தில் வசிப்பவர்களில் இந்தியர்கள் சிறுபான்மையினரே. களத்தின் இறங்கிப் பாருங்கள் உண்மை புரியும். இவர்களிலும் பலரின் பிள்ளைகள் தோட்டத்திற்கு வழியே வேலை செய்து கொண்டு தேவையான வருமானத்தைப் பெற்று வருகின்றனர். அவர்கள் வீட்டிலும் சகல வசதிகள் இருக்கின்றன. பட்டணத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் இந்தியர்களை விட பல தோட்டப்புற இந்தியர்கள் சிறப்பாகவே வாழ்கின்றனர். நாம் இன்று உதவி செய்ய வேண்டியது பட்டணத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் இந்தியர்களுக்கே. முடிந்தால் களம் இறங்கிச் செய்யுங்கள். வெட்டிப் பேச்சு வேண்டாம்.
தமிழன் உணர்சிகளை கட்டுப்படுத்தி அறிவை பயன்படுத்தி ஒன்று சேர முயல வேண்டும்.வீண் விவாதங்கள் நமது குறிக்கோளை மங்க செய்யும் .
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல். – (குறள் 504)
இது வள்ளுவன் மனித இனத்திற்குச் சொன்னாரோ இல்லையோ தமிழனுக்குச் சொன்னார் என்பது உறுதி. ஆனால் இங்கே விமர்சனத்தை தடலடியாக வைக்கும் வாயாடிகள் இந்தக் குறளை வாசித்து உள்வாங்கிக் கொண்டு மற்றவர்களை விமர்சிக்கும் முன் அடுத்தவர்கள் செய்த நன்மையையும் சீர்தூக்கிப் பார்த்து நடுநிலை தவராது பதிவுகளைச் செய்தால் ஆரோக்கியமான நிலை உருவாகும். பார்ப்போம்!
அப்போது எல்லோரும் தோட்டத்துக்கு போய்விடுவோம்,பால்மரம் சீவுவோம் பால்மாடு வளர்ப்போம் ஹ ஹ ஹ,நாராயண நாராயண.
அப்போ… எல்லோரும் தோட்டத்திற்குப் போய்விடுவோம்.பால்மரம் சீவுவோம்.பால்மாடு வளப்போம். ஹ…ஹ…ஹ… அப்படியே இளிச்சவாய் தமிழன் இருப்பான் அவன் காசில் நாராயணனுக்கு ஒரு கோயில் கட்டுவோம். அதற்கு அன்றாட பூஜை செய்ய இந்தியாவிலிருந்து ஒரு பார்ப்பாணிய அய்யனை தமிழன் காசில் வரவழைத்து வேலை கொடுப்போம். அவன் தமிழனிடம் தட்சனையும் சம்பளமும் வாங்கிக் கொண்டு , வீட்டு வாடகை, மின் கட்டணம், தண்ணீர் கட்டணம் எதையுமே கட்டாம இராஜபோகமா இருக்கட்டும். தமிழன் கொசுகடிபட்டு, அட்டைகளுக்கு ரத்தம் உரிஞ்ச கொத்து சம்பாதித்த பணத்தை எல்லாம் அய்யன் பிழைக்கத் தேர்திருவிழானு கொடுத்துவிட்டு, பரலோகம் இப்ப வராதா? நாளை வராதா? என்று வாயைப் பிளந்துகிட்டு வானத்தைப் பார்த்து கனவுலகில் கிடந்து சீரழியட்டும்.
இமயம் முதல் குமரி வரை ..கல் தோன்றி ..மண் தோன்றா ….இதெல்லாம் ஆதாரம் அற்ற புலவர்களின் புகழ்சிகள் ….கிரேக ,ரோம வரலாறு பற்றி 2000 வருட சமபவங்கள் இன்றும் படிக்கலாம் …christopher columbus இன் பிறப்பு சான்றிதழ் இன்றும் ஸ்பானிய நூத சாலையில் உண்டு அனால் தமிழர் பற்றிya வரலாற்று தொகுப்பு கிடையாது ஆக சும்மா பழையவை பேசுவதில் அர்த்தம் இல்லை தமிழனுக்கு தேவை படிப்பு உழைப்பு
எங்கள் தலைவர் இந்து சமயத்தை கேலி பண்ணுவார் …ரம்ஜான் விருந்தில் ராமரையும் ,ராமணயதையும் கேலி பண்ணுவார் …அனால் இவரை மட்டும் தான் பல்லகில் தூக்குவோம் .கரணம் நாங்கள் சூடு சுரணை இல்லாத தமிழர்கள் (இந்த கருத்து மலேசியாவுக்கு அல்ல )
அண்ணாவைப் பற்றி அறிஞர்களும் / ஆய்வாளர்களும்
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பாகம் – 1
‘தோண்டுகின்ற இடமெல்லாம் தங்கம் வரும் தமிழகத்தில் மீண்டும் நீ பிறந்திடவேண்டு’ மென்றாள்.
‘தங்கம் எடுக்கவா’ என்றான்;
‘தமிழர் மனம் வாழ்வெல்லாம் தங்கமாக ஆக்க’ என்றாள்.
‘இன்றென்ன ஆயிற்’ றென்றான்
‘குன்றனைய மொழிக்கு ஆபத்’ தென்றான்;
‘சென்றடையக் குடிலில்லை ஏழைக்’ கென்றான்;
‘கடிதோச்சி மெல்ல எறியத் தெரியாமல்
கொன்றெறியும் கோல் ஓங்கிற்’ றென்றாள்;
‘அறிவில் – கன்றனையோர் வீணில் கதைக்கின்ற கதையும் சொன்னாள்
அழுத கண்ணைத் துடைத்தவாறு
அமுத மொழி வள்ளுவனும்
‘அம்மா நான் எங்கே பிறப்ப’ தென்றான்.
தொழுத மகன் உச்சி மோந்து – ஆல
விழுதனைய கைகளாலே அணைத்துக்கொண்டு
உழுத வயல் நாற்றின்றிக் காயாது இனிமேலே என மகிழும்
உழவன் போல் உள்ளமேல்லாம் பூரிப்புத் துள்ளி எழ
காய்ந்த வயிற்றுக்குக் கஞ்சி வார்த்திடவே ‘கற்கண்டே! தேன்பாகே! திருக்குறளே! நீ காஞ்சியிலே பிறந்திடுக’ என்றாள்,
பிறந்திட்டான் நம் அண்ணனாக;
அறிவு மன்னாக – பொதிகைமலைத் தென்றலாய்
போதாகி மலர்கின்ற தமிழ் உணர்வின் புதுமணமாய்
பதிகத்துப் பொருளாய்
பழந்தமிழர் புறப்பட்டாய்
வந்துதித்தான் அண்ணன் – கீழ்
வானுதித்த கதிர்போல –
புரியாதார்க்கு ஒரு புதிர் போல!
அவன் புகழைப் பாடுதற்கு
அவன் வளர்த்த தம்பி நானும்
அவன் தந்த தமிழ் எடுத்து
இவண் வந்தேன் இதுதான் உண்மை
தலைவவென்பார், தத்துவ மேதை என்பார்
நடிகர் என்பார் நாடக வேந்தர் என்பார்,
சொல்லாற்றல் சுவைமிக்க எழுத்தாற்றல் பெற்றார் என்பார்.
மனிதரென்பார் மாணிக்கமென்பார் மாநிலத்து அமைச்சரென்பார்
அன்னையென்பார் அருள்மொழிக் காவல் என்பார்
அரசியல் வாதி என்பார் – அத்தனையும்
தனித்தனியே சொல்வதற்கு நேரமற்றோர் நெஞ்சத்து அன்பாலே
‘அண்ணா’ என்ற ஒரு சொல்லால்
அழைக்கட்டும் என்றே – அவர் அன்னை பெயரும் தந்தார்.
அந்த அன்னைக் குலம்
போற்றுதற்கு ஔவைக்கோர் சிலை;
அறம் வளர்த்த கண்ணகிகோர் சிலை;
வளையாத நெஞ்சப் பாரதிக்கும்
வணங்காமுடிப் பாரதிதாசருக்கம் சிலை;
வீரமா முனிவருக்கும் சிலை
கால்டுவெல்போப்புக்கும் சிலை;
கம்பர்க்கும் சிலை
தீரமாய்க் கப்பலோட்டிய தமிழர்க்கும் சிலை
திக்கெட்டும் குறள் பரப்ப திருவள்ளுவர்க்கும் சிலை
பத்து சிலை வைத்ததினால் – அண்ணன்
தமிழின் பால் வைத்துள்ள
பற்றுதலை உலகறிய;
அந்த அண்ணனுக்கோர் சிலை
சென்னையிலே வைத்த போது. . .
ஆட்காட்டி விலல் மட்டும் காட்டி நின்றார் . . .
ஆனையிடுகிறார் எம் அண்ணா என்றிருந்தோம்.
அய்யகோ; இன்னும்
ஓராண்டே வாழப் போகிறேன் என்று அவர்
ஓர்விரல் காட்டியது இன்றன்றோ புரிகிறது!
எம் அண்ணா . . . இதயமன்னா . . .
படைக்கஞ்சார் தம்பியுன்டென்று பகர்ந்தாயே;
எமை விடுத்துப் பெரும் பயணத்தை ஏன் தொடர்ந்தாய் . . . ?
உன் கண்ணொளியின் கதகதப்பிலே வளர்ந்தோமே;
எம் கண்ணெல்லாம் குளமாக ஏன் மாற்றிவிட்டாய்?
நிழல் நீ தான் என்றிருந்தோம்; நீ கடல்
நிலத்துக்குள் நிழல் தேடப் போற் விட்டாய்; நியாந்தானா?
கடலடியில் இருக்கின்ற முத்தெல்லாம் முத்தல்ல;
நான்தானடா நன்முத்து எனச் சொல்லிக் கடற்கரையில் உறங்குதியோ?
நாத இசை கொட்டுகின்ற நாவை ஏன் சுருட்டிக் கொண்டாய்?
விரல் அசைத்து எழுத்துலகில்
விந்தைகளைச் செய்தாயே; அந்த விரலை ஏன் மடக்கிக் கோண்டாய்?
கண் மூடிக்கொண்டு நீ சிந்திக்கும்
பேரழகைப் பார்த்துள்ளேன் . . .
இன்று மண் மூடிக் கொண்டு உன்னைப் பார்க்காமல்
தடுப்பாதென்ன கொடுமை
கொடுமைக்கு முடிவி கண்டாய், எமைக்
கொடுமைக்கு ஆளாக்கி ஏன் சென்றாய்?
எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்
இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்?
கடற்கரையில் காற்று
வாங்கியது போதும் அண்ணா;
எழுந்து வா எம் அண்ணா . . .!
வரமாட்டாய்; வரமாட்டாய்;
இயற்கையின் சதி எமக்கத் தெரியும் அண்ணா . . . நீ
இருக்குமிடந்தேடி யான் வரும் வரையில்
இரவலாக உன் இதயத்தைத் தந்திடண்ணா . . . நான் வரும்போது கையோடு கொணர்ந்து அஃதை
உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா. . . !
(பேரரிஞர் அண்ணா அவர்கள் மறைவெய்திய போது
கலைஞர் மு.கருணாநிதி பாடிய கவிதாஞ்சலியிலிருந்து)
இலக்கியம் என்பது சமுதாயத்தில் சுரண்டலுக்கும் ஏய்ப்புக்கும் ஆட்படுகின்ற வர்கத்தினரின் குரலை எடுத்துரைப்பதாகவும் பல்வேறு கோணங்களில் தூண்டிவிடுவதாகவும் அமையவேண்டும். லெனின் – இது அண்ணாவுக்குப் பொருந்தும்
அண்ணாவின் எழுத்தோவியங்களை ஊன்றி படிக்கம்போது ஒரு வரலாற்று ஆசிரியனின் ஆற்றல், ஒரு படைப்பாசிரியனின் பண்பு, ஒரு சிறந்த விமர்சகனின் விவேகம், ஒரு விரிவுரையாளனின் நுட்பம், ஒரு வழக்கறிஞனின் வாதத்திறன், ஒரு கவித்துவம் நிறைந்த கற்பனையாளனின் நயம், நூலின் தலைப்புக்கேற்ப பளிச்சிட காணலாம்.
இளவழகன் (அறிவுப் புனல் அண்ணா)
தமிழின் கட்டுரை இலக்கியங்களை அறிவியல் நெறிபடுத்தினார் திரு.வி.கலியாணசுந்தரனார். இக் கலையினை இதழ் மூலமாக அரசியல் துரையிலும் கவினும், கருத்தும் செழிக்கச் செம்மையான் வடிவாக வளர்த்த புரட்சியாளர் அண்ணா, என்பார். (ஈ.சா.விஸ்வநாதன் – தமிழாய்வு – பக்கம் 59)
நடை என்பதே அறுதியிட்டு விளக்க முடியாத ஒன்று. அதிலும் தனித்தன்மை சான்ற நடையை விளக்கிக்காட்டுவது அரிய செயல். செவிக்கின்பம் தரும் ஒழுங்குபட்ட ஒலிநயம் கையாளும் சொற்களில் ஒரு வகையான தேர்வாற்றல், தெரியாற்றல், வேறொருவரிடமும் எளிதில் காண முடியாத அரிய தொடர் ஆக்கங்கள், நாவல் பொருளுக்கும், உணர்ச்சி நிலைக்கும் ஏற்ற வண்ணம் அமைந்த தொனி, முத்திரை பரித்தாற் போன்ற வாக்கிய அமைப்பு முதலியன தனி நடையின் பண்புகள் ஆகும். அண்ணாவும் இத்தகைய தனி நடை வாய்க்கப் பெற்றவர்.
முனைவர். மா. இராமலிங்கம் (20-ம் நூற்றாண்டில் தமிழிலக்கியம்)
டாக்டர் கைலாசபதி எழுத்தாளர்களை மூன்று நிலையினராப் பகுப்பார். முதற் பிரிவினர் கமுதாயச் சிக்கல்கள் இலக்கியத்துக்கு உகந்த பொருள் அன்று என்று கருதினர். இரண்டாவது பிரிவனர்கள் சிக்கல்களை உள்ளவாறு சித்தரிக்கம் கருத்தினர். காலப்போக்கில் கமூகம் திருந்தும் என்ற நம்பிக்கையினர். மூன்றாவது பிவினர் வாழ்க்கைப் போராட்டத்தை, எடுத்துரைத்து அவற்றிற்கு விடிவு காண முயலுநர். இவர்கள் அண்ணா மூன்றாவது பிரிவினர்.
ராண்டார்கை எனும் எழுத்தாளர் கூறுவது போன்று தெள்ளுதமிழில் உவமான, உவமேயங்களோடு வசனங்களை எழுதி மக்களைப் பரவசப் படுத்தியவர்கள் டி.வி.சாரி, இளங்கோவன் போறோர் என்றாலும், அண்ணாவின் தமிழ்முற்றிலும் வேறுபட்டதாக மக்களுக்கு இனிப்பாக இருந்தது.
அண்ணா இந்நூல் (பணத் தோட்டம்) முழுவதும் பலரின் உழைப்பு ஒரு சிலரின் மூலதனமாக எப்படி உருப்பெறுகிறது என்பதை அருமையாக விளக்கியுள்ளார். இலக்கிய நயம் நிரம்பிய ஒரு தலைப்பின் மூலம் படிப்போரின் உள்ளத்தில் உணர்ச்சி மோதல்களை எற்படுத்த அண்ணாவால்தான் முடியும், எதையும் இலக்கியமாகப் பார்க்கும் ரசனை உள்ளம் அவருடையது. ஆகவேதான் பேரிலக்கியங்களை படைக்காமலே அவர் ஓர் இலக்கியவாதியாக காட்சி அளித்துக்கொண்டிருக்கிறார்.
பி.சி.கணேசன் (அண்ணா எனும் இலக்கிய வாதி)
அண்ணா கட்டுரை என்ற வடிவத்தைத் திளனாய்வாக மடல்களாக எழுதியிருப்பது போற்றத்தக்கதாய் இருந்தது. திராவிட நாடு தொடர்பான சிந்தனைகளும், பகுத்தறிவு, சீர்திருத்தம் போன்ற சிந்தனைகளும் தலையாய இடம் பெற்றுள்ளன. வரலாற்றுச் சிந்தனைகளும், மேல் நாட்டறிஞரின் வரலாற்று அறிவுடன் சரிநிகர் சமானமாக ஒப்பிடும் தகுதி வாய்த்திருந்தது.
முனைவர்.ந.வேலுசாமி (அறிஞர் அள்ளாவின் சிந்தனைகள் ஓர் ஆராய்ச்சி)
அண்ணா அழகுணர்ச்சி கொண்ட இலக்கியவாதியாக மட்டும் இருக்கவில்லை. அவர் ஓர் சிந்தனைவாதியாக, கமூக சீர்ரிருத்தக்காரராக, அரரிசயல்வாதியாக, போராட்டக்காரராக, பிரச்சாரகாராக இருந்தார். சமுதாய மாற்றத்தைத் தன் குறிக்கோளாகக்கொண்டிருந்ததால் படைப்புகளை வெறும் கலை வடிவமாக மட்டும் பார்க்க முடியாமல் போனது. அவர் காண விரும்பிய கமூக மாற்றத்திற்கு – செய்ய விரும்பிய அரசியல் சாதனைகளுக்கு, இலக்கியத்தையும், கலைத்துறையினையும் கருவிகளாக் மட்டும் கருதினார். இந்தக் கருவிகளை எப்படி கூர்மையாக்கிக் கொண்டு பயன்படுத்த வேண்டும் என்கிற விஷயத்தில் அவர் நிகரற்ற நிபுணராக விளங்கினார். கலை வடிவங்களும், இலக்கியப் படைப்புகளும் மனித வாழ்க்கையை மேம்படுத்தும் சாதனைங்களாக் அமைய வேண்டும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டவராக விளங்கினார். இவரது முயற்சியால் கலையிலும் இலக்கியத்திலும் புதிய பல பரிசோதனைகள் தோன்றலாயின.
பி.சி.கணேசன் (அண்ணா எனும் இலக்கியவாதி)
காரிருள் சூழ்ந்த இநத் வேளையில் பேறிஞர் அண்ணாவின் கதைகள் கதிரவனால் ஒளி பாய்ச்சுவதை உணர்வீர்கள். அண்ணாவின் எழுத்தோவியங்கள் சமுதாய அடித்தளத்தையே மாற்றுகின்ற குறிக்கோளுடன் எழுதப்பெற்றவை நல்ல எழுத்துக்கள் என்பவை கற்பவர்களைத் தட்டி எழுப்புவதற்கே – மக்களை நெறிப்படுத்துவதற்கே – மறுமலர்ச்சியைத் தோற்றுவிப்பதற்கே – கேடுகளை களைவதற்கே – நாட்டு பற்றை வளர்பதற்கே – நல்ல எண்ணங்களை உருபாக்குவதற்கே
புலவர் சா. மருதவாணன்
தமிழ்ப் புதின உலகில் கேட்கும் குரல்களின் தனித்துவம் வாய்ந்த குரலாக ஒலித்துக் கொண்டிருப்பது அண்ணாவின் குரல். சி.பாலசுப்பிரமணியம் (இலக்கிய இண்ணமுது)
சமுதாயத்தில் மலிந்து காணப்பெறும் மூடப்பழக்க வழக்கங்களால் குடும்பங்கள் குலைவுறும் பெண்கள் துன்ப நிலை அடைவர் என்ற சமுதாயச்செய்தியை எதிரொலிக்கும் கருத்தோவியமாக இந்நாவல் திகழ்வதால் கருத்தமைவு நாவல் (டிஎநட டிக னைநயள) கருத்து நிகழ்ச்சி அடிப்படையிலும் நோக்க சீர்திருத்த நாவல் (டிஎநட டிக அயநேசள) என்ற நிக்கு வந்துவிடுசிறது. இது இயற்கையான தன்மைக்கும் மூடப்பழக்கத்திற்கும் இடையே முரண்பாடு காட்டி பகுத்ததறிகூ கொள்கை கூறும் நாவலாகும்.
பி. தட்சிணாமூர்த்தி (நாவல் ஆய்வு நூல்)
சமூகம் வெறும் சாக்கடை சேறு நிறம்பிய இடம் எனக்காட்டி அதனைத் தூய்மைப்படுத்த பகுத்தறிவே தக்க வழியாகக் காட்டுகிறார் அண்ணா.
முனைவர் தா.வே.வீராசாமி (ரங்கோன் ராதா – புதினம்)
தேவையானபொது இச்சித், துவைத்து அனுபவித்து எச்சிலாக்கி பலியான பிறகு மட்டும்உயர் சாதித்துடக்ககை பாட்டு ஒதுக்கிவிடும் கொடுமையை இந்நாவல் கண்டிக்கும் நிலை நம்மை நெகிழ வைக்கிறது. அப்பகுதிகளை படிக்கும்போது நம் நாடி நரம்புகளும் குருதியும் கோதிப்பேறுவதை அறம் காக்க அவை துடிப்புறுவதை நம்மால் உணர முடியும் அண்ணாவின் எழுத்துதாற்றலுக்கு இதை விட என்னச் சான்று வேண்டும்.
மா.ரா.இளங்கோவன் (இலக்கிய உலகில் அண்ணா)
இருபரம்பரைகள் – இது தொடக்கக் காலச் சிறுகதை. பொருளியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்ற அண்ணா, பொருளாதார விடுதலையின் தேவையை உணர்ந்து தம் எழுத்துக்களில் பெறிப்படுத்தினார். முனைவர். இரா.சேது (அண்ணாவின் கதை இலக்கியம்)
இந்து மத வருணாசிரமக் போட்பாடுக்ள, கடவுள் முறை புராணக் கதைகள் இவற்றின் வழி அமைந்த வாழ்க்கை முறையை மாற்ற முனைந்தார். பகுத்தறிவுக் கொவ்வாத சமய சடங்குகள், மனிதனின் சிந்தனை சிறைப்டுத்தும் மூடநம்பிக்கைகள், மனிதர்களுக்குள் பேதத்தை உண்டாக்கும் வருணாசிரமத் தத்துவங்கள் ஆகியவையே தமின் வீழ்ச்சிக்கு காரணம் என்பதை உணர்ந்ததார். தமிழ் மக்கள் மீது திணிக்கப் பெற்ற ஆரியச் கருத்துகளில் இருந்து, விடுவித்து மறைந்து கிடக்கம் தமிழ் நாகரீகத்தை உணர்த்தி தமிழ் மக்கள் மறுமலர்ச்சி சிந்தனை பெற உழைத்தார்.
முனைவர்.இரா.சேது (அண்ணாவின் கதை இலக்கியம்)
சிறுகதையை இலக்கியத் துறையிலிருந்து பிரித்தெடுத்து ஒரு சமுதாய விமர்சன கருவியாகப் பயன்படுத்தியவர். சிறுகதையை பிசச்சார கருவியாகப் பயன்படுத்தினாலும் சிறுகதையின் வடிவத்தை சிதைக்காதவர். உத்தி, உள்ளடக்கம், நடை ஆகிய அம்சங்கள் அமைந்த சிறுகதைகளைப் படைத்த அண்ணாத்துரையை மணிக்கொடிக்கு அடுத்தகாலத்தில் சிறுகதையை வளர்க்க உதவிய ஆசிரியர்களுள் ஒருவராக் கருதலாம்.
அ.கா. பெருமாள், சீ.குமார் (தமிழ் இலக்கிய வரலாறு)
சீர்திருத்த இயக்கத்தில் பகுத்தறிவு பாதையில் பெரியாரின் வழியில் வந்தவரான அண்ணா சாதி ஒழிப்பு, பொருந்தாமணக் கொடுமை போலிச் சமய வாதிகளை தோலுரித்தல் கலப்பு மண ஆதரவு ஆகிய பொருள் பற்றி பல நாவல்கள் படைத்தார்.
அ.கா.பெருமாள், எஸ்.சீதர் (தமிழ் இலக்கிய வரலாறு)
அழிவு தரும் ஆரியம் தமிழ் மக்களை இழிவு படுத்தும் இயல்பு புராண இதிகாசங்சளுக்குக் கருவாய் அமைந்தன. இதனை எதிர்த்து புதியதோர் உலகுக்கு வழிகாட்டும் செறிகளை தரும் இலக்கியம் படைப்பதில் முனைவு கொண்டார் அறிஞர் அண்ணா.
முனைவர். பி இரத்தின சபாபதி (அண்ணாவின் கலிங்கராணி புதினத்துக்கு முன்னுரை)
விடுதலை உணர்வோடு தேசிய இயக்கத்தின் சார்பாக எண்ணற்ற எழுத்தாளர்கள் தோன்றியதைப் போலவே தமிழ் மண் மணமும், இன உணர்வும், தன்மானக் கொள்கைப் பற்றும் கொண்ட எண்ணற்ற எழுத்தாளர்கள் நீதிக்கட்சியிலும் சுயமரியாதை இயக்கத்திலும் தோன்றினார்கள். சமுதாய விழிப்புணர்ச்சியையே நோக்கமாகக் கொண்ட இவர்களுள் படைப்பிலக்கியங்கள் வாயிலாகத் தன்மானச் சிந்தனைகளை வழங்கிய முன்னோடியாகத் திகழ்ந்தவர் அண்ணா அவர்கள்.
முனைவர்.பா.உதயகுமார் (அண்ணாவின் சிறுகதைத் திறன்)
அண்ணாவின் இலக்கியப் பிரவேசத்துடன் மறுமலர்ச்சி தமிழில் ஒரு புதிய வேகம் தோன்றியதோடு, நடையில் யாப்புக்கு பொருத்தமான எதுகையும், மோனையும் சேர்ந்து மொழிக்கு ஓவியலங்காரம் கொடுத்ததும் ஒரு முக்கிய திருப்பம்.
சிட்டி.சிவபாத சுந்தரம் (தமிழில் சிறு கதைகள்)
புதுமைப்பித்தன் கதையை வாசிப்பது நமது சிந்தனையின் கவனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல். கதை முடியும் பொழுது அதைப் பற்றிய சிந்தனை முடிவடைந்துவிடாது. இப்படிப்பட்ட கதைகள் முடிந்த பிறகுதான் சிந்தனை ஆரம்பமாகிறது. அண்ணாவின் கதைகளும் இப்படித்தான்.
நாகை தருமன் (இலக்கிய உலசில் அண்ணா)
உத்தி, உள்ளடக்கம், நடை ஆகிய அம்கங்கள் முழுமையாதக அமைந்த பல சிறுகதைகளைப் படைத்தவர் அண்ணா. பேரா. டாக்டர். சு.சிதம்பரநாதன் (தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்)
நாவல் வரவாற்றில் அறிஞர் அண்ணாவுக்கும் சிறப்பான் இடம் உண்டு. அரசியல் தலைவராகபும், மேடைப் போச்ளராகம் அவருக்குக் கிடைத்தப் புகழ்ப் பேரொளியில், படைப்பாற்றல் மிக்க எழுத்தாளர் அவர் என்னம் உண்மை அதிக வெளிச்சம் தராத விளக்கொளிபோல் அடங்கிப்போய் நின்றது எனலாம்.
மு.இளமாறம் (நாவல் வளர்ச்சி)
இந்நாவல் (ரங்கோன் ராதா) இன்றய ரியலிச் படைப்பாளர்களுக்கு அண்ணாவே வழிகாட்டியாவார்.
மா.ரா.இளங்கோவன் (இலக்கிய உலகில் அண்ணா)
பழுத்த அறிவு, கூரிய அறிபு நுட்பம், அகன்ற காட்சியறிவு ஆகியவை அவர்தம் நடையினை அணி செய்கின்றன. அவர்தம் ஆளுமையிம் அதில் முனைப்பாகப் புலப்படுகிறது. கருத்து முதன்மையும், முழுமையிம் கருத்து வெளிப்பாட்டு விருப்மும் அவர்தம் நடையின் தலைசிறந்த பண்புகள் எனலாம். சுருக்கம், தெளிவு, இனிமை, ஓசை நயம், அறிவாழம் முதலியவை அவர்தம் நடையின் ஏனைய பண்புகளாம். அத்துடன் அவர்தம் நடை ஒரு தனி வீறும், தனியாண்மையும் கொண்டது.
பேராசிரியர். அ.கி.மூர்த்தி (அண்ணாவின் பட்டமப்பு விழா உரைகள்)
அவர் வாழ்ந்தது – எண்ணியது – எழுதியது அனைத்தும் ஒரு குறிக்கோளுடம்ன. மக்களின் மனப்ன்மையில் ஒரு மாற்றம், விழிப்பு – எழுச்சி – தன்னம்பிக்கை ஏற்படுத்தி பழமை பிடிப்பிலிருந்து விடுவித்து ஒரு புதிய சமுதாயமாக் மறுமலர்ச்சி காணச் செய்தலே அவரது குறிக்கோள். அந்த அடிப்படையில் மலர்ந்த மணம் பரப்பியதே அவரது எழுத்தும் அனைத்தும்.
பேராசிரியர். க. அன்பழகன்.
அண்ணா தம் எண்ணங்களை செயல் திட்டங்களை, நெறிமுறைகளை, வேண்டுகோள்களை வெளியிட்டு அறிவையும், இன உணர்ச்சியையும் ஊட்டினார்.
முனைவர். கு.விவேகானந்தன் ( அண்ணாயியம்)
நண்பர்களிடமிருந்தும், நெருங்கிய உறவினர்களிடமிருந்தும் வரும் முடங்கல்களை படிப்பதில் ஒருவன் எவ்வளவு ஆர்வமும், அக்கறையும் அக மகிழ்ச்சியும் காட்டுவானோ அவ்வளவு ஆர்வமும், அக்கறையும், அகமகிழ்ச்சியும் அறிஞர் அண்ணா அவர்களின் கடிதங்களைப் படிப்பதிலும் ஒவ்வொருவரும் காட்டுவர். அவ்வளவு கவர்ச்சியும், அறிவுத்தெளிவும், ஆராய்ச்சி திறனும் அறிஞர் அண்ணா அவர்களின் கடிதங்களில் காணப்பெறும்.
நாவலர். நெடுஞ்செழியன் (அண்ணாவின் கடிதங்கள் முன்னுரை)
அவர் (அண்ணா) சிறந்த சமூக சீர்திருத்தவாதியாகத் திகழ்ந்தார். இவற்றிகெல்லாம் மேலாக மேலாக தமிழ் நெறியில் ஆழமாக காலூன்றி நின்றார். ஆம், இருபதாம் நூற்றாண்டின் வள்ளுவராக விளங்கினார்.
திரு. அரு. சின்னச்சாமி (அண்ணா ஒரு சரித்திரம்)
அண்ணாமலைப் பல்கலைகழகந்தன்னில் ஆற்றிய பேருரை, புத்தறிவு பேருரை, ஆங்கிலத்தின் அழகும் அறிவும் ஆழ்ந்த அழுத்தந்திருத்தமான கருத்துரமும் பொதிந்த பட்டமளிப்பு விழா பேருரை. நல்லபடி வழிகாட்டித் துணையாய் தோழமையாய் ஊரும் உலகும் மெச்சிடும் வண்ணம் அமைந்த பேருண்மை உரை.
திரு. மு.நமச்சிவாயம்.
இவரது (அண்ணாவின்) ஆங்கிலப் பேச்சுக்கள் கல்லூரிகளில் பாடப்பகுதியாக வைக்கப்படவேண்டிய அளவு தரமும், தகுதியும் உள்ளவை.
க.திருநாவுக்கரசு (திராவிட இயக்க இதழ்கள்)
அண்ணாவின் நாடகங்கள், தமிழ் நாடகங்கள் ஒருபெரும் கமுதாய மாற்றத்தைச் செய்யத்தகுந்த ஆற்றலாகவும் இயக்கமாகவும் விளங்கின அவை இன்று தமிழ் இலக்கியச் செல்வங்கள். மொழிபெயர்ப்பு செயய்யப்பட்டால் உலக அரங்கில் அவை ஓர் உயர்ந்த இடத்தைப் பெறும் என்பது உறுதி, என்பார்.
டாக்டர். ஏ.என்.பெருமாள் (நாடகச் சிந்தனை ப.166)
இவரது (அண்ணாவின்) கவிதை ஆக்கம் என்பது பழைய மரபு முறையில் அமையாமல், புதிய முறையில் அமைய அண்ணாவால் முயற்சி செய்யப்பெற்றிருப்பது ஒரு புதிய அம்சமாகவே படுகிறது.
துரை.சீனிச்சாமி.
எனவே அண்ணாவின் கதைகளில் சங்கச் செய்யுள் இலக்கியச் சாயலும் இடைக்கால இலக்கியத் தாக்கமும் பிற்கால இலக்கியத் தாக்கமும்பின்னிப் பிணைந்துள்ளன. சமுதாய சீர்திருத்தமும், சமதர்மமும் இவரது கவிதைகளின் அடிநாதம். பாரதியின் பாட்டிலுள்ள அவல உணர்ச்சியும், வசனக் கவிதையும் அதன் வளர்ச்சியான புதுக்கவிதை உத்தியும் இவருக்குக் கைவந்தது.
அண்ணாவைப் பற்றி அறிஞர்களும் / ஆய்வாளர்களும்
(டாக்டர். அண்ணா பரிமளம்)
பாகம் – 2
அண்ணா ஒரு நாடக அறிஞர். அவர் கலை நயமும் கருத்து வளமும் உலக நாடக இலக்கிய ஆசிரியர் வரிசையில் வைத்தெண்ணத்தகும் சீரும் சிறப்பும் உடையவர். அறிஞர் அண்ணா அவர் காலத்தின் குரலாகவும் நிழலாகவும் விளங்கினார். அவர் ஒரு பல்கலைவாணர் பல்கலைச் செல்வர். மக்களை முன்னேற்றவும், சீர்திருத்தவும் நாடகக் கலையை சீர்தூக்குவியவர், மோலியர், இப்சன், பெர்னாட்சா, மாக்சிம் கோர்க்கி, ஆண்டன் செகாவ் போல இந்திய நாட்டின் வேறு எந்த மொழியினரைக் காட்டிலும் நன்கு பயன்படுத்தியவர் பேரறிஞர் அண்ணா.
(அறிஞர் அண்ணாவின் நாடகங்களை ஆராய்ச்சி செய்தவர். (டாக்டர். இரா.சனார்தனம், எம்.ஏ., பி.எச்.டி)
20 ம் நூற்றாண்டுச் சமுதாய மறுமலர்ச்சிக்கு அண்ணாதுரையின் சிறுகதை, புதினங்களின் கொடை 20 ம் நூற்றாண்டுத் தமிழக மறுமலர்ச்சி என்பது மிகப் பெரிய அளவில் திராவிட இயக்கத்தையே சார்ந்துள்ளது. மேடைகளில் பேசியும், ஏடுகளில் எழுதியும் மறுமலர்ச்சிப் பணி ஆற்றிய திராவிட இயக்கத் தலைவர்களுள், அண்ணாதுரையின் இடம் தலைமை சான்றது. கருத்துக்களைக் கட்டுரையாகத் தீட்டுவதோடு அமையாது எளிய மக்களும் விரும்பி ஆவலோடு படிக்கும் கதை வடிவில் இவர் தந்தார். இவரைச் சார்ந்தோரும் கதைகள் வாயிலாக மறுமலர்ச்சிக் கருத்துக்களை விதைப்பாராயினர். ஆகவே இன்றையத் தமிழக ம.றுமலர்ச்சியைத் தோற்றுவித்ததில் அண்ணாத்துரையின் கதைகள் ஆற்றிய பங்கு தனிச்சிறப்புப் பெறுகிறது. . . . 20 ம் நூற்றாண்டுச் சமுதாய மறுமலர்ச்சிக்கு, அண்ணாத்துரையின் சிறுகதை புதினங்கள் கொடை குறிப்பிடத் தக்கதாக அமைந்துள்ளது. அவர் கருத்தை பின்பற்றிப் பலர் எழுதினர். தம் கதைகளில் மறுமலர்ச்சி எண்ணங்களை விதைத்த அவர், கலப்பு மணம், விதவை மணம், சுயமரியாதைத் திருமணம் ஆகியவற்றை செயல்படுத்த வழிகாட்டினார். எழுதிய வண்ணம், பேசியவண்ணம் அவற்றை நிலை நாட்டிய அப்பெருந்தகையாளரை இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் சமுதாய மறுமலர்ச்சியின் எழு ஞாயிறு எனலாம்.
(அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள், நெடுங்கதைகள் இவைகளை ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்ற டாக்டர்.இரா.சேது, எம்.ஏ., பி.எச்.டி)
அறிஞர் அண்ணாவின் தமிழ் கொடை அண்ணாவும் தமிழும்
தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழ் இனம், தமிழ் நாடு, தமிழர் பண்பாடு ஆகியவற்றின் மறுமலர்ச்சிக்கு முதன்மைப் பணியாற்றிய தலைவர் அண்ணா உரை நடை இலக்கியத் தமிழ், தமிழியல் தமிழ், நாடகத் தமிழ், திரை நாடகத் தமிழ், மேடைத் தமிழ், இலக்கியத் தமிழ், நாட்குறிப்பு இலக்கியத்தமிழ் எனும் பல்வேறு தமிழ்த் துறைகளும் செம்மையும் செழிப்பும் சேற முப்பத்தைந்து ஆண்டுகள் அரசியல் உலகிலிருந்து கொண்டு அரிய இலக்கியப் பணியும் மொழிப் பணியும் நாட்டுப் பணியும் ஆற்றிய தன்னிகரற்ற மொழிப்பற்றாளர் அண்ணா. சங்க இலக்கியங்களையும் திருக்குறளையும் கருத்துக் கருவூலங்களாகக் கொண்டு இரையாற்றும் அண்ணா தன்னிகரற்ற பேச்சாளராகவும் நாடக ஆசிரியராகவும் நடிகராகவும் விளங்கியதுடன் மக்கள் அன்பைப் பெற்ற சிறந்த தலைவராகவும் காலத்தை உருவாக்கும் சிற்பியாகவும் திகழ்ந்தார். அவரது அறிவும் ஆற்றலும் மொழியும் இலக்கியமும் சிந்தனையும் செயலும் எதிர்கால மக்களுக்கு அரிய கொடையாகும். அரசியல் சமுதாய மறுமலர்ச்சிச் சிந்தனைகளை நாட்டுக்கு கிழமை தோறும் அளித்திட கடித இலக்கியத்தினை ஒப்பற்ற வடிவமாகத் தேர்ந்து வளர்த்துத் தமிழுலகுக்குப் புது வழி காட்டிய முன்னோடியாக ஒளிரும் அண்ணா.
நாடகப் படைப்பாளர், புதிய ஆசிரியர், சிறுகதைச் செல்வர், கட்டுரையாளர், சொற்போழிவாளர், சமூகச் சிந்தனையாளர், பகுத்தறிவாளர், இயக்க ஆக்கர், சட்ட மன்ற வல்லார், எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு மக்கள் தலைவர், நெஞ்சுடை மனிதர், இவ்வளவு ஆற்றலும் பண்பும் அணி செய்யப் பல துறைகளிலும் முகடு எய்தி முத்திரை பதித்த இவர் அண்ணா என்று மக்களால் அன்பொழுக அழைக்கப்பெற்றார், பின்னர் பேரறிஞர் அண்ணா என்றும் போற்றப் பெற்றார். தமிழ் உரைநடைக்குக் கவிதை வனப்பும் இசையும் சேர்த்து, சொல்லாக்கங்களையும் தொடராக்கங்களையும் செய்ததுடன் புதுப்புது இலக்கிய வடிவங்களையும் ஈந்த அண்ணா தமிழின் துறைதோறும் கொடை நல்கிய இலக்கிய மொழிக்கொடை வள்ளலாகத் திகழ்கிறார். அரசியல் உலகைப் பேரறிஞர் அண்ணா எனப்புகழ்ந்து பெருமை பெறுகிறது.
