ம இ காவின் இரு தரப்பு போட்டிகள் மலேசிய இந்தியர்களின் சமூக, அரசியல், பொருளாதார பிரச்சனைக்கு தீர்வாகாது என்பது பழனிக்கும், சுப்ரவுக்கும் தெரியும்.
இப்போது நடப்பது வெறும் “பதவிப்போர்” இந்த சட்டப்போர் ஓர் அறிவிலித்தனம். இதில் பல பதவிகள் ஊசலாடுகிறது.
பிள்ளையையும் கில்லி விட்டு தொட்டிலையும் ஆட்டிக்கொண்டு இருக்கும் ஒரு முன்னாள் நாடோடி வருங்கால நாடோடிகளை அலிபாபாவாக்கி மைக்கா போல மூட்டை கட்டலாம் என்ற
எண்ணம் ஒரு பக்கம் ஓட ….
சட்டம் judicial review என்கிறது? ரோஸ் கு அரசியல் கட்சிகளை அமைக்க அடிப்படை சட்டம் இருக்கும்.ம இ காவுக்கும் சட்டம் உண்டு.
ம இ கா ரோஸிடம் annual returns கொடுத்து தங்கள் தகுதியை உறுதி செய்து இருக்கும். இதற்குப்பிறகு வரும் சிக்கல்கள் எல்லாம் கட்சியின் சட்ட உட்பிரிவிக்கு சொந்தம்.அடிப்படையை மீறுவோர் கட்சியில் இடை நீக்கம் செய்யப்பட வழிகள் உண்டு. ஆப்பில் பழம் பறிக்கபபோய் டுரியான் தலையில் விழுந்த கதையாய் தலைகள் நொந்த நிலைதான்.
தேர்தலில் தோற்ற தரப்பு தேர்தல் சட்டப்படி நடந்தது ஆனால் தில்லு முல்லுகள் , வாக்குகள் ,லஞ்சம் ,வஞ்சம் என்கிறது . வென்ற தரப்பு எல்லாம் ஒக்கே பழனிதான் தலைவர் என்கிறது. ஆனால் எங்கள் ஆள் பலம் பழமாக இல்லை. சாப்பிட கொஞ்சம் “கூட தா” என்கிறது பழனி தந்துவிட்டு போகலாம். ஆனால் இப்ப இந்த பழம் நீ யாருக்கோ பழுக்க மறுக்கிறது.
சுப்ரா .சரவணன் சார்பு ம இ கா பதவியில் இருந்தும் முழு அமைச்சர் துணை அமைச்சர் பதவிகளில் இருந்தும் ஏதோ இன்னும் வேலை நடத்த ஆசைபடுவது புரிகிறது . இன்னும் உரிமையோடு நடத்த கட்சியை முழு ஆட்சிக்கு கொண்டுவர ஆசைபடுவதும் நியாயம்தான். இதில் ஒரு பட்டாளமே படை எடுத்து ஆடுகிறது. இது சேவைக்கா ? அல்லது 300 கோடி சொத்தை கப்பாத்தவா? அமுக்கவா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுகிறது ! இப்ப இதுவெல்லாம் வேகாது என்று பழனி படம் காட்டுகிறார் .
மறு புறம் பழனி 300 கோடியை ம இ கா உறுப்பினர்கள் பேரில் போட வேண்டும் என்ற விந்தையை வலையாக விரித்து உள்ளார். மைக்கா 10 கோடியை 8 கோடியாக விலையாக்கிய போது (பழனி காலத்தில்) இவர் காப்பாத்த வில்லை ! சாமிவேலுடன் ஆட்டம் போட்ட டெலிகொம் ,தெனகா, இன்னும் சமுதாய பொருளாதார போர்வைகளை இவர் தூக்கிக்கூட பார்க்க வில்லை.
நஜிப் தலையிட்டு ஞானலிங்கம் மைக்கா வை விழுங்கிய போது பழனிதான் தலைவர் வாய் திறக்க வில்லை. மைக்கா வை ஒரு turn around exercise செய்ய அல்லது restructure செய்ய வலுவில்லாத தலைவர் இந்த சமுதாயத்தை எங்கனம் தூக்கி தாங்க போறார் என்பது பலரின் கேள்வி.
