மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்ட வரைவு, பிரதமர் துறை
இந்நாட்டின் தமிழ்ப்பள்ளிகள் 150 ஆண்டுகளுக்கும் குறையாத வரலாற்றினைக் கொண்டவை என்றால் அது மிகையாகாது. மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளில்தான் நம் இனத்தின் சரணாலயங்களாக விளங்கி வருகின்றன.
இதை அடிப்படையாகக் கொண்டு. மலேசியக் கல்விப் பெருந்திட்டத்தின் 2013-2025 குறியிலக்குகளுக்கு ஏற்பவும், தமிழ்ப்பள்ளிகளை நாட்டில் வலுப்படுத்தி நிலை நிறுத்தவும், பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான மேம்பாட்டுத்திட்ட வரைவு ஒன்றினை உருவாக்குவதற்கான கட்டளையைக் கடந்த ஜனவரி 22, 2012 ஆம் திகதியன்று அறிவித்தார். இப்பணி அதிகாரப்பூர்வமாக மே 2, 2012-இல் தொடங்கப்பட்டது. ஒட்டுமொத்தத் தமிழ்ப்பள்ளிகளின் தொடர் வளர்ச்சிக்கான திட்டத்தை வடிவமைத்ததோடு அதன் அமலாக்கத்தையும் தமிழ்ப்பள்ளிகளில் மேம்பாட்டுத் திட்ட வரைவு கண்காணித்து வருகின்றது.
அந்தவகையில், தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை உயர்த்துவதற்கும் அங்கு வழங்கப்படும் கல்வியின் தரத்தை வளப்படுத்துவதற்கும் “கல்வி உருமாற்றம்- தமிழ்ப்பள்ளியே என் தேர்வு” என்னும் திட்டம் நேற்று முன்தினம் தலைநகர் சோமா அரங்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டில் 523 தமிழ்ப்பள்ளிகள் இருந்தாலும் 300-க்கும் மேற்பட்ட பள்ளிகள் குறைந்த மாணவர்களைக் கொண்ட பள்ளிகளாகவே இருந்து வருகின்றன. இந்நாட்டு இந்தியர்களுக்குத் தமிழ்க்கல்வியின் அவசியத்தையும் இன்றைய தமிழ்ப்பள்ளிகளின் சிறந்த வளர்ச்சியையும் எடுத்துரைத்து, அவர்களின் குழந்தைகளைத் தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்ப ஊக்குவிப்பதே “தமிழ்ப்பள்ளியே என் தேர்வு” திட்டத்தின் குறிக்கோளாகும்.
தமிழ்ப்பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, தமிழ்ப்பள்ளிகளின் மேன்மைகளையும் மக்களுக்குப் பறைச்சாற்றும் கடப்பாடு பிரதமர் துறை கீழ் இயங்கும் தமிழ்ப்பள்ளிகள் மேம்பாட்டுத் திட்ட வரைவுக்கு உண்டு. ஆகையால், தமிழ்ப்பள்ளிகளின் சிறப்புகளையும் வெற்றிக்கதைகளையும் மலேசிய மக்களுக்கு எடுத்தியம்புவதோடு முதலாமாண்டு மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதற்கு இந்நிகழ்வு நடைப்பெறுகின்றது.
வெற்றிக் கதைகள்
அண்மைய காலங்களில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைத்துலக ரீதியில் கல்விக் கேள்விகளில் சிறந்து விளங்குகின்றனர். அவற்றிற்கான காரணங்களுல் சில கற்றலுக்கு உகந்த பள்ளிச் சூழல்; திறன் பெற்ற ஆசிரியர்கள்; நவீன வசதிகள்; ஆசிரியர்களின் அக்கறை மற்றும் அரவணைப்பு; பெற்றோர் ஆசிரியர் சங்கம்; பள்ளி மேலாளர் வாரியம் போன்றோரின் ஆதரவு போன்றவையாகும்.
தமிழ்ப்பள்ளி மாணவர்களின் சாதனைச் சான்றுகளை மக்களுக்கு உணர்த்துவதற்கும் நம்பிக்கையோடு குழந்தைகளைத் தமிழ்ப்பள்ளிகளிக்கு அனுப்ப ஊக்கமளிக்கவும் ஒரு சில சாதனை மொட்டுக்களின் விவரங்களைக் கீழே பட்டியலிடுகின்றோம்.
- கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் 2013ஆம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.ஆர் (UPSR) தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி 62 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
- தமிழ்ப்பள்ளிகள் அண்மைய காலத்தில் கட்டட மற்றும் இட வசதி மேம்பாட்டில் பெரிய வளர்ச்சியினைக் கண்டு வருகிறது.
- தமிழ்ப்பள்ளியில் இன்று 100% பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களில் குறைந்தது 50 விழுக்காட்டினர் பட்டதாரி ஆசிரியர்கள்.
- அனைத்துலக நிலையில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பல போட்டிகளில் பங்கெடுத்துள்ளனர். அவர்கள் தமிழ்ப்பள்ளிகளுக்கு மட்டுமல்லாது மலேசியத் தமிழர்களுக்கே பெரும் புகழையும் பெருமையையும் சேர்ந்துள்ளனர்.
