கோபப்படாதீர்கள்! இது பொங்கல் தேவையில்லை என்பதற்காக உருவாக்கப்பட்ட தலைப்பு அல்ல. தமிழர்களின் புத்தாண்டாகவும் அதோடு இணைந்து திருவள்ளுவர் நாளாகவும் கொண்டாடப்படும் பொங்கல் திருநாள் தமிழரின் தனித்துவ அடையாளமாகும்.
பொங்கல் பண்டிகை என்றதுமே தமிழர்களின் நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சியில் தாண்டவமாடும். அந்த அளவுக்கு அனைத்துத் தரப்பினராலும் ஆனந்தத்தோடு கொண்டாடப்படுவது பொங்கல் திருநாள்.
ஆனால், உழைப்பால் உலகை உயர்த்தும் அந்த உழவனின் கைகள் இன்னமும் கையேந்தும் நிலையில் உள்ளதா அல்லது கையை உயர்த்தி வாழ்கிறதா? என்ற வினாவுக்கு மக்களின் சிந்தனையைத் தூண்ட ஜெரிட் என்ற தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும் இயக்கமும் கோத்தா அலாம், ஷா சட்ட மன்ற தொகுதியும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது என்கிறார் தொழிலாளர்களின் மறுமலர்ச்சிக்குத் தன்னை அர்ப்பணித்து போராடி வரும் செல்வி சிவரஞ்சனி.
இப்பட்டிமன்றத்தில் புகழ்ப்பெற்ற முன்னணி பேச்சாளர்களான மூத்த தொழிற்சங்கவாதி ஜீவி காத்தையா, இளைய தளபதியாகிவரும் நாம் தமிழர் குழுவைச் சார்ந்த அரிவேந்தன் சுப்பிரமணியம், சட்டமன்ற பதவி ஏற்கும் முன் திருக்குறளை ஓதிய சபாய் சட்டமன்ற உறுப்பினர் சகோதரி காமாட்சி, நாட்டின் சிறந்த சொற்போர் வீரர் குணசீலன் சிவகுமார், மக்கள் படும் பாடு மற்றும் பவர் உன் கையில் என்ற குறுந்தட்டுகள் வழி புரட்சிகரமாக சினிமா மெட்டில் மக்கள் வாழ்க்கையை பாடி வெளியிட்டவரும் ஐந்து முறை போராட்டங்களுக்காக கைதானவருமான குணசேகரன் கிருஷ்ணன் போன்றவர்களோடு ‘நல்லா பேசுங்க, நல்லதையே பேசுங்க’ புகழ் ஜெகன் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
இந்த முரண்பாடற்ற ஆனால், முரண்பாடு கொண்ட தலைப்புடைய இந்த பட்டிமன்றத்திற்கு நடுவர் சுவராம் என்ற மனித உரிமை கழகத்தின் தலைவர் கா.ஆறுமுகம் ஆவார். ஹிண்ராப் போராட்டத்தால் இசா சட்டத்தின் கீழ் கைதானவரும் சிலாங்கூர் மாநில ஆட்சி குழு உறுப்பினருமான கணபதி ராவ் இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
இந்த பட்டி மன்றம் அப்படி எதைதான் பேசும் அல்லது பேசாது என்பதைப் பற்றி சில வரிகள்.
உழவனின் பொங்கல்
ஆடிப் பட்டம் தேடி விதைப்பது தமிழர் மரபு. அவை தை மாதம் பிறப்பதற்கு முன் அறுவடையாகின்றது. அந்தப் புத்தரிசியை மண் பானையில் வைத்து (இதற்காகவே புதிய பானை வாங்கப்பட்டு, அதில் திருநீறும் குங்குமமும் இட்டு, அப்பானையை தெய்வீகமாகக் கருதுவது வழக்கம்) சர்க்கரைப் பொங்கல் செய்வது மரபு.
பெரும்பாலும் கிராமப்புறங்களில், வாசலிலே வண்ணக் கோலமிட்டு, அதன் நடுவே பொங்கல் பானையை வைத்து, பானையின் கழுத்தில் மஞ்சள் கிழங்கை இலையோடு கட்டி, மணம் பரப்பும் பொங்கல் சோறு பொங்கியெழும்போது, “பொங்கலோ பொங்கல்’ என்று கூறி மகிழ்வார்கள். இப்படித் திறந்த வெளியில் பொங்கல் வைப்பதால், சூரிய பகவான் அதை நிவேதனமாக ஏற்று மகிழ்கிறார். இதற்காக கூடவே கரும்பும் வைத்து, கடவுளுக்குப் படைப்பார்கள்.
அது போன்ற உழவர்கள் இன்று நம்மிடையே இல்லையா? அல்லது தேவையில்லையா?
மாட்டுப் பொங்கல்
கால்நடைகளே ஒரு நாட்டின் செல்வத்தின் அடையாளமாக ஒரு காலத்தில் திகழ்ந்தன. “ஆயிரம் பசுவுடைய கோ நாயகர்’ என்ற பட்டப் பெயர்களெல்லாம் புழக்கத்தில் இருந்தன. “ஏரின் பின்னால்தான் உலகமே சுழல்கின்றது’ என்றார் திருவள்ளுவர். அந்த ஏர் முனையை முன்னேந்திச் செல்பவை மாடுகளே! இதன் மூலம் மாடுகளே உலகை உயிர்ப்போடு வைத்துள்ளன எனக் கூறின் மிகையில்லை.
திருவள்ளுவர் திரும்பிப்பார்த்தால் என்ன சொல்லுவார்?
