மாநாட்டு மையத்திலிருந்து…. இதுவரை பார்த்தவைகளில் சில புதுமைகள் கண்டேன் …கேட்டவை அத்தனையும் பழமை. விடுபட்ட 10 ஆண்டுகளின் மாநாடு ஆர்வம் தெரிகிறது சில புதிய விபத்துகளை என்னுள் புரிதல் பார்த்தேன். ஆனால் இந்த மொழிக்கும் இனத்துக்கும் பாதுக்காப்பு கவசம் தொலைந்து மீண்டும் ஒரு கூடி களையும் நிழல்கள் காற்றில் அலைவதை கண்டேன். உலக அங்கீகாரம் இல்லாத ஒரு இனம் எதையோ தேடுகிறது ..
மூளைக்குள் முடுக்குகள் சிக்குகிறது.அதிகம் யோசித்தால் stroke அடித்தால் எது ஊமையாகும் என்ற பயத்தில் வெளி ஏறுகிறேன். நாளை போ என்கிறது உணர்வு !
ஏதும் உண்டா ? என்கிறது என் அறிவுப்பசி! வந்தவர்கள் யோசிக்காத
விந்தை என்னை அலட்ட என்ன நான் வேற்று கிரகத்து வினோதமா?
புரியாமல்… மாநாடு எப்படிங்க என்றேன் சிலரிடம். சிரிப்பில் சித்திரம் வரைந்த தமிழ் உறவுகள் நகர்வதில் ….தமிழுக்கும் தமிழனுக்கும் அடுத்த நகர்வு செம்மொழி மாநாடு போல செழிப்பில்லாமல்,,,பிரவாசி பரிதாபம் போல ,,,பினாங்கு சர்வதேச சாபக்கேடு தமிழ் மாநாடு போல …மாநாடுகள் மட்டும் இந்த உலகத் தமிழனை அவன் மொழியை அவன் பண்பாட்டை அவன் தோல்விகளை மீட்டு எடுக்குமா?
இந்த இனம் மதிக்கும் அளவு ஒரு தமிழ்த தலைவனை தேடுகிறேன்?
பாரதம் அடிமைப்பட்டுக்கிடந்த காலத்தில் பாரதி சொன்னது இன்னும் நடக்கவில்லை. அவர் கவிதைகளில் கோர்த்து வைத்த சங்கமங்கள் இன்னும் சமாதனம் அடைய வில்லை.
மாநாடுகள் முடியும்,ஏடுகள் நிறையும் , அந்த உலகத் தலைவனை நாம் அடையாளம் காணாமல் அந்த புற நானூற்று தமிழ்த தாய் வீர மகனை இனத்துக்கு இழந்தால். ஒரு விவேக மகனை தமிழுக்கு தேடுகிறாள் மாநாடுகள் மனது வைக்கவில்லை. அவள் இன்னொரு பாரதியை கேற்கவில்லை ..வாழும் காலத்து தமிழர் மனிதம் நிறைந்த தமிழமகனைத தானே கேற்கிறாள். மாநாடுகள் தர தகுதி உள்ளவைதானே ? இந்த தமிழன் மனம் மட்டும் ஏன் மறுக்கிறது?
மன நலம் மண் உயிர்க்கு ஆக்கம்
இன நலம் எல்லாப்புகழும் தரும்
எப்போது ?
எந்தத் தமிழ்த்தலைவனும் அகப்படப் போவதில்லை. அப்படியே அகப்பட்டாலும் அந்தத் தலைவனை பேசியே, காட்டியே கொன்று விடுவான் தமிழன்! பிரபாகரனுக்கே வேட்டு வைத்தவன் தமிழன்! இவனையா நீங்கள் நம்புகிறீர்கள்? என்னைக் கேட்டால் ஒன்று சொல்லுவேன். ஒவ்வொரு குடும்பத் தலைவனும் தலைவனாக மாற வேண்டும். வேல்பாரிகளை உருவாக்க அல்ல! விவேக மகன்களை உருவாக்க! அப்போது தான் தமிழன் தலை நிமிர முடியும்! அது வரையில் நம்மை நாமே நிமிர்த்திக் கொள்ள வேண்டியது தான்! குற்றம் அல்லவே!