- கூலிம் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த செல்வி சுஷ்மிதா த/பெ விஜியன், செல்வி பிரவினா த/பெ இராமகிருஷ்ணன், ரஷிகேஷ் த/பெ இராமகிருஷ்ணன் ஆகிய மூவரும் லண்டனில் நடைபெற்ற அனைத்துலக பிரிட்டிஷ் அறிவியல் புத்தாக்க கண்காட்சியில் மின்சார சேமிப்பு இயந்திரம் என்ற புது அறிவியல் கண்டுபிடிப்பில் வெற்றிப் பெற்று இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
- கூலிம் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த செல்வன் ரஷிகாஷ் த/பெ இராமகிருஷ்ணன் 2013-ஆம் ஆண்டு வடிவமைப்புக் கண்டுப்பிடிப்புகள் (REKACIPTA) போட்டியில் கலந்து வெற்றிப் பெற்று அனைத்துலக போட்டிக்காக ஹாங்கோங் (Hong Kong)(2013) மற்றும் லண்டன் (LONDON) (2014) சென்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மேலும், கூலிம் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த செல்வன் ஶ்ரீஅர்வேஷ் த/பெ இராமகிருஷ்ணன் அவர்கள், தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக வடிவமைப்புக் கண்டுப்பிடிப்புகள் (REKACIPTA) போட்டியில் சிறந்து விளங்கி அனைத்துலக ரீதியில் அமெரிக்கா(2012), புருனாய்(2014) மற்றும் இந்தியா(2014) போன்ற நாடுகளுக்கு மலேசியாவைப் பிரதிநிதித்துச் சென்றுள்ளார்.
- கூலிம் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த செல்வன் பூபதி த/பெ வேலாயுதம் பூப்பந்து போட்டியில் சிறந்து விளங்கி அனைத்துலக ரீதியில் வருகின்ற நவம்பர் 2014-இல் சீனாவிற்குச் செல்லவிருகின்றார்.
- வலம்புரோசா தமிழ்ப்பள்ளியின் மாணவி வைஸ்ணவி த/பெ அருள்நாதன் உலகமே வியக்கும் வண்ணம் “GOOGLE DOODLE” போட்டியில் பங்கெடுத்து வெற்றிப் பெற்றார். இவ்வெற்றி மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தையும் ஆக்கத்தையும் தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பினாங்கு ராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளியின் மாணவர்கள் நாடளாவிய நிலையில் நடத்தப்பட்ட இளம் ஆய்வாளர்கள் விழாவில் வெற்றிப் பெற்று அனைத்துலக ரீதியில் நடைபெற்ற சென்றுள்ளனர் என்பது பெருமைப்படக்கூடிய சாதனையாகும்.
- 2014-இல் புதுடில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் நாடுகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டியில் சிரம்பான், கான்வெண்ட் தமிழ்ப்பள்ளி மாணவி செல்வி நித்தியலெட்சுமி சிவநேசன் இரண்டாவது நிலையில் வெற்றிப் பெற்றுள்ளார்.
- கடந்த ஆகஸ்டு மாதம் ரவூப் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் களிமண்ணால் மிகப்பெரியச் தேசியக் கொடி செய்து மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.
- மலாக்கா, புக்கிட் லிந்தாங் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த செல்வி அஞ்சலி சிவராமன், செல்வி ஷோபனா சிவராமன், செல்வன் நிரோஷன் கெலேமன் இவ்வருடம் (2014) சென்னையில் நடைபெற்ற அனைத்துலக சிலம்பப் போட்டியில் தங்கம் வென்று நாட்டுக்கு மட்டுமல்லாது தமிழ்ப்பள்ளிகளுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
- 2014-இல் உயர்தரப் பள்ளிகள் எனும் சிறப்புப் பெற்று ஜோகூர் ரேம் தமிழ்ப்பள்ளி, பாகங் ரிங்லெட் தமிழ்ப்பள்ளியும் மற்றும் குழுவகைப் பள்ளியாக பேராக் கிரிக் தமிழ்ப்பள்ளி சாதனை படைத்துள்ளனர்.
தமிழ்ப்பள்ளிகளில் பயில்கின்ற மாணவர்களின் சாதனை சரித்திரங்கள், இன்றையக் காலக்கட்டத்தில் அதிகரித்த வண்ணமே உள்ளது. தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் அயரா உழைப்பும், கற்றல் கற்பித்தல் அணுகுமுறைகளும், அரவணைப்புகள், தூண்டுதல்கள் அனைத்தும் நமது மாணவர்களின் சாதனைகளுக்கு அடித்தளமாக விளங்குகின்றன. இளம் வயதிலேயே மாணவர்களுக்கு உரிய மதிப்பளித்தும் அவர்களின் தேவைகளுக்கு முக்கியத்துவம் வழங்கியும் அவர்களை நாட்டில் சாதனை மொட்டுக்களாக மிளிரச் செய்வதில் நமது தமிழ்ப்பள்ளிகள் பெரும் பங்காற்றுகின்றன என்பது திண்ணம்.
நாடோ
சிலர்,தமிழ்ப்பள்ளிக்கூடம் அருகில் இருந்தும் தன் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கூடத்திற்கு அனுப்பாமல் இருப்பது வேதனையாக உள்ளது.
