மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையில் கல்வி பயில புதுவாய்ப்பு கிடைத்துள்ளது. சில காலங்களாக இந்திய ஆய்வியல் துறையில் கல்வி பயில வாய்ப்பு கிடைப்பதில் தமிழ் மொழி கற்ற மாணவர்களுக்கு வாய்ப்புகள் குறைவாக இருந்தது நாம் அறிந்த செய்தியே. இக்குறையினை நீக்கும் பொருட்டு, இந்திய ஆய்வியல் துறையினர் எடுத்த முயற்சிகளுள் ஒன்று, இரண்டாம் முறையாக கல்விப் பயில வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தல் ஆகும். துறையினரின் முயற்சி இப்போது இப்பொழுது வெற்றியடைந்துள்ளது. இத்துறையில் மாணவர்கள் கல்விப் பயில மற்றொரு வாய்ப்புக் கிடைத்துள்ளது. எதிர்வரும் பிப்ரவரி மாதம் தொடங்கவிருக்கும் கல்வியாண்டில் இவர்கள் இணைந்து கல்விப் பயில வாய்ப்பு உருவாகியுள்ளது.
மாணவர்கள் இந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய இறுதி நாள், 13 ஜனவரி 2015 ஆகும். விண்ணப்ப பாரத்தினை www.um.edu.my –>News and Event பகுதிக்குச் சென்று பெற்றுக் கொள்ளலாம்.
மேலதிக விபரங்களைப் பெற தொடர்புக் கொள்ளவும்.
Head Admission & Record Section, Examination Building, University of Malaya, 50603 Kuala Lumpur, Malaysia, Tel: +603-7967 3279 / 3440 / 3441 / 3502, Fax: +603-7967 3449, Email: [email protected]
குறுகிய நாள்களே எஞ்சியிருப்பதால் மாணவர்கள் இவ்வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இச்செய்தி தினசரி நாளிதழ்களிலும் வர வேண்டும். மாணவர்கள் பயன் படுத்திக் கொள்ள உதவியாக இருக்கும்…!
2015 ஆம் ஆண்டு இந்தியர்களுக்கு பல இனிப்பான செய்திகளை கொண்டுவர அனைவரும் இறைவனை வேண்டிக்கொள்வோம். வாழ்க. சிவ சிவ.
அட போங்கப்பா, தும்பியை விட்டு வாலைப் பிடித்த கதையாக இருகின்றீர்கள். SPM மற்றும் STPM தேர்வில் எத்துனை மாணவர்கள் தமிழ் மொழி பாடத்தை எடுகின்றார்கள்?. தமிழ் பள்ளியில் இருந்து போன திறமையான மாணவர்கள் எல்லாம் அறிவியல் பிரிவில் சென்று தமிழ் பாடத்தை எடுக்க முடியாமல் கை விடுகின்றார்கள். காரணம் கல்வி அமைச்சு SPM தேர்வில் 10 பாடங்களுக்கு மேல் எடுக்க முடியாது என்று போட்ட கட்டுப்பாடு. அப்படியே, தமிழ் மொழியை SPM தேர்வில் எடுக்கும் மாணவர்கள், எதிர்கால தொழில்துறை நோக்குடன் அதற்குத் தகுந்த 3 பாடங்களை மட்டுமே STPM பரீட்சையில் தேர்வு செய்ய முடியும். அப்புறம் எப்படி தமிழ் மொழி வளர்ச்சி காணும் இந்நாட்டில்?. முதலில், தமிழ் மொழியில் இளங்கலைப் பட்டம் பெற்றால் அவர்கள் எத்தொழில் துறையில் அமர்ந்து வேலை செய்யலாம் என்று ஒரு பெரிய பட்டியலைப் போடுங்கள். அதனால் அவர்களுக்கு கிடைக்கப் போகும் நன்மைகளை எடுத்துச் சொல்லுங்கள். அப்புறம் இந்திய ஆய்வியல் துறைக்குப் புதிய மாணவர்களை சேர்ப்பது சுலபம். எங்கே இனிப்பு இருக்கின்றதோ, அதைத் தேடித்தான் எறும்பும் ஊரும்.
