-கிம் குவேக், செப்டெம்பர் 21, 2014
சிலாங்கூர் மந்திரி புசார் பதவி. அஸ்மின் அலி கட்சிக்கு விசுவாசமானவர் என்றால், மந்திரி புசார் பதவி வழங்கப்பட்டாலும் அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று அவர் அறிவிக்க வேண்டும்.
அதைத்தான் அவரது சகாவான நிக் நாஸ்மி அஹமட் செய்துள்ளார். சுல்தானின் விருப்பத்தை பூர்த்தி செய்ய வான் அஸிசாவுக்கு மாற்று வேட்பாளராக அவரது பெயரை முன்மொழிய பாஸ் தெரிவித்தாக கூறப்படும் ஆலோசனையை அவர் உடனடியாகவும் மரியாதையுடனும் மறுத்து விட்டார்.
விசுவாசம் என்ற பிரச்சனை ஒருபுறமிருக்க, இங்கு ஆபத்தில் இருப்பது ஜனநாயத்தின் மிக முக்கிய கோட்பாடு. மாநில அரசை வழிநடத்த ஆளுங்கூட்டணி தேர்வு செய்திருக்கும் அதன் தலைவரின் நியமனத்தை சுல்தான் தமது அதிகாரத்தைக் கொண்டு நிராகரிப்பது பொறுத்தமானதா?
ஆம் என்றால், ஆளும் கூட்டணி எடுத்துள்ள மிக முக்கியமானது என்று கருதப்படும் அரசியல் தீர்மானத்தை தடுத்தாளும் அதிகாரம் சுல்தானுக்கு உண்டு என்று அர்த்தமாகாதா? அப்படி என்றால், சுல்தான் செயலாட்சி அதிகாரம் கொண்டுள்ளார் என்பதோடு அரசியல் கட்சிகள் மீது ஆதிக்கம் செலுத்துகிறார் என்றாகாதா?
ஒரு மன்னரின் அவ்வாறான அரசியல் ஈடுபாடு நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அரசமைப்புச் சட்டத்திற்குட்பட்ட முடியாட்சி கோட்பாட்டிற்கு எதிரான முதன்மையான மீறல் என்று கருதப்படாதா?
சுருக்கமாக கூறினால், ஆள்வதற்கான இறுதி அதிகாரம் யாரிடம் இருக்கிறது: மக்களிடமா அல்லது மன்னரிடமா?
சட்டத்தை மதிக்கத் தெரியாதவர்ககெல்லாம் ஆட்சித் தலைவர்களாக வந்ததால் சட்டம் ஓர் இருட்டரையாகி விட்டது.
இன்றைய சூழ் நிலையில் வான் அசிசா, விருப்பு வெறுப்பு இல்லாமல்MB பதவி பிரமாணம் எடுப்பதே சாலச்சிறந்தது ,
மற்ற மக்கள் ஆட்சி நாடுகளைப்போல் ஆட்சியாளர்களுக்கு எந்த அதிகாரமும் பண மூட்டையும் இல்லாமல் ஆக்க வேண்டும். ஆனாலும் புதிய ஆட்சியாளர்களாக அரசியல்வாதிகள் ஆகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். இந்தியாவில் இந்த மாதிரியான அரசியல் வாதிகள் பண்ணும் அநியாயம் கட்டிலடங்கா
எல்லாமே நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது.இந்த காலிட்தான் பதவிமோகம் கொண்டு அரண்மனையை அரசியலோடு தொடர்பு படுத்தி விட்டார்.இப்பொழுது இந்த எம்.பி பிரச்னை இடியப்ப சிக்கலில் மாட்டிக் கொண்டுவிட்டது.அன்வாரும் ‘ஒன்னும்மே புரியல்லே உலகத்திலே.என்னமோ நடக்குது.மர்மமாய் இருக்குது.’ என்று பாடிக் கொண்டிருக்கிறார்.காலிட்டொ “யாரடா மனிதன் அங்கே.கூட்டி வா அவனை இங்கே” என்று வேதாந்தம் பாடிக் கொண்டிருக்கிறார்.
மன்னருக்குதான் அதிகாரம் இருக்கிறது என்றால் பின்னர் இதற்க்கு தேர்தல்..? மன்னரே அவருக்கு வேண்டிய ஒருவரை நியமனம் செய்து விட வேண்டியது தானே..? அதுபோலவே மத்திய ஆட்சி மன்றத்திலும் பேரரசரே பிரதமரை நியமித்து போய் விடலாம்.எதற்க்காக மக்களாட்சி என்ற இந்த பித்தலாட்டம்..?
