தமிழ் வாழ்த்துப்பாடலும் தமிழர் சின்னமும் சிறார் சமயமும் !

contentwriting_1தமிழர்களிடையே கடவுள் வாழ்ததுப்பாடலை விட்டு விடுவோம்.
அது ஒரு கடல். அல்ல அல்ல கருங்கடல். அப்படியே தேடி எடுத்து இதுதான் என்றால் இல்லை என்று  முக்குளிப்போர் பலர் நீந்த வருவார்கள்.

இப்போது குழம்பிப்போய் உள்ள தமிழ் வாழ்த்துப்பாடல் எது? உலகத தமிழர் சின்னமெது ? என்று பார்ப்போம். இதற்கு  சில தமிழ் /தமிழர் மாநாடுகளை நாம் கையில் பிடித்து பிழிய  வேண்டி உள்ளது.

தமிழ் வாழ்த்துப்பாடல்கள் பல நம்மிடையே பல நிகழ்வுகளில் பார்த்து கேட்டு உள்ளோம்.  சில நேரங்களில் தமிழ் வாழ்த்துப்பாடல் என்று அறிவிப்பு செய்துவிட்டு கடவுள் பாடல்களை போட நாமெலாம வேறு வழி இல்லாமல் எழுந்து  நிற்போம்.  கடவுள் வாழ்த்துப்பாடல் என்று சொல்லி தமிழ் வாழ்த்துப்பாடல் ஒன்றை போடுவார்கள் ! விசியம் புரிந்தோர்  உள்ளுக்குள் குமுருவோம். ஏனையோர்  ஒன்றுமே நடவாதது  போல அடுத்த நிகழ்வுக்கு நகர்வார்கள்.

நமது தமிழ்ப்பள்ளிகளில் கூட கடவுள் வாழ்த்துப்பாடல் ,  தமிழ் வாழ்த்துப்பாடல்கள், பள்ளிப்படல்கள் என்பதில் பல குழப்பங்கள் இருக்கவே செய்கிறது. இந்த ஆண்டு 2015ம்  தமிழ்ப்பள்ளிகள் திறந்த போது பல பள்ளிகளை ஆராய்ந்தோம் . இங்கு பெயர் சொல்ல முடியாத மரியாதையில் சிக்கலை மட்டும் சொல்ல வந்துள்ளேன் !

தமிழ் வாழ்த்துப்பாடல் என்றால் என் நினைவுக்கு அல்லது என் தமிழ்ப்பள்ளியில் பாடிய பாரதியார் படாலான:-
” வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி வாழிய வாழியவே! ”
நிரந்தரமாக மனதில் உள்ளது. இது தமிழ் இசைப்படலாகவும் உள்ளது ஆனால் நமது வானொலிகள், ஆசிரியர்கள் மறந்து விட்டனர் எனலாம்.

மகா கவி என்று தமிழனுக்கு ஒரு கவிஞ்சன் மட்டுமே என்று சொல்லி அவர் தந்த பாடலை மறந்து விட்டு இப்போது வசதிக்கு ஏற்ப தமிழ் வாழ்துபாடல்கள்  பலவும் பல தலைவர்களால் முன் மொழிந்து
வழி மொழிந்து மொழிச் சரிவுகள் பல நடக்கின்றன. ஒரு மொழிக்கு பல பாடல்கள்  இருக்கலாம் ஆனால் தமிழ் வாழ்த்துப்பாடல் என்பது ஒன்றாக இருந்து இருக்க வேண்டும்.

இதில் நம் நாட்டு மலேசியத தமிழர் எழுத்தாளர் சங்கம் கூட தப்பு செய்து ஒரு புதியப்பாடலை  தமிழ் வாழ்துப்பாடலை அறிமுகம் செய்து உள்ளனர். பிறகு கடந்த மாதம் பினாங்கில் நடந்த சர்வதேச தமிழ் மாநாட்டில் இன்னொரு புதிய தமிழ் வாழ்த்துப்பாடல் அரங்கேறி உள்ளது. இதுபோலவே கண்கண்ட வரையில்  பல நிகழ்வுகளில் பல தமிழ் வாழ்துப்பாடகள் இந்த தமிழர் இனத்தை, இசை வழி இந்த உன்னத  இனத்தை ஒரு நிலை படுத்தாமல் பரிதவிக்க விட்டு உள்ளனர் நமது “அறிந்தோர்” இலார்  கூட்டம். தமிழர் நாட்டில் செம்மொழி மாநாட்டில் கூட இன்னும் ஒரு புதிய பாட்டு. வெறும் திராவிட அரங்கேற்றமாகா ….!