வெளிநாட்டு பங்கேற்பாளர்களுக்கு இது ஒரு சுற்றுலா…உள்நாட்டு பங்கேற்பாளர்களுக்கு அவர்களின் அன்றாட கடமையிலிருந்து ஒரு சிறு ஓய்வு காலம் இந்த 3 மூன்று நாட்கள். மற்றபடி 10 ஆண்டுகளாக 20 ஆண்டுகளாக 30 ஆண்டுகளாக கூடுகிறார்கள்…மாநாடு நடத்துகிறார்கள் கலைந்து போகிறார்கள். தமிழுக்கும் தமிழனுக்கும் தமிழ் இனத்துக்கும் ஏதாவது செய்ததாக தெரியவில்லை. ஆறாவது மாநாடு இங்கே நடத்தப்பட்ட போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன ஆகின என்பதை ஆராய்ந்தாலே போதுமானது. எந்த மாற்றமும் இல்லை..எல்லாம் அப்படியேதான் இருக்கின்றன. முடிவாக இது ‘ஆண்டிகள் “மடம்” கட்டிய கதைதான்…நம்முடைய பேரப்பிள்ளைகள் இங்கே 60-வஃது மாநாட்டைக் ‘கொண்டாடினாலும்’ ஒன்னும் மாற்றம் இருக்காது..எல்லா ஆணியும் அப்படியே தான் இருக்கும் ஆனால் துருப்பிடித்து ‘மக்கி’ப் போயிருக்கும். அவ்வளவுதான்.
தமிழா !!! எடு அந்த உருட்டு கட்டைஅ..! ஓர் உலகத தமிழ்த தலைவனையும் காணோம் மாநாடாம் …? அவரு வைகோவை கூப்பிட்டான் இவரு வீரமணி இரண்டும் திராவிட தெலுங்கர்கள் ..தமிழனே தெரியாத தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுல தமிழர் இனம் என்ற தேசிய சிந்தனை இல்லாதா பாவிகள். தமிழர் நாடு தமிழன் முதல் அமைச்சர் பண்ணீர் செல்வத்துக்கு புத்தி வரணும் ..பினாங்கு துணை முதல் அமைச்சருக்கு ஞானம் பிறக்கணும் …தமிழனுக்கு பாதுகாப்பு இல்லாத பிதற்றல் …பழநிய …ஏச இதுவா இடம்? தமிழர் நாகரீகம் தெரியாத சஆஸ்மி அரசியல் புத்தி ..தமிழ் மொழி இலக்கிய அழிபான் முஹிதீன் முடிச்சி வைப்பார் …மானாட மயிலாட எல்லாம் கோலாட்டம் தான். தமிழனை வாழ் விடாத திராவிடன் மாநாடா போனது?
இனப்பற்றுள்ள, மற்ற இனத்தவரோடு நட்பைப் பாராட்டுகிற ; மொழியுணர்வுள்ள, அதே வளையில் மற்றவர்களின் மொழியுணர்வை மதிக்கிற ; தமிழறிவுள்ள , அதே வேளையில் மற்ற மொழிகளும் அறிந்து வைத்துள்ள ; தமிழர் பண்பாட்டை மதிக்கும் அதே வேளையில் , சிதைந்த பண்பாட்டினை மீட்டெடுக்கும் போர் குணமுள்ள ; ஒரு தமிழ்த் தலைவன் வருவான், வந்தால் ….. ஏற்கனவே அடிமைகளாய் ,காட்டிக்கொடுப்பவர்களாய், தமிழரின் உணர்வுகளை மதிக்காத விலை போகிறவர்களாய், இன உணர்வு, மொழியுணர்வற்ற பழம் வைதீக அடிமைத் தமிழினம் அந்தப் புதியத் தலைவனின் பின்புலத்தை ஆராயும், அவன் எந்த சாதியென சல்லடை போடும், தங்களுடைய சாதிக்காரனா என உறுதிப்படுத்திக் கொள்ள உசாவும், முதலில் , எக்காரணத்தைக் கொண்டும் அவன் ஒரு தாழ்த்தப்பட்ட, ஒதுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்டவனாக இருக்கவே கூடாது, உயர்சாதித் தமிழனாகிய நமக்குப் பஞ்சமத் தமிழன் தலைவனா? உள்ளுக் குள்ளே மனம் கிடந்து கொதிக்கும்;ஆலோசனைக்கு ஓடுவான் ஒரு வைதீகனிடம் ; எப்படி சாமி? என்பான் . அவனோ அடுக்காது, கொடுமை என்பான்; சற்சூத்திரத் தமிழன் ஒன்றுகூடி தன்னுடைய அரசியல் பலம், பணபலம் எல்லாவற்றையும் பயன் படுத்தி ஒரு புதியத் தலைவன் தலையெடுக்க முடியாதபடி கோணத்தனமாக சிந்திக்கவும், செயல்படவும் செய்வான். அந்த அளவிற்கு பலவீனமான வைதீக விளங்கில் பிணைக்கப்பட்டு கிடக்கிறது தமிழினம். வதீகமே தமிழனுக்கும், தமிழர்தம் இன , மொழி,பண்பாட்டு சீரழிவிற்கு பக்கபலமாக இருக்கும் போது, இதிலிருந்து மீட்சிபெற முடியாதபோது, எங்கிருந்து வருவான் ஒரு உண்மையான, இனமானமிக்க, மொழியுணர்வு மேம்பட்ட தமிழர்த் தலைவன்? வந்துவிட முடியுமா இந்த வைதீகப் பற்றுள்ள அடிமைத் தமிழர் சமுதாயத்தில்? விட்டுவிடுவார்களா என்ன?
