இந்த தலைப்பை பார்த்தவுடன் சிலருக்கு தலையில் சூடேறும். பலருக்கு மண்டையில் சுகமாக இருக்கும். மலேசியத தமிழர்களின்
மக்கள் தொகை வரலாறை எழுதினால் ஏக்கமாக இருக்கும்.
நண்பர் ஜானகி ராமனின் இந்தியர்கள் தேளிமாவில் அவர் இந்தியர்களைத்தான் ஓட்டிக்காட்டினார். அக்காத்தில் 99% அசல் தமிழர்களை இந்தியனாக படம் காட்டி, இந்நாட்டை மேம்படுத்திய தென்னகத தமிழர்களை…பழமைவாய்ந்த ஒரு தேசிய இனத்தின் பெருமைகளை மூடி மறைத்து வெறும் 1% கலப்பியல் இந்தியனின்
அதுவும் தண்டல்களாக தமிழர்களை மேய்ந்தவர்களை பாடை ஏத்தி
இருந்த வத்தல் வரலாற்றை நிராகிக்கிறேன்.
60 க்கும் 70கும் இடையில் இலவச ராஜுலாவில் தமிழகம் சென்றவர்கள் 20 லச்சம் என்று எங்கோ படித்த ஞாபகம். இப்போது 18 லச்சம் மிச்சம் என்கிறது நாட்டின் குறியீடு. இதை பினாங்கு துணை முதல்வர் ராமசாமி மறுத்துள்ளார். ஆனால் கணக்கு படி 30 லச்சம் தமிழர்கள் உள்ளோம் என்கிறார். அவர் ஆய்வு நாடெங்கிலும் தைப்பூச விழாவுக்கு வரும், போகும் மற்றும் வீட்டில் உள்ளவர்களை வைத்து பத்திரிக்கையில் பாடம் சொன்ன கதை.
ஐம்பது ஆண்டுகளாக எதையோ இந்தியன் /தமிழன் நாடாளுமன்ற உறுபினர்களை நாமெல்லாம் ஒட்டு போட்டு வைத்தும் ஒருவர்கூட மலேசியத தமிழர்கள் இந்தியர்களின் மக்கள் தொகை என்ற அடிப்படை உரிமையை கூட தெரிந்து அறிவிக்க முடியாதவர்களாக இன்றும் கும்பிடு கூட்டமாக உள்ளோம்.
பிரதமர் சொன்னார் இந்தியர்கள் 7 அரசியல் கட்சிகளில் பல நிறுவைகளில் உள்ளனர். தேர்தல் வசூலுக்கும், கட்சி கோசங்கள், துணி கட்டவும், பதாதைகள் ஒட்டவும் அலசும் வர்க்கமாக் இந்த தமிழன் தான் ஓடுகிறான் அங்கு இந்தியனை காணோம்?
யார் அந்த மலேசிய இந்தியன்? என்றால் தமிழர்களை மேய்க்கும் தமிழன் அல்லாத எல்லாம் இந்தியனாகும். புரியும் என்று நம்புகிறேன். இவர்களைத்தான் அதிகமானவர்களை சட்ட /நாடாளுமன்ற வலைக்குள் வாக்கு போட்டு அசுவாச ஆர்ப்பரிப்பு செய்கிறோம். பதவிக்கு போனவர்கள் பக்குவமாக “தங்கள் இன உறவுச்சேவையில்” உலர்ந்து உரச ஓரிரு தமிழன் பதவி பரதேசிகளும் காசுக்கும் கீசுகும் மாரடித்து இந்த தமிழனை முறைக்கிறார்கள்.
என்ன இது தமிழர்கள் மக்கள் தொகையில் ஆரம்பித்து அரசியல் ஆடம்பர ஆக்கிரமிப்பு என்று யோசிக்கும் குடைச்சல் புரிகிறது. இந்த மக்கள தொகை ஆய்வுக்கும் அரசியல் ஆதிகத்துக்கும் தொடர்பு உண்டு என்பதை உணர்த்தவே இந்த பந்து விளையாட்டு நடுவண், இரண்டு கோடு காப்பான் இருந்தும் விளையாடுபவன் பந்தை விட்டு ஆளை உதைப்பது போல அரசியல் ஆசாமிகள் பதவிக்கு பிறகு உதைப்பதும் அடுத்த தேர்தலுக்கு புது ஆட்டக்கார்களை தேடுவதும் உலக இயல்பு.