தமிழ் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் குலய்ந்தகளாய் தமிழ் பள்ளிக்கு அனுபுகிரர்ர்கள? அண்ணனால் அவர்கள் பேசும்போது பயங்கர நடிப்பு !!!!
“அண்மைய காலங்களில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைத்துலக ரீதியில் கல்விக் கேள்விகளில் சிறந்து விளங்குகின்றனர். அவற்றிற்கான காரணங்களுள் சில கற்றலுக்கு உகந்த பள்ளிச் சூழல்; திறன் பெற்ற ஆசிரியர்கள்; நவீன வசதிகள்; ஆசிரியர்களின் அக்கறை மற்றும் அரவணைப்பு; பெற்றோர் ஆசிரியர் சங்கம்; பள்ளி மேலாளர் வாரியம் போன்றோரின் ஆதரவு போன்றவையாகும்”.
கட்டுரையைப் படிக்க, படிக்க தேன்மதுரமாக காதில் ஊறுகின்றது. இதுவல்லவோ தமிழனின் வெற்றிப் பாதையை காட்டும் வழி. இதுவல்லவோ தமிழ் மாணவர்கள் தலை நிமிர்ந்து நிற்கின்றனர் என்பதற்கு சாட்சி. நம் தமிழ் பள்ளிகளின் ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதமும் 80% வரையில் மேன்மை அடைய ஆசிரியர்களும் பெற்றோரும் இணைந்தே செயல்படுவோம். நம் பிள்ளைகளை தமிழ் பள்ளிக்கே அனுப்புவோம். நாளை நமதே. அந்த நாளும் நமதே.
வணக்கம். தமிழ் வளர்ப்போம்.
தமிழ்ப்பள்ளியே எனது தேர்வு என்பதை காட்டிலும் “தமிழ்ப்பள்ளிதான் எனது தேர்வு” இன்னும் தமிழ் சுவையுடன் அழுத்தமாக் இருக்கும் ..பல காலங்களுக்குப்பிறகு தமிழ் மொழி வளர்ச்சிக்கு அரசு அதுவும் பிரதமர் துறையில் இப்படி ஒரு விழிப்புணர்வு அறிமுகம் மிகவும் வியப்பாக உள்ளது.இதற்கு பேராசிரியர் டத்தோ ராஜேந்திரன் அவர்கள் ஆற்றிய பங்கு அளப்பெரியது எனலாம். சவால் மிக்கதாக இருந்து இருக்கும்.
அறிமுக விழாவில் பல அரசியல் தலைவர்கள் தமிழ் உயர்வை ஆதரிக்க வந்த நிகழ்வு மனதுக்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பின் ஏக்கத்தை தீர்ததாக் இருந்தது. கல்வி துணை அமைச்சர் தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் பாலர் வகுப்புகளை பற்றி சொல்லி இருந்தால் இதன் முனைப்பு சூடு பிடித்து இருக்கும்.காரணம் நமது பள்ளிகளில் அடிப்படை தமிழ் பாலர் வகுப்புகள் இல்லாமை மாணவர்களை சேர்க்க முடியாமைக்கு காரணம் என்பதை நான் சொல்ல தேவை இல்லை. இந்த குறை தீருமாயின் தடுமாறும் 40% பெற்றோர்களில் 50% மன மாற்றம் நிலை உயர்ந்து தமிழ் பள்ளிதான் எனது தேர்வுக்கு வெற்றி தரும் என நம்பலாம். நமது பெற்றோர்களின் போக்கு “வசதிக்குத்தான் வாய்ப்பு அதிகம்” பாலர் பள்ளி வசதி இல்லாத போது நமது தமிழ் தேர்வு தேடலாகத்தான் இருக்கும்.
70 களில் நான் வாழ்த்த தோட்டத்தில் ஆயா கொட்டை ,அதன் அருகே திருவள்ளுவர் நூலகம் ,அதன் பக்கத்தில் பாலர் பள்ளி அதன் அருகே கோவில் .இந்த அழகை அல்லது அறிவுப்பூர்வமான சூழலை நினைத்துப்பாருங்கள். மொழி பற்றும் சமய சுவாசங்களும் தினம் தினம் அந்த பிஞ்சுகளை என்னையும் தமிழ் உணர்வில் உச்சத்தில் ஊட்டியதுதான் உண்மை.
பள்ளி தலைமை ஆசியரும் தோட்ட.மருத்துவ உதவி ஆளரும் பரிசோதனை தரிசனம் தருவர். நாம் இப்போது இதை எல்லாம் கேற்க வில்லை ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு பாலர் பள்ளி வகுப்பு அறையும் இரண்டு தற்காலிக பாரம் 5 முடித்த வேலை இல்லா ஆசிரியர்களையும் தந்தால் தமிழ் பள்ளிதான் எனது தேர்வு வெற்றி பெற்று விடும். தோட்டத்தில் தழுவி நழுவி இருந்த காலங்கள் போய் நாகரீக நாட்டில் தாண்டும் காலம் இருந்தும் நமக்கு தமிழ் கல்வியின் பாலர் பள்ளி அடிப்படை அஸ்திவாரம் ஆட்டம் கண்டுள்ளதை இனி இவர்கள் கவனித்தால் காலத்தை தமிழ் வெல்லும்.
