ம இ கா எனும் மலேசியன் இந்தியன் காங்கரஸ் முதன் முதலில் தமிழர் காங்கரஸ் என்ற பேரில்தான் முன் மொழியப்பட்டு பேசப்பட்டதாம். பிறகு சீக்கியர் ஆங்கில ஆளுமையில் இந்தியன் என்ற முனைப்பை தந்து மாற்றினார் என்று என் அப்பா சொன்ன கதையை நினைவு படுத்த ஆசைப்படுகிறேன்.
எதற்கும் ஒரு அடிப்படை வரலாறு வேண்டும் ஆதலால் …என் தந்தை 1908 திண்டிவன் செஞ்சியில் பிறந்தவர். 1920 சஞ்சியில் மலாயா வந்தார். சயாமில் காடுவெட்டி மேடு தட்டி ரோடு போட்டு தப்பித்து தாய்லாந்த்தில் மறைந்து என் தாய் மாமனோடு எப்படியோ கோல சிலாங்கூர் வந்தார்.
தமிழின தளபதிகள் தலைவர் கணபதி ,வீர சேனாவோடு பழகி தோட்ட தொழிலாளர் போராட்டத்தில் இறங்கி 1940 களில் ஆற்று வழியாக சபாக் பெர்ணம் தாண்டி சுங்கை பெர்ணம் தோட்டம் பிறகு குரங்காட்டி தோட்டம் உலு பெர்ணம் என்று 1984ல் இயற்கை அடைந்தார். இவர் ஒரு தொழில் சங்கவாதியாக இருந்தமையால் தமிழர்கள் சார்ந்த பல கதைகளை கூறினார். அதில் ஒன்றுதான் ம இ கா வரலாறு.
1984ல் தமிழ் நேசனின் 60தாம் ஆண்டு மணிவிழாவில் கலந்துக்கொள்ள கோலா லம்பூர் வந்த என் தந்தை அந்த விழா முடிந்து மறைந்தார் ..அவர் விட்டு சென்ற அந்த மணிவிழா மலர் மட்டும் பத்திரமாக வைத்துள்ளேன். அதோடு சயாம் மரண இரயில் எனும் ஐயா ஆர் .சண்முகம் எழுதிய புத்தகத்தையும் ஐயா தமிழியம் மு மணிவெள்ளையன் இதழையும், உலகத தமிழர் பண்பாட்டு இயக்கத தலைவர் ஐயா ஆசிரியர் இர .ந . வீரப்பனார் வெளியிட்ட 3வது உலகத் தமிழ்ப்பண்பாட்டு மாநாட்டு இதழையும் இந்த கட்டுரைக்கு துணையாக எடுத்துக்கொண்டேன்.
இந்த நினைவு முயற்சிக்குக காரணம் சமீபத்தில் 9 வது தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் முனைவர் சுபாஷினி அவர்கள் சொன்ன நமது சொந்த கதைகளையும் ஆவணப்படுத்தினால் நமது வரலாற்று பதிவுகளை நமது பிரதிநிதிகள் பயன் படுத்த இயல்பாக இருக்கும் என்ற புத்தியில் மலேசியத தமிழர்களின் அரசியல் எங்கு கோளாரானது என்று பதிவு செய்ய வ்ரும்புகிறேன்.
“திங்களோடும் செளும்பருதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடும்
மங்கு கடல் இவற்றோடும் பிறந்த
தமிழுடன் பிறந்தோம் நாங்கள்”
சத்தியமா ….அவர் ரஜூலா கப்பலில் வந்த பாடல் காட்சி கதை என்று நினைத்தேன்
என்று என் அப்பா சொல்லும்போதெல்லாம் என் அம்மா “இவருக்கு வேற வேலை இல்லை” என்பார் ..பிறகுதான் இது பாவேந்தர் பாடல் என்று அதன் தமிழ் வில்லங்கத்தை சொன்னார்.
