–ஜீவி காத்தையா, அக்டோபர் 15, 2014.
பாலர்பள்ளி வகுப்புகள் அமைப்பதற்காக 2014 ஆண்டு பட்ஜெட்டில் மொத்தம் ரிம58 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த ஒதுக்கீட்டின் கீழ் பாலர்பள்ளி வகுப்புகள் இல்லாத 351 தமிழ்ப்பள்ளிகளில் எத்தனை பாலர்பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன என்று நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் எழுத்து வாயிலாக கேட்டிருந்த கேள்விக்கு நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் எழுத்து மூலமாக பதில் அளிக்கப்பட்டது.
முட்டாளாக்கும் நோக்கமா?
நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட பதில் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில் அல்ல. அப்பதில் தம்மையும் மக்களையும் அரசாங்கம் முட்டாள்களாக்கப் பார்க்கிறது என்று குலசேகரன் கூறியுள்ளார்.
குலசேகரன் கேட்டிருந்த கேள்வி இதுதான்: “2013ல் அறிவிக்கப்பட்ட 2014 ஆண்டிற்கான பட்ஜெட்டில் பாலர்பள்ளிகளுக்காக மொத்தம் 58கோடி ஒதுக்கப்பட்டது. அதில் தேசிய, சீன தமிழ்ப்பள்ளிகளும் அடங்கும். அந்த ஒதுக்கீட்டின் கீழ் தமிழ்ப்பள்ளிகளில், அதாவது எஞ்சியுள்ள 351 தமிழ்ப்பள்ளிகளில் எத்தனை பாலர்பள்ளிகள் அமைக்கப்பட்டன?”
இக்கேள்வி கணித மேதை இராமானுஜம் போன்றவர்தான் பதில் அளிக்க முடியும் என்ற அளவிற்கு ஒரு சிக்கலானது அல்ல.
அவ்வளவு சுலபமான கேள்விக்கு அளிக்கப்பட்ட பதில் மக்களிடம், மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதிகளிடம் எது வேண்டுமானாலும் கூறலாம் என்ற போக்கை அரசு தரப்பின் பதில் பிரதிபலிக்கிறது.
கல்வி அமைச்சு அளித்த பதில்: “மொத்த பாலர்பள்ளி வகுப்புகள் 8,898. அதில் தேசியப்பள்ளிகளில் 8,120 வகுப்புக்கள். சீனப்பள்ளிகளில் 556 வகுப்புக்கள் மற்றும் தமிழ்ப்பள்ளிகளில் 222 வகுப்புக்கள். மேலும் கல்வி அமைச்சின் கீழ் உள்ள பாலர்பள்ளிகளில் படிக்க இயலாதவர்கள் கெம்மாஸ், பெர்பாடுவான் நடத்தும் பாலர் பள்ளிகளில் சேர்ந்து பயிலலாம்.”
இப்பதில் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. ஒரே ஆண்டில் 222 பாலர்பள்ளி வகுப்புகள் தமிழ்ப்பள்ளிகளில் அமைக்கப்பட்டனவா? 2014 ஆம் ஆண்டில் எத்தனை பாலர்பள்ளி வகுப்புகள் தமிழ்ப்பள்ளிகளில் அமைக்கப்பட்டன என்பதுதான் கேள்வி.
இது முதல் தடவை அல்ல
கல்வி அமைச்சின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ள “222 தமிழ்ப் பாலர்பள்ளி வகுப்புகள் புதியவை அல்ல. 222 தமிழ்ப் பாலர் வகுப்புக்கள் எற்கனவே உள்ளவை. இவ்வகுப்புக்கள் யாவும் 172 தமிழ்ப்பள்ளிகளில் உள்ளன. சில பள்ளிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன. மீதமுள்ள 351 தமிழ்ப்பள்ளிகளில் பாலர்பள்ளி வகுப்புகள் இல்லை”, என்று குலசேகரன் விளக்கம் அளித்துள்ளார்.
