நூருல் இசா அன்வார் தனது அரசியல் வாழ்க்கையை 1998-ல் தொடங்கினார். மலேசிய அரசியல் அமைப்பைச் சீரமைக்க ‘Reformasi’ எனும் இயக்கத்தின் வழி இவரது போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றார். ஆதலால், மக்கள் இவரை ‘Princess Of Reformation’ என அழைக்கத் தொடங்கினர். அரசியல் மற்றும் பொருளாதாரம் போன்ற துறைகளில் உள்ள அதிகார துஷ்பிரயோகத்தையும் அதிலுள்ள ஊழல் செயல்பாடுகளையும் முற்றாக எதிர்க்கும் இவர் ஐக்கிய நாட்டு மனித உரிமை சபை நடத்திய மாநாட்டிலும் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. SUARAM (Suara Rakyat Malaysia) மற்றும் ALTSEAN-Burma (Alternative ASEAN Network on Burma) போன்ற அரசு சார்பற்ற இயக்கங்களோடு கைக்கோர்த்து உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ஜனநாயகம் தொடர்பான பிரச்சினைகளை முன்னிலை படுத்தியுள்ளார். முன்னாள் மலேசியத் துணைப் பிரதமர் அன்வார் இப்ராஹிமின் மூத்த மகளான இவர் மின்சாரம் & மின்னியல் மற்றும் ஆசியப் பொது உறவுத் துறைகளில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். தற்பொழுது, மக்கள் நீதி கட்சி (People’s Justice Party – PKR) உதவித் தலைவராகவும் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார்.
கேள்வி: ‘Reformasi’ எனும் இயக்கத்தின் வழி மலேசிய அரசியலில் பல நிலைகளில் சீர்த்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்ற அடிப்படையில் உங்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறீர்கள். ஆயிரக்கணக்கான மக்கள், முக்கியமாக இளைஞர்கள் நீங்கள் நடத்திய கூட்டங்களில் கலந்து கொண்டு பேரளவில் ஆதரவு வழங்கினர். ஆனால், தற்பொழுது இதன் வீச்சு குறைந்து வருவதோடு அல்லாமல் எதிர்க்கட்சிக் கூட்டணியின் மேல் மக்களின் நம்பிக்கையும் குறைந்து வருகின்ற சூழலைப் பற்றி விளக்கவும்.
நூருல் இசா: நான் இந்தக் கூற்றை முழுமையாக ஒப்புக்கொள்கின்றேன். 13வது பொதுத் தேர்தலுக்கு முன்பு மலேசிய அரசியலில் பல நிலைகளில் சீர்த்திருத்தம் செய்யப்பட வேண்டிய தேவையின் குரலை நாங்கள் அழுத்தமாக ‘Reformasi’ எனும் இயக்கத்தின் வழி முன் வைத்தோம். மக்களின் எண்ணமும் அதுவாக இருந்ததால், எங்களை முழுமையாக நம்பியிருந்தனர். மக்களின் உரிமைகளைப் பற்றி மக்களிடம் பேசினோம். அப்பொழுதுதான் நடப்பு அரசியல் மீது, மக்களின் தார்மீகக் கோபங்கள் எங்களுக்குத் தெளிவாகத் தெரிந்தன. அதற்கு முன்பே ‘பெர்சே’ இயக்கம் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வை நாடு முழுவதும் சென்று மக்கள் மனதில் ஏற்படுத்தியிருந்தது. இந்த விழிப்புணர்வின் காரணமாக, பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிக்கு அதிகமான வாக்குகள் கிடைத்தன. இது ஒரு வரலாற்றுப் பதிவாகும். அதாவது ஆளுங்கட்சியைவிட, 52 சதவிகித மக்கள் தேர்வு ஓட்டுகள் எதிர்க்கட்சிக்குக் கிடைத்திருந்தபோதிலும் பாரிசான் நாடாளுமன்ற நாற்காலிகளின் கணக்கெடுப்பின்படி முன்நிலையில் நின்று ஆட்சியை கைப்பற்றினர். இருப்பினும், இந்தச் சூழல் மக்களுக்கு அதிர்ச்சியையும் அதிருப்தியையும் மட்டுமே தந்தது.
தேர்தல் முடிவுகளைத் தேர்தல் ஆணையம் அறிவித்தவுடன், இச்சூழலை இரண்டு விதமாக கையாண்டிருந்திருக்கலாம். முதலாவதாக, தேர்தல் முடிவுகளை முற்றிலுமாய் புறக்கணித்து டத்தோஸ்ரீ நஜீப் அவர்களைப் பிரதமராக ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது. அதாவது அண்மையில் தாய்லாந்து நாட்டின் மக்கள் அவர்களின் பிரதமரை நிராகரித்தது போல. இரண்டாவது விதம், கட்டாயத்தின் அடிப்படையில் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொண்டு, பிரதமர் நஜீப் அவர்கள் reconciliation of politic முறையின் கீழ் அரசியலைத் தொடர்வது. ஆக, இவ்விரண்டு தேர்வுகளையும் கட்சித் தலைவர்களின் முன் பரிந்துரைக்கும் பொழுது அவர்களின் தேர்வாக இரண்டாவது விதம் அமைந்தது, அதாவது தேர்தல் முடிவுகளை அப்படியே ஏற்றுக்கொள்வது. இதில் மனநிறைவை அளிக்காத விஷயம் என்னவென்றால் 30 நாடாளுமன்ற நாற்காலிகளை பாரிசான் வெல்ல அவர்கள் கையாண்ட உக்திகள். அதில் ஒன்று, இவர்கள் பெரும்பான்மை நாடாளுமன்ற நாற்காலிகளை வெல்ல, தபால் வழி வந்த ஓட்டுகள், காவல் படை மற்றும் இராணுவப் படை வீரர்களின் ஓட்டுக்களைத் தங்களுக்குச் சாதகமாக்கி, ஆட்சி அமைத்ததுதான்.
அதோடு நின்றுவிடாமல், தேர்தலுக்குப் பிறகு பாரிசான் கட்சி மக்களின் எண்ணத்தைத் திசை திருப்ப, எதிர்க்கட்சிக் கூட்டணிக் கட்சிகளிடையே பிளவுகளை ஏற்படுத்த முயன்றது. மத, இன வாதப் பிரச்சினைகளை மக்கள் முன் கொண்டு வந்தது. அம்னோ இதை ஊதிப் பெரியதாக்கியது. மக்கள் மனதில் எதிர்க்கட்சியின் மீது வெறுப்புணர்ச்சியைத் தூண்டியது. அம்னோ இந்த விஷயத்தை மேலும் வெற்றிகரமாக முன்னெடுக்க ‘இஸ்மா’ மற்றும் ‘பெர்காசா’ இயக்கங்களின் உதவியையும் நாடியது.
கூடுதலாக ‘ஹுடுட்’ சட்டம் பற்றிய பிரச்சினை வேறு மேலும் எதிர்க்கட்சியின் அரசியல் சூழலைச் சிக்கலாக்கியது. ஆக, வெளிப்படையாகவே கூறுகிறேன், இதுபோன்ற சிக்கல்கள் எங்களுக்குப் பெரிய சவால்களாக அமைந்தன. இருந்தபோதும், நடப்பு பிரச்சனைகளான பொருள்களின் விலையேற்றம், ஜி.எஸ்.தி (GST) போன்ற விடயங்களில் எங்கள் போராட்டம் தொடர்வது மக்களுக்கு எங்கள் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தும்.
கேள்வி: மலேசியாவில் ஹுடுட் சட்டத்தை அமலாக்கம் செய்ய சாத்தியமுண்டா?
நூருல் இசா : ஒரு காலமும் இது சாத்தியமாகாது. பாரிசான், மக்களின் அரசியல் பார்வையைத் திசை திருப்பவே பாஸ் கட்சியின் இந்த ஹூடுட் சட்டம் தொடர்பான கூற்றைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டனர். அவ்வளவுதான். புருணையைப் பாருங்கள். ஹுடுட் சட்டம் அங்கு அமலாக்கம் செய்தபின், உலகம் முழுவதுமுள்ள பெரிய வர்த்தக நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் தங்களின் வியாபாரங்களிலிருந்தும் முதலீடு செய்வதிலிருந்தும் பின் வாங்கிக்கொண்டனர். மக்களில் முக்கியமாக சீனர்கள் மற்றும் இந்தியர்களின் எண்ணத்தில் பிளவை மட்டுமே ஏற்படுத்த ஹூடுட் சட்ட விவகாரத்தை அவர்கள் சாதகமாக்கிக்கொண்டனர். இவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு நாம் அடிப்பணிந்தால் நாம்தான் முட்டாள்கள்.
கேள்வி: ஒரு வேளை எதிர்க்கட்சிக் கூட்டணி 13வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால், தற்போது அமலில் இருக்கும் அரசியல் சிக்கல்களுக்குத் தீர்வு கிடைத்திருந்திருக்குமா?
நூருல் இசா: முதலில் நாங்கள்தான் நாட்டில் நடக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என கூறிக்கொள்ள விரும்பவில்லை. கண்டிப்பாக தற்பொழுது நிலவி வரும் அரசியல் சிக்கல்களை உடனடியாக முற்றிலும் தீர்த்து விட முடியாது. இதற்கு காலம் தேவை. பிரச்சினைகள் முளைத்துக்கொண்டேதான் இருக்கும். என்னைப் பொறுத்தவரை முதிர்ச்சியான, அனுபவமுள்ள, தலைமைத்துவப் பயிற்சிப் பெற்ற அரசியல்வாதிகள் அல்லது தலைவர்கள் நமக்கு தேவை. நேர்மையான தலைமைத்துவத்தின் கீழ் நாட்டு மக்கள் வாழ வேண்டும். இது பல்லின மக்கள் சார்ந்த ஒரு நாடு. உணர்ச்சிகளைத் தூண்டும் சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கும்.
ஓர் இனம் மட்டும்தான் இந்நாட்டை ஆட்சிசெய்ய வேண்டும் என்ற கோட்பாடு இங்கு தேவை இல்லை. இனப் பாகுபாடும் தேவையில்லை. இந்தியர்களை மலாய்க்காரர்கள் பிரதிநிதிக்க வேண்டும்; அதேபோல் சீனர்கள் இந்தியர்களை பிரதிநிதிக்க வேண்டும். எல்லோரும் ‘நம் மக்கள்’ என்ற அடிப்படைக் குணம் இங்கு இருப்பின் இனப் பாகுபாட்டு அவசியமே இல்லாமல் போய்விடும். மக்கள் சேவை மட்டுமே தலைவர்களின் தத்துவமாக இருப்பின் நம் நாட்டில் இன அரசியல் ஒழிந்துவிடும் எனும் நம்பிக்கை எனக்குள்ளது. இதுதான் புதிய மலேசிய அரசியல். எங்கள் போராட்டம் இந்த மாற்றங்களை நோக்கியே நகர்கிறது. நாம் முதிர்ச்சியடைந்தவர்கள். எதிர்க்கட்சிகள் இதையெல்லாம் கடைப்பிடித்து வருவதால்தான் பல பிரச்சினைகளை இலகுவாகக் களைய முடிகின்றது. பாரிசான் நீண்ட காலம் ஆட்சி புரிந்த அனுபவமுள்ள கட்சி. இனப்பாகுபாடு பார்ப்பதால்தான் அவர்களால் மக்கள் பிரச்சினைகளைக் களைய இயலவில்லை. இதனால்தான் மக்கள் அதிருப்தி அடைகிறார்கள். நல்ல தலைமைத்துவம், சிறந்த கொள்கைகள் எங்களிடம் இருந்தாலும்கூட, மக்கள் பாரிசானைத்தான் தொடர்ந்து தேர்ந்தெடுத்து வருகின்றார்கள். இது மக்கள் தேர்வாக இருப்பதால் அவர்களால் மட்டுமே இதற்குத் தீர்வுக் காண முடியும்.
கேள்வி: 13வது பொதுத் தேர்தலிலும் சிலாங்கூரை எதிர்க்கட்சிக் கூட்டணி வென்றது. இந்த வெற்றி 14வது பொது தேர்தலிலும் நிலைக்குமா?
நூருல் இசா: இது சுலபமான விஷயம் இல்லை. நான் முன்பே சொன்னதுபோல எதிர்க்கட்சிகள் மேலும் வலுவாகவும் தீவிரமாகவும் செயல்பட வேண்டும். இந்த முறை நாங்கள் வெற்றி பெற்றிருந்தாலும்கூட அல்லது சிறந்த சேவையை வழங்கிருந்திருந்தாலும் கூட மக்கள் இன்னும் சிறந்த ஆளுநர், சிறந்த விவேகமான அரசாங்கத்தை எதிர்பார்க்கின்றனர். மேலும், உலக அரசியல்களில் நிகழும் போட்டிக் களம் இங்குமுள்ளது. இது இயற்கையான விஷயம். நாங்கள் வெல்லவேண்டியது மக்கள் மனதைதான். மக்களின் ஆதரவினால் மட்டுமே எங்களால் தொடர்ந்து செயல்பட முடியும். கடந்த பொதுத் தேர்தலின்போது, மக்கள் எங்களுக்காக உண்மையாக உழைத்தனர். எங்கள் கட்டளைகளை மதித்தனர்; எங்கள் வேண்டுகோள்களுக்கு இணைங்கினர். அடுத்தத் தேர்தலின்போது இதே போன்று எங்களோடு இணைவார்கள் என்ற நம்பிக்கையுண்டு.
நம் நாட்டுப் பொருளாதாரம் அழிவை நோக்கிப்போய் கொண்டிருக்கின்றது. அதோடு நமது நாட்டின் கல்வி தரத்தையும் சற்று கவனியுங்கள். அண்மையில் வெளிவந்த பிசா (Programme For International Student Assessment – PISA) 2012ஆம் ஆண்டின் அறிக்கையின்படி ஏழ்மையான வியட்னாம் நாட்டைவிட நமது கல்வி தரம் கீழ்நிலையில் உள்ளது. இது வெட்கப்பட வேண்டிய விஷயம். அதுமட்டுமல்லாமல், நமது நாடு எல்லா வளங்களும் நிறைந்த நாடு. அதிகரித்துக்கொண்டே வரும் நாட்டின் கடனை அடைக்க, ஜி.எஸ்.தி (Malaysia Goods And Services Tax – GST) என்ற பெயரில் மக்களின் பணத்தைச் சுரண்ட திட்டமிடுகிறார்கள். ஆகவே, இந்த விஷயங்களை எல்லாம் கருத்தில்கொண்டு எதிர்க்கட்சிக் கூட்டணி தெளிவாகச் செயல்படவேண்டிள்ளது. 14வது பொதுத் தேர்தல் முடிவுகளைக் குறித்து எனக்கும் கவலையுண்டு. நிறைய இளைஞர்களின் ஆதரவும் அவர்களின் ஓட்டுகளும் எங்களுக்குக் கிடைத்தாலும், எதிர்க்கட்சிக் கூட்டணி சரியான பாதையை வகுக்கவில்லையென்றால், நாங்கள் மக்களின் நம்பிக்கையை இழக்க நேரிடலாம். இருப்பினும், இன்னும் எங்களைச் சீரமைத்துக் கொள்ள கால அவகாசம் உள்ளது. நிச்சயம் சிலாங்கூர் மக்களுக்குச் சிறந்ததை வழங்க முற்படுவோம்.
கேள்வி: எதிர்க்கட்சி கூட்டணியில் மலாய்காரர்களைப் பிரதிநிக்க பாஸ் (PAS) உள்ளது. சீனர்களுக்கு டிஏபி (DAP) கட்சி உள்ளது. இந்தியர்களுக்கு யார்?
நூருல் இசா: கெஅடிலான் கட்சியில் பார்த்தீர்களானால் 50 சதவிகித உறுப்பினர்கள் இந்தியர்கள்தான். கெஅடிலான் கட்சி, இந்தியர்களுக்காக அதிகமான நாற்காலிகளை வகுத்துள்ளது. நாங்கள் இன அடிப்படையைக் குறிக்கும் விஷயங்களை முற்றிலும் வேரருக்கவே பார்க்கின்றோம். எல்லா இனத் தலைவர்களும் எல்லா இன மக்களுக்கும் சமமான சேவை செய்ய வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மக்களின் துன்பத்தில் இனபாகுப்பாடின்றிப் பங்கெடுக்க வேண்டும்.
