குழந்தைகள் கண்களைக் கட்டிக்கொண்டு கண்ணாமூச்சி விளையாடும்போது ஏதாவது கையில் பட்டவுடன், தேடுபவர்களைப் பிடித்து விட்டதாகக் கூச்சலிடுவார்கள். அதில் ஓர் ஆனந்தம் பரவியிருக்கும். இப்போதெல்லாம் அதிக அறிவும் ஆற்றலும் வலிமையும் பெற்ற நினைப்பில் உள்ளச் சில அரசியல்வாதிகளுக்கு அரசியல் கண்ணாமூச்சி ஒரு வேடிக்கையாகிவிட்டது.
அடிக்கடி எதையாவது பேசி அதில் குளிர் காய வேணும்.
அண்மையில் உத்துசான் மலேசியா நாளிதழில் உள்துறை அமைச்சர் சாஹிட் ஹமிடி நாட்டில் உள்ள எல்லாப் பள்ளிகளையும் ஒரே மொழிப் பள்ளிகளாக மாற்ற வேண்டும் என்ற தமது தனிப்பட்ட கருத்தைத் தெரிவித்ததாக ஒரு செய்தியை வெளியிட்டது. இது ஒரு புதிய கருத்தல்ல. பலமுறை பேசப்பட்ட ஒரு பிற்போக்கான கருத்து.
1971-இல் பதிவான ‘மேலான் பின் அப்துல்லா’ (Melan bin Abdullah) என்ற வழக்கில் சீன-தமிழ்ப் பள்ளிகள் மூடப்பட வேண்டும் என்று தலையங்கம் எழுதிய உத்துசான் மலேசியா நாளிதழின் ஆசிரியர் தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் தண்டனைப் பெற்றார்.
அதன் பிறகு நாடாளுமன்றத்தில் சீன-தமிழ்ப் பள்ளிகள் மூடப்பட வேண்டும் என்று பேசிய சபா கின்னபாலு தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ‘மார்க் கோடிங்’ (Mark Koding), 1983-இல் அதே சட்டத்தின் கீழ் தண்டனைப் பெற்றார்.
இந்த இரண்டு வழக்குகளும் மிகவும் முக்கியமானவையாகும். காரணம் இவைமேல் முறையீடுவரை சென்று முடிவுக்கு வந்தவை. இவற்றின் படி பேச்சுரிமை என்பது இன ஒற்றுமையைக் குலைக்கும் அளவிற்குச் சென்றால் அதைச் சட்டம் கட்டுப்படுத்த வேண்டும் என்பதாகும்.
இதையெல்லாம் அறிந்தவர்தான் நமது உள்துறை அமைச்சர் சாஹிட் ஹமிடி. அவர் இப்படிப் பட்ட ஒரு கருத்தை முன் வைப்பதற்கான காரணங்களையும் குறிப்பிட்டிருந்தார்.
அதாவது, நாம் அனைவரும் இன்று மலேசியர்கள் என்ற நிலைக்கு வந்து விட்டதாகவும், தாய்மொழிப் பள்ளிகள் இன ஒற்றுமை வளர்வதற்குத் தடையாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதில் முற்றாக உண்மையில்லை எனவும் கூற இயலாது. தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் மாணவர்களும், தேசியப் பள்ளிகளில் மலாய் மாணவர்களும், சீனப்பள்ளிகளில் சீன மாணவர்களும் பெரும்பான்மையாகக் கற்கிறார்கள். இப்போது தேசியப் பள்ளிகளில் இஸ்லாமிய வகுப்புகளும் பிரார்த்தனைகளும் நடைமுறையில் உள்ளன. இவை அனைத்தும் இளம் மாணவர்களிடையே இன ஒற்றுமையை வளர்க்க வழி வகுக்காது என்பதை மறுக்க இயலாது.