இது எங்க அந்த அப்போதைய ம இ கா சிங்குகக்கு விளங்க போவுது ?இந்தியன் என்று ம இ கா மாநாடுகளை தமிழர்களை வைத்து ஆங்கில அரங்கேற்றங்கள் நடந்த ,இருந்த, இருண்டககாலங்கள் துன் சம்பந்தனுக்கு பிறகுதான் தமிழ் ஒலிக்கவும் ,ஒளிக்கவும் மாறியதாம்.ஆனால் தமிழர்கள் அதிகம் இருந்த ம இ கா களத்தில் இந்த தமிழர் காங்கரஸ் முயற்சி எழவே இல்லை என்பதுதான் நமது தமிழர்களின் ஏமாளித்தனம்.
சம்பந்தன் முடித்து மணிக்கா அதன் பின் சாமிவேலு வந்தும் கட்சியின் தலைவர்கள்தான் தமிழர்கள் ஆனால் பிற பதவிகள் எல்லாம் இதரவ்ர்கள் கொட்டமும் கூட்டமும் ஈயாய், பேயாய் சுத்த தமிழர்கள் வெறும் ஓட்டுப்போட மட்டும் பசுக்களாக மாறினார்கள். இன்றும் இதர ஜல்லி கட்டு இன காலைகள்தாம் ம இ கா வை ஆட்சி ஆளுது. உயர் பதவிகளும் அப்படித்தான் போனது. போகிறது.
இன்றைய தலைவர் கூட யார் என்று யாராலும் சொல்ல முடியாத அளவுக்கு கமுக்க நிலையில் இன ஆதிக்கம் இந்தியன் போர்வையில் புதையல் நாடகம் நடக்கிறது.
இன்று மலேசியத் தமிழர்களை ஏழு கட்சிகளில் இடரச்செய்த சிறுமை சாமிவேலு காலததில்தான் நடந்தது என்றால் அவரே அதை ஒத்துக்கொள்வார் ! இதில் பல மரபுக்கதைகள் உண்டு. புதுக்கவிதைகளில் இன்று ம இ கா வில் பல சீரியல்கள் ஓடினாலும் சாதிமையும், இனமும் பட்டாம் பூச்சிகலாக மின்னியல் அறையில் ஆளுமை வேட்டை நடக்கிறது.
ம இ கா வின் 6 லட்சம் உறுபினர்களில் 95 % சகிதம் தமிழர்களின் உரிமையை வெறும் 2000 பேராளர்கள் கொத்தி குதறும் பேராண்மை மாநாடு மீண்டும் கூடபபோகிறது.
மறுமலர்ச்சி என்று 30 ஆண்டுகளை விழுங்கிய சாமி வேலுவின் அரசியல் இறுதி காலம் வரை தமிழர்களை வளர்க்க வில்லை. ஆனால் தமிழர்களின் பொருளாதார முதலீடுகள் இந்த தமிழரல்லாத இதரவர்களின் உறவியல், குடும்பவியல் பூங்காவை பூஞ்சோலையாக்கி உள்ளதை மறுக்க முடியாது.
மலேசியாவில் பல மாநாடுகளை கண்டுவிட்ட தலைவர்கள் தமிழன் வாழ்வியல் அல்லது அரசியல் “தரமதை” இன்னும் அடையவில்லை.!
உலகத் தமிழ்ப்பண்பாடு மாநாட்டு மலரில் சாமிவேலு தமிழர்கள் பிறரை நம்பி கையேந்தி நிற்காமல் “சுயவுதவியில் வாழ்வோம் ” என்ற வார்த்தையை பாவித்துள்ளார். ஆனால்… நாட்டில் தமிழர்களுக்கு என்ன நடந்தது? இதில் இந்தியன் என்ற இதரவர்கள் தப்பித்துக்கொண்டார்கள். குறிப்பா மைக்காவை போர்த்திய இந்தியனான ஞாலிங்கம் , டோனி , நிஜம் சிங் இன்னும் பலரை பதிக்கலாம். இதில் சாமியும் ஏமாளிதான் அந்த அளவுக்கு தமிழன் என்பவர்கள் இந்தியனால் நம்பி கெட்டார்கள்.