இதில் நம்ம நாட்டில் அரசியல் ஆளுமை இன மோதல், மத மேய்தல் பரிவர்த்தனையில் படர்வதை தவிர்க்க முடியாது என்பதை பல அரசியல் மாநாடுகள் வீடியோ போட்டு காட்டி உள்ளனர். இப்போது புதிதாக மிதவாதம், சகிப்பு தன்மைகளை மலேசியர்கள் கடைபிடிக்க வேண்டும் என்ற மலாய் தலைவர்களின் புதிய மருத்துவம் கொடுத்து, பிறகு அடுத்த மாநாடுகளில் மீண்டு ஊசி போட்டு சமாதான போதனைகள் வெடிக்க ரசித்துள்ளோம்.
இப்போதுள 30 மில்லியன் மலேசியர்கள் மக்கள் தொகையில் இந்தியர்கள் உறவு நிலை 7% இதில் தமிழர்கள் 6% என்றாக 1.8 மில்லியன் தமிழர்களும் 1% இந்தியர்கள் 3 லச்சம் மாக கணக்கில் வைத்து தமிழர்கள் 1.8 மக்கள் தொகையில் நமது 7 கட்சிகளின் அரசியல் அவமானம் எனன என்று பார்ப்போம் ?
என் ஆய்வுபபடி தமிழர்களின் 5 லச்சம் தான் நமது ஓட்டு உரிமை பெற்றவர்கள்.மிச்சமான 1.3 மில்லியன் 21 வயதுக்கு கீழே மாணவர்கள். ஓட்டு போடாத அப்பாவிகள். ஓட்டுக்கு பதிவு பண்ணாதவர்கள்.
நாட்டின் மக்கள் தொகை 80 மிலியனாக இருக்க வேண்டும் என்று 90 களில் முன்னாள் பிரதமர் சொன்னார். அப்போது நாட்டின் மக்கள் தொகை 25 மில்லியன் .இப்போது 30 மில்லியனை எட்டி விட்டோம். தமிழர்கள் 8% லிருந்து 6% ஆகா குறைந்து உள்ளோம் இது 2020வில் நாட்டின் மக்கள தொகையில் 35 மிலியனில் தமிழர்களின் நிலை 2% ஆக சுமார் 700,000 (7 லச்சம்தான் ) நமது அரசியல் “நாமமாக” இருக்கும் என்ற உண்மையில் ஒரு அதற்சி கதறல் தெரிகிறது.
நாட்டின் இந்தியர்கள் /தமிழர்கள் .சீனர்கள் ஒரு மனைவி மட்டுமே நமக்கு உரிமை உண்டு. மலாய் சகோதர்களுக்கு 4 மனைவிகள் பிறகு இதர உறவுகள் எல்லாம் அவர்களின் மக்கள தொகை அமோக வளர்சிகளை தொடும் தொடரும்.
ஒரு நாட்டின் இன அழிப்பு இரண்டு விதமாக வரும் ஒன்று மக்கள் தொகை கட்டாய சட்ட கட்டுப்பாடு. இன்னொன்று மொழி அழிப்பு அதன் காரணமாக கலை கலைசார பண்பாட்டு பரிதாபங்கள்.
இன்று தமிழ்ப்பள்ளிதான் தமிழர்களின் தேர்வும் தீர்வும் என்ற ஓயயாரத்தின் ஊடக ஓலம் ,இந்த சாதுரியமான மக்கள் தொகை அழிப்புக்கு பிறகு மொழி மாயம் காரணமாக தமிழ்ப் பள்ளிகளை “தேடுவோம் நிலையில்” களைந்து, கலைத்துப்போவோம்.