நஜிபின் பேரம் படி அடுத்த ம இ கா வின் தேர்தலுக்குள்ளும் 2018 பொது தேர்தலுக்கு முன் பழனி விலக வேண்டும் என்ற BN ன் எழுதா ஒப்பந்தம் ஒன்று உண்டு ,என்பதை பல பத்திரிக்கைகளும் நாடே அறியும். இருந்தும் ம இ காவின் இந்த கலவரத்துக்கு காரணம் சமீப காலமாக பழனி புதிய பாடல் ஒன்றை பாடி படத்தை இடைவேளை உச்ச கட்டத்துக்கு கொண்டு போனார்.
அதுதான் ” மக்கள் என்னை விரும்புகிறார்கள்” நான் தலைவராக தொடர்வேன் என்ற விஷக்காற்று கர்போண்டி கரிய மிளவாயாக அவசரமாக ( அவுத்து) சுத்தல் விட்டதுதான் இன்றய இருபக்க சுமைதாங்கிகள் படும் பிரவச கருக்களைவு.
நேற்றுக்கூட ஒரு செய்தி …நீண்ட நாள் பிள்ளை இல்லாத ஒருத்தி தன் புருஷனை திருப்தி படுத்த மாற்றான் மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தையை கத்தியில் கிளறி பிள்ளையை திருடினாலாம். இது கடமை உணர்வா ? தாய்மை தியாகமா ?
ஆனால் இப்போது ம இ காவில் நடக்கும் போர் எதற்கு ?இது இந்த இந்தியன் சமுதாயத்தை எங்கு போய் நிறுத்தப்போகிறது ? கூட்டி கழித்துப பார்த்தால் நமது பெருமைகள் பொது தேர்தல் விடியலில்தான் உண்டு. நீங்கள் இன்னும் 100 தலைவர்களை தேர்வு செய்யுங்கள் 10 அமைச்சர்களை அமையுங்கள் .. 2020குல் அல்லது அதற்குபின் என்ன கிழிக்க போகிறீர்கள் என்பதுதாம் 5 லட்சம் ம இ கா உறுபினர்களின் கேள்வியாகும்.
உதாரணத்துக்கு வைத்துககொள்வோம் நீதிமன்றம் எந்தப்பக்கம் தீர்ப்பை தந்தாலும் ஒருவர் கேசை அப்பீல் நீதிமன்றத்துக்கு இழுப்பார். அங்கே கேஸ் டிஸ்மிஸ் ஆகும் பட்சத்தில் பழனிவேல் கட்சியை வழி நடத்துவார். போதுமடா சாமீ என்று மக்கள் அலற !? கட்சி மக்கள் இரண்டாவர்கள் ..பொதுததேர்தல் முடிவுகள் பக்கம் பக்கமாக பத்திரிகையில் குதறும் . சமுதாய நீரோடையில் ஓட்டையும் உடைச்சளும் உச்சத்தை எட்டும். ஆளும் கட்சி தடுமாறும் ,,,,பாகாதான் பரிகாசம் மக்களை குழப்பும்.
PKR சுரேந்திரன் பேசும் 300,000 இந்தியர் பிரஜா உரிமை சிவா சுப்பிரமணியம் இருக்க மாட்டார் ? என்ன செய்யலாம் என்று ம இ கா கிளை தலைவர்கள் எந்த கொடியும் பிடிக்க மடியாத நிலையில் முயலும் இல்லை அமையும் இல்லை விவேகம் எனும் முயலாமை தலைமையால் தூவானம் தொடருமா என்று வெறுத்து பார்ப்போம்.
இது ஒரு சமுதாயத்தின் சுய நிர்ணய விழிப்புக்கு எழுதியது. நிலையற்ற தலைமைத்துவம் ஏலனதுக்கும் வறுமைக்கும் ஆளாகும் போது நமது மரியாதை கௌரவம் அரிசயல் விமோசனங்கள் காலத்தை காலவதியாக்கிவிடும். கடந்த காலங்களை நிமிர்த்தி பார்ர்கவும் , நிகழ காலத்தை நேர் செய்யவும், எதிகாலத்தை வென்று வளர்க்கத்தான் “அரசியல்” தலைவர்கள் . அல்லது வீட்டோடு ஊமையாகிப் போகலாம்.
