JPN தமிழர் இனத்தை பதிவு செய்ய மறுக்க அதிகாரிகளுக்கு உரிமை இல்லை!

contentwriting_1பல்லினம் வாழும் மலேசியாவில் ஒருவரின் பாரம்பரிய இனத்தை பதிவு செய்ய  மறுக்க JPN பதிவு அதிகாரிக்கு என்ன அதிகாரம் உண்டு?
குறிப்பாக மலேசியாவில்  இந்தியர்களில் பல மொழி சார்ந்த இனங்கள் உண்டு.

தமிழர்கள் , தெலுங்கர்கள் ,மலையாளிகள் , சிங் ,பஞ்சாபி, சிண்டியர்கள், இப்போது புதிதாக தங்களை பூமிபுத்ரா என்று குரல் எழுப்பும் மலேசியா தமிழ் இஸ்லாத்து சகோதர்கள்.

பல காலங்களாக இந்தியர்கள் என்ற நினைப்பில் இருந்து விட்ட மேற்கூறிய அனைவரும் இப்போது வசதிக்கும் வாய்ப்புக்கும் தங்கள் பாரம்பரிய பூர்வீக இனத்தை  அடையாளப்படுத்த ஆசைப்பட்டு உரிமைககுரல் எழுப்புகின்றனர். 30 லச்சம் இந்தியர்கள் பட்டியலை இன்றைய பிரதமர் அவர்கள் மொழி, இன ரீதியாக உடைத்து அரசியல் நடத்த ஆரம்பித்த விளையாட்டை டதோ தஸ்லிம் அவர்கள் ஆய்வில் முதன் முதலில் வெளிப்படுத்தினார்கள்.கடந்த 13வது பொது தேர்தலிலும் அதற்கு முன்பும் அரசு நிதிகள் மொழி வழி இனங்களுக்கு பிரித்து கொடுத்த உண்மைகளை நாம் அறிவோம்.

பணம் பத்தும் செய்யும் என்பார்கள் ஆனால் இந்நாட்டில் அரசியலும் அது செய்ய பணமும் இந்தியன் பிரிவினை இனமும் வழி விட்டது உலக இந்தியனுக்கு அவமானாமா ? அதிஸ்டமா என்று தெரிய வில்லை!

நாட்டின் JPN அதிகாரிகளுக்கு இந்நாட்டின் வரலாறே தெரியாமல் தமிழர்களின் இன உரிமையை கேள்வி கேட்டு பிறப்பு பத்திரத்தில் தமிழன் ,தமிழர் என்ற எழுத நாமெலாம் போராட வேண்டி உள்ளது. ஏறக்குறைய 3 லட்சம் தெலுங்கு சகோதர்கள் தங்கள் பிறப்பு உரிமைக்கு தெலுங்கு மொழி போராட்டதுக்கு மிக துணிச்சலாக வெளியே வந்துள்ளபோது 30 லட்சம் மலேசியா தமிழர்களுக்கும் தங்களை தமிழன் என்று பதிவு செய்ய நேரம் வந்துவிட்டது.

சரியான் நேரத்தில் சாபாய் சட்ட மன்ற உறுப்பினர் மாண்பு மிகு காமாட்சி மலேசியா தமிழர் பிறப்புரிமை வாரியம் அமைப்பின் வழி தமிழர்களின் உரிமை போராட்டத்தில் இறங்கி உள்ளார். இந்த நாட்டின் ஆம்பிள இந்தியன் அல்லது தமிழ் அரசியல் வாதிகள் செய்யத்துணியாத ஒரு அறிவார்ந்த முயற்சியை நாம் பாராட்ட வேண்டும். இதற்கு நாட்டின் பல தமிழர் அமைப்புகள் துணை நிற்பது காலத்தின் கட்டாயமாகும். அரசியலுக்கு அப்பால் இன உணர்வு இப்படிதான் இருக்க வேண்டும் என்பதற்கு தமிழ் தோழி காட்சி நல்ல வழி காட்டி என்பேன்.