சரி. ம.இ.காவை இந்தியர்களின் பிரதிநிதிக் கட்சியாக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அவர்கள் இந்திய மக்களின் முக்கியமான அடிப்படை பிரச்சினைகளைச் சீர்த்தூக்கிப் பார்ப்பதில்லையே. பார்க்கப்போனால் எதிர்க்கட்சியின் திட்டங்களைத்தான் அவர்கள் நிறைவேற்றிக்கொண்டிருகின்றனர். உதாரணத்திற்கு, நம் நாட்டில் பல இந்தியர்களுக்கு 90 வயதைக் கடந்தும் குடியுரிமை அட்டை அதாவது நீல அடையாள அட்டை இல்லை. இன்னமும் சிவப்பு அடையாள அட்டைதான் வைத்திருக்கின்றார்கள். இது ஒரு மிக முக்கியமான பிரச்சனை. இதை எப்பொழுதோ இவர்கள் களைந்திருக்க வேண்டும். ஏன் இப்பொழுதுதான் இவர்களுக்குப் பொறுப்பு வந்ததா?
முதலில் அரசாங்கம் மக்கள் மீது அன்பை வைக்க வேண்டும். மனிதத்தன்மை முதலில் மலேசியாவில் மலர வேண்டும். அதன்பிறகு இனம், மொழி பற்றி பேசலாம். அது எங்கும் போய்விடாது. ஓர் இனம் மற்ற இனத்தின் மீது வெறுப்புணர்ச்சியைக் காட்டுவதை நிறுத்த வேண்டும். பிகேஆர் கட்சியைப் பொருத்தவரை யார் வேண்டுமானாலும் கட்சித் தேர்தலில் போட்டியிடலாம்.
கேள்வி: ஏன் 13வது பொது தேர்தலின் போது எதிர்க்கட்சியினர் ஹிண்ராஃபை நிராகரித்தனர்?
நூருல் இசா: நாங்கள் அவர்களை நிராகரிக்கவில்லை. ஹிண்ராஃப் இயக்கத்தில் பல குழப்பங்கள் உள்ளன என நான் நினைக்கின்றேன். தொடக்கத்தில் நாங்கள் உதயகுமாரோடு கலந்துபேசினோம். பிறகு இன்னொரு குழு அதாவது வேதமூர்த்தி எங்களிடம் வந்து நாங்கள்தான் உண்மையான ஹிண்ராஃப் இயக்கத்தினர் என்றார். அவர்கள் முன்வைத்த சில கோரிக்கைகளை மட்டுமே நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதோடு அவர்கள் முன் வைத்த சில கோரிக்கைகள் மிக சுயநலமானவையாக எங்கள் மனதிற்கு பட்டது. அக்கோரிக்கைகளைப் பற்றி மீண்டும் அவர்களோடு கலந்துரையாட நேரம் போதவில்லை. அதுமட்டுமின்றி அச்சமயத்தில் அவர்கள் அம்னோவோடும் கலந்து பேசிக்கொண்டிருந்தனர். கூடுதல் அனுகூலம் கிடைக்கும் இடத்தில் கூட்டு வைத்துக் கொள்ள அவர்கள் தயாராக இருந்தனர். மனம் திறந்த சேவைதான் இங்கு தேவை. சுய லாப நோக்கு அல்ல. வருத்தம்தான் மிஞ்சுகிறது.
கேள்வி: நடப்பு அரசாங்கத்தின் மையப் பிரச்சனைகளாக இனப் பிரச்சனை அமைகிறது. பொருளாதாரம், கல்வி, அரசியல் எல்லா இடங்களிலும் இனப் பிரச்சனை தலை தூக்குகிறது? நீங்கள் எப்படி இதைக் களைவீர்கள்?
நூருல் இசா: எங்களுடைய வழிமுறை ஒன்றுதான். சம உரிமை. எங்களால் எல்லா இனத்தினர் பிரச்சினைகளையும் தீர்த்துவிட முடியாது. ஆனால், பிரச்சினையின் சதவிகிதத்தைக் குறைக்க முடியும்.
மக்களும் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் மத்தியில் பல கருத்துகள் உண்டு. உதாரணமாக, மலாய்க்காரத் தலைவர்கள் மலாய்க்காரர்களுக்கு மட்டுமே உதவி செய்கிறார்கள். அதேபோல் இந்தியத் தலைவர்களும் சீனத் தலைவர்களும். இது மிகவும் தவறான பார்வை.
காரணம், நாங்கள் பொறுப்பேற்றுள்ள தொகுதியை முதலில் பாருங்கள். என்னையே எடுத்துக்கொள்ளுங்கள். நான் பந்தாய் டாலம் தொகுதி தலைவர். அவ்விடத்தில் வசிக்கும் மக்கள் எண்ணிக்கையில் மலாய்காரர்கள் இந்தியர்களைவிட அதிகம். ஆகையால் தீர்க்கப்படும் பிரச்சினைகளின் மொத்த எண்ணிக்கையின் சதவிகிதத்தில் அதிக பேதம் இருக்கும். இதே நிலைமைதான் கிள்ளானிலும் பினாங்கு மாநிலத்திலும் நிலவுகின்றது. இந்தக் கணக்கை எடுத்துக்கொண்டு “அவர்கள் இனத்திற்குத்தான் அதிகமாய் உதவி செய்கிறார்கள்” என்ற கூவல் சரியானது அல்ல.
கேள்வி: நமது நாட்டுக் கல்வி அமைப்பைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? நமக்கு ஏற்ற கல்வி அமைப்பு எது?
பதில்: முதலில் நம் நாட்டு கல்வி, அரசியல் ஆக்கப்படுகின்றது. ஒவ்வொரு முறையும் கல்வி அமைச்சர் மாற்றம் காணும்போது, கல்வி அமைப்பும் மாறுகின்றது. அவரவர், தங்களின் பெயர், கல்வி வரலாற்றில் இடம் பெற வேண்டுமென நினைக்கின்றார்கள். இறுதியில் மாணவர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். அமைச்சர்கள் கல்வி தொடர்பாக நூற்றுக்கு மேற்பட்ட அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கின்றனர். இதனால் என்ன பயன்? ஆகையால், அமைச்சர்கள் மாறினாலும், எக்காலக் கட்டத்திலும் கல்வி அமைப்பு மாணவர்களின் நிலைக்கேற்பவும் தரத்திற்கேற்பவும் கலைத்திட்டம் அமைய வேண்டும்.
நான் முன்பு கூறியதுபோல உலக வங்கியின் அறிக்கையின்படி, வியட்னாம் மக்கள், மலேசிய மக்களை விட ஏழைகள். ஆனால், கல்வித் தரத்தில் நாம் அவர்களைவிட பின் தங்கி இருக்கின்றோம். இதற்குக் காரணம், மத்திய அரசு கல்வியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதனால்தான். நம் நாட்டு ஆசிரியர்களின் சம்பளத்திற்கும் மற்ற ஆசிய நாட்டு ஆசிரியர்களின் சம்பளத்திற்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை. ஆனால், இங்குள்ள ஆசிரியர்கள் கட்டாயத்திற்கு உட்படுத்தப்படுகிறார்கள். அரசாங்க கட்டளைகளுக்கு விருப்பமின்றிக் கட்டுப்படுகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல், அரசாங்கம் கல்வி அமைப்பில் நடைப்பெறும் மாற்றங்களைத் தெரிவிக்கும் வண்ணம் ஆசிரியர்களைப் பல கல்வித் திட்ட அறிமுக பயிற்சிகளுக்கு அனுப்பி வைப்பதால் பெரும்பாலான ஆசிரியர்கள் பள்ளிகளில் இருப்பதில்லை. தொடர்ந்து, நேரம் போதான்மை காரணத்தால் அவர்கள் வரையறுக்கப்பட்டப் பாடத்திட்டத்தை, முழுமையாக படித்து கொடுக்க இயலாமல் போகின்றன. இந்நிலையில், மாணவர்களின் அடைவுநிலைகளை அவப்போது சோதனை செய்து அதன் அடைவைப் பள்ளித் தேர்வு இணயத்தளத்தில் ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் பதிவு செய்துவிட வேண்டும். இது எப்படிச் சாத்தியமாகும்?
உலக வங்கி வெளியிட்ட அறிக்கை தொடர்பான கூட்டம் ஒன்று பல்கலைக்கழத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நானும் அதில் கலந்துகொண்டேன். அதாவது, கானா (Ghana) நாட்டில் பெரும்பாலான பெற்றோர்களுக்கு வாசிக்க தெரியாது. கல்வி அறிவு மிகக்குறைவு. எதிர்மாறாக, அவர்களின் குழந்தைகள் கல்வியில் நல்ல தேர்ச்சிகளைப் பெறுகின்றனர். அங்குள்ள ஆசிரியர்கள் அவர்களை ஒருபோதும் ஒதுக்கியதில்லை. அவர்களுக்கு எல்லா கருத்து சுதந்திரமும் வழங்கப்பட்டது. ஆனால், இங்கு என்ன நிலவி வருகின்றது? பி.பி.எஸ் (School-based Assessment – PBS) தேர்வு முறை அமலாக்கம் செய்தபோது, அது தொடர்பாக 20,000 புகார்கள் ஆசிரியர்களால் செய்யப்பட்டன. அதனுடைய விளைவு, புகார் செய்த ஆசிரியர்களை அரசாங்கம் வேறு பள்ளிகளுக்கு மாற்றியது. பி.பி.எஸ் தொடர்பான விழிப்புணர்வும் முழுமையான விளக்கமும் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இல்லை. இதனால், குழப்பநிலை மட்டும்தான் ஏற்பட்டது. நமது மாணவர்கள் ரோபட் இல்லை. அவர்களைச் சிந்தித்துச் செயல்பட வைக்கவேண்டும். அப்போதுதான் தரமான மாணவர்களை உருவாக்க முடியும்.
நமது நாட்டு கல்விச் சூழலின் பாரம்பரியம் என்ன? பரிட்சையை முன்வைத்துதான் இவ்வளவு காலமாக மதிப்பீடு செய்யப்பட்டு வந்தது. ஆனால், தற்பொழுது இந்த மதிப்பீட்டு முறையில் மிகப்பெரிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய மதிப்பீட்டு முறையை விமர்சிப்பதால் நான் பழமை சிந்தனை கொண்டவள் அல்லது மாற்றத்தை ஏற்றுகொள்ளக்கூடிய மனப்பக்குவமற்றவள் என பொருள்படாது. மாற்றம் செய்யும்முன் அதற்கேற்ப அடிப்படை தேவைகளை முதலில் தயார் செய்ய வேண்டும்.
அடுத்து, நமது நாட்டில் 20 சதவிதம் மட்டுமே பல்கலைக்கழகப் பட்டதாரிகள். இது ஒரு பிரச்சனையா? இல்லை. வெளிநாடுகளில் அதாவது ஜெர்மன், துருக்கி போன்ற நாடுகளில் தொழிற்கல்வி சார்ந்த பல்கலைக்கழகப் பட்டதாரிகள்தான் அதிகம். பட்டதாரிகள் என்றால் ஏன் மருத்துவம், சட்டம், கல்வி, பொறியியல் போன்ற நிபுணத்துவங்களை மட்டும் சார்ந்து இருக்க வேண்டும்? நாம் நினைத்தால் நல்ல டாக்சி ஓட்டுனர்களைக்கூட போக்குவரத்துத்துறையின் கீழ் பட்டதாரிகளாக உருவாக்கலாம். இல்லையென்றால், குளிர்சாதனம் அல்லது கார் பழுதுப் பார்ப்பவர்களை அத்துறையில் முனைவர் பட்டம் பெற்ற பட்டதாரிகளாகக்கூட உருவாக்கலாம். உலகப் பொருளாதாரத்தில் முதல் இடம் வகிக்கும் நாடுகளின் வழிமுறை இதுதான். இப்படிப்பட்டவர்களால்தான் நமது நாட்டுப் பொருளாதாரத்தை நகர்த்தவும் உயர்த்தவும் உதவ முடியும்.
சரி. நீங்களே சொல்லுங்கள் அமைச்சர்களின் பிள்ளைகளுக்குக் கல்வி உபகாரச்சம்பளம் (Scholarship) தேவைதானா? அமைச்சர்களால் அவர்களின் பிள்ளைகளின் கல்விச் செலவைப் பார்த்துக்கொள்ள முடியாதா? ஏன் அவர்கள் தங்களின் பிள்ளைகளை வெளிநாட்டில் படிக்க வைக்கின்றார்கள்? சிந்தித்துப் பாருங்கள். முதலில் அமைச்சர்களின் பிள்ளைகளுக்கும் அரசாங்க உயர் அதிகாரிகளின் பிள்ளைகளுக்கும் உபகாரச்சம்பளம் கொடுப்பதை நிறுத்த வேண்டும். நம் நாட்டில் நிறைய திறமை வாய்ந்த ஏழை மக்கள் இருக்கிறார்கள். தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க வழி இல்லாமல் நிறைய பேர் கனவுகளோடு காத்துக்கொண்டிருக்கின்றனர். இப்பொழுது மாற வேண்டியது சமுக நிலைப்பாடுதான்.
முதலில் பணிப் பிரிவுகளை (Task Force) வட்டார அளவில் அமைக்கவேண்டும். பள்ளிகளில் ஏற்படும் குறைபாடுகளை உதாரணத்திற்கு, மின்சாரம், நீர் வசதி, போக்குவரத்து அம்சங்கள், பாதுகாப்பு அம்சங்கள் போன்ற விஷயங்கள் உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டும். கால தாமதமின்றி குறைபாடுகளைத் தீர்க்கவேண்டும். காரணம், நம் நாட்டில் நிறைய பணம் உள்ளது. இதை முறைப்படுத்த நடப்பு அரசாங்கம் பணம் இல்லை என்று சொன்னால் வேடிக்கைதான்.
கேள்வி: கல்வி அமைச்சு, மத்திய அரசின் கீழ் செயல்படாமல், அது ஓர் ஆணையத்தின் (Commission) கீழ் செயல்பட்டால் சிறப்பாக இருக்கும் என கருத்து உள்ளது. இதைப் பற்றி உங்கள் பார்வை?
நூருல் இசா: முடியும். இது மிகச் சரி. இது ஒரு நல்ல கூர்மையான பார்வையும்கூட. ஓர் ஆணையத்தின் கீழ் கல்வி அமைந்தால் மிக சிறப்பு. காரணம், அமைச்சர்களின் கையில் கல்வி தொடர்ந்து இருந்தால் மோசமான நிலைக்கு நிச்சயம் தள்ளப்படுவோம்.
கேள்வி: முன்பு தேசிய ஒருமைப்பாடு (National Integrity) பற்றி யாரும் பேசவில்லை. இருப்பினும் அந்த உணர்வு நம்மிடையே நிறைந்திருந்தது. ஆனால், இன்று அது பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், அந்த உணர்வு நம்மிடையே இல்லை. இதைப் பற்றி…
நூருல் இசா: எனக்கும் தெரியும். சில அமைச்சர்கள் மக்களின் நம்பிக்கையைப் பெறவும் அவர்களின் ஓட்டுக்களைப் பெறவும் தேசிய ஒருமைப்பாட்டை பற்றி மேடையில் பேசினார்கள். ஆனால் அவர்கள் மக்களுக்குக் கொடுத்த வாக்குகளைக் காப்பாற்றினார்களா என்பது இங்குக் கேள்விகுறிதான். நான் அசுந்தா இடைநிலைப்பள்ளியில் படித்தேன். அங்கு நிறைய கத்தோலிக்க மாணவர்கள் படித்தனர். அவர்களோடுதான் பழகினேன். அந்தத் தருணம் எந்த விதத்திலும் எனக்கு இனப் பாகுபாட்டை புகுத்தவில்லை. அவர்களோடு பழகினால் நான் மதம் மாறிவிடுவேன் என்ற பயமும் அச்சமும் எனக்கு வந்ததில்லை. ஒற்றுமையாக இருக்க வேண்டும் என கூறிக் கூறி நாட்டு மக்களைப் பிளவுக்குள்ளாக்கி விட்டனர் நம் தலைவர்கள்.
கேள்வி: அண்மைக் காலமாக, பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி, தமிழ்ச் சீனப் பள்ளிகளை மூட கங்கணம் கட்டித் திரிகின்றார். இதைப் பற்றி உங்கள் கருத்து?