அதேவேளையில் இன ஒற்றுமை என்பது தாய்மொழிக் கல்வியைப் பணயம் வைத்துத்தான் பெற இயலும் என வாதிடுவதும் தவறாகும். ஒரே மொழி கொள்கைகள் கொண்ட பாகிஸ்தான், சிரியா, எகிப்து, ஈராக், பர்மா, வியட்நாம், தாய்லாந்து, அதோடு ஏகப்பட்ட மத்தியக் கிழக்கு, கிழக்கு ஐரோப்பிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் முரண்பாடுகள் கொண்ட அரசியல் சமூகப் பொருளாதாரச் சூழலில் உள்ளன. அங்கு அமைதிக்குப் பதில் ஆர்ப்பாட்டங்கள்தான் அதிகம்.
இந்தச் சிக்கலானது வெறும் கல்வி சார்ந்த சிக்கல் கிடையாது. இது ஓர் அரசியல் சார்ந்த சிக்கல். அம்னோவும் அப்படி உண்மையான நோக்கத்தைக் கொண்டிருந்தால் அது இன ஒற்றுமையை வளர்க்கத் தீவிரமான கொள்கை மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். ஆனால் அப்படியொரு நோக்கம் அம்னோவுக்கு கிடையாது என்பதையும் நாம் அறிவோம்.
புதிய பொருளாதாரக் கொள்கையின் கீழ் இனம் வழியான தீர்வுகள்தான் அமுலாக்கத்தில் உள்ளன. மாரா கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில்இட ஒதுக்கீடு, வாணிபம், அரசாங்கக் குத்தகைகள், அரசாங்க அதிகாரப் பொறுப்புகள், அரசாங்க வேலை வாய்ப்புகள் இப்படி எதை எடுத்தாலும் ஓர் இனதிற்கு மட்டும்தான் முன்னிடம் வழங்கப்படுகிறது. இதற்கு அரசியல் அமைப்புச் சட்டம் வழிவகுத்துள்ளது.
இந்த அரசியல் சூழல் நாம் முழு உரிமை பெற்ற வகையில் வாழவில்லை என்ற உணர்வைத்தான் கொடுக்கிறது. இரண்டாம் வகை குடிமக்களாகத்தான் வாழ்கிறோம் என்பதுதான் நமது புலம்பல். இதைத்தான் மஇகா உட்பட எல்லா அரசியல் தலைவர்களும் அறிக்கை அறிக்கையாக அரசாங்கத்திடம் கொடுத்து வந்துள்ளனர்.
மேலும், இனங்கள்-மதம் அடிப்படையில் இயங்கும் அரசியல் கட்சிகள்தான் நாட்டையும் மாநிலங்களையும் ஆட்சி செய்து வருகின்றன. அதோடு மாமன்னரின் கீழ் உள்ள நமது கூட்டரசு அரசாங்கம் மலாய் மேலாண்மையின் கீழ்தான் செயல்பட இயலும்.
இது போன்ற அரசியலமைப்புச் சூழல் பன்மொழி கொள்கை வழிக்கு வித்திட்டது. அவ்வழியில்தான் நமக்கே தகுந்த ஒரு தேசிய உணர்வை உண்டாக்கி வருகிறோம். பன்மொழிகளுக்கும் பல்லினப் பண்பாடுகளுக்கும் இன்று உலகில் ஓர் உதாரண நாடாகத் திகழ்கிறது.
இந்நிலையில் உள்துறை அமைச்சரின் புதிய வியாக்கியானம் ஒரு வகையில் வியப்பை உண்டாக்குகிறது.
ஆங்கிலேயர்களுக்கு அடிமையாக இந்தியா இருந்த போது அதன் கல்விக் கொள்கையை மாற்றக் கவர்னர் ஜெனரல் அமைச்சரவை சட்டக்குழுவை 1835-இல் அமைத்தது. அதில் உறுப்பினராக இருந்த தாமஸ் பேபிங்டன் மெக்காலே பிரபு ஆங்கிலேய அரசின் கல்விக் கொள்கையை வகுத்தார்.
இக்கொள்கை இரத்தத்தாலும் நிறத்தாலும் இந்தியராகவும், அறிவில், பண்பாட்டில், கருத்தில், சுவையில் ஆங்கிலேயராகவும் உள்ள ஒரு வர்க்கம் உருவாகுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இவரது குறிப்புகளில், “நமது கல்வித் திட்டம் கடைப்பிடிக்கப்படுமானால் இன்னும் 30 ஆண்டுகளில் வங்காளத்தில் சிலை வழிபாடு ஒழிந்து விடும் என்றும், மதத்தைப் பரப்பாமல் மத உரிமைகளில் தலையிடாமல் இயல்பான அறிவு வளர்ச்சியால் இது நடக்கும்” என்று எழுதினார்.