இந்த நாட்டு அரசியலை எடுத்துக்கொள்ளுங்கள். எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு தலைவனை பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திலிருந்து காண முடிகிறதா? அப்படியே வந்தாலும் அவனும் சாதிவெறியோடுதானே வருகிறான்? கேட்டால் தாங்கள் ஒடுக்கப்பட்டதற்காக பழிவாங்கும்படியாகத்தானே செயல்படுகிறான்.
வைதீகப்பிணைப்புக்குள் இருக்கும் வரை, தமிழரிடை சாதியும், பிளவுகளும், உட்பூசலும், நண்டு வேலைகளும், துரோகங்களும் இருக்கவே செய்யும். இந்த நிலையில் எந்த வேலை முதல் வேலை என்பதை உண்மையிலேயே இனமானமிக்க தமிழர்கள் உணர்வார்களாக!
முதலில் ஆரிய அடிமையான ஊமைதுரைய மாஇகாவிலிருந்து அப்புறபடுத்த இனமான தமிழர்கள் முன்வரவேண்டும் .
தாய்மொழியில் புலமையற்றவர் தமிழ் இனத்தை வழிநடத்த தகுதில்லாதவர்.
வீரவசனங்கள் தமிழனையோ தமிழையோ வாழவைக்கப்போவதில்லை.தமிழன் ஒன்றுபட்டால்தான் உருப்பட முடியும்.அடுத்தமாநாடு தமிழின ஒற்றுமை மாநாடாக இருக்க வேண்டும்.
வீரவசனங்கள் தமிழனையோ தமிழையோ வாழவைக்கப்போவதில்லை.தமிழன் ஒன்றுபட்டால்தான் உருப்பட முடியும்.அடுத்தமாநாடு தமிழின ஒற்றுமை மாநாடாக இருக்க வேண்டும்.
இவர் அவரை குறை சொல்வதும் அவர் இவரை குறை சொல்வதும் நிறுத்திவிட்டு தமிழர் இனத்திற்காக எல்லோரும் முதல் அடி எடுத்து வையுங்கள் மற்றவை நல்லதை நோக்கி தொடரும்…..
இது ஒரு ஜால ரா கூட்டம் இன்ட பணத்தை எம்.ஐ இ டீக்கு மானவர்கள் வட்டி கொடுக்காமல் செய்தால் கோடி புண்ணியம் 4 விழுக்காடு வட்டி ஐயா ஐயா 4 விழுக்காட்டு வட்டி மாநாடு பூட்டு ஊரை ஏமாற்ற வீண்டாம்
உலகெலாம் உணர்ந்து ஏற்க ஒரு தமிழர் தலைவன் வருவான். எப்பொழுது? தமிழர் சொன்னது போல தமிழனாக சிந்தித்து, தமிழனாக வாழ்பவரே தமிழர் இனத்திற்கு தலைவனாக வர முடியும்.
தமிழர் தலைவனை நாம் எங்கும் தேடவேண்டிய அவசியமே இல்லை.
