காராக் 1/10/2014 – திருமதி மாலினி வாசுதேவன் வயது 36, இரு சிருநீரகங்களும் பழுதடைந்த நிலையில் சிறமங்களை எதிர்நோக்கி வருகிறார். மருத்துவர் அவரை dialysis எனப்படும் சிறுநீரகம் சுத்திகரிப்பு நிலையத்தில் ஒரு வாரத்திற்கு மூன்று முறை செல்ல வேண்டும் என்று சொல்லி விட்டனர்.
காராக் நகரில் Dialysis Centre இல்லாத சூழ்நிலையில் அவர் ஒவ்வொரு முறையும் பெந்தோங் நகருக்கு செல்கிறார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் யாராவது ஒரு சிருநீரகத்தை தானமாக கொடுக்க முன்வந்தால் அவருக்கு மாற்று அறுவைசிகிச்சை செய்து குனப்படுத்தலாம் என்று சொல்லியிருக்கின்றனர். தன் உடன் பிற்ந்த தங்கை முதலில் முன் வந்திருக்கிறார். ஆனால் குடும்ப சூழ்நிலையால் பின்வாங்கி விட்டாதாக மாலினி வருத்த த்தோடு தெரிவித்தார்.
மிக இளம் வயதில் மாலினியின் நிலை மிக வருத்தமளிக்கத்திக்கதாக உள்ளது. இந்த வேலையில் அவரை நேரில் சென்று சந்தித சபாய் சட்டமன்ற உறுப்பினர் மான்புமிகு காமாட்சி தெரிவித்தார்.
உலகில் பல வகை தானங்கள் இருப்பினும் உடல் உருப்பு தானம் மிகவும் மேன்மையானதாக கருதுவதாக அவர் தெரிவித்தார். நாம் இறந்த பிறகு மண்ணுக்கும் நெருப்பிக்கும் நம் உடலை வெறுமனே தாரை வார்த்து கொடுப்பதை விட மற்றவர் வாழ்வுக்கு உதவுவதற்க்கு அனைவரும் உடல் உருப்பு தானம் செய்து கொள்வது அவசியமாகும்.
மாலினியைப் போல் நம் நாட்டில் அனேகர் இருந்தாலும் இவருடைய நிலையை நேரில் பார்க்கும் போது உடனே உதவ முடியவில்லையே என்ற குற்ற உணர்வு மேலோங்கிநிற்கிறது.
பள்ளிக்குச் செல்லும் இரு பிள்ளைகள், கனரக வாகனம் ஓட்டும் தனது கணவர் இவர்களுக்கு நல்ல அம்மாவாகவும் அன்பான மனைவியாகவும் விளங்கும் மாலினி தனது உடல் நிலை மோசமான நிலையில் செய்வது அறியாது தின்டாடுகிறார்.
அவருடைய வயதும் குடும்ப சூழ்நிலையும் கருதி மலேசிய சுகாதர அமைச்சு மாலினியின் சிறுநீரக மாற்று சிகிச்சையை விரைவில் நடத்துவதற்கு ஆவனச் செய்யும் என்று பெரிதும் எதிர்ப்பார்க்கிறேன்.
கடந்த இரணடரை ஆண்டுகளாக் சிறுநீரகப்பிரச்சனயில் அல்லாடிக் கொண்டிருக்கும் மாலினி தனது எதிர்க்காலம் குறித்து வெகுவாகவே கவலைப்படுகிறார்
மாலைனியின் கனவர் திரு வாசுதேவன் தன் அண்ணனிடம் லாரி ஓட்டுனராக இருக்கிறார். தன் மனைவியின் உடல் நிலை காரணமாக அவரால் வேறு வேலைக்கு போக முடியாத நிலை. ஒரு வாரத்தில் 3 முரை dialysis- க்கு தன் மனையை அழைத்து செல்ல வேண்டும். அடிக்கடி மாலினிக்கு பல உடல் உபாதைகள் ஏற்படுவதால் அவர் அருகில் இருக்க வேண்டிய கட்டாந் நிலை ஏற்படுகிறது. வாசுதேவன் பலரிடம் தன் மனைவியின் நிலையை கூறி உதவி கேட்டிருக்கிறார்.
அமைச்சர் உதவ வேண்டும்
ஒரு முறை சுகாதார துறை அமைச்சரான டத்தோ சுப்ரமணியம் பெந்தோங் நகர் வந்திருக்கிறார். அப்பொழுது அவரை நேரில் சந்தித்து தன் நிலையை கூறியிருக்கிறார். உடனே செய்வதாக கூறி ஒரு வருடத்திற்கு மேல் உருண்டோடி விட்ட நிலையில் அவரிடமிருந்து எந்த தகவலும் இதுவரை இல்லை என்று நம்பிக்கை இழந்து கூறினார்.