அரசியல், இயக்கம், சாதி, செல்வம், பதவித் துணை ஏதுமின்றி அன்பு அறிவு பண்பு தொண்டு ஆகியவற்றை முதலாகக் கொண்டு அண்ணா, இலக்கியம் படைத்து வெற்றி கண்டுள்ளார். தி.மு.க.வை வளர்த்து தமிழ் நாட்டாட்சியை கைப்பற்றிய ஏற்றப் படைப்புகளையும் அளித்து புதுப்பாதை வகுத்த அரசியல் தலைவராக விளங்குகின்றார். – ஆய்வாளர் டாக்டர். ப.ஆறுமுகம் அண்ணாவின் கடித இலக்கியம் அண்ணா தம் எண்ணங்களை, செயல் திட்டங்களை, நெறிமுறைகளை வேண்டுகோள்களை மடல்களில் தொடர்ந்து வெளியிட்டு தமிழர்களைப் படிக்கச் செய்தார். பொதுவாக உணர்ச்சியைத் தூண்டியவர்கள் உண்டு. ஆனால் அண்ணா உணர்ச்சியை இன உணர்ச்சியை ஊட்டினார். அறிவை, பகுத்தறிவை தூண்டினார். ஏனைய மடல் இலக்கியங்கள் கல்வியறிவு பெற்ற நடுத்தர மற்றும் உயர்தர மக்களுக்காக அற நெறிகளையும் வற்புறுத்துபவை. ஆனால் அண்ணாவின் மடல்கள், எழுதப் படிக்கத் தெரிந்த சாதாரண மக்களுக்காக எழுதப்பெற்றவை. உரிமைகளையும் சமூக நெறிகளையும் வற்புறுத்துபவை. சுருங்கச் சொன்னால் அண்ணாவுக்கு முன் எழுந்த மடல் இலக்கியங்கள் கற்றோர் இலக்கியம் அண்ணாவினுடையவை மக்கள் இலக்கியம்.
கடித இலக்கிய வரலாற்றில் அண்ணா பெறும் இடம் நிகரற்றதாகும்.
இறுதியாக அண்ணாவின் கடிதங்கள் மனிதப்பண்பை உயிர்ப் பண்பாக வலியுறுத்தும் பண்பாட்டுப் பேழைகளாகத் திகழ்கின்றன. டாக்டர் கு, விவேகானந்தன், எம்.ஏ.டி.எச்.இடி., எம்.ஃபில், பி.எச்.டி. உலக அறிஞருள் ஒருவர் அண்ணா ஏதென்ஸ் நகரின் விளங்கியவர் என்று இன்று போற்றப் படுகின்ற இதயமாக, சாந்த சொரூபி, சாக்ரடீசு, தர்க்க வாதத்தில் சிறந்த தத்துவ ஞானியாக மட்டுமே விளங்கியிருக்கிறார். நம் அருமைத் தமிழகத்தில் தோன்றிய அறிஞர் அண்ணாவைப்போல் சகல துறைகளிலும் அவர் சிறப்புப் பெற்றாரில்லை.
அடிமை விலங்கறுத்த அமெரிக்க நாட்டின் தந்தை ஆப்பிரகாம் லிங்கன், அடிமை அகற்றிய வீரர் என்று மட்டும் தான் வரலாறு பேசுகிறது.
உலகம் போற்றும் நாடகம் பேராசிரியர் பெர்னாட்சா நாடகம் எழுதுவதில் மட்டும் மேதையாகத் திகழ்ந்திருக்கிறார்.
நாடகத் தலைவர் என்ற சிறப்புப் பெயரை பெற்ற அவர் ஏதோ ஒரே ஒரு நாடகத்தில் மட்டும் நடித்ததாகத் தெரிகிறது.
இலக்கிய மேதை சேக்ஸ்பியர் இலக்கிய வாசகத்தை மட்டுமே தனதாக்கிக்- கொண்டிருந்திருக்கிறாரே தவிர பேச்சிலும் பிறவற்றிலும் சிறப்படையவில்லை.
வால்டேர், ரூசோ போன்றவர்கள் தங்கள் எழுத்தால் மட்டும்தான் புரட்சிக்கு, வித்திட்டு இருக்கின்றனர். பிற செயல்கள் அவர்களை அண்டியதாகத் தெரியவில்லை.
எழுத்திலும் பேச்சிலும் மன்னன் என்ற பெயரைதான்இங்கர் சாலால் பெற முடிந்திருக்கிறது.
இப்படி நாம் எண்ணிப் பார்க்கின்ற போது உலக மேதைகள் ஒவ்வொரு செயல்களில் சிறப்புப் பெற்றவராகத் திகழ்வதுதான் தெரிகிறதே தவிர, நமது அறிஞர் அண்ணாவைப் போல எல்லாத் துறைகளிலும் சிறந்தவர் என்ற பட்டத்தை பெற்றவர்களாக அவர்கள் இல்லை.
எல்லா துறைகளிலும் வல்லமை பெற்ற ஒரே ஒருவர் உண்டென்றால் அவர் நமது அருமை அண்ணாதான். தமிழ்நாடு செய்த தவப்பயனாக உலகில் எந்த நாடும் பெறாத பெறமுடியாத பெருமையை அண்ணாவால் நமது அருமை தமிழகம் பெற்றிருக்கிறது.
அப்படி என்றால் அண்ணாவைப் பற்றி உலகம் ஏன் அதிக அக்கறையுடன் கவனிக்கவில்லை? ஷேக்ஸ்பியரையும், பெர்னாட்சாவையும் இன்னும் பலரையும் உலகம் பாராட்டுகிறது என்றால் அவர்கள் எந்த மொழியில் வல்லுநராக விளங்கினார்களோ அந்த மொழி உலகம் முழுவதும் பரவி இருந்தது. அந்த மொழியைக் கட்டாயமாகக் கற்றுத்தீர வேண்டிய கட்டாயத்தில் மக்களும் இருந்தனர். அந்த மொழியை படிக்கும்போது அந்தமொழிக்கு சொந்தக்காரர்களை பற்றியும் அறிந்துகொள்ளவேண்டிய கட்டாயம் பிறந்தது. அந்த நாட்டு மொழியும் அவர்களை விளம்பரம் செய்துகொண்டிருந்தது. அதேபோல் நம் தமிழ் மொழியும் உலகம் முழுவதும் பரவியிருந்தால் உலகத்தாற் கவனம் நிச்சயம் அண்ணாவின் பக்கம் திரும்பித்தான் இருக்கும்.
திரு. இரா. தியாகராசன். தமிழர்களின் பொதுச் சொத்து அண்ணாவின் எழுத்து, தலைசிறந்த இலக்கியமாகவும், கலைக்கருவூலமாகவும், கற்பனைக் களஞ்சியமாகவும், வரலாற்றின் வடிகாலாகவும், அரசியல் ஆராய்ச்சியாகவும் புரட்சிப் பொறியாகவும், பகுத்தறிவுப் பட்டறையாகவும், சீர்திருத்தச் செல்வமாகவும், பல்சுவைப் பகுதியாகவும் விளங்கும்.
அண்ணா இத்தகுதியறியாத் தமிழ்நாட்டில் பிறந்திருக்காமல் மேல்நாட்டில் பிறந்திருப்பாரேயானால் நோபல் பரிசு பெற்றுப் பல பல்கலைக் கழகங்கள் கொடுத்த பட்டங்கள் அடுக்குப் பாத்திரங்கள் போலத் தலை மேலிருந்து அழுத்திக் கொண்டிருக்கும், இன்னும் எத்தனையோ பட்டங்கள், பரிசுகள்.
அண்ணா தமிழ்நாட்டின் அண்ணா, தமிழர்களின் பொதுச் சொத்து. தமிழ் மக்களின் அறிவுக் களஞ்சியம். தமிழர்களின் முன்னேற்றப் பாதை. பதுத்தறிவுத் திறவு கோல், கலைக் கலங்கரை விளக்கம்.
இளைஞர்களைக் கவர்ந்த ஏந்தல்
சுயமரியாதை மாணவர்கள், இளைஞர்களிடையில் அண்ணாதுரைக்கு, செல்வாக்கு அதிகரித்து வந்திருக்கிறது. அண்ணாதுரையின் சொல்வன்மையும் எழுத்து வன்மையும். இளைய உள்ளங்களுக்கு ருசித்ததே. இதற்குக் காரணம். அண்ணாதுரையின் பேச்சிலும் எழுத்திலும், புத்துணர்ச்சியும், திருப்தியும் ஏற்பட்டது. அண்ணாதுரையை மாணவர்கள் விரும்பினர். வாலிபர்கள் சூழ்ந்தனர்.
புலவர் குழந்தை
அண்ணாதுரை, சமூக சீர்திருத்தத்திற்குப் புதிய மெருகு கொடுத்து. புதிய உணர்ச்சிகளை தழுவிப் போகாவிட்டால் கட்சிக்கு வளர்ச்சியில்லை எனக் கண்டார். அதனால் புதிய அமைப்புக்குப் பூர்வாங்க வேலைகளைப் பூர்த்தி செய்தார்
ப.ஜீவானந்தம்
சொற் செல்வர்
உயர்திரு அண்ணாதுரையவர்கள் என் அரிய நண்பர். அறிவுக்கடல், கற்பனைக் களஞ்சியம், கலா வல்லுநர், ஒப்புயர்வற்ற எழுத்தோவியர், இது மட்டுமா? நல்ல நடிகருங்கூட.
தமிழ்நாட்டின் முன்னேற்றம் கருதிப்பெரிதும் பாடுபட்டு வருகிறார். திரு. அண்ணா உள்ளதை உள்ளவாறே எடுத்துரைக்கும் உள்ளம் படைத்தவர். கேட்பாரைப் பிணிக்கவைக்கும் சொற்செல்வர். எப்பொருளையும் அமைதியாக, ஆனால் ஆணித்தரமாக வாதமிடுவதில் இவரை மேல்நாட்டுப் புரூடஸூக்கு ஒப்பிடலாம். அத்தகைய அறிஞருக்குத் தமிழ்நாடு என்றும் கடமைப்பட்டுள்ளது.
எம்.கே.தியாகராஜ பாகவதர்.
அவரை அடைந்தது பெரும்பேறு
அண்ணா என்ற சாதாரண வார்த்தைக்கு ஒரு மந்திர சக்தி, கவர்ச்சி, தனி அழகு, இன்பம், அன்பு ஒழுக்கம் எல்லாம் ஏற்பட்டுவிடும், வயதில் குறைந்தவர்களும், மிகுந்தவர்களும், அண்ணாவென்றே நமது அண்ணாவை அழைக்கிறார்கள், திராவிடர்களிடையே அண்ணா என்றால் அண்ணாத்துரை அவர்கள்தான். எல்லோருக்கும் அண்ணாவாகும் தகுதி அவருக்குண்டு.
சிலர் தலைவர்களாகப் பிறக்கிறார்கள். சிலர் தலைவர்களாக ஆக்கப்படுகிறார்கள் என்று ஒரு அறிஞர் கூறியிருக்கின்றார். இதையே சிலர் அண்ணாவாகப் பிறக்கிறார்கள். பலர் அண்ணாவாக ஆக்கப்படுகிறார்கள் என்று சொல்லலாமே. இந்த முறையில் தோழர் அண்ணாதுரை அண்ணாவாகவே நம்மிடையே பிறந்துவிட்டார்.
உருவத்தில் தமிழன். உயர் குணத்தில் தமிழன். அன்பு என்னும் பண்பில் தமிழன். அடக்கத்தில் தமிழன். ஆண்மையில் தமிழன். நமது அண்ணா. பரந்த நெற்றி, முறுக்கான மெல்லிய மீசை, விசாலமான முகம், கட்டு மஸ்தான உடற்கட்டு, பந்தயக் குதிரை போன்ற விறுவிறுப்பான நடை, பணிவான நடவடிக்கை, வீர உள்ளம் எல்லாம் ஒருங்கே அமையப்பெற்றவர் தோழர் அண்ணாதுரை.
தமிழர் சமூகத்திலே இடையே வந்து புகுந்து அல்லற்படுத்தும் மூடப்பழக்க வழக்கங்களை வேரோடு கிள்ளியெறியும் பாதையில் அண்ணாவின் எழுத்தும் பேச்சும் நிரம்ப உதவி புரிந்து வந்திருக்கின்றன.
அண்ணாவைப் பற்றி எவ்வளவோ சொல்லலாம். ஒரே வார்த்தையில் சொல்வதாயிருந்தால் தோழர் அண்ணாதுரையை நாம் அடைந்தது தனிப்பாக்கியம்தான்.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.
கலையறிந்தவர்
அண்ணாதுரை கலையறிந்தவர். தமிழ்நாட்டின் பழைய நிலையந்தவர். மன்னும் இமயமலை எங்கள் மலையே என்று மார்தட்டிக் கூறிய வீரர் வாழ்ந்த தமிழகத்தில் இன்று கோழைகளாய், மோழைகளாய் நாம் குன்றலாகாது. காளைகளாய்க் களிறுகளாய் வாழ்தல் வேண்டும் என்று ஆசைப்படுகின்றவர் அவர். தமிழ்க் குலத்தை அரிக்கும் வேர் புழுக்களை அழித்தாலன்றித் தமிழகம் தழைக்குமாறில்லை. ஊழ்வினையே பேசி ஆழ்வினையற்றிருக்குமளவும் நாம் உய்யுமாறில்லை என்று உறுதியாக கருதுகின்றவர் அவர்.
ரா.பி. சேதுப்பிள்ளை.
கருத்துப்புரட்சிக்கொரு வீரர்
தோழர் அண்ணாதுரை கருத்துப்புரட்சி செய்து வரும் வீரர் அவர் எழுதும் தலையங்கங்களிலும் பேசும் பேச்சுக்களிலும் புரட்சி வித்துக்கள் நிறைத்துள்ளன. அவை படிப்பவர் உள்ளத்திலும் கேட்பவர் நெஞ்சத்திலும் கருத்துப் புரட்சி விதைத்து வளர்கின்றன. தோழர் அண்ணாதுரை கடல்போன்ற பெருங் கூட்டங்களில் பேசும் சொற்கொட்டல். அவருடைய சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டு கடல் ஒரே அமதியாக இருக்கும். ஆனால், பேசுகின்றவரிடத்திலும் இரத்தக் கொதிப்பும் துடிப்பும் குறைவு. கேட்கின்றவரிடத்திலும் இரத்தக் கொதிப்பும் துடிப்பும் குறைவு. என்ன காரணம்? அவருடைய சொற்கள் அறிவாற்றல் வாய்ந்த சொற்கள். புரட்சிக் கருத்துக்கள் பொதிந்த சொற்கள். ஆகையால் வெறும் இரத்தக்கொதிப்பையும் துடிப்பையும் உண்டாக்கி நின்றுவிடுவதில்லை, அவற்றைக் கடந்து சென்று மூளையைத் தாக்குகின்றன. அந்நிலையில் அறிவு துடிக்கின்றது, எண்ணங்கள் கொதித்து எழுகின்றன. ஆகையால் அவருடையசொற்பொழிவு கற்றோருக்கும் பகுத்தறிவுத் தூண்டுகோல் ஆகின்றது, கருத்து வேறுபாடு உடையவர்களுக்கும் ஆராய்ச்சிச் சுடர்விளக்கு ஆகின்றது.
டாக்டர் மு, வரதராசன்
தமிழ்த் தோன்றல்
சீரிய கூரிய தீஞ்சொல் என்பது கம்பன் வழங்கும் அழகிய தொடர்களுள் ஒன்று. இதனை அவன் வழங்கிய இடமும் காலமும் வேறு. ஆயினும் இதன் பொருளும் கருத்தும் அவ்விடம் கால் முதலிய இயல்பு நோக்காது, இண்மையும் அது நிறைந்த இரையும் இரண்டும் செறிந்த செயலும் ஒருங்கு நிகழும் இடங்கட்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளன. பல அறிஞர்கள்பால் உண்மை உரையும் செயலும் ஒளிருங்கால் சீர்மையும் கூர்மையும் இனிமையும் நிறைந்த சொற்கள் பிறந்து நல்ல பயனை அனுபவிக்கின்றன. அவருள் அன்பர் திரு அண்ணாதுரையும் ஒருவர். அவர்பால் சீரிய கூரிய தீஞ்சொற்கள் பெருஞ்செல்வமாக நிலவுகின்றன. செல்வத்துப்பயன் ஈதல் என்பர். திரு.அண்ணாதுரையும் பெருஞ்செல்வமாகிய இச்சொற்களை வரையாது நிறம்ப வழங்குகின்றார். தமிழினஞ் செல்வத் தோன்றல்கள் அவற்றை விரைந்து மனங்கொள்ள ஏற்றுத் தொழில் கேட்கும் தமிழ் நலம் எய்துகின்றனர். இதனைக் கண்டும் கேட்டும் மகிழ்ந்து வரும் என் போன்றோர் உள்ளத்தில், எதிர்காலத் தமிழகம் இனிய காட்சி வழங்கக் கண்டு இன்புறுகின்றனர். ஒரு நல்ல சுயமரியாதைக்காரரகக் காட்சி வழங்கி தூய சுயமரியாதைவீரராய், மான மாண்புடைய கட்டிளந் தமிழ்த் தோன்றலாய் விளங்குகின்றார் திரு. அண்ணாதுரை.
ஔவை சு. துரைசாமி.
தமிழகத்தின் நன்மைக்காக
வான்புகழும் திருக்குறளை உலகுக்கீந்து வகையறிந்த கலை பலவும் வளர்த்த தாயாம்
தேன்வடியும் தமிழ் மொழியின் திறத்தைப் கோறி
தென்னகத்தின் பழஞ்சிறப்பை மீட்போமென்று
ஊக்கமதைத் தூக்கிவிடும் இடைகளாற்றி
தான் பிறந்த தமிழ் நாட்டின் மேன்மைக்காக தவிக்கும் அண்ணாத் துரையவர்கள் வாழ்க, வாழ்க.
நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்பிள்ளை
தனித் தமிழ்க்கனல் அண்ணா
அவர் தனித்தமிழ்க்கனல். திட்ப நுட்பமான சொல்லாளர், வீறுமிக்கச் செயலாளர். அவர் உள்ளம் தமிழர் உள்ளம். உணர்ச்சி வெள்ளம். அவர் உரைகள் தமிழர் மதிப்பைக் காக்கும், கொதிப்பையும் உண்டாக்கும் தீப் பொறிகள்.
யோகி சுத்தானந்த பாரதியார்
அறிஞர் அண்ணாவின்
அரசியல் நேர்மை
சு. சுஜாதா
தமிழ்விரிவுரையாளர்
பிராவிடென்ஸ் மகளிர் கல்லூரி, குன்னூர் -4, நீலகிரி.
‘கோன் நிலை தவறின் கோள் நிலை தவறும்
கோள் நிலை தவறின் மாரிவறங் கூரும்
மாரி வறங் கூரின் மன்னுயிர் இல்லை
மன்னுயி ரெல்லாம் மண்ணாள் வேந்தன்
தன்னுயி ரென்னும் தகைமைத் தாகும்
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் ”
எனும் வாக்கிற்கு ஏற்ப உயிரென மக்களை ஓம்பிக் காக்கும் அரசியல் நெறிகளை அள்ளித் தந்த தமிழ்மண்ணில் வாக்குகளைக் காற்றில் பறக்க விட்டுத் தம் வசதிகளைப் பெருக்கிக் கொண்டவர்களே ஏராளம்! நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் பாடுபட்டு, கொள்கைக்காகவும் குறிக்கோளுக்காகவுமே வாழ்ந்து மடிந்த மேதைகளோ மிகச்சிலர், அவருள்ளும் எழுத்தாலும், பேச்சாலும், இயக்கத்தாலும், வாழ்வாலும் அனைவரையும் ஈர்த்துத் தமிழர்தம் நெஞ்சில் என்றென்றும் நின்று நிலவும் தகுதியும் தலைமையும் படைத்தவர் அறிஞர் அண்ணா.
பித்தலாட்டமாகவும் பெருவணிகமாகவும், தரகு மையமாகவும்- தரமற்ற கொள்ளையாகவும் மாறிக் கொண்டிருக்கும் இக்கால அரசியல் மாயையில் தன்னலச் சாயலே படராத-சுரண்டல் நிழலே தொடாத-ஊழல் இருளோ ஒருதுளியும் பரவாத நேர்மையின் மிடுக்கு நிறைந்த தூயதோர் அரசியல் நெறி நம்பற்கரியதாகக் கூட இருக்கலாம். ஆட்சிப்பீடத்தை அலங்காரக் கட்டிலாக்கி சொகுசுகளுடனும், சுந்தரிகளுடனும் கொஞ்சிக் குலவும் உன்மத்தர்களிடையே கடமையும் கண்ணியமும் கட்டுப்பாட்டோடு கூட வர நிமிர்ந்த நெஞ்சுடன் நேரிய நோக்குடன் எளிமையின் சிகரமாய் ஒரு தலைவன் வாழ்ந்தது அற்புதம் போல் கூடத் தோன்றலாம். ஆனால் அப்பட்டமான உண்மை! நல்லவனும் வல்லவனுமாய தலைவன் ஒருவன் தனக்குப் பின்னும் தலைமைகளைத் தோற்றுவிக்கும் ஆற்றல் படைத்தவன் என்பதற்கேற்பத் தம்பியர் பலரை உருவாக்கிய திறமையும் வாய்ந்தவராய்த் திகழ்ந்தவர் சி.என் அண்ணாதுரை.
பன்னாட்டு அரசியலில்
மனித நேயத்தைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு பணவெறியாலும் நிறவெறியாலும் நாட்டையே வேட்டைக்காடாக்கி அடிமைகளை வேட்டையாடும் வெள்ளையரைக் கடுமையாகச் சாடும் அண்ணா வெள்ளை மாளிகையின் கருப்பு வணிகத்தை உலகுக்கே அம்பலப்படுத்திக் கண்டனக் குரல் எழுப்புகிறார். ஆப்பிரிக்க நீக்ரோக்கள் நானூற்றுவரைக் கப்பலில் அடிமைகளாய் ஏற்றிச் செல்லும் ஒருவன் பயணவழியில் நோய் வாய்ப்பட்டவரைச் சற்றும் இரக்கமின்றிக் கடலில் வீசுவதையும், மனித உயிர்களின் மதிப்பைக் கருதாமல் சரக்குகளாய் எண்ணி இழப்புக் காப்பீடு கேட்பதையும் எடுத்துக் காட்டிக் குமுறுகிறார். இனத்தாலும், மதத்தாலும் பிரிந்து கிடக்கும் இந்திய மக்களுக்கு மனிதநேய உணர்வூட்ட பன்னாட்டு அரசியலிலிருந்து மேற்கோள்கள் காட்டுகிறார்.
திராவிட இயக்கப் போராட்டத்திற்கு அரண் சேர்க்க வெள்ளை மாளிகையின் மூலம் “டாம் மாமாவின் விடுதி” கருப்பு இடி “டக்ளஸ் டிஸ்மன் குடியரசுத் தலைவரான கதைகளை எடுத்துரைக்
கும் அண்ணாவின் எழுத்தும் பேச்சும் அவர்தம் அரசியல் இயக்கத்திற்குப் போர்வாளாய்ப் பயன்படுகின்றன. வெள்ளை நாட்டில் குடியரசுத் தலைவர் ஆகும் கருப்பினத் தலைவன் கொள்கைத் தெளிவோடு விளங்குவதைச் சுட்டிக்காட்டி பொருளிலும் போகத்திலும் நிம்மதி நிலைக்காது என்பதைத் தெளிவாக்குகிறார்.
“” இரும்புப் பெட்டியிலே எண்பது இலட்சம்! கரும்புத் தோட்டத்திலே வருட வருமானம்! ஆலைசாலை! ஆள் அம்பு கோட்டம்! மாடம்-கூடம்!
செல்வத்தைக் குவித்துவைத்துக் கொள்வதாலே மட்டுமே இன்பவாழ்வு கிடைத்துவிடுமா?
பொறாமை! வஞ்சகம்! பொல்லாங்கு! பகை! சூது! சூழ்ச்சி! மாச்சர்யம்! இவை நெளியும் நிலையில் நாடு இருந்திடின் அந்த நாட்டிலே மாளிகை உண்டு! மந்தகாச வாழ்வு உண்டு என்று கூறி இருந்திடமுடியுமா?
நீதி! நேர்மை! பண்பு! அறம்! அறிவு! இவைகளற்ற நிலையில் ஒருநாடு இருந்திடின் அங்கு கோடி கோடியாகப் பணம் குவிந்திருந்திடினும் வாழ்விலே ஒரு நிம்மதி கிடைத்திடுமா?
நல்லநாடு என்பதைக் காட்டிலும் மேலான செல்வம் நிலையான செல்வம் வேறு எதுவும் இல்லை என்று நாடுகாக்கும் பொறுப்பைக்குறித்து விளக்கும்போது அரசியல் நேர்மையே அண்ணாவின் அடிநோக்கம் என்பதை விளங்கிக் கொள்ளமுடியும்.
நாடும் மக்களும்
மனிதன் மிருகமல்ல: என்பது மட்டும் தம்பி! உலகிலே அதிலும் குறிப்பாக உயரிடங்களிலே ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டால் மனிதன் மிருகமல்ல! என்பது மட்டும் நமது எல்லாச் செயல்களுக்கும் அடிப்படையாக அமைந்துவிட்டால்.
மனிதன் மிருகமல்ல இதனை மட்டும் ஆட்சியாளர்கள் உணர்ந்து விட்டால்!
நாடு, காடு ஆகிடாது! நல்ல நாடு கண்டிடலாம் என்று தம்பிக்கு மலெழுதும் அண்ணா தான் காணவிரும்பும் இலட்சிய பூமியையும் தெளிவுறக் குறிப்பிடுகிறார்.
எல்லோரும் இன்புற்று வாழும் இடம் தான் என் லட்சிய பூமி. ஒருவரை ஒருவர் அழுத்தாமல் ஒருவரை ஒருவர் சுரண்டாமல் எல்லோருக்காகவும் நான். எனக்காக எல்லோரும் என்ற முறையில் சமூகம் அமையுமானால் அதைத்தான் என் இலட்சிய பூமி.
அரசியல் முறையில் அதை (கூட்டாட்சி) கூட்டாட்சி என்று சொல்லலாம் பொருளாதாரத் துறையில் (சோசலிசம்), சமதர்மம் என்று சொல்லலாம், அரசியல் அமைப்பின் முறைப்படி (ஜனநாயகம்) சனநாயகம் என்று சொல்லலாம் இலக்கியத் துறையில் அதை (கருத்தியல்வாதமும்) என்று கூறலாம்.
மக்களுக்காகவே அரசு என்ற அழுத்தந்திருத்தமான கருத்துடைய அண்ணா நில உச்சவரம்புச் சட்டம் (1960) வந்த போது உழுது, பாடுபடும் உழவர்களைப் பாதுகாப்பதாக உழவோர்க்குப் பயனளிப்பதாக அச்சட்டம் இருக்க வேண்டுமென வற்புறுத்துகிறார்.
உண்மையிலேயே உழுபவர்களுக்கு நிலம் சொந்தமாக வேண்டும். அவர்களுக்கு நிலம் தரப்படவேண்டும் என்று எண்ணமிருந்தால்-உண்மையிலேயே நிலத்தில் யார் தன்னுடைய உழைப்பைப்போட்டு, அதன் மூலன் கிடைக்கிற பலனைத் தன்னுடைய வாழ்க்கைக்காக வைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள்தான் விவசாயிகள், உழவர்கள் என்ற கருத்தில் அவர்களுக்கு நிலங்கள் கொடுக்கவேண்டும் என்ற விளக்கம் தரப்பட்டிருக்குமானால், உண்மையில் இந்த மசோதாவில் முற்போக்குச் சக்தி இருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் பெருஞ்செல்வர்களான மிராசுதார்களையும் ஆலை அதிபர்களையும் பாதுகாக்கும் வகையில் மேய்ச்சல் காடு மற்றும் தோட்டங்களுக்கும் கரும்பு விவசாய நிலங்களுக்கும் விதிவிலக்கு அளித்திருப்பதைத் தட்டிக் கேட்டு மசோதாவிலுள்ள ஓட்டைகளை எடுத்துக்காட்டி மத்திய அரசின் முதலாளித்துவச் சார்பைக் கண்டிக்கிறார்.
திறந்த உள்ளமும் தெளிந்த உரைவீச்சும்
“உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கிலே ஒளியுண்டாகும்” என்று பாரதி சொல்வதற்கிணங்க அண்ணாவின் உள்ளம் நேர்மையால் நிரம்பியிருந்ததால் பொய்யர்களையும், புரட்டர்களையும் சாடுவதில் சற்றும் சளைக்கவில்லை. மத்திய அரசினர் கூட அண்ணாவின் சொல்லும் செயலும் நியாயமானவை என்று உணரும் வகையில்தான் தம் கருத்துக்களைச் சட்டமன்றங்களிலும், நீதிமன்றங்களிலும் தக்கச் சான்றுகளுடன் நயம்பட உரைத்து நிலைநாட்டியுள்ளார்.
அரசியலை மதுவாக்கி, மாளிகையை ஆடல் அரங்காக்கி, பதவி எனும் பதத்திற்கு, படாடோபம் எனும் தாளமிட்டுப் பக்குவமான பரதநாட்டியம் பரங்கிமுன் ஆடிக்காட்டிப் பரிசு பெற்றவர் போக உழைப்பினால் உடல் மெலிந்து வறுமையால் உருமாறி, உரிமை பெற வேண்டுமென்ற உணர்ச்சியால் போரிட்டு, வடு பெற்று, வளையாது களத்தில் நின்று வாள்போயினும் மாற்றானின் தாள் பணியாது சூள் உரைத்தபடி உயிர் ஊசலாடும் வரை நடக்கும் சூரர்களுக்கு உற்சாக உரையாற்றி அழைப்பு விடுக்கிறார்.
இங்கே நாங்கள் உழைப்பாளிகளைக் கேட்கிறோம். அரசியல் கழைக் கூத்தாடிகளையல்ல; சமர்செய்யும் சக்தியுள்ளவரை அழைக்கிறோம். சர் களையல்ல, “திவான்பகதூர் களையல்ல, தீரர்களைத் தேடுகிறோம்.
இரணகளத்தை ரம்மியமானது என்று எண்ணுபவர்களைத் தான் எண்ணிப்பார்க்கிறோம். ராவ் சாகிப் களையல்ல விடுதலை வீரர்களின் அணிவகுப்பிலே சேருமாறு அழைக்கிறோம். பிரிட்டிஷ் சாம்ராஜ்ய அதிகாரிகள் ஓய்வு நேரத்தில் தயாரிக்கும் பொம்மைகளையல்ல. உறுத்தும் உண்மைகளை உரைகளில் உலவவிட்டதோடு தாம் படைத்த கதைகளிலும் நாடகங்களிலும், ஒருசில கவிதைகளிலும் இயக்கச் சிந்தனைகளை இழைத்து நேரிய அரசியல் ஞானத்தை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் சிந்தையில் செலுத்தியவர் அண்ணா.
தஞ்சை வீழ்ச்சி, தீர்ப்பளியுங்கள் போன்ற சிறுகதைகளிலும் ‘சந்திரமோகன்’, சொர்க்கவாசல், இன்ப ஒளி, கண்ணாயிரத்தின் உலகம், கண்ணீர்த்துளி போன்ற நாடங்களிலும் அண்ணாவின் தெறிப்பான அரசியல் கருத்துக்கள் ஆங்காங்கே மிளிர்கின்றன. மக்களுக்கும் அரசுக்கும் உள்ள பிணைப்பை அரசியலைச் செம்மையாக நடத்த வரிசெலுத்தக் கடமைப்பட்டவர்கள் மக்களென்றும் மக்களுக்கு வாழ்வளிக்கக் கடமைப்பட்டவர்கள் அரசியலாரென்றும் நறுக்குத் தெறித்தாற்போல் கூறுகிறார்.
இவையனைத்தையும் நோக்க எழுத்தும் பேச்சும் செயலும் இணைந்து அரசியல் உலகில் மாசுமறுவற்ற சத்தியச் சுடராக மிளிர்ந்தவர் அண்ணா என்பது புலப்படும்.
அது 1950 வருடங்களில் நிக்ழ்ந்த சம்பவம் ..
டாக்டர் அப்துல் கலாம்
அது 1950 வருடங்களில் நிக்ழ்ந்த சம்பவம் .. தமிழ்நாடு முழுவதும் சூராவளியாகப் பயணம் செய்து மக்களைத் தன்னுடைய சாதுர்யமான பேச்சினால் கவர்ந்து கொண்டிருந்தார் அண்ணா. அவருடைய எரிதழலும் தென்றல் காற்றும் கலந்த அறிவார்ந்த பேச்சு மக்களிடையே ஒரு பெரிய எழுச்சியையே ஏற்படுத்திக் கொண்டிருந்தது. இராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் பள்ளி மாணவர்களாகிய நாங்களும் மகுடிக்கு அடங்கிய பாம்புபோல் அந்த வசீகரப் பேச்சில் கட்டுண்டு கிடந்தோம்.
அவரை எப்படியாவது எங்களுடைய பள்ளி விழாவுக்கு அழைத்து வந்து பேச வைக்க வேண்டும் என்கிற ஆசை தணியாத தாகமாய் மாறியது. இரு நாள் நானும் சக மாணவர்கள் சிலரும் சென்னைக்கு ரயில் ஏறி விட்டோம். அறிஞர் அண்ணாவின் வீட்டைக் கண்டுபிடித்து அவரைச் சந்தித்தும் விட்டோம். மிக எளிமையான வீட்டில் ரொம்ப சிம்பிளாக இருந்த அந்த மாபெரும் தலைவரை முதல் முதலாகப் பார்த்த போது எனக்கு வியப்பில் மூச்சடைத்தது. இவரா மேடைகளில் புயல் கிளப்பும் பேச்சுக்களை அனல் பறக்க விடுபவர் என்கிற எண்ணம் ஏற்பட்டது.
ஆனால் அந்த கரகரப்பான மயக்கும் குரல் அருகில் ஒலித்ததை நான் நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். கைலி, கை வைத்த பனியன் மற்றும் ஷேவ் செய்யாத முகத்துடன் இருந்த அண்ணா, ‘இப்போதைக்கு என்னால் அங்கே வர முடியாது’ என்று சொன்னதும் எங்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. ஆனாலும் நாங்கள் விடாப்பிடியாக ‘கண்டிப்பாக வந்தே ஆகவேண்டும்’ என்று பிடிவாதம் பிடித்தோம். மெலிதாகப் புன்னகை புரிந்த அவர் ‘சரி, திருவையாருக்குச் சுற்றுப்பயணம் வரும்போது உங்கள் பள்ளிக்கு அவசியம் வருகிறேன்’ என்று உறுதி மொழி அளித்து எங்களை அனுப்பி வைத்தார். நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
திரும்பும் வழி எங்கும் அண்ணா எங்கள் பள்ளிக்கு வந்து பேசுவது போன்ற கனவுகளே வந்து கொண்டிருந்தன. இங்கே சிக்கல் ஒன்று இருந்தது. நாங்கள் சென்னைக்குக் கிளம்பி வந்து அண்ணா அவர்களைப் பார்த்ததோ அவர் எங்கள் பள்ளிக்கு வர ஒப்புக்கொண்டதோ எங்கள் பள்ளித் தலைமை ஆசிரியருக்குத் தெரியாது. அன்றிருந்த திராவிட இயக்க அரசியல் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருந்தது. தலைமை ஆசிரியருக்குத் தெரிந்தால் திட்டுவார் என்று பயந்து அவரிடம் இந்த விஷயத்தை மறைத்து விட்டோம்.
அண்ணாவிடமிருந்து ஒருநாள் நான் இந்த தேதியில் பள்ளிக்கு வருகிறேன் என்கிற தகவல் வந்ததும் நாங்கள் புளகாங்கிதம் அடைந்தோம். இனிமேலும் தலைமை ஆசிரியரிடம் மறைக்க முடியாது என்கிற சூழ்நிலையில் அவரிடம் தயங்கித் தயங்கி விஷயத்தைப் போட்டு உடைத்தோம். கடுங்கோபம் கொண்ட அவர் தன்னிடம் கேட்காமல் எப்படி அவரை அழைக்கலாம் என்று கேட்டு ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதித்தார். அவரை மெல்ல மெல்ல ஆசுவாசப் படுத்தினோம். கடைசியில் ஒப்புக்கொண்டார்.
அண்ணாவை வரவேற்பதற்கான கோலாகலமான ஏற்பாடுகளைச் செய்தோம். இராமநாதபுரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டிருந்தது. அண்ணாவும் எங்கள் பள்ளிக்கு வருகை தந்தார். அருமையான உரையை நிகழ்த்தினார். மேடைப் பேச்சில் அவருடைய அணுகுமுறை மிகவும் வித்தியாசமானது. அன்று எங்கள் பள்ளி மேடையில் ஏறிய அவர் மாணவர்களாகிய எங்களைப் பார்த்து ‘நான் எந்த தலைப்பில் பேச வேண்டும் என்று சொல்லுங்கள் அதில் பேசுகிறேன்’ என்றார். ஒரு கணம் நாங்கள் திகைத்துப் போனோம். எங்களுக்குள் அவசர அவசரமாக பேசி முடிவெடுத்து ‘நதிகள்’ என்கிற தலைப்பில் பேசுமாறு வேண்டினோம்.
மடை திறந்த வெள்ளம் போல் அந்தத் தலைப்பில் பேச ஆரம்பித்தார் அறிஞர் அண்ணா. மனித வரலாற்றில் ஐயாயிரம் வருடங்களுக்கும் மேலாக நதிகள் எப்படி மனித நாகரிகத்தை மேம்படுத்தின என்பதில் ஆரம்பித்து, இந்திய நாகரீக வளர்ச்சியில் நதிகளின் பங்கு, மற்றும் மேற்கு நாடுகளான சுவிட்ஸர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து அமெரிக்கா முதலியவற்றில் நதி நீர் எவ்வளவு அற்புதமாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது வரை சுமார் ஒன்றரை மணிநேரம் தேனருவி போன்ற பேச்சை அளித்தார். நாங்கள் மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தோம். நதிகளின் முக்கியத்துவம் பற்றி அப்போது அவர் பேசிய பேச்சு என் மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்தது. இன்றைக்கும் நான் பேசும் பல கூட்டங்களிலும் எழுதும் கட்டுரைகளிலும் நதி நீர் இணைப்பின் முக்கியத்துவம் பற்றிச் சொல்வதற்கு அந்தப் பேச்சு ஒரு ஆரம்ப விதை என்றே சொல்லலாம்.
ஐம்பது வருடங்களுக்கு முன்னால் அந்த தீர்க்கதரிசி பேசியது இன்று நிறைவேறக்கூடிய ஒரு சூழ்நிலை மெதுவாகக் கனிந்து வருகிறது. தீர்க்கதரிசிகள் பலரின் கனவுகள் பலிக்கும்போது அவர்கள் இருப்பதில்லை என்பது வரலாற்றில் சோகமான நடப்பு.
நமது நாட்டில் அண்டுதோரும் 1500 பி எம் சி நதிநீர்
அண்ணா ஓர் உரைநடை வேந்தர்
வேளூர். நாகமாணிக்கம்
பேரறிஞர் அண்ணா அவர்கள், தாய்த்திருநாடு வாழவும் வளரவும் தம் சைரமிகு உரைநடையை, உடம்பின் தன்மையறிந்து உயிர் காக்கும் மருத்துவம், செல்லும் வழியெல்லாம் ஆராய்ந்து அயராது பயன்படுத்தினார்.
அண்ணா அவர்கள் வையத்தின் பழநிலவாம் தமிழ் மொழியின் தரம் மறந்தார், தரம் மறைத்தார் நிலையும் நினைப்பும் அகன்றிடத் தன் ஊற்றமிகு உரைநடையை ஏற்றம் பெற விழையாதாரும விழைந்து ஏற்றம் பெற்றிடப் பயன்படுத்தினார்.
வாழ்வின் ஓர் அங்கமாய் அமைந்திட வேண்டிய மக்களாட்சிப் பண்புகள் மங்காது மறையாது நாளும் வளர்பிறைபோல் வளர்ந்திடத் தம் முத்தான உரைநடையை என்றும் பெரும் சொத்தாகக் கொண்டு பயன்படுத்தினார்.
