ஆஸ்ட்ரோ விழுதுகளில் எழுத்தாளர் அ.ரெங்கசாமி அவர்கள்…

1937466_857702547576158_4794936077238810830_n2.11.2014-இல் வெளிவரப்போகும் தனது சுயவரலாற்று நூல் குறித்து இன்று எழுத்தாளர் அ.ரெங்கசாமி அவர்கள் ஆஸ்ட்ரோ விழுதுகளில் பேசுகிறார்.

அ. ரெங்கசாமி (பி: 1930) மலேசியாவின் குறிப்பிடத்தக்க நாவலாசிரியர்களில் ஒருவராவார். ‘கோலலங்காட் ரெங்கசாமி’ எனும் புனைப்பெயரால் அறியப்பட்ட இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும்கூட.

1950 தொடக்கம் இவர் மலேசிய தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டு வருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், நாவல்கள், மேடை மற்றும் வானொலி நாடகங்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.

“காமாட்சி விளக்கு” என்ற சிறுகதைத் தொகுப்பையும் ”, “புதியதோர் உலகம்” (1983), “நினைவுச் சின்னம்” (2005), “இமயத் தியாகம்” (2006), “லங்காட் நதிக்கரை” (2006) போன்ற நாவல்களையும் எழுதியுள்ளார்.

2005-இல் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், அஸ்ட்ரோ தொலைக்காட்சி, மலேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்திய நாவல் போட்டியில் இவரது “லங்காட் நதிக்கரை” நாவல் முதன்மைப் பரிசையும் பி. பி. நாராயணன் விருதையும் வென்றது. (தகவல்கள் விக்கிபிடியாவின் துணைக் கொண்டு பெறப்பட்டது)

காலையில் 9.30 மணிக்கு ஆஸ்ட்ரோ வானவில்லிலும் விண்மீன் எச்டியிலும்  தொடங்கும் இந்நிகழ்வை வாய்ப்பிருப்பின் நிச்சயம் பாருங்கள். இரவு 8.30 மணிக்கு ஆஸ்ட்ரோ வானவில்லில் இந்நிகழ்வு மறுஒலிபரப்பு செய்யப்படும்.