முனைவர் டத்தோ ராஜேந்திரன் குழுவினருக்கு நமது பாராட்டுகள்.
SJKT அம்பாங் வாரிய து .தலைவர்
தமிழ் அறவாரிய செயலவை உறுப்பினர்
நாம் தமிழர் மலேசியா உ. தலைவர்
உலகத தமிழர் பாதுகாப்பு மையம் மலேசியா
அம்பாங் தமிழர் சங்கம்
தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பாமல் தமிழ் தமிழ் என கோஷமிடும் அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களின் பெயர்ப்பட்டியலை யாராவது வெளியிட்டு அவர்களின் முகத்திரையைக் கிழியுங்களேன்.
தமிழ் பள்ளிகளில் ஆசிரியர்கள், பாடமா சொல்லி கொடுக்கிறாங்க…………………..
மோகன் போல அர வெக்காடுக்கு என்ன தெரியும் தமிழ் பள்ளியைப்பற்றி ?
singam அவர்களே ரொம்ப நன்றி ,நீர் ரொம்ப அதிகமாக தெரிந்து கொண்டதன் வாயிலாக நான் பெருமை படுகிறேன் .என்னை போன்ற அறைவேக்காடுக்கேல்லாம் பதில் அளித்த நீர் முழு வேக்காடா ???தமிழ் சமுதாயம் இந்த நாட்டில் சீர் அழிந்து கொண்டு போகிறது இதன் வலிகா நன்றாக தெரிகிறது இதற்க்கு காரணம் பெற்றோர்களும் ஒரு சில அக்கறை இல்லாத ஆசிரியர்களும் என்று
ஐயா திரு மோகன் அவர்களே..இப்படி வெடுக்கென்று தமிழ்ப் பள்ளி ஆசிரயர்களை குறைக் கூறக்கூடாது…நான் இதுவரை 5 வெவ்வேறு இடங்களில் பணியாற்றியுள்ளேன்…பல தமிழ் பள்ளிகளையும் தமிழ் ஆசிரியர்களையும் கண்டுள்ளேன்…அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வையும் மாணவர்களின் பால் அவர்கள் கொண்டுள்ள அக்கறையும் கண்டு வியந்துள்ளேன்..என்னால் ஆன உதவிகளையும் வழங்கியுள்ளேன்…என் மகனும் தமிழ்ப் பள்ளியில்தான் பயில்கிறார்….அவரது வகுப்பாசிரியரே சில சமயம் பெற்றோர்களாகிய எங்களை பள்ளிக்கு அழைத்து என் மகனின் அடைவு நிலையைப் பற்றி கலந்தாலோசிப்பார்…ஏதோ ஓரிரு ஆசிரியர்கள் நீங்கள் சொல்வது போல் இருக்கலாம்…அதற்காக ஒட்டு மொத்த ஆசிரியர்களையும் தவறாக எண்ணுவது நியாயமற்றது ஐயா..இது எனது தாழ்மையான கருத்து..தவறிருந்தால் மன்னிக்கவும்…
நாராயண நாராயண.
குறையை மட்டும் பேசும் சமுதாயத்தை விட்டு விட்டு, ஒன்றாக கை கோர்த்து தமிழ் மொழியையும் தமிழ் சமுதாயத்தையும் ஓங்க செய்வோம். நம் நிறைகளை பேசி குறைந்த சிந்தனை உடையவர்களை நிறைய செய்வோம். வாழ்க தமிழ்…வாழ்க தமிழ் பற்று…முருகா உன் மக்களை காத்தருள்வாயாக.
95% தமிழ் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் கடமை உணர்வுடனும், இன உணர்வுடனும் நம் மாணவர்களுக்கு போதிக்கின்றனர். எம் பிள்ளைகள் அனைவரும் தமிழ் பள்ளியில் பயின்றவர்களே. பெற்றோர் ஆசிரியர் சங்கத்தில் இருக்கும் பொழுது தரமான தலைமை ஆசிரியர்களைக் கொண்ட தமிழ் பள்ளிகள் சிறப்பான முறையில் இயங்கி தமிழ் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் சிறந்த பங்கை ஆற்றி உள்ளன. தமிழ் பற்று அல்லாத ஒரு சிலர் வேண்டுமானால் தமிழ் பள்ளியையும், ஆசிரியர்களையும் வையலாம். அது நம் தமிழ் பள்ளியின் வளர்ச்சிக்காக பாடுபடுவோரின் கூற்றாக இருக்காது.
மோகன் அவர்களே உங்கள் பிள்ளைகள் எங்கே படிக்கிறார்கள்? தமிழ் சமுதாயம் சீரழிந்து போவது என்றால் போய் சொல்லு பெத்தவன் கிட்டே அதற்கு ஏன் தமிழ் பள்ளி ஆசிரியர்களை குறை சொல்லுகிறாய்? ,12 வயது வரை தான் தமிழ்ப்பள்ளியில் . மலாய் பள்ளியில் படிகின்ற இந்திய மாணவர்களுக்கு மலாய் ஆசிரியர்கள் என்ன தூக்கி வைத்து பாலுட்டுகிறார்களா?
