விளக்கம் தாருங்கள், அசிஸ் பாரி வேண்டுகோள்

 

Enlighten us-Azizகடந்த வியாழக்கிழமை, சிலாங்கூர் அரண்மனையால் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் கண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மந்திரி புசார் நியமனத்தில் பின்பற்றப்பட்ட முந்தைய வழிமுறைகளை விளக்கும்படி சட்ட வல்லுனர் அப்துல் அசிஸ் பாரி அரண்மனையை வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட முடியாட்சி நாட்டில் தொடங்கிய 1959 ஆம் ஆண்டிலிருந்து பின்பற்றப்பட்ட வழிமுறைகளை அரண்மனை விளக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

பெரும்பான்மை மற்றும் பெயர்கள் தாக்கல் செய்யப்படுவது போன்றவற்றுக்கான அவசியமான தேவைகள் என்ன என்பது மீதான அதன் கருத்துகளையும் அரண்மனை தெளிவாக விளக்க வேண்டும்.

“அது நாம் புரிந்து கொண்டுள்ளதைப் போன்றதா, (அதாவது) கோமன்வெல்த் நாடுகள் அனைத்திலும் பின்பற்றப்பட்டு வரும் வழிமுறைகளா, அல்லது ஏதோ கொஞ்சம் வேறுபட்டதா?”, என்று அவர் கேட்டார்.

மந்திரி புசார் ஒரு மலாய்க்காரராகவும் முஸ்லிமாகவும் இருக்க வேண்டும் என்ற சிலாங்கூர் அரசமைப்புச் சட்டத்தின் தேவை குறித்தும் aziz-bariஅரண்மனை அதன் கருத்தைத் தெரிவிக்க வேண்டும், ஏனென்றால் அது 1969 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஒரு பிரச்சனையாகியிருந்தது.

 

சட்டம் மற்றும் கையாளும் முறை என்ன?

 

“ஒரு வழிமுறை, அன்றையதோ இன்றையதோ, சரியானதாக இல்லாமலும், இந்த விவகாரத்தில் வெஸ்ட்மின்ஸ்டர் (பிரிட்டீஷ்) ஜனநாயக வழிமுறையை உள்ளடக்கிய (நமது) அரசமைப்புச் சட்டத்துடன் ஒத்துப் போகாமலும் இருக்கலாம் என்பது சுட்டிக் காட்டப்பட வேண்டும்.

“நாம் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சட்டத்தை தெளிவானதாகவும் வெளிப்படையானதாகவும் ஆக்குவோம். அதனால் எதிர்காலத்தில் சிலாங்கூரில் ஏற்பட்ட தாமதம் போல் எழாமல் இருக்கும்”, என்று சட்ட நிபுணரான அசிஸ் பாரி கூறினார்.

Enlighten us-Aziz1நாடு சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து மந்திரி புசார் பதவிக்கு ஒரே ஒருவரை மட்டுமே நியமிப்பது வழக்கமாக இருந்தது என்று அன்வார் இப்ராகிம் கூறியிருந்ததை சிலாங்கூர் சுல்தானின் தனிப்பட்ட செயலாளர் முகம்மட் முனிர் பாணி  மறுத்திருந்தார்.

அதற்கு பதிலளித்த அன்வார், “எனக்குத் தெரிந்தவரையில், அதுவும் நான் அம்னோ-பிஎன் அரசாங்கத்தில் 1982 லிருந்து 1998 வரையில் இருந்த போது, என்ன நடந்தது என்பதை அப்படியே கூற விரும்பினேன்.

“நான் தவறு செய்திருந்தால், மாட்சிமை தங்கிய சிலாங்கூர் சுல்தானிடம் மன்னிப்பு கோருகிறேன்”, என்று அன்வார் கூறினார்.

இன்னும் கூடுதலாக, ஆட்சியாளர்களின் மாநாடும் தேசிய அரண்மனையும் எவ்வாறு பிரதமர்களின் நியமனங்கள் செய்யப்படுகின்றன என்பதையும்கூட விளக்க வேண்டும் என்று அசிஸ் பாரி கேட்டுக் கொண்டார்.

மந்திரி புசார் மற்றும் பிரதமர் நியமனங்கள் பற்றிய சட்டங்கள் அடிப்படையில் ஒரே மாதிரியானவையே என்றாரவர்.

“பிரதமர்கள் எவ்வாறு நியமிக்கப்பட்டர்கள் மற்றும் பதவியில் இருக்கையிலும் பொதுத் தேர்தலுக்குப் பின்னரும் எவ்வாறு மாற்றங்கள் கையாளப்பட்டன என்பதை தேசிய அரண்மனை நமக்கு கூற வேண்டும்”, என்றார் அசிஸ் பாரி.