மெக்காலே பிரபுவின் நோக்கம் ஓர் அடிமை சமூகத்தை உருவாக்க அதன் பண்பாட்டையும் மொழியையும் அழிக்க வேண்டும் என்ற வழியில்தான் இருந்தது. அது இந்தியர்களின் சிந்தனைக்கும் வாழ்வாதாரத்திற்கும் வழிவகுக்கும் என்பதில் உண்மையில்லை.
நமக்குக் கிடைத்துள்ள இந்தத் தாய்மொழி கல்விக் கொள்கை நமது பண்பாட்டுக்கும் வாழ்வுக்கும் மிகவும் அத்தியாவசியமானது. அரசமைப்பு சட்டவிதி 152 இதை நமக்கு ஓர் அடிப்படை உரிமையாகக் கொடுத்துள்ளது. அதைத் தற்காப்பது நமது கடமை.
உள்துறை அமைச்சர் அவர்கள், தமது இன ஒற்றுமை நோக்கத்தைத் தேசிய உணர்வுடன் பார்க்க வேண்டுமானால், அவர் புதிய சிந்தனைக்குச் செல்ல வேண்டும். பல வளர்ந்த நாடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட அரசு மொழிகள் இருக்கின்றன. அவைபோல், நாமும் உருவானால், நமது தேசிய உருவாக்கத்துள் உண்மையான பல்லினப் பண்பாடும், பல்லின ஒற்றுமையும் உண்டாகும்.
தேச நிந்தனை குற்றம் புரிந்தார் என சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்…….
1979ல் சிப்பாங் நாடாளுமன்ற உறுப்பினர், ஹாஜி சுகைமி என்பவர், அனைத்து சீனத், தமிழ்ப் பள்ளிகளும் இழுத்து மூடப்படப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் கர்ஜித்ததை அறிவீரா? இந்த விஷயத்தை வைத்துக் கொண்டு அம்னோவும் எதிர்கட்சிகளும் பல காலமாக அரசியல் நடத்திக் கொண்டிருந்தார்கள். அம்னோவும் எதிர்கட்சிகளும் சேர்ந்து ஏதாவது ஒரு இனத்துவேச விஷயத்தை கிளப்பி விடுவது, பின்பு அதையே வைத்து சில காலத்திற்கு வண்டி ஓட்டுவது. கூட்டுக் களவாணிகள். தற்போது நடைபெறுவதும் அதுவே!
சீனர்களையும் இந்தியர்களையும் பற்றி ஈனத்தனமாக பேசுவது சுதந்திரம் கிடைத்த சில ஆண்டுகளிலேயே ஆரம்பித்து விட்டனர்–ஆனாலும் 1969 தேர்தல் தோல்வி அதை மிகுதி படுத்தியது-காகாதிர் அதை நிரந்தரமாக்கினான். சுதந்திரத்திற்கு முன் யாராவது பெசிநான்களா? இல்லையே? நாம் தான் முட்டாள்கள்.
இவ்வளவு பேசும் உள்துறை அமைச்சருக்கு மற்ற நாடுகளில் குறிப்பாக பாக்கிஸ்தான், சிரியா போன்ற நாடுகளில் என்ன நடக்கிறது என்பது தெரியாமலா போயிருக்கும்? அரசியல் பதவிக்காக எதையும் பேசலாம் என்னும் நிலைமை அம்னோவுக்கு ஏற்பட்டுவிட்டது!
ஐயா இந்த கட்டுரையை மலாய் மொழி எழுதி போட்டாலும் இந்த மலைகருனுன்ங்க விளங்கும். நாத்துகரனுங்கு விளங்கும்.
சபாஸ் சிங்கம் சார் ..சிங்கம் 3 வந்தது போல இருக்கு! நீந்தற மீனு நீந்த நின்னு கொத்துமாம் கொக்கு? ( இது எனக்கு தெரிந்த தமிழ்) மீனு தண்ணீல ஓடாது !