மன்னருக்கு அதிகாரம் இருக்கிறது என்றால் எதற்க்காக தேர்தல்…?
கடைசியில் நேப்பாள மன்னர் ஞானேந்திராவின் நிலைதான் நம்ப ….. ஆளுக்கும் ஏற்படும்.
மன்னர்தான் முடிவேடுப்பென்னேன்றல் மக்கள் வாக்களிப்பு என்ன கண் துடைப்பா
காலித் ஒரு வேடதாரி தனக்கு கிடைக்காதது தன்னை ஆதரித்த பாக்காதனுக்கூ கிடைக்கக்கூடாது .என எண்ணி பாரிசானுக்கு வாய்பளிக்க முயன்றார்.இன்று தன் எதிரி அஸ்மின் பெயர் தெரிவிக்கப்பட்டதும் மரத்தில் ஆபையை பிடுங்கிய குரங்குபோல் இடுக்கில் மாட்டிக்கொண்டு முழிக்கிறார் துரோகி .
கடைசியில் பாஸ் காரன் கையில் MB பதவி கொடுத்து, வாக்கு போட்ட மக்கள் கையில் குச்சி மிட்டாய் கொடுப்பார்கள் போலும் !
அரசியல் ஒரு சாக்கடை என்பது நிரூபனமா கிவிடுமோ? பாரிசான் பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டா போய் விடும் .
மகாதீர் பல வருடங்களுக்கு முன் அரச ஆட்சிக்கு எதிராக “செமாரக் ” என்ற பிரசாரத்தை ஆரம்பித்து மக்களை கவர்ந்தார்..அன்வாரும் தைரியமாக ஆரம்பிப்பாரோ ?
ஒரு மனிதன் என்பவர், நீதி-தர்மத்தைச் சார்ந்த சிந்தனைகளையும் செயலாக்கங்களையும் கொண்டிருக்கவேண்டும். இனம், மொழி, சமயம், கலாசாரம் மற்றும் கட்சி போன்ற சுழல்களுக்குள் சிக்கி சின்னாபின்னமாகிவிடக்கூடாது. தற்போதைய உலக ஒழுங்கு எத்தகையது? பெரும் நிறுவனங்களின் தரகர்களாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் பல நாடுகளின் தலைவர்கள். இவர்களுக்கு (ஊழலும்)பணமும் பதவியும் மட்டுமே குறிக்கோள்களாகும். நீதி-தர்மம் சார்ந்திருக்கும் இறைசக்திகளுக்கு எதிரான சக்திகள், பல கோமாளித்தனங்களை அரங்கேற்றின. அவை தண்டிக்கப்பட்டதே வரலாறானது. நீதி-தர்மத்தை நிலைநாட்டும் போராட்டத்தில் நடுநிலைமை என்பது இல்லை.
தம்பி அஸ்மின் ! இப்…கேட்க போறாயா,… கேட்பாயா ?
இந்த நாட்டுல எதற்கு தேர்தல் ….முட்ட பசங்க …..மக்கள்; தேர்ந்து எடுத்துடாங்க ….பக்கதான் ஆட்சி செய்யவேண்டும் என்று,,,,,,இடைல சுல்தான் ,,,,,யார் குறிக்கிட அதல ஒரு குரங்கு பூந்து ஆடுது டௌலாட் துஹன்க்குநு
அன்வார் ஆரம்பிக்க அதிகாரம் அவர் கையில் இல்லை. அதிகாரம் இல்லாமல் ஆடினால் நம்ப நாட்டில் என்ன ஆகும்? தெரியும்தானே?! இங்கு நியாயம் முடிவினைத் தீர்மானிப்பது இல்லை; அதிகாரம் அதனை அதர்மமான முறையில் செய்கிறது. இப்போது அன்வ்வார் கையில் அதிகாரமிருந்தால் மகாதீர் கூட இருக்கும் இடம் தெரியாது. ஊமை ஆகிவிடுவார். எல்லாமே அதிகாரம் யார் கையில் உள்ளது என்பதைப் பொறுத்தது.
எங்க அப்பனும் ஆத்தாளும் ஆளுவதற்கான இறுதி அதிகாரம் படைத்தவர்கள்