வீட்டுக்கம் நாட்டுக்கும் நலஞ்செய்யும் நாநலத்தை எந்நலத்தினும் தன்னலமாகக் கைவரப் பெற்றிருநத அண்ணா அவர்கள் வீறுமிக்க, விசைகொண்ட – அதே நேரத்து அனைவரையும் தாளமிடச் செய்யும் தரமான இன்னிசை போன்ற உரைநடையையும், மனித மேம்பாட்டுணர்வுகள் முனைப்புடன் உயர்ந்திடப் பயன்படுத்தினார்.
தீயன நிக்கா நெஞ்சும், தேனென இனிக்கும்
மொழியும், வையகம்
போற்றும் நெறியும் நமக்கு
உரித்தானவை என்கிறார்.
(இசைபட 14.01.1959 வாழ்வோம்)
அண்ணாவின் பளிங்கு போன்ற உளப்பாங்கும், கன்னல் நிகர்த்த அவருடைய உரைநடைப் பாங்கும் மேலிரண்டு வரிகளில் இழையோடித் தவழ்கின்றன.
நெஞ்சத் தூய்மை அமையின் தீயன அகன்று நன்மைகள் பெருகும்; தேனென இனிக்கும் மொழியைப் போற்றின் வானென நம் நலிவெல்லாம் அகலும்; நலமெல்லாம் கூடும் என்றார்.
அண்ணாவின் நெகிழ்ந்த நெஞ்சகத்தே மலர்ந்து மணம் பரப்பிய எண்ணங்கள் ஆயிரம்! ஆயிரம்!
அவை, பாசம் மிக்கன; பண்பாடு மிகுந்தன; தூய்மை நிறைந்தன.
பண்பாட்டின் கருவூலமாய் விளங்கிய அண்ணாவின் எண்ணங்கள், மண்ணின் சுவைபோன்று உரைநடையாய் உருக்கொண்டபோது, அம் மறுமலர்ச்சி நடையின் குணம் உணர்ந்த உயர்ந்தோர், அண்ணாவின் உரைநடையை வியந்து போற்றினர்.
நெகிழ்ந்த நெஞ்சங்கொண்ட அண்ணாவின் உரைநடை, எவரையும் ஏமாற்றாத, அதேபோது எவரிடமும் ஏமாறாத சதுரப் பாடுடையதாக அமைந்து அணிபெற்றது.
அண்ணாவின் உரைநடையில் அறிவின் கூர்மையும், அன்பின் அழகும், இன்பம் பாய்ச்சும் பொதுத் தொண்டின் அகலமும் விரிவாக அமைந்திருந்தன. அதேநேரத்து அவற்றைச் சொல்லும் முறையில் அவர்தம் உரைநடை, குளிர்முகப் பார்பையும், இளநகைத் தென்றலும் வீசிட அனைவரையும் தம்பால் ஈர்த்தது.
அண்ணாவுன் உரைநடையில் அதிகாரம் இராது; அதிகாரமும் தலை தூக்காது; ஆனால் செய்திகளைப் பகுத்துக் கூறும் அதிகாரங்கள் பலவாக அமைந்திருக்கும்.
தென்னை தருவதுதானே என்பதால் கள் விரும்பத் தக்கது ஆகிவிடாது. தம்பி அதுபோலவேதான்! செயல் வீரதீரமிக்கது என்பதால் மட்டுமே பாராட்டப் படத்தக்கது போற்றப்படத்தக்கது என்று கூறிவிடமுடியாது
(முள்ளு 17.04.1960 முனையிலே)
இப்பகுதியில் அண்ணா அவர்கள், நம்மை உய்த்துணர்ந்துகொள்ளுமாறு ஓர் அரிய கருத்தினைக் குறிப்பிடுகின்றார்.
தென்னை இயல்பாக இளநீரைத் தருகின்றது; கள்ளை அன்று, ஆனால் ஆகாக் குணங்கொண்ட மனிதர்களைத் தம்மிடம் நெருங்கிவிட்டதால் அன்றோ; தென்னை கள்ளையும் தரநேர்கின்றது.
வீரமும் தீரமும் அப்படித்தான்! நல்வழிகளை நாடாது அழிவு தரும் பாதையில் விரைந்து செல்லுமாயின், ஆகா நெறிகளைத் தோழர்களாகக் கொள்ளுமாயின், அவ்வீரமும் தீரமும இளநீருக்கு மாறாகக் கள்தரும் தென்னைபோல, அலங்கோலத்துககும் அழுகுரலுக்கும் வித்திடும் விபருதங்களாகவே அமையும் என்பதனை எவ்வளவு அழுத்தமாகக் கூறுகின்றார்; உய்த்துரைவும் வைக்கின்றார்.
செங்கிஸ்கான், தைமூர் போன்றோர் விளைவித்த கொடுமைகளின் கடுமையைச் சாடுகின்றார். அக்கொடுமைகள் இயற்கை சில வேளகளில் கக்கிடும் கொடுமைகள் போன்ற கொடுமைகள் என்று கண்டனங் கலரந்த உரைநடையால் வெளிப்படுத்துகின்றார்.
அண்ணாவின் உரைநடை, எவரையும் ஆட்படுத்தாத அதேநேரத்து எவரிடத்தும ஆட்படாத அளவில், நிமிர்ந்த நெஞ்சும் நேர்கொண்ட பார்வையும் வாய்ந்த உரைநடை.
அண்ணாவின் உரைநடை, தாயினும் சாலத் தமிழரிடம் உறவும் உரிமையும் ஏற்படுத்திக் கொண்ட கனிவுமிக்க உரைநடை.
திருவள்ளுவர், அளவு கடந்த மகிழ்ச்சியினால் ஏற்படும் சோர்வு (மறதி) வரம்பிலாச் சினத்திலும் தீது என்பார். மேலும் அச்சோர்வினால் அழிந்தவரை நினைவில் கொள்க என்பார்.
திருவள்ளுவத்தின் எச்சரிக்கையை உளங்கொண்ட அண்ணா அவர்கள்,
மகிழ்ச்சி மயக்கமகுதல் கூடாது; மதுமாந்திடும் மந்தி போன்றதன்ற மனிதகுலம் மகிழ்ச்சி புது முயற்சிகட்கு ஊக்குவிக்கம் மாமருந்து; மதுவன்று, ஒரு விளைவு, மறுவினைக்குத் துவக்கம்; மகிழ்ச்சி வினையின் இறுதி முடிவல்ல; வினைப் பயன்; புதிய வினைக்கு அழைப்பு என்று வினையில் தூய்மையும், வினையில் உறுதியும் வேண்டுமென்பார் வினை என்றும் முடிவதில்லை என்றும் கூறித் தன் உரைநடையைச் செயல் ஆககமும், செயல் ஊக்கமும் செறிந்திடச் செழிப்புடன் பயன்படுத்தினார்.
தொன்மையும் நன்மையும் வாய்ந்த தமிழச் சான்றோரின், உலகச் சான்றோர்களின் வழிநின்றும், ஆயிரமாயிரம் நற்சிந்தனைகளை, அசைந்தசைந்து வரும அலங்காரத் தேர் போன்ற அழகு நடையில் அள்ளி அள்ளி வழங்கிய தமிழகத்தின் விடிவெற்றியாம் – வாராது வந்த மாமணியாம் – தமிழையும் தமிழ் மரவினையும் நன்காய்ந்த தலைமகனாம் பேரறிஞர் அண்ணா அவர்களை, மனம் இனிக்க, சொல்மணக்க முறைதிறம்பா உரைநடை வேந்தர் என்றழைப்பதால் நாம் பெருமை பெறுவோம் .
வாழ்க! வாழ்க! வாழ்க அண்ணா! வளர்க! வளர்க! அவர் தம் பண்பாடு வளர்க!
(காஞ்சிநாடு – 07.04.1992)
அண்ணா மகா!
அண்ணா தி கிரேட்
ஒரு அழகிய தடாகம். தாமரைக் கொடிகள் அடர்ந்திருக்கின்றன. அத்தாமரைக் கொடி மொட்டு விடுகின்றது. மொட்டு வளர்கிறது. ஒரு நாள் மொட்டு விரிந்து தாமரை மலராகிறது. மணம் பரப்புகிறது, ஒளி வீசுகிறது. அதைப் பார்க்கிற மக்கள் அதைப் பறித்து மடியில் வைத்துக்கொள்கின்றனர் அல்லது தலையில் வைத்து மகிழ்கின்றனர். தாமரை மொட்டாகி மலராவது அதன் இயற்கைத் தன்மை. தான் மலர்வதற்கு அது யாருடனும் சண்டையிடுவதில்லை, யாரையும் வீழ்த்துவதும் இல்லை, வஞ்சிப்பதும் இல்லை. தன்னை எடுத்துவைத்துப் போற்றுங்கள் என்று மக்களிடம் வேண்டுவதும் இல்லை. ஆனால் அம்மலரின் வனப்பும், ஒளியும், மணமும் மக்களை ஈர்க்கின்றன; மக்கள் அதை எடுத்துப் போற்றுகின்றனர். தாமரை மலர்வது போல் தன் இயல்பால் தலைவர்களாய் வளர்ந்து மலர்ந்தவர்கள் இந்தியாவில் இருவர்தாம். அவர்கள் அண்ணல் மகாத்மாவும், பேரறிஞர் அண்ணாவும். இவர்கள் தங்களை மக்களின் மீது தலைவர்களாகத் திணித்துக் கொள்ளவில்லை. தலைமையைப் பிடிக்க யாரையும் அழுத்தவில்லை, யாரையும் வஞ்சிக்கவில்லை, யாரையும் இடித்துக்கொண்டும் தள்ளிக்கொண்டும் முன்னேறவில்லை. இவர்கள் தங்களுடைய கொள்கைகளில் ஊன்றி நின்று மக்களுக்குத் தொண்டே இயற்றினார்கள். மக்களாகவே இவர்களைத் தலைவர்களாக மனமுவந்து ஏற்று இவர்கள் பின் நடந்தனர். இவ்விருவரைத் தவிர மற்ற தலைவர்கள் எல்லோரும் தலைமைய முயன்று பிடித்தவர்களே. இப்போது நாம் பேச இருப்பது அண்ணாவைப் பற்றி.
அண்ணா எளிய நெசவாளர் குடும்பத்திலே பிறந்தவர். அவர் பொருளாதாரத்தில் பி.ஏ. (ஹானர்ஸ்) பட்டம் பெற்றார். சட்டப்படிப்பு வசதியின்மையால் தொடரமுடியாமல் நின்றுபோனது. இவர் படிக்கவைக்கப்பட்டது படித்தபின் குடும்பத்தைத் தாங்குவார் என்பதற்காக. ஆனால் இவர் இரண்டாவதுகூட முழுமையாகப் படிக்காத பெரியாரைத் தலைவராக ஏற்றுப் பொதுவாழ்வுக்குத் தன்னை முழுமையாக ஒப்படைத்துக்கொண்டார். இது அவருடைய முதல் தியாகம். இவர் பொது வாழ்வில் நுழைந்தது 1937 இல். அந்தக்காலத்தில் இவருடைய படிப்பைக் கொண்டு நல்ல சமூக அந்தஸ்தும் வருமானமும் தரக்கூடிய அரசாங்க வேலைக்குப் போயிருக்க முடியும். அந்த வாய்ப்பை விட்டார். நீதிக்கட்சி என்று அறியப்படும் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் தலைவர்களைப் போல் ஆங்கிலேய ஆதரவு அரசியல் பதவிகளைப் பெறவும் முயலவில்லை. மக்களிடம் புகழ் பெற்றுக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியிலும் சேரவில்லை. அன்றைய தமிழ் மக்களின் வெறுப்புக்கு ஆளாகியிருந்த பெரியாருடன் தன்னை இணைத்துக்கொண்டது தியாகமல்லாமல் வேறு என்ன? பெரியாராவது வசதி படைத்தவர். அண்ணாவோ ஏழை. எதிர்கால வாழ்க்கை வளமாக இருக்கும் என்று கற்பனைகூட செய்ய முடியாத நிலை. அந்தச் சூழ்நிலையில் பொதுத் தொண்டுக்குத் தன்னை ஒப்படைத்துக்கொண்டதுதான் மேன்மையான தியாகச் செயல். இந்தத் தியாக உள்ளத்துடனேயே அண்ணா தன் இறுதிக் காலம் வரை வாழ்ந்தார்.
இருபதாம் நூற்றாண்டு தமிழக, ஏன் தென்னிந்திய வரலாற்றை அண்ணா இல்லாமல் சிந்திக்க முடியாது. தமிழக வரலாற்றை அவர் செதுக்கினார். 1944 க்குப் பின் அண்ணா வளர்ந்துகொண்டே இருந்தார். அவர் வளர வளர தமிழ் நாட்டின் மற்ற பெரிய தலைவர்கள் அனைவரும் பரிதி முன் விண்மீன்கள் போல் ஒளி குன்றி வேகமாக மறைந்தனர். அண்ணாவின் வளர்ச்சி அவருடைய மேதையாலும் அவருடைய அருள்நிறைந்த உள்ளத்தாலும் அவருக்குக் கிடைத்தது. செயற்கையான விளம்பரத்தாலும் சாமர்த்தியத்தாலும் ஏற்பட்ட வளர்ச்சியன்று. அண்ணா முழுமையாக மக்களுடன் இருந்து அவர்களை வழி நடத்தினார். தமிழ் மக்களுடைய உயிரென அவர் வாழ்ந்தார். தனக்காக மக்களைப் பயன்படுத்தவில்லை; மக்களுக்கு அவர் பயன்பட்டார். இந்தப் போக்குதான் தமிழ் மக்களை அவருடன் இறுக்கமாகப் பிணித்தது. அது தமிழர்களுடைய அண்ணன் ஆனார்.
அண்ணா தமிழ் மக்களுக்கு அவர்களுடைய பண்டைய வரலாற்றைக் கூறி அவர்களைப் பெருமிதம் கொள்ளச் செய்தார். பண்டைத் தமிழ் இலக்கியங்களை தமிழ்ப் புலவர்களும் தமிழ் அறிஞர்களும் மாணவர்களுக்குப் பாடம் சொல்லி வந்தனர். அவை பற்றி நூல்கள் எழுதினர். ஆயினும் மக்களிடம், வெகு மக்களிடம் தமிழ் உணர்ச்சியை ஊட்டி எழுச்சியை உருவாக்கியவர் அண்ணாவே. அண்ணாதான் தமிழர்களிடம் அவர்களுடைய மொழியைப் பற்றிய பெருமிதம் கொள்ளச் செய்தார். அண்ணா மொழி உணர்ச்சியை வைத்து மக்களை ஏமாற்றி செல்வாக்கு பெற்றார் என்னும் தவறான பிரச்சாரம் இன்று வரை தொடர்கிறது. அண்ணா தமிழ் பற்றி பேசத் தொடங்கியபோது மக்கள் உணர்ச்சியற்று இருந்தனர். இருந்த உணர்ச்சியை அவர் பயன்படுத்தி லாபம் பெறவில்லை. அண்ணாவின் பிரச்சாரத்தால்தான் தமிழ் ஆசிரியர்களுக்கு தனி மதிப்பு ஏற்பட்டது. தமிழ் எழுச்சியை அண்ணா உருவாக்கியதால்தான் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி வலுததது. தமிழ், தமிழரின் பெருமையை தமிழ்நாட்டில் மட்டும் பேசவில்லை. அதை மாநிலங்கள் அவையில் தனி மனிதனாக நின்று முழங்கினார். தமிழ்நாட்டின் பாமரன்கூட தன் மொழிக்காக உயிரைவிடத் துணிந்தது அண்ணாவால்தான். அவர் உருவாக்கிய எழுச்சி இன்று இல்லை. காரணம் இன்று தமிழைப் பற்றி உரத்துப் பேசுபவர்களிடம் அண்ணாவின் உண்மையும் நேர்மையும் இல்லை. அண்ணா தமிழ்மொயின் பெருமையைக் கூறிய போதெல்லாம் அவரே உணர்ச்சி வசப்பட்டு பேசினார். மாநிலங்கள் அவையிலே பேசும்போது தமிழுக்கு உரிய இடத்தைப் பெறும் வரையில் ஓயமாட்டேன் என்று முழங்கினார். அவரிடம் உண்மையான தமிழ் உணர்ச்சி இருந்ததால்தான் அவரால் தாழ்ந்த தமிழகத்தைத் தட்டி எழுப்ப முடிந்தது. தமிழ் இனம், மொழி என்றெல்லாம் இன்றும் பேசுகின்றார்களே, இவர்களால் ஏன் அந்த எழுச்சியைக் கொண்டு வர முடியவில்லை? ஏனெனில் அண்ணாவின் உண்மையும், நேர்மையும் இவர்களிடம் இல்லாமைதான். இதிலிருந்து அண்ணா தமிழ் உணர்ச்சியை வைத்து ஆதாயம் தேடவில்லை; மக்களை எழுச்சிபெறச் செய்ய தமிழ் உணர்ச்சியை ஊட்டினார் என்பது. தமிழ் மொழி எழுச்சியுணர்வு அண்ணாவின் தனிக்கொடை; பெரியாரிடம் இருந்து பெற்றதில்லை. தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் சொன்னதிலிருந்து இது தெரியவரும்.
அண்ணா தமிழுக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுத்தார். அண்ணாவே கூறியுள்ளது போன்று அவர் இலக்கண வரன்முறையுடன் தமிழ் படிக்கவில்லை. அவருடைய ஆங்கிலப் புலமை தமிழைவிட அதிகம். அவர் தாமே தமிழ் இலக்கியங்களைப் பயின்றார். தமிழ் மக்களை உயர்த்த சீரிய கருத்துக்களை அவர்களுக்கு கூற தமிழிலே பேசினார், எழுதினார். தான் கற்றதனாலும் சிந்தித்ததாலும் உருவான கருத்துக்களை கதைகளாக, கட்டுரைகளாக, நாடகங்களாக எழுதி வெளிப்படுத்தினார். அப்படி அவர் எழுதும்போது ஒரு தமிழ் நடை புதிதாகத் தோன்றியது. அவர் எழுதிய பின்னர் தமிழே ஒரு புதிய வடிவம் கொண்டது. அது அண்ணாவின் தமிழாக மாறி அவருடைய மாற்றாரையும் அவருடைய தமிழைக் கையாளவைத்தது. புலவர் கல்லூரிகளில் முறையாகப் பயின்ற மாணவர்களும், ஆசிரியர்களும் அண்ணாவின் திராவிடநாடு இதழின் தமிழைப் பின்பற்றினர். இன்றைய தமிழிலே அண்ணா கலந்திருக்கிறார். அண்ணாவை எதிர்ப்பவன் கூட அவர் கலந்திருக்கும் தமிழில்தான் பேசுகிறான். எழுதுகிறான். அவர் தமிழையே மாற்றும் வகையில் எழுதியிருந்தாலும அவர் கல்கியைப் போல், புதுமைப்பித்தனைப் போல் எழுத்தாளர் என்று பெயர் வாங்க எழுதவில்லை. மக்களை வழி நடத்த கருத்துக்களை வெளியிடவே எழுதினார். அவ்வெழுத்துக்கள் இலக்கியமாய் மலர்ந்தன. மகாத்மா காந்தி எழுதியதைப்போல். அண்ணா மேடையில் ஏறி நடிக்கவும் செய்தார். நடிகனாவதற்கா? இல்லை, மக்களுக்கு அறிவு புகட்ட.
அண்ணா ஒரு முழுமையான ஜனநாகயவாதி. ஜனநாயகத் தத்துவத்தில் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருந்தார். ஜனநாயகம் என்பது வெறும் ஆட்சிமுறை மட்டுமன்று, அது ஒரு வாழ்கை நெறி என்று மக்களுக்கு அறிவுறுத்தினார். அது ஒப்புக்கு சொல்லப்பட்டது இல்லை. அவரே அதை வாழ்நெறியாகக் கடைபிடித்து ஒழுகினார். தான் உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒரு ஜனநாயக அமைப்பாகவே உருவாக்கினார். இந்த ஜனநாயக உணர்வே அவரைப் பெயரியாரைவிட்டு பிரிய காரணமானது. பெரியாருடைய கட்சியில் ஜனநாயகம் கிடையாது. பெரியார் வாழ்நாள் தலைவர். அங்கு தேர்தல் கிடையாது. ஆனால் அண்ணா உண்டாக்கிய தி.மு.க.வில் பொதுச்செயலாளரும் மற்றவர்களும் கழக உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு யாராவது ஒருவர் தன்னுடையது என்று உரிமை கொண்டாட முடியும் என்றால் அது அண்ணாதான். தி.மு.க. அண்ணாவின் சிந்தையில் தோன்றி உருப்பெற்றது. அவருடைய அறிவால், ஆற்றலால், உழைப்பால், தியாகத்தால் வளர்ந்த இயக்கம். ஆயினும் அதைத் தன்னுடைய கட்சி என்று அண்ணா சொன்னதில்லை. கழத்தோழர்கள் அனைவருக்கும் அது உரிமையுடையது என்றே அவர் கூறினார்; தோழரகளை அவ்வாறு எண்ணப் பழக்கினார். கழகத் தோழர்களை ஜனநாயக நெறி முறைகளுக்குப் பயிற்றுவித்தார். ஒவ்வொரு கழகத் தோழனும் கட்சி வளர்ச்சியில் பங்குபெறவேண்டும் என அவர் விரும்பினார். தன்னுடைய வாழ்நாளிலேயே தன்னால் உருவாக்கப்பட்ட நாவலர் நெடுஞ்ழியனை கழகத்தின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கச் செய்தார். திருச்சியில் நடந்த இரண்டாவது மாநில மாநாட்டுக்கு அவரைத் தலைமையேற்கச் செய்து வரவேற்புரை கூறும் முகத்தான் அவர் பேசிய பேச்சு வரலாற்றுச் சிறப்புடையது. அவருடைய வரவேற்புரை இதுதான்.
வா தம்பி! தலைமை தாங்க வா. ஆணையிடு, உன் வழி நடக்கிறோம் இது வெறும் பேச்சு அன்று. அண்ணாவின் ஜனநாயகப் பண்பை வெளிக்காட்டும் பேருரை. அவரைத் தனக்கும் தலைவராக ஏற்றார். அவருடைய ஆணைக்கு மற்ற கழத்தோழர்கள் போலவே தானும் கட்டுப்படுவதாக அறிவிக்கிறார். தன்னை மற்ற கழத் தோழர்களுக்கு மேலாகக் காட்டாது சமமாகவே காட்டுகிறார். இதுவன்றோ உண்மையான ஜனநாயகம்! இப்படி ஒரு தலைவரை இன்று காட்ட இயலுமா? கழகப் பொதுக்குழுவைக் கூட்டி கருத்துக் கேட்காமல் அண்ணா தானாக தன்னிச்சையாக எந்த முடிவையும் மேற்கொண்டதில்லை.
ஜனநாயகப் பண்பின் ஒரு முக்கியமான கூறு அருத்தவர்கள் கூறும் கருத்துக்களை மதித்துக் கேட்பது, எல்லாம் எனக்குத் தெரியும் என்பது எதேச்சாதிகாரப் போக்கு. மற்றவர்களுக்கும் அறிவு உண்டு என்று நம்பவேண்டும். இந்த ஜனநாயகப் பண்பை வெளிப்படுத்தவே அண்ணா சொன்னார் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று. அது வெறும் அலங்கார வசனம் இல்லை. ஆழ்ந்த ஜனநாயக உணர்வின் வெளிப்பாடு. இந்த ஜனநாயகப் பண்பை நடைமுறையில் கடைப்பிடித்தார் என்பதை அவர் முதல்வராக இருந்தபோது அவருடன் தோடர்பு கொண்ட அனைத்துக் கட்சியினரும் நான்றாக அறிவர்.
அண்ணாவின் அனைத்துச் செயல்களுக்கும் அடிப்படையாக அவருடைய அன்புள்ளமும் மனிதாபிமானமும் இருந்தன. ஒரு முறை டி.கே.சீனிவாசன் பேசும்போது குறிப்பிட்டார். அண்ணா பிரச்சனைகளை அறிவுடன் பார்த்தார். மனிதர்களை அன்புடன் பார்த்தார் என்று அண்ணாவே ஒரு முறை கூறினார் அரசியலில் பாசத்துக்கு இடமில்லை என்று கூறுகின்றனர். அது சரியோ தவறோ எனக்குத் தெரியாது. ஆனால் என்னால் எந்தப் பிரச்சனையையும் மனிதத்தன்மை கலவாமல் பார்க்க முடியவில்லை என்று. அந்த ஆழ்ந்த மனிதாபிமானம் அவர் முதல்வராக இருந்து எடுத்த ஒவ்வொரு நடவடிக்கையிலும் வெளிப்பட்டதை எல்லோரும் அறிவர். அதற்கு ஒரு தெளிவான எடுத்துக்காட்டு மாணவர் போராட்டத்தில் ரயில் பெட்டிகள் எரிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட நடவடிக்கை. வன்முறையில் ஈடுபட்ட மாணவர்களைச் சுடுவதற்கு அண்ணா அனுமதிக்கவில்லை. அதுபற்றி சட்டமன்றத்தில் கேள்வி எழுந்தபோது அண்ணா சொன்னார். ரயில் பெட்டிகள் எரிந்தால் மீண்டும் செய்துகொள்ளலாம். மாணவன் உயிர் போனால் வருமா? என்று. இன்னொரு செய்தியும் அவருடைய அருள் உள்ளத்தை, மனிதாபிமானத்தைக் காட்டும். 1965 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்தது. அப்போதைய காங்கிரசு அரசாங்கம் இராணுவத்தை வைத்து போராட்டத்தை அடக்கும் நடவடிக்கை எடுத்தது. கோவையில் இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர். அதைக் கண்டித்து இராஜாஜி போன்ற தலைவர்கள் அறிக்கை வெளியின்னர். அண்ணா எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. டி.கே.சீனிவாசன் அண்ணாவிடம் சென்று ஆளில்லாத தலைவரெல்லாம் அறிக்கை வெளியிடுகிறார்கள். நீங்கள் ஏன் கண்டன அறிக்கை வெளியிடவில்லை? என்று கோபமாக கேட்டார். அதற்கு அண்ணா சொன்னார் இவ்வாறு, கோவையில் சுடுவது இராணுவம். அவர்கள் சுடுவது நிற்கவேண்டும். நான் கண்டன அறிக்கை வெளியிட்டால் உணர்ச்சிக் கொந்தளிப்பு அதிகரிக்கும்; சுடுவதும் தொடரும். மக்கள் சாவார்கள். என்னால் பிணங்களை வைத்து அரசியல் நடத்த முடியாது. முதலில் மக்கள் சாவது நிற்கவேண்டும். அரசியல் லாபம் பெரிதல்ல, மக்கள் நலனே முதன்மையானது என்பது அண்ணாவின் அணுகுமுறை.
இந்த மனிதநேய உணர்வு அண்ணாவின் அரசியல் நடவடிக்கைகள் அனைத்திலும் அறாமல் இழையோடியதை கூர்ந்து நோக்கியவர்களுக்குத் தெளிவாக விளங்கியிருக்கும். இந்த மனித நேயம் அவருடைய கட்சிக் கட்டுமானத்திலும் துலங்கியதைக் காணலாம். எல்லோரும் ஒரு கட்சியை உருவாக்கியபோது தலைவர், தொண்டர்கள், உறுப்பினர்கள் என்ற புற உறவுகளையே ஏற்படுத்தினர். ஆனால் அண்ணா மட்டுமே கழகத்தைக் குடும்பமாக பாசப்பிணைப்புடையதாக உருவாக்கினார். அவர் வெறம் அரசியல் கட்சித் தலைவராக இல்லாமல் குடும்பத் தலைராகத் திகழ்ந்தார்; கழகத் தோழர்களின் அண்ணனாகவே வாழ்ந்தார். இந்தப் பாசக் கதகதப்பை அண்ணா காலத்தில் வாழ்ந்த அனைத்துக் கழகத் தோழர்களும் தங்கள் அனுபவத்தில் உணர்ந்திருந்தனர். இந்தப் பாச உணர்ச்சி அண்ணாவின் பலமும் பலவீனமும். இந்தக் குடும்ப உறபு வேறு எந்தக் கட்சியிலும் காணமுடியாத ஒன்று.
அண்ணா மாளிகையில் இருந்த அரசியலை மண் குடிசைகளுக்கு கொண்டுவந்தார். மிக மிகச் சாமானிய மனிதர்களைக் கொண்டுதான் தன்னுடைய வலிமையான கட்சியைக் கட்டினார். சாமானிய மனிதர்களைத் தலைவர்களாக உறுவாக்கினார். தன்னுடைய அறிவாலும் அன்பாலும் சாதாரண மனிதர்களை சாதனையாளர்களாக மாற்றினார். இந்த ரசவாதத்தை அவர் நிகழ்த்தினார் என்பதை திருமதி சத்தியவாணிமுத்து அண்ணாவின் மாறைவுக்குப் பின்னர் திருச்சியில் கூடிய மாநில சுயாட்சி மாநாட்டில் இவ்வாறு கூறினார். தெருவோரத்தில் கூழாங்கற்களாக கிடந்த எங்களையெல்லாம் அண்ணா பட்டைதீட்டி வைரங்களாக ஜொலிக்கவைத்தார் என்று. இந்தக் கூற்று முழு உண்மை. அண்ணா எந்தப் பணக்காரனுக்கும் அடிமையாகவில்லை. பணக்காரன் கையிலிருக்கும் பணம் குஷ்டரோகியின் கையில் இருக்கும் வெண்ணைக்கு சமம் என்றார். இது அலங்கார மயக்கு வாரசகம் அன்று; அவருடைய அழுத்தமான கொள்கை வெளியீடு. அவர் இருந்தவரை கழகத்துக்கென்று எந்தப் பணக்காரனிடமிருந்து பெருந்தொயைக நன்கொடை பெற்றதில்லை. ஏழைகளின் பணத்தில்தான், ஏழை எளியவர்களின் முயற்கியில்தான் கழகம் வளர்ந்தது. 1967 தேர்தல் நிதியாக கழகம் திரட்டியது வெறும் 11 லட்சம்தான். அப்போது எம்.ஜி.ஆர் கொடுத்த 2 லட்ச ரூபாயை அண்ணா வாங்க மறுத்துவிட்டார். காரணம் எந்தத் தனிமனிதனுக்கும் கழகம் அடிமையாகக் கூடாது என்னும் கொள்கைதான். ஏழையாகப் பிறந்த அண்ணா பணக்காரனாகாமலேயே மறைந்தார். இன்னும் ஆயிரம் செய்திகள் சொல்லவேண்டியுள்ளன. இது ஒரு அறிமுகம்தான் இறுதியாக ஒரு தலைசிறந்த பண்பைக் கூறி இக்கட்டுரையை முடிக்கலாம். அது அண்ணாவின் எளிமை. முதலமைச்சரான பின்பும் அவருடைய எளிமை மாறவில்லை. எந்த ஆடம்பரத்தையும் அவர் மேற்கொண்டதில்லை. புற்றுநோய்க்கு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுத் திரும்பியபோது மருத்துவர்கள் அவரைக் குளிரூட்டப்பட்ட அறையிலேதான் இருக்கவேண்டும், குளிரூட்டப்பட்ட ஊர்திகளில்தான் பயணம் செய்யவேண்டும் என்று அறிவுறுத்தினர். இல்லையேல் அவர் ஆயுள் நீடிக்காது என்றனர். அதற்காக தனியாக குளிரூட்டப்பட்ட வீடு ஒன்றை அரசாங்கம் ஏற்பாடு செய்தது. ஆனால் அவற்றை ஏற்காது பழைய வீட்டிலேயே இருந்தார். தனக்காக மக்களின் வரிப்பனம் செலவாவதை அவர் விரும்பவில்லை. விளைவு அவர் விரைவில் மாண்டார். அவருடைய சாதனைகளுக்கு அவர் பணபலம், மதபலம், ஜாதிபலம், அந்தஸ்துபலம் எதையும் பயன்படுத்தவில்லை. அவருடைய சாதனைக்குப் பயன்பட்டவை அவருடைய அறிவு, உண்மையான அன்பு, அயரா உழைப்பு ஆகியவைதாம். அவருடய அறிவு வறண்ட அன்று அருளில் குழைந்த அறிவு. அந்த மகா அண்ணாவின் நூற்றாண்டிலாவது அவரைச் சரியாக அறிவோம். அவர் வழி நடப்போம்.
அண்ணா வாழ்க!
வீ.சு.இராமலிங்கம், வழக்குரைஞர், தஞ்சாவூர்.
R.Sembian, அண்ணா பேரவை வடிவமைக்கப்பட்டது வலைத்தளம்
பெரியார் எப்படிப்பட்டவர். . . . ?
தந்தை பெரியார் நினைவு நாளில் அறிஞர் அண்ணா
கல்லூரி காணாத கிழவர்!
காளைப்பருவம் முதல் கட்டுக்கடங்காத முரடர்!
அரசியல் நோக்கத்துக்கான முறையிலே கட்சி அமைப்பு இருக்க வேண்டுமென்று அறியாது கிளர்ச்சிக்காரர்!
பொதுமக்கள் மனம் புண்படுமே, புண்பட்ட மக்கள் கோபத்தால் தாறுமாறாக பேசுவரே, ஏன் வீணாக அவர்களின் ஆத்திரத்தைக் கிளப்ப வேண்டும் என்று யூகமாக நடந்துகொள்ள மறுப்பவர்!
யார் யாரைத் தூக்கி விடுகிறாரோ, அவர்களாலேயே தாக்கப்படுபவர்!
கவர்னரைக் காண வேண்டுமே, அதற்கேற்ற கோலம் வேண்டாமோ என்ற யோசனை அல்லவர்!
தமிழ், ஆங்கில தினசரிகளின் ஆதரவு இல்லாதவர்!
ஆரிய மதம், கடவுள் எனும் மடுமந்திரங்களைச் சாடுவதன் மூலம் கேடுவரும் என்று எச்சரிக்கும் போக்கினரின் இச்சைக்குக் கட்டுப்பட மறுப்பவர்!
ஆம்! இராமசாமியின் கட்சியிலே தோட்டக் கச்சேரி கிடையாது!
முனிசிபல் வரவேற்புகளும், முடுக்கான விளம்பரங்களும் கிடையாது!
இலண்டன் கிளை கிடையாது; இலட்சாதிபதிகளின் பிச்சை கிடையாது.
சாமான்ய மக்களின் – இது அரசியல், இது மதம் என்று பகுத்துப் பார்க்கவும் முடியாத மிகமிகச் சாதாரண மக்களின் கூட்டுறவை மட்டுமே பெற்றவர்!
தேர்தலா. . . ? வேண்டாம்! பதவியா? கூடாது! தயவா துரைமார்? தா! அது இனிப்புப் பூச்சுள்ள எட்டி! கூறுபவர் என்றெல்லாம்!
சிறைச்சாலை என்ற பேச்சுக் கேட்டால் முகம் மலர்கிறது!
கிளர்ச்சி என்ற கருத்து இனிக்கிறது, இந்தக் கிழவருக்கு!
இவ்வளவு வயதாயிற்று – இவ்வளவு ஆண்டுகளாகப் பொதுவேலை செய்தார் – ஒரு சர் பட்டம் பெற்றாரா?
ஜெனீவா போனாரா அரசு செலவில்?
அமெரிக்கா போனாரா அரசாங்கத்தில் செலவில்?
கண்டார் எதைக்?
எட்டுமுறை சிறைக்கோட்டம் போய்வந்தார்!
இவர்தானய்யா இராமசாமி நாயக்கர்!
பெரியார் ஒரு மாயாவி
தமிழர் தாசரான!
கிளர்ச்சிக்சாரர் கிழவரான!
சரி!
இப்படிப்பட்ட இராமசாமி, இப்படிப்பட்ட தமிழரைக் கொண்டு, எப்படிப்பட்ட காரியம் செய்ய முடியும் என்ற தைரியம் கொண்டிருக்கிறார்?
தமிழர்கள் மட்டுமே தேசத்தை ஆளலாம் என்ற தைரியத்தைக் கொண்டிருந்தார்!
எப்படி?
எப்படி எனில், அவர் ஒரு மாயாவி!
வேடிக்கைக்காரர் ஜால!
வேடிக்கை பேசாதே என்று கூறுவீர்!
வேடிக்கையல்ல நாம் கூறுவது!
தாசரான தமிழரைக்கொண்டு, வெறும் கிளர்ச்சிக்காரக் கிழவரொருவர் தேசத்தை ஆளலாம் என்று தைரியம் கொண்டுள்ளார் என்றால், மாயவித்தை தெரிந்தவராக இருந்தாலன்றி வேறு எப்படி முடியும்?
அவர் மட்டுமா, அன்பர்களே!
சிற்பி, ஓவியக்காரன், தொழிலாளி, இசைவாணன் இவர்களெல்லாம் மாயாவிகளே!
அந்த மாயாவி இனம்தான் பெரியார்!
பெரியாரின் பெரும்பணி
நாலைந்து சிறு வட்டில்கள், அவற்றிலே வண்ணக் குழம்புகள், கையிலே ஓடு, சிறு பூச்சிடும் கோல், எதிரே ஒரு திரை, இவ்வளவுதான்! இவற்றைக் கொண்டு கடலை, கன்னியரை, கனி குலுங்கு சோலையை, காவலர் அஞ்சும் களத்தை, புன்னகையை, மெல்லிடையை, கண்ணீரை, விண்ணழகை, கதிரோனை, மாலை மதியை, இன்னொரன்ன பிறவற்றைப் படைக்க முடியுமா? அதோ ஓவியக்காரனாகிய மாயாவியைப் பாருங்கள்!
இப்படி அப்படி தீட்டுகிறான்; ஏற இறங்கக் கவனிக்கிறான். இரவும் பகலும், களமும் வளமும், கனியும் பணியும், அவன் இடும் ஏவலுக்காகக் காத்துக் கிடக்கின்றன. ஓவியக்காரன் ஒரு மாயாவி! மண்ணிலே பொன் காண்பீரோ? மாயாவியான தொழிலாளி காண்கிறான்!
உப்பு நீரிலிருந்து முத்து எடுக்கிறான்!
காட்டிலிருந்து வாசனை எடுக்கிறான்!
விஷத்தைப் போக்கி விளையாட்டுக் கருவியாக்குகிறான்.
எதைத் செய்யாமல் இருக்கிறான் அம் மாயாவி?
தோலைத் தட்டுகிறான்; கனிக்கிறோம் நாம்!
நரம்புகளைத் தடவுகிறான்; நாம் நாத வெள்ளத்தைப் பருகுகிறோம்!
என்னவோ கூறுகிறான் – அது நம்மை ஏதேதோ உணர்ச்சிகளில் கொண்டுபோய் ஆழ்த்துகிறது.
இவை இசைவாணனாம் மாயாவியின் செயல்!
இதனால் அது ஆகுமோ என்ற கேள்விக்கு இடமுண்டோ இங்கு?
மண்ணிலே தங்கம் ஏது? கடலிலே முத்து ஏது?
தட்டுத் தடவலிலே இன்பம் ஏது?
எண்ணத்திலே படைப்பு ஏது?
எப்படி முடியும் என்று தொழிலாளி, இசைவாணன், ஓவியக்காரன் ஆகியோரைக் கேட்டால், அவர்கள் நகைப்பார்கள். என்னே இவன் குறை மதி என்று எள்ளி நகையாடுவர்.
மண்ணுக்குள்ளே நெடுந்தூரத்திலே புதைபட்டுக் கிடக்கும் பொன் இருக்குமிடமும், எடுக்கும் விதமும் பாட்டாளி அறிவான். தெரியாதான், இதிலே இதுவா, எப்படி? என்று கேட்பான்.
பெரியார் இராமசாமியின் பெரும்பணி இதுபோன்றதே!