JPN பாரத்தில் நாம் எழுதி கொடுப்பதை பதிவு செய்வதுதான் அவனில் வேலை நம்மை கேள்வி கேற்பது நம்மை திருத்துவது அவனின் வேலை அல்ல. இந்த சாதாரண உரிமையை நாம் தெரிய வேண்டும். காரணம் நமக்கு இந்த நாட்டில் தமிழ் இன, தமிழ் மொழி காப்புக்கு இன்னும் பல சவால்கள் உண்டு.

மலேசிய இந்தியர் தூதரகத்திலும் இந்தியா கலாசார  கழகத்திலும் கூட ஒரு தமிழ் உயர் அதிகாரியை நாம் காண முடியாது ? எல்லாம் இந்தியாவின் வடக்கே இருந்து வந்தர்வர்க்ளாகதான் இருப்பார்கள். இங்கு ஆங்கங்கே விளம்பர விளையாட்டில் கூட வட நாடகர்கள் கலாசார மாயைகள்தான் வண்ணமிடும். தீபாவளி கூட தமிழர்களின் விழா இல்லை என்றால் இங்கே என்னை மேயும் தமிழர்கள் இருக்கவே உள்ளார்கள். எழுத்தாளர் என்ற சொல்லப்படும் ஜானகி ராமன் கூட இந்தியன் டெலிமா என்றுதான் தமிழன் வரலாற்றை எழுதி ஆய்வுக்கு பொருளாதார ஆப்பு அடித்தார் ! இந்தியாவில் இருந்து எத்தனை வட நாட்டு இந்தியன் இங்கு காடுகள் வெட்டி மேடுகள் தட்டி தோட்டங்கள் கட்டி உழைத்தான் என்று ஜானகி ராமனையும் நஜிபையும் கேட்டு பார்ப்போம்?

இந்தியாவின் தெற்கே திராவிட குழும கூட்டங்கள்தான் இங்கே அடிப்பட்டு உதைப்பட்டு குறிப்பாக 99% தமிழர்கள் சீரழிந்து நாட்டை சீராக்கினார்கள். ஆனால் பெயர் போட்டவர்கள் வட தேசத்து இந்தியர்கள். நாம் தமிழர் கலை முகிலன் சரியாக சொன்னார் 500 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயன் அறிவில்லாமல் கண்டு பிடித்த இந்தியன் அடையாளம் இந்தியாவின் வடக்கே ஆற்றோரம் வாழ்ந்த சிந்து நதி  இந்துஸ் நதிக்கரையாக மாற்றிய  வந்தேறிகளுக்கு பொருந்தும். தென்னக தமிழர்களுக்கு இந்தியன் அடையாளம் தமிழன் வரலாற்றை அழிக்க வந்த வடவன்  திட்டம்.

தமிழின தாய் மொழி தமிழர்கள் என்ற இனப்பெயரை இயல்பாக பெறுவார். நாம் பேசும் மொழிதான் வாழ்வியல் மரபுகளை பண்பாட்டு பெருமைகளை வளர்க்கும். தமிழ் மொழியை இழந்து நிற்கும் பல தமிழர்களை நாம் அறிவோம்.அந்த நிலை வரமால் காப்பது நமது கடமையாகும். தமிழர்களாக எழுவோம் ,தமிழ் வளர்ப்போம் , பிறகு ஒரு கட்டுரை வழி  யாரெல்லாம் தமிழர் என்று பதிக்கிறேன். அதுவரை “இருப்பாய் தமிழா நெருப்பாய்” என்று விடை தருகிறேன்.

மன நலம் மண்ணுயிர்க்கு ஆக்கம்
இன நலம் எல்லா புகழும் தரும்.
– வாழ்க தமிழன்.

உலகதமிழர் பாதுகாப்பு மையம் மலேசியா

பொன்.ரங்கன்