அந்த மாடுகளைக் கடவுளாகவே கருதி வழிபடுவதுதான் மாட்டுப் பொங்கலின் தத்துவம். பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் உறைவதாகப் பெரியோர்கள் கூறுகின்றனர். எனவே பசுவை வணங்குவதன் மூலம், அனைத்து தேவர்களின் ஆசிகளும் நமக்குக் கிடைக்கின்றன.
மாட்டுப் பொங்கலன்று பசுக்களுக்கு மஞ்சள் பூசி, திருநீறிட்டு, குங்குமம் வைத்து, மாலை போட்டு வணங்குவர். அதன் பசிக்குத் தேவையான உணவையும் படைப்பர்.
காளைகளுக்கு கொம்புகளில் வர்ணம் பூசி, காலில் சலங்கை கட்டி, “வீர நடை’ நடக்க வைப்பர். ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டும் நடைபெறும்.
இப்போது யாருக்கு யார் ஜல்லி கட்டுகிறார்கள்? நமது ‘காளைகளின்’ இன்றைய வீர விளையாட்டை எப்படி வர்ணிப்பது?
உழவன் உறிஞ்சப்பட்டானா? உயர்திணையில் உயிரினமாக வாழ்ந்தவன் இன்று ஒரு ஜடப்பொருளாக வாணிகப்படுத்தப் படுகின்றானா? வியர்வை சிந்த உழைப்பவனுக்கும் குளிர்சாதன அறையில் கணிணியை சொடுக்குவனுக்கும் பலத்த வேறுபாடுகள். யூக சந்தையில்தான் இன்று உற்பத்தி பொருள்களின் விலைகள் நிர்ணயம் செய்யப்படுகின்றன.
ரப்பர் மரம் வெட்டுபனும், செம்பனை பழங்கள் அறுவரை செய்பனும் உலக யூக சந்தையில் அவை என்ன விலைக்குப் பரிவர்த்தனை செய்யப்படுகிறது என்பதின் அடிப்படையில் தான் ஊதியம் பெருகிறான். அப்படியென்றால் உழைப்பது தவறா?
இந்த வினாக்களுக்கு விடை கான திரண்டு வாருங்கள் என்கிறார் இந்த நிகழ்வை வழி நடத்தவுள்ள ‘பொம்மைகள் கூட பேசிக்கொண்டிருக்கலாம்’, ‘உயிர் வேட்டை’ போன்ற சிந்தனையை தூண்டும் கவிதை தொகுப்புகளின் ஆசிரியர் குமாரி பூங்குழலி வீரன்.
இடம்: தெங்கு கிளனா கிள்ளான் (காயத்ரி அருகில்) நாள்: 28.2.2015 நேரம்: 2.00 மணி
மன்னிக்கவும், பொங்கல் திருநாளும் திருவள்ளுவர் நாளும் வெவ்வேறு நாட்கள். .இன்றுள்ள சூழ்நிலையில் உழவர் தங்கள் வருமானத்தை காக்க futures market இல் தங்கள் உற்பத்தி பொருளின் விலையை நிர்ணயிக்க முடியும் ஒற்றுமையாக இருந்தால்.
ஐயா இந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்தின் முழு முக வரியை வெளியிட முடியுமா? .
இப்போதெல்லாம் வ்ஹட்சப்ப் மூலம் செய்திகள் மக்களை அடைகின்றன. ஆதலால் முடிந்தால் வ்ஹட்சப்ப் மூலம் செய்திகளை அனுப்பினால் பலருக்கு எளிதகாஹ் சென்று செருமெஹ். நன்றி.
உழவன் மடிந்துவிட்டான் என்பதால் பொங்கல் கொண்டாட்டம் தெவையில்லை என்பீர்களா? தலைப்பு எதிர் வினை கருத்தை முன் வைக்கிறது. இனி வரும் காலங்களில் கவனமுடன் தலைப்பைத் தேர்வு செய்யுங்கள்!!!!!. நன்றி
ஐயா கிருஷ்ணசாமி ,நான் ஜோகூர் மாநில பி எஸ் எம் ,கட்சியை சேர்ந்தவன் .மேலே அனைவரும் குறிப்பிடுவதுபோல் , பொங்கல் திருநாளை கொண்டாட வேண்டாம் என்பது பட்டி மன்றத்தின் அடிப்படை நோக்கமல்ல என்பதை அனைவரும் அறியவேண்டும் .பட்டி மன்றத்தின் நோக்கமே விவசாயிகளின் துன்பங்களையும் ,அவர்களுக்கு எதிராக இருந்துவரும் முதலாளித்துவ அநீதிகளையும் ,விவசாயிகளின் மீது இருக்கும் அரசாங்கத்தின் மெத்தன போக்கையும் மக்களிடையே கொண்டு செல்வதுதான் இந்த பட்டி மன்றத்தின் நோக்கம் .
இந்த நாட்டில எத்துனை உழவன் உணவு இல்லாமல் செத்தான்…? அப்படியே செத்திருந்தாலும் அவன் சோம்பேறியாக தான் இருந்திருப்பான்..! தமிழ் நாட்டில் உணவு இல்லாமல் செத்தார்களா அல்லது சாகடிக்கப் பட்டார்களா என்பது தெரியவில்லை..? உங்களது பட்டிமன்றம் அங்கு நடந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அடுத்து வரும் பொங்கலுக்கு தமிழகத்தில் நடத்துங்கள். வாழ்த்துகள்.
ஐயா சீரியன் அவர்களே உழவன் என்றால் ஏர் கலப்பை வைத்து உழுபவன் மட்டுமல்ல ,மண்ணை கொத்தி காய்கறி பயிரிடுபவனும் உழவந்தான் (கேமரன் மலை விவசாயிகள் உட்பட ). ஆகவே மேற்குறிப்பிட்ட பட்டிமன்றம் தமிழ் நாட்டில்தான் செய்ய வேண்டும் என விதியில்லை .