உலூ கெலாங்-இல் மான்புமிகு கமலநாதனிடம் உதவி நாடிய போது அவர் RM 500 கொடுத்து விட்டு இவ்வளவுதான் என்னால் செய்ய முடியும் என்று கையை விரித்த சம்பவமும் வாசுதேவனின் மனதில் வடுவாக உள்ளது. நாங்கள் பணம் கேட்டு யாரிடமும் போகவில்லை; மாராக் மாற்று அருவை சிகிச்சையை சீக்கிரம் நடத்துவதற்கான உதவியை செய்ய தான் கேட்டு அழைக்கிறோம் என்றார்.
மாலினியின் மூத்த மகன் கனதீபன் வயது 15, வீட்டு வேலைகளில் மிகவும் உதவியாக இருக்கிறார். பள்ளி முடிந்து அம்மாவுக்காக அத்தனை உதவிகளையும் செய்யும் மிக நல்ல பிள்ளையாக இருக்கிறார். இளைய மகன் ஷர்வின் வயது 8, பால்மனம் மாறாத குழந்தை அம்மாவின் நிலையை புரிந்தும் புரியாமலும் வளர்ந்து வருகிறான்.
மாலினியின் நிலை ஒரு தனி மனுஷியின் பிரச்சனையாக என்னால் பார்க்க முடியவில்லை. இது ஒட்டுமொத்த சமுதாயத்தின் பிரச்சனையாகவே பார்க்க முடிகிறது என்று காமாட்சி கூறுகிரார்.
தாயின் அரவனைப்பிலும் கண்டிப்பிலும் வளரும் இந்த சிறுவர்கள் தன் தாய் இல்லாத நிலையில் என்ன ஆவார்கள். பணம் தேடும் வேலையில் தந்தை, தனித்து விட்ட நிலையில் இவர்கள் சமுதாயத்தின் சிறந்த பிள்ளைகளாக வளர்வது கேள்வி குறியாகிவிடும்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு 70 ஆயிரம் பேர் வரிசை பிடித்து காத்திருக்கும் சிறுநீரக மாற்று அருவை சிகிச்சைக்கு மாலினியின் நிலை இன்னும் மோசமடைவதற்குள் சிகிச்சை பெற யாராவது முன்வருவார்களா? இந்த செய்தியை பார்த்து மாலினியின் உடன் பிறந்தவர்கள் மனம் வைத்தால் மாலினிக்கு மறு பிறவி கொடுத்த புண்ணியம் அவர்களை சேறும்.
நமது அமைச்சர்கள் எல்லாம் நம்மவர்களுக்கு உதவ மாட்டார்கள். எல்லாம் வெத்து வேட்டுகள்
70,000 ஆயிரம் பேர் வரிசைப்பிடித்துக் காத்துக் கொண்டிருப்பதாக நீங்களே சொல்லிவிட்டீர்கள். அப்படியே அமைச்சர் உதவி செய்தாலும் உங்களுக்கு சிறுநீரக உதவியை உங்கள் தங்கையாலேயே செய்ய முடியவில்லை. வ்ரிசைப்பிடித்துக் காத்திருப்பவர்களுக்கு சிறுநீரகமும் வரிசைப்பிடித்துக் காத்திருக்கின்றனவா? எது எப்படியோ உங்களுக்குச் சீக்கிரமாக நாள் கிடைக்க இறை வேண்டல் செய்கிறோம். அனைவரும் செய்க. நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருப்பீர்கள் என பிரார்த்திக்கிறோம்.
இறைவன் உங்கள் பக்கம் கவலை வேண்டாம் நல்ல வலி பிறகும் கஷ்டம் நீங்கும் மகிழ்ச்சியாக உங்கள் குடும்பத்தோடு வாழலாம்.
தம்பி மலேசியன் கவனத்துக்கு ! இறைவன் உங்கள் பக்கம் கவலை வேண்டாம் நல்ல (வழி) வலி பிறகும் கஷ்டம் நீங்கும் மகிழ்ச்சியாக உங்கள் குடும்பத்தோடு வாழலாம்.
