மலேசியா 2013- 2025 கல்வி கொள்கைக்கு தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் வேலையும் வேளையும் இல்லையா?

contentwriting_1மாநாட்டில் பிரதமர் உரையில் மலேசியாவில் 523 தமிழ்ப்பள்ளிகள் இன்னும் 6 புதிய தமிழ்ப்பள்ளிகள் வந்துவிடும் என்றார் …திருக்குறள் பற்றி பேசினார் ….

மலேசியாவின் கல்வி அமைச்சின் இன்றைய தமிழ்ப்பபள்ளி களுக்கான தமிழர் சார்ந்த உயர் அதிகாரிக்கு இந்த தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் வேலை இல்லையா? 2013- 2025 கல்வி கொள்கையின் நாவீனங்களை அவர் நமக்கு சொல்லக்கூடாதா? ஏன் இல்லை என்று மாநாட்டு தலைவரிடம் கேற்க வாய்ப்பில்லையா?

வரவேற்ப்பு உரை ,தலைவர் உரை. தலமை உரை . “நமக்கு சிக்கல் உரை” என்று ஒன்று வேண்டாமா? அல்லது இதன் தேவை …இது நவீன உலக புரட்சி இல்லையா? கருத்துரைக்க மாமேதைகள் இலையா?

மலேசியாவின் 2013 -2025 வரைக்குமான புதிய கல்வி கொள்கையில் தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கிய மேம்பாட்டுக்கும் தமிழ்பபள்ளிகளுக்கும் போட்டுள்ள முட்டு கட்டகைகளை இவரோ வேறு யாரோ உணர்ந்து இந்த தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் சொல்ல உள்ளதாக தெரியவில்லை. கருப்பொருள் மட்டும் மிக உணர்ச்சிபூர்வ சவாலாக “நவீன உலகில் தமிழ்ககல்வி” என்றுள்ளது.

இந்தியாவில் மோடி சமஸ்கிருதம் வாசிக்க வேண்டும் என்கிறார் ,,, அங்கு இதன் காரணமாக புதிய அரசியல் அலை வீச உள்ளது. திராவிட கட்சிகள் இந்த புதிய குடையை ஏந்தி தமிழ் மொழி பலாத்காரத்தில் அரசியல் ஓட்டுவார்கள். நாம் என்ன செய்வது முஇஹிடின் நம்மை சந்திக்கவே மாட்டார் ..இதுவரை நமது தமிழ் மொழி நவீன ஆதங்கம்தான் என்ன என்றும் அவர் விளங்கிகொள்ள தயராக இல்லை .. எதுவும் முடியாது என்பதும் அவரின் அமைச்சின் ,அரசின் ,அரசியல் தீர்வாக உள்ளது. நமது தமிழின் விதி ?

ஆனால் தமிழ் பள்ளி மட்டும் நமது தேர்வு ? போதனைகள் ,தேர்ச்சிகள் ,கொள்கைகள் எல்லாம் தமிழுக்கு எதிராக தமிழனுக்கு இடியாக உள்ளது!
இங்கு ” தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு” என்றார்களே திவிர போதனையில் 2013- 2025 கல்விககொள்கையில் என்ன திணிப்பு …என்ன உடைச்சல்…. என்ன கழித்தல்…. எது கூட்டல் அல்லது தமிழர் சமயம் அழிந்து, மோரல் புகுந்தல் போன்ற விந்தைகளை யார் ஆராய்ந்தார் ? ஆரம்பம் “தமிழ்க்கல்விதான் எங்கள் தேர்வு” என்று பிரச்சாரம் தொடங்கி இருந்தால்,இதன் ஆழமும், அகலமும் அர்த்தமும் தமிழின் இலக்கிய மூலத்தை விளங்கி போதனைகள் பிடிப்புடன் கல்வி கொள்கை வழி விட்டு இருக்கும்.

“தமிழ்ப்பள்ளிதான்” என்பதற்கும் “தமிழ் மொழிதான்” என்பதற்கும் நிறைய அர்த்தங்கள் உண்டு என்று பலவராக எழுதியும்
நமது முனைவர்கள் மத்தியில் எடுபட வில்லை. அல்லது எடுத்துரைக்க வலு இல்லாமல் போனது பதவி பரிதாபம்தான்.