-ஒரு முன்னாள் கிளைததலைவர்
கட்சியை கலைத்து விட்டு , சொத்துக்களை மா இ கா தொண்டர்களுக்கு எழுதி விட்டு இலங்கைக்கு சென்று விடுங்கள் இந்த மா இ கா மலை முளுங்கிகள்.
ஐயா பொன் ரங்கன் தங்களின் கருத்து என்னவோ?
இப்போது பிரச்சனை ,சொத்தா,அல்லது பதவியா ? இவ்வளவு காலமாக கூட வே இருந்தவர்கள் இதைப்பற்றி வாய் திருக்கவில்லை..இப்போது ஞானம் பிறந்ததா? போங்கடா நீங்களும் உங்கள் அரசியலும் …
ஒரு முன்னாள் கிளைத்தலைவர் – என்ற பெயரில் இதை எழுதியிருப்பது யார் என்பதை யூகிக்க முடியாவிட்டாலும், அவரின் நோக்கம் என்ன, யாருக்கு எதற்காக வக்காலத்து வாங்குகிறார் என்பது தெள்ளத் தெளிவாகவே விளங்குகிறது. இன்றைய (21-03-2015) சில ‘தமிழ்ப்பத்திரிகைகளில் ‘பழனிக்கு முதல் வெற்றி’ , ‘தர்மம் வென்றது’ எனும் தலைப்புக்களில் வெளிவந்துள்ள ‘தலைப்புக்களின்’ உள்நோக்கத்துக்கும் இந்த கட்டுரையின் உள்நோக்கத்துக்கும் அதிக வேறுபாடும் வித்தியாசமும் இல்லை.
அவற்றில் – அந்த உள்நோக்கத்தில் ஒன்று: சாமிவேலுவை மட்டம் தட்ட வேண்டும்.2. பழனி திறமையற்ரவர் எனும் உண்மை நிலையை வெறும் ‘மாயை’ என்று மக்களுக்கு உணர்த்துவது அல்லது உணர்த்த முயலுவது அதன் மூலம் சாமிவேலுவை உசுப்பேற்றுவது. இந்த வழக்கில் – வழக்கு இன்னும் ஆரம்பமே ஆகவில்லை என்று பாலர் பள்ளிக்குப் போகும் பிள்ளைக்கும் தெரியும். ஆனால் ‘இந்த’ தமிழ்ப்பத்திரிகையாளர்களுக்கு ஏன் புரியவில்லை? இதுதான் அவர்கள் ‘அவரின்’ பாசறையில் படித்து வந்த பத்திரிகா தர்மமா? வழக்கு நடக்கலாமா கூடாதா? என்ற கேள்விக்குத்தான் இப்போது பதில் கிடைத்துள்ளதே தவிர பழனி இன்னும் அந்தக் கோவணத்துடன் – எல்லாம் இழந்த கோலத்துடனும் கோபத்துடனும் அந்தப் பழநியில் தான் இன்னும் உள்ளார். சங்கப் பதிவிலாகா ம.இ.கா விவகாரத்தில் மூக்கை நுழைத்தது சரியா இல்லையா என்று விவாதிக்கத்தான் – இந்த வழக்கை மேற்கொண்டு தொடரத்தான் அனுமதி கிடைத்துள்ளது. இது எந்த வகையிலும் பழனிக்கு வெற்றி அல்ல. இன்னும் சொல்லப் போனால் ‘எதிரணிக்குத்தான்’ இப்போதைய வெற்றி போய்ச் சேரும். காரணம், வழக்கு உண்மையான விசாரணையின் போதுதான் உண்மை வெளிவரும். இதில் எதிரணி வழக்காட வேண்டிய தேவையே இல்லை. காரணம், சங்கப் பதிவிலாகா தலையிட்டது சரிதான் என்று தீர்ப்பு வருமானால் அந்த கணமே பழனி தோற்றுவிட்டார் என்றுதான் அர்த்தம். ம.இ.கா தேர்தலில் நடந்த தில்லுமுல்லுகளை சங்கப் பதிவிலாகா அனுமதிக்க முடியாது என்று தான் தீர்ப்பு வரும். அதற்கு ஏப்ரல் 2 மாலை மணி 3 வரை காத்திருப்போம். அடுத்து, சாமிவேலுவை ‘சில’ பத்திரிகைகளுக்கு அறவே பிடிக்காது. ஆனாலும் சாமிவேலுவைப் பற்றி – அவருக்கு எதிர்ப்பான செய்தியைப் போட்டால் அன்றும் சரி இன்றும் சரி பத்திரிகை விற்பனை அதிகரிக்கும் என்பது எல்லா தமிழ்பத்திரிகயாளருக்கும் தெரியும். எனவே, எந்த காலத்திலும் ‘அவர்களுக்கு 3 வேளை சோறு போடுபவர் இந்த சாமி தான். எனவே அவரை உசுப்பேற்றுவதிம் இவர்களுக்கு அலாதிப் பிரியம். இதில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை.