நூருல் இசா: தமிழ்ப்பள்ளிக்குப் படிக்க அனுப்பாத சில பெற்றோர்கள் என்னிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தனர். அதில் ஒன்று நம் நாட்டில் ஒரே பள்ளி அமைப்பைக்கொண்டு வந்தால் என்ன என்பதுதான். அதற்கு நான், முதலில் நம் நாட்டின் வரலாற்றைச் சற்றுத் திரும்பி பாருங்கள் என்றேன். நீங்கள் நினைப்பதுபோல அல்ல நினைத்த உடனே எல்லா சீன, தமிழ்ப் பள்ளிகளை மூடுவது. அந்தப் பள்ளிகளை அமைக்க நமது பாட்டன்கள் பட்ட துன்பத்தை உணர்ந்து பாருங்கள். பேசுவது மிக இலகு. சீன, தமிழ்ப் பள்ளிகளை மூடிவிட்டால் எல்லோரிடமும் ஒற்றுமை வளர்ந்து விடுமா? அதற்கு வேறொரு தீர்வு உண்டு. முதலில் எல்லா இனப் பள்ளிகளையும் மேம்படுத்த வேண்டும். பிறகு, அதை மூடுவதைப் பற்றி பேசலாம். பெரும்பாலான, தலைவர்கள் பள்ளியின் வளர்ச்சிக்காகப் பணம் கொடுக்கிறேன் என மேடையில் வாக்குறுதி கொடுத்தபின், அந்தப் பணத்திற்காக பல காலங்களுக்கு அவர்களை அலைக்கழித்து, மூன்றாம்தர மனிதன்போல அவர்களை நடத்தி, காக்க வைத்த சம்பவங்கள் அதிகம். ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதில் பாகுபாடு இருக்கிறது. ஒற்றுமை உணர்வு தேய்ந்து விட்டது. முதிர்ச்சியற்ற தலைவரால் மட்டுமே இப்படி சிந்திக்க முடியும்.
கேள்வி: நீங்கள் தாய்மொழிக் கல்வியை ஆதரிக்கின்றீர்களா?
நூருல் இசா: தாய்மொழி வழி கற்றல் மிகவும் முக்கியமான ஒன்று. மலாய், சீனர், இந்தியர் எவராக இருந்தாலும் முதலில் நமது அடையாளத்தை உணர வேண்டும். தமிழ்மொழி பழமையான வரலாறு கொண்டது. சீன மொழியும் அப்படிதான். இவை நம்மோடு வாழ்ந்துகொண்டிருக்கின்றன. அதுமட்டுமின்றி, ஒரு புதிய பாடத்தை முதன் முதலில் ஒரு குழந்தைக்குத் தாய்மொழியின் வழி கற்பிப்பதே மிகச் சிறப்பு என பல ஆய்வுகள் கூறுகின்றன. தாய்மொழியின் வழி கற்றல் நடந்தால் அக்குழந்தை அப்பாடத்தை எளிதில் உணர்ந்துகொள்ள முடியும்.
கேள்வி: தாய்மொழி கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்பது பற்றி உங்கள் கருத்து?
நூருல் இசா: நான் இதை முழுமையாக ஆதரிக்கின்றேன். முதன் முதலில் மலாய்மொழிப் பாடத்தைக் கட்டாயப் பாடமாக்கும்போது பலர் அதில் தேர்ச்சிப் பெற வில்லை. அதனால் பல மாணவர்கள் மலாய்மொழிப் பாடத்தைக் கண்டு பயந்தனர். ஆனால் இன்று மலாய்மொழிப் பாடம் மிக சதாரணமாகி விட்டது. பழகப் பழக எல்லாம் இயல்புநிலைக்கு வந்துவிடும். அதுமட்டுமல்லாமல், கட்டாயப் பாடமாக்குவதன் வழி மக்களுக்கு என்ன நன்மை என்பதையும் யோசிக்க வேண்டும்.
கேள்வி: மலேசியாவிற்கு உகந்த வர்த்தக மாதிரி (Economic Model) எது என்று நினைக்கின்றீர்கள்?
நூருல் இசா: நமக்கு மலேசியப் புதிய பொருளாதார அதாவது Malaysian New Economic Model (NEM) புளுப்பிரிண்ட் உள்ளது. அது மிக நல்ல மாதிரித் திட்டமும்கூட. தேசிய பொருளாதார அமைப்பின் கீழ் லட்சக்கணக்கில் செலவு செய்து இந்த மாதிரி திட்டத்தை அரசாங்கம் உருவாக்கியது. ஆனால் அரசாங்கம் இதன் திட்டங்களைப் பின்பற்றவில்லை. உதாரணத்திற்கு திறந்த முறையில் டெண்டர் (Open Tender) விடுவதாக நஜிப் சொன்னார். ஆனால் செய்யவில்லை.
முதலில் நமது பலவீனங்களை திறந்த மனதோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். பிறகு, நம் நாட்டுப் பொருளாதார பலவீனங்களை ஓர் அறிவார்ந்த நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகளைக்கொண்டு குழு அமைத்து கலந்துரையாட வேண்டும். இது நாம் முன்னேறி செல்வதற்கான வழியைத் திறக்கும். அதை விட்டுவிட்டு, மலேசியா, சிங்கப்பூரைவிட இந்தோனிசியாவைவிட முன்னேறிய நாடு என்ற மேடைப் பேச்சு எதற்கு.
கேள்வி: மிக விரைவில் மலேசியா TPPA (Trans Pacific Partnership Agreement)ல் கையொப்பம் இட உள்ளது. அதைப் பற்றிய உங்கள் பார்வை?
நூருல் இசா: இந்த உடன்படிக்கை நம் நட்டிற்கு பாதகமான விளைவைக் கொடுக்கும் என நான் நினைக்கின்றேன். நம் நாட்டில் பலவகையான வரி விகிதம் நமது ஏற்றுமதி பொருள்களுக்குப் பாதுகாப்பு அம்சத்தின் கீழ் வழங்கப்படுகிறது. முதலில் அமெரிக்காவிற்கும் மலேசியாவிற்கு உள்ள வியூக மதிப்பு (Strategic Value) என்ன? அமெரிக்கா தனது சக்தியை இழந்து கொண்டுவரும் ஒரு வல்லரசு நாடு. அதாவது ‘Dying Super Power’ எனலாம். அமெரிக்காவை எடுத்துகொண்டால் அங்கு பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் பொருளாதாரரீதியில் பெரிய இடைவெளி உண்டு. அதுமட்டுமல்லாமல் அதிகமானவர்களுக்கு அங்கு வேலை இல்லை. இதை நாம் கருத்தில்கொள்ள வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், நாம்தான் ஜப்பான் மற்றும் சீனாவின் முதன்மை வர்த்தக ஏற்றுமதி இறக்குமதி பங்குதாரர். நம்முடைய மிக முக்கிய வர்த்தக நண்பர்கள் ஜப்பான் மற்றும் சீன நாடாக இருக்கும்போது நமக்கு ஏன் அமெரிக்காவின் வர்த்தகத் தொடர்பு தேவை? இந்த உடன்படிக்கையால் நிறைய அமெரிக்கா பன்னாட்டு நிறுவனங்கள் மலேசியாவில் நிறுவப்படும். அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதனால் நமக்கென்று வரையறுத்து வைக்கப்பட்டுள்ள பொருளாதாரத் திட்டங்களில் குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர வியாபாரத்திற்கு (SME) மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்.
போட்டித்தன்மை வேண்டாம் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் எதற்கு நாம் அமெரிக்காவுடன் போட்டிபோட வேண்டும்? நமது நோக்கம்தான் என்ன? இந்த வகையில் நான் மலேசிய இஸ்லாம் வர்த்தக சங்கத்தின் சில கொள்கைகளை ஆதரிக்கிறேன். அமெரிக்கா பல வெற்றிகரமான நிறுவனங்கள் வைத்துள்ளது. அவர்கள் முதிர்ச்சியான வர்த்தகத்தை இங்கு செய்ய உதவ போவதாகச் சொல்கிறார்கள். நம் நாட்டின் நிலைமையைக் கொஞ்சம் யோசித்து பாருங்கள். அவர்களின் ஆதிக்கத்தில் நாம் வாழ வேண்டுமா? நான் கூறுவதெல்லாம் முதலில் ஆசிய நாடுகளோடு வர்த்தக ரீதியில் மலேசிய போட்டி போடட்டும். ஆசிய வர்த்தக பொருளாதார பட்டியலில் நமது இடம் என்ன? ஆசியாவில் நமது சாதனை என்ன? இது மிகவும் முட்டாள்தனமான செயல் மற்றும் முடிவு.
நான் முழுமையாக TPPAயைப் புறக்கணிக்கிறேன். எதற்கு நாம் ஒரு பன்னாட்டு நிறுவனம் நம்மை சம்மன் (summon) செய்ய வழி விடவேண்டும்? நீங்கள் WTO-வை எடுத்துகொண்டால் அவர்கள் ஒரு நேர்மறையான பட்டியல் தருவார்கள. அதாவது இந்தந்தத் துறையில் நாங்கள் வர்த்தகம் செய்ய விரும்புகின்றோம் என. ஆனால் அமெரிக்க இதற்கு எதிர்மறையான பட்டியலைக் கொடுக்கின்றது. அதாவது இந்தந்த துறையில் நான் முதலீடுசெய்ய விரும்பவில்லை என. இது நம் நாட்டின் பொருளாதார துறையின் பலவீனத்தை மிக இலகுவாக வெளிநாடுகளுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டிவிடும்.
உலக பொருளாதாரம் கால மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டது. உலக பொருளாதாரத்தோடு நம் நாட்டை ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் எந்த இடத்தில் உள்ளோம்? நாம் நடுத்தர பொருளாதாரம் நிலைகொண்ட நாடு என்பதை மறந்துவிடக் கூடாது. எதற்கு, நம்மை நாமே ஓர் உடன்படிக்கையின்கீழ் கட்டிப் போட்டுக்கொள்ள வேண்டும். தீடீரென உலகப் பொருளாதாரம் விவசாயத்தை நோக்கிப் போகின்றது. நம் நாடு அதை மேம்படுத்தவும் அதில் முதலீடு செய்யவும் நினைக்கலாம். அதனால் நமது நாட்டுப் பொருளாதாரம் உயரலாம். யாருக்குத் தெரியும்? ஆனால் இந்த உடன்படிக்கை அதைத் தடுத்துவிடும்.
அமெரிக்கா நம்மோடு சிரித்து பேசுவதால் எல்லா விஷயங்களையும் அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அமெரிக்க அரசாங்கம் பொருளாதார ஆலோசனை சொல்ல மட்டும் 800 பொருளாதர நிபுணர்களை வைத்துள்ளது. நம்மிடம் எத்தனை பேர் உள்ளனர்? நமக்குப் பொருளாதர ரீதியில் உண்மையான நிலவரத்தைச் சொல்லும் நல்ல நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள். முதலில் அவர்களை நஜிப் தேடட்டும். அமெரிக்கா, ஜப்பான் இவை இரண்டும் மிகப் பெரிய சக்தி வாய்ந்த நாடுகள். அதனால், அமெரிக்கா என்றவுடன் ‘வாவ்’ என்று சொல்லாமல், இவர்களால் என்ன பாதகமான விளைவுகள் வரும் என்பதை யோசிப்பது சிறந்தது. பெட்ரோலியம் தொடர்பான பல உபாயங்களை (Project) உள்நாட்டு நிறுவனங்களிடமே ஒப்படைக்கலாம். ஆனால் எதற்கு Esso, Mobil போன்ற வெளிநாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கிறார்கள். இரு நிறுவனமும் திறமை வாய்ந்த நிறுவனங்கள்தான். இருப்பினும், பெட்ரோலியம் நம் நாட்டுச் சொத்து. உள்நாட்டு நிபுணர்களுக்கு முதன்மை கொடுக்க வேண்டும்.
கேள்வி: வெளிநாட்டுத் தொழிலாளர்களின் உரிமைகள் குறித்த மெத்தனங்களைப் பற்றிப் பேசுவோமா?
நூருல் இசா: நிச்சயம். அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தான். அவர்கள் நம்மை நம் நாட்டை நம்பிப் பிழைப்புத் தேடி வந்தவர்கள். இருந்தபோதிலும், வெளிநாட்டிலிருந்து வேலையாட்களை வேலைக்கு எடுப்பதில் நமது நாட்டின் கொள்கை என்ன? லட்சக்கணக்கான வெளிநாட்டவர்களை நாம் வேலைக்காக எடுத்திருக்கின்றோம். இது பல தனியார் நிறுவனங்களின் லாபத்திற்காகச் செய்யப்படும் செயல். இவர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கத் தேவையில்லை. அதோடு காப்புறுதி வசதி செய்ய வேண்டிய தேவையும் இல்லை வெளிநாட்டு தொழிலாளர்களில் பலர் குத்தகை காலம் முடிந்த பின்னும் அவர்கள் சொந்த நாட்டிற்குத் திரும்புவதில்லை. சிலர் இங்குள்ள பெண்களைத் திருமணம் செய்துகொள்கிறார்கள். மேலும், குழந்தைகளின் கல்வி, வாழ்க்கை வசதியால் இங்கேயே தங்கி விடுபவர்களும் உண்டு. முஸ்லிம் மதம் சார்ந்த வேலையாட்களுக்கு மலேசிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. ஆக, நம் நாட்டின் நிலைப்பாடுதான் என்ன?
கேள்வி. நடப்பு அரங்கத்தின் மீதுள்ள உங்களின் அதிருப்தி என்ன?
நூருல் இசா: முதலாவதாக பொறுப்புள்ள தலைவர்கள் நமக்குத் தேவை. 13வது பொதுத் தேர்தலில், 52 சதவித எதிர்ப்பு குரல்கள் உள்ளதை நாம் நேரடியாக உணரலாம். இது ஏன்? ஊழல், அதிகாரம், இனப்பாகுபாடு போன்ற விஷயங்களால் எழுந்த மக்களின் எதிர்ப்புக் குரல்கள் அது.
அடுத்து, பொருளாதாரக் கட்டமைப்பு மலேசியா வாழ்வுக்கும் வளங்களுக்கும் ஏற்றால் போல அமைவது அவசியம். நம் நாடு அமெரிக்கா போல அல்ல. முதல் முதலாக, New Economy Policy (NEP)யை அறிமுகம் செய்யும்போது இனங்களிடையே உள்ள பொருளாதார இடைவெளியைக் குறைப்பதற்காக கொண்டுவரப்பட்ட திட்டமாக அமைந்தது. ஆனால் தற்பொழுது உள்ள பொருளாதார சூழல் இந்நிலையை மாற்றி அமைக்கின்றது என நான் நினைக்கின்றேன். ஜி.எஸ்.தி-யை அறிமுகம் செய்து மக்களின் பணத்தை வரி என்ற வடிவில் எடுத்துக்கொள்வதில் என்ன நியாயம் உள்ளது. மலாயாப் பல்கலைக்கழக, வறுமைப் பிரிவு பேராசிரியர் டத்தோ பதிமா கரிம், நாட்டில் மின்சாரம் கட்டணம், பொருள் விலைவாசி தொடர்ந்து உயர்ந்து கொண்டேபோனால் 1970களில் உள்ள ஏழ்மை நிலை மீண்டும் திரும்பி விடும் எனக் கூறுகின்றார். இதுபோன்று இன்னும் பல விஷயங்கள் மனத் திருப்தி அளிக்கவில்லை எனலாம்.
கேள்வி: மலேசியப் பெண்களின் குரல் எந்த அளவில் கவனிக்கப்படுகின்றது?
நூருல் இசா: தற்பொழுதுள்ள மலேசியச் சூழலில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளன. நமது மத்திய வங்கியின் கவர்நர் ஒரு பெண்தான். பெண்கள் நமது நாட்டில் உயர்வாக கொண்டாடப்பட்டாலும் அவர்களுக்கு பாதுகாப்பு அம்சங்கள் இல்லை. இவர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் சட்டப் பார்வைக்குக் கொண்டு வரப் படுவதில்லை. அதோடு பெண்களின் பாதுகாப்புப் பிரச்சினைகளைக் கவனிக்கச் சிறப்புக் குழுவும் இல்லை. வருத்தம்தான். பாதுகாப்பைத் தவிர்த்து வேலை இடங்களில் குறிப்பாக சிறப்புத் துறைகளில் பெண்கள் அங்கீகரிக்கப்படுவதில்லை. குறிப்பாக உயர் பதிவிகளை அவர்களுக்கு வழங்குவதில் பாகுபாடு உண்டு.