சரி விடியலுக்குள் புகுவோம்…இன்று மலேசியாவில் இந்தியன் பாசறையில் தமிழர்கள் ,தெலுங்கர்கள், மலையாளிகள் என்ற மூன்று முக்கியஸ்தர்கள் இருந்தாலும் பின்னவர்கள் இருவரும் அவரவர் இயக்கம் வைத்து அரசியல் இன ஆளுமையில் இருப்பதுபோல தமிழர்கள் இல்லை, அல்லது இருக்க இவர்கள் விடுவதில்லை என்பது புதிய வெளிச்சம்.
இது இன பாகு பாட்டை பிரிக்க எழுதும் காகிதமல்ல கிழித்து பட்டமிட விச காற்றுமல்ல ..தமிழர்கள் தமிழனாக “அரசியல்” உணரும் காலம் கனிந்து விட்டது. அது ஒரு ராஜாங்கம். இனி ஜிங் ஜாங் போட நேரமில்லை. புதிய பொருளாதார் 60 ஆண்டுகள் 2020 முப்பது ஆண்டுகள் முடிய இன்னும் ஐந்தே ஆண்டுகள் மலேசியத தமிழர்களின் வாழ்வாதாரம் மேல்தரம் நோக்கி நடைபோட அரசியல் நகர்வில் நகருங்கள் தமிழர்களே ! நான் இன வாதி அல்ல என் இனத்தில் உரிமை விதி செய்ய உதவுபவன்.
அவர்கள் சங்கங்கள் வைத்து அரசியல் அமுக்கு நிலை வைத்து நமது ஓட்டில் நிமிர்ந்து நிமித்திகொண்டடனர் ! ம இ கா இவர்களுக்கு திறந்த பூங்கா பூத்ததை பறித்து, காய்ந்த இலைகளை தமிழர்கள் முட்டிக்கொள்ள மூட்டம் போடுவார்கள்.
தமிழ் நேசன் 60 ஆண்டு விழா மலரில் வந்த ஒரு கட்டுரை இப்படி எழுதுது: ” ம இ கா என்றால் இது இந்திய பேராயக்கட்சியாகவே இங்கு காலூன்றி தறிகெட்டு கிடக்கிறது. தமிழர் நெறி இழந்து சாதிகளை புணர்ந்து கிளைகளை பரப்பிக்கொண்டு “தனிததலைவா” என்று சாதி உறவு வட்டத்தில் வாழ்கிறது. இது உடைத்தெறிந்து தமிழன் என்ற இன மான உறவில் இந்த கட்சியில் தமிழர்கள் மட்டும் மனமாற்றம் உருமாற்றம் பெற வேண்டும்.
இன்று இ காவில் இருக்கும் மதவாதிகளிடம் தமிழாக்கம் இல்லை. ஆன்மிகம என்றால் இந்தத தமிழன் அடங்குவான் என்ற பிரம மந்திரம் நம்மை ஏமாற்ற போடும் வேஷம்.தமிழனை ஒழித்தால் தானும் தன் உறவுகளும் வாழும் என்ற அழித்தல் நாடகம் ஒரு முடிவுக்கு வர வேண்டும். தமிழனல்லா தலைவர்களின் சிண்டுபிடி பணத்துவேசம் வேலை தமிழர்கள் உணர்ந்து பிணக்குகளை அகற்றி ஆளும் மதிய அரசு கட்சிகள் தமிழனை மதிக்கும் நிலையில் 2018 தேர்தலில் களம் இறங்க முன்வர வேண்டும்.
திராவிடம் ,இந்தியம் ,இந்துமயம் பேசும் முக்கோண பித்தர்களிடம் தமிழர்கள் ம இ காவில் “தமிழன் என்ற சட்டையை மாட்டிக்கொண்டு முதிர்ச்சிப்பெற வேண்டுகிறோம்.