மற்றபடி அ) ம.இ.கா தலைவர் பதவிக்கு வந்த இத்தனை ஆண்டுகளில் பழனி எந்த ஆணியையும் ‘புடுங்க’ வில்லை என்பதும் அவரல் எந்த ஆணியையும் ‘புடுங்க’ முடியாது என்பதும்
ஆ) 2018-இல் அவர் தலைவர் பதவியை விட்டுப் போயாக வேண்டும் அதற்குள் ம.இ.காவை ஒருவழிப் பண்ணிவிட விரும்புகிறார் என்பதும்
இ) 300 கோடி 300 கோடி என்று அவர் புலம்புவது – அதை மீட்டுக் கொண்டுவர அல்ல என்பதும் …அப்படி ஒரு 300 கோடி புதையல் எங்கேயும் இல்லை என்பதும் அவர் ஆடுவது ஒரு சதுரங்க ஆட்டம் என்பதும் அந்த ‘எல்லா’ பத்திரிகையாளர்களுக்கும் தெரியும் ஏனென்றால், 25 ஆண்டுகளாக அவர் பிரதிநிதித்த உலுசிலாங்கூர் மக்களுக்கு என்ன என்ன சேவைகளை செய்தார் என்பதும் கேமரன் மலைக்கு ஏன் ஓடிப்போனார் என்பதும், யாராவது உதவி என்று போனால் எப்படியெல்லாம் தில்லுமுல்லு பண்ணி பதுங்கிக்கொள்வார் என்பதும் அந்தப் பத்திரிகை மன்னர்களுக்கு தெரியாதா என்ன…என்ன..என்ன……
ம இ கா அழிவால் மலேசியாவில் நம் இனத்தின் குரல் மழுங்கி போய்விடும் .
மலேசியன் எங்கே வருகிறீர்கள் என்று புரிகிறது. ஐயாகிட்டாயே கேள்வியா? ம இகா வைத்து கலப்பு விஷம் குடிச்சவங்க பதில் தருவாங்களா என்று பார்ப்போம். கட்டுரையாளர் ஒரு விசியத்தை விட்டு விட்டார். 30 வருசமா சாமிவேலு சுப்ரா ஜாதி போராட்டதுள்ள சமுதாம் நாசமா போச்சு .இப்ப பழனிவேலு சுப்ரா கேங் போர்ல தலைவர்கள் தெருவுக்கு வந்துட்டாங்க. நாஜிப் அன்ன மனசு வெச்சா GLC ? PNB இன்னும் 100 அரசு பதவிகள கொடுத்தா எல்லாம் ஆமை மாறி தண்ணி உள்ள கிடப்பாங்க. அல்லது தோட்டங்களில் சொல்லுவாங்க சாவா பாம்பு பண்டிய முளுங்கிபுட்டு மாதக்கணக்கில் புதார்ல கிடக்கும். அதுபோலா சமுதாயமாவது மண்ணாங்கட்டியாவது வீட்டுல பொண்டாட்டி மெஞ்ச ஒரு சித்தப்பா கத இருக்கு…. மலேசியா அண்ணே அதே நீங்க சொன்ன நல்லா இருக்கும். ஊதுங்கா பாப்பு படம் எடுக்குதா பாப்போம்?