கேள்வி: நம் நாட்டில் பெண்களுக்கு அமைச்சரவையில் முக்கிய/முதன்மை அமைச்சர் பதவிகள் வழங்கப்படுவதில்லை. ஏன்?
நூருல் இசா: இத்தாலி நாட்டின் உள்துறை அமைச்சர் ஒரு பெண். பதவி கொடுப்பதில் பால் வேறுபாடு இருக்கக்கூடாது. திறமையின் அடிப்படையில்தான் பதவி வழங்கப்பட வேண்டும். நீ பெண். அதனால் உனக்கு இந்தப் பதவி உண்டு; இல்லை என்ற அடிப்படையில் இருக்கக்கூடாது.
கேள்வி: இறுதியாக…
நூருல் இசா: மக்கள் அறியாமையிலிருந்து முதலில் வெளி வர வேண்டும். முக்கியமாக மின் உலகம் அல்லது இணைய உலகம் அறியாதவர்களாக நாம் இன்னமும் இருக்கக் கூடாது. ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை கிடைக்கும் அரிசி பருப்பையும் வருடத்திற்கு ஒருமுறை கிடைக்கும் BRIM அதாவது ஒரே மலேசிய உதவித் தொகை பணம் ரி.ம 500 வெள்ளியையும் நம்பி ஏமாற்றம் அடைந்து விடாதீர்கள். நான் முடிவுகளைச் சொல்ல விரும்புவதில்லை. நான் எழுப்பும் கேள்விகள்தான் உங்களைச் சுயமாக சிந்திக்க வைப்பதற்கான வழி. ஒவ்வொரு கேள்விகளுக்கும் நீங்களாகவே பதில் தேடுங்கள். அப்பொழுதுதான் உண்மை நிலவரங்கள் உங்களுக்குத் தெரிய வரும். நானே அந்தக் கேள்விகளுக்கான பதிலைச் சொல்லி விட்டால், அதன் உண்மை தன்மை குறைந்து விடும். சுய சிந்தனை கொண்ட மக்களே மாற்றத்தை ஏற்படுத்துவார்கள்.
நேர்காணல் : வீ.அ.மணிமொழி / பூங்குழலி வீரன்
நன்றி :- www.vallinam.com.my
இந்த தலைப்பு அரசியல் பேச்சுக்கு வசதியாக இருக்கும் ! நடைமுறைக்கு ஒவ்வாத சிந்தனை. அவுங்க அப்பாவே ஒத்து வரமாட்டான்.
முடியாத தலைப்பு ! மீண்டும் ,மீண்டும் அரசியல் தனம் ! இந்த நாட்டை எந்த இனமும் ஆள முடியும் என்று முயற்சிப்பது , சிந்திப்பது, பேசுவது என்பது இன கலவரத்தின் உச்சமாக இருக்கும்.
அல்லது அப்படியான தலைவன் /தலைவி அரசியல் ரீதியில் வெறும் வெட்டியானாவான்!
இதனால் நாடு சிதறுண்டு இஸ்ல்றேல், பாலஸ்தீன இன்னும் பல நாடுகளின் கொடுமைகளை விட மோசமான் விளைவுகள் வரும். உலக மனித நேயம்,உரிமை ஐக்கிய சபை எல்லாம் கையை விரிக்கும். இது இன்றைய ,,,நாளைய உலக நிரந்திர நடப்பு.!
தாங்கள் PKR தேசிய உ தலைவர்தான் ,,,, பல்லின கட்சிதான். எத்தனை மலேசியன் சார்பு பிரச்சனைகள்? ஒன்றையும் செய்ய முடியவில்லை?காரணம் இனம் இனத்தோடு அரசியல். எல்லா நிலைகளிலும் விசம சிந்தனை. மற்ற படி உங்கள் இதர சிந்தனைகளை ஆய்வுக்கு படிக்கலாம். செம்பருத்தி பேட்டிக்கு நன்றி.
பார்த்தீங்களா.. ‘இவன்’ இதுக்கு (எதுக்கும்) ஒத்து வரவே மாட்டான்
இந்த நாட்டை எந்த இனமும் ஆள முடியாதாம.. சொல்லுது ,(ஒரு வேலை அம்னோவில் உறுப்பினரோ ?) அமெரிக்காவில் ஒரு கறுப்பின தலைவன் இல்லையா ? வெண்ண ! கல்வி சம்பந்தமான கேள்விக்கு அந்த சின்ன பொண்ணு என்ன கருத்தா பதில் சொல்லுது பாருங்க ! மாற்றம் மக்களிடையே வேண்டும் என்று சொன்னது சில மாங்கை மடையர்கள் அரசியலில் இருப்பதால்தான் ! தோழர் … ! உண்மையில் ‘இவன்’ இதுக்கு (எதுக்கும்) ஒத்து வரவே மாட்டான் ! வரலனா என்ன போய் தொலைகிறான் விடுங்கள் !
சின்ன பெண்ணாலும் சிறப்பான பொறுப்பான பதிலை தந்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது. வாழ்த்துக்கள்..!
ஏட்டு சுரக்காய் சமையலுக்கு உதவாது.
அப்பனுக்கு தப்பாமல் பிறந்த குலக் கொழுந்து. ஒரு வேலை அப்பனால் தம குறிக்கோளை அடைய முடியாது போயின், இவள் அதனை முடித்து சாதனை படைப்பாள், முக்கிய நிபர்ந்தனை….என்ன வேனில்…. இந்த கொள்கை என்றும் மாறாமல் இருந்தால்……………………
திரு ‘பொன்’ அவர்களுக்கு…. இப்போ ஆளும் கடைசி மட்டுமே…. என்றென்றும் சிறந்த கட்சியாக அமையும். அவரை பொறுத்த வரை….. அக்கட்சி….. என்ன செய்தாலும்….. எப்படி பட்ட குறுக்கு வழியை கடைபிடித்தாலும்…….. இதுவே அவரின் நரம்பு நாடிகளில் ஒன்றர கலந்து கிடக்கிறது. ….. இதற்கு மேல் என்ன சொல்ல!!
நல்ல கருத்துக்கும் எதிர்வாதமா ???? நல்லதை ஆதரித்து நலம் பெற முயற்சிப்போம்!!! ஆண்டவனருளால் நல்லதே நடக்கட்டும்!!!
அக்கா மகளே..பார்த்து பேசுங்கள்.. அடுத்தே தேர்தலில் உமக்கு மலைய்கரர்களின் ஒட்டு ஆப்பு வைத்திட போகிறது..
தோழர் பொன் ரெங்கன் எப்போதுமே பிடிவாதக்காரர்.ஒரு தலைமை துவத்திக்கு கில் கட்டு பட்டு செயல் படுபவர் அல்ல………… அம்பங்க் வட்டாரத்தில் உள்ள பெரும் பான்மையானவர்களுக்கு இது தெரியும்.
தெனாலி எந்த தலைமைத்துவம் ஒழுங்கா, சமுதாய சிந்தனையில் உள்ளது அல்லது சேவை செயுது சொல்லுங்கள் கட்டு பட்டு அல்ல கடமை உணர்வோடு சேவை செய்கிறேன். அம்பாங் வாட்டரத்தில் நல்ல யோகியனை சொல்லுங்க ? அவன் என்னை மெச்சிக்க அல்லது உங்களையாவது நல்லவன் என்று சொல்ல ஒருவன் இருப்பானா? அந்த நீங்கள் சொல்லும் பெரும்பான்மை இந்த சமுதாய மகாத்மா மாக்களா? சொல்லு தெனாலி, சொல்லு?
shanti , பார்த்து பேசுங்கள் ! அந்த மகளே இந்த மகளே என்கிற பேச்சு வார்த்தைகள் வேண்டாம் ! நுருல் ஒரு பர்லிமேன் மெம்பெர் (MP) . அவரை மரியாதையுடன் அழைக்க, நான் உங்களை கேட்டு கொள்கிறேன் ! நாளைக்கு உங்களை யாராவது இப்படியே ஏசினாலும், அபொழுது உங்களுக்கும் வலிக்கும, நான் நிச்சயமாக அவர்களுக்கும் அறிவுரை கூறுவேன். ஆகையால், ஒருவரின் தவறு அல்லது சரியை சுட்டிகாட்ட , உங்களுக்கு எல்லா தகுதியும் உள்ளது! ஆனால் அவரை பரிகசிக்க அல்ல ! உங்களுக்கு ஒரு கதை . 18ஆம் நுற்றாண்டு ! ஆபிரகான் லின்கோல்ன், 13 ஆவது சட்டதிருததை முன்மொழிந்த நேரம் ! அதில் : கடவுளின் பார்வையில் எல்லா மனிதனும் ஒன்று ! இதில் கருப்பர்கள் மட்டும் எப்படி வெள்ளயர்களுக்க் அடிமை ? ஆகையால் , 13 சட்டத்தில் , அனைவரும் சமம் , கடவுளின் குடையின் கில் என்றார்! சுடு பட்டு இறந்தார் ஆபிரகான் லின்கோல்ன்.
இன்று, கருப்பர்களின் வம்சாவளியில் வந்த, இஸ்லாமிய பாரம்பரியத்தில் இருந்து வந்த ஒபாமா , அமெரிக்காவை கட்டியால்கிறார் ! எத்தனை எத்தனை பஞ்சாயத்து ? அப்படி , நுருல் அவர்கள் சுட்டிகாட்டியது , ஒரு பொதுவான கருத்து. இதில் ஜனநாயகம் ஒளிந்திருக்கிறது! இதனால் அரசியலில் அவர் தோர்பாரே ஆனால், அது மனித குலத்துக்கு அவர் செய்த நன்மையே ! உண்மையில் அவர் வென்றவரே ! மற்ற இன்னமும் , அரசியல் செய்ய இது ஒரு நல்ல தருணம் ! ஆனால் உங்களை போன்று , பணத்துக்கு வேலை செய்யும் பேர்விழிகள், பொதுவான ஒரு கருத்து வாக இருந்தாலும், அதையும் எப்படி எதிர் கட்சியை குறை சொல்லலாம் என்று யோசிபிர் ! மாறுங்கள் ! மாற்றம்மே நிலையானது ! மாறாதது சிலையானது !
திலிப்..காது அங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்
…மாறுங்கள் ! மாற்றம்மே நிலையானது ! மாறாதது சிலையானது ! முதலில்
அன்வர் மாமாவை மாற்றுங்கள்.அவன் இருக்கும் வரை மக்கள் கூட்டனி மாங்கா கூட்டனிதான்
‘நாளைக்கு உங்களை யாராவது இப்படியே ஏசினாலும், அபொழுது உங்களுக்கும் வலிக்கும, நான் நிச்சயமாக அவர்களுக்கும் அறிவுரை கூறுவேன்” அப்படியா…மோகனிடம் சொல்லுங்கள்.
திலிப்..நீங்கள் எழுதிய ஒபாமா, ஆபிரகான் லின்கோல்ன் எல்லாம் சரிதான், இந்தியர் ஆட்சி செய்ய முடியுமா மக்கள் கூட்டனி ஆட்சி வந்தால்..சிங் கக் அடிக்கலாம்..அநியாயத்துக்கு வேண்டாம்பா.
பக்காதான் ஆட்சியில் , பேராக் கில் சபா நாயகர் பதவி கிடைக்க வில்லையா ? பினாங்கு துணை முதல்வர் பதவி கிடைக்காலையா ? செலங்கோரில் உள்ள 83 தமிழ் பள்ளிகளுக்கு தல 80 ஆயிரம் கிடைக்க வில்லையா ? ஆனால் ம இ கா விடம் குடுத்த பல லட்சம் … இன்னும் குளறு படியிலே தான் இருக்கிறது ! சாந்தி , … எங்கே BN நின் தமிழர்களுக்கான சாதனையை பட்டியல் இடுங்கள் !
BN 540 மில்லியன் ரிங்கிட் தமிழ் பள்ளிக்கு செலவு செய்ததாக சொல்லிக்கொள்கிறது.ஆனால் பிரதமர் இதுவரையில் எந்த பள்ளிக்கு எவ்வளவு கொடுத்தேன் என்று புள்ளி விவரத்தை கொடுக்க மாற்றார்.ம இ கா வும் இந்திய சமுதாயத்திக்கு போப் பெ காட்டி ஏமாத்து.இந்த சாந்தி பிரதமரிடம் கேட்டு பதில் சொல்வாளா நானும் காத்துக்கொண்டு இருக்கிறேன்.10 மில்லியன் டெலிகொம் பனங்கு மாதிரி இதுவோம் ஒரு நாடகமாக இல்லாமல் இருந்தால் சரி .
TELECOM , CIME DERBY , TNB , TV 3, இன்னும் ஒன்று , என்று 150 மில்லியன் அப்பொழுது இருந்த tun மகாதிர் அவர்களால் இந்திய சமுகத்திற்கு தரப்பட்டது ! திருடன் சாமீ வேலு , எல்லாவட்றையும் விட்று ம இ கா வில் சேர்த்து கொண்டான் ! அதையும் இன்று வரை பழனியிடம் தர மறுக்கிறான் சாமீ வேலு ! Shanti , எப்படி பார்த்தாலும் , உங்களை போன்ற மாங்காய்க்கள் இருக்கும் வரை , எல்லா திருடனும் இங்கே இந்தியர்களை வைத்து அரசியல் பண்ணுவார்கள் ! உதர்ணதிர்க்கு இந்த ம இ கா போன்று ! 10 ஆண்டுகளுக்கு முன் TAFE COLLEGE டிகிரி அங்கீகரிக்காமல் , பல மாணவர்கள் வேதனை பட்டார்கள் . இன்னமும், அந்த விஷயம் அப்படியே இருக்கிறது .
http://malaysianindiantoday.wordpress.com/2008/01/19/tafe-college-courses-are-not-recoganized-dont-spoil-your-future/
ஆனால் , அப்படி ஒரு பிரச்னை MCA வில் வந்த பொழுது , MCA , பிரதமரிடம் பேசி , இதற்க்கு முன் கல்வி கற்ற எல்லா TAR காலேஜ் மாணவர்களுக்கும் அங்கிகாரம் வாங்கி தந்தார்கல்!
http://malaysiansmustknowthetruth.blogspot.com/2012/06/pm-gives-tarc-courses-retrospective.html …………………………
ஆனால் இன்னமும் 10 000 TAFE காலேஜ் DIPLOMA மற்றும் DEGREE இன்னமும் அங்கிகரிக்க பட வில்லை ! இதை பிரதமரிடம் கேட்டு சொல்லுங்கள் shanti அவர்களே !
அன்றைக்கு எல்லாம் சேர்ந்து தானே சிங் சக் போட்டிர்கள் ..இப்பொழுது இப்படி சொன்னால் எப்படி..நம் பிரதிநதிகள் சரி இல்லை என்றால் ஒட்டு மொத்த அரசாங்கத்தை குறை சொன்னால் எப்படி நண்பரே..
அன்றைக்கு நீங்களும்தானே ஜிங் சக் போட்டேங்க ,நாங்க போடுறப்ப உங்களுக்கு வலிக்கிறதா ?
சும்மா லக லக லக ..
அந்த காலத்தில் யாரும் சிங் சாக் போடவில்லை ! அப்பொழுது அடியாட்களை வைத்து ம இ கா தலைவர் சாமீ வேலு அராஜகம் பண்ணினார் ! maika holdings சுல பணம் போட்ட வர்கள் கேள்வி கேட்டதுக்கு அடியாட்களை வைத்து மிரட்டினார் ! எல்லா பத்திரிக்கையும் எழுத பயந்த காலம் ! இனைய தல புரட்சி இல்லாத காலம் ! மக்களுக்கு சரியாக விஷயம் சென்று சேராத காலம்! MG .PANDITHAN போன்ற அரசியல் வாதிகள் ம இ கா வில் இருந்து நீக்க பட்டிருந்தனர் ! இப்படி பல ……. ஆனால் மறந்தும் ஆளும் கட்சி பரிசான், எதையும் தட்டி கேட்கவில்லை ! காரணம் , இவர்கலேம்லாம் அடிசிக்கிடு சாகட்டும்னு விட்டு விட்டார்கள் !