ஏன்னா இதுக்கு அமைச்சர் மு வர வேண்டும் ???? மலேசியாவில் கோடிஸ்வர தமிழர்கள் கிடையாதா ?? கோடிக்கணக்கில் மக்கள் பணத்தை கொள்ளை அடித்து சூறையாடிய தமிழ் அரசியல் வாதிகள் இல்லையா ?? பாவம் தமிழன் ,,,
முடிந்தால் செம்பருத்தி ஒரு தனி பக்கத்தை தொடங்கவும் (செம்பரிதியிலையே) …… மலேசியாவில் உள்ள இந்தியர்கள் தங்கள் குறையை பதிவு செய்ய . மலேசியாவில் உள்ள தமிழ் நாளிதழ்களை நம்ப மிடிய வில்ல அவர்கள் இது போன்ற செய்திகளை போடுவதுக்கு தயங்குகின்றனர்
கவணக்குறைவே இதற்கு காரணம்.பி.ஆர்,உதவாதோ செம்பருத்தி வாசகர்கள் ஒன்று சேர்ந்து மகளை படிப்புக்க வைக்கலாமே.இந்த கிட்னி சிகிச்சை எல்லோறுக்கும் பயன் தருவதில்லை அல்லது நீண்ட காலம் நீடித்த பலன் கொடுப்பதில்லை.நாராயண நாராயண.
என்ன கொடுமை.எத்தனை சோகம் அவர்களின் முகத்தில்.பால் வடியும் அந்த பாலகன் முகத்திலும் இத்தனை சோகங்களா?வரும் தீபத் திரு நாள் கூட இவர்களுக்கு சுமையாக போனதே.இறைவா! அந்த குடும்பத்துக்கு நல் வழியை காட்டு.அந்த தாயை வாழ விடு.
டைலசிஸ் மையத்துக்கு விசிட்டிங் செய்து பாருங்கள் பின் கருத்து சொல்லவும்.ஓ.கே.யூ,வில் பதிய சொல்லுங்கள்,மருத்துவமணைக்கு இலவச வாகன சேவை கிடைக்கிறது டைலஸிஸ் நோயாளிக்கு.கெபாஜிக்கான் பிள்ளை படிப்பை கவணித்துக்கொள்ளும்.வாழ்க நாராயண நாமம்.
bentong சட்டமன்ற உறுப்பினர் காமாச்சி உதவி செயலாமே?????
ni
ஐயா dev ,இவ்விஷயத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் சகோதரி காமாட்சி. அதுவே போதுமானது. அவர் சக்திக்கு மீறி ஒன்றும் செய்ய இயலாது. அவரிடம் அரசாங்கம் இல்லை. அத்தொகுதியில் ம.இ.கா. செனட்டர் ஒருவர் உள்ளாரே! சென்ற பொதுத்தேர்தலில் அங்கே போட்டியிட்டவரும்கூட.மேலும், அந்த செனட்டர் மந்திரி புசாரின் சிறப்பு பிரதிதிநிதி என்றும் கூறிவருகிறார். அவரால் எதுவும் செய்ய இயலாதா? தேர்தலின்போது ‘மூஞ்சை’ காட்டிவிட்டு, பிறகு கம்பி நீட்டுவதுதான் இவர்களது வேலையா?
இது போன்று துன்பப் படுபவர்களின் துயரமிக்க மனநிலை நன்கு
புரிகிறது. சாமாளிகலான நாம் என்ன செய்ய முடியும்? இவர்கள் போன்றவர்களுக்கு சிறு பண உதவி செய்ய ஒரு நிதி ஒன்று தொடக்கப்பட்டால் நம்மால் முடிந்ததை கொடுத்து உதவ முடியும். முடிந்தால் செம்பருதியோ அல்லது காமட்சியோ முன்வரலாம். வரவு-செலவு வெளிப்படையாக இருக்க வேண்டும். தலைவலி மிக்க செயல். ஆகவே யாரும் செய்ய முன்வருவது கடினம். நம்மவர்கள் இடையே இதுபோன்ற கவலைக்குரிய நிலைமை அதிகம். என்வருத்தம் எல்லாம் நோயின்றி சம்பாதிக்கும் காலத்தில் மருத்துவ காப்புறுதி எடுத்துக் கொள்வதில்லை. தேவையற்ற மற்றவகைகளுக்கு வீண் செலவு செய்கிறோம். நோயுற்றபோது வருந்துகிறோம். யாராவது இவர்களுக்கு முறையாக நிதி உதவி செய்வதற்கு முன்வந்தால் என் நன்கொடை நிச்சயம் வரும். வருமுன் காப்போம்.