கட்சிக்கு மலேசியத தமிழர் காங்ரெசு என்று பெயரிட்டு பாகாத்தானில் இழந்த தமிழர்களை மீடடு எடுங்கள் …”முன்னணி” உங்களை முதலில் தமிழனாகா பார்க்கும். இதுவே நமது இறுதி வாக்குமூலம். தமிழராய் எழுவோம். வரும் ஜூலை மாத ம இ கா தேர்தலில் தமிழர் பேராள பெருந் தலைவர்களை தேடுங்கள், வெல்லுங்கள் !
–பொன்.ரங்கன்
ஆளுக்கொரு கூட்டம் !
-மறைந்த செ. சீனி நைனா முகம்மது அவர்களுக்கு நன்றி பாராட்டுகள்….
எனக்கொரு கூட்டம் உனக்கொரு கூட்டம்
இனத்துக்குள் எத்தனை கூட்டமடா !
தனக்கெனச் சேர்க்கும் கூட்டங்க ளாலே
இனமே துண்டான தோட்டமடா
கட்சிகள் பலவாய்க் காட்சியில் இழிவாய்க்
கலகங்கள் நடந்திடும் ஏட்டிலடா !
கட்சிக்குள் வளரும் அணிகளின் போரில்
கண்ணியம் பறந்திடும் காற்றிலடா !
இனம்மொழி என்றும் இதுஅது என்றும்
என்னென்ன பெயர்களில் சங்கமடா !
தனித்தனிக் கோலம் தனித்தனிக் கொள்கை
தமிழையும் இனத்தையும் தின்குமடா !
மூலைக்கு மூலை சங்கங்கள் இருந்தும்
முளைக்குது புதுப்புதுச் சங்கமடா !
மாலைகள் சூட்டி ஆடைகள் போர்த்து
மகிழ்ச்சியில் மேடைகள் பொங்கும்டா !
மாதத்துக் கொன்றாய் மாநாடு நடக்கும்
வகைவகை ஆய்வுகள் நடக்குமாடா !
செய்தியும் படமும் சிரித்திடும் ஏட்டில்
தீர்வுகள் அதனுடன் முடக்கமடா !
மானியம் கிடைக்கும் வசூலும் நடக்கும்
வரவுக்குக் குறைச்சல் இல்லையடா !
நானிதைச் செய்தால் நீயதைச் செய்யும்
நடப்புகள் விரயத்தில் எல்லையடா !
ஒற்றுமை நோக்கம் உள்ளத்தில் இல்லை
உதட்டினில் உரத்தே ஒலிக்குதடா !
கற்றவர் கூட்டம் கடமைகள் மறந்தே
காலத்தைச் சுகமாய்க் கழிக்குதடா !
அருமையான பதிவு.என் எண்ணத்தில் தோன்றிய விவரங்களை படித்து பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
பொன் ரங்கன் சார்! இது ஒரு பிரச்சனையே அல்ல.வருகிற ம.இ.கா.வின் ஆண்டுக் கூட்டத்தில் இந்தப் பெயர் பிரச்சனையைக் கொண்டு சென்றால் இந்த மாற்றத்தைக் கொண்டு வந்து விடலாம். அதிகமானப் பேராளர்கள் தமிழர்கள். அப்புறம் என்ன கஷ்டம். அப்படியே பெயர் மாற்றம் பெற்று தமிழர் காங்கிரஸ் ஆனாலும் அங்கும் மலையாளிகளும் தெலுங்கர்களும் இருக்கத்தான் செய்வார்கள். அது தவிர்க்க முடியாதது. மலையாள/தெலுங்கு சங்கத்திலும் தமிழர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதுவும் தவிர்க்க முடியாது.அப்பன் தமிழன் அல்லது அம்மா தமிழச்சி என்னும் நிலை இருக்கும் போது அங்கு அவர்களும் தனித்து இயங்க முடியாது. மானியத்திற்காக போராடும் தலைவர்கள்! அவ்வளவு தான்!
இன்றையெத் தேவை இந்த பதிவு.