முதலில் நாம் வெளியில் தேடுவதைக் கைவிடவேண்டும். முதலில் ஒவ்வொரு ஆண்மகனும் ஆளுமையுடன் தத்தம் வீட்டில் தலைமப் பண்போடு குடும்பத்தை நடத்திச் சென்றாலே போதும் இளைய தலைமுறைகளே நம்மைப் பின்தொடரும். இந்த உலகத்தை ஆளாவிட்டாலும் நம்மினத்தை ஆளுமையுடன் ஆள்லாம்.
விதண்டாவாதம் செய்வதை விடுவோம். வீண் புரளிகள் பரப்பாமல் இருப்போம். நம்மைவிட மூத்தவர்களை அவர்களிடம் குறை கண்டாலும் மதிக்கப் பழகுவோம். தவறுகளை நயமாகத் தட்டிக்கேட்போம். உரிமைகளைக் கையாளும்பட்சத்தில் பொது இட்ங்களில் பகுத்தறிவுடன் நடந்துகொள்வோம். வல்லவனிடம் வாய்ச்சவலாடலால் வாதிடுவதை விடுத்து விவேகமுடன் புத்தியைத்தீட்டுவோம். பழமொழிகளையும் பஞ்சாங்கங்களையும் தூர எறிவோம்.
என்னய்யா வெங்காயம் நஜிப் கிட்ட மில்லியன் வாங்கி , தனது பதவி நீட்டிப்புக்கு பூட நாடகம் ஐயா நாடகம் இது கூட புரியலையா . தனது தமிழ் நீசனுக்கு தனக்கு veண்டியவனை ஆசிரியராகப் போட்டவன் . இவனா மலேசியாவில் தமிழுக்கு போராடுபவன் . மொத்தத்தில் கட்டிசியில் பதவியில் இல்லாவிட்டாலும் நமக்கு சேர வேண்டியதை இன்னும் திருடிக்கொண்டிருகிறான்
தமிழன்..ஐயா.பாப்பன்னா யாரு,திராவிடன்னா யாரு?
ராமசாமி. பார்ப்பான்னா ஆரியன்,திராவிடன்னா பார்ப்பான் அல்லாத மற்ற எல்லோரும்
தமிழன்..அவனை நாம் ஏன் எதிர்க்கவேணும்
ராமசாமி..சூத்திரன் தமிழன்,சூத்திரன்னு சொன்னா தமிழன் தேவடியாள் மகன்,வேசி மகன் என்று பாப்பான் சொல்றான்
தமிழன்..ஐயா ஒரு சந்தேகம் சூத்திரன் யாரு? தமிழன் யாரு? திராவிடன் யாரு?
ராமசாமி..அதான் சொன்னேனே சூத்திரன் என்பவன் தமிழன்.பாப்பான் தமிழனைத்தான் தேவடியாமக்ன் வேசிமகன் என்று சொன்னான்.
தமிழன் ..அப்போ திராவிடன் யாரு?
ராமசாமி…அதான் சொன்னேனே பார்ப்பான் அல்லாத நாம எல்லோரும்
தமிழன் …அப்போ சூத்திரன் யாரு?
ராமசாமி.. அட என்னப்பா நீ..சூத்திரன்னா தமிழன்,தமிழனைத்தான் தேவடியாள் மகன் வேசி மகன் என்று தான் பார்ப்பான் சொல்கிறான்.
தமிழன்.. அப்போ திரும்பவும் கேட்கிறேன்,திராவிடன் யாரு?
……………………தொடரும்
“மலேசியத தமிழர் காங்கரசுக்கு” காலம் கனிந்து விட்டது.
____________________________________________________
ம இ கா எனும் மலேசியன் இந்தியன் காங்கரஸ் முதன் முதலில் தமிழர் காங்கரஸ் என்ற பேரில்தான் முன் மொழியப்பட்டு பேசப்பட்டதாம். பிறகு சீக்கியர் ஆங்கில ஆளுமையில் இந்தியன் என்ற முனைப்பை தந்து மாற்றினார் என்று என் அப்பா சொன்ன கதையை நினைவு படுத்த ஆசைப்படுகிறேன்.