டத்தோ ஸ்ரீ டாக்டர் சுப்ரா அவர்களின் நேரடி தலையிட்டால், அரசாங்க மருத்துவ மனையில் எனக்கு எட்பட்ட ஒரு பிரச்சனையை சுமுகமாக முடிந்தது.டத்தோ ஸ்ரீ டாக்டரின் உத்தரவில், அமைந்த விசாரணை காமிடி 8 மாதத்தில் விசாரணையை முடித்து , நஷ்ட ஈடு கொடுக்கபட்டது. ஒவ்வொரு செவ்வாய் கிழமையிலும் மலை 5 தொடங்கி பொது ஜனங்களை நேரடியாக சந்தித்து வரும் ஒரு நல்ல உள்ளம் கொண்ட மனிதர் என்பதை, அவரை நேரில் சந்தித்த பொது கண்ட உண்மை. மற்றும் 2006 ல் அவர் பார்லிமென் செகாரியாய் ( அவுசிங் மினிஸ்ட்ரி ) இருக்கும் பொழுது, 300 வீட்டு உரிமையாளரின் (என்னையும் சேர்த்து) வீட்டு (அடுக்குமாடி வீடு ) பிரச்சனையை அவரிடம் கொண்டு சென்றேன் , அவருடைய நேரடி உத்தரவில், ஒரு ஸ்பெஷல் அதிகாரி அமைக்க பட்டு, பிரச்சனையை திர்வுகான வகை செய்தார். 2005 ல் அவருக்கு இருந்த அதே பொறுமை,விபரங்களை கேட்டது, பிரச்னை உடையோரை நல்ல முறையில் ஆலோசனை கொடுப்பது ,2014 லும் முழு அமைச்சராய் இருக்கும் இப்பொழுதும் இருக்கிறதை கண்டேன். மலேசியா இந்திய சமுதாயத்துக்கு (மா இ காவுக்கும்) தலைவாராய் வர தகுதிவுள்ள நபர். #குறிப்பு# அவரை 2 முறை ( 2006 ல் , 2014 ல் ) சந்தித்த பொழுது ,எந்த மஇ கா கிளை தலைவர்களின் சிபாரிசையோ உதவியோ இன்றி நேரடியாக அவருடைய அலுவலகத்தில் ( 2006 ல் புகிட் டமன்சாரவில் , 2014 ல் புற்ற ஜெயாவில்) சந்திக்க முடிந்தது. ஒரு நல்ல தலைவருக்கு உரிய தகுதி உடையவர். டத்தோ ஸ்ரீ டாக்டர் தலைமையில் மா இ கா அமைய வாழ்த்துக்கள்.
சுப்ரா + பழனி – இருவரில் தமிழ் மக்கள் ஆதரவு யாருக்கு அதிகம் என்று செம்பருத்தி வாக்கெடுப்பு எடுக்க வேண்டும். ஏன் வாக்கு சுப்ராவுக்கே.
சாமிவேலு காலத்தில் ம.இ.கா. நீதிமன்ற வாசலை தொட்டு வந்து சாதனைப் படைத்தது. தற்சமயம் பதிவு இலாகாவிற்கு போய் இருக்கிறது இதுவும் சாதனைதான்..!
கேங்ஸ்டர் தலைவர்கள், எம்ஐஇடி பணம் நாற்பது லட்சம் தனது வங்கிக் கணக்கில் எப்படி வந்தது என்று தெரியாத தலைவர்கள், எம்ஐஇடி மீது கேஸ் போட்டு டீல் பேசி வாபஸ் வாங்கிய தலைவர்கள், மைக்காவை, ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தை, எம்ஐஇடியை, மஇகா கட்டிடங்கள், நிலங்களை, பல கோடி வெள்ளி மதிப்புள் எம்ஐசி கட்டிட பக்கத்து நிலத்தை அமுக்கப் பார்க்கும் தலைவர்கள், மக்கள் தலையில் மிளகாய் அரைக்கும் தலைவர்கள், துப்பாக்கித் தலைவர்கள், கேட்டுக்கு பூட்டு போடும் தலைவர்கள், சமுதாயத்திற்கு சேர வேண்டிய வாய்ப்புகளைத் தட்டிப் பறித்து கோடீஸ்ரர் ஆனத் தலைவர்கள் மத்தியில் ஊமைத் தலைவர் பழனியின் பூச்சாண்டி ஒன்றும் பலிக்காது
இனிமேல் ம இ கா மாநாட்டில் சாப்பாடு இல்லை .. விஷம் கொடுப்பார்கள் ..போலும் அந்த அளவுக்கு விருந்தோம்பல் மருந்தோம்பலாகா பேராளர்கள் சாப்பிடாமல் இருப்பதே மேல் !