பெரியார் அறிவார்
அவர் அறிவார், தாசராக உள்ள தமிழர் தரணி ஆண்டவர் என்பதும், தரணி ஆண்ட காலத்திலே தன்மானத்தை ஓம்பினர் என்பதும் மானத்தையும் உரிமையையும் பெரிதெனக் கொண்ட தமிழரிடை சாதிப்பித்தும், வைதீக வெறி, அடக்கியாளும் ஆணவம், சுரண்டிப் பிழைக்கும் சூது ஆகியவை கிடையா என்பதும், களத்திலே கடும் போரிடும் வீரர்கள் கவடரின் பொறியிலே வீழ்ந்தனர் என்பதும், மீண்டும் தம்மை உணரும் தன்மை பெற்றுவிட்டால் , தமிழ் இனம் தாசரானதற்குள்ள காரணத்தைக் கண்டறிந்துவிட்டால், அவர்கள் கொலைவாளினை எட்டா, மிகு கொடியோர் செயல் அறவே என்று முழக்கமிட்டுக் கிளம்புவர் என்பதும், தமிழரின் இன்றைய நிலை தாழ்வுடையது, இடர் மிகுந்தது என்ற போதிலும் தங்கள் இனத்தைக் கெடுக்கும் கொள்கைகளை அவர்கள் நீக்கிவிட்டால், களை எடுத்த வயலாவர் – விழித்தெழுந்த வேங்கையாவர் என்பதும் பெரியார் அறிவார்.
மனி மேலே மாசு! மடு மேலே பாசி! களை வயலிடையே!
தமிழர் – அவர்களுக்குள் இந்நாள் நிலவும் தகாதாரின் கூட்டுறவு!
மாசு துடைத்திடுக – பாசி போக்கிடுக – களை நீக்குக – கவடரின் பிடியைப் போக்குக என்று கனிவுடன் கூறுகிறார் கடமை வழி நிற்கும் கிழவனார்!
தைரியம் தந்த தளரா உழைப்பு
அது மட்டுமல்ல, எங்ஙனம் – பிறர் முடியுமா என்று கேட்கும் போதும், உண்மையாகவே செய்ய முடியாதிருக்கும் போதும், ஓவியக்காரனும் இசைவாணனும் தங்கள் திறமையினால் இன்பத்தை அளிக்கின்றனரோ, அதுபோல, இவ்வளவு தாழ்நிலை அடைந்துள்ள தமிழரைக் கொண்டு காலவேகம், கருத்து வேகம், பொதுவாகவே மக்களிடையே உள்ள விழிப்பு ஆகியவற்றையும் அறிந்திருக்கும் – இரசனைக்காகவோ சொற் பெருக்காற்றவோ மட்டும் பயன்படும் அறிவாக அதனைக் கொள்ளாமல் , மக்கள் விடுதலைக்கு, மறுமலர்ச்சிக்கு, இன எழுச்சிக்கு அந்த அறிவைத் துணைகொள்ளும் திறனும் அவரிடம் இருப்பதால், அந்தத் திறமை, இன்பதுன்பம் எனும் சாணையிலே தீட்டப்பட்டுக் கூராக்கப்பட்டிருப்பதால், அந்த இராமசாமியால் தமிழர்களும் ஆள முடியும் என்று தைரியமாகக் கூற முடிகிறது.
அந்த இராமசாமியும் ஏடு தாக்கியதாக இருந்திருப்பின், நாடு ஆள்வது என்பதற்காகக் கூடுவிட்டுக் கூடு பாய்வது அரசியல் யூகம் என்று கொண்டிருப்பார்; கனமாகி இருப்பார்; ஆனால் இனம் மெலிந்து போயிருப்பார்.
துரைமாரின் தயவைத் தேடுபவராக இருந்தால், ஒரு சர் ஆகியிருப்பார். ஆனால், இனவிடுதலைக்கான எழுச்சி ஏற்பட்டிராது.
அவர் கிளர்ச்சிக்காரர், சிந்தனைச் சிற்பியாக இருப்பதாலேதான் அரசியல் என்றால், பஞ்சாயத்து போர்டிலிருந்து தொடங்கிப் பாராளும் உறுப்பினராவது என்ற ஏணி அரசியலைக் கொள்ளாமல், இன விடுதலை என்னும் இடர் மிகுந்த காரியத்தில் இறங்கினார்.
அவருக்கு நிச்சயமாகத் தைரியம் இருக்கிறது. வீறுகொண்ட தமிழன் வைதீகத்தைக் கூறு கூறாக்குவான் என்று!
அவர் ஒரு கற்பனை உலகைக் காட்டத் தேவையுமில்லை; தமிழர் ஆள ஒரு வெளிநாட்டைப் பிடிக்கத் தேவையுமில்லை!
தமிழன் ஒரு நாட்டுச சொந்தக்காரன்!
தமிழன் ஆண்டு பழக்கப்பட்டவன்!
இன்று ஆண்டவனுக்கு அன்பு செலுத்துவதாகக் கருதிக்கொண்டு மாற்றாரின் அடிமையாக உழல்கிறான்!
ஆட்சிக்கேற்ற அருங்குணமும், நாட்டைப் பாதுகாக்கும் நல்வீரமும் தமிழனுக்கு உண்டு.
இகம், பரம் என்ற மாய மொழி கேட்டு ஏமாந்ததால், இகத்தை இவன் இகழ்ந்து வாதைப்படுகிறான்.
எனவே, பெரியார் தமிழா! நீ தனி இனம்! தமிழா! நீ தரணி ஆண்டவன்! தமிழா! உன்னை நீ உணராமல் உலுத்தருக்கு அடிமையானாய்! பகுத்தறிவுப் படை தொடு! விடுபடு! என்று கூறினார், தமிழரின் உள்ளத்திலே அந்த உணர்ச்சி வேகம் பாய்ந்தால், கிளம்பிற்று காண் தமிழர் சிங்கக் கூட்டம் என்று கவிபாடும் காட்சியாகும் அது!
எனவேதான் பெரியார் தைரியம் பெற்றிருந்தார்
அந்த்த தைரியத்திற்குப் பக்கபலமாக இருப்பது தளரா உழைப்பு
அந்தத் தைரியம் பெரியாருக்கு இருக்கிறது .
சிறப்புக் கட்டுரை
மழை
(1961 பொங்கல் மலரில் அறிஞர் அண்ணா அவர்கள் மழையைப் பற்றி எழுதியக் கட்டுரை இது. மழை சேதத்தால் ஏற்படும் அல்லல்கள், இழப்புகள், அவை ஏற்பட்டதற்கான உண்மையான காரணங்கள், மழை நீரை தேக்கி வைக்க முடியாததால் அது கடலில் கரைந்து விரயமாவது இவை இன்று பேசப்படுகிறது. அன்றைக்கே அண்ணா அவர்கள் இதை உருவகமாக, மழையே பேசுவதுபோல் எழுதிய கட்டுரை இது. முழுக்கட்டுரை அல்ல இது; அதில் ஒரு பகுதியே)
சூல் கொண்ட மேகம், துடிக்கிறது. பாரம் தாங்க மாட்டாமல், என் செய்யும்? நான் வெளியேறினால்தான் வேதனை தீருகிறது. மேகத் திரளுக்கு வருகிறேன், பொழிகிறேன். வாழ்த்துகிறீர் சில வேளை; தூற்றுகிறீர் சில சமயம். வாழ்த்தும் போது தேனாகவும் மாறிட முடியாது. தூற்றும் போது மீண்டும் மேகத்துக்குள் சென்று ஒளிந்துகொண்டுவிடவும் இயலாது. வருகிறேன் கீழே! பெறுகிறேன் வரவேற்பு! ஆனால் நான் செல்ல சரியான பாதை உண்டா? இல்லை! தங்கிட முறையான இடங்கள் உள்ளனவா? கிடையாது! விரிந்து, நெடுந்தூரம் பறந்து கிடக்கும் வழியை நாடி செல்கிறேன். ஆறு என்கிறீர்களே அதனைத்தான் கூறுகிறேன். அதனை ஒழுங்குற வைத்திருந்தால் எனக்கு இல்லை தொல்லை. ஊருக்கும் ஆபத்து இல்லை. தடுக்கின்றன மண்மேடுகள்! என் வேகத்தைத் தடுத்து, தேக்கி வைத்துப் பயன் பெறலாம் – அதனையும் செய்கிறீர்கள் இல்லை. ஏரி என்கிறீர்கள் – கரை காப்பளிக்கவில்லை. குளம் என்கிறீர்கள் என் வேகம் பொறாமல் குமுறி உடைபட்டுப் போகிறது, நான் என்ன செய்வேன்? என்னை வாழ்த்தி வரவேற்றுப் பயன் பெற்ற மக்கள் ஒரு ஊர் என்றால், அதற்கு உள்ளேயும் வெளிப்புறங்களிலும் நான் வந்து இருக்க ஏரிகளையும், குளங்களையும் அமைத்து வைத்திருந்தனர். இப்போது? ஏரிகள் தூர்க்கப்பட்டுப் புது ஊர்களாக்கப் பட்டுவிடுகின்றன! ஆற்றோரம் குடில்கள் மயமாகிவிடுகின்றன! கடல் ஒன்றே அன்று போல் இன்றும் அளித்திடுது அடைக்கலம். ஊர்களிலே எனக்கென்று முன்பு இருந்த இடமெல்லாம் பறித்துக்கொண்டீர்கள், ஒவ்வொன்றாய், என் செய்வேன்? ஒழுங்காகத் தங்கி இருக்க இடமில்லை! கண்ட இடத்தில் நடமாடும் காலம் வந்தது, அதனால் காண்கிறீர் அழிவு. என் மீதோ குற்றம்! காரணம் புரியாமல் கடு மொழி பேசுகிறீர், கவலை நான் கொள்ள, கருத்தற்றோ உள்ளேன்? குறைமதியாளர் கூற்று அதுவென்று தள்ளிவிடுகிறேன். நிறை மதியாளர்கள் எம் நீடு புகழ் புலவோர்கள் வாழ்த்திப் பாடியுள்ள பாடல் வகை எல்லாம் நான் எண்ணி மகிழ்ந்து உலவுகின்றேன்.
சிறப்புக் கட்டுரை
ஈழத்தமிழர்கள்
அறிஞர் அண்ணா
தம்பி! தமிழரின் பிணங்கள் கடலலையால் மோதப்பட்டு, மோதப்பட்டு, சிங்களத்தீவின் கரையிலே, ஒதுக்கப்பட்டிருக்கின்றன. ஆமடா, தம்பி! ஆம்! எந்த சிங்களம் சீறிப் போரிட்ட தமிழர்கள் முன் ஒரு காலத்தில் மண்டியிட்டதோ, எந்தச் சிங்களவர், போரில் தோற்றதால், அக்கால முறைப்படி, அடிமைகளாக்கபட்டு இங்கு கொண்டுவரப்பட்டு, காவிரிக்கு கரை அமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்களோ, அந்தச் சிங்களவர்கள் காண, தமிழர்களின் பிணங்கள், சுறா தின்றதுபோக, சுழல் அரித்தது போக, மிச்சம் இருந்த பிணங்கள் சிங்களத்திதீவின் கரை ஓரம் கிடந்தன ! தமிழரின் பிணங்கள் சிங்களத் தீவின் கரையிலே கிடக்கின்றன. . . இவர்தம் ஆட்சியின் சிறப்பினை உலகுக்கே, எடுத்துக்காட்ட, சிங்களக் கரையிலே ஒதுக்கப்ட்ட 18 தமிழர்களின் பிணங்கள் போதுமே !! சிங்களவர் என்ன எண்ணியிருப்பர், தமிழரின் பிணங்களைக்கண்டு; தமிழருக்கு இது கதி, இவர்கள் ஆட்சியில்! இது குறித்து வெட்கித் தலை குனிந்து வேதனைப்பட்டு கிடக்க வேண்டியதிருக்க, வீறாப்பு காட்டுவதும், பேச்சை கூவமாக்குவதுமாக இருக்கிறார்கள். இறந்துபட்ட அந்தத் தமிழர்கள், அலை கடலிலே தத்தளித்தபோது, சுறா கொத்தியபோது, கைகால் சோர்ந்தபோது, கண் பஞ்சடைத்தபோது என்னென்ன எண்ணினரோ. எப்படி எப்படிப் புலம்பினரோ, யாரறிவர்! கடலில் தமிழன் பிணமாகி மிதக்கிறான். அது கண்டு சிங்களவன், இதோ கள்ளத் தோணி என்று கேலிபேசி சிரிக்கிறான், வாழவைக்கவேண்டிய பொறுப்பினை நிறைவேற்றும் தகுதி இழந்துபோனானாமே என்று கண்ணீர் வடிக்கவேண்டிய அமைச்சர் பேச்சை கூவம் ஆக்கிக்கொள்கிறார்; பாவம் ஏனோ!
(மற்றொரு கூவம் – 04.09.1960)
இலங்கையில் நமது சகோதரத் தமிழர்கள் கடைகள் சூரையாடப்படுகின்றன. தமிழ்ப் பெண்களின் கற்பு சூரையாடப்படுகிறது. அவர்கள் கண்ணியமாக வாழ முடியவில்லை. அவர்கள் உயிருக்கு உத்தரவாதமில்லை. கொலை செய்யப்படுகிறார்கள், சுட்டு கொல்லப்படுகிறார்கள். இதைப்பற்றிக் கேட்க ஒரு ஆணாவது உண்டா? ஆனால் சைனா பசாரில் ஒரு மார்வாடி காரிலிருந்து தடுக்கிவிழந்துவிட்டால், பாராளுமன்றத்தில், பண்டித நேருவைப் பார்த்து கேட்க ஆளிருக்கிறது. அவர் இதைப் பற்றித்தெரியாது என்று சொன்னால், இதைத் தெரிந்து கொள்வதைவிட உமக்கு வேறென்ன வேலை இருக்கிறது? என்று கேட்கும் அளவுக்கு அங்கே ஆட்கள் இருக்கிறார்கள். சிங்களத்தீவிலே சீரழிந்து கிடக்கும் தமிழ் மக்களைப் பற்றி கேட்பதற்கு நம்மைத் தவிர வேறுயார் இருக்கிறார்கள்?
(22.11.1961 – நம் நாடு – இதழ்)
இலங்கைத் தமிழர் அறப்போர்
இலங்கையில் நடக்கும் அறப்போரை ஆதரித்தும், இலங்கை அரசின் அடக்குமறைகளை கண்டித்தும் நடத்தப்படும் முதல் கூட்டம் இதுதான். திராவிட முன்னேற்றக் கழகம் முதன் முதலாக இப்படிப்பட்ட கூட்டத்தை இன்றயதினம் கூட்டியிருக்கிறதென்றால் இதை அரசியல் வரலாற்றில் எங்கோ ஒரு மூலையில் தள்ளிவிடும் சாதாரண பிரச்சனையாக இது இருக்க முடியாது. இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமையும், அவர்கள் மீது வீசப்படும் பழிச்சொற்களும், இழிச் சொற்களும், தமிழர் கடை சூரையாடப்படுவதையும், ஆடவர், பெண்டிர், முதியவர், குழந்தைகள் உட்பட அனைவரும் ஓட ஓட விரட்டியடிக்கப்படுவதும், துடிக்கத் துடிக்க வெட்டப்படுவதும் கேட்டு நமக்கெல்லாம் மனம் பதறச் செய்கிறது. இதை எண்ணும்போது எனக்கு தமிழ் நாட்டில் நெடுங்காலத்துக்கு முன்னால் இருந்த இரட்டைப் புலவர்கள் நினைவுக்கு வருகிறார்கள். இரட்டைப் புலவர்களில் ஒருவருக்குக் கண் உண்டு, கால் இல்லை. மற்றவருக்கு கால் உண்டு, கண் இல்லை. எனவே காலில்லாத புலவரைக் காலுள்ளவர் தோளில் சுமந்து செல்வார். தோளிலே உட்கார்ந்த புலவர் வழிகாட்டிக்கொண்டே செல்வார். அவருக்கு கண் இருந்த காரணத்தாலும், இருவருக்கும் வாய் இருந்த காரணத்தாலும் ஆளுக்கு இரண்டடி வீதம் பாடி, பல கவிதைகளை இயற்றினார்கள்.
இந்த இரட்டைப் புலவர்களைப் போலத்தான் நாமும், இலங்கைத் தமிழரும் இருக்கிறோம். கண்கள் இல்லை. நாம் அவர்களைப் பார்த்து அதோ பாருங்கள் சிங்கள வெறியர்கள் என்று காட்ட முடிகிறதே தவிர, அங்கு சென்று தடுக்க முடியவில்லை, காலில்லாத காரணத்தால். எனவே அவர்களைப் பற்றி வாயளவிலே எடுத்துச் சொல்லும் தன்னமயில்தான் நாம் இருக்கிறோம். நமது உளங்கனிந்த ஆறுதலையும் நெஞ்சார்ந்த ஆதரவையும் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.
இலங்கைத் தமிழர்கள் நடத்துகின்ற அறப்போர் தக்க பலன் தந்து வெற்றி கிடைக்கவேண்டும் என்ற நமது நல்லெண்ணத்தினைத் தெரிவிக்கவும் அங்கே அவிழ்த்துவிடப்பட்டிருக்கும் அடக்குமுறை கொடுமைகளை உலகிற்கு அறிவிக்கவும், உலகம் கூர்ந்து கவனிக்கும் ஒரு பெரிய பிரச்சினையைப் பற்றி காமராசர் சர்க்கார் சிறுகவலையும் எடுத்துக்கொள்ளாமல் இருப்பதைத் கண்டிக்கவும், மத மதப்பாக இருக்கும் டில்லி சர்க்காருக்கு இலங்கையில் நடப்பதை சுட்டிக்காட்டி, நியாயம் கிடைக்க வழி செய்யும்படி வற்புறுத்தவும் இக்கூட்டம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கூட்டப்பட்டிருக்கிறது.
இங்கு பலர் உணர்ச்சி வசப்பட்டுப் பேசினார்கள். உலகில் தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டிக்க திராவிட முன்னேற்றக்கழகத் தோழர்கள் உரிமைப் பெற்றிருக்கிறார்கள் என்பதையும், இவர்களின் அனுதாபத்தையும் ஆதரவையும் உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள் என்பதையுந்தான் இன்று இங்கு பேசிய பேச்சுக்கள் காட்டுகின்றன. இங்கே பேசிய எனது தம்பிமார்கள் பேச்சிலிருந்து வெளிப்பட்டக் கருத்துக்கள் அனைத்தும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முடிவு என அவசரப்பட்டு எண்ணத் தேவையில்லை. நடிப்பிசைப்புலவர் கே.ஆர்.இராமசாமி பேசும்போது இலங்கை மீது படையெடுத்தோ, வேறு வழிகளிலோ அங்கு நடைபெறும் அநீதியை ஒழிக்கவேண்டும் என்பதாகக் குறிப்பிட்டார். இலங்கை மீது படையெடுத்துச் செல்லலாம். எப்போது? நமக்கென்று தனியாக ஒரு படை இருந்து, நம்மிடம் படையிருப்பதை அறிந்தும், சிங்கள அரசு தொல்லை கொடுக்குமானால், அப்போது அதுபற்றி யோசிக்கலாம். கே.ஆர்.இராமசாமி இப்படி பேசியது அவரது ஆசையையும், இலங்கைத் தமிழர் மீதுள்ள அக்கறையையும் எடுத்துக் காட்டுவதற்கேயாகும்.
எனவே கே.ஆர்.இராமசாமி அவர்களுடைய பேச்சைக் கேட்டதும், அடுத்த ஏப்ரல் திங்களோ, மே திங்களோ படையெடுக்க திராவிட முன்னேற்றக் கழகம் திட்டமிட்டிருப்பதாக சிங்கள அரசு கவலைப்படவேண்டாம். இங்குள்ள சில சிண்டு முடித்துவிடும் பத்திரிகைகளும் அப்படிக் கருதவேண்டாம் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
அதேபோல், ஆசைத்தம்பி அவர்கள் பேசியபோதும் இங்குள்ள சௌகார்பேட்டையைப் பார்த்துக்கொள்ளலாம் என்றார். அது மிகச் சுலபமானவழிதான். சுறுசுறுப்பான முறைதான். ஆனால் அதை ஏன் குறிப்பிட்டார் என்றால் அந்தவகையில் நம் உள்ளத்திலிருக்கும், கவலையைத் தெரிவிக்கவும், நெஞ்சத்தில் ஆசை கொழுந்துவிட்டு எரிகிறது என்பதையுந்தான் அவர் பேச்சு எடுத்துக்காட்டுகிறது. பொறுப்புணர்ச்சியும், பாதுகாப்புணர்ச்சியும், சொன்னால் அதை செய்து காட்டவேண்டுமே என்ற கட்டுப்பாட்டுணர்ச்சியும் உள்ள நான் சொல்லிக்கொள்கிறேன்.
திருமணம் செய்து கொடுத்துவிட்ட தனது பெண்ணை மருமகன் அடித்துத் துன்புறுத்துகிறான் என்றால் வசதியுள்ள தந்தையாயிருந்தால் அந்தப் பெண்ணை தன் வீட்டிற்குத் திருப்பி அழைத்து வந்துவிடலாம். ஆனால் இன்னும் திருமணம் செய்துகொடுக்கவேண்டிய நிலையில் ஐந்து பெண்ணை வீட்டிலே வைத்திருக்கும் தந்தையாய் இருந்தால் என்ன செய்ய முடியும்? கணவன் அடித்தாலும் பரவாயில்லை. சோறு கிடைத்தால் போதும், கணவன் வீட்டிலேயே அந்தப் பெண் இருக்கட்டும் என்று நினைத்துக்கொண்டு ஏக்கத்துடன் இருப்பான்.
அதைப்போலத்தான் நாமும், இலங்கைத் தமிழரைப் பற்றியும், நமக்குள்ள கவலைகளையும் எண்ணி ஏக்கமடைகிறோம். இந்த ஏக்கம்தான் ஓர் இயக்கத்து வலிவினைத் தரும். ஓர் இயக்கத்திற்கு ஏற்படும் ஏக்கம் அந்த இனத்திற்கு வெற்றிகிட்டச் செய்யும். தனி மனிதனுக்கு ஏற்படும் ஏக்கம் அவனைச் செயலற்றவனாகத்தான் ஆக்கும். அறப்போர் வெற்றிபெறவேண்டும் அங்குள்ள தமிழர்களும், அடக்குமறையை விட்டொழித்துத் திருந்தவேண்டும் என்று சிங்களச் சர்க்காருக்கும் எடுத்துக் கூற நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
நான் இந்தக் கூட்டத்திற்கு வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு, ஆப்பிரிக்காவிலுள்ள பிரிடோரியா நகரத்தில் குடியேறி வசிக்கும் தமிழர் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாய் வந்து என்னைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் வாழ்கின்ற அங்குள்ளத் தமிழர்கள் தமிழ் வேதச் சங்கம் என்ற பெயரிலே ஓர் அமைப்பை ஏற்படுத்தி திருக்குறள் பயின்று வருகிறார்களாம். அவர்கள் வள்ளுவர் விழா நடத்த இருப்பதாகவும் அந்த விழவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்து அனுப்பி வைக்கவேண்டும் என்று அந்த தாயார் என்னைக் கேட்டுக்கொண்டார்கள். இப்படி அவர்கள் நம்மை பார்த்து கேட்க மூன்று காரணங்கள் உண்டு.
ஒன்று தமிழர்கள் கண்ணுக்கெட்டாத தொலைவில் கடல் கடந்து வாழ்ந்தாலும் அவர்களைப் பற்றி கவலைப்படுவது திராவிட முன்னேற்றக்கழகம்தான். நமக்கென்று இருப்பது இன மரபு அறிந்த திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றுதான் என்ற உணர்வு அந்தத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது இரண்டாவதாகும். மூன்று, அவர்களுக்கெல்லாம் நாம் தரக்கூடியது அனுதாபச் செய்தியும், ஆறுதல் செய்தியும் வாழ்த்தும், நல்லுரையும்தான்.
ஆகவேதான் நாம் இன்றய தினம் இந்தக் கூட்டத்தைக் கூட்டி நம்முடைய ஆதரவையும், அனுதாபத்தையும் இலங்கைத் தமிழர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம். வீழ்ந்துபட்ட தமிழர்களுக்கும், விரட்டியடிக்கப்படும் தமிழர்களுக்கும் நம்முடைய அனுதாபத்தை தெரிவிக்கும் வகையில் நமது கண்ணீரை காணிக்கையாக்குகிறோம். தாயிழந்து தவிக்கும் தனயனும், மகனை இழந்த தகப்பனும், அண்ணனைப் பறிகொடுத்த தம்பியும், தம்பியைப் பிரிந்த அண்ணனும், இப்படியாக ஒரு கூப்புடு தொலைவிலுள்ள இலங்கையிலிருந்துகொண்டு கொட்டும் கண்ணீருடனும், குமுறும் நெஞ்சத்தோடும் 30 லட்சம் தமிழர்கள் வாடுகிறார்கள். அங்குள்ள தமிழ் மக்கள் தணலிலிட்ட தங்கம் போல உருகுகிறார்கள். அவர் படும் துயரம் பற்றிய செய்தி தரணியெல்லாம் பரவுகிறது. ஆனால் இங்குள்ள அரசினருக்கு ஏனோ எட்டவில்லை. விரைவில் இலங்கைத் தமிழர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை என் உள்ளத்தில் ஆழ்ந்து இடம் பெற்றிருக்கிறது. அந்த வெற்றிக்கு ஆக்கமும் ஊக்கமும் தர நீங்களெல்லாம் இங்கு வந்து கூடியுள்ளதைப் பார்த்துப் பெருமைப்படுகிறேன். இந்த கூட்டத்தில் நிறைவேற்றவேண்டிய தீர்மானங்கள், இந்திய அரசுக்கும் சிங்கள அரசுக்கு மட்டுமின்றி உலகிலுள்ள எல்லா நாட்டிற்கும் இன மக்களுக்கும் தெரியவேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறோம். அதைப் படிக்கிறேன். நீங்கள் அனைவரும் ஆதரவைக் காட்டவேண்டுகிறேன்.
(சொற்பொழிவு – நம்நாடு இதழ் – 14.03.1961)
இலங்கைத் தமிழர் உரிமைப் பாதுகாப்பு நாள்
தி.மு.கழகப் பொதுச் செயலாளர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் இலங்கைத் தமிழர் உரிமைப் பாதுகாப்பு நாள் கொண்டாடப்பட ஓர் அறிக்கை வெளியிட்டிருந்ததை முன்னர்க் குறிப்பிட்டு இருந்தோம். அதன் அடிப்படையில், 1958 ஜூன் 22 ஆம் தேதி மிகச் சிறப்பாகத் தமிழ்நாடெங்கும் நடத்திய பின்னர், கூட்டத்தில் ஒரு கண்டனத் தீர்மானத்தை ஆங்காங்கே நிறைவேற்றப்பட்டும் இருக்கிறது. இது குறித்து திராவிடநாடு ஏடு (29.06.1958) ஓர் அருமையானத் தலையங்கத்தை எழுதியிருக்கிறது. அத்தலையங்கம் பின்வருமாறு: –
தெருக்களில் தமிழர்கள் மீது பெட்ரோலைக் கொட்டியர்கள் உயிருடன் எரிக்கப்படுகையில், ஜனங்கள் பேசாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாக நேரில் கண்டவர்கள் என்னிடம் கூறினர்.
கடந்த 3 வார பயங்கர ஆட்சியில் முதல் சில தினங்களில் மாணவர்கள் மட்டும் குறைந்தபட்சம் 300 பேர் இருப்பார்கள். இவர்களில் பெரும்பாலோர் கலகங்களில் கொலையுண்டவர்கள் 400 முதல் 500 பேர் வரையிலாவது கொல்லப்பட்டிருப்பார்கள் என்பது அநேகரின் மதிப்பீடு.
தமிழர்கள் தீவின் வடபகுதிக்கு ஓடுகிறார்கள். குறைந்தபட்சம் 20 ஆயிரம் பேர் தம் வீடுவாசல்கள் விட்டு ஓடியிருப்பார்கள்.
கொழும்பு நகரில் தமிழர்கள் பகுதி எரிந்துபோன வீடுகளும் கொள்ளையடித்துச் சூரையாடப்பட்ட கடைகளுமாகக் காட்சி அளிக்கின்றன. கிராமாந்தரப் பகுதிகளில் ஏகப்ட்ட தமிழர் பேட்டைகளுக்கும் இதே கதிதான் ஏற்பட்டது.
வெளியிட்டிருப்பது தி.மு.க. அல்ல! இலண்டன் மாநகரிலிருந்து வெளிவரும் டெய்லி டெலிகிராப் எனும் ஏட்டின் நிருபர், இலங்கையிலிருந்தால் இச்செய்திகளை அனுப்ப இயலாதென்று சென்னைக்குப் பறந்துவந்து, இங்கிருந்து ஜூன் 23 ஆம் தேதி இந்த விபரங்களை அனுப்பியிருக்கிறார், இலண்டனுக்கு !!
தினமணி ஏடு எடுத்து, இதனை ஓரளவு போட்டிருக்கிறது.
ஏட்டின் நிருபர், அவர். அவருக்கு இவ்வளவு அக்கறை! பறந்துவந்து, சென்னையிலிருந்து எழுதி அனுப்புகிறார் !!
இலங்கையில் நடந்ததென்ன என்பதைப் பற்றிச் சரியான விவரம் யாருக்கும் கிடைக்கவில்லை. நிருபர் பறந்து வருகிறார், செய்தி எடுக்க! இந்தியாவின் ஐ கமிஷனராக இலங்கையில் வீற்றிருக்கும் குண்டேவா என்பார், பறந்தும் வரவில்லை – அதிகாரியையாவது அனுப்பி விவரம் தெரிவித்ததாகவும் தகவல் இல்லை !!
நெஞ்சு கொதிக்குமளவிலும், உள்ளம் எரிமலையாகும் விதத்திலும் ஓராயிரம் செய்திகள் வருகின்றன. இலங்கைத் தமிழர் படும் அவதிகள் பற்றி. . . ஆவலும், அச்சமும்இங்குள்ள ஒவ்வொருவரையும் பிடித்தாட்டுகிறது. அங்கே, தமிழர்களின் நலன் பேணும் பொறுப்பிலிருப்பவரோ, பேசாதிருக்கிறார். அவரை, அந்த வேலைக்கு அனுப்பிய டில்லிப் பீடமோ ஏதும் செய்யவில்லை. டில்லியின் அடிவருடிபோல் விளங்கும் சென்னை அரசோ, ஆகட்டும் பார்க்கலாம் போக்கிலேயே உள்ளது.
தி.மு.க. உதித்த நாள் முதல் தமிழர்கள் சென்று வாழும் வெளிநாடுகளிலேயெல்லாம் கூடியவரையில் ஒரு தமிழரையாவது ஐ கமிஷனராக நியமிக்கவேண்டும்; அப்போதுதான் தானாடாவிட்டாலும் தன் சதையாடும், கொஞ்சமாவது, தமிழர்தம் பிரச்சினை புரியும் என்று கூறி வருகிறோம். நடைபெற்றுள்ள பல மாநாடுகளில், தீர்மான மூலமும் அரசுக்கு, மக்கள் குரலை எடுத்துக்காட்டி வந்துள்ளோம், டில்லி, எவ்வளவுதான் செவிடாக இருந்தாலும், ஒரு தமிழர் ஐ கமிஷனராக இருந்தால், அடிக்கடி சங்காவது ஊதிக்கொண்டிருப்பாரல்லவா, என்கிற சபலம் நமக்கு. வடவர், இருக்கிறார்! வடவர்களுக்குத்தான், தென்னாட்டின் பிரச்சினைகள் என்றாலே புரிவதில்லையே!
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒருவர்! இன்னொருவர் அரசியல் கட்சி ஒன்றின் முன்னணியில் நிற்பவர்! தோழர் ராஜாராமும், சின்னதுரையும், இலங்கைத் தமிழர்கள் பற்றி வெளியிட்ட கருத்துக்கள், அங்கு வாழ்வோரின் மனத்தை எந்த அளவுக்கப் புண்படுத்தியுள்ளன என்பதைக் கடிதம் உணர்த்தும்.
சின்னதுரையைவிட ராஜாராம் அவர்களுக்குப் பொறுப்பு அதிகம். ஆளும் கட்சியின் தமிழ்நாட்டுப் பிரிவுக்குத் தலைவர் அவர். அப்படிப்பட்டவர், இலங்கைப் பிரச்சினைக்குக் காரணம் அங்குள்ள தமிழர்கள்தான் என்று தமிழ் மக்களையே குற்றம் சாட்டிப் பேசினதாக, ஏடுகளில் கண்ணுற்றோம்.
இலங்கையில், தமிழன் துயர் பெரிது! இதனைத் தமிழர்கள் கொடுத்துள்ள உயிர்ப்பலி விளக்கும்!
நம்மோடு இருக்கவேண்டியவன் – நமது இனத்தான், நமது சகோதரன், அங்கே சாகும்போது, இங்கேயுள்ள இவர், பிரச்சினை தீர ஆவன செய்திருக்கவேண்டும். இன்றேல் அனுதாபமாவது காட்டியிருக்கவேண்டும். அதைவிடுத்து, அவர்கள் மீதே குற்றம் சுமத்துவதென்றால், கொடுமை என்போம்.
இங்குள்ள சிலர் பேசுவதைக் கேட்டு, இலங்கை வாழ் தமிழர்கள் நடந்துகொண்டதன் விளைவாகத்தான். அங்கே இப்படி எல்லாம் நடக்கிறதாம்! சொல்லி இருக்கிறார், ராஜாராம்.
தீ எரியும்போது, அது அடங்கும் விதத்தில் முயற்சிகள் எடுப்பதுதான் நல்ல செயலாம். அதைவிடுத்து, இப்படி இவர்கள் பேசுவது, வேதனையானது மட்டுமல்ல, இதுபோன்ற விஷயங்களில் ஏனிப்படி இருக்கிறார்கள் என்கிற ஐயத்தையும் கிளப்புகிறது. உண்மையில் வருந்துகிறோம்.
சிறப்புக் கட்டுரை
திருவள்ளுவர்
அறிஞர் அண்ணா
பொதுமறை – புதுமறை
திருவள்ளுவர் – நமக்கு அளித்துள்ள திருக்குறள் இப்போது ஒவ்வொருவருடைய நாவிலும் – நெஞ்சிலும் – நினைவிலும் – இடம் பெற்றிருக்கிறது.
எல்லாரும் குறளை ஆதரிக்கிறார்கள்; போற்றுகிறார்கள்.
திருவள்ளுவர் தமிழகத்திற்கு மட்டும் அல்லாமல், வையகம் முழுமைக்கும் வாழ்க்கைக்கு உரிய நெறியைத் தந்திருக்கிறார்.
அதனை நாம் உலகத்தின் பொதுச்சொத்து என்று எண்ணத் தக்க விதத்தில் பொதுக் கருத்தைப் பரப்பவேண்டும்.
தமிழ் மக்கள் திருக்குறளைப் பொதுமறை என்றும், இன்றைய தமிழர்கள் பெற்ற புதுமறை என்றும் போற்றுகிறார்கள்.
இந்த நல்ல கருத்துக் கருவூலத்தை உலகத்தின் கவனத்திற்கு எடுத்துவைக்க நல்ல சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
அடுத்த ஆண்டு (1968) உலகத் தமிழ் மாநாடு சென்னை நகரத்திலே நடைபெறவிருக்கிறது.
தமிழ் ஆய்ந்த – தமிழ் அறிந்த – நல்லறிஞர்கள், பல நாடுகளிலிருந்தும் மாநாட்டுக்கு எனத் தமிழகத்துக்கு வர இருக்கிறார்கள்.
அப்போது திருக்குறளின் அருமை பெருமைகளை, ஏற்கெனவே தமிழறிஞர்கள் அறிந்திருந்தாலும், பத்து நாட்களோ எட்டு நாட்களோ மாநாடு நடைபெறும் நாட்களில், அவர்கள் எல்லாரும் கண்டுகளிக்கத்தக்க விதத்தில் திருக்குறளின் பெருமையை உலகு அறியச் செய்ய வேண்டும்.
திருக்குறளின் – தமிழ் இலக்கியங்களின் கருத்துக்களை, ஓவியங்களாக – வரி வடிவங்களாக – பாடல்களாக – கூத்தாக உருவாக்கி வெளிப்படுத்தும் முயற்சியில் ஈடுபடவேண்டும்.
எனக்குள்ள நீண்ட நாளைய ஆசை – சென்னை கடற்கரை ஓரத்தில் சிலப்பதிகாரத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள காவிரிப்பூம்பட்டினக் கடற்கரையைப்போல் சித்திரித்துக் காட்டவேண்டும் – உருவாக்கிக் காட்டவேண்டும் என்பது!
(சென்னை – கோட்டை தலைமைச் செயலகத்தில் சூன் 9, 1967 நிகழ்ந்த திருவள்ளுவர் படத் திறப்பு விழாவில் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரை (நம் நாடு நாளிதழ் -. 10.06.1967))
உலக மொழிகளில் எல்லாம் திருக்குறள்
உலக மொழிகள் எல்லாவற்றிலும் திருக்குறளை மொழி பெயர்த்துப் பயன்படுத்துகிறார்கள்.
நாம் எல்லாரும் எதிர்பார்ப்பதை விட மேலாக வெளிநாட்டினர் திருக்குறளைப் பயன்படுத்த முனைந்துவிட்டனர்.
திருவள்ளுவருக்குக் கிடைக்கும் இந்தச் சிறப்பை நீண்ட காலத்திற்கு முன்பே நாம் செய்திருக்கவேண்டும்; தவறிவிட்டோம்.
இப்போது சோவியத்து நாட்டிலே உள்ளவர்கள் திருக்குறளைப் பயில்கிறார்கள். இங்கிலாந்து நாட்டில் உள்ளவர்கள் பயில்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்னர் நான் புதுச்சேரிக்குச் சென்றிருந்தபொழுது, பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை என்னிடம் தந்தார்கள். அதன் நல்லறிவுக் கருத்துகள் நாட்டு மக்கள் அனைவராலும் போற்றப்படுகின்றன.
திருவள்ளுவர் விழா ஏன்?
திருவள்ளுவர் விழாதான் நம் வாழ்வு செம்மைப்பட அமையும் விழாவாக அமைய வேண்டும்.
திருவள்ளுவரைப் போல, தமிழர்களிலே நிறையப் புலவர்கள் இருந்திருக்கிறார்கள். இளங்கோவின் சிலப்பதிகாரம் நாடு அறியாதது அல்ல; சிலப்பதிகாரத்தில் வரும் கனல் வரிக் கவிதை, உலகம் மறந்துவிடக் கூடியதும் அல்ல, இருந்தாலும் -இரண்டு வரிகளுக்குள் வாழ்வுக்குத் தேவையான கருத்துகளை எப்படி வாழ வேண்டும் என்ற முறையை வகுத்துக் கொடுத்த பெரியார் வள்ளுவர்தான்!
தமிழ் நாட்டில் இருந்த பெண்பாற் புலவர்களைப் போல் வெளிநாட்டில் எங்கும் நாம் கண்டதில்லை. இருந்தாலும் வள்ளுவரைப் போல் அவர்கள் சுவடி ஒன்றும் தரவில்லை.
ஆதலால் வள்ளுவர் விழாவினை மற்ற விழக்களைப் போல் எண்ணாது, தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அரிய விழாவாகக் கருத வேண்டும்.
இந்தக் குவலயத்திற்கே குறளைத் தந்த தமிழர் சமுதாயம், குறள் நெறியின்படி வாழ்கிறதா என்றால் – இல்லை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
என்று, உயர்வு பிறப்பிலே இல்லை; தான் செய்யும் தொழிலின் சிறப்பிலேதான் இருக்கிறது என்பதைத் திருவள்ளுவர் சொல்லியும் இந்தச் சமுதாயம் சாதிப் பிடிப்பிலிருந்து இன்னும் தன்னை விடுவித்துக்கொள்ளவில்லை. அதுமட்டுமல்ல; சாதி இருந்தால் என்ன? என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.
ஆகையால் விழா நடைபெறும் இந்த நேரத்தில் திருவள்ளுவர் சொன்ன கருத்துகளை நடைமுறைக்குக் கொண்டுவர உறுதி எடுத்துக்கொள்ளவேண்டும்
இரஷியாவோடு போட்டியிடும் தலையாய செல்வம்
இன்றைய தினம் செல்வத்திலே – சீரடைவதிலே – கல்வி முன்னேற்றத்திலே – தொழில் துறையிலே – மிகவும் பின்தங்கியுள்ளோம்.