இப்படி தான் ஒரு நாட்டில் ஒரு அரசியல் வாதி தாதாவாகிறான் , சாமீ வேலுவை போல ! சரி அன்று தான் பரிசான் கேட்க வில்லை ! இன்று பழநிவேலுவிடம் குடுத்த 54 மில்லியன் , தமிழ் பள்ளிகளுக்கான நிதியை , சரியாக பயன் படுத்த பட்டனவா என்று , ஒரு ராயல் கம்மிசியன் வைத்து விசாரிக்கலாமே ? இதற்க்கு காரணம்: நன் தமிழ் நாளிதழ்கள் இதை பல மாதமாக கேட்டு கொண்டிருக்கிறார்கள் ! ஆனால் மக்களால் ஏ ற்று என்று கொள்ளும் எந்த ஒரு பதிலையும் ம இ கா இன்னமும் தர முடியவில்லை என்று தான் கூர வேண்டும்! சரி shanti , நீங்கள் ஏன் TAFE COLLEGE DEGREE AND DIPLOMA வுக்கு , பிரதமருக்கு கடிதம் எழுதி, சம காலத்து அங்கிகாரம் வாங்கி கொடுக்க கூடாது ? அப்படி நீங்கள் செய்வீர்களானால் , 10 000 பேர் வரை, TAFE COLLEGE ல் படித்த நம் சமுதாய மாணவர்கள் பயன் அடைவார்கள் ! அரசாங்க வேலையும் கிடைக்கும் ! ம இ கா தான் தப்பானவர்கள் என்றால் , அரசாங்கம் இதை சரி செய்யலாமே ? செய்யுமா உங்கள் அரசாங்கம் ? இதே நிலைமை, தார் காலேஜ் யுக்கு வந்த பொழுது , MCA தலைவர்கள் , அரசாங்கத்திடம் பேசி, சரி செய்தார்கள் ! இன்று , எல்லா TAR காலேஜ் DEGREE மற்றும் DIPLOMA அங்கிகரிக்க பட்டிருக்கிறது ! அப்படி உங்களால் இந்த பிரச்சனையை SOLVE பண்ண முடிந்தால் , உங்களுடன் நாங்களும் ஆளும் கட்சியை பாராடுவோம் ! எமாதுபவனுக்கு எவனும் சிங் சாக் அடிக்க மாட்டான் ! உங்களை தவற !
என்னமா பொண்ணு நீ பேசறயா? உன்னையும் தெரியும் உன் அப்பனையும் தெரியுங்மா கண்ணு! நீ பந்தாய்ல ஜெவிக்க இந்திக்காரன் ஓட்டு வேணும். உன் கட்சில நீ தலைவியா ஆக, இந்தியாக்காரன் ஓட்டுப்போடுவான்? ஆனா ஒரு தமிலன உங்க கட்சியில உதவி தலைவனாக உங்க தொகுதியில ஓட்டு போட மாட்டிங்க, தப்பித்தவறி ஒரு தமிழன் முன்னேறிவிட்டா, அவனையும் தோற்கடிக்க உன் அப்பனும் நீயும் சேர்ந்து, கட்சிலிருந்து நீக்கப்பட்டவனைக் கூட வேட்பாளராக்கி தமிழனுக்கு குழிப்பறிபீங்க! அதுதானே பூச்சோங்கில் நடந்தது. பூச்சோங்கில் உள்ளவனுங்க வெக்கங்கெட்ட தமிழனுங்க, பந்தாய்ல உன்னை தூக்கிவிடுரவுனுங்க மானங்கெட்ட பயலுக! மோகன் அன்னாச்சி, பல இனத்தை பற்றி பேச இவாளுக்கு அருகதை உண்டா?
சுறா , யார் சார் நீங்கள் ? அறிமுக படுத்தினால் , உங்களுக்கு நான் என்னால் ஆனதை விழக்குவேன் !
சுறா சும்மா சீறி பாயுது…
திலிப் அப்படி என்ன விளக்க போகிறிர்கள் “மாற்றம் வேண்டும்” “மக்கள் கூட்டனி நமக்கு” அதானே..
Shanti , சுறா , அவர்களே ! மக்கள் கூட்டனி வேண்டுமா , வேண்டாமா என்று மக்கள் முடி செய்யட்டும் ! நானும் , நீங்களும் அல்ல ! நான் எதை முன்மொழிக்றேன் என்றால் ஒரு நியாமான அரசியல் நகர்வு , எந்த காலத்திற்கும் பொருந்த கூடிய ஜனநாயக முறை! உலகத்தில் பல நாடுகளில், மக்கள் தேர்ந்தெடுக்கும் தலைவர்களே அந்த நாட்டை வழி நடத்துகிறார்கள் ! மலேசியாவை போல ! அப்படி தேர்தெடுக்க படாத பட்சத்தில், தோற்றவர்கள் நிஜமாக நடந்து கொள்ள வேண்டும் ! தேர்தலில் உழல செய்ய கூடாது ! அந்நியர்களுக்கு அடையாள அட்டை கொடுத்து , ஜெயிக்க கூடாது ! கள்ள ஓட்டுக்கு வழி செய்ய கூடாது ! மின்சாரத்தை அடைத்து , பெட்டிகளை மாற்றி , குழப்பம் செய்து , பய முறுத்தி , இதையும் அதையும் செய்து , குழப்பி , மதங்களை காட்டி வெள்ளகுடாது! இது எல்லா கட்சிகளும் கடைபிடிக்க வேண்டிய மரபு ! இதில் பாகு பாடு இல்லை ! அன்வார் அவர்கள் இப்படி செய்தாலும் , கண்டிக்க வேண்டும் ! அதில் மாற்றம் இல்லை ! மேலும், தேந்தெடுக்க பட்ட அரசாங்கம் , சரி வர , மக்களின் ஆலோசனையை கேட்காமல் நடக்குமாயின், விமர்சனங்கள் வெடிக்கும் ! உடனே , நடப்பு அரசாங்கம், தலைவர்களை மாற்ற வேண்டும் அல்லது பொது தேர்தலுக்கு வழிவிட வேண்டும் ! இல்லையேல், சுமுக மாக பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் ! எதுவும் செய்ய வில்லை என்றால் , விமர்சனங்களை சந்திக்க நேரிடும் ! ஆகையால் , ஒவ்வொரு குடிமகனுக்கும் கேள்வி கேட்கும் அதிகாரம் உண்டு என்பதை எல்லா கட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டும் ! அதை எற்று கொள்ள வேண்டும் ! நேட்று, UK பார்லிமெண்டில் , சிரியா மீது வான் வழி தாக்குதலுக்கு , ஓட்டெடுப்பு நடத்தி , மக்கள் பிரதிநிதிகள் ஒத்து கொண்ட பிறகே , பிரிட்டின் ISIS மீது படை எடுக்கிறது ! இது ஜனநாயகத்தை பிரதி பலிக்கிறது! இதை தான் நான் ஆதரிக்கிறேன் ! இப்படி பல ! ஒரு உதர்ணதிர்க்கு, அமெரிக்காவில் ஒவ்வொரு தொகுதியுல்ள்ள , மக்கள் , தங்களுக்கு எந்த ஒரு போலீஸ் தலைமை அதிகாரி வேண்டும் என்று பிரதிநிதிகளை முன்மொழிந்து , பிறகு வாக்கெடுப்பு நடத்தி தேர்ந்தெடுப்பார்கள் ! அப்படி தேந்தெடுக்க பட்ட , அந்த தொகுதியில் உள்ள ஒருவருக்கு , சட்ட ஆலோசகர்கள் தந்து , அந்த தொகுதியில் , மக்கள் அமைதியாக வாழ வழி செய்து கொள்கிறார்கள் ! அப்படி தேர்ந்துடுக்க பட்ட ஒரு போலிஸ் அதிகாரி , அங்கே லஞ்சம் வாங்க மாட்டார் ! காரணம் , அவர் அந்த உரில் ஒருவர், நன்கு அறிமுகம் ஆனவர் ! உங்களையும் , என்னையும் போன்று ! எல்லா மக்களையும் தெரிந்தவர் ! ஆனால் , எங்கோ ஒரு மூளையில் போலிஸ் ட்ரைனிங் முடித்து , வேறு ஒரு இடத்தில அதிகாரியாக அமர்த்த படும்பொழுது , அங்கே உள்ள அணைத்து சமுக குற்றவாலிகலிடமும் பணம் வாங்கி கொண்டு , உழலை வளர்த்து விடுகிறார்கள் சில நாட்டில் ! நீங்களே சொல்லுங்கள் , சாந்தி, சுறா அவர்களே , உங்களுக்கு எந்த வித மான போலிஸ் வேண்டும் ? மக்களில் ஒருவனாக, மக்களுக்கு ஒருவனாக ? அல்லது உளழலை வளர்பவனாகவும் , அரசியல் வாதிகளுக்கு துணை போகின்ற ஒருவனா ? ஜனநாயகத்தை வழ படுத்துங்கள் ! அதிலே முழ்கிவிடாதிர்கள் ! எல்லாம் மாற கூடியைவை ! ஏன் மாற்றதை வேண்டாம் என்கிர்கள் ?
திலிப்பின் அண்ணே, கருத்து பரிதாபமாக உள்ளது. உள்கட்சியில் நேர்மையற்றவர்கள், உலக நடப்பிலும் , நாட்டு நிர்வாகத்திலும் நேர்மையாக நடப்பார்களா? பல இன கட்சியில், பெரிய அளவில் பல இன நலன்களை பற்றி பேசும் ஒருவர் ” நூருல்” ஏன் தன் கட்சித் தேர்தலில் ஒரு இந்தியர் கட்சியின் உதவித்தலைவராக வருவதற்கு அவரது தொகுதியில் ஓட்டுப்போட மறுக்கிறார். பூச்சோங் மு…. போன்ற குண்டர்களுக்கு, அடாவடிப் பேர்வளிகளுக்கு ஆதரவு அளிப்பது எதனால் ? குண்டர் கும்பல் பேர்வளிகளுக்கு பி.கே. ஆர் கட்சியில் ஏன் அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இது இந்திய சுதாயத்திலுள்ள குண்டர்கும்பல் தடவடிக்கையை ஊக்கப்படுத்தாத? கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவால் தற்காலிகமாக நீக்கப்பட்ட ஒருவரை அன்வார் (பூச்சோங் தொகுதியில்) வேட்பாளராக ஆக்கி, அவரை வெற்றிப்பெற வைத்தது எதனால்? அங்கு கட்சின் விதிகளுக்கு என்ன மரியாதை உள்ளது? இதனை போன்ற பல கேள்விகள் எழுப்ப முடியும். உங்கள்நூருளிடம் கேட்டு பதில் இங்கு எழுதுங்கள், உலக, நாட்டு அரசியலை தனி மனிதர்களின் பணம்- பதவி பேராசைகளுடன் முடிச்சுப் போடாதீர்கள். 0.000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
ஹஹஹ…சுறா, ஒரு கட்சியில் ஒரு பிரச்னை வந்தால், அந்த கட்சியில் உள்ளவர்கள் தான் அதற்க்கு தீர்வு காண முடியும். HINDRAF உடைந்த பிறகு , அதில் இருந்த முக்கியமான 10 பேர் , ஒவ்வொரு திசையை நோக்கி நகர்ந்தனர் ! அதில் உதய குமார் மட்டும், ஆரம்ப நிலையிலேயே இருந்தார் ! அன்வாருடன் ஒத்து போக மறுத்தார், காரணம்: மலாய் காரர்களுக்கு நிகரான சம உரிமை கோரினார் ! அன்வார் அதை மறுத்தார் ! UMNO வும் அதை இன்று வரை மறுக்கிறது. பொதுவான காரணம் யாதெனில் நாம் எண்ணிக்கையில் மிகவும் குறைந்த ஒரு சமூகமாக மாறி விட்டோம். மேலும் PKR ரில் சேர்ந்த சில இந்திய அரசியல் வாதிகள், அவர்களது உட் கட்சி அரசியலில் தொற்றதால் , தலைமை துவதை குறை கூறினர் ! ஒரு கட்சிக்கு, அதன் சட்ட திட்டங்கள் உள்ளது ! அப்படி தான் நீங்கள் கூரும் மு …… அவர்கள் , மண்டை உடைந்தாலும் , மார்க்கம் உடையவில்லை என்று , விடா பிடியாக அங்கே உள்ளார் ! அது அவரது அறியாமை ! அவரையெல்லாம் ஒரு அரசியல் வாதிக்கு உள்ள அந்தஸ்து கொடுத்து , மற்றவர்கலை கேவல படுத்த வேண்டாம் ! விசயத்திற்கு வருவோம் ! ஒரு கட்சியில் செல்வாக்கு குறையும் பொது , ஒருவர் குழப்பம் செய்வார் ! PKR றை குறை கூறுபவர்கள், ROS சிடம் முறைப்படி புகார் செய்திருக்க வேண்டும் ! சட்டங்கள் மீறப்படுமாயின், ROS சில் புகார் அன்றே செய்திருக்க வேண்டும். அடிப்படை நகர்வு கூட தெரியாத ஒருவனுக்கு துணை தலைவர் பதவி மட்டும் வேண்டும் ! அவர் நீக்க பட்டார் ! இவருக்கு முதல் மரியாதை , நான் நல்லவன் என்கிற புலம்பல் கூடாது ! அரசியல் செய்து பிழைக்க முடிய வில்லையா, ஒதுங்கி கொள்ள வேண்டும் ! அவர் இந்தியர் , நான் கிறிஸ்டின் , அது இது , அரிசி , பருப்பு புண்ணாக்கு நு பொலம்ப கூடாது ! DAP உட்கட்சி தேர்தலில் திரு குல (MP) அவர்கள் ஒருமுறை 400 அதிகமான வாக்குகள் பெற்று , கட்சியில் முக்கியமான 6 இடத்தை பிடித்தார் ! அந்த ஓட்டுக்களில் அதிகமான ஒட்டு சீனர்களுடையது ! அவருக்கு மட்டும் எப்படி வெற்று மத கட்சி தொண்டர்கள் வாக்களித்தனர் ? அவரை பற்றி அந்த கட்சியில் நல்ல மரியாதை உண்டு ! நானே நேரில் பார்த்து வியந்தேன் ! அதே தேர்தலில் , கர்ப்பால் சிங்க் அவர்கள் 500 கும் மேட்பட்ட வாக்குகள் பெற்று கட்சியின் தலைவர் ஆனார் ! எப்படி ? அரசியல் செய்ய தெரிந்திருக்க வேண்டும், இல்லை என்றால் ஒதுங்கி கொள்ள வேண்டும் ! PKR ரில் துணை தலைவர் பதவிக்கு ஒரு இந்தியரை நிறுத்தி விட்டல் , PKR தலைமை துவம் சரியானது ! இல்லையேல் தவறானது என்று நீங்கள் வியாக்கியானம் செய்வீர்களானால், சிரிப்பதை தவிர எனக்கு வேறு வழி இல்லை! செயல் திறன் இல்லாத ஒருவனுக்கு தான் இந்தியன் என்ற கோட்டாவில் உயிர் வாழ வேண்டிய அவசியம் இருக்கிறது, அதுவும் ஒரு கட்சியில் என்றால், இதை என்னால் எற்று கொள்ள முடிய வில்லை நண்பரே !
என்னால அண்ன திலீப- வெளக்கம் சொல்லுரனிங்க, இப்ப கோர்டு போ, ROS பாருணு செல்லுறீங்க. நம்ப பந்தாய் பொண்ணு சொல்லுது நாம எல்லாம் ஒன்னுனு, அப்படினான ஏன்ல கட்சில அடியாலு, புடியாலு வைச்சிருக்கீங்கனு கேட்கிறேன். நீங்க பந்தாய் பொண்ணு மெம்பருதானே, அவங்கல திருந்திக்க செல்லுலா. என்னை கோர்ட் ROS எல்லாம் போக சொல்லாதலா! உங்க காலிட்டும், சில பி.கே.ஆர் காரன் தந்த ரீப்போட் போதும்லா, ROS கட்சியை தூக்கிமாட்டி விடப்போறன். ஏன்லா இந்தியகாரனையும் தூண்டி விடறீங்க? நம்ப கட்சியை அழிச்ச நல்லா இருகாதுலா! நீ என்னால குலா, DAP. எல்லம் இழுத்து படம் காட்டுரா!… அவனுங்க நாடகம் இன்னும் பெருசுல்லா!