ஒரு முன்னேறும் நாட்டுக்கு இப்படி கோளாறு கொழுப்பு பிடித்த அமைச்சன்? அங்கு மேலே இருக்கும் பின்னோக்கிய எண்ணங்கள் …அரசியல் வாதிகள் எதை பேசுகிறான் ,கல்வியாளன் எதை பேசுவான்,தொழில் அதிபர்கள் எதை பேசுவான், என்பதை பார்த்தல் அரசியல் வாதி காலாவாதியானதை பேசி மக்களை குழப்பி நாட்டை அழித்து விடுவான்.
அரசியல் வாதிகள் காமத்தையும் மோகத்தையும் அதிகம் விருபுவார்கலாம். இதில் அடிபட்டவன் தான் ரோம் சாம் ராஜ்ஜியம்.இன்று இருக்கு இடம் தெரியாமல் அழிந்து போயிற்று.
அரசியல் கவர்ச்சிக்கு மோகத்தை அவர் அவர் ஆசையை முன் நிறுத்தி தான்தோன்றி தனமான பேச்சில் இஸ்பெயின் ,முசொளினியால் போன்ற நாடுகள் இன்று தன தன்மையை இழந்து மக்கள் தங்கள் சுதந்திர போக்கை மறந்து தனி மனித எண்ணங்களால் கட்டுண்டு போனார்கள். சுதந்திரம் என்பது உனக்கு என்ன வேண்டுமோ அதையே மற்றவர்களுக்கும் கொடு என்பதுதான் என்று படித்த நாபகம்!
தனி மனிதன் வஞ்சம் வெல்ல வேண்டும் என்பதும் ஊழல் தான் அது ஒரு வகை இன லஞ்சம் தான்.இது ஒரு அமைச்சனிடம் இருப்பது பேராபத்து! மற்றவர்கள் நீதியும் தர்மமும் தோற்று நாடே அழியும் ஆபத்து உண்டு. அதுவும் பல்லின நாடுகள் இதில் மிகவும் அடிப்படும் !
இவர்களை ஒழுங்கு படுத்த கட்டுப்படுத்த இதில் ஒரு மகத்தான தலைவன் (பிரதமர்) இல்லாவிட்டால் கஷ்டம்தான் .அமெரிக்கர்கள் ஒரு விதியை வைத்துள்ளார்களாம். நீ செய்யும் செயலுக்கு நீயே பொறுப்பு” இதை உணர்த்ந்து இவன்கள் நடந்துகொண்டால் நமது நேரம் மிச்சபப்படும் நன்றி ! இன்னும் எழுதலாம் இது நமக்குதானே என்ற விரக்தியில் வைக்கிறேன் புள்ளிகளை ….
1905-ம் ஆண்டில் மெட்ராஸ் மாநிலத்தில் (தமிழ் நாடு) மேல்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தாய்மொழி கல்வி கட்டாயப் பாடமாக போதித்துக் கொண்டிருந்ததை விரும்பாமல் பிராமணர்கள் தாய்மொழி பாடத்திற்கு பதிலாக சம்ஸ்கிருத மொழியில்தான் அனைவரும் படிக்க வேண்டும், பரீட்சையும் எழுத வேண்டும் என்று மெட்ராஸ் யூனிவெர்சிடியின் செனட் சபைக்கு கொண்ட வந்த தீர்மானத்தை மாநில அரசாங்கம் இறுதி நேரத்தில் நிறுத்தியது. இதன் விளைவே, அதற்குப் பின்னர், ஆங்கிலேயர் அரசாங்கம் இந்தியாவில் அனைத்து மாணவர்களும் ஆங்கிலப் பாடத்தை கட்டாயப் பாடமாக பரிட்சையில் எழுதி தேர்வு பெற வேண்டும் என்ற சட்டத்தை முன் வைத்து நடை முறைப்படுத்தியது. இதற்கு ஆங்கிலேயர்கள் கொடுத்த காரணம் ஆங்கில மொழியால் மட்டுமே இந்தியர்களுக்கு அறிவை சுதந்திரமாகாவும், சமமாகவும் கொடுக்க முடியும் என்பதே. இதற்கு மறுப்பு தெரிவித்து எழுதிய S.H. Hodgson எனும் ஆங்கிலேய அதிகாரி இவ்வாறு கூறினார்:
“A large portion of the sound knowledge of Europe is not to be found in the English language, but must be sought in those of France and Germany. Englishman daily pick up useful and important words from France and Germany.”