இன்றே சிலரின் வாயில் வரும் சிறுபான்மை இனம் என்ற குறியீடு நம்மவர்களை பொறுத்த மட்டில் ஓர் ஆபத்தான அறிகுறி. கடைசி தமிழன் உள்ளவரை விடமாட்டோம் என்பதெலாம் இலக்கு தெரியா ஊர் குருவிகள் கோசம். இப்போதெல்லாம் சிட்டு குருவிகள் கூட்டத்தையே காண முடிவதில்லை என்ற உவமையை யோசியுங்கள் ?
நான் இங்கு எடுத்த்கொண்ட தீர்வு தேசிய முன்னணி தலைமையில் குடும்ப கட்டுபாடு திட்டத்தில் சீனர்கள் தமிழர்கள் ஒரு மனைவி ஒரு திருமணம் என்ற காட்டுப்பாட்டில்நம் சங்கை அமுக்க பொருளாதார
சிக்கல. அவர்களுக்கு குடும்ப மேம்பாடு திட்டம். 4 மனைவிகள் 10 பிள்ளைகள் என்ற விதியை சம சீராக எல்லோருக்கும் தரும் உரிமையை பாகாதான் தருமா ?அல்லது தேசிய கூட்டணி மாற்றுமா என்று கேற்கிறோம்?
நாட்டின் சிறப்பு அம்சமாக விளங்கும் பல்லினம் , சகிப்புத்தன்மை, மிதவாதம்,மரியாதை இவை இன்னும் 20 ஆண்டுகளாவது செழிப்பாக இருக்க, இன மக்கள் தொகை வளப்பமும் முக்கியம் .
இஸ்லாம் ஒரு இனவாத மதமல்ல மனிதம் மதம் என்பதில் நமக்கு நம்பிக்கை உண்டு. எந்த அரசியல் கட்சி மக்கள் தொகை விழிப்பில் சம நிலை செய்யும் என்பதில்தான் மலேசியத தமிழகளின் விமோற்சணம் பிறக்கும்.இல்லையேல் இன சகிப்புததன்மை என்பது சாம்பல்தான்.ஆளும் கட்சி என்பது மக்கள் ஜனநாயகம் தழைக்க கடவுள் தரும் குழைந்தை செல்வம் மக்களால் மாண்பு பெற வேண்டும் .மாண்புமிகுகள் சிந்திப்பார்களா ?
-பொன்.ரங்கன்
பொன் ரங்கா என்ன …செய்வது உனது உ. ப .த டுங்கி டுங்கி
நாம் இருவர் நமக்கு இருவர் என்ற பொன்மொழி வசதிப் படைத்தோரிடையே நிரந்தரமாகி விட்டதால், அதிக எண்ணிக்கையிலான தமிழரைப் பார்ப்பதை விட தரமான தமிழரை பார்க்க முயற்சிப்போம்.
இஸ்ரேலியர்கள் மக்கள் தொகையில் குறைவுதான். ஆனால் அவர்களின் உலக அளவிலான சாதனைகள் ஏராளம். நம் நாட்டில் பஞ்சாபியர்களின் வாழ்க்கைத்தரம் போற்றத்தக்க நிலையில் உள்ளது. நாம் சிறுபான்மையாக இருந்தாலும் பிறர் போற்றும்படியாக நன் முறையில் வாழ்ந்து காட்டவேண்டும்.
SIVA அவர்களே நம்மவர்களுக்கு உரைக்காது- என்ன செய்ய?
இந்த காலத்து பிள்ளைங்க எங்கையா கேகரானுங்க இவன் குட சேராதே அவன் குடா சேராதேன்னு சொன்னாலும் கேக்கமாற்றானுன்களே அப்புறம் போலிஸ் வந்து வீடு முன்னுக்கு நிற்கும் . சிருபன்மையோ பெரும்பான்மையோ நாம சரியா இருந்தாலும் சுத்தி இருகிரவனுங்களும் சரியா இருக்கணுமே . கோவிலுக்கு ஜிப்ப போடுன்னு சொன்ன நான் சட்டை தான் இல்லேன என் கூட்டாலிங்க ஒரு மாதிரியா பார்பங்கனு சொல்றான் கடைக்கு போடற சட்டை எல்லாம் கோவிலுக்கு போடுவேன்னு அடம்பிகிற பிள்ளைய என்னனு சொல்லி எசறது .