தமிழ்ச் செல்வம் யாரும் பெற முடியாத செல்வமாக இருக்கிறது. தமிழ்ப் பண்பாட்டுச் செல்வம் யாருக்கும் எந்த நாட்டுக்கும் கிட்டாத அளவிற்குக் கிடைத்திருக்கிறது.
இரஷ்யாவோடு நாம் போர்க் கருவிகளிலே போட்டியிட முடியாது; விஞ்ஞான வளர்ச்சியிலே போட்டியிட முடியாது.
ஆனால் இலக்கியத்திலே போட்டியிட முடியும். அப்படிப்பட்ட இலக்கியச் செல்வம் நம்மிடத்திலே இருக்கிறது. அதில் தலையாய செல்வம் – திருக்குறள்.
அந்தக் குறள், வகுப்பறையில் மட்டும் அல்லாமல் – உங்கள் இல்லங்களில் மட்டும் அல்லாமல் – உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்.
குறளைக் கற்றுக் கொள்வதால்,
நீங்கள் செம்மைப்பட்டு –
நீங்கள் செம்மைப்படுவதால்,
நாடு செம்மைப்பட்டு –
நாடு செம்மைப்படுவதால்,
உலகு செம்மைப்படச் செய்ய வேண்டும்.
(** சென்னை – இராணி மேரி கல்லூரியில் செப்டம்பர் 8, 1967 நிகழ்ந்த திருவள்ளுவர் விழாவில் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரை – ஆதாரம்: நம் நாடு நாளிதழ் 09.09.1967)
நிலத்தாய் சிரிக்கிறாள்
ஒரு நாட்டில் ஒன்று இருந்தால் மற்றொன்று இருப்பது இல்லை.
நம் தவத்திரு நாட்டிலோ எல்லாவற்றையும் பூமி தன் மடியில் அடக்கி வைத்திருக்கிறது.
தோண்டினால் உனக்கு வேண்டியதைத் தருகிறேன் என்று பூமி மாதா கூறுகிறாள்!
கொஞ்சம் தோண்டினால் ஊற்று நீர்!
இன்னும் கொஞ்சம் தோண்டினால் சுண்ணாம்புக் கல்!
மேலும் சிறிது தோண்டினால் செம்பு – அதற்குப் பிறகு தங்கம்!
அதற்கும் அடியிலே தோண்டினால், தங்கத்துக்கெல்லாம் மேலான கருப்புத் தங்கம் என்ற கொருளாதார வல்லுநர்கள் போற்றும் நிலக்கரி!
இத்தனையும் தருவதற்குத் தயாராக இருக்கிறது நம் நிலம்.
இதனைத்தான் திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குறிப்பால் உணர்த்தியிருக்கிறார்; நிலத்தை மதிக்க வேண்டிய இன்றியமையாமையையும் வலியுறுத்தியிருக்கிறார்.
இலம் என்ற அசை இருப்பாரைக் காணின்
நிலம்என்னும் நல்லான் தகும்
என்னும் குறள் மூலம்!
இல்லையே எதுவும்!
என்று தலைகுனிவதைப் பார்த்துத்தான் பூமி மாதா (நிலத் தாய்) சிரிப்பாள்!
ஒரு பெண் தங்களைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தால் – தமிழர்கள் அதைத் தாங்கிக்கொள்ள மாட்டார்கள்.
இதை அறிந்துதான், பூமி மாதா சிரிப்பாள் என்று வள்ளுவர் எழுதியிருக்கிறார்.
நமது நிலத்திலே வளம் இருப்பது தெரிகிறது. ஆனால் அதனைத் தோண்டி எடுக்கும் அதிகாரம் நம்மிடத்திலே இல்லை! சேலத்திலே இரும்பு இருக்கிறது என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
வள்ளுவர் கூற்றுப்படி –
இரும்பைத் தன் மடியிலே அடக்கி வைத்திருக்கும் கஞ்சமலை, நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது!
தொழிற்சாலை வேண்டும் என்று துடிக்கிறாயே – இங்கே தோண்டி எடு இரும்பை
கஞ்சமலை என்கிறது!
(* சென்னை ஆகஸ்டு 15, 1967, விடுதலை நாள் விழாவில் முதல்வர் பேறிஞர் அண்ணா ஆற்றிய உரை – நம் நாடு, ஆகஸ்ட் 23, 1967)
இணையில்லா இலக்கிய வளம்
செழுமையான இலக்கிய வளம் நிறைந்த மொழி நமது மொழி – தமிழ் மொழி.
இதில் சிறிதும் ஐயப்பாடு கொள்ள தேவையில்லை.
உலகோர் முன் – அவர் எம்மொழியினராயினும் சரியே – எத்துணைக் கலையியல் வாய்ந்த எழுத்தாண்மைத் திறம் படைத்திட்ட நாட்டவரானும் சரியே – நாம் தலைநிமிர்ந்து கூறிடலாம் அவரிடம்:
எம்மொழி தமிழ் மொழி. மிகச் செழுமையான மொழி. கலைப் பண்பார்ந்த ஏட்டுக் கருவூல வளம் – காலக் கூறுக்கு ஏற்ற இலக்கியப் பகுதி ஏராளம் உண்டு எம்மிடம் – எமது செந்தமிழில்! – என்று.
இது வெறும் புகழ்ச்சியல்ல – உண்மை! தற்பெருமைக் குற்றத்தினைப் பொருட்படுத்திடவே கூடாத தன்மைத்தான் தற்பெருமிதமும் கூட!
இலக்கிய உலகில் – எழுத்தாண்மைத் துறையில் தமிழர் தம் சாதனை மிகவும் எடுப்பானது – ஈடும் இணையும் அற்றதும் கூட!
வேண்டுமா எடுத்துக்காட்டு?
இதோ ஒரு பாடல்:
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை.
– இந்த ஒரு பாடலில் மட்டும் எட்டு நூல்கள் குறிப்பிடப்படுகின்றன. எட்டுத் தொகை என்னும் ஒரு சிறப்புத் தொகுதியில் வருவன மட்டும் இவை – மெத்தச் சிறப்புடைத்தான நூல்கள் இவை.
மற்றத் தொகுதிகள் – தொகுப்புகள் பற்றிப் பேசிடலும் வேண்டுமோ!
உலகப் பேராசிரியர்
எல்லாவற்றையும் விட, திருக்குறள் குறித்து நாம் எவ்வளவு பெருமைப்பட்டுடக்கொண்டாலும் தகும். வலி ஏதும் இல்லை, நாமே பெருமிதப்பட்டுக் கொள்வதில்.
மானிடப் பண்பியல்புகளுக்கு ஓர் உறைவிடமாய் – வாழ்க்கை வழி, நெறி முறைகளுக்கான வழி காட்டியாய் – அமைந்துள்ளது திருக்குறள்.
காலக் கூறுக்கு ஏற்ற இலக்கியம் திருக்குறள் அன்றி வேறு ஏது?
– என்றும் நாம் கேட்டிடலாம், எவரைப் பார்த்தும்.
உலகெங்கணும் பறைசாற்றிடலாம்; அஞ்சிடத் தேவையில்லை.
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட
தமிழ்நாடு
நமது நாடு.
எதனால் இப்படிக் கூறினார் சி.சுப்பிரமணிய பாரதியார்?
அந்த வள்ளுவர், திருக்குறள் என்ற பொய்யாமொழியினை வாழ்க்கை நெறிக் கோட்பாட்டு மறைதனைத் தீட்டியதால்தான்!
ஷெல்லி, பைரன், கீட்ஸ், கால்ரிட்ஜ், எமர்சன், பேக்கன் முதலிய ஆங்கிலப் பாவாணர்களும் பேரிலக்கிய நூலாசிரியர்களும் அளித்துள்ள நற்காவியங்களும், எழுத்தோவியங்களும் நமக்கு அந்நியம் ஆகுமா? தாமா அயலானவை?
அந்நியம் என்கிற சொல்லின் நேரிடையான பொருளில்தான் அவற்றையெல்லாம் கருதிடவேண்டுமா? வேண்டுமா ஒதுக்கிடவும்?
தமிழ் மறையாம் திருக்குறளைத் தீட்டிய திருவள்ளுவர், தமிழர் என்பதால் தமிழருக்கு மட்டுந்தான் வழிகாட்டியா? வள்ளுவன் தன்னை
உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட
தமிழ்நாடு
– என்று பாடிப் பூரித்து மகிழ்கின்றோமே, என்ன பொருள் அதற்கு?
ஷெல்லி போன்றோர் ஆங்கிலத்திற்கோ, ஆங்கில நாட்டாருக்கு மட்டுமோ உரியவர் ஆக மாட்டார்.
அவர்கள் அனைவரும் உலகினுக்கே சொந்தம்!
உலகப் பெருமக்கள் – குடி மக்கள் – அவர்கள்!
உலகப் பேராசிரியர்களும் ஆவார்கள் அவர்கள்!
(1967 – ல் பேரறிஞர் அண்ணா ஆற்றிய அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு பேருரை ஆதாரம்:. திரு.மு.நமசிவாயம் தொகுத்துள்ள சாமானியனின் சகாப்தம் நூல்)
பெருநெறி காட்டும் வழிகாட்டி நூல்
வள்ளுவர் தந்த திருக்குறள் தமிழர்க்கு மட்டும் அல்லாமல் பண்புடன் வாழ விரும்பும் அனைவர்க்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்திருக்கிறது.
திருக்குறள் பூஜா மடத்துக்கு மட்டும் தயாரிக்கப்பட்ட ஏடு அன்று; புனைந்துரைகள் நெளியும் புராணம் அன்று; வாழ்விலே, தூய்மையை – அவரவரும், தத்தமது திறனைச் சரியாகப் பயன்படுத்தி, மற்றவர் வாழ்வின் மேம்பாட்டினையும் மதித்து ஒழுகுவதன் மூலம் பெறக்கூடியது என்ற பெருநெறியைக் காட்டும் நூலாகும்.
திருவிழாக்களையும், தீர்த்த மகிமைகளையும், திருப்பல்லாண்டுகளையும், திரு.அவதாரங்களையும் – இவற்றின் பிற பதிப்புகளான வெண்பொங்கல், இனிப்புச் சோறு எனும் இன்ன பிறவற்றினையும் மக்களுக்கு வழங்கும் அழுக்குக் கருத்துரைகள் கொண்ட ஏடுகளையே தமிழ்நாடு கொண்டாடி வருகிறது. காரணம் பலப்பல. விளைவோ – வாழ்வில் வேதனை; சமூகத்தில் சச்சரவு; நலிவு நாட்டிலே!
நாம் இதுகாறும் அத்தகு ஏடுகளின் பிடியிலிருந்து நாடு விடுபட வேண்டும் என்பதற்காகப் பணிபுரிந்து வந்தோம். அப்பணி தொடர்ந்தும் நடந்து வருகிறது.
அப்பணியுடனும் இப்போது நாம் வள்ளுவர் தந்த திருக்குறளை ஒவ்வோர் இல்லத்திலும் குடியேறச் செய்தாகவேண்டும்; ஒவ்வொருவர் மனத்திலும் அவருடைய அற உரைகள் பதியச் செய்யவேண்டும் என்ற சீரிய பணியினை மேற்கொண்டு உள்ளோம்.
குறள் ஏந்திச் செல்வோம்
நாம் – நாவலரும் பாவலரும் கூடிடும் நல் மணிமாடத்திலே அல்ல உலவுவது; உரையாடுவது! நாதனைக் கண்டோம்; நம் நாவில் அவர் சூலம் பட இம்மெய்யறிவு கொண்டோம் என்று இயம்புடும் அருள் விற்பனையாளர்களின் அணி மாடங்களை நாம் அணுகுவது இல்லை.
மக்கள் இத்தகையவர்களிடம், மறைந்து கிடக்கும் இம் மாணிக்கத்தை – திருக்குறளைக் காட்டும் மகத்தான பணியினை, நாம் மேற்கொண்டுள்ளோம்.
நமது பணி வெற்றி பெற்றால்தான், மக்களின் உடைமையாகும் – இந்தத் தமிழ் அறிவுக் களஞ்சியம்.
நமது பெரும் பணி மூலமே, மக்களுக்க, வாழ்க்கையுலே சந்தேகத்தை நீக்கவும், போக்கவும், நேர்மையை நிலைநாட்டவும் உதவும் இப்பெருநூலின் உண்மைப் பொருள் தெரிய முடியும்.
குறள் ஏந்திச் செல்வோம் – நாடு, நகரமெங்கும்; பட்டி, தொட்டிகளில் எல்லாம்! பண்பாடு – எது என்பதை மக்கள் அறியச் செய்வோம்!
அறம், பொருள், இன்பம் எனும் அரிய முப்பொருளை மக்கள் உணர மட்டுமல்ல; நுகரவும் பணியாற்ற வேண்டும்.
புதிய பணி இது; ஆனால் நமது பழைய பணியின் தொடர்ச்சிதான் – முற்றிலும் புதிதன்று!
அப்பணிக்கு நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்வதற்கு – குறளின் அருமை, பெருமை பற்றி அறிஞர்கள் கூறியுள்ள கருத்துரைகளை எண்ணிப் பார்ப்பது முக்கியமான முதல் வேலையாகும்.
மநுவாதி உள்ளுவரோ?
பேராசிரியர் சுந்தரனார் பெரும்புலவர். அவர், வள்ளுவரின் திருக்குறளைப் பற்றிய அருமை பெருமையினை அறிவிக்கப் பல கூற வேண்டாம்; முக்கியமானதைச் சுட்டிக்காட்டினால் போதும் என்று எண்ணி வள்ளுவர்செய் திருக்குறளை
மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மநுவாதி
கொருநீதி ஒருகுலத்துக்?
என்று பாடியுள்ளார்.
இந்த ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்னும் முறையினைக் காலம் கூடத் தகர்க்காதபடி, அவ்வப்போது உரம் ஊட்டி வருவனவே – புராண, இதிகாசங்கள். அவற்றை நம்பியதாலேயே நாடு நலிவுற்றது.
நாட்டின் நலிவு நீங்கி, மக்கள் நல்வாழ்வு பெறுவதற்காக, வள்ளுவர் குறளை, மறவற நன்கு உணர்ந்தார் ஆதல் வேண்டும் மக்கள்.
. வள்ளுவர் அனைத்துப் பிரச்சினைகளையும் ஆராய்ந்து அரிய உண்மைகளை வெளியிட்டிருக்கிறார் கடவுள் கொள்கை, நாடு, அரசு, இல்வாழ்க்கை எனும் பல பகுதிகளாக உள்ள குறளின் முழு நோக்கம் -. மக்கள் சரக்குக் கப்பல் நெறியில் நிற்க மக்க என்பதேயாகும் ஏனெனில், அவர் கூறியபடி அறத்தால் வருவதே இன்பம்.
இந்த அறநெறியைப் பரப்பும் பணியினை மேற்கொள்ளும் நமக்கு உறுதுணையாக, அறிஞரின் கருத்துரைகள் உதவுகின்றன.
வாழ்க வள்ளுவர்!
திருக்குறளின் ஆரமையினை எடுத்துரைத்த அறிஞர் பலர் பல மொழிகளிலே குறள் மொழிபெயர்க்கப்பட்டு, அதன் பெருமை கடல் கடந்தும் சென்று பரவியுள்ளது.
எனினும் தமிழர் மனைகளிலே குறள் உண்டோ? பஞ்சாங்கம் இருக்கும்; பாரதக் கதை இருக்கும்; அபிமன்யு வீரமும் இருக்கும்; அறநெறி கூறும் அருமைத் திருக்குறள் இருக்குமா? இல்லையே! ஏன்?
பண்புடைத் தமிழரின் மனப் புண்ணும் – பயனில் நூல்களை மட்டுமே அறிந்ததால் மக்கள் மனத்திலே மூண்டு கிடக்கும் மருளும் – போக்கப்பட வேண்டும்.
வாழ்க வள்ளுவர்! ! வளர்க குறள் நெறி
பல்கலைக் கழகத்தில் தனித்துறை
திருக்குறள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது. அந்தக் காலத்தில் வேறு நாடுகளில் இயற்றப்பட்ட எந்த நூலிலும், குறளில் உள்ளதைப் போல் கருத்துக்கள் காணப்படவில்லை.
பிற நாடுகளில் மக்கள் காட்டுமிராண்டிகளாக இருந்த அந்தக் காலத்திலேயே தமிழர்கள் நல்ல பண்பாடு மிகுந்தவர்களாகத் திகழ்ந்தனர் என்பதைத்தான் திருக்குறள் காட்டுகிறது.
திருக்குறளைப் பற்றிப் பெருமையாகப் பேசும் நம்மிடம் மூடப் பழக்க வழக்கங்கள் இருப்பதைப் பார்க்கும் வெளிநாட்டவர்கள் நம்மைப் பற்றி ஐயப்படுவார்கள். அதனால்தான் திருக்குறளுக்கு உலகில் கிடைக்கவேண்டிய அளவு பெருமை கிடைக்கவில்லை.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை மான்
– என்ற குறளையும் போற்றிக்கொண்டு, சாதி முறைகளையும் கைவிடாமல் இருப்பது வாழ்க்கை நெறிக்குப் பொருத்தமாக இராது; குறளை நாம் உண்மையாகவே போற்றுவது ஆகாது!
இளங்கோ அடிகள்
பேரறிஞர் அண்ணா
இல்லற இன்பம் மாண்புடையது என்பதைச் சுவைபட எடுத்துக்காட்டும் விழாவாக, பொங்கற் புதுநாள் இருப்பதனால்தான், தமிழகத்தில் புதியதோர் எழில் அந்நாளில் பூத்திருந்தது.
வேட்டுச் சத்தம், கொட்டு முழக்கு இல்லை!
தமிழர் திருநாள் அந்த ஊருக்கே மகிழ்ச்சி தரும் நாள்! எனவே, ஊர் மக்கள் அனைவரும் விழாக்கோலம் பூண்டிருக்கும் அந்நாள், உழைப்புக்கும் அறிவுக்கும், எழிலுக்கும், ஏற்றத்துக்கும், ஊர் மன்றம் புகழ்மாலை சூட்டிப் பெருமைப்படுத்த வேண்டும்.
களம் சென்று மட்டுமே, உள்ள உரம் காட்ட வேண்டும் என்று தமிழர் இருந்தார் இல்லை. ஊரார் கண்டு மகிழ, தம்மையொத்தவர் வியந்திட, வீர விளையாட்டுகளில் ஈடுபட்டு, வெற்றி பெற்று விருது பெற்றனர். விழாக்களிலே இவை தனிச் சிறப்பான இடம் பெற்றன.
விழாக்களில் ஈடுபடும்போது புது எழிலைப் பெற்றனர் – அணிமணியாலும், ஆடை வகையாலும் ஆடவரும் ஆரணங்குகளும்.
வாழ்க்கைக் கலையை வடித்தவர்
கசங்கிய கண்ணினராக, கூப்பிய கரத்தினராக, வாழ்வைச் சுமையாகக் கருதிக் காதலை வெறுத்து மாதரை மாயப் பிசாசு என்று இழித்துக் கூறி, தமிழர் வாழ்ந்தார் இல்லை.
வாழ்க்கையும் ஒரு கலை என்று அவர்கள் அறிந்திருந்தனர்.
வாழ்க்கைக் கலையினை விளக்கத் தனியாக நூலென்று தந்தாரோ எனில் இல்லை. ஆனால், அறநெறி உரைத்திட தமிழ்ப் புலவோர் ஆக்கி அளித்த காப்பியங்களிலேயே, மக்கள் வாழ்ந்த வகையினை அழகுற எடுத்துக் கூறம்போது, கலை அறிவுடன் அவர்தம் வாழ்க்கை அமைந்து இருந்ததை எடுத்துக் காட்டினர்.
பூம்புகார், மதுரை மாநகர் இரண்டிலேயும், மாந்தர் வாழ்க்கை – சிறப்பாக மகளிர் வாழ்ககை – இருந்த விதத்தை, படம் பிடித்துக் காட்டும் பான்மையிலே தந்தவர் துறவி இளங்கோவடிகள்.
இளங்கோவடிகள், மதுரை மகளிர் மலர் அணிந்து மகிழ்ந்தனர் என்று மட்டும் அல்ல; மலர்கள் பல வண்ணங்களாக உள்ளன அல்லவா? அவற்றினை ஒன்றாகத் தொடுத்து அணிந்தனர் என்பதையும் கூறுகிறார்.
செல்வம், சீர், கலை உணர்வு, வாழ்க்கையை வெறுத்திடாத தன்மை, இவ்வளவும் விளங்கும் வகையில், மதுரை மகளிர் – முல்லை, குவளை, நெய்தல், மல்லிகை, செங்கழுநீர்ப்பூ முதலியவற்றை முத்தாரங்களுடன் தொடுத்து அணிந்தார்கள் என்று இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் கூறுகிறது.
வாழ்க்கை இவ்விதம் இருத்தல்தான் முறை; மதுரை மகளிர் இப்படி இன்பமாக வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். இதனை அடிகள் எப்போது காட்டுகிறார்? கண்ணகி, புதுவாழ்வு தொடங்க, பொருள் தேட முயலும் நோக்குடன் கோவலனுடன் (மதுரை) வருகிறபோது!
காலத்துககு ஏற்றபடி தம்மை அழுகுபடுத்திக் கொள்வது, நுண்ணிய கலை உணர்வைக் காட்டுவது ஆகும்.
இப்போது ஜப்பான் நாட்டுப் பெண்கள் தமது இல்லத்தையும், தம்மையும், வண்ணங்களின் வகை அறிந்து, அழுகுபடுத்தும் நுண்களை மிகுதியாகப் பெற்றவர்கள் என்று கண்டறிந்தோர் கூறுகின்றனர்.
அத்தகைய கலையுணர்வு மதுரை மகளிருக்கு இருந்திருக்கிறது என்பது வாடைக் காலத்துக்கு ஏற்ப, அரத்தப் பூம்பட்டையை மகளிர் அணிந்திருந்தனர் என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கூறுவதிலிருந்து தெரிகிறது.
இலக்கியம் படைத்த துறவி
நாடாளும் உரிமை பெற்ற இளங்கோ, துறவி ஆனார்.
நான், துறவிகளைச் சமுதாயத்தின் தொல்லைகள் என்று கருதுபவன்.
எனினும் இளங்கோவின் துறவு, காவி உடுத்திக் கானகம் சென்ற கதையாக முடியவில்லை; கவர்ச்சி மிகுந்த காவியத்தை இயற்றித் தரும் கனிவாக இருந்தது.
காவி அணிவது காற்பலம் கஞ்சாவுக்கு என்ற முறையிலே உள்ள துறவறத்தையே நாங்கள் கண்டிப்பவர்கள் ஆகையால், இளங்கோ போன்ற இலக்கியக் கருத்தாக்கள் துறவியாக இருந்தனர் என்பதற்காக அவர்தம் அருமை பெருமையினை மறக்கமாட்டோம்
ஆஸ்திகமும், நாஸ்திகமும்
அறிஞர் அண்ணா
1 ஆஸ்திகம் என்று உண்டானதோ, அன்றே நாஸ்தீகமும் உண்டாயிற்று.
2 ஆஸ்திகம் அறியாமை, பயம், சுயநலம் இவற்றில் முளைத்து; நாஸ்திகம் அறிவின் விசாரணைகளில் முளைத்தது.
3 ஆஸ்திகம் அறிவைப் பாழ்படுத்துகிறது. நாஸ்திகம் அறிவை ஓங்கச் செய்கிறது.
4 ஆஸ்திகம் உலகை மிருகநிலைக்கு அழைத்துச் செல்கிறது; நாஸ்திகம் அதை நாகரிக நிலைக்கு அழைத்துச் செல்கிறது.
5 ஆஸ்திகம் மக்களை அவமதிக்கிறது. நாஸ்திகம் மக்களை மேன்மைப்படுத்துகிறது.
6 ஆஸ்திகம் மக்களை அழியவைக்கும் நாஸ்திகம் மக்களை வாழவைக்கும்.
7 ஆஸ்திகத்தால் வறுமை, பிணி முதலியன ஓங்கும் நாஸ்திகத்தால் அவை அழியும்.
8 ஆஸ்திகமும நாஸ்திகமும் என்றும் தீராப்பகை கொண்டன.
9 ஆஸ்திகத்திற்கு அறியாமையும் அரசாங்கமும், முதலாளித்வமும் துணை. நாஸ்திகத்திற்குப் பகுத்தறிவே (விஞ்ஞானம்) துணை.
10 ஆஸ்திகம் அழியக் கூடியது நாஸ்திகம் என்றும் அழியாதது.
11 ஆஸ்திகம் சில சமயம் சாஸ்திகத்தைப் புறம்பே அழிக்கும் ஆனால், நாஸ்திகமோ ஆஸ்திகத்தை உள்ளும் புறமும் அழிக்கவல்லது.
12 ஆஸ்திகத்தின் வெற்றி தற்காலிக வெற்றியாகும் நாஸ்திகத்தின் வெற்றியோ நிலைபெற்ற வெற்றியாகும்.
13 ஆஸ்திக நாஸ்திகப் போராட்டத்தின் லாப நஷ்டக் கணக்கு. ஆஸ்திகத்திற்குத் தோல்வியும், நாஸ்திகத்திற்கு வெற்றியும் சரித்திர முறைப்படி இதுவரை உண்டு, இனியும் உண்டு.
14 ஒரு மதத்தின்படி அதனை நம்பாத மற்ற மதங்கள் நாஸ்திகமானபடியால், எல்லா மதத்தையும் நம்பாத முழு நாஸ்திகமோ நன்மையளிக்கும் பெருமையளிக்கும், ஆகையால், அம்முழு நாஸ்திகமே எங்கும் பரவுக! ஓங்குக !!
பொதுவாழ்வு ஒரு பொன்னேடு
அறிஞர் அண்ணா
தூக்குமேடை! கேலிச் சிரிப்பு காட்டினர்; கிஞ்சித்தும் கவலை கொண்டதில்லை. அம் மாவீரர்கள் துணிவோடு ஏறினர். அவர்கள் கண்களிலே புது ஆவேசம் பிறந்தது. தூக்கு அவர்களது உயிரைப் போக்கியது. பிணமாயினர். ஆனால் அவர்களது புகழ்மணம், மறையவில்லை; மாறாக எங்கும் வீசலாயிற்று.
சித்திரவதை அவர்கள் சிந்தையைக் குலைக்கவில்லை. சிறிதும் தயங்கவில்லை. இதெல்லாம் வரும் என்று எதிர்பாத்தது போல அவர்கள் கண்களிலே புது ஒளி கிளம்பிற்றே தவிர, நீர் எழும்பவில்லை.
துப்பாக்கிகள் கர்ஜித்ததுண்டு பல முறை; ஆனால் குலைந்து போனதில்லை அந்த வெற்றிச்செல்வர்கள் வீரம். அவர்கள் இதயத்திலே விளையாடிற்று. மயங்கியதில்லை; தயங்கியதில்லை; மார்பைக் காட்டினர்.
தடியடி எத்தனையோ தடவைகளில். அவர்கள் தலைகளை உடைத்ததுண்டு. இரத்தத்தைக் கீழே ஓடச் செய்ததுண்டு.
நச்சுக் கோப்பைகள் ஒரு சமயம்; தீச்சுழல் வேறொரு நேரம்! சாட்டையடி, இன்னொரு வேளை! உயிரோடு சாவுக்குழியில் தள்ளப்பட்ட கோரம் மற்றொரு நேரம்! மக்கள் வாழ்க்கையைச் செப்பனிடுவதற்காகக் கிளம்பியோர் பெற்ற, கொடுமைகளும் தீங்கும் பலப்பல காலத்துக்கும் நேரத்துக்கும் ஏற்றபடி. அவர்கள் உடலையும் உள்ளத்தையும் அவர்தம் கொள்கைகளை வெறுத்தோரும் ஆள்வோரும் செய்த கொடுமைகள் ஒன்று இரண்டல்ல!
சமுதாய சீரமைப்புக்காக, சுய வாழ்வை ஒதுக்கி, பொது வாழ்விலீடுபட்ட அப்போர் வீரர்கள் ஆங்காங்கு அனுபவித்த கொடுமைகள் உலக வரலாற்றைப் பார்ப்போரின் உள்ளங்களைக் குலுக்கும்.
அவ்வளவு வேதனைகள், அவ்வீரர்களுக்கேற்பட்டதுண்டு. அரசாங்கம் தந்த அரியணையின் மீது அமர்ந்தோர், ஒரு சமயம், அம்மாவீரர்களின் எதிரிகளாயிருப்பர். இன்னொரு சமயம், அம்மாவீரரின் பேச்சும் செயலும் பிடிக்காதோர், விரோதிகளாயிருப்பர். மதங்கள் ஒரு நேரம் பாயும்! பலிபீடங்கள் இன்னொரு நேரம் உறுமும்! அரசு அதிகாரம் மற்றொரு சமயம் தூக்குமேடை, துப்பாக்கி, தடியடி ஆகியவைகளைக் காட்டி கர்ஜிக்கும். ஆனால், இதையெல்லாம் கண்டு, பொதுமக்களுக்காக உழைக்க முற்பட்டோர் கலங்கியதில்லை மிரண்டோடியதுமில்லை.
சரியென்று நினைத்தமைக்காகப் போராடும்போது சாவு தடுத்ததில்லை அவர்களை. அதற்காகப் போராடிச் சாவதே தமது வீரத்துக்குக் கிடைக்கும் விருது என்று அவர்கள் கருதியதால்.
பசிக்கொடுமை தாங்க முடியவில்லை. உணவின்றி உலர்ந்த சருகுபோலானாள் மனைவி. அவளது கண்களோ கீழே செத்துக்கிடக்கும் குழந்தையை, கண்ணீரால் கழவிக்கொண்டிருக்கின்றன. அவனோ அருகே உள்ள மேஜையின் மீது அமர்ந்து எழுதுகிறான் கடிதம் – தனது நண்பனுக்கு. பாலில்லை எனினும் பசி தாங்காமல் என் குழந்தை தாயின் மார்பைச் சப்புகிறது. பாலிருந்தாலன்றோ அது வர! ஆனால் குழந்தை அதை எப்படி அறியும்! ஆவலோடு சப்புகிறது. பாலுக்குப் பதில் வறண்டுபோன என் மனைவியின் மார்பிலிருந்து இரத்தம் வடிகிறது. அதையும் விடவில்லை என் குழந்தை குடிக்கிறது! செத்தது! கொடுமை எவ்வளவு? நான் என்ன செய்வேன். ஏங்கெல்ஸ், அருமை நண்பா ஆறாத்துயரோடு நிற்கும் மனைவியின் கண்ணீர் என்னைச் சுடுகிறது. துடிக்கிறாள் அவள். செய்வேன் நானென்ன?
உலகின் பேரறிஞனாம் காரல் மார்க்ஸ், பட்ட கஷ்டங்களிலே ஒரு காட்சி இது.
இதுபோல, மக்கள் வாழ்வைப் பெரிதென மதித்து, தம்மை அதற்கு அர்ப்பணித்த வீராதி வீரர்களின் குடும்பங்களெல்லாம், வேதனையால் மூழ்குபவைதான். பட்டினிக் கொடுமையும் பணத் தொல்லையும், உற்றார் தூற்றலுர் அவர்களைச் சுற்றி வளைத்துக் கிடந்ததுண்டு.
ஒரு பக்கம், தனது கொள்கைகளை எதிர்ப்போரும் மறுப்போரும் விரோதிகளாயிருப்பர்!
இன்னொரு பக்கம், குடும்பத்தில் புயல் வீசும்!
இருதலைக் கொள்ளி எறும்பு போல் தத்தளித்தாலும் இலட்சிய வீரர்கள் ஏங்கியதில்லை; அடங்கியதில்லை அவைகளை நினைத்து.
மனைவியின் ஐயோ என்ற அழுகுரல்; மக்கள் எழுப்பும் வாழ்க என்ற முழக்கத்தால் மறைந்துவிடும். பட்டினிக் கொடுமை மக்கள் தன்னை ஆதரிக்கின்றனர் என்ற மகிழ்ச்சி முன் சிறு துரும்பாகிவிடும்.
பொதுவாழ்வு ஒரு சிலந்திக் கூடு. ஆனாலும் அதிலீடுபட்டோர் தளர்வதுமில்லை; அயர்வதுமில்லை.
உலகத்தை உற்றுப்பார்த்து, அதன் வேதனை தாங்காது அவைகளை ஒழித்து, நல்வாழ்வு காணவேண்டும் என்ற ஒரே எண்ணம் அவர்கள் உள்ளத்தில் குடியேறிவிடுவதால், அந்த எண்ணமே, அவர்களோடு இரண்டறப்பிணைந்துவிடுகிறது.
பரந்து விரிந்துகிடக்கும் மக்கள் கூட்டத்தில் தாங்களும் ஒரு துளியாக, தங்கள் காலத்தைத் தள்ளிவிட்டுப் போவது என்பது கஷ்டமானதல்ல.
ஆனால் இலட்சிய வீரர்களோ, தம்மைப்பற்றி நினைப்பது இல்லை. நினைப்பதே தவறு. சமுதாயத்தை நினைத்துப் பிறகு தன்னை நினைக்கவேண்டுமென்பது அவர்கள் சித்தாந்தமாகிவிடுகிறது.
பொதுவாழ்வு மகிழ்ச்சி ததும்பும் மலர்த்தோட்டமல்ல; கொளுத்தும் வெய்யிலும், குமுறி வீசும் காற்றும் நிரம்பிய பாலைவனம்.
இது, அவர்களுக்கு, நன்றாகத் தெரியும். ஆனாலும் ஈடுபடுகிறார்கள் தொல்லைகளைப் பெரிதென மதியாது.
இலட்சிய வெறி கொண்டோர், இதுவரை ஆளாகியிருக்கும் கொடுமைப் பட்டியலைப்பார்த்தால், மிகப்பெரியதாகும்.
நமது வாழ்வைப் பொருட்படுத்தாது, சமுதாயத்தையே, பெரிதென எண்ணி, அதன் சுழற்சிக்குப் பலியானோர் பல்லாயிரக் கணக்கில் உண்டு. கிளியைத் துரத்துகிறது பூனை; அப்பைங்கிளி கதறுகிறது! காப்பாற்றுவது மிகவும் முக்கியம். தன்னைக் காப்பாற்ற வருவோரைக் கண்டு கிளி மகிழும். பூனை ஆனால்? கோர நகங்களால் பிறாண்டாமல் விடாதே! இதைப் போலத்தான் சமுதாயக் கேடுகளைப் போக்கும் எண்ணத்தோடு ஈடுபடுவோர் பெறும் பலனும்.
போக போக்கியங்களிலே புரளுவோரானாலும், குடிசைக்குள்ளே கொந்தளிக்கும் குடும்பத்தைப் பெற்றோரானாலும், பொதுவாழ்விலே ஈடுபட்டுவிட்டால், அவர்கள் ஒரே வரிசையில்தான் நிற்பார்கள்.
பணம் படைத்தவன், தனது பணிக்காக, அதிகப் பலனை எதிர்பார்ப்பதும், தன் குரலுக்குச் செல்வாக்கு ஏற்பட வேண்டுமென நினைப்பதும் வாழமுடியாத வறியோன் அவன். ஆகவே அவனுக்கு உரியது கொஞ்சம் பலன்தான். எனவே அவன் பேச்சு எடுபடவில்லை என்பதுமான வித்தியாசம் பொதுப்பணி கொண்டோரிடையிலே நிலவாது.
கிளியைப் பூனையிடமிருந்து விடுவித்துப் பறக்கவிடவேண்டும் என்று எண்ணுவோரும் உண்டு. அதே நேரத்தில் பூனையிடமிருந்து கைப்பற்றி தன் வீட்டில் வைத்துக்கொள்ளவேண்டுமென்று முனைவோரும் உண்டு.
இருவரும் கிளியை விடுவிக்கப் போராடினாலும், முதல் நபரே உண்மையுள்ளமும் நல்லெண்ணமும் கொண்டவரென மதிப்புப் பெறுவார்.
எனது பணியும் கிளியை விடுவிப்பது தானே என்று விடுபட்ட கிளியை வீட்டிற்குக் கொண்டுபோக எண்ணுபவன் கூறினால் அதை எவரும் ஒப்பார்.
துரோகி!
பொதுப்பணியின் பேரால் தன் வாழ்வை வளமாக்க நினைப்பவன்
சுதந்திரம் தரப்போவதாகச் சொல்லி, கிளியைத் தன் மகிழ்ச்சிக்காக எடுத்துக் கொண்டவன் என்ற பழியே பரிசாகக் கிடைக்கும்.
பொதுப்பணி என்ற பெயரால் தான் பெற்ற செல்வாக்கை பணப்பெட்டியை நிரப்பும் வழியாக உபயோகிப்பவன் மக்களால் வெறுக்கப்படுவான். அவன் எவ்வளவு அருமையான கொள்கைகளைக் கூறினாலும் அது செம்பாகுமே தவிர, பொன்னாக மதிக்கப்படமாட்டாது.
வேதனைளைத் துச்சமென மதித்து, தூக்குமேடையும், துப்பாக்கியும் சீறியபோதும் சிந்தை கலங்காது, மக்களின் வாழ்க்கை உயர்வுக்காகப் போராடுபவனே உண்மைத் தியாகி. அவனே மக்களின் இதயத்தில் மங்காத நிலவாவான்.
பொதுப்பணி, கஷ்டமானதுதான். ஆனால் அத்துன்பங்களைத் தாங்குவதில் இன்பம் உண்டு; கடலுக்குள் சென்று முத்தையெடுத்தபோது எழுவது போல்.
பொது வாழ்வுக்காகத் தம்மை அர்ப்பணித்த மாவீரர்கள் மறைந்து போய்விட்டார்கள். ஆனால் அவர்களது பெயர்கள் உலகினர் நாவிலே நர்த்தனமாடுகிறது இன்றும்.
மனிதன் பிறக்கிறான் – வாழ்கிறான் – சாகிறான். அவன் சாவோடு, அவனுருவமும் அவனைப்பற்றிய நினைவும் அஸ்தமித்து விடுகிறது. ஆனால் மக்கள் நல்வாழ்வுக்காக, வீரச்சாவு பெற்றவன் பெயரோ என்றும் அழிவதில்லை.
உண்மைப் பொதுப்பணியாளனுக்குக் கிடைக்கும் உயர்ந்த பரிசு இதுதான்!
பொதுவாழ்வுத் தோப்பில் இலையுதிர்காலம் மட்டும் ஏற்படுவதில்லை; கனி குலுங்கும் காலமும் தோன்றுவது உண்டு.
பொதுப்பணி புரிவோரின் உண்மையுள்ளமும் தூய்மை எண்ணமும் துலாக்கோல் ஏறும் சந்தர்ப்பம் அதுதான்!
காங்கிரசு அந்த தராசில் தன்னை ஏற்றி நிறுத்தியுள்ளது!
அதன் விளைவுகளைத்தான் இன்று காண்கிறோம்.
பொதுவாழ்வு காமவேள் நடன சாலையெனக் கருதியோரின் தொகை அதிகம். இன்று நிலைமை மாறியுள்ளது.
பொதுவாழ்க்கையில் மக்கள் மனதைக் கவரும் வகையில், பணி புரிந்துவிட்டு, பணியின் பலன் கிடைத்ததும், அதனால் தனக்கென்ன லாபம்? என்று கணிப்போரின் கதி இன்றைய காங்கிரசு போலத்தான் ஆகும்.
நல்லதுக்குப் போராடி அந்நன்மை கிடைத்ததும் அதைத் தன் சுயநலத்துக்குப் பயன்படுத்தினால், பேரும் புகழும் மறைவது மட்டுமல்ல – மக்களின் கண்டனத்துக்கும் துரோகி என்கிற பழிச்சொல்லுக்கும் ஆளாவார்கள்.