தமிழ் நாளேடுகளில் இந்த விளம்பரத்தை இடம்பெற செய்யுங்கள்
இன்று கடைசி நாள். இனி மேல் பத்திரிகைகளில் போட்டு……….விட்டுத் தள்ளுங்கள். தேனி, நீங்கள் சொன்ன கருத்து சரியான கருத்து. வேலை வாய்ப்புக்களை வைத்துத் தான் அனைத்தும் கணக்கிடப்படுகின்றன. நல்லதே நடக்கட்டும்!
இவர்களுக்கு தமிழ்ப் பTதிரிகைகளிகளிலும் வேலை கிடைக்காது.. உண்மை NIலவரம்
வாய்ப்புகள் பற்றி பிறகு சிந்திப்போம்.முதலில் மலாயா பலகலை கழகத்தின் தமிழ் [இந்திய] ஆய்வு துறையை உயிர்ப்பிக்க செய்வோம்.என் மகன் SPM . தேர்வில் தமிழ் மற்றும் இலக்கியத் தமிழிலும் “A ” எடுத்திருந்தான் STPM எடுக்க வைத்தேன்.வந்து சொன்னான் ” பாடங்களை குருப்-குருப்பாக பிரித்திருக்கிறார்கள்.மலாய் எடுத்தால் தமிழ் எடுக்க முடியாதாம்.தமிழ் எடுத்தால் மலாய் எடுக்க முடியாதாம்” என்னிடம் ஆலோசனை கேட்டான்.சொன்னேன் ” அப்படிஎன்றால் நீ மலாய் பாடம் எடுக்காதே நமது தாய் தமிழை எடு” என்றேன்.மீண்டும் வந்தான்.” அங்கு தமிழை சரியாக போதிக்கவில்லை.ஆசிரியரும் பொருத்தமானவராக தெரியவில்லை.ஏனோ-தானோவென்று சொல்லிக்கொடுக்கிறார்கள்.”என்றான்.”பாதகமில்லை.நான் சொல்லி தருகிறேன்.நீயும் தானாக கிரகித்துக்கொள் என்றேன்”.இப்பொழுது தேர்வு முடிவுக்காக காத்துக்கொண்டிருக்கிறான்.தமிழில் “A ” கிடைப்பது உறுதி.அதேபோல் மற்ற பாடங்களிலும் நல்ல தேர்ச்சி கிடைக்க வாய்பிருக்கிறது.அதற்கிடையில் stpm மாணவர்களுக்கான MUET ஆங்கில தேர்வில் பல்கலை கழக நுழைவுக்கு தேவையான 4 BAND எடுத்துள்ளான்.stpm தேர்வு முடிவை பார்த்து என் மகனை மலாயா பல்கலை கழகத்தின் இநதிய ஆய்வியல் துறையில் சேர்ந்து படிக்க ஆவல் கொண்டுள்ளான்.பார்ப்போமே இடம் கிடைக்குமா கிடைக்காதா என்று.எனது இலட்சியம் என்னவென்றால்.எனக்கு 4 பிள்ளைகள்.இந்த 4 பிள்ளைகளும் ஆரம்ப கல்வி முதல் பல்கலை கழகம் வரை எங்கள் தாய் தமிழை ஒரு பாடமாக கட்டாயம் எடுத்து படிக்க வேண்டும்.எதிர்காலத்தின் வாய்ப்புகள் பற்றி எனக்கு கவலை இல்லை.என் பிள்ளைகள் என் இனத்தின் வரலாறுகளையும் கலை கலாசாரங்களையும் தெரிந்துக்கொள்ள என் தாய் தமிழை அவர்கள் அறிந்திருக்க வேண்டும்.அதுதான் எனக்கு முக்கியம்.மற்றவைகளை பற்றி எனக்கு கவலை இல்லை.
கரி காலரே தலை வணன்குகிREன் . ஆனால் தமிழோடு உலக அறிவும் அவசியம்