-பி. இராமசாமி, பினாங்கு மாநில துணை முதலமைச்சர் II.
நெகிரி செம்பிலான், பாகாவில் கம்போங் செரம்பாங் என்ற கெட்கோ கிராமத்தில் வாழ்ந்து வரும் 200 குடியிருப்பாளர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 4 ஏக்கர் நிலத்தைக் கொடுத்து லோட்டஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான தாமரை ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் அவர்களின் நிலப் பிரச்சனையை தீர்த்து விட்டது போன்ற தோற்றத்தை அளிக்க தமிழ் ஊடகங்களில் சில முயன்று வருகின்றன.
இது உண்மையல்ல. சில தமிழ் ஊடக நாளிதழ்கள் ஒரு சில மஇகா உறுப்பினர்களுடனும், கிராமத் தலைவருடனும் பேசி விட்டு, குடியிருப்பாளர்களுக்கு எட்டு ஏக்கர் நிலம் கோருவது நியாமல்ல என்றும், தாமரை ஹோல்டிங்ஸ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 4 ஏக்கர் நிலத்தை இலவசமாகக் கொடுக்கத் தயாராக இருகின்றது என்றும் கூறுகின்றன.
இந்த மஇகா உறுப்பினர்கள், மூடப்பட்டுவிட்ட கெட்கோவின் முன்னாள் அதிகாரிகள் மற்றும் கிராமக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் எண்ணிக்கையில் வெகு சிலரே என்பதையும் அவர்கள் குடியிருப்பாளர்களின் நலன்களையும் அக்கறைகளையும் பிரதிநிதிக்கவில்லை என்பதையும் நாம் ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்விவகாரத்திற்கு ஓர் ஏற்புடைய தீர்வை காண்பதற்காக குடியிருப்பாளர்கள் நடத்திய போராட்டத்தின் தொடக்க காலத்திலிருந்து, கெட்கோ கிராம குடியிருப்பாளர்கள் நடத்திய போராட்டம் நீத்துப் போவதற்காக அதிகாரவர்க்கத்தினருடன் மிக நெருக்கமாக உழைத்தவர்கள் இந்த மஇகா உறுப்பினர்கள்.
குடியிருப்பாளர்களைப் பொறுத்தவரையில், இந்த விவகாரத்தை சுமுகமாக பேசி தீர்ப்பதற்காக அவர்களை தாமரை ஹோல்டிங்ஸோ, நெகிரி செம்பிலான் அரசோ அழைக்கவில்லை. குடியிருப்பாளர்களுக்கு தாமரை ஹோல்டிங்ஸ் 4 ஏக்கர் நிலம் கொடுக்க முன்வந்திருக்கிறது என்ற பேச்சு குடியிருப்பாளர்களின் பிரதிநிதிகள் என்று ஏற்றுக்கொள்வதற்கு அறவே தகுதியற்ற ஒரு சிலரின் வாயிலிருந்து உதிர்வதாகும்.
அவர்கள் வெற்றிகரமாக வீட்டு மனை நிலைங்களை வாங்கி வீடுகள் கட்டியுள்ளனர் என்றாலும், அவர்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட விவசாய நிலம் இன்று வரையில் அவர்களிடமிருந்து நழுவிக் கொண்டே போகிறது.
கெட்கோ நிலத்தை இரகசியமான முறையில் விற்கிறது
சில ஆண்டுகள் கடந்த பின்னர், கெட்கோ முன்னர் அளித்திருந்த வாக்குறுதியை மாற்றிக் கொண்டு நிதி மற்றும் நிருவாக பிரச்சனைகளை முன்வைத்து குடியிருப்பாளர் ஒவ்வொருவருக்கும் 8 ஏக்கர் நிலத்தை மட்டுமே அளித்தது. இதனையும் அது நிறைவேற்றவில்லை. நிதி அவதூறுகள், தவறான நிருவாகம் மற்றும் ஊழல் போன்ற காரணங்களுக்காக கெட்கோ நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டவரின் கைக்குச் சென்றது.
பின்னர், கெட்கோ அதன் சொத்துகளை விற்று விட எண்ணிய போது, அந்த நிலத்தை குடியிருப்பாளர்கள் ரிம16 மில்லியன் விலைக்கு வாங்குவதற்கு விரும்பினர். ஆனால், அந்த நிலத்தை திடீரென்று இரகசியமான முறையில் லோட்டஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான தாமரை ஹோல்டிங்ஸுக்கு விற்கப்பட்டது.
ஒரு சுமுகமான தீர்வு காணப்படாத நிலையில், குடியிருப்பாளர்கள் தாமரை ஹோல்டிங்ஸுக்கு நிலத்தை கெட்கோ விற்றது செல்லுபடியாகாது மற்றும் பிரதிவாதியான கெட்கோ இந்த நில விவகாரத்தில் தலையிடக்கூடாது என்ற உத்தரவைக் கோரி வழக்கு தொடர்ந்தனர்.