எதற்கும் ஒரு அடிப்படை வரலாறு வேண்டும் ஆதலால் …என் தந்தை 1908 திண்டிவன் செஞ்சியில் பிறந்தவர். 1920 சஞ்சியில் மலாயா வந்தார். சயாமில் காடுவெட்டி மேடு தட்டி ரோடு போட்டு தப்பித்து தாய்லாந்த்தில் மறைந்து என் தாய் மாமனோடு எப்படியோ கோல சிலாங்கூர் வந்தார்.
தமிழின தளபதிகள் தலைவர் கணபதி ,வீர சேனாவோடு பழகி தோட்ட தொழிலாளர் போராட்டத்தில் இறங்கி 1940 களில் ஆற்று வழியாக சபாக் பெர்ணம் தாண்டி சுங்கை பெர்ணம் தோட்டம் பிறகு குரங்காட்டி தோட்டம் உலு பெர்ணம் என்று 1984ல் இயற்கை அடைந்தார். இவர் ஒரு தொழில் சங்கவாதியாக இருந்தமையால் தமிழர்கள் சார்ந்த பல கதைகளை கூறினார். அதில் ஒன்றுதான் ம இ கா வரலாறு.
1984ல் தமிழ் நேசனின் 60தாம் ஆண்டு மணிவிழாவில் கலந்துக்கொள்ள கோலா லம்பூர் வந்த என் தந்தை அந்த விழா முடிந்து மறைந்தார் ..அவர் விட்டு சென்ற அந்த மணிவிழா மலர் மட்டும் பத்திரமாக வைத்துள்ளேன். அதோடு சயாம் மரண இரயில் எனும் ஐயா ஆர் .சண்முகம் எழுதிய புத்தகத்தையும் ஐயா தமிழியம் மு மணிவெள்ளையன் இதழையும், உலகத தமிழர் பண்பாட்டு இயக்கத தலைவர் ஐயா ஆசிரியர் இர .ந . வீரப்பனார் வெளியிட்ட 3வது உலகத் தமிழ்ப்பண்பாட்டு மாநாட்டு இதழையும் இந்த கட்டுரைக்கு துணையாக எடுத்துக்கொண்டேன்.
இந்த நினைவு முயற்சிக்குக காரணம் சமீபத்தில் 9 வது தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் முனைவர் சுபாஷினி அவர்கள் சொன்ன நமது சொந்த கதைகளையும் ஆவணப்படுத்தினால் நமது வரலாற்று பதிவுகளை நமது பிரதிநிதிகள் பயன் படுத்த இயல்பாக இருக்கும் என்ற புத்தியில் மலேசியத தமிழர்களின் அரசியல் எங்கு கோளாரானது என்று பதிவு செய்ய வ்ரும்புகிறேன்.
“திங்களோடும் செளும்பருதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடும்
மங்கு கடல் இவற்றோடும் பிறந்த
தமிழுடன் பிறந்தோம் நாங்கள்”
சத்தியமா ….அவர் ரஜூலா கப்பலில் வந்த பாடல் காட்சி கதை என்று நினைத்தேன்
என்று என் அப்பா சொல்லும்போதெல்லாம் என் அம்மா “இவருக்கு வேற வேலை இல்லை” என்பார் ..பிறகுதான் இது பாவேந்தர் பாடல் என்று அதன் தமிழ் வில்லங்கத்தை சொன்னார்.
இது எங்க அந்த அப்போதைய ம இ கா சிங்குகக்கு விளங்க போவுது ?இந்தியன் என்று ம இ கா மாநாடுகளை தமிழர்களை வைத்து ஆங்கில அரங்கேற்றங்கள் நடந்த ,இருந்த, இருண்டககாலங்கள் துன் சம்பந்தனுக்கு பிறகுதான் தமிழ் ஒலிக்கவும் ,ஒளிக்கவும் மாறியதாம்.ஆனால் தமிழர்கள் அதிகம் இருந்த ம இ கா களத்தில் இந்த தமிழர் காங்கரஸ் முயற்சி எழவே இல்லை என்பதுதான் நமது தமிழர்களின் ஏமாளித்தனம்.
சம்பந்தன் முடித்து மணிக்கா அதன் பின் சாமிவேலு வந்தும் கட்சியின் தலைவர்கள்தான் தமிழர்கள் ஆனால் பிற பதவிகள் எல்லாம் இதரவ்ர்கள் கொட்டமும் கூட்டமும் ஈயாய், பேயாய் சுத்த தமிழர்கள் வெறும் ஓட்டுப்போட மட்டும் பசுக்களாக மாறினார்கள். இன்றும் இதர ஜல்லி கட்டு இன காலைகள்தாம் ம இ கா வை ஆட்சி ஆளுது. உயர் பதவிகளும் அப்படித்தான் போனது. போகிறது.