இன்று நல்ல தமிழ் ஆசிரியர்கள் தங்கள் கடமையுணர்வுடன் போதிப்பதால்தான் இன்று நம்நாட்டில் தமிழ் பேசக்கூடிய தமிழர்கள் வாழ்கிறார்கள். தமிழ் பள்ளி வேண்டுமா? வேண்டமா? என்று வாதம் செய்து தமிழுக்கு சாவுமணி அடித்து விடாதீர்கள். வாழ்க தமிழ்.
அன்பர் மோகன் என்பவரின் கருத்தை காணும் பொழுது அவர் தமிழ் தமிழர் நல எதிர்பாளர் கூடாரத்தில் பிரசவிக்கப்பட்டவர் என்பது தெரிகிறது. அன்பரின் கருத்துக்களை நான் தொடர்ந்து நோக்கி வருகிறேன்.. சமூக வலை தளங்களில் இம்மாதிரியான நபர்களின் (தமிழ் எதிர்பாளர்) ஊடுருவல் பரவலாக நடந்து வருகிறது. அன்பர் மோகன் தாராளமாக அவர்
பிள்ளைகளையோ பேரன் பேத்திகளையோ மற்ற பள்ளிகளுக்கு அனுப்பட்டும்….அங்கு தான் பிள்ளைகளை மடியில் கிடத்தியும் மல்லாக்க படுக்க வைத்தும் ஆரம்ப கல்வியாக வாழ்க்கை நெறிகளை ஊட்டுகிறார்கள். ……… ஆஸ்திரேலியாவில் இருந்து முன்னாள் மலேசிய தமிழ் பள்ளி மாணவன்…
singam மன்னிக்கவும் ,ஆசிரியர்கள் ரொம்ப தங்க மாணவர்கள், மன்னிக்கவும் singam தமிழ் பள்ளி ஆசிரியர்கள் ரொம்ப ரொம்ப யோக்கியமானவர்கள், இதை உங்கள் மீது ஆணை இட்டு சொல்கிறேன்
Manithan அவர்களே நன்றி ,உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
subra நன்றி உங்கள் கருத்தையும் ஏற்றுகொள்கிறேன்
சிங்கம்,உங்கள் வாதம் சரியே,ஞாயமானது,பொருப்பானது.நீங்கள் நினைத்த பொருப்பான தமிழ் ஆசிரியர் சமுகம் அமைய வாழ்துக்கள்.சிங்கம் ஆசிரியர் வேலைக்கு வின்னப்பம் தேர்வு,ஏன் படிப்பில் தேர்ச்சி பெறாத சமுகமே தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்,வேறு அரசு வேலைக்கு தகுதி இழந்தமையால் தமிழ்பள்ளிக்கு வேண்டா வெறுப்புடன் வருகின்றனர்.இதை நாம் சொல்லவில்லை ஸ்ரீ பாண்டிதுரை ஒரு நிகழ்சியில் அறிவித்ததுவே.வசதியற்ற தமிழ்பள்ளியும்,வாவாசான் பள்ளி பற்றி சில கருத்து கொடுங்கள் சமுகத்துக்கு.சத்துணவை அட்டவணைபடி கொடுப்பதில்லை,மாணவர் போக்குவரத்து விவகாரத்தில் அலட்சியம்.பள்ளிநேரம் முடிந்து,ஒய்வு நேரத்தில் ஏன் ஒய்வு கொடுப்பதில்லை,மலாய் பள்ளி மாணவர் வீட்டில் குலித்து உணவு எடுத்து ஓய்வெடுக்கும்போது நம் மாணவர் 12மணி கடும் வெய்யலில் திடலில் பயிற்சி எடுத்திருப்பர் ஆனால் பயிற்சி கொடுக்கும் ஆசிரியரோ கேன்டினில் ஓய்வெடுத்திருப்பர்.இதை மணிதாபிமானமற்ற செயலாக கருதுவதுடன்,அசல் அட்டவணைப்படி நடத்த கோரிக்கை வைக்கிறோம்.கல்வி அமைச்சுப்படி நடத்தினால் நன்று.வாழ்க நாராயண நாமம்.
வேங்கை . மோகன் மற்றும் பெயரில்லாத சில விமர்சனங்களும் ஒரே ஆளுடையது போல் இருக்கே .
தமிழ் பள்ளிகாகவும் ;தமிழ் பள்ளி மானவர்களுக்காவும் இதுவரை நண்பர் மோகன் எதை கிழித்திருக்கிறார் என்பதை சொன்னால் நன்றாக இருக்கும்..வீண் வெட்டி பேச்சினால் ஒன்றையும் கிழிக்க முடியாது ..
தாய்மொழி என்றால் என்ன சொல்லுங்கள் ப்லீஸ்,வாழ்க நாராயண நாமம்.
தாய் மொழி என்றால் உங்க பாட்டியோட பாட்டி பேசிய மொழி
தாய் மொழி என்றால என்ன,பெரிய உண்மை மறைந்திருக்கிறது,விழித்துக்கொள்ள சொல்லுங்கள் தாய் மொழி என்றால் என்ன,வாழ்க நாராயண நாமம்.