ஆக, தமிழ் மொழி அறிவுக் களஞ்சியமாக திகழ்வது அது இலக்கண இலக்கிய வளம் செறிந்தவை என்பதனாலேயே. இத்தகைய மொழி வளம் மலாய் மொழியில் இல்லை என்பதே உண்மை. மலாய் மொழியின் இலக்கிய வளம் 120 வருடத்திற்கு உட்பட்டதே. மலாய் மொழியின் இலக்கணம் இரவல் வாங்கப் பட்டது. தமிழ் மொழி எவ்வொரு துறையானாலும் சரி, அறிவியலாகட்டும், வியாபாரத் துறையாகட்டும், சட்டத் துறையாகட்டும் அனைத்திலும் பிற மொழிகளின் உதவியின்றி தனித்து இயங்க இயலும். அத்தகைய மொழிச் செறிவு மலாய் மொழிக்கு இல்லை. ஆகையால், இன ஒற்றுமையை காரணம் காட்டி தாய்மொழிப் பள்ளிகளை ஓரம் கட்டினால், அதனை அடைய நினைத்து தவறான வழிவகைகளை இந்த அரசாங்கம் கையாண்டு தோல்வியுறுவது திண்ணம்.
அன்று மட்டுமா இன்றுவறை இந்தியாவில் மேற்கல்வி கூடங்களில் கட்டாயம் சமஸ்கிரத மொழியில் தேர்ச்சி பெறவேண்டுமாம்,கேள்வி மற்றும் ஆங்கில மொழியே உலக மொழி என்றும் கேள்வி.தாய் மொழி என்றால் என்ன,வாழ்க நாராயண நாமம்.
தமிழ் சீன பள்ளிகள் தொடர்பாக சஹிட் பேசியது இன ஒற்றுமையை குலைத்துவிடும் . பேசும் முன் யோசி .வாய் ஜம்பம் கூடாது .
தேனீ… இது போன்ற நல்ல செய்திகளைத் தந்து இந்தப் பகுதிக்கு அழகு சேர்க்கிறீர்கள். உங்களைப் போன்ற கருத்தாளர்களுக்காகவே செம்பருத்தியில் அவ்வப்போது வந்து போகிறேன். பார்ப்னன் தமிழனுக்கும் ஆரியனுக்கும் பிறந்து தமிழ்ப் பார்பனனானான். ஆனால் தன்னைத் தமிழன் என்று காட்டிக்கொள்லாமல் ஆரிய வம்சாவழி என்று சொல்லிக்கொண்டு சமஸ்கிருதத்தைத் தூக்கிப் பிடித்தான்; தொடர்ந்து தூக்கிப் பிடிப்பான். முடிந்தவரை தமிழைக் கொலைசெய்து தமிழ் மொழியைக் கீழிறுப்புச் செய்வதில் குறியாய் இருப்பான். தன்னுடையத் தாய்வழி மொழியாகிய தமிழிழை கௌரவமாக மறந்து ஆரிய வழிவந்த தந்தை மொழியைத் தூக்கிப் பிடிப்பவனுக்குத் ” தாய்மொழி” என்றால் என்ன என்று தெரியாத கபடதாரி வேடம்போடுவான். தாயையும் தாய்மொழியையும் மறந்தவனும் மறுப்பவனும் வாழ்வதிலும் சாதல் நன்று. இந்த பார்பனர்களில் ஒரு சிலர் மட்டுமே தமிழ்த் தொண்டாற்றியுள்ளனர் . அவர்களைத் தமிழர்கள் மதித்திட வேண்டும். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று வாழும்படி தமிழன் தன் வாழ்வை வழிப்படுத்திக்கொண்டு வளப்படுத்திக்கொள்ள கிழட்டுப் புலவர்களும் , கிழட்டுத் தமிழ்த்தொண்டர்களும் ஒதுங்கிக்கிக்கொண்டு வாழாமல் புதிய இளந் தலைமுறைகளுக்கு வழிகாட்டிட வேண்டுகிறேன்.