தமிழர்கள் கட்டாயம் ஒரு புதிய கட்சி தொடங்கி, உடனே எதிர்கட்சியோடு கூட்டனி வைத்து போராட வேண்டும்.
கலைமுகிலனும் ஓர் தேர்வு.
ஆளுக்கொரு கூட்டம் !
-மறைந்த செ. சீனி நைனா முகம்மது அவர்களுக்கு நன்றி பாராட்டுகள்….
மேல் சொன்ன பெருமகனாரின் கருத்துப் படி நம் புதிய
தலைமுறை நகருமானால் இந்த இனம் எழும் .
இல்லையேல் இன்னும் கட்சி என்றால் கேவலப்பட்டு
சீரழியும் .
அதை யாராலும் தடுக்க இயலாது !!!
அண்ணா …சட்டி ஒடஞ்சி போச்சி, இனி புது சட்டி தானா வாங்கணும் ….இந்தத் சாதி காரன் கிட்ட இருந்து அந்த சாதி காரன் புடுங்க பாக்குறான் இதுதான் விஷயம் ……….இத ………வச்சிக்கிட்டு ..கடந்த ஒரு வருசமா ஊதிக்கிட்டு இருக்கானுங்க ………அட வாங்கன ….நாம வேலைய பார்போம் …….
“உழவன் மடிகிறான் பொங்கல் தேவையா ?”
++++++++++++++++++++++++++++++++++++++
இப்படி ஒரு பட்டிமன்ற தலைப்பு.? இது தமிழர் பொங்கல் எதிர்ப்பு குழுவாக இருக்குமோ ? என்ற கோபம் வந்ததது ..இல்லை இல்லை தமிழர்கள் தான் என்று கேள்விப்பட்டதும் கோபம் இன்னும் அதிகமானது. என்ன அரசியல் தனம்? அரசியல் அடாவடி தனத்துக்கு தமிழரின் ஒரே பண்பாட்டு விழாவில் உள்ள உழவனுக்கு இப்படி ஒரு விபத்து. நிறுத்துங்கள் உங்கள் அறிவிலி தனத்தை ….. தமிழ், தமிழர்கள் வலப்பத்துக்கு அறிவுப்பூர்வமாக பல உள்ளனன் . உழவனை சாக அடிக்க வேண்டாம்.
உலகமே அழிந்தாலும் அவன்தான் சீர் செய்ய வேண்டும்.பண்டை காலத்தில் உழவன் மிளகாயை சமையலுக்கு உபயோகிக்கவில்லை ” மைப்பு அற புழுக்கின் நெயக்கனி வெண்சோறு வரையா வண்மையோடு புரையோர்ப் பேணி ” என மிளகாய் இல்லாமல் உண்ணும் வழக்கம் இன்று சாகும் மனித இனம் காரத்துக்கு கத்துக்க் கொண்டதுதுதான் உண்மை. இன்னும் அவித்தல் ,இடித்தல்,கலத்தல்,காய்ச்சல்,கிண்டல் ,கிளறல் ,சுடுதல் ,திரித்தல்,துகைத்தல் ,துவட்டல் ,வறுத்தல்,பிசைதல்,பிழிதல் ,பொங்கல் ,,பொரித்தல்,மசித்தல்,வடிதல்,வாட்டல், வார்த்தல்,சுடுதல் ,வதக்கல் ,,என் வத்தல் கூட உழவர்கள் வழி வந்தவைதானே இன்னும் உழவன் சாக வில்லை அல்லது தமிழில் உள்ள இந்த விதிகளை வேறு மொழியில் வகைசெய்ய இந்த பட்டிமன்ற வித்தகர்களால் முடியுமா என்று கேட்டு வைக்கிறோம்? தலைப்பை மாற்றுங்கள் அல்லது மாண்டு போங்கள் !