MIED கணக்கில் பூஜியதுக்குலே ஒரு ராஜ்யத்தை ஆண்ட ஆசாமி யார்? பாகாதான் பதாதை துணி தூக்கிகள் எங்கே? ம இ கா டதோக்கள் எல்லாம் டட்….ன் அடியிலா? ரோஸ் கட்சியையும் ரொக் எல்லா ம இ கா வணிகம் சார்ந்த அறவாரியம் சார்ந்த இயக்கங்களையும் ஒரு public inquiry குள் வைத்து இழுத்து மூட வேண்டும்.முன்னாள் இந்நாள் தலைவர்களை இயக்குனர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி ம இ கவில் தலையிட விடாமல் தடுக்க வேண்டும்.
இன்னுமா இருக்குது மா ஈ கா ,சீக்கிரம் ஒலித்து கட்டுங்கப்பா
தலைப்பு செய்திக்கு
நெஞ்சுபபொறுக்கவில்லை ….
விரைவில் தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்ற என் காடுரையை படைப்பேன். சிலாங்கூர் மாநிலத்தில் அமையவிருக்கும் இந்து அறப்பணி வாரியத்துக்கும் மலேசியாவில் உள்ள இந்தியர்களில் 85% தமிழர்களின் மதம் தாங்கள் இந்துக்கள் அல்ல என்பதை நிரூபிப்பேன்.
தமிழர்களின் தொன்மையான மதம் மரபு வழியாய் வரும் சமயங்களும் வைதீகம் கலவாத சைவம், மாலியம் முருகியம் ,ஆகியனவாகும் பிறகு மொழி வளப்பம் காரணாமாக தற்கால நவீன இலக்கியத்துக்கு தமிழியம் என்றும் சுறுக்கிக்கொண்ட விந்தைகளையும் காணலாம்.
பிறகு திராவிடர் கூட்டத்தில் சமய நம்பிக்கை மிகு தெலுங்கர்கள் ,மலையாளிகள் கன்னடர்கள் எல்லாம் எந்த மதம் என்றால்? அவர்கள் வடக்கில் இருந்து வந்த கலப்பினத்தவர்களுடன் கலந்தபடியால் இந்துக்களாக மாரின் இருக்கலாமே ஒழிய அவர்களும் ஆதியில் தமிழர் மரபின வைதீகம் கலவாத சைவம், மாலியம் முருகியம் ஆகியவற்றுள் இணைதவர்களே என்கிறது ஆய்வு..இந்து சாயம் அல்லது சமயம் என்பது பிராமணியம் வகுத்த வருணாசிரமம் சார்ந்த வைதீக சமையமே ஆகும்.
“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற தமிழர் மற்றும் சமய திராவிடர் பண்பாட்டுக்கு ஒவ்வாதது வைதீக சமயம் என்ற இந்துமதம் எப்படி தமிழர் அல்லது சமயத்தை இன்றும் நம்பும் திராவிட தமிழர்களும் குறிப்பா தெலுங்கர்களுக்கும் மலையாளிகளுக்கும் கன்னடர்களுக்க்ம் பொருந்தும்?
தமிழர்களுக்கு உள்ள சமய சிந்தனை குழப்பத்தால் இந்துசியம் இன்றும் வட வந்தேறிகள் ஆதிக்கத்தில் வெறும் மத பூஜை பூக்கள் என்று வணிக மைய மாயையில் தமிழர்கள் இழந்து, தொலைந்துப்போய் உள்ளோம்.
நாமாகிய மலேசியாவின் 85% தமிழர்கள் இந்துக்கள் அல்ல வெறும் 2.5 % சகிதம் ( 38,874 தெலுங்கர்கள் mohana Nambiyar source 2007)தெலுங்கர்களும் 1% மலையாளிகளும் அறியாமல் ஆளுமை செய்யும் இந்துக்கள் பாட்டிலில் தமிழர்கள் அடிமையாவதின் அறியாமை பக்தியின் பைத்தியமும் சக்தியின் பயமுமே காரணம்.