பெற்ற தாய் பேசிய மொழிதான் தாய் மொழி. Kayee அம்மா என்ன மொழி பேசினார் என்று Kayee ய்க்கு தெரியாத?
அதுபோதாது கொலவி,பதில் கொடுத்தமைக்கு நன்றி,யாம் எதிர்பார்பது வேற வேற வேற டெங்ஸ் கொலவி,வாழ்க நாராயண நாமம்.
அப்படியா Kayee, அம்மாவின் தாய் மொழி எதுவோ அதுதான் உமது தாய் மொழி. உதனதற்க்கு இப்போ நிங்கள் எழுதுவது தமிழ், பேசுவது தமிழ், பாடுவது தமிழில், ஏசுவது தமிழில், இப்படி எல்லவற்றுக்கும் தமிழை பயன்படுத்தும் உமது தாய் மொழி தமிழ். ஒரு வேலை நீங்கள் ஹிந்து கிரிஸ்தியனகவோ அல்லது ஹிந்து முஸ்லிமாகவோ ஹிந்து சினனகவோ இருந்தால் வேறு தாய் மொழி, என்ன தமிழை pinjam பண்ணி எழுதிரிங்க!
ம இ கா கட்சித்தளைவர்களால் தான் தமிழ் பள்ளிகள் இருண்ட உலகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக தள்ளப்பாடு இருந்தது.துன் வீ.தி .சம்பந்தன் 1955 ஆம் ஆண்டு ம இ காவின் தலைவராக பொறுப்பு எற்ற காலத்திலிருந்து தமிழ் பள்ளிகள் ம இ கா வின் அரசியல் மேடையாக மட்டுமே இருந்து வந்தது.துன் சம்பந்தன் முதல் இன்றைய நிலையில் டத்தோ ஸ்ரீ பழனிவேலு , டத்தோ ஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம், டத்தோ சோதிநாதன் , டத்தோ சரவணன், டத்தோ கே.ஸ்.பாலகிருஷ்ணன், டத்தோ தேவமணி, தன் ஸ்ரீ க.குமரன், தன் ஸ்ரீ கே.ஸ்.நிஜார், தன் ஸ்ரீ வடிவேலு, தன் ஸ்ரீ மகாலிங்கம், தன் ஸ்ரீ தேவகி கிருஷ்ணன், தன் ஸ்ரீ பசமாணிக்கம், டத்தோ முத்து பழனியப்பன், டத்தோ ராஜூ , டத்தோ பி.கே.சுப்பையா , டத்தோ டாக்டர் சுப்ரமணியம், தன் ஸ்ரீ சுப்ரமணியம், அமரர் டத்தோ பத்மநாபன் , அமரர் தன் ஸ்ரீ எம்.ஜி.பண்டிதன் ………………. இந்த படியலில் பல 100 மயி கா தலைவர்கள் ( தமிழின துரோகிகள் ) இடம் பெற்றுள்ளனர்.இவர்களை போல் ஸ்ரீ முருக நிலையத்தலைவர் தன் ஸ்ரீ டாக்டர் தம்பிராஜா, பேராசிரியர் தன் ஸ்ரீ மாரிமுத்து., டத்தோ டாக்டர் என் .ஸ். ராஜேந்திரன், மலாயா பல்கலைகழக 2 வது கல்லுரி முதல்வர் டாக்டர் என்.ஸ்.ராஜேந்திரன் ,பேராசிரியர் குமரன், …………….. இப்படி பல பேராசியர்களும் இந்த தமிழின துரோகிகள் பட்டியலில் இடம் பெற்றுலலனர்.இந்த துரோகிகள் ” தாய் மொழி காக்க தமிழ் பள்ளியில் மாணவர்களை சேர்ப்போம் ” என்ற நிகழ்ச்சியை நடத்த என்ன தகுதி , அருகதை , யோக்கிதை இருக்கிறது என்பது தான் எனது வாதம் அருமை உடன்பிறப்புக்களே.25.11.2007 நடைபெற்ற இனமான போராட்டத்திக்கு பின்னரே இந்த மலேசியா தாய் திரு நாட்டில் பல்வேறு எழுச்சிகள் தற்பொழுது நடைபெறுகிறது.