இந்த விவகாரத்தில் நீதிமன்றம் எந்த இறுதி முடிவையும் இன்னும் எடுக்கவில்லை. ஆனால், இம்மாதத் தொடக்கத்தில், தாமரை ஹோல்டிங்ஸ், நூற்றுக்கணக்கான போலீஸ்காரர்கள், ரெலா உறுப்பினர்கள் மற்றும் கூலிக்கு அமர்த்தப்பட்ட குண்டர்கள் ஆகியோரின் உதவியுடன், இந்த நிலத் திட்டதிற்குள் புகுந்து குடியிருப்பாளர்களின் ரப்பர் மரங்களை தரைமட்டமாக்கினர்.
இந்த வலுக்கட்டாயமான நடவடிக்கையை தடுத்த நிறுத்த குடியிருப்பாளர்கள் அவர்களால் முடிந்ததைச் செய்தனர். ஆனால், முடிவில் அவர்கள் போலீஸ்காரர்கள் மற்றும் ரெலா உறுப்பினர்களின் அடிதடிகளுக்கு ஆளாகினர். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள்கூட கைது செய்யப்பட்டனர்.
மலேசியாவில் 7 தமிழ் நாளிதழ்கள் இருக்கின்றன. அவை சுருங்கி வரும் வாசகர் சந்தையில் அவர்களின் ஆதரவைப் பெறுவதற்காக ஒன்றோடொன்று போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. இரண்டு நாளிதழ்களைத் தவிர, இதர நாளிதழ்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக கெட்கோ விவகாரம் குறித்து செய்தி வெளியிட தயக்கம் காட்டி வருகின்றன.
இது ஏன் என்று கண்டுபிடிப்பது ஒரு பெரிய விசயமல்ல. லோட்டஸ் நிறுவனம் மலேசியாவில் ஒரு பிரலமான இந்திய நிறுவனம். விளம்பர வருமானம் பெறுவதற்காக இந்த ஊடகங்களில் பல அந்த நிறுவனத்தின் ஆதரவை எதிர்பார்த்து இருக்கின்றன. மேலும், லோட்டஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் தமிழ் நாளிதழ்களின் முதல்வர்களோடு நல்லுறவை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்த கட்டுரை முழுமையான விளக்கம் தரவில்லையே ?
அரை குறையாயாக முடிந்திருக்கிறதே !
தமிழர்கள் என்றால் தெரு நாய்கள் போல அங்கும் இங்கும்
வெறும் ஆர்பரிப்பு /ஆர்ப்பாட்டம் செய்து குட்டையை
குழப்பி பின், அந்த விவகாரத்தை விட்டு, இன்னொரு குட்டையை
குழப்பி … …,இப்படியே, காலமெல்லாம்; வெறும் வெற்று வெடிகளாக
பயனின்றி வீண் கதை பேசி … பேசி …,எதற்கும் உதவா மானிடப்
பிண்டங்களாக …மண்ணோடு மண்ணாக வேண்டியது தானா ?
எதற்கு ஐயா பத்திரிக்கை அறிக்கைகள் ?
நீங்கள் எல்லாம் இன்னும் உயிரோடு இருக்கிறீர்கள் என்று மக்களுக்கு
சொல்லவா ?
வழக்கு நீதி மன்றத்தில் இருக்கிறது என்றால் …, அவர்களைப் பிரதிநிதித்து வழக்காடும் அறிவாளி யார் ?
அவர் என்ன பண்ணிக்கொண்டு இருக்கிறார் ?
தூங்கிக் கொண்டிருக்கும் அவரை அல்லவா எழுப்பி …அடுத்து என்ன
என அறிய வேண்டும் !
மற்றவர்களுக்கு அக்கறை இருந்தால் நெறி முறைகளோடு அணுகுங்கள் !
பத்திரிக்கை அறிக்கை …,ஆர்ப்பாட்டம், வேலை அற்றவன் செய்யும்
வெறும் விளம்பரம் தேடும் மூடத்தனம் /அரசியல் காரியவாதித் தனம் !
நம் இனத்தின் பேர் சொல்லி; நகர்த்த இயலா பாறைகளை நகர்த்துவதாக வெற்று அறிக்கை விடுவதை எம் தலைவர்கள்
நிறுத்தினாலே சில காரியங்கள் தானே நகரும் .
முதலில் வழக்கு மன்றத்தில் அவர்களை பிரதிநிதிக்கும் …மனிதர்
அவர் கடமையாற்றட்டும் .
அப்படி ஒருவர் இல்லையேல் …,அவர்கள் செய்வது ,பேசுவது
எல்லாம் …அவர்களை இன்னொரு ஏ மாளிக்கூட்டமாக்கும் .
அரசியல் பேசுவோர் அப்போது காணாமல் போவார்கள் !!!
சோம்பேறிகள் சட்டம் முறையாக வாதாட முடியாமல் வசூல் செய்துவிட்டு சமாதனம் பேசி அங்கும் இங்கும் வசூல் செய்து வாதிகளையும் பிரதிவாதிகளியும் நடுத்தெருவில் விடுவது இன்றைய சட்டப பேடிகள் செய்யும் அநியாங்கள் !