சுறா, உங்களுக்கு போதுமான விளக்கம் தந்து விட்டேன் ! ஆனால் நீங்கள் எட்று கொள்ளும் மன நிலையில் இல்லை ! அப்படி என்றால் , எழுத்து புர்வமாக PKR தலைமையகத்திடம் உங்கள் கேள்வியை வையுங்கள் ! 60 நாட்களுக்குள் விளக்கம் தர வேண்டுகோள் வையுங்கள் ! அப்படி அவர்கள் தரும் விளக்கம் உங்களுக்கு திருப்பதி யாக வில்லை என்றால் , நீங்கள் துணிந்து , அந்த கட்சியில் இருந்து வெளியே வந்து , உங்களின் அடுத்த நடவடிக்கையை எடுங்கள் ! நான் ஒரு பல்கலை கழகத்தில் விரிவுரையாளர் ! நான் PKR மெம்பெர் அல்ல ! அரசியல் எனக்கு பிடித்த துறை ! அதனால் உங்களுக்கு சில விழக்கங்கள் தருகிறேன் ! அவ்வளவே !
அண்ன திலிப், நன்றி ! அரசியலுக்கு புதுசா? நீங்க விரிவுரையாளர், அப்புறம் என்னால! நீங்க தான்ல உங்க தலைவருக்கு புத்தி சொல்லணும். நாங்க ஏழைல, ஏழை செல்லு அம்பல ஏருமா? அதனால செம்பருத்திக்கு வருது! உங்க ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவுமா? உங்க புத்தக அரசியல் வேறல, நிஜ அரசியல் வேற, அன்வார் பின்னால சுத்தர இந்தியக்காரன பார்த்தியா- 08, 24, 36, 3லைனு இப்படி அடுக்கிட்டே போகலாம். அது எப்படி இந்த அசிங்கம் பிடித்த கவோதிக பத்தி ரோட்டுல போரவரவனுக்கு தெரியுது உங்க தலைவருக்கு, தெரியல! அவனுங்க பத்தி நீண்ட பட்டியல் உண்டு- ஒரு நாய் பூச்சோங் மு…. பேராம். அட, அது மேல 18 போலிஸ் ரிப்போட்டாம் – டிச்சர படுக்க கூப்புட்டானம், தமிழ்பள்ளில காசு அடிச்சானாம், ஏ.சி.ஏ பிடிச்சும் ஒன்னும் ஆகல, உங்க கட்சி உச்சமன்ற தோர்தலில அந்த பொண்ணு தொகுதியில அந்த கலுசடைக்கு போட்ட ஒட்டு எவ்வளவு தெரியுமா 367, அந்த பொண்ணுக்கு கிடைச்சது 383 ஓட்டு, அவா, அதே பதவிக்கு புதிய காப்பார் எம்.பி க்கு போட்டது 38 ஓட்டு, ஒரு அடியாள கட்டிலும் எம். பி கேவலமா? தேசிய நிலையில் அதிக ஓட்டு வாங்கிய ஒன்னாவது வந்தவர் லத்தீப்பா கோயா, அவாலுக்கு 9 ஓட்டு மட்டுமே, உங்களை போல ஒரு ப்ரோ பாலாவுக்கு 12 ஓட்டு. நேத்து நீ கேட்ட அரசி, சீனினு புலம்ப கூடாது, தகுதி இருந்தா, அவனவன் பதவி ஏறனும், இனத்த காட்டியில்லனு. இப்ப எப்படி? இதான் திறமையா? அடியாளை வளர்க்கிறவன் தலைவனா? சரி இதைபார்ல- லம்பா பந்தாயில அந்த பொண்ணுக்கு ஒடி-ஓடி ஓட்டு தேடின ஒரு இளைஞர் பகுதி இந்தியகாரன் பதவியை விட்டு விலகிட்டான், ஏன் கட்சி தேர்தலுக்கு அவனுக்கு வாக்குகொடுத்த அரசி, சீனி வந்து சேரலனு தானே! சாரு, சொல்லுலா அரசிக்கும், சீனிக்கும் ஒட்டுப்போடற கூட்டத்தை யாரு வளர்க்கிற? இந்த மாதிரி நிறைய கசுமாலங்க தலைவ-தலைவியை சுத்தி இருந்த, அவங்க எப்படிப் பட்டவள இருப்பா? கட்சில சேத்து வைச்சிக்கிற கூட்டம் அரசிக்கும், சீனிக்கும் ஒட்டுப்போடறது, அங்க கட்சி, கொள்கை, நீதி-சமுதாயம் எல்லாம் எடுபடாது கண்ணா! புதுசா வந்த வாத்தியாரா? விளங்குதா? சொல்லுங்கன்ன- சொல்லுங்க. திறமையான இந்திய்காரனுக்கு காய் அடிக்கிறது உங்க தலைவரும் அவரு மகளுந்தான? திருந்திக்க சொல்லுங்க- நாங்க காய் அடிக்க ரொம்ப நாளாகாது.
சுறா, என்னால உங்கள் வாதத்தை எதுக்க முடியல ! நீங்கள் நல்ல படிச்சி , நல்ல வேலைக்கு போகலாமே ! ஏன் இந்த அரசியல் ? அதுவும் மு …… இருக்கிற ஒரு தொகுதியிலே ! அவனுக்கும் இவனுக்கும் தலை வணங்கி, அடி பணிஞ்சி, ஜால்ரா போட்டு ! மு …. அப்படி பண்றான் ….. இப்படி பண்றான் …. இதெல்லாம் தேவையா ? கௌரவமா வாழ நீங்கள் தான் கத்துக்குனும்! அரசியல் உங்கள் உரிமை, சுதந்திரம் உங்கள் தாகம் ! நான் மறுக்க வில்லை ! ஆனால் அதை கட்சியின் பதவிக்கு விர்கீறேர்கலே, அதுதான் என்னால் எற்று கொள்ள முடியவில்லை! உதய குமார் அவர்கள் , எந்த கட்சியில்லாவது எதாவது ஒரு சீட்டு கேட்டு பிச்சை எடுக்கிறார ? அவர், என் தலைவன் ! அவருக்கு நான் யார் என்றே தெரியாது ! ஆனால் அவர் தான் என் தலைவன் ! மரியாதை அவருக்கு எப்படி கிடைக்குது! நீங்கள் எப்படி அதே மரியாதையை கேட்டு பிழைகிர்கள்? நீங்கள் சொல்லும் பழங்காலத்து அரசியல் எப்பொழுதோ முடிந்து விட்டது (ஒருவர் ஒரு கட்சியில் சேவை செய்கிறேன் என்று காலத்தை கழித்து, பின்னாளில் அரசியல் வாதி அந்தஸ்தை பெறுவது – ம இ கா வில் நடப்பது போன்று) இப்பொழுது தியாக உள்ளமும், நேர்மையும், அரிசியல் ஆதாயமும் தேடாத தலைவனை மட்டும் தான் மக்கள் தேடும் காலம் . சும்மா ஒரு கட்சியில்ல ஜால்ரா போட்டு , எல்லா சுகத்தையும் பெரலாம்னு , மு …. வை போல செயல் பட கூடாது ! அப்படி நினைபவர்கள் தான், இன்னமும் PKR ரில் “எனக்கு நடந்தது துரோகம் என்று புலம்பி கொண்டிருக்கிர்கள்!” கூடி சிக்கிரம் மு … புலம்புவார் ! அல்-கோர் அவர்கள் ஜார்க் புஷ் ஷிடம் தோற்ற பின், கௌரவமாக, தனது பேராசிரியர் தொழிலை பார்க்க சென்று விட்டார் ! அப்படி , தோற்றவர்கள், விலகி கொள்ளவேண்டும் ! எதிரியை விழ்துவதை விட்டு விட்டு , ஒருவன் எதிரியின் துரோகத்தை சொல்லி , அவன் மட்டுமே மேலே வர ஆசை பட்டால், நாளைக்கு எதிரின் நிலைமை தான் அவனுக்கும் ! நாம், இந்தியர்கள், 2008 லில் , HINDRAF நின் கொள்கையின் படி அரசியல் செய்கிறோமா என்று ஒவ்வொரு இந்திய குடிமகனும் கேட்டுக்கொள்ள வேண்டிய தருணம் இது ! அப்பொழுது தெரியும் , நம் சுதந்திர தாகம் எந்த திசையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று ! 1943- 1946 ஆம் ஆண்டுகள், இந்திய தொட்ட தொழிலாளிகள் வேலையில்லாமல் திண்டாடிய காலம். வீர சேனன் , கணபதி என்ற இருவர்கள், அன்றே ஒரு லட்சம் மக்களை திரட்டி , தொட்ட தொழிலாளிகளின் நிலைமைகளை அரசாங்கத்திற்கு சுட்டி காட்டினர் என்று கேள்வி பட்டேன் ! அதில் ஒருவர் , கோவாவில் துக்கில் இட பட்டர் என்று கேள்வி பட்டதும் , என் மனம் வலித்தது, எனக்குள் அரசியல் துளிர் விட்டது ! இன்னும் ஒருவரின் நிலைமை சரியாக தெரியவில்லை ! ஆகையால் , நீங்கள் கூரும் அரசியல் எல்லாம் சுய லாபத்தை தேடி ! மக்கள் நலனுக்காக அல்ல !
திலீப் -நீங்க அரசியல் லெச்சருனா, செத்தான்ல மாணவா! ஐயோ! ஐயோக் ! கட்சி நடவடிக்கை சரி இல்லைனு சென்ன, கட்சியவுட்டு வெறியேரு, ROS கிட்ட கொம்லேன் பன்னுணு சொல்லுற.- அப்படினா,நாட்டு நடப்புல திருப்தி இல்லேன நாட்டிலிருந்து கிளம்புனு அம்னோகாரன் செல்லுரத சரினு சொல்லுறய? அப்படினா பி.கே.ஆர், டிஏபிகாரன் உதயா எல்லாம் நாட்டிலிருந்து இருந்து வெளியேறிடுனுமா?. பொங் மொக்தாருக்கும் உனக்கும் என்னால வித்தியாசம். ஆரம்ப முதல் என்னோட குற்றச்சாட்டை படிலா, நீத்தான் எனக்கு விளக்கிறேனு சென்ன, நீ குடுக்கிற பதிலெ சரியில்லையே. அரிசி, சீனி கலாசாரத்தை வளர்க்கறத, அடியாள் வளக்கிறத, தகுதியான இந்தியாக்காரனை கழுத்தருக்கிற, ஆதாரத்தை சொன்னேன். நீ என்னால, பூச்சோங் மெம்பரா, பதவியா, சீட்டா, வேறு வேலையபாரு கௌரவமென்னு கேக்கிற? கட்சியில நடக்கிறது அநீதினு என்றாவது ஒத்துக்கிரியா? அதை ஏன் எனக்கு நடந்ததா நினைக்கிற? அது இந்தியாகாரனுக்கு நடந்ததா நினை! ஆனா நீ படிச்சவா, நீயும் இந்தியன்? நீ கண்டிப்பா தமிழனாக இருக்கனும், ஏன்னா அவா மட்டுந்தான் சொந்த இனத்தானுக்கு துன்பம், கொடுமை எது நடந்தாலும் வேடிக்கை பார்த்துகிட்டு, அநீதியையும் நியப்படுத்தி பேசமுடியும். ஜெர்மனி- பிஸ்மார்க், ஹிட்லெர், இலங்கை-பிரபாகரன், இந்தியா சந்திர போஸ் இவலெல்லாம் தன் இனத்துக்காக நாட்டுக்காக அன்றைய உலகத்தை எதிர்த்தவா. ஆனா தோத்துட்டா! அதுனால, அவா பாவியாயிட்டா! இன்னொறு வேடிக்கையை கவனி, பூச்சோங் மொல்லமாறி தொகுதி தேர்தல தோத்துட்டானு, அவனுக்காக மறுதேர்தலை நடத்தன கட்சிலா PKR! ஆன எதிரணி இன்னும் அதிக வோட்டு வாங்கி மறுபடியும் ஜெவிச்சி காட்டிச்சி, ஆன அங்கியும், அன்வாரு, அமேரிக்காகாரன் மாதிரி, ஜெவிக்கும் அணியை தன் பக்கம் இழுக்க கடிவளையம் வைச்சான் ஒழுங்கு நடவடிகைக்காக கட்சியிலேயிருந்து ஒதுக்கப்பட்டவனை தலைவனாக்கிட்டான். அன்னே திலீப்பு, நீ இதைகூட நியாம்னு செல்லுவ! வெள்ளையன் கணபதியை காட்டிக்கொடுத்தவன தோட்ட தொழிலாளிக்கு அண்ணா ஆக்கினா, அந்த வம்ச தமிழனா? பாவபட்ட இனம்ல தமிழன் – நீ படிச்சவா! மாற்றம் என்ற மஞ்ச துணியை போத்தி PKRல தமிழனை கழுத்து அறுக்கும் பாவத்துக்கு தொன போவாதலா அண்ன! நீ சொல்லுற மாரி இல்லலா, நானும் PKR மெம்பரில்லே, தமிழனுக்கு எழுதற வேலை வெட்டியில்லாத பயலா நான். கோச்சிக்காதல்லா அண்ண திலீப் !
சுறா, இப்ப புரியுதா ? பல இன மக்களை கொண்ட ஒரு கட்சியில, ஒரு இன அடிப்படையில் , அரசியல் செய்ய முடியாதுன்னு ! அன்றைக்கு, உதய குமார் பின்னாடியே உறுதியாய் நின்றிருந்தால், இந்த மாதிரி பொலம்பி தள்ளர வேலையெல்லாம் இருந்திருக்குமா ? சுறா நீங்கள் மட்டும் இல்ல , உதய குமார் சொந்த தம்பி வேத மூர்த்தியும் , இதே தப்பை தான் செய்திர்கள் ! ஆகையால், தலைவன் இல்லாத தலைமைத்துவம் ; தலைமைத்துவம் இல்லாத தலைவனும் ; குருடனுக்கு குருடன் வழி காட்டியது போன்று ! இனிமேலாவது , உதய குமார் தலைமையில் ,புதிய-HINDRAF வின் கீழ் நின்று , சேவை செய்ய முயற்சி செய்யுங்கள் ! இல்லையென்றால் காலத்துக்கும் உங்களின் கருத்துக்கு செவி சாய்க்காத தலைமை தலைமைத்துவத்திடம் (ஆனால் மக்கள் அதரவு தரும் ஒரு பல இன அடிப்படை கட்சியில்) புலம்பி தள்ள வேண்டியதுதான் ! இப்பொழுது புரிந்திருக்க வேண்டும் ஏன் BN கட்சிகள் தங்கள் மதத்தினரிடம் மட்டுமே தனி தனியாக அரசியல் செய்ய விரும்பிகின்றனர் என்று ! இனிமேலாவது, சிந்தியுங்கள் ! அரசியலில் ஒவ்வொரு மனிதன் நினைப்பதும் நடந்து கொண்டே இருக்காது என்று !
அண்ன, திலீப்பு, என்னால விளக்கம் சொல்ல வந்துட்டு, நீங்க கப்பால பூசிங் மாறி எழுதுறீங்க!!! விளக்கம்னு சொல்லிவிட்டு, வழுக்கி விழுந்த காதையா இருக்கு. அட அந்த பொண்ணு உங்களுக்கு நெருக்கம்னா, இந்தியாக்காரன் பிரச்சனையா எடுத்துசொல்லுகன, நீங்க என்னல சேம் சைட் கோல் போடுறீங்க!
என்னால சொல்றீங்க , நீங்க உதயா பக்கம் நில்லுனுறீங்க, உதாயாவே பக்காத்தான் பக்கம் நிக்க போவதா சிறையில இரண்டு வருசமா யோசித்து முடிவு எடுத்துட்டதா! ஏன்ல மக்களை கொலப்பூரீங்க.
நுருலின் தைரியத்தை பாராட்டுகிறேன். தொடர்ந்து அவரின் கருத்துக்களை பிரசுரிக்க கேட்டுக்கொள்கிறேன்.