அரசியல்வாதிகள், பேராசிரியர்கள் போன்றே தமிழ் நாளிதழ் ஆசிரியர்களும் இந்த தமிழின துரோகிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.இந்த நாட்டுக்கே தனது பேனா முனையால் அடையலாம் காட்டிக்கொண்டு தமிழ் பத்திரிக்கை உலகில் ஒரு சகாப்தத்தை எட்படுத்திய இளைய தமிழா வேல் ஆதிகுமனும் இடம் பெறுகிறார்.அவரும் அவரது ஒரே மகனை தமிழ் பள்ளியில் சேர்க்கவில்லை என்பது ஒரு மா பெரும் துரோகம் தான் .அதே போல் மக்கள் ஓசை ஆசிரியர் ராஜன், மலேசியா எழுத்தாளர் சங்க தலைவர் ராஜேந்திரன் போன்றவர்களும் தங்களது குழந்தைகளை தமிழ் பள்ளிக்கு அனுப்பாமல் வெட்டரு மொழி பள்ளிக்கு அனுப்பிவிட்டு தமிழர்க்கும், தமிழ் மொழிக்கும் துரோகம் விளைவித்துள்ளனர்.தமிழ் இவர்களுக்கு சோறு மட்டும் போடவில்லை மாறாக மாலை மரியாதையும் செய்து கொண்டிருப்பது மக கேவலம்.இவர்களை போன்றே தனகளது குழந்தை கலை தமிழ் பள்ளியில் சேர்க்காத தமிழ் தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் துரோகிகள் தான்.முன்பு தமிழ் பள்ளி தலைமை ஆசிரியர் மன்ற தலைவராக இருந்த ஆசிரியர் துரைசாமி, டத்தின் ஜெயம் போன்றவர்களும் இந்த துரோகிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்பதை நாட்டுக்கும் தமிளினத்திக்கும் சொல்லுவது னது கடமை என்று கருதியே இணங்கு பதிவு செய்கிறேன் நன்றி வணக்கம்.மாறுவோம்.மாட்ட்ருவோம்.முன்னேறுவோம் என்று அனைத்து தமிழ் உள்ளங்களையும் அலைகிறேன் வாரீர்.
குலவி,எதை கொண்டு ஒரு இனத்தின் குணம்,பழக்க வழக்கத்தை அறிவது,அதாவது கலை கலாச்சாரத்தை அறிந்து கொள்வது,வாழ்க நாராயண நாமம்.
இன்று காலையில் ஓர் இடைநிலைப் பள்ளியில் நமது இந்திய மாணவர்களுக்கு தன்னார்வ சொற்பொழிவு செய்ய கேட்டுக் கொண்டதற்கு இணங்க, சொற்பொழிவு ஆற்றினேன். சமயத்தை தொட்டுப் பேசும்பொழுது, அங்கே இருந்த தமிழ் மாணவர்களை நோக்கி யார் யார் தேவாரம் படிப்பீர்கள், யாருக்கு தேவாரம் தெரியும் என்று கேட்டேன். நான்கு பெண் மாணவர்கள் தேவாரம் படிக்கத் தெரியும் என்றனர். அதில் ஒரு தமிழ் மாணவன் தேவாரம் என்றால் என்ன என்று தன் பக்கத்தில் இருக்கும் மாணவரை நோக்கி கேட்டபொழுது நம் தமிழ் பிள்ளைகளின் சமய அறிவு நிலைமையை அறிந்து வேதனைப் பட வேண்டியதாயிற்று. யார் ஒருவர் தன் தாய்மொழியான தமிழை கற்கின்றார்களோ அவர்களே தமிழரின் பண்பாட்டையை அறியமுடியும். தமிழரின் சமயத்தை அறிய முடியும். தமிழரின் கலைக் கலாச்சாரத்தைப் பேணி காக்க முடியும். இல்லையேல் தமிழன் என்பது பெயரவிலும், தமிழர் சமயம் என்பது சொல் அளவில் மட்டுமே நிற்கும். தமிழ் மொழி அறியாமல் உருப்படுமா இந்த தமிழர் சமுதாயம்?.
தெனாலி ஊருக்குதான் உபதேசம் தனக்கில்லை என்பதே தாங்கள் குறிபிட்ட நபர்களின் நிலை. இவர்களையா நம்பி நம் தமிழர் சமூதாயம் உருப்பட போகின்றது?. இதை மக்கள் அறிய அவர்கள் தலை குனியட்டும். நாண்டுக்கிட்டு சாகட்டும்.
தேனீ சொன்ன மாதிரி இவனங்கள் எல்லாம் கேடு கெட்டவன்கள் . தமிழ் நாளிதழ் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளே தமிழ்ப் பள்ளிக்கு அனுப்ப வில்லை என்றால் இவனங்கள் போல துரோகி யாரும் இருக்க மாட்டார்கள் . இவன்களை என்ன செய்யலாம் ? இறைவா!
செம்பருத்தியில் எழுதும் நாம் அனைவரில் எத்தனை பேர் நம் பிள்ளைகளை தமிழ் பள்ளியில் செர்த்திருகோம், அடுத்தவனை பற்றி பேச.
கடவளே என் தமிழ் இனதையும் தமிழ் மொழியையும் காப்பாற்று .ஒவ் வொரு தமிழனின் பங்கு என்ன ??? தமிழின் சிறப்பையும் தமிழனின் சிறப்பையும் எடுத்து சொல்லு.தெனாலி சொன்னது போல் த்ரோகிகளை வெளிச்சதுக்கு காட்டு.தமிழையும் தமிழனையும் யாராலையும் அளிக்க முடியாது கடவுலாளையும் அளிக்க முடியாது ஆனால் தமிழனால்தான் மட்டும் முடியும். இது உண்மை முற்றிலும் உண்மையே……….
கரிகாலா, எம் பிள்ளைகள் அனைவரும் தமிழ் பள்ளியில் பயின்றவர்களே.
வாழ்க ஆஸ்திரேலிய மனிதா. தாங்கள் படித்த பள்ளியின் பெயரைக் குறிப்பிட்டிருந்தால் நன்றாக இருக்கும்.
