தொழிற்சங்க போராட்ட வீரர் பி. வீரசேனன் நினைவு: 21 ஆவது காற்பந்து(ஒன்பதின்மர்) சுழற்கிண்ண போட்டி

Veerasenan-206x300மலேசிய சோசலிச கட்சியின் பந்திங் மற்றும் கிள்ளான் கிளைகள், பன்டார் மாகோத்தா இளைஞர் பிரிவு மற்றும் பந்திங் காற்பந்து அணி ஆகியவை  இணைந்து 21 ஆவது பி.வீரசேனன் காற்பந்து சுழற்கிண்ண (ஒன்பதின்மர்) போட்டியை நடத்துகின்றன. அதன் விபரங்கள் வருமாறு;

திகதி – 30 நவம்பர் 2014

நேரம் காலை மணி 8.00

இடம் சுங்கை சிடு தோட்ட திடல், பந்திங்

 

இந்த போட்டி விளையாட்டு இலவசமாக நடத்தப்படுகிறது. ஆகவே சுற்றுவட்டாரத்தில் உள்ள அணிகள் இப்போட்டியில் பங்கேற்று சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேல் தகவல்களுக்கு  019 – 305 – 5906  என்ற எண்ணுடன்   தொடர்பு கொள்ளலாம் என்று கூறுகிறார் இப்போட்டியின் ஏற்பாட்டுக் குழு தலைவர் பரமேஸ்வரி.

Veerasenan6

 

யார் இந்த பி.வீரசேனன்?

ஏன் அவர் பெயரில் ஒரு காற்பந்து சுழற்கிண்ண போட்டி ஆரம்பிக்கப்பட்டது?

 

 

பி.வீரசேனன்  1927 ஆம் ஆண்டில் இப்பூமிக்கு வந்தார். இவர் ஓர் இளம் போராட்டவாதியாவார்.  தனது 23-ஆவது வயதிலேயே Veerasenan2தொழிலாளர்களின் உரிமைக்காக உயிரையே தியாகம் செய்தவர்.

 

பி.வீரசேனனுக்கு சிறு வயதிலிருந்தே வீரமும் துடிப்பும் அதிகமாக இருந்தது; அநீதியை எங்கு பார்த்தாலும் கண்டு வெகுண்டார்; பணம் உள்ளவன் ஏழைகளை வாட்டி வதைத்ததை வன்மையாகக் கண்டித்தார். அடிமைத்தனத்தை எதிர்த்தார்; நியாயத்தை சற்றும் தயங்காமல் உறக்கக் கூறினார்.

 

Veerasenan1இத்தனைத் தகுதிகளைக் கொண்ட பி.வீரசேனன் தனது 22-ஆவது வயதிலேயே சிங்கப்பூர் துறைமுக ஊழியர்கள் சங்கத்தில் முக்கிய பொறுப்பை ஏற்றார். அவரது அஞ்சா நெஞ்சமும், தொழிலாளர் வர்க்க போராட்டத்தின் உண்ணதக் குறிக்கோளும் அவரை அச்சங்கத்தின் பொதுச்செயலாளராக உயர்த்தியது. அது மட்டுமல்ல, காலப் போக்கில் இவர் அகில மலேயா தொழிற்சங்க சம்மேளனம் (PMFTU), மலாயா தேசிய விடுதலை இராணுவக் குழு (TPNM), பொதுத் தொழிலாளர் சங்கம் (GLU) போன்ற பல உரிமைப் போராட்ட இயக்கங்களில் முக்கிய பங்காற்றியிருக்கிறார்.

 

பி. வீரசேனனின் சாதனைகள்:

 

1. 1945 – 1946-களில் பல்வேறு தொடர்ச்சியான போராட்டங்களின் வழி தொழிலாளர்களுக்கு கனிசமான சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுத்தார்Veerasenan5

2. தொழிலாளிகளின் நாள் சம்பளம் 55-காசிலிருந்து 95 காசாக உயர்வு கண்டது.

3.  ஒரு நாளுக்கு எட்டு மணி நேர வேலை என்ற கோரிக்கை முதலாளிகளிடம் முன்வைத்து அதில் வெற்றியும் பெற்றார்.

4. வாரத்தில் ஆறு நாள் வேலை.

5. அடிமைத்தனக் குத்தகை முறையை ஒழித்தார்.

6.  உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கொடுக்க வேண்டும்; மனிதன் வாழ்வதற்காக வீடு அமைத்துக் கொடுக்க வேண்டும்; குடிக்கச் சுத்தமான தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பது போன்ற பல தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைக்காக வெள்ளைக்காரனை எதிர்த்துக் குரல் கொடுத்தார்.