தலைப்பு நமது இலக்கண மரபுக்கு விந்தையாக உள்ளது? உங்கள் தமிழ், தமிழர் தகுதிக்கு ஏதோ ஒரு வலை பின்னல்போல் உணர்கிறேன். நமது பண்டை தமிழர் ஒரே பண்பாட்டு , கலாசார விழாவுக்கு ஓர் அவநம்பிக்கை முத்திரை குத்த ஏதோ இதரவர்கள் கோட்டம் பிடிக்க உங்களை காவல் கொடுக்கும் மோப்பம் போல இருக்கு. ஏற்பாட்டாளர்கள் தகுதி தராதரம் தந்திரம் கவனிக்கவும்.நீங்கள் நினைத்தும் பார்க்க முடியாத தலைப்பு. பத்திரிக்கைகள் எதிர்மறை விமர்சனங்கள் உங்களை ஒரு சோற்றில் பதம் பார்க்கும் கூட்டம் . எனக்கு மரணம் என்பதால் தெய்வீகம் வேண்டாம் என்பது போல உணர்கிறேன்? உழவன் என்ற மனிதன் ஓய்ந்து போவன் என்பதால் மனைவி கைவிட்டு விடுவாளா? ஆபடியானால் இன்று இந்தியாவும் சீனாவும் இதர விவசாய நாடுகளும் அழிந்து இருக்கும். நாமெல்லாம் அசைவ பித்தர்களாக இரத்த வெறியில் வாழ்திருப்போம் ..கவனிக்கவும் நன்றி.
உலகத் தமிழர் பாதுகாப்பு மையம் மலேசியா
தமிழர் தேசியம்.மலேசியா
தமிழர்களுக்கு” மாற்றம் எனும் அரசியல் வித்தை “அது ஒரு சொத்தை?
எதுவும் மாறா விட்டால் நீ மாறிக்கொள் என்றான் மைகேல் ஜ லுசியர் என்ற மனிதவள மேம்பாடு நிபுணர் தனது Law of Attraction என்ற புத்தகத்தில். நீ மாறியதும் உன் உயர்வை மக்கள் மதிக்க வேண்டும். இல்லாவிட்டால் நீயும் ஒரு மாறாத பைத்தியமகா திரிய வேண்டும்.
இந்த கட்டுரை தொடரும் அவசரமாக விமான நிலையம் போக வேண்டும் . எல்லாம் மாற்றத்தை தேடித்தான்?
தமிழர்களின் இந்த நிலைக்கு சங்கிலி முத்து சாமிவேலுவும் ஜால்ராக்களும் தான் காரணம் . மகாடிரே வேலு ஒன்றும் அமைசரவையில் கேட்கவில்லை என்று கூரியிருகிரார்
மலேசிய தமிழ் காங்கிரஸ் அமைத்து மக்கள் கூட்டனியின் தலைமைத்துவத்தில் சேர வேண்டிய தருணமிது
பொன் ரங்கன் சார்….உங்கள் ஆதங்கம் <50% தான் உண்மை என்றாலும் வாழ்துக்கள் ….அது சரி…..மலேசியா OK ….தமிழர்ர்ர்ர்…..ம்ம்ம்ம்….OK ……அது என்ன காங்கிரசு …நாம் என்ன இந்தியா குடிஉரிமை உள்ளவர்களா…???….காங்கிரசுக்கும் மாற்றம் தேவை …."கா"…..காப்பகம்…எப்படி இருக்கு…??…நீங்க என்னசொல்ரிங்க…?
நன்றி சிவா கணபதி ! தமிழர்களின் அரசியல் கட்சிக்கு வேலைகள் நடந்து வருகின்றன. இப்போதைக்கு பேர் ரகசியம். உங்கள் சிபாரிசும்
கவனத்தில் உள்ளது.. வாழ்த்துகள் வளர்வோம் . எழுவோம், தமிழர்களாக !
ஐயோ! இன்னொரு கட்சியா! தமிழ் நாட்டை மிஞ்சிடுவோம் போலிருக்கு! தமிழ் நாட்டுத் தொடர்புகள் நல்லாத்தான் வேலை செய்யுது! எப்படியோ! மானியம் கிடைக்காமலா போய்விடும்!