என்னைத்தை சொன்னாலும் புரிந்தும் புரியாது போல் நடிக்கரிங்கே சுறா நீங்கள் ! காரணம் உங்களுக்கு, நீங்கள் எதிர்பாக்கிற மாதிரி நான் பதில் தரணும்னு நீங்க நினைக்கிறிங்க ! பாவம், இப்படி தான் PKR தலைமையிடம் குழப்பி இருக்க வேண்டும், நீங்களும் உங்கள் சகாக்களும் ! அரசியலில் உங்கள் வளர்ச்சியை மட்டும் யோசிக்கிறிங்க. அதனால தான் எந்த பதில் கொடுத்தாலும் உங்களுக்கு சாதகமான பதிலை எதிர்பார்த்து, எல்லா பதிலையும், ஒரு கட்சியின் தேர்தல் முடிவையும் குறை சொல்லரிங்க ! ஒரு வேலை , உங்களுக்கு துணை தலைவர் பதவி கொடுத்திருந்தா, PKR இந்திய மக்களுக்கு ஒன்னும் செய்யலனாலும் , PKR தான் சிறந்தவர்கள் என்பீர்கள் ! நீங்கள் எல்லாம், சுய லாபத்தை தேடி அலைபவர்கள் ! எத்தனை எத்தனை விளக்கம் கொடுத்தாலும் உங்கள் லாபமே உங்களின் குறிகோல்! மக்களுக்கு நல்லது நடந்தாலும், உங்களையன்றி எது நடந்தாலும், நீங்கள்: “ஏற்று கொள்ள மாட்டேன்” என்பீர்கள். காரணம் , உங்களின் பதவி ஆசை ! சுய லாப இன்பம் ! குழம்பிய குட்டையில், நீங்கள் மட்டும் மீன் பிடிக்க வேண்டும் ! மக்களுக்கு நல்லது நடந்தாலும், நடக்க விட்டாலும் , உங்களுக்கு லாபம் வேண்டும் ! ஏன் நீங்களும் உங்கள் சகாக்களும் இப்படி எடுத்துக்கொள்ள கூடாது : “நாங்கள், எங்களுக்கு PKR கட்சியில் எட்பட்ட நஷ்டத்தை என்று கொள்கிறேன், மக்கள் நலனுக்காக என்று குற மாட்டேன் என்கிறிர்கள் ?” ஏன் விட்டு கொடுத்து செல்ல மாட்டேன் என்கிர்கள் ?… ஆசை யாரை விட்டது ! ……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….உதய குமார் அவர்கள் குறுவது யாதெனில் : “PKR ருக்கு support பண்ணுங்க, ஆனா ஒரு இந்திய தலைமை துவத்தின் கீழ் ! அதாவது, HINDRAF அல்லது ஒரு புதிய கட்சி HINDRAF MAKKAL SHAKTHI என்ற ஒரு கட்சியாக நாம் அனைவரும் இணைந்து, அங்கிகரிக்க பட்டு, இந்திய தலைவர்கள் தேர்ந்தேட்டுக்க பட்டு, பின் PKR ஆறில் நமது ஒத்துமையை காண்பித்து, பிறகு ஆதரவு தெரிவிப்பது ! ” கண்முடித்தனமாக சப்போர்ட் பண்ணி, இது வரைக்கும் என்னத்தை சாதிசிங்க? (அங்கே PKR ரில் இப்பொழுது இருக்கிற இந்தியர்களுக்கு வேற வழியில்ல, காரணம் BN நமக்கு எதுவும் செய்யாது, அப்படியே செய்தாலும், ம இ கா எல்லவற்றையும் அப்பேஸ் செய்து கொள்ளும், என்கிற விரக்த்தி” இப்பொழுது இருக்கிற அரசியல் நிலவரத்தில், சுயமாக லாபம் தேடிக்கலாம்னு நினைச்சா அது முடியாது! உங்களை போன்ற, குட்டி PKR தலைவர்களுக்கு இது ஒரு பாடம் ! வாழ்க ஜனாயகம் ! HINDRAF கொண்டு வந்த 2008 புரட்சியின் சூட்டில், ஹிந்ட்ரப் பை மறந்து PKR ரில் ஒட்டி கொண்டு, அவர் அவர் தனி லாபத்தை மட்டும் சிந்திதீர்கள் ! இப்பொழுது, அங்கே அங்கிகாரம் இல்லை என்றதும், குழப்பம் விளைவிக்க முயற்சி செய்கிறீர்கல். ஆகையால், மீண்டும் HINDRAF பில் இணைந்து, ஒரு பொது தேர்தல் நடத்தி, எல்லா பதவிகளுக்கும் நமது, இந்திய தலைவர்களை தேர்ந்தெடுத்து, அப்புறம் PKR ரிடம் பேசுவோம் ! அதைவிடுத்து, நேரடியாக PKR ரிடம் ஒட்டி கொண்டு, அரசியல் செய்ய முடியாமல் செய்து, தோற்று, கேவலபட்டு நிக்காதிர்கள் ! ஆனால் இப்பொழுதும் சொல்கிறேன், நமது ஆதரவு PKR க்கு மட்டும் தான். இருப்பினும், PKR இந்திய குட்டி தலைவர்கள் ஒன்றிணையாவிட்டால், காலத்தால் மறக்க படுவீர்கள் ! எல்லா இந்திய தலைவர்களும் (PKR , DAP , PAS , NGO , Self -opened party) , எல்லோரும், ஒன்று கூடி, பேசுங்கள் ! HINDRAF MAKKAL SHAKTHI என்ற கட்சியை ஆரம்பியுங்கள், தேர்தல் நடத்துங்கள், தலைவரை தேர்தெடுத்து, பிறகு நாம் pakataan rakyat துடன் ஒரே கட்சியாக பேசுவோம்! நமக்கு போதிய அனுபவம் இப்பொழுது இருக்கிறது தோழர்களே !
அன்னே திலிப்பு நீங்க சரியான கப்பள பூசிங்ல, ஐயோக், ஐயோ! விரிவுரையாளர்னு சொல்லிக்கிட்டு, என்ன விளக்கம் சொல்லறல நீ? முன்னுக்கு பின் பூசிங் பன்றல .2\10 மலாய்கார் உரிமை மீது அன்வார் உதய குமாரோட ஒத்து போகவில்லை. {இது நீ சொன்னது } அந்த பொண்ணு என்ன சொன்னிச்சி எல்லாத்துக்கும் எல்லாம், ஒர் இன ஆச்சியில்லை. விளங்குதா- மேலுக்கும் –கீழுக்கும் வித்தியாசம்.! இதைத்தான் நான் வெளிவேசனு சொன்னேன், 29\9- ஏன் கண்ணுக்கு தெரிஞ்சு கசுமாலங்கள கைகுள்ள வைச்சிகுன்னு இந்தியாக்காரனுக்கு ஆப்பு வைக்காதா! (நான் எழுதனது). தோட்டப்பாட்டாளி அண்ணவை கையில வைச்சிகுன்னு, வெள்ளைக்காரன் கணபதிக்கு ஆப்பு அடிச்ச வேலை செய்யவேனானு, சொன்னேன். நீ விளக்கம் சொலுறேனு உள்ளே பூந்து, பிடிக்கலனா வெளியே போங்கடானு செல்லுர, படிக்காத, பட்டம் வாங்காத நாங்க எவனுக்கும் போட்டி.யுமில்லே, பதவிக்கு வரிஞ்சு கட்டவுமில்ல. அது எல்லாம் உன்ன போல ஆளுங்க செய்யறது. கலுசடைகல வைச்சு நல்லவங்களுக்கு ஆப்பு அடிக்கிறதுக்கு துணை போனா, ‘’எட்டபனுக்கு சமம் அதுதான் நாங்க படிச்ச ஆத்திசூடி.
ஒரு கட்சியிலே கோலாறுனா, அது கட்சி தவறு இல்லல, அங்கு உள்ள தலைவன் சரியில்ல, அவன திருத்த பாரு, இல்ல தூக்கி வீசு, இதுத்தான் நாங்க படிச்ச ஆத்திசூடி.. அவன்கூடயே இருந்து ஜல்ரா அடிச்சே கட்சியோட அவனையும் புதைக்கிறது இல்லள. உன்னப்போல யோசிச்ச ஏமாளி பயலுங்களாலத்தான், முச்சந்தியில நிற்கிறான் இந்தியாக்காரன். 1940ல, இந்த நாட்டு பணம் செட்டியார் கையில, ஒலைப்பு இந்திக்காரன் கையில, அரசாங்க உத்தியோகம் யால்பானத்தான் கிட்ட, நாட்டு வளம் 60% ரப்பர் தோட்டம், அன்று தோட்டக்காட்டு பயல் தமிழன், என்ன இல்ல, எல்லாம் இருந்துச்சி, இங்கு படைய திரட்டி இந்தியாவை புடிக்க கிளம்பிட்டான், ஏன் இது நாடு இல்ல, இங்க என்ன இல்ல, ஏன் இன்னோறு நாட்டுக்காக சாவனும், ஏமாளி இந்தியக்காரன். நீ சொன்னிய இஸ்டம் இல்லன வெளியே போ, அந்த கொள்கை. ஏன் இந்த நாட்டை பிடிக்கிறது? அதுக்காக இங்க சாவுறது? அதையே மீண்டும் செய்யனுமா? பக்காத்தான தூக்கி ஆட்சில உக்காற வைச்சிட்டு ஓடி உதயகுமார் பின்னால ஒளியறது முட்டாள் தனம்.பி.கே.ஆர்ல ஜால்ராவையும், கசுமாலத்தையும் கூட்டித்தள்ளிவிட்டு, அங்க மட்டுமில்ல நாட்டுலேயும் இந்தியக்காரனுக்கு நல்ல இடத்தை வாங்கற வழிய பாருங்கலா! படிச்ச முட்டாபசங்களானு நாளைக்கு உங்கல திட்டப்போறங்களா, இந்த படிக்காதா முட்டாளு சொல்லுறேன். கசுமாலங்களை ஒழிக்க, கசுமாலத்துடன் வாழும் தலைவனை சுத்தப்படுத்த (கண்டிக்க) வழிக்கேட்ட கட்சியை விட்டு ஒட வழிசொல்லும் விரிவு………….. ஐயோக், ஐயோ!
திலிப்,நல்லயோசனை,ஆனால் ஏத்துக்காது இந்திய பி.கே.ஆர்,ஏஜன்ட்கள்.நாமும் பல முறை சொன்னோம்,நாம் ஹிந்து மக்கள் சீனர் போல் கட்சியில் சேராது,சங்கம் அமைத்து அதன் கீழ் செயல்படுவது என்று.இன்று சீன கட்சி டி.ஏ.பி,எம்.சி.ஏ,கெராக்கான் போன்ற கட்சிகள் சீன சங்கத்தை கண்டு நடுங்கிகின்றன.டி.ஏ.பி,பாஸ் கூட்டனியை எதிர்த்து,டிபாசிட்டை டி.ஏ.பி,இழந்ததை மறந்திறுக்காது மலேசயா.போராட்டம் என்பது ஒற்றுமை என்பதை மறந்து வழித்தவரி அட்டூழியம்,அராஜகம் நோக்கி செல்வதை தவிர்கவும்.ஒழுக்கமான சமுகமே புகழ் பெறும் சமுகம்.முயற்சி செய்யுங்கள் அதாவது தொடர்ந்து இதையே எழுதி வாருங்கள்,பல முறை படித்தால் ஒருமுறையாவது சிந்திக்க மாட்டணரா,வாழ்க நாராயண நாமம்.
தமிழா உன் உயர்வுக்கு குரல் கொடுக்கவும் அச்சமா?
துன்பத்தைக்கண்டு ஓடுவதும் ஒளிவதும் தீர்வல்லவே! தமிழா!
இண்ராப் வழி நீ ஏற்றிய தீபமட பக்காத்தான் ஆட்சி !
அதன் சுடரில் குளிர் காயக்கூட இடமில்லையா உனக்கு?
ஏமாற்று உலகம் உனக்களிக்க முன்வருவது தனிமனிதச் சுகப்போகமா?
நாம் கேட்பது, ஏற்றம் என்ற இனத்துக்கான உன்னத மாற்றமடா தமிழா!
ஏமாறாதே, எதிர்த்து நில் தோழா! இனத்தை விழித்தெழ செய்!
அன்று சுதந்திரத்திலே உன் பங்கை கோட்டை விட்டாய்!
நீ இன்னுமா உணரவில்லை அதன் பாதிப்பின் தாக்கத்தை ?
பக்காத்தான் ஆட்சியிலும் உன் பங்கை நீ இழக்க வேண்டுமா தமிழா?
என்று பெறுவாய் மாற்றத்தை, உனதருமையினத்தின் ஏற்றத்தை?
சுறா சார், உங்கள் தமிழ் சிறிது சந்தை தமிழாக இருந்தாலும், கருத்தில் ஆழமுண்டு. 50 விழுக்காட்டுக்கு மேல் இந்தியர்கள் பி.கே.ஆரில் உறுப்பினர்கள் என்றால் நாம் ஏன் ஓட வேண்டும். 1940ல் இருக்கும் நாட்டுக்கு சுதந்திரத்திற்காக போராடுவதை விடுத்து தொழிற்சங்கம் அமைக்க போராடினார்கள் திரு. கணபதி, சந்திர மோகன் போன்றவர்கள் காரணம் அன்று அவர்களுக்கு தேவைப்பட்டது தொழிலாளர்களுக்கு அதிக சலுகைகள். உண்மைதான் சுறா, நாம் நமது பலத்தை அறியவில்லை, நாட்டை கோட்டை விட்டுவிட்டோம். மூன்று கட்சிகளின் கூட்டணி, மந்திரி புசார் விவகாரத்திலேயே ஒத்துப்போக முடியவில்லையே? குறிப்பாக பாஸ் பி.கே. ஆரைக்காட்டிலும் அதிக மலாய்க்காரர்களை கொண்டிருந்தாலும், அதனை ஒதுக்கித்தள்ளும் நிலைக்கு டி.ஏபி யும் பி.கே..ஆரும் சென்று விட்டன. ஆக இந்தியர்களின் தனிக்கட்சியை ஏதுவது ஒரு பிரச்சனைக்கு ஒதுக்கித்தள்ள முடியாதா? ஆக உள்ளேயிருந்து குடைச்சல் தருவதுதான் சால சிறந்தது. நாம் நமது உரிமையை கேட்கிறோம். ஏதும் கீழருப்பு செய்யவில்லை. விடுதலைப்புலிகளை இந்தியா, இலங்கை இரண்டு நாடுகளும் வீழ்த்தமுடியவில்லை. ஆனால் கருணாவின் துணையுடன் அழித்தே விட்டுவிட்டனர். உள்ளே இருந்து வேலை செய்வது எவ்வளவு ஆக்ககரமானது. வாழ்க உங்கள் போராட்டம்.
நான் ஏற்கனவே (மேலே) சொன்னதுதான். பார்த்தீங்களா.. ‘இவன்’ இதுக்கு (எதுக்கும்) ஒத்து வரவே மாட்டான்….தமிழன் எதுக்கும் ஒத்து வர மாட்டான். முன்னே போனா பினானாலே இழுப்பான். பின்னாலே வந்தா…பாதைய மறைச்சு நிப்பான். யாரோ சில பேர் விஷயம் தெரிஞ்சவங்க அனுபவப் பட்டவங்க சொல்றாங்களே கொஞ்சம் காது கொடுத்து கேட்போம்? ஊஹும். மாட்டவே மாட்டான்.இவனையெல்லாம் ************************ அடிக்கோணும். அப்பக்கூட ஏடாக்கூடமா ஏதாவது பேத்துவானே தவிர திருந்தவே மாட்டான்..சும்மாவா சொன்னான் முண்டாசு கிழவன்…’தமிழன் என்றோர் இனமுண்டு. தனியே அவர்க்கோர் குணமுண்டு’. தமிழனைச் சொல்லிக் குற்றம் இல்லை. 57 வருடமாக கூனிக்குறுகி அடிவருடியாகவே இருந்து பழகினவனை ஒரேயடியா திருத்தப் பார்க்கறது…உண்மையிலேயே ரொம்ப சிரமம் தான். அப்படி அவனைத் திருத்திட்டா (!) அவனைப் போல நல்லவன் யாரும் இல்லே. ஆனா திருத்தறது யார்? அப்படி யாராவது இவனைத் திருத்திட்டா அடுத்த நோபல் பரிசு அவனுக்குத்தான்.