என் இலக்கிய அறிவுக்கு பினாங்கு சர்வதேச தமிழ் மாநாட்டு பாடலும் தமிழ் எழுத்தாளர் சங்க மற்றும் செம்மொழி பாடலும் சுத்தி சுத்தி ஒரே சொல் சுவைகளை அதே அர்த்த முறைகளில் மாற்றி மறைத்து தமிழை இப்படியும் போட்டு உருட்டலாம் என்று பதிவாகி உள்ளது.

இங்கு என்னால் வரி பிரித்து வசனம் சொல்லி இசை போட்டு எழுத முடியாது. நமது வாசகர்கள் ஆய்வுக்கு விட்டு விடுகிறேன். என் ஆதங்கம் உலகத தமிழர் இனத்துக்கு ஏன் ஒரு தமிழ் வாழ்துப்பாடலை நாம் ஒன்று பட்டு இணைக்க முடியாது தவிக்கிறோம்?  பல பாடல்கள் சரியா ?  இதில்  ”சங்கே முழங்கு” என்ற  சினிமாப  பாடல் என்றாலும் அதன் தமிழ் முழக்கம் தமிழர்களின் வீரமிகுந்த விவேகம்  காணகிடக்கின்றது என்பேன்.

அடுத்து உலகத் தமிழர்களின் இன மான சின்னமாக பன்நெடுங்காலமா சங்கே முழங்கு சின்னம் பழக்கத்தில் இருந்ததை மறந்து பிறகு முரசு சின்னம்,புத்தகச்சின்னம்  அதையும் மறந்து இப்போது நிகழ்வுக்கு ஒரு சின்னமாக ஆண்டுக்கு ஒரு சின்னமாக மறு மலர்ச்சி என்ற பேரில் வரைந்து பிறகு மறைத்து போகும் நிலையில் நமது தமிழ்சசின்னங்கள் சீரழிந்து ஒரு பிடிப்பும், தொடர்ச்சியும் இல்லாது போய் விடுகிறது.

இவ்விரண்டும் ஒரு சிக்கலில் இருக்க… இந்து  மதச்சின்னம், சைவ சிந்தாந்தச்சின்னம்  ஓம், ஸ்ரீ , சேவல் கோழி சின்னங்களும் யார் எதற்கு என்று தெரிந்தால் ஒழிய தமிழர்களின் தமிழ் வாழ்த்துப்ப்பாடல்கள் , தமிழர்  இனச்சினம் , தமிழர்  சைவ சித்தாந்த சின்னங்கள் எது என்பதை தெரிந்து, உணர்த்து,  பரப்பி நம் தமிழர் இன மீட்சியை அடுத்த தலைமுறைக்கு முறையாக கொண்டுசசேர்க்க முடியும்.

இன்று நம் நாட்டின் தமிழ்ப்பளிகளில் அதிகமான தமிழ்பபிள்ளைகள் இருந்தும் தமிழர்களின் சைவ சித்தாந்த தெய்வ பாடல்களை பாடாமல் தமிழர்களுக்கு சம்பந்தம் இல்லாத சமஸ்கிரித நமது சமய சிந்தனையை முழுமையாக அறியா குழந்தைகளுக்கு தருகின்றனர்ன். இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழ் ஆசிரியர்கள் போர்வையில் சமய வேதங்கள் புரியாமல் காண்டத்தை காண்பித்து விளங்காத சமஸ்கிருத மந்திரங்களை திணிக்கும் சோம்பேறித்தனம் கடுமையான கொடுமை எனலாம். திருக்குறளை ,பாரதியார் பாடல்களை விடவா நேர்த்தியான விசியங்கள் உண்டு.?

விளங்காத சம்ஸ்கிருத மந்திரங்களில் உண்டு? நான் இங்கு உதாரணங்கள் காட்டி எழுத முடியவில்லை மாறாக நமது  தமிழ் மொழி ,இன ,சமய அடிப்படை தவறுகளை குளறுபடிகளை உங்களோடு சேர்ந்து நேர் செய்ய ஆசைப்படுகிறேன் . தெரிந்தவர்கள் பதிவு செய்யலாம்.  இது இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலகத தமிழர் பாதுகாப்புக்கு மாநாட்டிற்கு ஒரு அரணாக விளங்கும்.

-பொன்.ரங்கன்