இன்றோடு பதினான்கு ஆண்டுகள் முடிந்து விட்டன. அந்தச் சம்பவத்தை மறக்க இயலாத நிலையில் வாழ்பவர்களில் வாசும் ஒருவர். தொடர்பு கொண்ட போது அந்த வன்முறை பற்றி எழுதப்பட்ட மார்ச் 8 என்ற புத்தகத்தை மீண்டும் நினைவுகூர்ந்ததாகக் கூறினார். வெட்டு காயங்களுடன் இரண்டு விரல்கள் துண்டிக்கப்பட்டதோடு இரண்டு கைகளும் முறிந்த நிலையில் 2001-ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் அவர்.
மார்ச் 8-இல் பழைய கிள்ளான் சாலையில் உள்ள கம்போங் மேடானில் தொடங்கிய இந்த இனவாத வன்முறை தாக்குதல் மார்ச் 23-ஆம் தேதிவரை நீடித்தது.
வாசுவை போல் சுமார் 90-க்கும் அதிகமானோர் வெட்டு குத்துகளுக்கு ஆளானார்கள். ஆறு நபர்கள் உயிர் இழந்தனர். இத்தாக்குதல்கள் நடந்த போது பலத்த போலீஸ் பாதுகாப்பு அங்கு இருந்தது. ஆனால், உடனடியாகத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.
1969-ஆம் ஆண்டு நடந்த மே 13 இனக்கலவரத்திற்கு பிறகு மலேசியாவில் நடந்த இரண்டாவது இன வன்முறை சம்பவம் இதுவாகும். நமது வரலாற்றில் படிந்துள்ள கருப்பு நாட்களாக இவை கருதப்படும்.
அண்மையில் நடந்த 11-ஆவது மலேசிய திட்டத்திற்கான ஒரு கருத்து குவியல் கருத்தரங்கிற்கு தலைமையேற்றிருந்த முனைவர் டெனிசன் ஜெயசூரியா, “கம்போங் மேடான் வன்முறையில் பாதிப்படைந்தவர்களுக்கான நீதி தேடும் படலம் 11-ஆவது மலேசியா திட்ட விவாதங்களுக்கு உட்படுத்தப் பட வேண்டும்”, என்றார்.
எதிர்வரும் காலங்களில் கம்போங் மேடான் போன்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசாங்க அமைப்புகள் அனைத்திலும் பல்லின மக்கள் இடம் பெற்றிருக்க வேண்டும் என்ற கருத்தை இவ்விவாதம் பரிந்துரைக்கும்.
இதுவரையில் இந்த இன வன்முறை பற்றி எந்த விசாரணையையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. குற்றவாளி என யாரும் தண்டிக்கப்பட வில்லை. இது சார்பாக நீதி மன்றத்தில் பதிவு செய்யப்பட்ட எல்லா வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன என்கிறார் இந்த இன வன்முறை பற்றி ‘மார்ச்-8’ என்ற நூலை எழுதிய வழக்கறிஞர் கா. ஆறுமுகம். இவரது மார்ச்-8 புத்தகத்தை மலேசிய அரசாங்கம் தடை செய்துள்ளது. அது தேசிய பாதுகாப்புக்கு மிரட்டலாக உள்ளதாம்.
தடையை நீக்க இது சார்பாக ஆறுமுகம் தொடுத்த வழக்கு உயர் நீதி மன்றம் முதல் கூட்டரசு நீதிமன்றம் வரை சென்று தோல்வியில் முடிந்தது. அந்நூல் தேச நிந்தனையானது என்ற தீர்ப்பு நிலைநிறுத்தப்பட்டது. மலேசியாவில் தடை செய்யப்பட்ட ஒரே தமிழ்ப் புத்தகம் மார்ச்-8 தான்!
இந்த வன்முறை பற்றி கருத்துரைத்த சுவாராம் இயக்கத்தின் நிருவாக இயக்குனர் டாக்டர் குவா கியா சூங், இத்தாக்குதலை நடத்தியவர்கள் வெளியிடத்திலிருந்து வந்த மலாய்க்காரர்கள். போலீஸ் படையில் 95 விழுக்காட்டினர் ஓர் இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்தியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை உடனடியாகத் தடுத்து நிறுத்தாதற்கு இதுவே காரணம் என்றார்.
ஆகவே, கம்போங் மேடான் போன்ற தாக்குதல் சம்பவங்கள் மீண்டும் ஏற்படுவதை தடுப்பதற்கு விரைந்து செயல்படக் கூடிய பல்லின பணிப்படை (multi-ethnic task force) அமைக்கப்பட வேண்டும் என்கிறார் டாக்டர் குவா.