பொதுவாழ்வு இன்பம் தேங்கும் சுனையல்ல! ஆனால் தன் பெயரை உலகுள்ள மட்டும் பொறித்துக் காட்டும் பொன் ஏடு!
(பொதுவாழ்வின் சிறப்பு பற்றி அண்ணா)
செவிச்சுவை!
அறிஞர் அண்ணா
வேட்டையாடிக் களைத்துத் திரும்பும் வழியில், மன்னன் ஒருவன், ஏதோ சத்தம் கேட்டுப் பக்கத்திலிருந்த மந்திரியைப் பார்த்து, என்ன சத்தம் அது என்று கேட்கிறான்!
சத்தமா என்ன? இந்த நிர்மானுஷ்யமான காட்டிலே மிருகங்களின் கூச்சலன்றி வேறென்ன இருக்கும்? என்ற வினவுகிறான் மந்திரி!
யூகம் வேண்டாம்; உற்றக்கேள்; அதோ – பக்தர்கள், சிவனடியார்கள், அரகரா, அரகரா என்று பூஜிக்கிறார்களே – உம் செவியில் அது விழவில்லையா? என்று கேட்டு மன்னன் ஓடத் தொடங்கினான்.
அரசே ஓடாதீர்! சிவனடியார்கள் ஏன் இங்கு வரப் போகிறார்கள்? என்று கேட்கிறான் மந்திரி!
ஆனால் மன்னன் – குளத்தங்கரையை அடைந்து – சாஷ்டாங்கமாக வீழ்ந்து வளங்குகிறான்! மந்திரியோ ஆச்சரியத்துடன், அரசனின் செயலைப் பார்க்கிறான்! குளத்திலே ஏராளமான தவளைகள் கத்திக்கொண்டிருக்கின்றன.
நீர் வழியும் கண்களுடன் மன்னன், மந்திரியை நோக்கி, மத்திரி – கேட்டாயா, கீதத்தை? சிவநாம சங்கீர்த்தனத்தைக் கேள்; சிவ சிவா, சிவ, சிவா என்று இந்தப் பக்தர்கள் காடுவதை கேள் என்று கூறிட, மந்திரி அரசே! கர கர வென்று தவளைகள் கத்துகின்றனவே – அந்தச் சத்தம்தான் தங்கள் செவியிலே சிவ சிவா என்று கேட்கிறது போலும் என்று கூறுகிறான்!
அரசனோ – இரு கை கூப்பித் தொழுதவண்ணம் – சிவ நாமத்தை உச்சரிக்கும் இச்சீலர்களை இதுவரையில் கவனியாதிருந்தது மிகப் பாவமாகும்; மந்திரி – பொன்னைக் கொண்டுவந்து இக் குளத்திலே கொட்டு – சிவனடியார்கள் எடுத்துக் கொள்ளட்டும்! நீரிலே உள்ளனரே பக்தர்கள் – குளிர் தாக்குமே – பட்டுப் பீதாம்பரங்களைக் கொண்டுவந்து வீசு – சிவனடியார்கள் அணியட்டும்! என்று உத்தரவிட, மந்திரி ஐயோ! குளத்திலே வறட்டுக் கூச்சலிடும் தவளைகளை – இன்னன் இப்படித் தவறாகக் கருதுகிறானே – இவன் செவி இருந்தவாறென்ன – இவன் மதி சூன்யமாயிற்நே என்று எண்ணி ஏங்குகிறான்!
மன்னனோ – அந்தக் காட்டுக் குளத்திலே கத்திடும் தவளைகளின் சத்தத்தை, சிவ பஜனைச் சத்தம் என்றே எண்ணுகிறான்!
அவன், செவியிற் சுவை கண்டசீலன் என்று போற்றும் திருக்கூட்டம் ஒன்று இன்றும் இருக்கிறது – அர்த்தமற்ற சத்தம், அக்கூட்டத்துக்கு ஆனந்தமூட்டும்!
தவளை கத்தியது சிவநாமமாக ஒரு மன்னனின் செவிக்குச் சுவை தந்ததாமே – அதுபோல, எவ்வளவு ஆபாசமான கதையாக இருப்பினம், சீர்கண்டு சொக்கி – அணி கண்டு அகமகிழ்ந்து – உவமை கண்டு அவர்கள் உளம் பூரித்து, என்ன சுவை – எவ்வளவு இனிமை என்று கூறிக் கூத்தாடுவர்!
அம்மட்டோ! நாம் கேட்டு மகிழ்வதுபோலப் பிறரும் கேட்டு மகிழவில்லையே என்றும் யோசிப்பர்!
யோசிப்பதுடன் நிற்பரோ – இல்லை; இரு கைதூக்கி – இமயவனைத் தொழுது, செவியிற் சுவையுணரா மாக்களைப் பொறுக்குமோ என்று வேண்டுவர்!
செய்வது என்? யாராருக்கு எவ்வெக் கருத்து இனிக்கிறதோ – அவர்களுக்கு – அக்கருத்தினுக்கேற்ற ஒலி இனிமை பயக்கும்; மற்றவருக்கோ, அது, தலை வலியாகத்தானே இருக்கும்?
மன்னன், பிறை சூடியிடம் பித்தம கொண்டவன்; ஆகவே, காட்டிலே தவைளைக் கத்திய சத்தம், அவன் செவிக்குச் சுவையூட்டிற்று! ஆனால், அவன் செய்ல கதைக்குதவுமா – ஒரு கவிக்கு வேண்டுமானால் உதவும்! மக்களுக்கு, இத்தகைய மதி மயங்கிய மன்னன் செயலால் என்ன பலன் ஏற்படமுடியும்?
சிவனிடம் பக்தி பூண்டு சிவனடியாரிடம் அன்பு கொண்டவனாக இருப்பது – தவளைகனின் குரல் சிவநாம பஜனை என எண்ணுமாறு செய்ததென்றால், அதனை பித்தம் – போதை – மனமயக்கம் – அறிவுக்குறை என்று கூறுவது தவறா?
செவிச் சுவை இல்லாத மாக்கள் மீது செந்தமிழ்ப் புலவர் சீறுகின்றராராம் – கத்துவது தவளை என்று கண்டு கூறிய மந்திரிமீது, மன்னன் வெகுண்டது போல!
தஞ்சைக் கரந்தைத் தமிழ்க் கல்லூரியிலே, சின்னாட்களுக்கு முன்னர் விரிவுரையாளர் சிலர் கூடினராம் – ஏடு பற்றிப் பேசினராம் – பழம் பாடலில் உள்ள சுவையினை எடுத்தோதினராம்!
பின்னர் பரிதாபம் கலந்த குரலுடன் கூறினாராம் – பண்டை நூற்களிலுள்ள சுவையினை உணராச் செவிபடைத்த மாக்கள் சிலர், கம்ப இராமாயணத்தையும், பெரிய புராணத்தையும் தீயிலிட எண்ணுகின்றனரே என்று!
மலர்ந்தது இது; ஆனால், மனத்திலே, மகேசுவரனைத் துதித்திருக்கக்கூடும் – செவியிற் சுவையுணரா மாக்களைச் சுட்டெரியும் என்று!
கைலைக்கு அவர்கள் குரல் எட்டிற்றோ, இல்லையோ – நானறியேன்! எட்டினாலும், அவர்தம் குரல் கேட்டு, விஷயத்தை உணரும் நிலையிலே சிவனார் இருக்கிறாரோ இல்லையோ – தெரியாது!
நந்தி மிருதங்கம் கொட்ட – நாரதர் தம்புரா மீட்ட – பார்வதி பாட – அவர், ஆனந்தத் தாண்டவமாடிக்கொண்டிருந்தால், இந்த அருந்தமிழ்ப் புலவர்களின் புலம்பல், அவர் செவி புகுவதற்க முடியாதல்லவா?
நர்த்தன வேளையாக இராமல் – நாயகியுடன் லீலை புரியும் நேரமாக இருந்தாலும், புலவரின் பொன்மொழி அவர் செவி புகாது; அதிலும் அவர், ஆயிரம் (தேவ) ஆண்டு அன்ன ஆகாரமின்றி) பார்வதியுடன் கலவிச் சுகத்திலே ஈடுபட்ட பக்கப் போர்வழி! (ஈரோட்டுப் பாவிகள் கட்டிய புனைசுருட்டல்ல இக்கதை – புராணப் புலவர்களின் ஆபரணம்!
கைலை விஷயம் கிடக்கட்டும; கரந்தைப் புலவர்கள், செவியுணரா மாக்கள் என்று செந்தமிழ் நயத்துடன் – சொந்த உள்ளத்திலிருந்து எடுத்து வீசிய இச் சொல்லம்பு, சுயமரியாதைக்காரர் மீது ஏவப்பட்டது என்பதை நான் சொல்ல வேண்டுமோ?
அவர்கள்தானே, ஆரிய ஏடுகளைத் தீயிலிட வேண்டுமென்று கூறுகின்றனர்?
அவர்களுக்கு, மேற்படி நூற்களிலுள்ள சுவையை உணரமுடியவில்லை! அவர்கள் மக்களல்லவர் – மாக்கள் என்பது அத் தக்கோரின் தீர்ப்பு!
நமது மறுப்பு அவர்களுக்கு வெறுப்பாகத்தான் இருக்கும் – என்ன செய்வது? இப்படியும் சில பிறப்பு என்று ஒருவரையொருவர் எண்ணிக்கொள்வதோடு, ஒரு வரம்பு இருக்கட்டும் என்பது என் விருப்பு! பிறகு, அவர்களின் அறிவுன் விரிப்பு விடும் இடமெங்கும் அவர்கள் உலவட்டும் – நான் தடுக்க முடியாது!
சுவையுணரா மாக்களாகிய சுயமரியாதைக்காரர்கள், சுயுணர்ந்த செவிச் செல்வர்களை – கவிதை கற்றோரைக் கேட்பது இதுதான் – ஐயன்மீர்! சுவை சுவை என்று சுருதி பாடுகின்றீரே – சொற்சுவையா பொருட்சுவையா? நீவிர் குறிப்பது எதனை – கவிதை அழுகையா, அணி அழகையா? ஆண்டவனைப் பற்றி ஏடுகளிளலே காணப்படும கொள்கை அழகையா? எதனை, சுவை என்று கூறி, இதனை இம் மாக்கள் உணரவில்லையே என்று மாரடித்துக் கொள்கிறீர்?
கெஞ்சுகின்றேன் அஞ்சுகமே
பஞ்சபாணம் மிஞ்சுவதால்.
தஞ்சமென வந்தேன்
பஞ்சணையில் கொஞ்சிடவே
வஞ்சியே வந்திடுவாய்
என்று அவர் பாடினார் – நான் அதிலே இலயித்துப் போனேன்; அவர் தொட்டார் – நான் துவண்டேன்; அவர் இழுத்தார் – நான் சுருண்டேன் – என்று காமச் சேட்டையாடிய ஒருவனுடைய கவிச் சுவையால் தன் கற்பை இழந்ததாகக் கூறினால், அந்த மங்கை நல்லாளின் தமிழ்ப் பற்றை என்னென்பது? – செவிச் சுவைச் செல்வி வாழ்க் என்று போற்றுவீரா?
செவிச் சுவை பற்றிக் கவலையற்று, ஏடா, மூடா ஏதேதோ உளறுகிறாய் – போடா? என்று காமக் கூத்தனைக் கடிந்துரைத்து ஒருவன் துரத்தினால், சீச்சி! செவிச் சுவையுணரா மாக்கள் கூட்டத்தினனாகவன்றோ அவன் இருக்கிறான் என்று ஏசுவீரோ – கூறீர்!
அறிவை ஆரியத்துக்கு இரையாக்கும் காரியத்துக்குப் பயன்படும கவி – காவியம், கலைச் சுவையுடைத்து என்று எமது செவியும் – சிந்தனையும் ஏற்க மறுக்கின்றன!
விவேகம் எனும் மாதை, வேதியர் கூட்டத்துக்கு விபசாரக் கருவியாக்கிடும் வெண்பா, எமது செவிக்கு வேம்பாகத்தான் இருக்கிறது!
பார்ப்பனீயத்தின் பாதந்தாங்கிகளாகப் பலரையும் செய்விக்கும் பதிகம், எமது செவிக்கு நாராசமாகத்தான் இருக்கிறது!
புலவரீர்! உமக்கு அவை சுவை தரலாம்; ஆனால் அவற்றிலே சுவை காணா நாங்கள், மாக்களல்லர்!
நர்த்தனமாடும் நாகத்தை, நளின மாது என்று எண்ணி அருகே சென்றால், என்ன நேரிடும்?
அதுபோலவே ஆரிய நச்சரவு, கவிதை ரூபத்திலே ஆடுகிறது!
அந்த நச்சரவின் விஷப் பல் தீண்டியதால், உமக்குக் கண் மங்காவிட்டாலும் கருத்து மங்கிவிட்டதால், நாங்கள் மாக்களாகத் தென்படுகிறோம் போலும்!
புலியின் தோல் ஆசனத்துக்கு உதவும்; அதற்காகப் புலியை வீட்டிலே வளர்த்து – பூஜை நேரத்திலே அதன் மீது சவாரி செய்துகொண்டு – சர்வேசுவரனைத் தியானம் செய்ய யாரும் இசையமாட்டார்கள்; இசைந்தால், அவர்கள், இறைவனுடன் உடனே இரண்டறக் கலப்பர்!
அதுபோல ஆரிய மத போதனைக்காகப் புனையப்பட்ட ஏடுகளிலுள்ள கவிதை அழகு, தமிழ் வளர்ச்சிக்கு – இலக்கியச் சுவை ஆக்கத்துக்குப் பயன்படும்; அதற்காக அந்த ஏடுகளைப் போற்றிக் கண்களில் ஒற்றிகொண்டு களிப்பது – தோல் வேண்டிப் புலி வளர்ப்போன் கதைபோல முடியும்!
புலியைக் கொன்று தோலை ஆசனமாக்குவதுபோல் – சுயமரியாதைக்காரர்களாகிய நாங்கள் – ஆரிய ஏடுகளைக் கொளுத்துவதன் மூலம், அதிலே புதைந்துள்ள ஆரிய நச்சுக் கொள்கைகளை நாட்டு மக்கள் கைவிடவேண்டுமென்பதை வலியுறுத்துகிறோம்!
எமது செயலின் விளைவாக, அந்த ஆரிய நச்சுக் கொள்கை அழிந்தொழிந்திடின் – புலி செத்தவின் தோலை உபயோகிப்பதுபோல், நாங்கள் – ஆரியம் அழிக்கப்பட்ட பிறகு – ஏடுகளின் இலக்கண இலக்கிய எழிலை எடுத்துத் தழுவிக்கொண்டு பூரித்து வாழுங்கள் – தடுப்பர் இல்லை!
இதைக் கூறும் நாங்கள் மாக்களா? என்ன துணிவய்யா, உங்கட்கு? எங்களிடம் அகராதி கிடையாதென்று எண்ணியா – எம்மை, மாக்கள் என்று கூறுகின்றீர்!
நால்வரின் பாடல் நர்த்தனமாட வேண்டிய நாவினர்க்கே, கோபத்தையும், மாக்கள் என்ற கடுமொழியையும் தந்தது என்றால், நாங்கள் எமது நாவுக்கு அன்பு காரணமாகப் போட்டு வைத்துள்ள தடையுத்தரவை ரத்து செய்துவிட்டால் நிச்சயமாகக் கூறுகிறேன் செவிச் சுவையுணரும் செம்மல்களே! நீவிர் தேள் கொட்டிய மந்தியாவீர்!
ஆனால், மாக்கள் இன்னமும உம்மைத் தோழராகவே கருதுவதால், சுடுசொல்லுரைக்கவில்லை! சொல்லாதிருப்பது, முடியாததால் அல்ல – மனம் இல்லாததால்!
சுவை, சுவை என்று பேசுகிறார்கள் புலவர்கள்; கம்பரசம் எவ்வளவு இனிமை தெரியுமா என்று வாதாடுகிறார்கள். சரி உயர்தரமான கவியிலே இருக்கவேண்டியது வெறும் காமச்சுவைதானே? என்று கேட்கிறேன்.
கம்பன் கவிதைகளிலே வரும் வர்ணனைகளைவிட, காமச் சரக்கு வேறு எங்காவது கிடைக்கும? கம்பன் – கதாபாத்திரங்களை வர்ணித்திருப்பது, தங்க பஸ்பம் சாப்பிட்டுக் கொண்டிருக்கம் தடிதாங்கியின் படுக்கையறை அலங்காரத்துக்க, உபபோகமாகும் பாரிஸ் நிர்வாணப் போட்டோவுடன் போட்டியிடுவதாக இருப்பதைப் புலவர்கள் மறுக்க முடியுமா?
ஒரு தேவ கதை – நீதி நெறி பாடப் போந்த கம்பர், கதாபாத்திரங்களை வர்ணிக்கையில் அளவுக்கு மீறியதான – இடக்கரடக்கல் எனும் நியதியை மறந்ததுமான – காமச் சுவை மிகுந்த வார்த்தைகளை உபயோகிப்பது அழகா? அதைப் படிக்கம் உள்ளம் பாழாகாதா? அவை பக்தியை ஊட்டுமா – இச்சையை மூட்டுமா என்பதை நடுநிலை நின்ற கூறுமாறு வேண்டுகிறோம்.
சர்வாங்க இலட்சண வர்ணனையிலே, கம்பர் சளைக்கவே இல்லை! அந்தச் சுவை, சுயமரியாதைக்காரருக்குக் கவித்திறமை என்றும் தோன்றவில்லை – கடவுட் கொண்கையை ஊட்டும் காவிய இலட்சணமாகவும் அது தெரியவில்லை!
மற்ற மதக்காரர்கள் ஆட்ணவனுக்கு உருவம் அமைத்து குடும்பம் ஏற்படுத்தி வைத்துக கும்பிடவில்லை! ஆண்டவனை உருவமாக்கிய சில மதத்தினரும், தமது கிரந்தங்களிலே கம்பபனைப்போல் – தமது ஆண்டவன், ஆண்டவனின் மனைவி ஆகியோரை நிர்வாணக் கோலமாக்கிக் காட்டும வர்ணனைகளைத் தீட்டியதில்லை! காமச் சேட்டைக்குரிய கருத்துக்களைப் புகுத்தினாரில்லை!
கடவுட் கதையிலே மட்டுமல்ல – உயர்ந்தரமான இலக்கியத்திலே, உத்தம புருஷர்கள் – மாது சிரோன் மணிகள் என்று கவிகள் தீட்டிடும் கதாபாத்திரங்களை – கம்பனைப்போல் – நிர்வாணமாக்கிய கவிகள் கிடையாது!
உயர்தரமான ஆங்கில இலக்கியத்திலே – ரெயினால்ட்ஸ் நாவல்களிலேகூட, காமச்சுவை குழைந்து கிடக்கும் வர்ணனைகள் கிடையாது!
சங்க நூல்களிலும், கம்பனின் காம ரசத்துக்கு இணையான ரசத்தைக் காண முடியாது!
ஆனால் இங்குள்ள புலவர்கள், சங்க நூல்களை இழப்பினும் சகிப்போம் – கம்பனை இழக்க மாட்டோம் என்று கூறுகின்றனர்! தமிழகத்தின் தாழ்வுக்கு இது ஓர் எடுத்துக்காட்டு என்பேன்!
கொலம்பஸ் – அமெரிக்காவைக் கண்டுபிடித்தான்; வாஸ்கோடகாமா – இந்தியாவைக் கண்டு பிடித்தான்; கலீலியோ – பூதத்துவத்தை விளக்கினான்; டார்வின் – மனித உற்பவ விளக்கம் கண்டுபிடித்தான்; நியூட்டன் காந்த சக்தியையும், அதன் விளைவுகளையும் கண்டறிந்தான்!
நீராவி இயந்திரம், தந்தி, டெலிபோன், கம்பில்லாத் தந்தி, நிழற் படம், பேசும் படம், வானஊர்தி, வானொலி, கப்பல் உடலுள் செல்லும் கப்பல், காற்றில் மிதக்கம் கூடு என்று எத்தனையோ அதியற்புதப் பொருள்களையும், கருத்துக்களையும் கண்டுபிடித்த செய்திகளைக் கேட்டுச் செவிச் சுவை உணரும் மக்கள், இந்தப் புண்ணிய பூமியில் மட்டுமல்ல – வெளிநாடுகளிலும் உள்ளனர்!
இங்கே, கடலைத் தாண்டிய அனுமன் கதை; மூலிகை தேட நேரமின்றி மலையையே பெயர்த்தெடுத்து வந்த மாருதி புராணம்; எதிரியைக் கொன்று – அவன் மார்பைத் தடவிப் பார்த்துவிட்டு – ஏழு கடல்களிலும் ஸ்நானம் செய்துவிட்டு அம்புறாத் தூணியிலே வந்து புகுந்துகொள்ளும் பாணம்; அலைகடலில் ஆலிலைமேல் அரி பள்ளிகொண்டிருக்கும் கதை; ஆயிரத் தலைகொண்ட ஆதிசேஷன், அண்ட சராசரங்களையும் தாங்கும் கதை; முக்கண்ணன் – ஆறு தலையோன் – நாலு முகத்தோன் – நந்தி முகத்தோன் – நாவிலே உறைபவன் – நாட்டியமாடுபவன் – மார்பிலே மங்கை கொண்டோன் – மதகரி உருவோன் – என்னும் இன்னோரன்ன பிற கடவுட்கொள்கைகளும்; ஆசிரமங்களிலே நடைபெற்ற விபசாரங்கள் – அவற்றை வெளிப்படுத்திக் கலகமூட்டும் நாரதத் திருவிளையாடல்கள் – அதற்கும் விமோசனம் – அந்த நேரத்தில் அசரீரி – என்ற கதைகளம் கேட்டுச் சுவை உணரும் மக்கள் உள்ளனர்!
அவர்களின் தீர்ப்புதான், பொய்யும் புனைசுருட்டும் – போகப் புழுவும் – பார்ப்பனீய நச்சரவும் நெளியும் புராண இதிகாசங்களை நம்ப மறுத்து, நெருப்பிலிடுக என்று கூறும் நம் தோழரகளை, செவிச் சுவை உணரா மாக்கள் என்று கூறுவது!
இது, பகுத்தறிவு மன்றத்திலே இடம் பெறக்கூடிய தீர்ப்பா என்று கேட்கிறேன்!
கெடுமதி புகட்டும ஏடுகளிலே சுவை காணும் நெடுஞ்செவியராக இருக்க நாங்கள் மறுக்கிறோம்!
எமது செவியிலே, ஆரியத்தால் தாக்குண்டு தவிக்கும் தமிழரின் அழுகுரல் – வைதீகத்தால் வாழ்க்கையைக் கெடுத்துக்கொண்ட தமிழரின் வேதனைக் குரல் – பரம்பரைத் தொழிலாளராக இருந்து பாடுபடும் தமிழினத்தின் பரிதாபக் குரல் கேட்கிறது!
அது எமக்குச் சுவையை ஊட்டவில்லை – உள்ளம் பற்றி எரியச் செய்கிறது!
எமது கண்களிலே தீப்பொறி கிளம்புகிறது – அந்தத் தீப்பொறி, நிச்சயமாக ஆரிய ஆபாச ஏடுகளை எரித்தொழிக்கும்!
தீ பரவுகிறது என்று எச்சரிக்கிறேன்!
தேவை அவசரமாகத்!
அறிஞர் அண்ணா
வீரமறவர்களே! ராஜாக்களே! நாயக்கர்களே! படையாட்சிகளே! நீங்கள் யாவரும் பண்டைய நாள்களில் போர் வீரர்களாக இருந்தவர்கள் என்று அக்குலமக்கள் பெருவாரியாகக் கூடியிருந்த கூட்டத்தில் தோழர் ராஜகோபாலாச்சாரியார் கூறினாராம். போர் வீரர்களாக முன்பு இருந்தவர்களை, மீண்டும், போர்ல் ஈடுபட்டு, புகழ்தேடுவதுடன், எதிரியை விரட்டியடிக்க முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாராம். எப்போது கிளம்பவேண்டும் அந்தமக்கள்? கிளம்பவேண்டுமா உடனே? இல்லை! ஆச்சாரியார் சுயராச்யம் பெற்றதும் செய்தி விடுப்பார், அப்போது புரப்படவேண்டுமாம். அதுவரையில் அவரது பிரசங்கத்தைக் கேட்டுக்கொண்டிருக்கலாம் போலும்! கிடக்கிறது ஆச்சாரியார் ஆசையும் ஈடேறட்டும், அடுத்த மாதத்துக்குள் வைஸ்ராய் நிரிவாக சபையிலே வேலை கிடைக்கும் என்று ஆரூடம் கூறியிருப்பார்கள். கிடைக்கட்டும. அனுபவிக்கட்டும்! அந்த வேலை கிடைத்ததும, நாட்டுக்கே சுயராச்யம் வந்துவிட்டதாகக் கூறட்டும, அதை நம்பும் ஏமாளிகள் நம்பட்டும. அப்போது, மறவரும் நாயக்கமாரும், படையாட்சிகளும், ராஜாக்களம், படையில் சேரட்டும, எனக்கு சம்மதமே, ஆனால், இராமநாதபுரத்திலே ராஜகோபாலாச்சாரியார், ஞாபக மூட்டினாரே, ஒரு காலத்தில் நீங்கள் போர் வீரர்களாக இருந்தீர்கள் என்ற அதை மறக்கவேண்டாம் என்று வீரத்தமிழருக்கு நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்.
ஆச்சாரியார் பேச்சு முகஸ்துதிக்காக இருக்கக்கூடு, இத்தகைய போர்ப்பழக்கமுள்ள மக்கள் என்னிடம் இருக்கிறார்கள் என்று சர்க்காருக்கு ஜாடையாக எடுத்துக்காட்டுவதாக இருக்கக்கூடும. அவரது அந்தரங்க நோக்கம் எதுவாயிருப்பினம் அநத் உண்மை அவரிடமிருந்து அன்ற வெளிவந்ததே அது எனக்குப் பரமதிருப்தி. தெரியுமோ ஏன்! அந்த வீரமக்கள், தமது பண்டை நாட் பண்ணை மறந்தததால், மனம் சுரங்கிப் போயிருக்கிறார்கள். வீரஞ்செறிந்த அந்த மக்கள், துருப்பிடித்த சக்திபோல் உள்ளனர்.
முக்குலத்தாரின் கோரிக்கைகளை ஆச்சாரியார், முதலமைச்சராக இருந்தபோது ஏற்றுக்கொள்ளவில்லை.
குற்றப் பரம்பரைச் சட்டத்தை சத்துசெய்ய வேண்டுமென்று சிளர்ச்சி நடந்தபோது, அவர் கேளாக்காதராகவே இருந்துவிட்டார். வீரமிக்க மக்கள் வெம்பி இருப்பதைக் கண்டும, பச்சாதாபபப்படாத அவர், இராமநாதபுரம் கூட்டத்தில், அன்றொரு நாள் நீங்கள் போர்வீரர்களாக இருந்தீர்கள் என்று கூறினார்! கூறினார் வாயாரக்! மனமாரக் கூறுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதனைக் காதாரக் கேட்ட மக்கள், தீரயோசிக்கவேண்டும்.
வலிவும் வசீகரமும் வயோதிகத்தால் வதங்கி விடுவதுண்டு. மழையில்லாக் குறையால் நஞ்சையும் புஞ்சையும் காடுமேடாகி விடுவதுண்டு. உயிரில்லையேல் பிணம், உணவில்லையேல் நடைப்பிணம் ஆகிவிடுவர் மாந்தர், ஜீவசக்தி குறையக்குறைய, எந்தப்பிராணியும், பழையபண்பை இழந்துவிடுகிறது. இயற்கையாக இங்ஙனம் கேடு நேரிடுவதால் கதி கெட்டுவிடுவது மட்டுமல்ல, செயற்கையால் பிறரின் சேட்டையால், வளங்கெள்டடு, வாட்டம் பெற்ற வகையறாக்களும் உண்டு. பெய்கிற மழையை யாரும் தடுத்துவிடவில்லை. ஆகவே நெற்கதிர் சாய்ந்துகிடக்கவேண்டிய நிலங்களில் முட்கதிர் கிடப்பதற்கு, யாருடைய சேட்டையும் காரணமல்ல. ஆனால் மழையும் பெய்து, உழவனும் உழைத்து, கதிரும் முற்றி அறுவடைக்கு ஏற்ற பக்குவம் வருஞ்சமயத்தில், இருண்ட மனமுடைய குறும்புக்காரன் எருமை மந்தையைக் கழனியில் மேயவிட்டுப் பயிரை அழித்தால், அந்த அக்ரமத்தால் அழிந்த நிலத்தைக் காணுவோருக்கு நெஞ்சு பதறும், கோபம் பொங்குமன்றோ? மழையில்லாக் குறையால் கரம்பான, நிலத்தைக் காறம்போது துக்கம் மட்டுமே ஏற்படும. ஆனால் செழித்து வளர்ந்த பயிரைச் சேட்டைக்காரன் அழித்தது கண்டால் துக்கமல்ல, ஆத்திரமே முதலில் வரும். அதுமிகப் பொல்லாத விளைவுகளுக்கும் பிறப்பிடமாகலாம்!
மறவர், படையாட்சிகள் விஷயத்திலிருந்து பயிர் பச்சை விஷயத்துக்குப்பாய்ந்தது ஏன்? என்பீர். முன்னாளில் போர்வீரர்களாக இருந்த அந்தமக்கள், இந்நாளில் இருக்கும் நிலைமை என்ன? அந்த நிலைமை. இயற்கை வளங்கெட்டதால் வந்த விளையா? அன்றி சேட்டைக்காரர் செய்த தீவினை மூண்டதால் வந்ததா என்பதை, அவர்களும், பொதுவாகத் தமிழரும் எண்ணிப் பார்க்கவேண்டும் என்று கூறவே நஞ்சை புஞ்சையை நடுவே இழுத்துப்பேசினேன்.
சிங்கப்பூர், ஷோனான் என்ற புதுப்பெயர் பெற்றுவிட்டது. காரணம் எதிரிகள் பிடித்துக்கொண்டனர். சயாம், தாய்லாந்து என்ற புதப்பெயரைச் சில ஆண்டுகளுக்கு முன்பு பெற்றது. காரணம் எதிரியின் படை எடுப்பல்ல. சயாமியர்களின் எண்ணம், புதுப்பெயரைத் தமது நாட்டுக்குத் தந்தது. நாட்டுநிலை, மக்கள்நிலை, மக்களிடமுள்ள பண்டங்களின் நிலை முதலியன, இயற்கைக் கேடுகளால் கெடுவதுண்டு, செயற்கையால் கெடுவதுமுண்டு. இந்த இரண்டிய்ல, முன்னதாயின், யார் மீதும் நொந்துகொள்வதற்கில்லை, பிந்தியதாயின் சிந்தனைக்கு வேலை கொடுக்கத்தான் வேண்டும்.
என் எதிரிலே, தோழர் ஆச்சாரியார் எதிலே இருந்த மறவர், ராஜா, நாயக்கர், படையாட்சி முதலிய குலத்தவர் இதுபோது இல்லை. ஆனால் திராவிடநாடு அவர்களைத் தேடிப்போகிறது. ஆகவே அதன் வாயிலாக அவர்களிடம் பேசுகிறேன்.
மறவர்களே! ராஜாக்களே! நாயக்கர்களே! படையாட்சிகளே! தேயார் ஆச்சாரியார் கூறினது உண்டை. நீங்கள் அக்காலத்தில் போர்வீரர்களாக இருந்தீர்கள். கோட்டைகளைக் காவல் பிரிந்துர்கள். கொத்ளங்கள் கட்டினீர்கள். அகழ் வெட்டியும் அரண் அமைத்தும் எதிரியைத் தடுத்தீர்கள். வாளேந்தினீர், வாகை சூடினீர், வல்லமையுடையவராக விளங்கனீர், வாழந்தீர், ஆம்! அது உண்மை. ஆனால் இன்ற உமது நிலைமை என்ன? வாலிபத்தை இழந்தீர், வளமிழந்தீர், வலிமையிழந்தீர், உண்ணும் உணவுக்குப் போரிடுகிறீர், உழைக்கிறீர் அலுக்கிறீர் படுக்கிறீர் புரள்கிறீர் உறக்கமின்றி! வெற்றிக்கொடியெந்திய கரங்கள் இன்ற கட்டை வெட்டுகின்றன! பிளக்கின்றன கற்களைப்! ஏன்? இந்த மாறுதல் வரக்காரணம் என்ன? வீரர்கள் வீழ்ச்சிக்குக் காரணம் யாது? அன்னிய ஆட்சியா காரணம்? அன்னிய ஆட்சியின் பயனாக, நீங்கள் வீழ்ந்தீர் என்றால், அந்தணர் மட்டும, அந்த ஆட்சியிலும், முன்னாளில் இருந்தது போல் இருக்கக் காரணம் என்ன? கோட்டை கொத்தளங்கள் இடிந்தனவே, அக்கிரகாரம், அன்றும் இன்றும் இருந்த நிலை கெடாது இருக்கக் காரணமென்ன? போர் வீரர்களாக இருந்தவர்களே, இமது புகழ் போய்விட்டதே, புரோகிதக் கூட்டத்தின் செல்வாக்கு அலெக்சாண்டர் படை எடுத்த காலந்தொட்டு ஆங்கிலேயன் அல்லற்படும இக்காலம் வரை சிந்தாது சிதையாது இருக்கக் காரணம் என்ன? அன்று நீங்கள் கரும்பருகே கருங்குவளை பூத்த கழனிகளைக் கண்டீர். இன்று கவலை பூத்த குடும்பக் காடுகளில் உலவுகிறீர். உழவர் பலாக் கனியைப் பறித்து மந்தியை விரட்ட வீசுவராம், அவை, தென்னை மரத்து இளங்காயைப் பறித்துப் பதிலுக்க் வீசுமாம், நீங்கள் வாழ்ந்த காலத்தில்! இன்று? வீரமிக்கவரே தோள்வலிமை போச்சே, துரைமார் அதிகாரமாச்சே, என்.று பாடுகிறோம். சூனால், அந்தத் தர்ப்பையின் வலிமை மட்டுமூ போகவில்லையே அதனைக் கண்டீரோ. வல்லீரோ காரணங்கூற! அன்னிய ஆட்சிக்கு முன்பு, அரசு உம்முடையது, இன்ற இல்லை. ஆனால் அன்னிய ஆட்சிக்கு மன்பும் ஆரியருக்கு அதிகாரம் இருந்தது, இன்றம் இருக்கிறது. இந்த செப்படி வித்தையை நோக்குங்கள்! மழையில்லாத குறையால் கழனிகள் காய்ந்து போகுமானால் ஒரு கழனிமட்டும் எப்போதும்போல் இருக்கமுடியாதல்லவா? வருகிற வாய்ககாலை, ஒரே ஒரு கழனிக்குமட்டும் திருப்பிவிட்டு, மற்றைக் கழனிகளுக்கு நீர்பாய்ச்ச மறுத்தால், மறற்வை காய ஒன்று மட்டுமூ ஒய்யாரமாக இருக்கும். அது போலாயிற்று இங்கும். ஒருகுலம் வாழ்க்கைக்குத் தேவையான வசதிகளைப் பெறும் வாய்ககாலைப் பிடித்துக்கொண்டது. குன்றாமல் வாழ்கிறது. மறறகுலங்கள் புறம்போக்கு நிலங்கள் போலாயின. மண்வெட்டிக்கூலி தின்னலாச்சே, எங்கள் மனவலிமை தோள்வலிமை போச்சே, என்று கூவிப்பயன் என்ன? கெட்டது, இயற்கை காரணங்களால் அல்ல, விஷமிகளின் சேட்டையே கெடுதியை விளைவித்தது.
ஆச்சாரியாரே, அந்த வாழ்ந்து வீழ்ந்த குலத்தவரிடம் பேசினதுபோல், உமது இனத்தவரிடம் நீர் பேசுவதானால், ஆச்சாரியார்களே! அய்யங்கார்களே! சர்மாக்களே! சாஸ்திரிகளே! கனபாடிகளே, குருக்கள்மார்களே! ஆரியரே! நாம் அந்தக்காலந்தொட்டு இனறுவரை, மேல் ஜாதி மக்களாய், பகவத் பிதிபிம்பங்களாய், குருமாராய், சாணக்கியர்களாய், குல்லூகபட்டர்களாய், ரிஷிகளாய், அர்ச்சகர்களாய், புரோகிதராய் பூதிகளின் தயவைப் பெற்றவராய் வாழ்ந்துகொண்டு வருகிறோம். எந்த அரசு போனாலும் எவ்வித மாறுதல் வந்தாலும், நமது செல்வாக்கு மங்கினதில்லை. கோயிலும், குளமும், சத்திரமும் சாவடியும், அரண்மனையும் வீடுகளம், நமது விஜயத்துக்காவே உள்ளன. ஷத்திரியன் பலம் நமக்கப் பாதுகாப்பைத் தந்தது, வைசியரின் செல்வம் நமக்கு வாழவழி தந்தது, சூத்திரனின் பணிவிடை நமக்கு சுகமளித்தது. இன்றும் நிலைமை அதுவே. இப்போதும், நானே மாகாண சுயாட்சியில் முதல் மந்திரி, மகாத்மா தோன்னிறார் அவரின் சம்பந்தி! திருவாங்கூரிலே நம்மவரே திவான், பரோடாவில் நம்மவர், காஷ்மீரில் நம்மவர். பீகாரில் நமது விஜயராகவாச்சாரியாரே திவான்! வேதாந்த உலகில் நமது ராதாகிருஷ்ண பந்தலு இருக்கிறார், சங்கீதத்தில் நமது அரியக்குடியார்! நாட்டியத்தில் நமது ருக்மணிதேவியார், எங்கும் நமக்குக் குறைவில்லை. எப்போதும் இருந்ததில்லை, ஆங்கில அரசும் நமக்குப் பரிசுகள் தராமற்போகவில்லை, அரபு அரசும் நம்மை ஆகாதவர் என்று ஒதுக்கவில்லை, அடால்ப் ஹிட்லர்கூட நமது ஆரியப் பரம்பரை! யார் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும், அரசுகளில் மாறுதல் ஏற்பட்டாலும் இல்லையானாலும்ம, ஆரியரின் ஆதிகக்கம் கெடாதவரை நமக்குக் கவலை என்ன? ஆகவே ன்றும் இன்றம் நமக்கு அதிகாரத்தைத் தந்த, அந்த பஞ்சாங்கம், தர்ப்பை, ஆகியவைகளை சர்வஜாக்ரதையாக வைத்துக்கொள்ளுங்கள். ருக், யஜூல், சாமம் அதர்வணம் ஆகியவைகளை மனனம் செய்யுங்கள். என்றுதானே கூறவேண்டிவரும், உண்மையை உரைக்கும் விரதம் பூண்டால்!
ஆச்சாரியாரைக் கேட்க நான்மட்டும் ஆசைப்பட்டு என்ன பலன்? வீரமிக்க தமிழர் வீறகொண்டெ-ழுந்து கேட்கவேண்டும். அப்போதுதானே தெரியும், தமிழர் தவிக்கும் உண்மைக் காரணம்!
இவ்விதமாகவெல்லாம் அங்கு எண்ணிப்பார்க்க மாட்டார்கள் என்ற தைரியம் ஆச்சாரியாருக்கு ஏன் ஏற்பட்டதோ நானறியேன். யார் என்ன வேண்டுமானாலும் எண்ணிக்கொள்ளட்டும். நாம் போடுகிற போடு போட்டு வைப்போம் என்ற முறையிலே ஆச்சாரியார் பேசுகிறார். இவ்வளவு அதிகமாக இவர் பேசுவதிலிருந்தே, வெகுவிரைவில் சர்க்கார் உத்யோகம் பெறபோகிறார் என்று தெரிகிறது. வைசிராய் நிர்வாக சபையிலே அமர்ந்துவிட்டால் இவ்விதம் பேச இடமேது?