இவ்வாறு அரசாங்கத்திடமிருந்து “ஏனோதானோவென்ற” பதிலை குலசேகரன் பெற்றிருப்பது இது முதல் தடவை அல்ல.
ஆறாவது மலேசிய ஐந்தாண்டு திட்டத்திலிருந்து 9 ஆவது ஐந்தாண்டு திட்டங்கள் வரையில் மலேசிய பள்ளிகளுக்கு ஒரு மாணவனுக்கு ஒரு மாதத்திற்கு என்ற அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவற்றின் விபரம்:
|
மேற்கூறப்பட்ட அடிப்படையில் 9 ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் ஒரு தேசியப்பள்ளி மாணவனுக்கு ரிம33.30, ஒரு சீனப்பள்ளி மாணவனுக்கு ரிம4.50 மற்றும் ஒரு தமிழ்ப்பள்ளி மாணவனுக்கு ரிம10.95 ஒதுக்கப்பட்டள்ள விபரத்தை கீழே காண்போம்:
All primary schools | National primary schools | % of total | Chinese primary schools | % of total | Tamil primary schools | % of total | |
Total no. students | 3,044,977 | 2,300,729 | 75.6 | 645,669 | 21.2 | 98,579 | 3.2 |
9MP Development-Million | 4,837.3 | 4,598.2 | 95.1 | 174.33 | 6 | 64.8 | 1.3 |
RM per student for 5 years | 1,589 | 1,998 | 270 | 659 | |||
RM per student per month | 26.48 | 33.30 | 4.50 | 10.95 |
மலேசிய குடிமக்களாகிய தேசிய, சீன மற்றும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும் நிதி ஒதுக்கீட்டில் அரசாங்கம் பின்பற்றி வரும் வேற்றுமை பேணும் கொள்கையை இதில் தெள்ளத்தெளிவாக காணலாம்.
6 லிருந்து 9 வரையிலான ஐந்தாண்டு திட்டங்களில் அரசாங்கத்தின் வேற்றுமை பேணும் கொள்கை அடிப்படையிலான நிதி ஒதுக்கீடுகள் பற்றிய புள்ளிவிபரங்கள் கிடைத்தன. அவற்றின் அடிப்படையின் அரசாங்கத்தின் இனவாதப் போக்கு கடுமையான விமர்சிக்கப்பட்டது.
மலேசிய பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் மலேசியர்கள். இந்நாட்டிற்காக உயிர் துறப்பதற்கான சட்டப்பூர்வமான கடப்பாடுகள் கொண்டவர்கள். ஆனால், அவர்களின் கல்வி உரிமையில் ஏன் வேறுபாடு என்ற கேள்வி பலரால் எழுப்பப்பட்டது.
தேசியப்பள்ளி மாணவனுக்கு ரிம33.30. தமிழ்ப்பள்ளி மாணவனுக்கு ரிம10.95. சீனப்பள்ளி மாணவனுக்கு ரிம4.50! ஏன், ஏன், ஏன் இந்த வேறுபாடு? என்ற கேள்வி எழுந்தது.
அடுத்து வந்தது 10 ஆவது மலேசிய திட்டம். அதில் பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீடு பற்றி மேற்கூறப்பட்ட அடிப்படையில் எந்தத் தகவலும் இன்று வரையில் கிடைக்கவில்லை.
இத்தகவலைப் பெறுவதற்காக டிஎபி ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினரான குலசேகரன் 17.10. 2011இல் கல்வி அமைச்சரிடம் கீழ்க்கண்ட கேள்வியை தாக்கல் செய்தார்:
“YB Tuan Kulassegaran A/l Murugesan (Ipoh Barat) minta MENTERI PELAJARAN menyatakan amaun wang yang dijangka dan telah dibelanjakan untuk setiap murid setiap bulan untuk sekolah Kebangsaan Cina dan Tamil di bawah rancangan Malaysia ke-9 dan ke-10. Sila nyatakan rasional perbezaan perplanjaan ini.”
.