இன்றைய தலைவர் கூட யார் என்று யாராலும் சொல்ல முடியாத அளவுக்கு கமுக்க நிலையில் இன ஆதிக்கம் இந்தியன் போர்வையில் புதையல் நாடகம் நடக்கிறது.
இன்று மலேசியத் தமிழர்களை ஏழு கட்சிகளில் இடரச்செய்த சிறுமை சாமிவேலு காலததில்தான் நடந்தது என்றால் அவரே அதை ஒத்துக்கொள்வார் ! இதில் பல மரபுக்கதைகள் உண்டு. புதுக்கவிதைகளில் இன்று ம இ கா வில் பல சீரியல்கள் ஓடினாலும் சாதிமையும், இனமும் பட்டாம் பூச்சிகலாக மின்னியல் அறையில் ஆளுமை வேட்டை நடக்கிறது.
ம இ கா வின் 6 லட்சம் உறுபினர்களில் 95 % சகிதம் தமிழர்களின் உரிமையை வெறும் 2000 பேராளர்கள் கொத்தி குதறும் பேராண்மை மாநாடு மீண்டும் கூடபபோகிறது.
மறுமலர்ச்சி என்று 30 ஆண்டுகளை விழுங்கிய சாமி வேலுவின் அரசியல் இறுதி காலம் வரை தமிழர்களை வளர்க்க வில்லை. ஆனால் தமிழர்களின் பொருளாதார முதலீடுகள் இந்த தமிழரல்லாத இதரவர்களின் உறவியல், குடும்பவியல் பூங்காவை பூஞ்சோலையாக்கி உள்ளதை மறுக்க முடியாது.
மலேசியாவில் பல மாநாடுகளை கண்டுவிட்ட தலைவர்கள் தமிழன் வாழ்வியல் அல்லது அரசியல் “தரமதை” இன்னும் அடையவில்லை.!
உலகத் தமிழ்ப்பண்பாடு மாநாட்டு மலரில் சாமிவேலு தமிழர்கள் பிறரை நம்பி கையேந்தி நிற்காமல் “சுயவுதவியில் வாழ்வோம் ” என்ற வார்த்தையை பாவித்துள்ளார். ஆனால்… நாட்டில் தமிழர்களுக்கு என்ன நடந்தது? இதில் இந்தியன் என்ற இதரவர்கள் தப்பித்துக்கொண்டார்கள். குறிப்பா மைக்காவை போர்த்திய இந்தியனான ஞாலிங்கம் , டோனி , நிஜம் சிங் இன்னும் பலரை பதிக்கலாம். இதில் சாமியும் ஏமாளிதான் அந்த அளவுக்கு தமிழன் என்பவர்கள் இந்தியனால் நம்பி கெட்டார்கள்.
சரி விடியலுக்குள் புகுவோம்…இன்று மலேசியாவில் இந்தியன் பாசறையில் தமிழர்கள் ,தெலுங்கர்கள், மலையாளிகள் என்ற மூன்று முக்கியஸ்தர்கள் இருந்தாலும் பின்னவர்கள் இருவரும் அவரவர் இயக்கம் வைத்து அரசியல் இன ஆளுமையில் இருப்பதுபோல தமிழர்கள் இல்லை, அல்லது இருக்க இவர்கள் விடுவதில்லை என்பது புதிய வெளிச்சம்.
இது இன பாகு பாட்டை பிரிக்க எழுதும் காகிதமல்ல கிழித்து பட்டமிட விச காற்றுமல்ல ..தமிழர்கள் தமிழனாக “அரசியல்” உணரும் காலம் கனிந்து விட்டது. அது ஒரு ராஜாங்கம். இனி ஜிங் ஜாங் போட நேரமில்லை. புதிய பொருளாதார் 60 ஆண்டுகள் 2020 முப்பது ஆண்டுகள் முடிய இன்னும் ஐந்தே ஆண்டுகள் மலேசியத தமிழர்களின் வாழ்வாதாரம் மேல்தரம் நோக்கி நடைபோட அரசியல் நகர்வில் நகருங்கள் தமிழர்களே ! நான் இன வாதி அல்ல என் இனத்தில் உரிமை விதி செய்ய உதவுபவன்.