தமிழரே, தமிழ் நாட்டு பிராமணர்களில் ஒரு சிலர் தமிழ் மொழி வளர்ச்சிக்கும், இலக்கிய வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி உள்ளனர். அவர்களில் ஒருவர் உ.வே.சுவாமிநாத ஐயரும் அடங்குவார். நம்முடன் சேர்ந்தவரை நாம் போற்றுவோம்.
பிள்ளையை கில்லி விட்டு.. தொட்டியலை ஆட்டுகிற கதையாகத்தான் இருக்கிறது நமது பிரதமரின் நடவடிக்கை..? தாய்மொழிக் கல்வியில் இந்த கன்னாம்மூச்சு ஆட்டம் தொடர்கதையாகத்தான் வளர்ந்து கொண்டு வருகிறது. பூனைக்கு யார் மணிக் கட்டுவது என்ற கேள்வியாக இருக்கிறது நமது நிலை..?
மலேசியர்களிடையே ஒற்றுமையை வளர்க்க, தாய்மொழிப் பள்ளிகளை மூட நினைக்கும் அம்னோ தலைவர்கள், அரசமைப்புச் சட்டவிதி 153-ஐ அகற்ற சம்மதிப்பார்களா? இதைக் கேட்டால் தேச நிந்தனைச் சட்டம் நம் மீது பாயும். ஆணிவேரில் விசத்தை ஊற்றிவிட்டு; கிளைகளில் மருந்து பூசிக்கொண்டிருப்பதில் என்ன பயன்?
நல்லா சொன்னீங்க சாந்தலெட்சுமி. இனிமேல் நிந்தனை செய்யக் கூடிய கருத்தை சொல்லும் முன் நான் ஒரு நல்ல கருத்தை முன்னிட்டு இதனை நல்ல எண்ணத்தில் சொல்கின்றேன் என்ற வார்த்தைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். தேசிய நிந்தனை சட்டம் பாயாது!. அவர்களுக்கு எது சட்டமோ அதுவே நமக்கும்.
மன்னிக்கணும் தலைவா! ஒன்னு செய்யுங்களேன் உங்க பிள்ளைங்களே இனி தமிழ் பள்ளியிலே சேர்த்துவிடுங்க இந்த பிரச்சனைக்கு நல்ல வழி பிறக்கும்!
நாம் மீண்டும் மீண்டும் அறிந்துக் கொள்ள வேண்டிய உண்மையொன்று. இந்திய சமூகம் தேசிய அளவில் தங்களது வாக்கு வலிமையை பெருக்கிக் கொள்ள வேண்டும்.வலிமையான வாக்கு வங்கியை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இன்னும் நாம் இதில் போதியக் கவனம் செலுத்தவில்லை.நியாயமான உரிமைப் போராட்டங்கள் செய்வது சரியாக இருந்தாலும், வலிமையான் வாக்கு வங்கியை நாம் பெற்றுவிட்டால், இந்தப் போராட்டங்களுக்கு அவசியமிருக்காது; அப்படியே போராட்டங்கள் செய்தாலும், அதற்க்கு ஒரு மரியாதையிருக்கும். நாம் மலேசியக் குடிமக்கள்; வயது 21 ஐ அடைந்துவிட்டால் வாக்காளர்களாக பதிவு செய்துக் கொள்ள வேண்டும். இப்போதெல்லாம் பதிவு செய்வது மிகச் சுலபம். தபால் நிலையங்கள் சென்று உடனே பதிவு பெற்று விடலாம். தகுதியிருந்தும் இன்னும் பதிவு செய்யவில்லையென்றால் பதிவு செய்துக் கொள்ளுங்கள்; நாட்டின் நலன்கருதி நம் மக்கள் நலனும் கருதி நாம் அவசியம் இதில் அக்கறைக் காட்டவேண்டும். மற்றவர்களுக்கும் நாம் தூண்டுக் கோலாக இருக்க வேண்டும். ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்; மலேசிய மக்கட் தொகையில் நாம் சிறிய எண்ணிக்கைத்தான். ஆனால், சிறும்பான்மை எண்ணிக்கையில்லை. அதிகளவான இந்திய மலேசியர்கள், மேற்கு மலேசியாவில் அதுவும் மேற்குக் கரையோரங்களில் குடியிருக்கின்றனர். அதிகமான நாடாளுமான சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட இடம். வலிமையான வாக்கு வங்கியை நாம் இங்கே உருவாக்கிக் கொண்டால், நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்கும் வலிமையையும் உரிமையையும் பெற்று விடுகின்றோம். அரசியலில் நாம் ஒரு நல்ல சக்தியாக உருவெடுத்துக் கொள்ளலாம். இந்தக் குறிக்கோளுக்காக இப்போதிருந்தே செயல் படத் தொடங்குங்கள். அடுத்தப் பொதுத் தேர்தலுக்கு முன் நமது இந்த லட்சியத்தில் வெற்றிப் பெறுவோம்.