உள்நாட்டு பாதுகாப்பு மெம்பர், ஊர்காப்புக்காக என்னென்ன செய்திருக்கிறார் என்பதைக் கூறமுடியுமா? என்று ஆசச்ரியார் வைசிராய் நிர்வாக சபையிலே பதவி பெற்றபிறகு, தோழர் சிவராஜ் கேட்கிறார் என்ற வைத்துக்கொள்ளுங்கள். அப்போது, வீரமரபினர்களைக் கொண்ட விறுவிறுப்பான படைகள் நிறுவியுள்ளேன் என்றா ஆச்சாரியார் பதில் கூறுவார்?
உள்நாட்டுப் பாதுகாப்புக்கான முறைகளைச் சர்க்கார் செய்திருக்கின்றனர். விவரம் கூறுவது, எதிரிக்குத் தகவல் கோடுப்பதாக முடியும் என்று மணிபோல் மலர்வார்.
மறவர் முதலிய வீரமரபினரைப் படையில் சேர்க்க, கனம் உள்நாட்டு மெம்பர் ஏற்பாடுகள் செய்தாரா? என்று தோழர சிரவாஜ் மேலும் கேட்டால், ராணுவத்தில் ஆட்கள் சேர்க்கும் முறைபற்றி எனக்கு முன்பிருந்த உள்நாட்டு மெம்பர் கூறினதைவிட நான் வேறொன்றும் கூறுவதற்கில்லை என்று ஆசசாரியார் கூறுவர். சென்னை சட்டசபைப் பழக்கத்தை வைத்துக்கொண்டால், தொழர சிவராஜின் கேள்விகளுக்குக் கேளாக் காதைத் திருப்பி விடக்கூடும்!
ஆகவே ஆச்சாரியார் அதிகாரரூப மெடுக்குமுன்னம், ஓர மூச்சு, பேசித் தீர்த்து விடுவோம் என்ற துணிந்து விட்டார் போலும்! அதனாலேயே அவர் அத்தனை அபத்தங்களைப் பேச முடிகிறது. கேளுங்கள் அவரது கித்தாப்புப் பேச்சுகளை!
வேப்பிலை வீசிப் பிசாசை ஓட்டிவிடுவதைப்போல, எளிதில் இந்து முஸ்லீம் பிணக்கை ஓட்டிவிட முடியுமாம்! ஏனெனில், இந்து முஸ்லீம் பிணக்கு என்பதை ஒரு கட்டுக்கதையாம்!
ஜனாப் ஜின்னாவும் இவரும் ஒருமுறை சந்தித்துப் பேசினால் சகலமும் சரியாகிப் போகுமாம்!
மகாத்மா திறமைசாலியா, இந்த ஆத்மா திறமைசாலியா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ஆசசாரியாரின் இந்தப் பேச்சைக் கேட்பர். ஆச்சாரியார் மகாத்மாவைவிட மகா சூரர் என்று எண்ண இடமிருக்கிறது. ஏனெனில் வேப்பிலை வீசி விரட்டி விடக்கூடிய இந்து முஸ்லீம் பிணக்கு என்னும் பிசாசை ஓட்ட மகாத்மா பலப்பல முறை முயன்று 21 நாள் பட்டினி முதற்கொண்டு, இருதயத்தைத் திறந்து பேசுவது, காலிசெக்கில் கையொப்பமிட்டுக் கடுப்பது முதலிய எத்தனையோ, வேப்பிலைகள் அடித்தும் விரட்ட முடியவில்லை என்று கூறுகிறாரே, இது திமிர்வாதம் என்று நான் கூறினால், திட்டுகிறான் பரதன் என்று தேசியத் தோழரகள் கூறுவார்கள். கயிறு திரிக்கிறார் கருப்புக்கண்ணாடியார் என்று சொன்னால், கண்ணண் காட்டிய வழியைக் கண்டவரைக் கண்டிக்காலே என்று காங்கிரசார் காய்வர், நான், என்ன கூறுவது ஆச்சாரியாரின் போக்கை விளக்க நீங்களே கொஞ்சம் சொல்லுங்கள். அலட்சியமாகப் பேசுவது எளிது. அபத்தம் பேசுவதும் எளிது. ஆனால் அந்த அபத்தத்தை உண்மைபோல் தெரியும்படி சித்தரிப்பது சற்றுக் கஷ்டம் ஆச்சாரியார் இந்த வித்தையை மிகச்சமர்த்தாகச் செய்து காட்டியிருக்கிறார்.
ஜப்பானியர் பெற்றிகள் பெற்று வருவதன் காரணம் என்ன சொல்லுகிறார் அவர், மக்கள் வேறு அரசாங்கத்தை நடத்துபவர்கள் வேறு என்ற நிலைமை இருந்ததால் ஜப்பான் வெற்றிகள் அடைந்ததாம். அதற்கு உதாரணம் தருகிறார். பிலிப்பைன் தீவிலே இருக்கும் மக்கள் பிலிப்பைன் இனத்தவர், ஆனால் ஆட்சி அமெரிக்கருடையது. ஆகவே ஜப்பான் ஜெயித்தது! மலாயாவில் மலாய் மக்கள், சீனர், இந்திர் உள்ளனர். ஆட்சி பிரிட்டிஷாருடையது. எனவே ஜப்பான் ஜெயிக்கிறது. ஆகவே மக்கள்வேறு, ஆட்சி வேறு மக்களுடையது என்று நிலைமை இருந்ததால், எதிரி ஜெயிக்க முடிகிறது. அந்தந்த நாட்டுமக்களே அந்தந்த நாட்டு ஆட்சியில் இருந்தால் எதிரிக்கு ஜெயம் கிடைக்காது. இது ஆசசாரியாரின் வாதம். உண்மைதானா இது? என்று பார்ப்போம்.
மலாயா வீழ்ந்ததற்குக் காரணம், அங்கு ஆட்சி மலாய் மக்களிடமின்றி வெள்ளையரிடம் இருந்ததால்தான் என்று ஆச்சாரியார் கூறுவது உண்மையானால், பிரான்சை பிரஞ்சுக்காரர்களே ஆண்டு கொண்டிருந்தும், பெல்ஜியத்தில் பெல்ஜிய மன்னன், நார்வேயில் நார்வே இனமன்னன். ஹாலந்தில் அந்த இன ராணி, கிரீசில் கிரேக்கராட்சி, போலந்தில் போலந்து மக்கள் ஆடசி, என்று சுயராச்சியம் இருந்தும், ஏன் ஹிட்லரிடம் அவைகள் தோற்றுவிட்டன?
இந்தக் கேள்விக்கு ஆசசாரியார் என்ன பதில் கூற முடியும்? ஆனால் இந்தக் கேள்வியை அவரை யார் கேட்பது? யாரும் கேட்கமாட்டார்கள் என்ற தைரியத்தால் ஆசசாரியார் எதை வேண்டுமானாலும் பேசிக் கொண்டிருக்கலாம். பேதைகள் பலர் நம்பலாம், ஆனால் பகுத்தறிவுக்கு முன்னம் அவரது வாதங்கள் அரை விநாடி கூட நிற்காது.
வேப்பிலை வீசி, அவர், இந்நாட்டிலே உள்ள இந்து முஸ்லீம் பிணக்கைத் துர்ப்பது கூடச்சற்றுத் தாமதித்து நடத்தப்படலாம். ஆனால் அவருக்கு ஒரு அரை டஜன எலுமிச்சம் பழங்கள் வெகு அவசரமாகத் தேவை. அவருக்குப் பித்தம், அதற்காக எலுமிச்சம் பழத்தைத் தேய்த்துத தலை முழுகவேண்டும் என்று நான் கூறுகிறேன் என்று தவறாகக்கருதிக் கொண்டு, கோபிக்க வராதுர்கள். வேலை கிடைக்கும் போலிருக்கிறதே அவருக்கு, டில்லிக்குப்போய் வைஸ்ராய் துரையையும், மற்ற துரைமார்களையும் பார்க்கப் போகும்போது வெறுங்கையோடு போகப்படாது, எலுமிச்சம்பழம் எடுத்துச சென்றால், மரியாதை செலுத்தும் வகையில் அவைகளை, துரைமார்களிடம் கொடுக்கலாம் அதற்காகச் சொன்னேன்.
திராவிடரும் – கடவுளரும்
அறிஞர் அண்ணா
இஞ்ஞான்றைத் திராவிடமக்கள் சிலரால் வழிபடப்படும் கடவுள் அல்லது கடவுளர், உண்மையாகவே திராவிடரின் கடவுளராகவும், திராவிட மொழிகளில் ஒன்றையாவது தெரிந்தவர்களாகவும் இருந்தால், திராவிட மக்களைக் கொண்டே திரவிட மொழிகளிலே தங்களுடைய காரியங்கள் எல்லாம் நடைபெறும்படி செய்திருப்பர். இன்றுங்கூடத் திராவிட நாட்டிலுள்ள கோயில்களில் நடைபெறும் வழிபாடு (பூசை) கள் எல்லாம் ஆரியப் பார்ப்பனரைக் கொண்டே வடமொழியிலேயே நடைபெற்று வருவது கண்கூடு. ஆகையால், வடமொழியைத் தேனெனப்பருகி, ஆரியக் கொள்கையைக் கற்கண்டெனச் சுவைத்துத் தமிழ் மக்களைச் சூத்திரராக்கித் தமிழ் மொழியைத் தமக்கேற்றதல்லவாக்கித் தமிழர் கொள்கைக்கு இடமளியாது நிற்கும் ஒரு கடவுள், அது எத்தகையதாய் இருப்பினுஞ் சரியே, அதனிடம் எத்துணை ஆற்றல் இருப்பினுஞ்சரியே, அதனைத் தனது கடவுள் என்று எந்தத் திராவிடனாவது ஏற்றுக்கொள்வனா? இனித் திராவிட மக்களுக்கு ஒரு கடவுளும், அவரைக் குறிக்கும் வேதங்கள் திராவிட (தமிழ்) மொழியிலும் இருந்தனவென்றும், ஆனால் அவை ஆரியர் சூழ்ச்சியாலும், ஆடிப்பெருக்காலும் மறைந்தும் அழிந்தும் போயினவென்றும் சிலர் கூறுவரேல், அவர்தம் அக்கூற்று அறிவுடைய மக்களால் அணுவளவும் எற்றுக்கொள்ளக்கூடியதன்று என்பேன். ஏனென்றால், அக்கடவுளும் அவர் தம்மைப்பற்றி எழுதப்பட்ட வேதங்களும் ஆரியச் சூழ்ச்சியாலும் ஆடிப் பெருக்காலும் அழியக் கூடியனவாய் இருந்தால், அக்கடவுளை எல்லாம் வல்ல முழுமுதற் கடவுள் என்றும், அவர் இலக்கணத்தைக் கூறும் சுவடிகளை முடிந்தமுடிபைக் கூறும் வேதங்கள் என்றும் எப்படி ஒப்புக் கொள்ள முடியும்? தன்னையும், தன்னை விளக்கும் நூல்களையும் காப்பாற்ற வகையற்ற ஒரு கடவுள், நம்மையும் மற்றும் இவ்வுலகிற் காணப்படும் அனைத்தையும் காப்பாற்றும் ஆற்றல் பெற்றுள்ளதென்பதனைக் கேட்கும், மணற்சோறு பொங்கி மகிழும் சிறுமகாரும் எள்ளிநகைப்பரே!
இனித், திராவிட மக்கட்கு ஒரு கடவுள் உண்டென்று கூறுவோர், மேற்கூறிய தணிவோடுமட்டும் நின்றுவிடுவதில்லை. தங்கள் போலிக் கொள்கைகளை நிலைநாட்டுவதற்காகக் ஏதேதோ சான்றுகள் காட்ட முனைந்துவிடுகின்றனர். அவையாவன; ஆரியர்களும், சமண – புத்தர்களும் திராவிட நாட்டிற்கு வந்து தத்தம் மதக் கொள்கைகளை நிலைநாட்டிய காலத்திற்கு மிக முன்பிருந்தே திராவிட மக்கள், கடவுள் வழிபாட்டையும், அதற்குரிய வேதாகமங்களையும் உடையவர்களாய் இருந்தனரென்றும்; ஆரியச் சூழ்ச்சியாலும் ஆடிப் பெருக்காலும் அவை மறைந்தும் அழிந்தும் போனபின்னர்; திருவள்ளுவர் திருக்குறளையும், சைவசமயாசிரியர்கள் தேவார திருவாசகங்களையும்; வைணவாசிரியர்கள் பிரபந்தங்களையும் உண்டாக்கிப் பண்டைத் திராவிடரின் கடவுட் கொள்கையை நிலைநாட்டினர் என்றும் கூறுவர்.
இக்கூற்று முழுப் பூசுனைக்காயைப் பரிமாறின சோற்றுள் மறைப்பது போன்ற ஒரு பொருந்தாப் பொய்க் கூற்றாம். எப்படியென்றால், வள்ளுவர் வழங்கிய திருக்குறளானது, ஒரு சமயச் சார்புபற்றிய நூல் அல்லவென்பதூஉம், அது உலமக்கள் அனைவர்க்கும் அறிவை விளக்க எழுந்த ஒரு பொது நூலே என்பதூஉம் அறிஞர் கண்ட முடிபாகும். எனவே, திருக்குறளைச் சைவரோ – வைணவரோ மற்றெந்தச் சமயத்தவரோ, தங்கள் சமய உண்மைகளை விளக்க எழுந்த நூலென்றோ, அல்லது தங்களுக்கன்றிப் பிறர் எவர்க்கும் உரியதாகாதென்று கூறித் தனியுரிமை பாராட்டவோ முடியாது. அது மக்கட் பண்பை விளக்க எழுந்த ஒரு பொதுநூல். ஆனால் அதற்கும், மதவெறி பிடித்தோர் மாசண்டாக்கி, அதனை மன்பதையின் பொது நூலாக்கிக்கொள்ள இடமில்லாது செய்து விட்டனர். என்றாலும், பொன்னின் களிம்மைப்புடம் போட்டு நீக்க முடிவது போல், திருக்குறளையும் அதன்கண் புகுத்தப்பட்டுள்ள மதமாசைத் துடைத்து அதனை மன்பதையின் பொதுநூலாக்குவது, முயன்றால் முடியாத காரியமன்று. மணிகளிடையே பவளத்தைக் கோர்ப்பதுபோல், அறிவுமணியாகிய திருக்குறளிலே மதக் கொள்கைகள் ஆகிய பவளங்கள் கோர்க்கப்பட்டிருப்பது கலங்கரை விளக்காய்க் காணக்கிடக்கின்றது. அவற்றை நீக்குவது காய்தல் உவத்தல் இன்றிய கற்றறிந்தாரால் மிக எளிதில் முடியக் கூடிய காரியமே.
இனித், தேவார – திருவாசக – நாலாயிரப் பிரபந்தங்கள். எல்லாம், இருக்கு – எசுர் – சாமம் – அதர்வணம் என்று சொல்லப்படும் ஆரிய வேதங்களை அடிப்படையாகக் கொண்டு உண்டாக்கப்பட்டன வென்பதற்குச் சான்றுகள் பலவுள. விரிவஞ்சி ஒன்றை மட்டும் ஈண்டெடுத்துக் காட்டுகின்றேன்.
அதாவது: –
வேதம் பகவதன் பால்
மெய்யாகமநால்வ
ரோதுந்தமிழ் அதனினுன்று
நெய் – போதமரு
நெய்யுனுறு சுவையாரின்
வெண்ணெய் மெய்கண்டர்
செய்த தமிழ் நூலின் திறம்.
இப்பாடல், சைவசித்தாந்த நூலாகவுள்ள சிவஞான போதத்தில் அதன் சிறப்பைக் குறிக்குஞ் செய்யுளதாக மிளிர்வது. இப்பாடலின் பொருள் என்னவென்றால், இருக்கு அதர்வம் ஆகிய ஆரிய வேதங்கள் பசுவாகவும்; அப்பசுவிடத் துண்டான பாலை ஆகமங்களாகவும்; அப்பாலிடத் துண்டாகும் நெய்யைத் தேவரா திருவாசகங்களாகவும்; அந்நெய்யிடத் துண்டாகுஞ் சுவையைச் சிவஞானமாகவும் கூறிச் சிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அன்றியும், தேவார – திருவாசகங்கள் எல்லாம் இருக்கு முதலான வேதங்களை அடிப்படையாகவும் இராமாயண – பாரத இதிகாசங்களை வேதமாகவுங்கொண்டு பாடப்பட்டதற்கு அப்பாடல்களிலேயே சான்றுகள் காணக்கிடப்பதோடு இராமாயண – பாரத இதிகாசங்கள் எயன்றால், தேவார – திருவாசக பிரபந்தங்களைப் பாடியிருக்க முடியாதென்ற தன்மையும் அங்கை நெல்லிக்கனி ஆகையால், பிரபந்தங்களைப் பண்டை வேதாகமங்களில் சாரம் என்பது சாரமற்ற கூற்றேயாகும். பண்டைத் தமிழ் மக்களுக்கு வேதங்கள் எதுவும் இருந்ததில்லை என்பது போதரும். தரவே, அவ்வேதாகமங்கள் பேசப்பட்டதாகச்சொல்லி, இன்றைத் தேவார – திருவாசக பிரபந்தங்களம், ஏனைச் சைவ – வைணவ நூல்களில் கூறப்படும் எந்தக் கடவுள் பண்டை திராவிட மக்களால் வழிபடப்பட்டன அல்ல என்பதும் பெறப்படும். திராவிட மக்கள் பால் மங்களுக்க ஏற்ற கடவுள் வழிபாடு ஒரு வேண்டப்படாத – தேவைப்படாத மூடக்கொள்கை இருந்திருக்க முடியாதென்று யாரும் கூறும் உண்மைத் தன்மை பெறுதல் காண்க. காணவே கருத்து சிலர், திருக்குறளையும் தேவார திருவாசக – பிரபந்தங்களையும் பண்டைத் தமிழ் நூல்களின் சாரம் என்று கூறுவது தருக்கர் உரையாம் என்றே கருதப்படும்.
இனி, முதல் – இடை – கடைச் சங்கமென்று சொல்லப்படும் முப்பெருங் கழகங்களில், அக்கழகத்திற்குத் தலைவராக இருந்த தமிழ்ப் புலவரின் பெயர் என்பதும், அப்புலவர் அறிவால்கள். தலைசிறந்து விளங்கிய காரணத்தால் இறந்தபின், அவர் பேரல் நினைவு சில எடுக்கப்பட்டு, ஆண்டுதோறும் நாட்கள் தமிழ் மக்களால் பொண்டாடப்பட்டு வந்தன வென்பதும், அந்நினைவு கற்களே, ஆரியர்கள் இந்நாட்டிற்கு வந்த பின்னர் சிவன் கோயில்களாக மாற்றப்பட்டனவென்பதும், அப்புலவர், சிவன் என்ற பெயரால் எப்படி – ஏன் அழைக்கப்பட்டார் என்பதுமான உண்மைகள், பெரிய புராண ஆராய்ச்சி முதற்பாகத்தில் தக்கசான்றுகளுடன் விளக்கப்பட்டிருக்கிறது.
இங்ஙனமே, வைணவ மதமும், அதன் கடவுளான திருமால் வழிபாடும் வட நாட்டிலே, சடகோபர் – முனிபாணர் – பாவணாச்சாரி முதலியோரால் ஏற்படுத்தப்பட்டு, நம்போலும் மக்களினத்தாரில் ஒருவனாய் இருந்து இறந்து போன இராமன் என்னும் அயோத்தி மன்னனைக் கடவுளாகக் கொண்டு, இராமனுசர் என்பவரால் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டதென்பதும், ஈண்டுக் கருதற்பாலது. இவ்வாறே, புத்த – சமண மதங்கள் வட நாட்டிலிருந்தும்; கிறித்துவ மதம் ஆசியாவிலிருந்தும்; முகமதிய (இஸ்லாம்) மதம் அரபி நாட்டிலிருந்தும் பொண்டுவரப்பட்டுத் திராவிட நாட்டில் இறக்குமதி செய்யப்பட்டனவென்பதும் யாவரும் அறிந்ததே. ஆகையால், திராவிட மக்களுக்கென ஒரு மதமோ – கடவுளோ அவரைக் குறிக்கும் வேதாகமங்களோ பண்டைக் காலத்தில் இருந்ததில்லை என்பதும், அவையெல்லாம் காலக்கணக்கில் ஒவ்வொருவரால் கொண்டுவந்து, புகுத்தப்பட்டவை என்பதும மறுக்க முடியாத உண்மைகளாகும்.
இனி, இவ்வளவு காலமாக இக்கடவுள்கள் மக்களுக்குச் செய்த நன்மை என்ன என்பதையாவது யோசித்துப் பார்க்க வேண்டாமா? மக்களின் பசிக் கொடுமை நீங்கிற்றா? ஒழிந்ததா கவலை? மாறிற்றா வறுமை? கைலையில் காவலோடுவாழும் கடவுளையும்; வைகுந்தத்தில் வனிதையரோடு கூடி விளையாடும் கடவுளையும்; மக்கள் படைத்து வழிபட்டுக் கண்ட பலன் என்ன? அன்றியும், இச்சொல்லப்பட்ட கடவுளரின் திருவிறக்க (அவதார) ங்களான நாயன்மார் ஆழ்வார்கள் – ஆகிய மதத்தலைவரிகளால் மக்கள் அடைந்த பயன் என்ன? பசியும், விளியும், வறுமையும், கவலையும் மக்கள்பால் இல்லா தொழிந்தனவா? அன்று தொட்டின்றுவரை இன்பதுன்பங்கள், மேடும் பள்ளமும் போல் இருந்து வருவதையே காண்கின்றோம். இங்ஙனம இருப்பது இயற்கையின் பண்பென்று எழிலுடையார் கூறுகின்றனர். முயற்சித்தால் முடியாத தொன்றில்லை என்று முதறிவோர் கூறுகின்றனர். இவ்வுண்மைகளை உணரா தோரும், உணரவிரும்பாதாரும், இல்லாததும் – இருக்க முடியாததும் – வேண்டப்படாததுமான ஒன்றை, இருக்கிறதென்றும் இருக்க முடியுமென்றும், வேண்டப்படுவதென்றும் கூறி வீணாக உலகை ஏமாற்றி வருகின்றனர். கடவுளைக் கண்டேன் என்றும், பாண முடியுமென்றும், கூறிகின்ற ஒருவன், அந்தக் கடவுளைக் கண்டு தனக்குத் தேவையானதைப் பெற்றுக் கொள்ளாமல், கடவுளைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கின்றவனிடம் போய்ப் பிச்சை கேட்கிறான். கடவுள் தன்மை இருந்தவாறு மிக நன்று! நன்று !! என்று அந்தப் பகுத்தறிவாளன் நகைத்து, அப்பிச்சைக்காரனுடைய வயிற்றுப் பசியை நீக் வழியும், அறியாமைப் பசிக்கு ஆராய்ச்சியோடு கூடிய அறிவும் சொல்லிக் கொடுக்கிறான். கேட்டு அதன்படி நடப்பது அவன் கடமை.
இனி, மதநுலால் கூறும் கடவுள் இலக்கணப்படி, ஒரு கடவுள் எக்காலத்தும் – எவ்விதத்தும், எவ்விடத்தும் இருக்க முடியாதென்பதற்கு, இன்னுமொரு வலிய சான்று தருகிறேன். அதாவது, உலகிலுள்ள அசையும் பொருள் – அசையாப் பொருள்ஆகிய அனைத்தும், கடவுளின் ஆணை – அருள்- அன்பு – நினைப்பு – நோக்கு ஆகியவற்றால் உண்டாகி, இலங்கும் உயிர் உல் அனைத்தும் ஈசன் கோயிலாகி, எல்லாம் பொருள்களையும் அந்த ஒரு கடவுளே இயக்கிக் கொண்டிருக்கிறார் என்பது, பொதுவாக எல்லா மதநூல்களுடையவும் முடிந்த முடிபான கொள்கையாகும். உலகத்தோற்ற முறையைக் கூறுமிடத்துப் பலதிறப்பட்ட வேறுபாடுகள் காணப்படினும், கடவுளுக்கும் உயிர்களுக்கும் உள்ள தொடர்பும், அவ்விரு வகைப்பட்டாரின் செயல் வேறுபாடுகளும் ஒரு விதமாகவே கூறப்பட்டுள்ள. ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே என்று கடவுட் கொள்கை எல்லா மதங்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்டதாகும், எனவே, கடவுளுக்கும் உயிர்களுக்கும் பொதுவாகவுள்ள இவ்வடிப்படைக் கொள்கையை ஆதாரமாகவும், பகுத்தறிவைத் துணையாகவும் கொண்டு பார்க்கும்போதுதான், கடவுள் என்ற ஒரு பொருள் எந்த வகையிலும் இருக்க முடியாதென்ற நல்ல முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது. எப்படியென்றால், உலகிலுள்ள அனைத்தையும் இயக்குவது கடவுள் என்றால், இயக்குபவன் இன்னான் என்று இயங்குபவன் ஏன் அறிந்து கொள்ள முடிவதில்லை? அல்லது இயக்குகின்ற அந்தக் கடவுளாவது தன்னை இன்னான் என்று இயங்குபவனுக்கு என் அறிவிப்பதில்லை? உதாரணமாக, ஒருவனுக்கப் பிறக்கும் ஒரு குழந்தைக்கு, கடவுள் ஒருவர் இருக்கிறார் என்ற எண்ணம் அல்லது அறிகுறி ஏன் உண்டாவதில்லை? எல்லாம் வல்ல கடவுள், தன்னால் படைப்பிக்கப்படும் குழந்ததைக்குத் தன்னை அறியும் தன்மையை அதன் பிறப்பிலேயே கொடுக்க முடியவில்லை. அல்லது கொடுப்பதில்லை என்றால், அந்தக் கடவுளுக்கு எல்லாம் வல்ல இயல்பு யாங்ஙனம் பொருந்தும்? தனக்குப் பசியிருக்கிற தென்பதை அழுவதன் வாயிலாகப் பிறர்க்கு உணர்த்தும் ஆற்றல் பெற்ற ஒரு சின்னஞ்சிறு குழந்தை தன்னைமயும் தனக்குப் பசியையும் உண்டாக்கியவன் கடவுள்தான் என்பதை ஏன் உணரமுடிவதில்லை? உண்மையாகவே கடவுள் தன்மை அக்குழந்தையிடம் இருக்குமானால், அக்குழந்தை பிறர் சொல்லிக் கொடுக்காமலேயே கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதை அறிந்துகொள்ளும். அங்ஙனமன்றிக், கடவுள் ஒருவர் இருக்கிறார் என்ற செய்தியை பிறர்சொன்ன பின்னரே அக்குழந்தை தெரிந்து கொள்கின்றதென்றால், அக்கடவுட் செய்தி தெரிவிக்கப்படும வரை அக்குழந்தைக்கும், பிறரால் தெரிவிக்கப்பட்ட அந்தக் கடவுளுக்கும் எந்த விதமான தொடர்பும் இருந்திருக்க முடியாதன்றோ! உலகப் பொருள்களை, இது இன்னது, இது இத்தன்மையது என்று அவற்றை அறியாதானுக்கு அறிவிப்பது போல், கடவுளையும், இவர் கடவுள், இத்தன்மையர் என்று அறிவிப்பதென்றால், தோன்றி அழியும் உலகப் பொருள்களுக்கும், தோன்றா அழியாப் பொருளான கடவுளுக்கும் யாதாமொரு வேறுபாடோ – உயர்வு தாழ்வோ இருக்கமுடியுமா? அது, இந்துமதக் கடவுளாயினும் சரி, வேறு எந்த மதக் கடவுளாயிருனுஞ் சரி தமக்கும் பிற உயிர்களுக்கும் தொடர்பில்லாத முறையில், தொடர்பை உண்டாக்குபவன் ஒருவனை வைத்துக் கொண்டு இருக்கிறதென்றால், அத்தகைய கடவுள், கடவுள் இலக்களத்தைக் கூறும் வேதாகமங்களின்படி ஒப்புக்கொள்ள முடியாததாகும்.
இனி, ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்றால், புற்றீசல் போன்ற பலகுலங்கலும் பல கடவுளரும் இருப்பானேன்? ஒரு கடவுளே பல பெயர்களோடு வணங்கப்படுகிறார் என்றால், ஒரு கடவுள் இன்னொரு கடவுறோடு நான் பெரியவன் நீ சிறியவன் என்று சண்டையிட்டுக் கொள்வானேன்? ஒரு குலத்தவன் இன்னொரு குலத்தவனை நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்று கூறிக் குலப்போர் நடத்திக் கொடுமை விளைப்பானேன்?
ஒரு அரசன், தனக்குக் கீழே பலசிற்றரசர்களை வைத்துத் தந்நாட்டை ஆளுவதுபோல, ஒரு முழுமுதற் கடவுளும், தமக்குக் கீழே பல சிறுசிறு கடவுளரை வைத்து இவ்வுலகத்த இயக்குகின்றதா? அங்ஙனமாயின், அக்கடவுளுக்கு முழு முதற்றன்மையும்; எல்லாம் வல்ல இயல்பும், உண்டென்று கற்பிப்பதன் பொருள் என்ன? இந்துமதத்திற் பேசப்படும் கடவுளுக்கு, இச்சொல்லப்பட்ட தன்மைகள் உண்மையாகவே இருக்குமானால் இந்நாவலந் தீவில் பல்வேறு மதங்களும், அவற்றிற்குரிய பல்வேறு கடவுளரும் இருக்கக் காரணமில்லையே.
விறுப்பு வெறுப்பற்ற ஒரு கடவுள், தன்னைப் பிறர் வணங்கவேண்டுமென்று விரும்புமா? தன்னை வணங்கியவர்களுக்குப் பிறப்பும் வணங்காதவர்களுக்கு பிறவாமையும் கொடுக்குமா? அப்பத்தானென்றால் கைக்கூறி பெற்றுக் கொண்டு ஒரு காரியத்தை முடித்துக் கொடுப்பவனுக்கும்த அந்தக் கடவுளுக்கும் உள்ள வேறுபாடு என்ன? என்று இதுவரை கூறிய சுருக்கமான இவ் உண்மைகளை உள்ளபடியே அறிவோடு ஆராய்ந்து பார்ப்பவர்க்கு, கடவுளின் தன்மை இப்படிப்பட்டதென்பதும், கடவுள் இல்லாமலேயே உலகில் வாழதுமுடியிமா முடியாதா என்பதும், திராவிட மக்களுக்குக் கடவுட் கொள்கை எப்படி யாரால் – எந்தக் காலத்தில் உண்டானதென்பதும, கடவுளுக்கும் உயிர்களுக்கும் யாதாயிலும் தொடர்பு இருக்க முடியுமா என்பதும் எளிதில் விளங்குவதோடு, இயங்கும் உலகம் இயற்கையோடு அமைந்துள்ளதென்ற உண்மையும் விளங்கம் என்ற காரணத்தால், இன்னும் இதுபற்றி விரித்தெழுதாமல் இந்த அளவோடு முடிக்கிறேன்.
புதுமை பொங்குக!
அறிஞர் அண்ணா
பொங்கல் ஞாயிறன்று! அதனைத் தமிழர் திருநாளெனக் கொண்டு போற்றி வாழுபவர். தமிழரெல்லோருக்கும் நாம் பொங்கல் வாழ்த்து அனுப்பக் கடமைப்பட்டுள்ளோம். அனுப்புகிறோம் அன்புடன். தமிழர வாழ்வே, நம் வாழ்வு எனக் கொண்டு பணியாற்றி, தமிழ் வாழத் தமிழர் வாழ்வர், தமிழர் வாழத் தமிழ்நாடு தழைக்கும் எனக்கூறி அதற்கெனப் பாடுபடும் நாம் தமிழரின் திருநாளன்று நமது அன்பு மொழியைத் தமிழர் இல்லந்தோறும் அனுப்பி, தமிழர் உள்ளமெல்லாம் செல்லச் செய்ய அவாவுறுகிறோம்.
தமிழரின் களிப்பைக் கண்ணாரக் கண்டார், காண வேண்டிய காட்சியைக் கண்டு தீர்ந்துவிட்டது என்ற உள்ளூர எண்ணும் நாம், இவ்வாண்டுப் பொங்கற் புதுநாளன்று பொன், மணி தர முன்வரவில்லை! தமிழர் அதனை நாடார்; தேடார்; பிறர் கைநோக்கி நிற்கார்; ஆனால் நாம் நமது அன்மையே பொங்கல் வாழ்த்தாகத் தருகிறோம்.
சென்ற ஆண்டும் பொங்கல் வந்தது, இவ்வாண்டு வருவதுபோன்றே! ஆண்டுதோறுந்தான் பொங்கல் வந்து போகிறது. அந்நாள் புனலில் குளித்து, புத்தானை உடுத்தி, பூரித்த உள்ளத்துடன், இல்லந்தோறும் இன்பத் தமிழோடு, தமிழர் இருத்தலே முறை.
ஆனால் சென்ற ஆண்டு பொங்கலின்போது இன்பமா இருந்தது? இந்தி எதிர்ப்பில் ஈடுபட்டதற்காக, காளைகளும், காரிகையரும் கடுஞ்சிறையில் கஞ்சியும் கூழும் உடு, கல் தலையில் படுத்துருண்டு, காய்ச்சலைத் தோழமை கொண்டு, கல் உடைத்து, கட்டைபெட்டி, நீர் மொண்டு நிலம் பெருக்கி, நிந்தை கேட்டுச் சிந்தை நொந்து வாழ்ந்தனர். அவர்கள் உள்ளம் உறுதிதான், ஆனால் திரேகம் அப்படியல்லவே! அவர்கள் பெற்றோரும், பெறற்கரிய பேறு பெற்றான் எம் மகவு என்றுதான் உள்ளத்தில் கருதினர். ஆனால் தம்மனையில் பொங்கி, பொங்கற் புதுநாளன்று இருக்கவேண்டிய சிங்கமனையார், தமிழரைப் பங்கப் படுத்துவதையே தமது பணியெனக் கொண்டு வாழ்ந்த ஆட்சியினரின் கொடுஞ் செயலால், சிறைப்பட்டு, சோர்ந்து இருப்பதை எண்ணி, வாடினர்.
எத்துணை எத்துணை பிரிவுகள்! வாட்டம் எங்கெங்கு! இன்று எண்ணினாலும் ஏக்கமே வரும்.
அந்த ஆண்டு போயிற்று! அந்தப் பொங்கல் போய்விட்டது. இவ்வாண்டு பொங்கலில் இல்லம் தோறும் இன்பம் இருக்கவே மார்க்கம் கிடைத்தது.
ஆனால் இன்பம், பூரணமானதா? இல்லை! தமிழரின் இல்லங்களில், தமிழ் வாழ்வு பொங்குமா? இல்லை! தமிழ்நாட்டில் தமிழ் தழைக்கவா மார்க்கமிருக்கிறது! இல்லை! தமிழ்நாட்டில் தமிழர் வாழவா வழி பல இருக்கின்றன? இல்லை! இல்லை! தமிழரிடமா ஆட்சி? காணோம்! தமிழருக்கா தமிழ்நாடு? இல்லை! இப்போதுதான் அந்த மூலமந்திர முழக்கம் கிளம்பி இருக்கிறது. தமிழ்நாட்டில் இனி சாந்தி, சமாதானம், அமைதி, மனத்திருப்தி ஏற்படக் கூடிய விதத்திலே அரசியல் நடப்பு உள்ளதா? அதுவும் காணோம்!
எனவே பூரணமான இன்பத்துக்கும் இடமில்லை இவ்வாண்டு, ஆனால் சென்ற ஆண்டு சிந்தை நொந்து வாழ்ந்ததைப் போல இருக்க வேண்டியதுமில்லை.
ஆனால் சென்ற ஆண்டுக்கு இவ்வாண்டு தமிழர் முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பதிலே சந்தேகமில்லை.
எங்கு நோக்கினும் தமிழ் வாழ்க! வாழ்க தமிழ்! தமிழருக்கே தமிழ்நாடு! என்ற பேரொலி கேட்கிறோம்.
யாரைக் கேட்பினும், ஆம்! தமிழனே நான்! எனப் புன்சிரிப்புடன் மார்தட்டிக் கொண்டு கூறக் கேட்கிறோம். நாள்தோறும் ஊர் தோறும் தமிழர் கூட்டங்கள், தமிழர் பரண, தமிழர் முழக்கம், நடந்தபடி உள்ளன. தமிழரின் தலைவர் தமிழர் உள்ளமெல்லாம் கொள்ளை கொண்டுவிட்டார். தமிழர் தம்மை உணரத் தொடங்கிவிட்டனர். தம்மவரைத் தழுவத் தொடங்கிவிட்டனர். தம் நாட்டில் தமது மொழியைக் காக்கத் தொடங்கிவட்டனர். தம் நாட்டில் தாமே வாழவேண்டும், அரசு தமதே ஆட்சி தமதே எனக் கூற உறுதி கொண்டுவிடடனர். தமிழர் விடுதலைப் போரிட முனைந்துவிட்டனர்.
எனவே இவ்வாண்டு பொங்கலன்று வீடுதோறும் செந்நெல் மணி வாடையுடன் செந்தமிழின் மணமும் சேர்ந்து கமழும் என நம்புகிறோம்.
அந்த நம்பிக்யே நமது இன்பத்துக்குக் காரணம்.
பொங்கல் புதுநாளின் கருத்து மிக அழகியது. பொருள் ததும்புவது.
ஆரியர் கொண்டாடும் ஆபாசப் பண்டிகைபோல எதிரியை எப்படியோ வதைத்து விடடதற்காகக் கொண்டாடும் நாளன்று! ஆரியர் பண்டிகை, வெறியாட்டம்! அவைகள் சூதும் சூழ்ச்சியும் வீரத்தை வாட்டி வதைத்ததை விளக்கும் பண்டிகைகள். பொங்கற் புதுநாள் அத்தகைமைத்தன்று.
பாடுபட்டால் பலன் உண்டு! வாழ்வுண்டு உழைத்தால்! என்ற மூலக் கொள்கைக்கு ஏற்றநாள் அது.
காட்டைத் திருத்தி, நிலமாக், மேட்டை அகற்றிக் குளமாக்கி, கரடுமுரடைப் போக்கி வாய்க்கால்களாக்கி, வயல்கள் பலவும் அமைத்து வரப்புகள் தொகுத்து, உழுது நீர்பாய்ச்சி, களை எடுத்துக் காப்பாற்றி, முற்றிய கதிரை அறுத்து வந்து முற்றத்தில் கொட்டி, அளந்து எடுத்து ஆனந்தத்துக்கு அடிகோலும் நாளாகும் அந்நாள்.
உழைப்பின் பயன் இதுவென உணர்ந்து, மகிழ்ச்சி பொங்குகிறது என்பதை மனதில் இருத்த வேண்டி, பாற்கொங்கலிட்டு, பொங்கலோ பொங்கல்! எனத் தீந்தமிழ் மொழி புகன்று, தித்திக்கும் பண்டமுண்டு திருநாள் கொண்டாடும் நாளாகும்.
அந்நாள், தமிழர் தமது உள்ளத்தில் ஒரு விஷயத்தை நினைவிலிருத்துவர் என நம்புகிறோம்.
திருந்தாத வயலில் உழவு இல்லை. நம்நாடு திருந்தாத வயலாகவே இன்னமும் உள்ளது. எனவேதான் இங்கத் தன்னாட்சி முளைக்கவில்லை.
வரம்பு கட்டாவிடில் வயலுக்கு வயல் வம்பு வளரும். அஃதே போலத்தான், தமிழர் தம்நாட்டின் வரம்பு கட்டத் தவறி, அதாவது தமிழ்மொழி, கலை, மார்க்கம் ஆகியவைகள் ஆரியத்தால் சிதைக்கப்படாதிருக்கவேண்டித் தன்மானம் எனும வரம்பு கட்டத் தவறியதால், இன்று நமது நாடு பிறருக்கே சந்தையாகிவிட்டது.