அக்கேள்விக்கான கீழ்க்கண்ட பதில் டிசம்பர் 2011 இல் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்மான அளிக்கப்பட்டது:
Kategori Sekolah | RMKe – 9 (RM) | RMKe – 10 (RM) |
SJK ( C ) | 6,457,080,807 | 1,716,393,676 |
SJK ( T ) | 2,481,674,380 | 584,382,340 |
கேள்வி என்ன? பதில் என்ன? இவ்வாறான பதிலை ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு அளிக்கும் நெஞ்சுரம் கல்வி அமைச்சருக்கு அன்று இருந்தது போல் இன்றும் இருக்கிறது.
ஒரு மாணவனுக்கு ஒரு மாதத்திற்கு எவ்வளவு என்பது கேள்வி. பதிலைப் பாருங்கள்.
மேலும், தேசியப்பள்ளிக்கு எவ்வளவு ஒதுக்கப்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை.
அன்று, கல்வி அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினரின் கேள்விக்கு தவறான பதிலை அளித்திருந்ததற்கு எதிராக மக்கள் சீறி எழவில்லை. இனிமேலும் எழ மாட்டார்கள் என்ற நெஞ்சுரம் அமைச்சருக்கு வலுப்பட்டிருப்பதால் இம்முறையும் அதே போன்ற தவறான பதிலை அதே குலசேகரனுக்கு அளித்துள்ளார்.
மக்கள் கருத்து என்னவோ?
மாண்புமிகு கமலநாதனும், ம.இ.கா.தலைவர்களும் இது பற்றி வாயைத் திறக்கவில்லை. இவர்களின் நிலைப்பாடு என்ன என்பது புரியவில்லை. பாலர்பள்ளி வரலாம், போகலாம் ஆனால் பதவி ஒரு முறை தான் வரும். அதற்காக எதனையும் இழக்கத் தயார் என்று நினைக்கிறார்களோ!
கேட்ட கேள்விக்கு பதில் தராமலே பதில் சொல்லிக் கொண்டிருப்பது மாமக்திருக்குக் கை வந்த கலை. அதே பாணியை உபயோகித்து இந்த கல்வி அமைச்சர் தப்பித்துக் கொள்ளலாம் என்று பதில் தருகின்றார். கேட்ட கேள்விக்கு சரியான பதிலை கொடுக்காத மற்றும் தவறான பதிலைக் கொடுக்கும் அமைச்சர்களை ‘Parliament Select Committee’ -யின் விசாரணைக்கு அனுப்புங்கள். எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மந்திரிகளின் இத்தகைய நோக்கத்துடன் கூடிய செயலுக்கு கண்டனம் தெரிவித்தே ஆக வேண்டும். பொது மக்களும், ஊடகங்களும் முன் வந்து இதற்கு தக்க இடமளித்து மக்களிடையே அரசியல் தெளிவை ஏற்படுத்த வேண்டும். அப்பொழுதான் மந்திரிகள் அவர்தம் கடமையை ஒழுங்காகச் செய்ய முன் வருவார்கள். இல்லையேல், கழுவுற மீனில் நழுவுற மீனாக நழுவிக் கொண்டே இருப்பார்கள்.
“அடே நீ வேறையா நாங்களே கொள்ளை அடிச்ச பணத்தையும் 2வது,3வது,4து,5வது,6வது,7வது……….பொண்டாட்டிங்க கணக்குலேயும் தடுமாறிகிட்டு இருக்கும்! இப்போ வந்து தமிழ் பள்ளி பாலர் பள்ளின்னு கஷ்டமான கேள்வி எல்லாம் கேட்டு கிட்டு இருக்கே! வேணும்னா ம இ கா காரனுங்க மாதிரி நீயும் எங்கே கூட்டத்திலே வந்து சேந்துக்கோ! நாட்டுலே முட்டாள் ஜனத்தொகையே பெருக்குவோம்!