நல்ல தலைமைத்துவம் அமைந்தால் அனைத்து தமிழ்ப்பள்ளிகளும் சிறப்பாகவே இயங்கும்…தமிழ்ப்பள்ளியின் மீது நம்பிக்கை குறைவிற்கு பள்ளியில் நிலவும் சம்பவங்கள் காரணமாக இருந்தாலும்,சில பெற்றோர்களின் பொருப்பற்ற தனத்தையும் நாம் மறந்து விடக்கூடாது.இதற்கிடையில்,தமிழ்ப்பள்ளியை வைத்து அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளும் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களும் தலைமையாசிரியர்களும் முதலில் தத்தம் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.குறிப்பாக இந்திய பிரதிநிதி என சொல்லிக்கொள்ளும் ம.இ.கா தலைவர்கள் முதலில் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பாதா ம.இ.கா தலைவர்களை கட்சி தலைமை நீக்குமா?அதுபோலவே பிற கட்சிகளில் இருக்கும் இந்திய தலைவர்கள் தன் வீட்டுப்பிள்ளையை தமிழ்ப்பள்ளியில் போடாமல் கருத்து சொல்வதும் அரசியல் பிழைப்பு நடத்துவதும் அறிவிலிதனமானது.அந்த மூடர்களோடு கைகோர்த்து தம் பிள்ளையை தமிழ்ப்பள்ளியில் போட்ட உணர்வாலர்கள் அரசியல் காரணத்திற்காக கைகோர்க்காதீர்கள்.தமிழ்ப்பள்ளி என் தேர்வு என அனமையில் தொடங்கப்பட்ட இயக்கம் சிறப்பான ஒரு திட்டம்.ஆனால்,அந்த குழுவிலுள்ளவர்களில் எத்தனை பேர் தங்களின் பிள்ளையை தமிழ்ப்பள்ளியில் பதிவு செய்துள்ளனர் என்று பார்த்தோமானால் நமக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும்….பத்திரிக்கைக்கு போஸ்ட் கொடுக்கும் தலைவர்கள் முதலில் தங்களின் நிலையை உணர வேண்டும்.சமுதாயம் முட்டாள் என கருதி தொடர்ந்து ஏமாற்ற வேண்டாம்……ம.இ.கா,ஐபிஎப்,மக்கள் சக்தி,பிபிபி,ஜசெக,கெஅடிலான்ம.இஐக ஆகிய காட்சிகளின் முதன்மை தலைவர்களின் வீட்டுப்பிள்ளைகள் அனைவரும் அனைத்துலக பள்ளிகலிலும்,பிற மொழி பள்ளிகளிலும்தான் படிக்கிறார்கள்……………விதிவிலக்காய் தமிழ் உணர்வால் சிவநேசன்,குலசேகரன் போன்றவர்களின் பிள்ளைகள் தமிழ்ப்பள்ளியில் கல்வி பயணம் தொடங்கினார்கள்………………….பழனிவேல்,சுப்பிரமணியம்,சரவணன்,வீட்டுப்பிள்ளைகள் எங்கு படித்தனர்,படிக்கின்றனர்?தமிழ்ப்பள்ளியை இங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியல் அடையாளத்திற்காகவே பயன்படுத்துகிறார்கள்.உணர்வு என்பது அவர்களிடம் மழுங்கியுள்ளது…..மலேசிய அரசியல் சூழலில் தமிழ்ப்பள்ளியை வைத்து பிழைப்பு நடத்துவது ம.இ.கா மட்டுமே என்பதால் அதன் தலைவர் வீட்டுப்பிள்ளைகள் தமிழ்ப்பள்ளியில் கல்வி கற்பதை உறுதி செய்ய வேண்டும்.அதேவேளையில்,தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களும் தலைமையாசிரியர்களும் தமிழ்ப்பள்ளியை வருமானம் தரும் தொழிற்சாலை போல எண்ணாமால் மொழி,இன உணர்வோடு செயல்பட்டு தத்தம் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளியில் பதிய வேண்டும்.பிழைப்புக்கு மட்டும் தமிழ்ப்பள்ளி எனும் நிலை மாறவேண்டும்…………வாய் அளவில் பேசுபவர்கள் சிந்தனையளவில் மாற வேண்டும்……………….
Kayee oru pulluruvi.. irattai vesam poduran..
தமிழ் பள்ளியும் ஆலயமும் அரசியல் அரங்கேற்றும் தளம்
இந்த இரு இடங்கள் இல்லை என்றல் mic அரசியல் நடத்த முடியாது
பாமரமக்கள் மிக விரைவில் மறந்து விடுவார்கள் என்பது MIC அரசியல்
வாந்திகள் அறிந்து புரிந்து வைடுள்ளர்கள் தமிழ் பதிரிகை அரசியல் வாதிகளை புகழ் படுவதை தவிர்க்க வேண்டும் தமிழ் நஹ்ளிடல் கண்காணிப்பு குழு நாடு முழுதும் அமைது துதி படும் பதிரிகை வாங்க வேண்டாம் என பிரசாரம் செய்யணும் ,
வண்க்கம். புதிய பார்வை, சிந்தனையுடன் தமிழ்ப்பள்ளியைப் பற்றி எழுதுங்கள்.