உழுது நீர்பாய்ச்சிக் களை எடுக்கா முன்னம், பச்சைப் பயிர் பார்க்க முடியுமா? செந்நெல் தேட இயலுமா? நாம் இங்கே நம் நாட்டுக் களைகளைப் போக்கினோமா! இல்லையே! அதோ தீண்டாமை எனும கோரமான களை இருக்கிறது. பார்ப்பனீயம் எனம் பண்டைப் பயங்கரப் பாசி அடிமுதல் நுனிவரை படர்ந்தருக்கிறது. பித்தலாட்டக் கொள்கைகள் எவ்வளவு! பாமரர் ஏய்க்கப்படுவது எத்துணை. குருட்டுக் கொள்கையும், முரட்டுப் பிடியும், வரட்டு வீரமும் கிழட்டுப் போக்கும், பகட்டுப் பேச்சும், இங்கேயுள்ள களைகள்! இவைகள் போக்கப்படா முன்னம், பயிர் ஏது? இவகைளைக் களைவதன்றோ, பண்ணையில் அக்கரை கொண்டோரின் கடன்.
எனவே, இவ்வாண்டு கொங்கலன்று, தமிழர் உள்ளத்திலே புதுமை பொங்க வேண்டும். தமிழரின் வாழ்வுக்கு எதிரிடையான உள்ளவை யாவும் மங்கும்படி செய்தல் வேண்டும்.
ஒன்று மங்கிவிட்டது. மறுபிறப்பு எடுக்க எண்ணுகிறது. எனினும் மீண்டும் வரினும், மிக விரைவில் பங்கப்பட்டுப் போகும் என்பதில் சந்தேகமில்லை.
ஒழிந்து போன காங்கிரஸ் ஆட்சியைத்தான் நாம் குறிப்பிடுகிறோம்.
உழவரையே பெரிதும் ஏய்த்து ஓட்டுப்பெற்ற அந்த ஆட்சி உழவர் சார்பில் ஒரு சிறு நலனும் செய்யவில்லை.
வரி எல்லாம் போகும் என்ற கூறினவர்கள், வரிபல போட்டு வாட்டினர். நில வரிவஜா விஷயத்தில் ஏதேதோ கூறினர். ஏதும் செய்ய இயலவில்லை எனக் கூறிவிட்டுப் போயும் விட்டனர். பள்ளிகள் மூடினர், மருத்துவ சௌகரியத்தை மாய்த்தனர், பண்டங்களின் விலை ஏறும்படி விற்பனை வரிபோட்டு ஏழைகளை வாட்டினர். தொழிலாளர் துயரம் பெறுகிற்று. வகுப்புக் கலவரம் வளர்ந்தது. தீண்டாதார் துயரம் அதிகரித்தது. அப்பா! அவர்கள் ஆட்சி !! எத்தனைநாள் இன்னும்? இன்னும் எத்தனை நாள்? என்று கேட்டபடி இருந்தனர் தமிழர. இன்று இல்லை அவர்கள்! ஒழிந்தது அந்த ஆட்சி! தீர்ந்தது அவர்களின் தர்பார்! நாடு பூராவும், அவர்கள் போனதற்குப் புலம்பவில்லை. பூரித்தது, விடுதலை விழா கொண்டாடி, போனாயா, ஒழிந்தாயா என்று கூறிவிட்டது.
எனவே, தமிழருக்க ஆபத்தாக வளர்ந்த ஆட்சி மங்கி மடிந்தது.
பொங்கற் புதுநாளன்று, இச்சிந்தனையொன்றே தமிழரின் செந்தேனாக இருக்கம் என்பதில் ஐயமில்லை.
அம்மட்டோ? அந்நாள், இழந்த இடத்தை மீண்டும் பிடிக்க, எவ்வளவு இழிந்த செயலில் இறங்கவும் அவர்கள் இறங்கிவிட்டார்கள் என்பதை எண்ணி, அத்துடன், வந்த பதவியை வேண்டாம் எனக் கூறிய தமிழர் தலைவரின் தீரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், தமிழரின் நெஞ்சில் ஏன் இன்பம் பெருகாது எனக் கேட்கிறோம்.
அதோ அந்தக் கும்பல் இன்னமும் அலைந்து திரிகிறது அதிகாரத் துண்டுகளுக்கு. இதோ தமிழர் தலைவர் எமக்கேன் இது, எமக்கு வேண்டியது தமிழ்நாடு தமிழ்நாடு தமிழருக்கே என முழக்கம் செய்கின்றார்.
ஆங்கிலக் கவி ஷேக்ஸ்பியர் கூறியபடி அந்தப் படத்தையும் பாருங்கள், இந்தப் படத்தையும் பாருங்கள் என்று நாம் கூறுகிறோம்.
பொங்கற் புதுநாளன்ற தமிழரின் மனக்கண் முன்பு இக்காட்சி தோன்றட்டும்.
தமிழ் நாட்டில் ஒற்றுமை பொங்குகிறது. தமிழரின் எதிரிகளின் கோட்டையில் புரட்சிச் சங்கமே ஓங்குகிறது.
தமிழர் கட்சியில், மேலும் மேலும் பலர் வந்து அணிவகுப்பில் நான் முன்னே நீ முன்னே என்ற சேருகின்றனர். தமிழரின் எதிரிகளில், போசேபோ, நரிமகனே எட்டிநில் கரேயே நீ கவிழ்க்கப்பட்டாய் என்ற தண்டனைத் தாக்கதுகள் பொங்கி வழிகின்றன.
காங்கிரஸ் ஆட்சி ஒழிந்ததற்குத் திருநாள் காங்தியார் வாழும் இடத்திலே நடந்தது. தமிழரின் தலைவர் பெரியார் தமிழ் நாட்டைத் தாண்டிச் சென்று பம்பாய் மாகாணத்தில் தமிழர் இலட்சிய விளக்கம் செய்தார்.
காங்கிரசிடம் நம்பிக்கை இல்லை, நாம் கூட முடியாது, நம்பமாட்டோம் என முஸ்லிம் லீகும், ஆதி திராவிடர்களும் கூறிவிட்டனர். தமிழர் தலைவருடன் அளவளாவிப் பேசி, ஒத்துழைப்பதாக உறுதி வறி அகில இந்திய முஸ்லிம்லீக் தலைவர் ஜனாப் ஜின்னாவும், ஆதிதிராவிடப் பெருங்குடி மக்களின் அண்ணல் டாக்டர் அம்பேத்காரும் வாக்குக் கொடுத்தனர்.
புத்துலக வாழ்வுக்கு முட்டுக் கட்டையாக உள்ள காங்கிரஸ் என்னும் கூட்டத்தின் கொட்டத்தை அடக்க மூவரும் ஒன்று கூடியுள்ளனர்.
எனவே, தமிழருக்கு இனி இன்பம் பொங்க மார்க்மேற்பட்டுவிட்டது.
தமிழர்கள் யாவருக்கும் இனி புத்துலக வாழ்வு நிச்சயம், அதற்காகப் போதரிட வேண்டும்; பாடுபட வேண்டும். களை எடுக்கவேண்டும். இக்கருத்தையே பெரிதும் உள்ளடக்கிய பொங்கற் புதுநாளன்று தமிழர்கள் உள்ளத்தில் இவ்வெண்ணங்கள் பொங்க வேண்டுமென விரும்புகிறோம்.
உமது இல்லந்தோறும் உள்ளம் தோறும் பொங்குக புதுமை என அன்புடன் வாழ்த்தி, உமது இன்பமே, எமது குறிக்கோள் என்பதை வணக்கத்டன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழர் வாழ்க!
வழங்க தமிழ்நாடு !!
புதுமை பொங்குக !!!
தமிழ்நாடு தமிழருக்கே !!!!
தமிழன் கால்வாய்
அறிஞர் அண்ணா
தனுஷ்கோடியைக் கடல் மூழ்கடித்ததால் தமிழன் கால்வாய் எனப்படும் சேதுக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டியது அவசரமும் அவசியமும் ஆகிவிட்டது. சேதுக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றினால் எவ்வளவு நன்மை கிடைக்கும் என்பதை விளக்குகிறது இக்கட்டுரை.
தனுஷ்கோடியைக் கடல் விழுங்கியதால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடு வாசல் இழந்து தவிக்கிறார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க சேதுக் கால்வாய் திட்டத்தை அமுல் நடத்தவேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறது.
வாழ்விழநத மக்களுக்கு வாழ்வு கொடுக்க இத்திட்டம் உதவுவது ஒருபுறம் இருக்க இந்த திட்டத்தின் மூலம் எவ்வளவோ நன்மைகள் கிடைக்கும்.
திட்டத்தின் கதை
சேதுக் கால்வாய் திட்டம் இன்று நேற்று அல்ல, வெள்ளைக்காரர்கள் காலம் முதலே பரிசீலனையில் இருந்துவரும் திட்டம் ஆகும்.
ஆப்பிரிக்கா கண்டத்தில் இருந்தும் பம்பாய், கொச்சி, போன்ற துறைமுகங்களில் இருந்தும் சென்னை கல்கத்தா, விசாகப்பட்டினம், ரங்கூன் முதலிய துறைமுகங்களுக்கும் போகவேண்டிய கப்பல்கள் இலங்கையைச் சுற்றிக்கொண்டு (தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதுபோல்) வரவேண்டி உள்ளதை வெள்ளைக்காரர்கள் உணர்ந்தார்கள்.
கால்வாய்
எனவே மேற்கு நாடுகளில் இருந்து இந்தியாவில் கிழக்குக் கடற்கரை நகரங்களுக்கு இலங்கையைச் சுற்றாமல் சுலபமாகக் கப்பல்கள் போய்வர என்ன வழி என்று யோசித்தார்கள்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள கடல் ஆழம் இல்லாமல் இருப்பதால்தான் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிக்கொண்டு வரவேண்டியிருக்கிறதென்றும் எனவே ஆழப்படுத்தி கால்வாய் அமைத்தால் இந்த குறை நீங்கும் என்றும் கண்டார்கள்.
திட்டம்
துறைமுக எஞ்சினீயரான பிரிஸ்டோ என்பவர் ஒரு கோடியே 70 லட்சம் செலவில் ஒரு திட்டத்தை தயாரித்து அப்போதைய சென்னை அரசாங்கத்திடம் கொடுத்தார். ஆனால் அது ஏற்கப்படவில்லை.
பிறகு வேறு சிலர் திட்டங்கள் தயாரித்தார்கள். 1902-ம் ஆண்டில் தென்னிந்திய ரெயில்வே வருடத்துக்கு ஏழரை லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்குமென்று ரெயில்வே நிர்வாகம் திட்டம் தயாரித்தது.
ஆனால் அந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான மேல் நடவடிக்கைகள் எடுத்துககொள்ளப்படவில்லை.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மீண்டும் சேதுக் கால்வாய்த் திட்டம் அரசாங்கத்தின் தீவிர பரிசீலனைக்கு வந்தது.
நீண்ட ஆராய்ச்சிக்குப் பின் 21 கோடி ரூபாய் செலவில் திட்டம் தயாரிக்கப்பட்டது. இந்த திட்டம் டெல்லி சர்க்காரிடம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த திட்டப்படி 45 அடி நீளம், 150 அடி அகலம், 36 அடி ஆழமுள்ள கால்வய் வெட்டி அதில் கப்பல் போக்குவரத்து நடைபெறும்.
திட்டத்தின் நன்மைகள்
சேதுக் கால்வாய் திட்டத்தினால் பல நன்மைகள் ஏற்படும்.
கன்னியாகுமரியிலிருந்து ஒரு கப்பல் சென்னைக்கு வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், தற்போது அந்தக் கப்பல் சென்னைக்கு வருகிறதென்றால் அது இலங்கையைச் சுற்றிக்கொண்டு வரவேண்டும். கால்வாய் அமைக்கப்பட்டுவிட்டால் 368 மைல் மிச்சமாகும்.
இதேபோல் விசாகப்பட்டினத்துக்கு 304 மைல்களும், கல்கத்தாவுக்கு 265 மைல்களும் மிச்சமாகும்.
தூத்துக்குடி
சேதுக் கால்வாய் அமைக்கப்பட்டுவிட்டால் தூத்துக்குடிக்கும் சென்னைக்கும் இடையில் உள்ள தூரம் 316 மைல்களாக இருக்கும். தற்போது தூத்துக்குடியில் இருந்து ஒரு கப்பல் சென்னைக்கு வருவது என்றால் மொத்தம் 750 மைல் சுற்றவேண்டிஉள்ளது.
அதாவது பழைய தூரத்தில் 58 சதவிகிதம் குறைந்துவிடும்.
இதேபோல் கொச்சியில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய கப்பலின் தூரத்தில் 44 சதவிகிதமும், தூத்துக்குடியில் இருந்து கல்கத்தா வரவேண்டிய தூரத்தில் 26 சதவிகிதமும், பம்பாயில் இருந்து கல்கத்தா வவேண்டிய தூரத்தில் 16 சதவிகிதமும் மிச்சமாகும்.
நேரம் மிச்சம்
இது மட்டும் அல்ல இலங்கையை சுற்றுவதால் கப்பல்கள் கூடுதலாக ஒன்றரை நாய் பிரயாணம் செய்யவேண்டி உள்ளது.
இந்த ஒன்றரை நாளுக்கும் கப்பல் செலவு ரூபா ஏழாயிரமாகும்.
சேதுக் கால்வாய் அமைத்தால் இந்தப் பணம் மிச்சப்படும் விரைவாகவும் கப்பல் போய்வரும்.
துறைமுக வளர்ச்சி
மேலும் இந்தக் கால்வாய் திட்டத்தினால் தூத்துக்குடி துறைமும் வளர்ச்சியடையும். அங்கு ஏற்றுமதி இறக்குமதி அதிகமாகும்.
அத்துடன் நமது கப்பல்கள் வெளிநாட்டு நீர்பரப்பில் ச்ல்லாமல் இந்திய நீர்பரப்பில் சென்றுவர வழி ஏற்படும்.
மக்கள் அரசவைக்
டாக்டர் அறிஞர் CNAnnadurai, MA அவரது முதல் ஆங்கில ஆற்றிய உரை
“மக்கள் கவிஞர்” அகில இந்திய வானொலி (1948 ஆண்டு)
மக்கள் அரசவைக்!
மக்கள் தங்கள் அரசர்கள், மந்திரிகள் தங்கள் வீரர்கள் மற்றும் இரட்சகர்களாகஅவர்களை, தங்கள் மடாதிபதிகள் மற்றும் துறவிகள், அதிசயம் ஆயிற்று – – அழகான மற்றும் சொல் என்பது குறிப்பிடத்தக்க, அது கவிஞர் ஆனால் மக்கள் மட்டும் ஒரு சூடான அஞ்சலி வெறியர்களும் மற்றும் பாதிரியார்கள், ஆனால் எந்த கவிஞர்கள் இருந்தது – மக்கள் நாக்கு, மக்கள் பற்றி பாடினார் யார் மிகுதியாக கவிஞர்கள், வேத கூடுதலாக யார் அல்லது அவர்களின் கவிதை அரண்மனைகள் பளபளப்பான யார் கவிஞர்கள், ஆனால் கவிஞர்கள் இருந்தன கடந்த வயது, மிக மிக அரிதாக இருந்தது. , கவிஞர் குரல் கோவில் மணி அல்லது அரண்மனையில் டிரம் செயல்பாடு மறைத்தது ஆனால் அரிதாக என்று குரல் மக்கள் ஆழ்மனதின் எண்ணங்கள் பிரதிநிதித்துவம் மற்றும் சில நேரங்களில் கவிஞர்கள் மக்கள் பற்றி பேசிய போது, அதை உலகம், எப்படி பேராசை அவர்களுக்கு சுட்டிக்காட்ட இருந்தது எப்படி பாவ வெள்ளி மற்றும் எப்படி வசமாக போதனைகளை போன்ற தங்க மற்றும் உள்ளது – அரச கம்பி மற்றும் உயர்குடி சவுக்கை பிற்சேர்க்கையாக வந்த சொற்பொழிவுகளில். கவிஞர்கள் இங்கே வழக்கு தாக்கல் செய்யப்பட்டு பின்னர் தீர்ப்பு வழங்க உயர்வான வானங்களையும் கேட்ட ராயல் சுகங்கள், இன்னும் ஒரு போலீஸ்காரர், காரணமாக நிச்சயமாக இன்னும் ஒரு முக்கியமான உருப்படியை ஆனது. இந்த கவிஞர்கள் முற்றிலும் மாறுபட்ட நாக்கு பேசினார் இதுவரை மக்கள் இருந்தனர். அவர்கள் உயர்ந்தது இருந்து கூட்டத்தில் வெறுக்கப்படும், மற்றும் அரண்மனை அனுமதி பெற தங்கள் கவிதை மேதை பயன்படுத்தப்படும், மற்றும் அங்கு, அவர்கள் அனைத்து வகையான முடியாட்சிகளுக்கான பெரியதாகவும் வலையங்கள் நெசவு சென்றார் போது, அவரது தங்க தூய வழங்கப்படுகிறது. சங்க கால கவிஞர்கள், இந்த மன்னிக்கவும் ஆட்சிக்கு உன்னத விதிவிலக்குகள் உள்ளன, மற்றும் அவர்கள் குறைந்தபட்சம் எங்கள் நாட்கள் தெரிந்த கவிஞர்கள் உள்ளனர்.
கவிஞர்கள் ஒன்று வசனங்களில் நல்லொழுக்க விற்பனையாளர்கள் மாறியது அல்லது இன்பம் ஆனது – வியாபாரிகள் மற்றும் அவர்கள் அதை கடுமையாக மற்றும் இலாபம் மக்கள் கவிஞர்கள் ஆக காணப்படுகிறது. என்று நாம் தமிழ்நாட்டில் சங்க வயது பிறகு எந்த நிலுவையில் மக்கள் கவிஞர் கண்டுபிடிக்க காரணம்.
பழங்காலம் கவிஞர்கள்
நல்லொழுக்கம் என்பதே மற்றொரு உலகில் ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கை ஒரு முதலீட்டு கருதப்படுகிறது வந்தது. எனவே, இந்த தவறான மற்றும் தீய கோட்பாடு வருகைக்கு பின் வந்த கவிஞர்கள் அவர்கள் சுய நியமிக்கப்பட்ட ஏஜென்டுகள் எந்த பகிர்ந்தளிப்பதற்கு குறிப்பிட்ட வங்கி உயர்த்தி தொடங்கியது. வீழ்வது வங்கியாளர் அல்லது செயலில் காப்பீட்டு முகவர் போலவே, இந்த கவிஞர்கள் மகிழ்ச்சிகரமானதாக லாப மற்றும் பிரகாசமான வாய்ப்புக்கள் பற்றி, அவர்களின் வங்கி ஆரோக்கியம் பற்றி, ஏராளமான பாடல்கள் முன்னும் பின்னுமாக ஊற்ற தொடங்கியது. ஒரு கவிஞர் மகா விஷ்ணுவின் கருடன் அதிகாரங்களை பற்றி ஒரு இனிமையான பாடல் கொடுத்தார் என்றால், சிவா ஒரு கம்பீரமான காளை, அல்லது சக்தி வாய்ந்த முருகன் மயில் அல்லது அசிங்கமான எருமை பற்றி ஒரு புனிதமான ஈரேழ்வரிப்பா எங்களுக்கு வழங்க மற்றொரு உயர்ந்தது இறப்பு எமன் கடவுள். இந்த கவிதைகள், அதிக ஒழுங்கு இருந்தன பார்வையில் கலைஞர் புள்ளியில் இருந்து பார்த்து – அனைத்து காரணம் தவிர வேறு மிகுதியாக – ரிதம், வாசக, smylies, உருவகம், உவமை, அங்கு இருந்தது. அந்த திசையில் ஒரு அவசரத்தில் இருந்தது என்று ஒரு ஊதியம் வேலை இருந்தது, கடமை அல்லது எந்த கடமை – இந்த கவிஞர்கள் கோவில் மணியை நன்றாக வேலை செய்யவில்லை என்று நினைத்தேன் மற்றும் ஒலி துணையாக தங்கள் கவிதை வலிமை கொடுக்க, அது அவர்கள் கடமை என்று நினைத்தேன். கவிஞர்கள் மேன்மையை ஒரு அணுகுமுறை கருதப்படுகிறது – அவர்கள் பொதுவாக மனிதன் குழப்பத்தில் அனுபவித்து, அவர்கள் முரண்பாடுகள் சமரசம் மற்றும் அபத்தங்கள் அழகுபடுத்த முயற்சி – அவர்கள் உலக விஷயங்களை தங்கள் கண்டனத்துக்கு சத்தமாக இருந்தது; மனித வாழ்வின் சற்றேனும் மதிப்பற்ற, மனித மிங் அவர்கள் மேகங்கள் மேலே அறியப்படாத உலக வானத்திலிருந்து ஒரு கவிதை சித்திரத்தை முன்வைக்கிறது, பூமியின் அடியில் நரகத்தில் – தொலைநோக்கி அறிவியல் வயிற்றில் இருந்த எனவே சொர்க்கம் இருந்தது, மற்றும் கவிஞர்கள் பொழுபோக்கு இறையியல் உலகங்கள் பற்றி கற்பனை விளக்கங்கள் மக்கள்! அறியாமை வியப்பாகவும் இருந்தது மற்றும் அறிவார்ந்த கலை மற்றும் சிந்தனை போற்றப்படுகின்றார்.
மக்கள்’S கவிஞர் கதாபாத்திரத்தில்
இந்த பிரம்மாண்டமான பணியை சமமாக ஒரு மக்கள் கவிஞர் பாரதி பங்கை எடுத்து எளிதாக உள்ளது. அதை பற்றி, நீலம் ஒரு கடலில் வெள்ளி நிலவு நீச்சல் பற்றி சில இனிப்பு செய்யுள்கள், பூ வாசனை, ஆறுகள் ரிதம் பற்றி நட்சத்திரங்கள் இமை நன்றாக கவிதைகள் பற்றி சில கவிதைகள், பாடல்கள் வகுப்புகள் கவிஞராகவும் எளிதானது காதல், வீரம் பற்றி வசனங்கள் – இந்த கவிஞர்கள் தொகுப்பு மரியாதை ஒரு இடத்தில் பெற போதுமான உள்ளன. ஆனால் ஒரு மக்கள் கவிஞர் கடமையினை, ஒன்று, வெறுப்பு தடைகளை கடந்து ஆபத்துக்களை பல ஒரு முழுக்கு எடுத்து செல்ல வேண்டும் ஆதரவு மற்றும் புகழ் நினைக்க கூடாது. நண்பர்கள் ஒரு தேர்வு வட்டத்தில் தெரியும் சுப்ரமணிய பாரதி கவிதை மேதை பற்றி பேசினார் என்றாலும், ஒரு முழு மக்கள் ஒரு பின்னர் கட்டத்தில் வரை தங்கள் கவிஞர் கிட்டத்தட்ட தெரியாமல் இருந்தது, பின்னர் கூட, அது வழங்கப்பட்டது என்று ஒரு அரசியல் வண்ணம் கவிதைகள் இருந்தது மக்கள், மற்றும் மக்கள் கவிஞர் தனியாக கருத்தரிக்க வழங்க முடியும் கவிதைகள்,. நாம் மிகுதியாக கவிஞர்கள் இருந்தது. அவரது வீட்டில் மற்றும் தொழில் மறதி ஒரு கோயில் தூங்கி மேய்க்கும், தெய்வம் எளிமையாக பார்த்து, அவரது நள்ளிரவில் கண்காணிக்கும் அவள் உதடுகள் சிரிப்பை திரும்பி, அவளை ஆர்வம் யோசனை அவருக்கு ஒரு கவிஞர், ஒரு மென்மையான பேட் மற்றும் தெய்வீக கம்பியை தொடுவதற்கு செய்ய , அற்புதமான விளைவாக இந்த மக்கள் அறியப்படுகிறது. ஒன்று, ஏனெனில் தெய்வீக தொடர்பு, ஒரு கவிஞர் ஆகிறது, மற்றும் அது அவர் மக்கள், கூட ஒரு மக்கள் கவிஞர் சந்திக்க தயாராக இல்லை என்று, ஒரு குறிப்பிட்ட தெய்வத்தின் அல்லது மிகவும் வலுவாக தரையில் நடைபெற்ற இந்த கோட்பாட்டின் பக்தி பாடல்களை பாட அவரது கடமை முன் வந்தார். மக்கள் அங்கீகாரம் மற்றும் அவரது கவிதைகள் மிகவும் தீவிரமான இல்லை “என்று நான் அவர்களை ஒன்று, ஏனென்றால் நான், அவர்கள் மற்றும் அவர்களை பற்றி பாட, மக்கள் கவிஞன்”, தைரியமாக என்கிறார் ஒருவர் அவமதிப்பை சந்தேகம் ஒரு தோற்றத்தை நடிக்கும் , மேலும் கடுமையான எதிர்ப்பை இருக்கும். இந்த ஆபத்தான நிலத்தை, நாம் சுப்ரமணிய பாரதி வெற்றியை தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறோம்.
பாரதி வயது
பாரதி இரு காலங்களிலும் எல்லையில் பிறந்தார் – நிலப்பிரபுத்துவ உத்தரவுகளை அவரது தாய்நாட்டில் முழு படை இருந்தது, எட்டயபுரம் குடிசைகள் சூழப்பட்ட ஒரு அரண்மனை இருந்தது, வயது பழைய சாதியினர் இன்னமும் அதிகாரத்தில் இருந்தனர், அவர் தன்னை ஒரு பிராமணர் பக்கத்தில் பிறந்த ஆனால் பக்க நிலப்பிரபுத்துவம் மற்றும் சமூகத்தின் sanathanic பொருட்டு, நவீனத்துவம் துயரமும் பெருமை கண்களில் புதிய காட்டான இருந்தது, அங்கே நீ சகாப்தத்தில் தோற்றம் உள்ள சவால், பாரதி என்று காலத்தில் பிறந்தது மேலும் அவர் சண்டை வீரர் மாறும் என்று எடுக்கப்பட்ட படம் முடியும் பழைய ஒழுங்கு, பழைய பொருட்டு புதிய எதற்காக இடையே அவரது ஒரு வசதியான இடத்தில் இருந்தது.
பெருந்தன்மையும் பாரதியார் கூற்று
அவர் முரணிலைகளின் இந்த தேசத்தில் மேலும் திமிர் மற்றும் பணிவு, கொடுமை மற்றும் கருணை அணிவகுத்து ஒரு நிலம் பிறந்தார் ஒன்றாக எங்கே வளம் மற்றும் ஆற்றல், ஊமையாக மக்கள் சில திகைப்பூட்டும் கருத்துக்கள் மற்றும் மில்லியன் கணக்கான ஒரு நிலம் விரயம் போதுமான வலுவான அபத்தமான சிந்தனை ஆற்றல் உள்ளது, தைரியம் அதே போல் பயம், நம்பிக்கை நிலத்தை அத்துடன் நம்பிக்கை அங்கு ஒரு நிலம். பைரன் மற்றும் Bruke மட்டும் Bharatam மற்றும் Bagavatham சந்திக்க, தான் பின்னர் இங்கே இறங்கியது. துப்பாக்கி மக்களின் காதுகள் மற்றும் வயதில், நீண்ட கோவில் டிரம் பழக்கமான ஆனது வளர்ந்து பாரதி பிறந்தார் முரண்பாடுகள் மற்றும் perplexities போன்ற ஒரு தேசத்தில் அமைதியாக இருந்தது, மற்றும் போன்ற ஒரு நில வரலாற்றில் நகர்வுகள் ஆனால் மெதுவாக மற்றும் அது ஒரு வலுவான மிகுதி தேவை அதை அனைத்து நகர்த்த வேண்டும் என்றால், பெருந்தன்மையும் பாரதி கூற்று மக்கள் கவிஞர் அவர் தள்ளினேன் அந்த மலிவாக உள்ளது.
பாரதி அவர் மக்கள் கவிஞர் மட்டும் ஏனெனில் நிச்சயமாக சீர்திருத்தத்தின் காலை நட்சத்திரம் இருந்தது தேசியவாதம் வெறும் பார்ட் இருந்தது. அவர் வெளிநாட்டவர் கோபங்கொண்டு, அவரது நாட்டின் இலவச ஆக வேண்டும் ஆனால் அவரது முடிவு என்பது இல்லை என்று அவரது நோக்கமாக இருந்தது. இது இருந்தது ஆனால் தொடக்கத்தில் அவர், அனைத்து கட்டுக்களில் இருந்து தனது நாட்டில் ஆண்கள் விடுவிக்க வேண்டும் அவர்கள் உலகின் மதிப்பீட்டில் வரை உயரும் வேண்டும், முற்றிலும் ஒரு புதிய வகை ஆண்கள் மற்றும் பெண்கள் மூலம் மக்களை ஒரு புதிய நிலம் பார்க்க வேண்டும். அவர் மக்கள் அச்சம் சூழ்ந்து காணப்படுகிறது. பயம் மிகவும் முகங்கள் எழுதப்பட்டது. அவர்கள் எல்லாம் பயம் இருந்தது, அவர்கள் வெளிநாட்டவர் மற்றும் அவரது துப்பாக்கி அஞ்சுகின்றனர் மட்டும் ஆனால் சில கோஷமிட தங்களது சொந்த சகோதரர்களுக்கு கோஷங்கள் அவர்கள் பேய்கள் மற்றும் பேண்டோம் பயந்தார்கள்.
சுதந்திரத்திற்காக போராடும்
அத்தகைய மக்கள், சுதந்திரம் நிலையான நிர்வாகிகள் ஆக முடியாது, மற்றும் போன்ற மனிதர்கள் ஒரு நிலத்தை உயர் அதன் குவியல் உயர்த்தி, வெளிநாட்டு சக்தியின் வெளியேற்றப்படுகின்றது கூட, உலக நேராக பார்க்க முடியவில்லை. எனவே பாரதி தாழ்வு மனப்பான்மை ஆஃப் சிந்த எட்ட தங்கள் மனதில் இருந்து பயம் துரத்த, தனது நாட்டு விரும்பினார். தங்கள் மனதில் நம்புகிறேன் ஒரு அவர் சொட்டு சொட்டாக மற்றும் தைரியம், அவன் அவர்களுக்கு முன்பாக தங்கள் சொந்த மறைந்த அதிகாரங்களை வைக்கப்பட்டு, அந்த பிறவி அதிகாரத்தை வீணாகி வருகிறது, எப்படி மக்களின் தூக்கமும், தங்கள் மொத்த அறியாமை, மூட நம்பிக்கை, அவர்களின் தாழ்வு மனப்பான்மை மற்றும் அவர்களின் சாதி அவர்களுக்கு சுட்டிக்காட்டினார் பாரதி தெளிவாக பார்த்தேன், மற்றும் அவர் இந்த தீமைகளை வேரோடு உறுதியாக, மற்றும் மக்கள் கவிஞர் ஆனால் யாரும் இந்த பிரச்சினைகள் மிகவும் ஆழமாக ஆர்வம் இருந்திருக்க கூடும். ஆனால் பாரதி அது சாதாரண மனிதன் சகாப்த வயது என்று நன்கு தெரிந்தது ஜனநாயகம் மற்றும் அவர் சுதந்திரம் அவர் கடவுளர்களை மேலும் பக்தி பாடல்களை வழங்க வில்லை போராட மக்கள் விரும்பினார், அல்லது அவர் கவிதை முறையீடுகள் அனுப்பி வைத்தார் பிரபுக்கள் நிலம் அவர் சுதந்திரம் ஆதரவு, பண்டைய ஸ்கிரிப்டை சுட்டிக்காட்டி, ஒரு கடந்தது வயது கவிஞர்கள் போல, அவர் வரவில்லை, நாடகம் மைதானத்தில் கலப்பை கொண்டு மனிதன், தொட்டில் பெண், மற்றும் கூட குழந்தைகள் உரையாற்றினார் ஆனால் மக்களின் முக்கியத்துவம் உலக நிகழ்வுகள் தொலைதூர நிலங்கள், சுதந்திரம் இயக்கங்கள் முன் வைக்கப்படுகிறது. அவர் மக்கள், மக்களின் அற்புத உயிர்த்தெழுதல் மூலம் இத்தாலி சுதந்திரம் அதிகாலை அறிவித்தது; நன்றி Mazzini நாட்டுப்பற்று அவர் புரட்சிக்கு பிறகு ஒளிரும் நிறங்கள் பிரான்ஸ் படம் வரையப்பட்டிருந்தது, மற்றும் Czardom கட்டிப்போடுவது இலவச ரஷ்யா பற்றி ஒரு புதிய படம், வைக்கப்படும். இலவச பெல்ஜியம், இலவச பிரான்ஸ், ரெட் ரஷ்யா இந்த படங்கள் இருந்தன, அவர் பிஜி தீவுகளில் உள்ள இந்தியருக்கு ஒரு பேனா படத்தை அவர்கள் வழங்கினார், ஷேக்ஸ்பியர் போன்ற அவர் இந்த படத்தை மற்றும் பார், கேட்டார்! என்று மக்கள் கவிஞர் உள்ளது. தனது சொந்த மக்கள் மதியீனங்கள் மற்றும் குறைபாடுகளில் சுட்டிக்காட்டி பயப்படவில்லை யார், அவர்கள் மற்ற நாடுகளில் மக்கள் அதேசமயம் சிந்தனை மற்றும் நடவடிக்கையில் எப்படி மெதுவாக தனது சொந்த மக்கள், காட்டும் பயம் இல்லாத ஒரு nobler வேகமாக மற்றும் வேகமாக நகரும் வாழ்க்கை மத்தியில் நடவடிக்கை கோளம். அவர் பெற்ற வர்க்கம் பயம் இல்லை, மற்றும் மக்கள் முன் முழு உண்மைகளை வைக்க தடுமாறாமல் இல்லை.
மக்கள் கவிஞர் என்று கிடைத்தது அது எங்கு பாசாங்குத்தனம் வேஷம் தனது கடமை இருந்தது, மற்றும் அவர் குறிப்பிடத்தக்க தைரியம் மற்றும் உற்சாகத்துடன்.
ரேவதி கண்டனம்
பாரதி உருவப்படம் அதிகரிக்க ஆர்வமுள்ள ஒரு முயற்சியாக உள்ளது தேசிய கவிஞர், முற்றிலும் அவர்கள் அந்த ஓவியத்தை காதலிக்கிறேன் ஆனால் ஏனெனில், அவர்கள் அந்த ஓவியத்தை தான் மிக பெரும் பொதுமக்கள் பார்வையில் இருந்து மறைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், பாரதி மற்ற உருவப்படம் மக்கள் கவிஞர் என்று. பாரதி கவிதைகளில் வெறும் ஹார்னெட்ஸ் உள்ளன. மக்கள் கவிஞர், பண்டைய அமைப்புகள் மற்றும் எண்ணங்கள் அபத்தங்கள் தாங்க கிட்டத்தட்ட கோபமடைந்த தொனியில், அவர் மிகவும் வலுவான வார்த்தைகள், முட்டாள்கள், பாதுகாப்பு சார்பாயுள்ளவர்களில் யார் அந்த ask போட பயம் இல்லை! நீங்கள் அந்த முறை என்று பண்டைய வேண்டும் விஷயங்கள் நிலவிற்கு எட்டாத பழங்காலத்தை வாதிடுகின்றனர், மற்றும் நீங்கள் இந்த பண்டைய ஏனெனில், இந்த நிலவும் வேண்டும் என்று வாதிடுகின்றனர் தைரியம்? ‘
எதிர்கால வடிவம், நிகழ்காலத்தில் வாழ
பண்டைய காலங்களில், நீங்கள் அறியாமை மற்றும் மேலோட்டமான எண்ணம் இல்லை என்று நினைக்கிறீர்கள்! ஏன் அனைத்து பிறகு நீங்கள் ஆசையுடன் தழுவி எண்ணங்கள் இறந்த இறந்த வேண்டும். கடந்த ஒருபோதும் மீண்டும் திரும்ப காலமானார் ஐந்து, தொலைதூர கடந்த நீடித்த தெரிகிறது சாதி வேண்டாம், தற்போது வாழும் எதிர்கால வடிவமைக்கும் பாரதி மற்றும் அங்கு கூறுகிறார் நாம் சந்திக்க. பண்டைய குறியீடு சில அவர் தைரியமாக ஒரு புதிய பார்வை முற்றிலும், மக்கள் முன் பண்டைய குறியீடுகள் வேறுபட்டன மற்றும் வைக்கப்பட்டன அவர் வாழ்க்கை இல்லை தொடர்பில்லாத மக்களை தார்மீக குறியீடு கொடுத்தார். அவர் மாயா தத்துவம் சிந்தனை அவர் அந்த கோட்பாடு, கடுமையாக ஏளனம் Asramites சீற்றம் மக்களுடன் ஒரு பிடி வேண்டும் அனுமதிக்க மறுத்துவிட்டார், ஆனால் அவர் விளைவுகளை பயப்படவில்லை. அத்தகைய ஒரு சிந்தனை மூழ்கி மக்கள், பாரதி கூறினார் unprogressive செயலற்று போகும், அத்தகைய மக்கள் மதிப்புள்ள -less மாறும்.
அவரது மதம்
பட்டினி, வறுமை, அறியாமை, பொறுத்துக்கொள்ள மாட்டேன், மற்றும் அவர் பணக்காரர்களின் கொடுங்கோன்மைக்கு எதிராக தனது சக்தி வாய்ந்த குரல் எழுப்புகிறது, மற்றும் ஒரு தனிப்பட்ட பட்டினி செய்யப்படுகிறது கூட மோசமான விளைவு முழு உலகின் அச்சுறுத்துகிறது. புதிய சகாப்தம் அனுபவிக்கின்றனர் – அவர் மக்கள் ஒரு முழு வாழ்க்கை தங்கள் பேராசிரியர்களில் வியாபாரம் மேம்படுத்த உருவாக்க வழிவகுக்கும் தங்கள் நிலத்தை தொழில் விரும்புகிறார். அவரது மதம் பிக்கு கைவினை மற்றும் கோஷங்கள் எழுப்பி அவரது மதத்தை பரந்த அர்த்தத்தில் மனித மற்றும் சகோதரத்துவம் சேவை செய்ய முடியாது.
செய்பணி தடைபட்டு மடிவான்
மக்கள் கவிஞர் முன் பொய் என்று பணி, ஒரு வலிமைமிக்க ஒன்றாகும். இது, மக்கள் உண்மை உணர ஒரு புதிய பாதையை எடுத்து, மற்றும் முற்றிலும் மதிப்பீட்டு ஒரு புதிய செயல்முறை பெற அவரது பணியாகும். அதை அவர்கள் முன் அவரது ஜோதிடர் பிடியில் இருந்து மக்கள் விடுதலை செய்ய பணி, மற்றும் இடத்தில் வானவியலாளர், அவரது வேதியியலாளர் வர முடியும் என்று மக்கள் மனதில் இருந்து இரசவாதி விரட்டி பணி ஆகும். அவரது ஒதுக்கி தள்ள பணியாகும் பூசாரி ஆசிரியர் ஒரு இடத்தில் பெற முடியும் என்று. மக்கள் கவிஞர் மருத்துவ மனிதன் விஷயங்கள் பொருட்டு ஒரு இடத்தில் கண்டுபிடிக்க முடியும் என்று அற்புதத்தை மிக்கவர் செல்வாக்கு வெளியே ஓட்டுநர் பலத்த பணி உள்ளது. அறிவியல் வளம் முடியும் மூடநம்பிக்கை போட்டியில்தான் உள்ளது. சுருக்கமாக மக்கள் கவிஞர் பணி ஒரு புரட்சிகர மக்கள் மீட்பருக்காக கொடுங்கோலன் மற்றும் கொடுங்கோலன் மெஸைய்யாவை தவறாக apt உள்ளன, புரட்சிகர விட இன்னும் கடினம். அவர் தைரியம் யுத்தம்பண்ணி, போர் இன்னும் முடியவில்லை, அவர் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார் என்றாலும், அவர் விமானம் வெற்றிகரமாக முடிவுக்கு போதுமான சிந்தனை ஒரு களஞ்சியத்திலிருந்து, கொடுத்த, மற்றும் அந்த ஒரு சிறந்த மற்றும் நீடித்த அஞ்சலி என்றாலும் அதன் முழு, உயர்குடிப்பிறப்பாகவும் அர்த்தத்தில், இந்த மக்கள் கவிஞர் செலுத்த முடியும். அங்கு வேலை ஆண்கள் மற்றும் அது முடிந்து விடும்.