இது சார்பாக ஹிண்ட்ராப் இயக்கத்தின் ஆலோசகர் என். கணேசன் கம்போங் மேடான் தாக்குதலை “ஓர் இனக் கொலை” என்கிறார். இத்தாக்குதலை “ஓர் இனக் கலவரம்” என போலீசார் வர்ணித்து மக்களை ஏமாற்றினர் என்றாரவர். “நாட்டின் மனச்சாட்சிக்கு பதில் அளிக்க இத்தாக்குதலை ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டும்”, என்றும் அவர் கூறினார்.
டெனிசன் கருதுரைத்தது போல் 11-ஆவது மலேசிய திட்ட விவாதம், இந்த இன வன்முறை சம்பவத்திற்கு நீதியும் நியாயமும் தேட முற்பட வேண்டும்.
நாம் என்ன சொன்னாலும் அம்னோ இனவாதிகளுக்கு அக்கறை கிடையாது அதிலும் MIC -MCA ஜால்ராக்களின் ஆதரவு இருக்கும் போது என்ன கவலை? இந்த நாடு எப்படி சுதந்திரம் பெற்றது என்பதே தெரியாமல் இர்குக்கும் அம்னோ குண்டர்களுக்கு இதெல்லாம் சிந்திப்பதற்கு எங்கே நேரம் இருக்கின்றது? இன ஒற்றுமை பற்றி ஏன் கவலை பட வேண்டும்? உட்கார்ந்து ஒன்றும் செய்யாமல் வங்கியில் பணம் சேரும்போது என்ன கவலை?
ம.இ.கா. வினரால் எந்த ஒரு பிரச்சனையையும் தீர்த்து வைக்க முடியாது என்பதற்கு கம்போங் மேடான் ஓர் உதாரணம். அரசாங்கம் உண்மையாக இனப்படுகொலைகளைத் தீர்த்து வைக்க வேண்டு மென்று நினைத்தால் டாக்டர் குவா சொல்லுவது போல பல்லின பணிப்படை அவசியம்!
டதோ டெனிசன் சமூக ஆய்வாளராக பல அரசு பதவிகளில் இருக்கிறார், பல மந்தைகளில் இவர் ஒரு கருப்பு ஆடா என்றும் தெரியவில்லை. ம.இ கா yss அறவாரியத்தில் நனைத்த இவர் இன்னும் அரசு ஆதிக்கத்தில் குளிர்காய்கிறார் ..சுமார் 20 ஆண்டுகளாக குறிப்பாக மலேசியா தமிழர்களுக்கும் இந்தியர்களுக்கும் இவர் ஆய்ந்த, அறிந்த அறிவுப்பூர்வ அத்தியாயங்கள் என்ன? YSS இல் தனித்து வாழ் தாய்மார்கள் திட்டம் ஆரம்பித்து இன்று அதிகமான தனித்து வாழும் தாய்மார்கள் பால் கிடைக்கக்கூட தவிக்கின்றனர்.
பதினோராம் மலேசியா திட்டத்தில் நீதி தேடும் படலம் செய்ய இப்போதுதான் பாடைக கட்டபபோராராம். நல்ல முயற்சிதான் ஆனால் மறுபடி ஒரு நொல்லைததிட்டமாக குருடன் கையில் கம்பை கொடுத்து நடராஜா போடாமல் இருந்தால் சரி.
ஆயிரமாயிரம் சமுதாய குமுறல்களை நமது பத்திரிக்கிகள் தினம் வரிஞ்சிக்காட்டி எழுதித்தான் வருது. பதிப்பாகும் கண்முன் கந்தல்களுக்கே விடியல்கள் விலாசம் தேடுகின்றன.
தோழர் க. ஆறுமுகத்தின் உழைப்பு மார்ச் 8 புத்தக உண்மைச சம்பவங்களை இந்த அரசு ஊமையாக்கி அத்திப்பெட்டியாகியத்தை அரசியல் ரீதியில் பரிகாரம் காணாத ஓர் ஆனாதி இனத்துக்கு இப்ப 11 ம் மலேசியத திட்டத்தில் மயிரா கிடைக்கும் என்று கேக்கிறேன்?
ஓர் உரிமைக்குரலுக்கு தொண்டையில் தூக்கு கயிறு, காதில் மரண பஞ்சு, மூக்கில் விசககாத்து என்று உலக மனித நேயம் மரணித்து இருக்கையில் 14 ஆண்டுகள் அந்த ஆத்மாக்கள் மறு பிறவி எடுத்து விட்ட நிலையில் என நீதி விசாரணை. நேற்று லோகாபில் செத்தவன் கதை சொத்தையாகி போகிறது.சுய நினைவில்தான் உங்களுக்கு எல்லாம் முனைவர் பதவிகளா?