நவீன உலகில் தமிழ் மொழி… இது இன்னும் 20 ஆண்டுகளை கொண்ட ஆசையாக நாளையோடு முடியும் ..பிறகு ஆய்வடங்கல் என்ற குறிப்பில் இன்று பேசிய விசியங்கள் நமக்குள் அலமாரி ஏறி அங்கலாய்ப்பபாய் அடங்கிப் போகும்.

மலேசியாவின் கல்வி அமைச்சின் இன்றைய தமிழ்ப்பபள்ளி களுக்கான தமிழர் சார்ந்த உயர் அதிகாரிக்கு இந்த தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் வேலை இல்லையா? 2013- 2025 கல்வி கொள்கையின் நாவீனங்களை அவர் நமக்குசசொல்லக்கூடாதா?

இதே மலாயா பல்கலை கழகத்தில் “தகவல் யுகத்தில் தமிழ் கற்றல கற்பித்தல்” என்பது 1994 ல் நடந்த இரண்டாம் உலக தமிழ் ஆராச்சி மாநாட்டின் கருப்பொருள்.

காகிதத்தின் இடத்தை இன்று கணினி தட்டுகள் தொட்டுவிட்டாலும் கல்வி கொள்கையில் நமது தமிழுக்கும் தமிழ் இனத்துக்கும் ஒழுக்கம் என்ற இலக்கண கூறுகளின் தமிழ் இலக்கியம் உயர் நிலை கல்வி கூடங்களில் அடிப்பட்டு விட்டதை யாம் அறிவோம். வழி/வலி இல்லாமல் ஒர் இறுக்கமான வறுமையில் இனம் அழிந்து வருவதை ஒழுக்க நிலை பேச்சாளர் திருமாவளவனும் சொல்வதில்லை. அது அவரின் கல்வி அமைச்சின் கட்டுப்பாடு மிக்க “கொள்கை, ஒழுக்க நிலை” என்பார்.

ருசிக்க கவிதைகளையும் , கதைகளையும் , பழைய இதிகாச தத்துவங்களையும் ,காவிய கற்பனை செருகல்களையும் தழுவிய தமிழ் மாநாடுகள் தமிழ்க்கல்வியை மீட்கவில்லை…தனி ஒரு மனிதனின் தமிழ் ஆர்வத்தில் மட்டுமே இது காலம் தமிழ் மொழி வளர்ந்துள்ளது.இனியும் தொடரும்.

ஒரு நாட்டின் கல்வி கொள்கையோடு தமிழ் மொழி உயர் நிலை போதனைகள் போராட வேண்டிய நிலையில் ,இதற்கு நிரந்தர தீவும் வழியும் இலாத போது.. இளையர் சமுதா தமிழ்க்கல்வி தாகம் தீராத போது …மாநாடுகள் நமது தமிழ் உரிமையை அரசு வழி…மீட்டு எடுக்காத போது.. நமது தமிழ் மொழி சங்கமம் சமத்துவமில்லாத சங்கடம்மிக்கதுதான்.

நமது ஏழு தமிழ்ப்பத்தரிக்கைகள் தமிழன் உரிமை பேசாமல் இன்னும் இந்தியன் இந்தியன் என்று தமிழ் மொழிக்கு சொந்தமிலாத ஓசி எதிர்வினை உறுவுகளை அவர்களின் அலுவல் ஆதிக்க ஆளுமை வெட்டுகளும் தமிழர், தமிழ் மொழி வலப்பத்தை வென்று நிற்கிறது.

தமிழ் மின்னியல் ஊடக உறவுகளும் தமிழ் சோறு போட்டால் போதும் என்று THR …வானவில் ….இப்போது மின்னலின் மொழி கொலைகள் பேசினால் நாளை மாநாட்டு செய்திகள் இல்லை என்ற அளவுக்கு அந்நியன் ஆதிக்கம் அமுலில் உள்ளது.

அடிப்படையில் உரிமைகள் சட்டமாக இல்லை, சதியாக உள்ளபோது யார் எதையும் செய்து தமிழை ஈயாய் மேய்ந்தால் ஈசலாய் ரக்கை உடைந்த பூச்சியாய் பரிதவிப்பது இந்த தமிழன் இனம் என்ற மிச்சம்தான்.

பொன்.ரங்கன்