அவர்கள் சங்கங்கள் வைத்து அரசியல் அமுக்கு நிலை வைத்து நமது ஓட்டில் நிமிர்ந்து நிமித்திகொண்டடனர் ! ம இ கா இவர்களுக்கு திறந்த பூங்கா பூத்ததை பறித்து, காய்ந்த இலைகளை தமிழர்கள் முட்டிக்கொள்ள மூட்டம் போடுவார்கள்.
தமிழ் நேசன் 60 ஆண்டு விழா மலரில் வந்த ஒரு கட்டுரை இப்படி எழுதுது: ” ம இ கா என்றால் இது இந்திய பேராயக்கட்சியாகவே இங்கு காலூன்றி தறிகெட்டு கிடக்கிறது. தமிழர் நெறி இழந்து சாதிகளை புணர்ந்து கிளைகளை பரப்பிக்கொண்டு “தனிததலைவா” என்று சாதி உறவு வட்டத்தில் வாழ்கிறது. இது உடைத்தெறிந்து தமிழன் என்ற இன மான உறவில் இந்த கட்சியில் தமிழர்கள் மட்டும் மனமாற்றம் உருமாற்றம் பெற வேண்டும்.
இன்று இ காவில் இருக்கும் மதவாதிகளிடம் தமிழாக்கம் இல்லை. ஆன்மிகம என்றால் இந்தத தமிழன் அடங்குவான் என்ற பிரம மந்திரம் நம்மை ஏமாற்ற போடும் வேஷம்.தமிழனை ஒழித்தால் தானும் தன் உறவுகளும் வாழும் என்ற அழித்தல் நாடகம் ஒரு முடிவுக்கு வர வேண்டும். தமிழனல்லா தலைவர்களின் சிண்டுபிடி பணத்துவேசம் வேலை தமிழர்கள் உணர்ந்து பிணக்குகளை அகற்றி ஆளும் மதிய அரசு கட்சிகள் தமிழனை மதிக்கும் நிலையில் 2018 தேர்தலில் களம் இறங்க முன்வர வேண்டும்.
திராவிடம் ,இந்தியம் ,இந்துமயம் பேசும் முக்கோண பித்தர்களிடம் தமிழர்கள் ம இ காவில் “தமிழன் என்ற சட்டையை மாட்டிக்கொண்டு முதிர்ச்சிப்பெற வேண்டுகிறோம்.
கட்சிக்கு மலேசியத தமிழர் காங்ரெசு என்று பெயரிட்டு பாகாத்தானில் இழந்த தமிழர்களை மீடடு எடுங்கள் …”முன்னணி” உங்களை முதலில் தமிழனாகா பார்க்கும். இதுவே நமது இறுதி வாக்குமூலம். தமிழராய் எழுவோம். வரும் ஜூலை மாத ம இ கா தேர்தலில் தமிழர் பேராள பெருந் தலைவர்களை தேடுங்கள், வெல்லுங்கள் !
அன்புள்ள திரு.பொன் ரங்கன், வாசகர்கள் தங்களுடைய கருத்தை சுருக்கமாக தெரிவிக்க வேண்டும் என்பது இப்பகுதியின் நிபந்தனை. தாங்கள் எழுதியிருப்பது ஒரு கட்டுரை. ஆகாவே,அதனை மக்கள் கருத்து பகுதிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி. – ஆசிரியர்
வணக்கம் திரு. காத்தையா அய்யா ! மக்கள் கருத்துபபகுதியில்தான் என் கட்டுரையை பதிவு செய்துள்ளேன் .. தலையங்கசசெய்திக்கு பரிசீலிக்கவும். நன்றி.
நண்பர்களே,பல இடங்களில் நாம் கோட்டை விட்டு வந்துள்ளோம்.நமது மின்னல் FM /THR திறந்தால் மலையாளி குரல் பிறகு தெலுங்கர் குரல்.தமிழ் படங்கள் பார்த்தல் குஜராத்தி மலையாள தெலுங்கர் வங்காளி மற்றும் வேற மாநிலங்கள் நடிகர் பாடகர்,இது எப்போ மாறுமோ அப்போத தான் தமிழ்நாட்டில் தமிழன் அழலவன்