தாய்மொழி என்றால் என்ன,வாழ்க நாராயண நாமம்.
நமது துணைப் பிரதமரும், கல்வி அமைச்சரின் கருத்துப்படி தாய் மொழிப்பள்ளிகளை மூட முடியாது. [http://www.thestar.com.my/News/Nation/2014/11/04/Defending-vernacular-schools-Muhyiddin-Their-status-clearly-outlined-in-Education-Blueprint/ ] அப்படி இருக்கையில் அம்னோவில் சிலர் ஏன் இந்த பிரச்சினைகளை மீண்டும் மீண்டும் விவாதிக்கின்றன்ர். நமது இந்திய தலைவர் இந்த செய்தி உண்மையா? என்று துணைப் பிரதமரும், கல்வி அமைச்சரிடம் கேட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். துணைப் பிரதமரும் சொல்வதை ஏன் அம்னோ உறுப்பினர்களுக்கு விளங்கவில்லை.
இது நம் நாடு சார்,இந்தியாவிடம் எடுத்துச்சென்றால் நாம் வந்தேறி ஆகிவிடுவோம்.நம்மை தந்திரமாக நகர்துகின்றனர் அசைந்துவிட்டால் முத்திரை குத்திவிடுவர்.ஹின்ராப் தலைவரை கேளுங்கள் சாசனத்தில் உள்ளதை பகிர்வர்.பி..கே.ஆர் மெளனமாக இருக்கிறது.கோதாவில் இரங்க அழையுங்கள்.ரிபோமாசிக்கு ஏற்பாடு செய்யசொல்லுங்கள்.அனைத்து இனத்துக்கும் பி.கே.ஆர் போதும்,இன கட்சி வோண்டாம் லாஜிக் சொல்லிதானே ஹின்ராப்பை அன்னியன் ஆக்கினான்,அன்வரை வற்புருத்த யாறுக்கு தைரியம் இருக்கிறது.தலைவனை வைத்துக்கொண்டு ஏன் பி.என்,னை கெஞ்ச வேண்டும்,எம்.ஐ.சி,செறுப்பை சுமக்கவேண்டும்.நாராயண நாராயண.
காய் சொல்வதில் உண்மை உள்ளது. ஆளுங் கட்சியை அடக்க எதிர்கட்சிகள் செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும். நம் உரிமைகளை தர்காக்கத்தானே அவர்களுக்கு நாம் ஓட்டுப் போட்டோம். மக்கள் நீதிக் கட்சியும் அதன் நஞ்சானும் குஞ்சானும் இதைக் கூட செய்ய முடியவில்லை என்றால் எங்களிடம் ஒட்டு கேட்க மீண்டும் வராதீர்கள். இந்நாட்டு மக்கள் ஒற்றுமையைக் குலைக்க சதிரடி போடும் உம்னோ கட்சிக்கு மண்டை உச்சியில் ஆணி அடிக்க இதுவே சரியான தருணம். இதுவே சரியான காரணமும் ஆகும். பிடித்துக் கொள்வார்களா எதிர் கட்சி அணியினர்?.