நண்பர்களே (சுறா, சாந்தியையும் சேர்த்துதான்), ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே, நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே ! என்ற கண்ணதாசனின் பாடல்கள்தான் நினைவுக்கு வருகிறது ! என்ன என்ன பொருள் பொதிந்த பாடல் ! அட அட !! முதலில் ஒரு உண்மையை நாம் ஏற்று கொள்ள வேண்டும் ! ஒவ்வொருவரும் ஒரு கருத்து வைத்துள்ளோம் ! பிறகு , ஒரு சங்கத்தில் அல்லது அமைப்பில் அதிகமான கருத்துக்கு தான் முக்கிய துவம் கொடுக்க வேண்டும் என்று உறுதி கொள்ள வேண்டும் ! உதர்ணதிர்க்கு 2/3 பெரும்பான்மையில் தான் சட்டம் இயற்ற பட வேண்டும் என்பது பர்லிமேன் நடைமுறை! இதை பின் பற்றினாலெ 70% பிரச்சனையை களைந்து , ஒற்றுமையை வளர்த்து விடலாம் ! ஆனால், 100 விழுக்காட்டு மக்களும் சம அளவு அறிவும், தெளிவும் கொண்டவர்களாக இருக்க வேண்டும் ! இது சற்று பிரச்னை உண்டு பண்ணும் கணிதம்! வெவ்வேறு அளவு அறிவு கொண்டவர்கள், ஒருநிலையான முடிவெடுக்க அவர்கள் தங்களின் பாரம்பரியம், நடப்பு நிலவரம், ஒரு தலைமை யின் வழிகாட்டல் தேவைபடுகிறது ! அதற்க்கு தியாக உள்ளம், தன்னலமற்ற சேவை, திறந்த தொலை நோக்கு, உண்மையை மட்டும் நம்பும் தலைவன் தேவை ! இபொழுது கவனிதீர்கள ? தலைவன் தேவை என்று வந்து விட்டது ! அதற்க்கு வேண்டிய குணாதிசியங்கள் யாரிடம் இருக்கிறதோ, உதய குமார் போன்று, அவரையே தலைவராக தேர்ந்தெடுத்து , பின் செல்வதே ஒவொருவரின் கடமை ! வெற்றி தோல்வியை பற்றி தலைவர்கள் கவலைப்பட்டு கொள்ளட்டும் ! என வேலையை நான் ஒழுங்காக செய்கிறேனா என்று ஒவ்வொருத்தரும் பார்த்தாலே போதும் ! சுட்சமும் புரிகிறதா ?
திலீப் வீண் புலம்பல் வேண்டாம் – சுறாவின் கருத்து கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றே! பி.கே.ஆர் கட்சியில் 50 விழுக்காட்டுக்கு அதிகம் இந்திய உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் ஏன் வெளியேற வேண்டும்? சிறுபான்மைக்கு பயந்து பெரும்பான்மை ஓடுவதா? பேடிகளின் செயலல்லவா? உங்கள் இருவரின் வாதங்களை கவனித்தேன், சுறாவின் குற்றச்சாட்டு நேரடியானது, கட்சி தலைமைத்துவம் மனது வைத்தால் அதற்கான தீர்வும் எளிதே. பல இன நாட்டில், பல இன கட்சியில் உண்மையாக எல்லா இனத்துக்கும் பயனான கொள்கைகளை வகுக்க வேண்டும். அதற்கு பி.கே.ஆர், டிஏபி மற்றும் பாஸ் இந்திய உறுப்பினர்கள் மலாய்க்கார உறுப்பினர்களிடம் சாதுரியமாக எடுத்து சொல்லி நமது உணர்வு, உரிமையை உணர்த்த வேண்டும். மேலும் கட்சியில் நமக்குள்ள ஓட்டு உரிமையையும் வைத்து முக்கிய தலைவர்களின் கவனத்தை நம் பக்கம் இழுப்பதுதான் அரசியல் வித்தை. அதை விடுத்து தனியாக ஒரு அழுத்தம் தரும் பிரிவினரை தோற்றுவித்து இரண்டு பிரிவும் கயிறு இழுப்பது வெற்றிக்கான சாத்தியத்தை தராது. இது போட்டி குழுக்களையே தோற்றுவித்துள்ளது. உதாரணமாக இண்ராப்பிற்கு பின் தோன்றிய பெர்காசா, இஸ்மா என்ன செய்கின்றன? அதே போல்,, கெரக்கானுடன் இணைந்து சீன கல்வி மற்றும் பள்ளிகளின் அமைப்பு 1982 ம் சில கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன் வைத்தன, அந்த கூட்டு 1982 தேர்தலில் டிஏ.பியை படுந்தோல்வி அடைய செய்தது. ஆனால் அதன் கோரிக்கைகள் வெற்றிப் பெறவில்லையே ! அதன் பின் 1999ம் ஆண்டு தேர்தலில் துன் மகாதீரிடமும் உறவாடி பார்த்தது, அதே போன்று நஜீப்பிடம் 2013ம் ஆண்டு தேர்தலில் வேதமூர்த்தி அழுத்தமான கோரிக்கைகளை வைத்தார், தேர்தல் முடிந்தவுடன் பிரதமரும் வேதாவை கைகழுவி விட்டார். ஆனால் ஒரு கட்சிக்குள் இருந்து கொண்டு உறுப்பினர்களை கை கழுவுவது கடினம். பி.கே.ஆர் தேர்தல் குறித்து சுறா வைத்துள்ள குற்றச்சாட்டுகளையும் கவனிக்க வேண்டும். அரிசி, சீனிக்கு ஓட்டுப் போடுபவர்கள் நம்மவர்களாக இருந்தால் அவர்களை மாற்ற வேண்டும். அதற்கு படித்த இளம் தலைமுறையினரை கட்சியில் அதிகம் இணைக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான அரசியல் கல்வியை புகுத்த வேண்டும். ஒரு பட்டதாரியான உங்கள் கருத்தை விட சுறாவின் வாதம் மேலோங்கி இருப்பதை காண்கிறேன். இங்கு யாருக்கு வெற்றி என்ற போட்டி அவசியமில்லை, இச்சமுதாயத்தின் மீட்சிக்கு ஏது விரைவான சிறந்த மார்க்கம் என்பதே முக்கியம். ஒரு மனிதரின் சமுதாய பிடிப்பினை, தன் இனத்தை சார்ந்தவர்களும் ஒரு கட்சியின் தலைமைத்துவத்துவத்தில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பை எப்படி தவறென்பது? பலயின தலைமைத்துவ அடையாளத்தை ஒரு இயக்கம் கொண்டிருந்தால் அந்த இயக்கத்திற்கு நன்மைத்தானே, அது பலந்தானே! பல இன மக்களைக் கொண்ட இந்நாட்டில் அனைத்து மக்களிடமும் அந்த அரசியல் இயக்கத்தை வலிமைப் படுத்தும் ஒரு செயல் தானே!. அந்த கருத்தை சிறுமைப் படுத்தி ஒருவர் தனக்கு பதவி வேண்டி எழுதுகிறார் என்று ஒருவரை சிறுமை படுத்தி மீண்டும்- மீண்டும் எழுதுவது, எழுதுபவரின் வாதம் பலவீனமான இருப்பதையே காட்டுகிறது. கலகத்தில் பிறப்பதுதான் நீதி, சகோதரர் திலிப் மற்றும் சுறாவின் வாதம் ஆக்ககரமாக இருந்தது. அவர்கள் தொடர்ந்து எழுத வேண்டும்.
சுடர் அவர்களே, நீங்கள், மக்கள் எப்பொழுதும் ஒரே மாதரி இருப்பார்கள் என்று நினைத்து பேசுகிறிர்கள் என்று நான் நினைக்கிறன், தவறாக இருப்பின் மனிக்கவும்! மக்களும், அவர்களின் காலத்திற்கு ஏற்ப அவர்களின் கருத்து நிலைகளை மாற்றி கொள்கிறார்கள் ! நான் கூரும் காலம் யாதெனில் , அவை ஒருவரின் வாழ்வியல் ஏற்ற தாழ்வுகள் ! 2000 ஆண்டு வரை 95% இந்திய மக்கள் பாரிசான் கட்சியை தான் ஆதரித்தார்கள் ! பிறகு பொருளாதார எற்ற தாழ்வுகளால், அவதியுற்ற நிலையில் தான் , HINDRAF பின் தாக்கம் இருந்தது ! அது , பாரிசான் கட்சியின் மேல் வெறுப்பை தூண்டி விட்டு , pakataan rakyaat மீது ஆதரவை ஏற்றியது! HINDRAF பின் தாக்கம் உண்ணையில் விளைந்தது! குளிரில், காப்பியின் இலஞ்சுட்டை போன்று …… இதற்க்கு நல்ல உதாரணம், நம் அனைவரின் மனதில் கைவைத்து கேட்க வேண்டும்! எனக்கு உண்மையிலேயே அன்வாரை பிடிக்குமா ? என்று ! பதில் சொல்ல நான் விரும்ப வில்லை காரணம் நான் எனக்கு உண்மையாய் இருக்கிறேன் ! அந்த உண்மையை என் குலதிற்கு, என் சமுதாயர்த்திர்க்கு எல்லோரும் தாருங்கள் என்பது தான் என் வாதம். ஆனால் சூழ்நிலை என்னை வேறு மாதிரியும் சிந்திக்க வைக்கும் ! எப்படி என்றால் , எதிரிக்கு எதிரி , எனக்கு நண்பன் ! என் எதிரியின் எதிரி மீது நிச்சயமாக எனக்கு காதல் இல்லை. ஆனால் என் வெறுப்பின் சுடர் என் எதிரியின் எதிரியுடன் ஒத்து போகிறது. இப்படியே இன்றைய அரசியல் நடக்கு. ஞான பீட விருது பெற்ற எழுத்தாளர் ப. ஜெயகாந்தன் சொன்னார் “கருத்துக்கள் நம்மை பிரிக்கிறது என்றால், நாம் கருத்துக்கள் இல்லாமல் வாழலாமே !” என்று. காரணம் ஒருவரில் இருந்து இன்னுருவர் வேறுபடுவதே அவர் கொண்ட கருத்தில் இருந்துதான் ! அந்த கருத்துக்கு ஒரு thevai pirakkirathu arasiyalil. அப்படிதான் ஒரு கட்சியில் தலைவரின் கருத்துக்கு ஒத்துபோகும் தொண்டனே அங்கே நிலைக்கிறான் ! மாற்று கருத்து உள்ளவன் பிளவை ஏற்படுத்துகிறான். ம இ கா ! எல்லோருக்கும் தெரிந்த கட்சி ! ஆரம்ப காலங்களில் , பண்டிதன் அவர்கள் விலக்க பட்டு , IPF உதயமான காலம் ! IPF fil இருந்தவர்கள் அதிகமாக சாமீ வேலுவை வேறுதவர்களே ! அப்படிதான் indraiya nilamaiyum ! Sura அவர்கள் kedkum neethi , பல கோணங்களில் ஒன்றோடு ஒன்றாக பின்னபட்டிருக்கிறது ! puchong மு …… கெட்டவரகினும் ஒரு கட்சியில் அரசியல் செய்ய தெரிந்திருக்கிறது ! பல இனங்களுக்கு இடையில் ! சுறா அவர் தம் சகாக்களுக்கு தெரிய வில்லையே ? இது பருவ வயது காதல் அல்ல, ஒருவரை ஒருவர் பிரியாமல் தழுவி கொள்ள, உண்மையாய் ஜீவனுடன் கலந்து இருக்க, கிடைக்க விலை என்றால் தட்கொலை செய்து கொள்ள ! இது அரசியல், இதில் அரசனே கவிழ்வான்! இதில் நீயும் நானும் எப்படி தப்பிக்க ? ஆனால், நம் வெற்றி , நாம் செய்து விட்டு செல்வதில் தான் இருக்கு ! சேர்த்து கொள்வதில் இல்லை ! PKR ரில் அரசியல் செய்ய நினைக்கிறார்களே இந்தியர்கள் தவிர, கோட்டையை எழுப்ப தவறுகிறார்கள்! இந்திய குட்டி தலைவர்களே, இதுவே என் குற்ற சாட்டு !
குற்றம் சுமத பட்டு விட்டது! வாதங்களை யாவரும் வைக்கலாம் !
திலிப் சொல்வது காலதிற்கு எற்றதாக இல்லை. அது மாதிரி பார்த்திருந்தால் இந்தியாவில் ஒரு சிக்ஹியர், அமெரிக்காவில் ஒரு நீக்ரோ அதிபர் மற்றும் பெரத்மர் ஆகா முடியாது. மனதில் ஒன்றை வைத்து கொண்டு அதையெ சுற்றி வருவதே இதற்கு காரணம்
ஆமாம் சார், இன்றைக்கு படிச்சவர் பட்டதாரி என்று சொல்லிக்கொண்டு வருபவர்கள் அதிகம் ஏமாற்றுகிறார்கள். இப்பகுதியில் ஒருவர் பக்காத்தானை தாங்கு-தாங்குனு எழுதிவிட்டு இப்போ தன் தலைவர் உதய என்கிறார்.சுறா அந்த இயக்கத்தில் முக்கிய தலைவர்களின் கோளாறை கூறினார். அதனை நிவார்த்தி செய்ய முடியாவிட்டால் வாயை மூடிக்கொண்டு ஒதுங்கிக்கொள்ள வேண்டும். இவர் என்னுமோ நூருளுக்கு தனிசெயலாளர் போல் நியாயம் சொல்ல வந்து விட்டு – குரைகளை எடுத்து அடுக்கினால், அயோ அவர் என் தலைவர் இல்லே என்று ஓடுகிறார்.இவர்தான் இந்தியர்களின் சந்தர்பவாத்ததிற்கு சரியான எடுத்துக்காட்டு, தேசிய அளவில் அதிக ஓட்டுகளை பெற்று முதல்நிலை வேட்பாளரான லித்திப்பா கோயாவுக்கு 10ஓட்டுகளை கூட நூருல் தொகுதி ஏன் போடவில்லை, ஒரு இளைஞர் ஒரு லட்சம் காப்பார் வாக்காளர்களின் எம்.பி யான மணிவண்ணனுக்கு சுமார் 30 ஒட்டுகளை போட்டு விட்டு, பூச்சோங் கலுசடைக்கு 300க்கும் அதிம் ஓட்டுகள் போட்ட காரணத்தை நூருள் விளக்க வேண்டும். அழகான அறிக்கைகள் விட்டு இந்திய சமுதாயத்தை ஏமாற்றும் அப்பன் வித்தையை மகளும் கையாலவேண்டாம். வெளுக்கிறது இவரின் அடையாளம்.
ஹிந்ட்ரப் தியாகம் காலத்துக்கு ஒவ்வாததா rqgu ? ஒட்டு போடுவது மக்களின் உரிமை ! அதை போய் நூருலிடம் கேள் இல்லை என்றால் அவர் தந்தையிடம் கேள் என்கிரிர்கலே ! நீங்கள் இருவரும் பாரிசானை பார்த்து, பக்கடானுக்கு அதே போல் அரசியல் வேண்டும் என்று நினைக்கிர்கள் ! நான் தவறாக பேசுகிறேன் என்றே வைத்து கொள்வோம் ! ஹிந்ட்ரப் தியாகம் இல்லை என்று வைத்து கொள்வோம் ! உங்கள் தியாகங்களை பட்டியலிடுங்கள் சுறா, rqgu அவர்களே ! எப்படி உங்கள் தனி தனி தியாகங்கள் பகாடானில் செயல் ஆற்றின! மக்கள் எப்படி எல்லாம் அதனால் நன்மை அடைந்தனர் ! ஜனநாயகத்தின் மேம்பாட்டித்க்கு எப்படி எல்லாம் உங்கள் சிந்தனை உதவின ……..பட்டியல் இடுங்கள் தோழர்களே ! தலைமை துவதுடம் ஒத்து போக முடிய வில்லை என்றால் , விட்டு கொடுத்து பொங்கல் ! இல்லை என்றால் விலகி செல்லுங்கள் ! நீங்கள் இல்லை என்றால் , ஒரு கட்சி இல்லை என்று பூச்சாண்டி காட்டாதிர்கள் !