சிலாங்கூர் மாநில தண்ணிக்கே இன்னும் அறிவாளிகள் நாடாளுமன்றத்தில் மங்கிய கதை பேசி நிலத்துக்கும் தண்ணிக்கும் பைபுக்கும் பேரம் பேசுகிறார்கள். இதற்கு 11 வது மலேசியா திட்டம் என்ன சொல்லுது பாருங்க்களா? ஊத்தற மழை தண்ணிய பிடிக்காம மலை ஏறி கொடி நட அம்புலன்ஸ் ச கேக்கிற கேடா இருக்கு நிபுணத்துவம்.
யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க
மார்ச் 8 புத்தகம் கிடைக்குமா….?
pls give ur contact no.
பொன் ரங்கன் உங்கள் கருத்துக்கள் முற்றிலும் உண்மை..
கம்போங் மேடான் சம்பவம் தொடர்பாக கேள்வி கேட்டதினால் உதயகுமாருக்கு இரண்டரை ஆண்டு சிறைத்தண்டனை. வாய் மூடி அமைதியாய் இருக்கும் சமுதாய காவலன் என்று கொக்கரிக்கும் ம இ கா மற்றும் இதர கட்சிகள் இருக்கும் வரை சமுதாயதிற்கு எந்த பயனும் இல்லை.
மார்ச் 8 புத்தகத்தை மறு பதிப்பெடுத்து, செம்பருத்தி மூலம், வேண்டுவோருக்கு அனுப்பி வைக்கலாம். கடைகளில் விற்கத்தானே தடை, வேண்டியவர்களுக்கு அனுப்புவதில் தவறில்லை. மேலும் விவரங்கள் தேவை என்றால் முன்னாள் பிரதமர் மகாதிமிரை கேளுங்கள். அவரது ‘மலாய் டெலிமா’ 1970ல் தடை செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட காலக்கட்டத்தில்தான் அப்புத்தகத்தை நான் வாங்கியிருந்தேன்.
அந்த கால கட்டத்தில் நான் அங்குதான் குடியிருந்தேன் ! ஒரு பயலும் தாமான் மேடான் சம்பவத்தை முழுமையான விவரிக்கவில்லை ! அது ஒரு திட்டமிட்ட சதி என்று அடித்து கூறலாம் ! ( அங்கு இந்திய தறுதலைகள் செய்த செயல் மறுப்பதற்கு இல்லை )
மே 13 சம்பவங்களை தொகுத்து முன்னாள் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் MAY 13 BEFORE AND AFTER என்ற புத்தகத்தை எழுதியிருந்தார். அப்புத்தக வெளியீட்டிற்கு அரசாங்கம் எந்தத் தடையையும் விதித்ததில்லை. அதேபோன்று கம்போங் மேடானில் மார்ச் 8ல் நடந்த சம்பவங்கள் புத்தகமாகி வெளியாகியுள்ளது. இதற்கு மட்டும் என் இந்தத் தடை?. தமிழன் என யாராவது நாடாளுமன்றத்தில் இருப்பார்களேயானால், இந்தக் கேள்வியை எழுப்புவார்களா?
மார்ச் -8 புத்தகம் வேண்டும் .எப்படி பெறுவது .நாதன் -0193537284
will contact
MAY 13 BEFORE AND AFTER என்ற புத்தகம் தடை செய்யப்படாததற்கு அதில் பல உண்மைகள் மறைக்கப்பட்டும், பல சம்பசங்கள் திரித்தும் எழுதப்பட்டிருந்தது காரணம் என்பதை அந்த புத்தகத்தைப் படித்தவர்களுக்கும் ‘அந்த’ சம்பவங்களைப் பற்றி அறிந்தவர்களுக்கும் தெரியும்.
மிஸ்டர் பலவான் கூறுவதை மறுப்பதற்கில்லை . இருப்பினும் மே 13 என்பதும் மார்ச் 8 என்பதும் கலவரம் சம்பந்தப்பட்டவை என அரசிற்கு தெரியும். ஆக, முன்னதற்கு அங்கீகாரம் வழங்குவதும், பின்னதற்கு தடை விதிப்பதும், பாரபட்சம் ஆகாதா? இதனை தட்டிக் கேட்பதில் தவறேதும் உண்டா?