நம்மை பிரதினிதிக்கும் தலைவர்கள் என்று சொல்லுக்கொள்ளும் ம.இ.கா வினற்கு தமிழ்ப் பள்ளி பற்றியும் தமிழ் மாணவர்களைப் பற்றியும் துளியும் அக்கறை இல்லை. முதலில் ம.இ.கா வின் பொதுப் பேரவையில் உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளை தமிழ்ப் பள்ளிகளுக்குத்தான் அனுப்பவேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றட்டும் . இந்த உணர்வு வந்துவிட்டால் ஒரு வேளை ம.இ.கா.தலைவர்களுக்கு அரசாங்கத்திடம் உரிமை கோர சிறிது துணிவு வரக்கூடும்.
அட நீங்க வேற…திட்டமிட்ட பதில் திட்டமிடாத பதில்னு சொல்லிக்கிட்டு..எங்களுக்கு எதுவுமே தெரியாதுங்க..எங்க அதிகாரிங்க சொல்றதை அப்படியே உங்களுக்கு பதிலா தர்றோம்…இதைத் தவிர வேறொன்றும் யாம் அறியோம் பராபரமே…
தமிழ்ப்பள்ளிகளில் ஏற்கனவே (2013 -க்கு முன்னர்) 222 பாலர் பள்ளி வகுப்புக்கள் இருந்தன. நடப்பாண்டில் மீதமுள்ள 351 தமிழ்ப்பள்ளிகளில் எத்தனை பாலர்பள்ளி வகுப்புகள் புதிதாக ஏற்படுத்தப் பட்டுள்ளன என்ற கேள்விக்கு கமலனாரதரோ, ம.இ.க.- வோ, மலேசியா தமிழ் பள்ளி தலைமை ஆசிரியர்களின் மன்றமோ தகலவலைத் தரலாம் அல்லவா?. இவர்களும் மௌனமாக இருப்பதன் அறிகுறி 2014 – ல் மேற்கொண்டு ஒரு தமிழ் பள்ளியிலும் புதிதாக பாலர் பள்ளி வகுப்புக்கள் அமைக்கப் படவில்லை என்ற உண்மையை மந்திரி சொல்லத் தயங்குகின்ராரோ?. அவ்வாறே தமிழ் கல்விக்கு காப்பாளனாகத் தம்மை அறிமுகப் படுத்திக் கொண்டு இருக்கும் இந்த மூன்று தரப்பினரும் நம்மை ஏமாற்றுகின்றனரோ?. எல்லோருமே சுயநலமிகள் என்பதில் சிற்றளவும் சந்தேகமில்லை.
குனிய குனிய குட்டுபவனும் குட்டு வாங்குபவனும் மடையனே!!! இந்தியர்களின்பாலும் தமிழ்ப்பள்ளியின்பாலும் அக்கறை கொண்டவர்கள் பாரிசானுக்கு எதிராக கொடிபிடிக்க வேண்டும்..மக்கள் இல்லையேல் தலைவனும் இல்லை!!!!
முட்டாளை அறிவாளியக்கிவிடலாம், ஆனால் மூலை இல்லாதவனை மனிதனாவாக கூட மாற்ற முடியாது.
கல்வி அமைச்சர் திட்டமிட்டே தவறான பதிலைத் தருகிறாரா?உண்மைதான் ,முகத்தை பார்த்தாலே தெரியுதே திருட்டு கம்பத்து காரான் என்று !பொய் சொல்ல கற்றா கொடுக்கோணும்
Theni அவர்களே!அமைச்சர்கள் தரும் பொறுப்பற்ற பதில்களுக்கு, Parliamentary Select Committee க்கு புகார் செய்யலாம் என்கிறீர்கள். பிரயோஜனமில்லை. அந்த கமிட்டியில் ஒரே ஒரு எதிர்க்கட்சிக்காரர்தான்{Dr .Tan Seng Giaw } உள்ளார். நம் நாட்டில் தாய்மொழிக் கல்வி [குறிப்பாக தமிழ்கல்வி] காக்கப்பட வேண்டுமென்றால், சீனர்களைப் போன்று தனியார் பள்ளிகளை அமைப்பதை தவிர வேறு வழி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அரசாங்கத்தை நம்பியது போதும்.