குடியுரிமை பெற்ற 5,076 நபர்கள் இன்னமும் மைகார்ட்டை பெற முன்வரவில்லை!

red icசிகப்பு அடையாள அட்டையை வைத்துள்ளவர்களின் குடியுரிமைக்கான  பரிசீலனை 2010 முதல் நடந்து வருகிறது. இது சார்பாக டிசம்பர் 12ஆம் தேதி 2012இல் புத்ராஜெயாவில் உள்ள குடியுரியை இலாக முன் ஒரு பேரணியும் நடந்தது.

சுமார் 300,000 க்கும் அதிகமானோர் சிகப்பு அடையாள அட்டை பிரச்சனையில் சிக்கி தவிக்கிறார்கள் என்றனர் எதிர்கட்சியினர். ஆனால் சுமார் 9,000 மக்கள் மட்டுமே 2012-வரை குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளதாக மஇகா-வின் துணைத்தலைவரும் அமைச்சருமான  மருத்துவர் சுப்ரமணியம் கூறியிருந்தார்.

கடந்த புதன்கிழமை 18.3.2015-இல் சுங்கை சிப்புட் நடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ஜெயகுமார் தேவராஜ் எழுப்பிய நாடளுமன்ற கேள்விக்கு எழுத்து மூலாமாக பதில் கொடுத்துள்ளார் உள்துறை அமைச்சர்.

jayakumarஜெயகுமாரின் கேள்வி: 2010 ஜனவரி முதல் 2014 டிசம்பர் வரையில் குடியுரிமை பெற்றவர்களில் எத்தனை பேர் இன்னமும் நீல அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள வில்லை?

அரசாங்கத்தின பதில்: 2010 முதல் 2014 வரையில் குடியுரிமை வழங்கப்பட்டவர்களில் 669 நபர்கள் இன்னமும் நீல அடையாள அட்டைக்கு (மைகார்ட்) விண்ணப்பம் செய்யவில்லை. மேலும், அதே காலக்கட்டத்தில் குடியுரிமை பெற்று நீல அடையாள அட்டைக்கு (மைகார்ட்) விண்ணப்பம் செய்து, இன்னமும் வந்து பெற்று கொள்ளாதவர்களின் எண்ணிக்கை 5,076 ஆகும்.

அதாவது, விண்ணப்பம் செய்தவர்களின் 5,076 நீல அடையாள மைகார்டுகள் இன்னமும் குடியுரிமை பதிவு இலாக்காவில்தான் உள்ளன. எதனால் இந்த நிலைமை என்ற கேள்வியும் எழுகிறது என்கிறார் ஜெயகுமார்.

இது சார்பாக கருத்துரைத்த வழக்கறிஞர் கா. ஆறுமுகம், இதில் அரசாங்கத்தின் போக்கை கண்டனம் செய்வதாக கூறினார். விண்ணப்பம் செய்த மக்களை அடையாளம் காண பல வழிகள் உள்ளன. தமிழ் தினசரிகளில் விளம்பரம் செய்யலாம்,  தமிழ் வானொலிகள் வழி இது சார்பான தகவல்களை கூறலாம். எஸ்.ஐ.டி.எப் (SITF) என்ற அமைப்பில் இருக்கும் சிவசுப்ரமணியம் வழி ஏற்பாடுகள் செய்திருக்கலாம்.

இப்படி பல வழிகள் இருந்தும் அரசாங்கம் மெத்தனமாக இருந்துள்ளது அதன் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது என்றார்.

இந்த 5,076 நபர்களின் தகவல்களை உடனடியாக அரசாங்கம் தனது அகப்பக்கத்திலாவது வெளியிட வேண்டும் என்கிறார் ஜெயக்குமார். நீல மைகார்டுக்கு விண்ணப்பித்து நீண்ட நாட்கள் ஆகியும், தனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என தன்னிடம் வந்த ஒரு நபரை ஈப்போ ஜெபிஎன்  அலுவலகதிற்கு அழைத்துச் சென்றேன்.  அங்கு கணிணியில் எந்த தகவலும் இல்லை என்றார்கள். பிறகு புத்ரா ஜெயாவுக்கு அழைத்துச்ஸ்ன்ற போது அங்குள்ள அதிகாரி அதற்கான மைகார்டு ஒரு வருடத்திற்கு முன்பே தயாராகி விட்டதாகவும் அது சார்பாக கடிதமும் அனுப்பப்பட்டதாகவும் கூறினார், என்று தனது அனுபவத்தை பகிர்ந்தார் ஜெயகுமார்.

“இது ஒரு தாமதமாக செயல்படும் இலாகாவா அல்லது வேண்டுமென்றே செய்கிறார்களா?”. என வினவுகிறார் சுங்கை சிப்புட்டில் சாமிவேலுவை  தோற்கடித்த மலேசிய சோசியலிஸ்ட் கட்சியின் ஒரே நாடளுமன்ற உறுப்பினர்  ஜெயகுமார் தேவராஜ்.