 

இவரின் வேகத்தைக் கண்டு முதலாளித்துவ வர்க்கம் ஆவேசப்பட்டது. நம்மை அடிமைகளாக நடத்திய வெள்ளைக்காரனுக்கு பி.வீரசேனனின்Veerasenan4போராட்டம் பயத்தை ஏற்படுத்தியது. தொழிலாளர்களின் எழுச்சியைத் தடுக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. தொழிலாளர்களைப் பயமுறுத்தினர்; அடித்தனர் துன்புறுத்தினர். பி.வீரசேனனுக்கு பல தொல்லைகளைக் கொடுத்தனர். ஆனால் இதற்கெல்லாம் பி.வீரசேனன் கொஞ்சமும் அசரவில்லை. இவரது போராட்டத்தில் எஸ்.ஏ கணபதி மற்றும் ஜி. பாலன் போன்றவர்களும்  அவருக்கு பக்கபலமாக இருந்தனர்.

 

1948 இல், பி.வீரசேனனின் போராட்டத்திற்கு சாவுமணி அடிக்கும் வகையில் நாட்டில் அவசரகாலம் பிறப்பிக்கப்பட்டது.  போராட்டம் தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் பி.வீரசேனன் காட்டுக்குள் தலைமறைவானார். காட்டிலிருந்தே பல திட்டங்களை தீட்டி போராட்டத்தை தொடர்ந்தார். 1949-ல், பிரிட்டிஷ் ஆட்சியின் இராணுவம் இவரை வலை வீசி தேட ஆரம்பித்தது. அவரைக் கண்டுபிடிப்பதற்கு பல யுக்திகளை எதிரிகள் கையாண்டனர். இறுதியில், 3 மே 1949 இல், பிரிட்டிஷ் இராணும் இவரை சுட்டு வீழ்த்தியது.

 

தொழிலாளர் வர்க்கத்தின் சுதந்திரத்திற்காக போராடி தனது 23-ஆவது வயதிலேயே உயிர் தியாகம் செய்த உண்மையான போராட்டவாதியான பி.வீரசேனனின் நினைவு மக்களுக்கு என்றும் ஒரு தூண்டுகோளாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டதுதான் பி.வீரசேனன் சகோதரத்துவ சுழற்கிண்ண காற்பந்துப் போட்டி.

 

1993-ல், காஜாங்கிலுள்ள மக்கள் மேம்பாட்டுக் கழகத்தால் ஆரம்பிக்கப்பட்ட இப்போட்டி இன்றுவரை தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. Veerasenan3பி.வீரசேனனின் நினைவை ஒட்டி நடத்தப்படும் நட்பு முறையிலான இப்போட்டிக்கு பதிவு இலவசம். போட்டிக்காக வந்தோம் விளையாடினோம் என்று மட்டுமில்லாமல் இவரின் சரித்திரத்தை மக்கள், குறிப்பாக இளைஞர்கள், தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பல உரைகள் மற்றும் புதிர்ப் போட்டியும் நடத்தப்படுகிறது.

 

அன்று, பி.வீரசேனன் 8 மணி நேர வேலைக்கும் வாரத்தில் ஒரு நாள் விடுமுறைக்கும் தனது உயிரைக் கொடுத்து போராடினார். ஆனால், இன்று அவற்றை நாம் பறிகொடுத்துக் கொண்டிருக்கிறோம். தொழிலாளர்கள் இன்றும் எத்தனையோ உரிமைகளையும் உடமைகளையும் இழந்து கொண்டுதான் இருக்கின்றனர். ஆக, பி.வீரசேனன் போன்றோரின் போராட்டங்களை  ஞாபகப்படுத்துவதன் மூலம் இந்த சூழ்நிலையை மாற்ற முடியும்; தொழிலாளர் வர்க்கத்தினரிடையே விழிப்புணர்வை மேலோங்கச் செய்ய முடியும். இந்த விழிப்புணர்வுதான் போராட்ட தீயை மூட்டிவிடும்.

 

ஒன்றை மறந்து விடக்கூடாது! அன்று சுட்டு வீழ்த்தப்பட்டது பி.வீரசேனனின் வெறும் உடல்தான்; அவரின் போராட்ட உணர்வுகள் இன்றும் நம்மோடு வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறது! இன்று உலகில் நடக்கும் அனைத்து தொழிலாளர் வர்க்கப் போராட்டத்திலும் பி.வீரசேனன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்!

 

வாழ்க பாட்டாளி வர்க்கம்!

வளர்க வர்க்கப் போராட்டம்!