ஆதித்தமிழர்களின் பாமர அறியாமயை வடுக வட அறிவார்கள் பிராமணிய ஆதிக்கர்கள் தமிழக கோயிகளில் புகுந்து ஆட்டிப்படைக்கும் இந்து ஊசியம் தமிழர்களின் சைவ சமய சாத்திரங்களாகும். அடுத்து வடவர்கள் தமிழகத்துள் கரை தட்டிய கதையும் தமிழரக்ள் தரை கட்டியவர்கள் வரலாறும் தொடரும
இன்று நான் இந்திநீசியாவில் இருந்து இதை பதிக்கிறேன். நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலை கெட்ட திருப்பு மத சுத்தல் பேர்வளிகளின் பேயாட்டம்.
குறிப்பு : பினாங்கில் ஒரு இந்து வாரியமும் தமிழர்களின் ஓம் எழுத்தின் சுலோகத்தை பயன் படுத்த வில்லை அவர்கள் ஆரியர்கக்ளின் கிரந்த தவளை சுலோகம் ஸ்ரீம் மை சுருக்கியத்தைபோல சிலாங்கூர் இந்து அறப்பணி வாரியமும் ஸ்ரீம் மைதான் பயன் படுத்தும். ஆக ஓம் இல்லதா தமிழா ? என்று தமிழர்கள் யோசிப்போம். எல்லாம் சிவனுக்கே ” நமசிவாயாவாழ்க நாதம் தான் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் வாழ்க.!” தென்னாருடைய சிவனே போற்றி என் நாட்டவரும் இறைவா போற்றி .. தென்னாடு ஆவது விளங்குதா தமிழா?
மேற்காணும் “நெஞ்சுப்பொறுககவில்லை தமிழா” என்ற கட்டுரையை எழுதியது நான்தான் தமிழவன் பொன் ரங்கன், வேறொரு பதிவேற்றம் காரணமாக் விடுபட்டு இருக்கலாம். அதில் மலேசியாவில் இந்தியர்களில் தெலுகர்களின் மக்கள் தொகை 2.5 % சகிதம் ( 38,874 தெலுங்கர்கள் mohana Nambiyar source 2007) என்று வாசிக்கவும் .. தப்பித்தலுக்கு வருந்துகிறேன்.
இதெல்லாம் கையால் ஆகாத திறனற்ற கூஜா தூக்கி தலைவனால் உண்டாக்கப்பட்ட நிலை— நம்மவர்கள் இவ்வளவு திறனில்லா முட்டாள்களா? அன்றிலிருந்து இன்றுவரை இதே நிலை. திறநாளிகளை வேர் அருப்பதையே குறிக்கோளாக கொண்டிருந்தாள் எப்படி முன்னேறுவது
ஏன் உங்களுக்குள் வம்பு பேசாமல் மஇகாவை அச்சையகுமார் கையில் ஒப்படையுங்கள், அப்படியாவது தமிழர்களுக்கு நன்மை கிடைக்கட்டும்.
ஜோ எழுதிய பதிலுக்கு மறு பதில் தொடுக்க கட்டாயம் வந்துவிட்டது ..
ஒரு அமைச்சர் பதவி காலத்தில் பல முக்கிய பணிகளை செய்தல் தவிர்க்க முடியாது … மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கண்டிப்பாக
செயலில் காட்ட வேண்டும் … இல்லையேல் காலிசெய்ய வேண்டும் !
தனிமனிதனுக்கு செய்த உதவி வேறு சமுதாயர்திற்கு செய்யும் செய்த சேவை வேறு … இந்த அமைச்சரை சமுதாயம் ஓட்டுபோடு பாராளும் மன்றம் செல்லவாப்பினைகொடுத்தது… துதிபாட வேண்டியதில்லை
மக்களுக்கு என்ன நாட்டிற்கு என்ன செய்தார் என்பது தான் முக்கியம் ! அவர் நன்கு திறம்பட செயல் ஆற்ற ஆசீர்வதிப்போம் ….
வெற்றிவேலரே . ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு போதும்.
அண்ணன் பொன்ரங்கன் அவர்களே தமிழர்களை சதி செய்து மதம் வைத்து குழப்பி கொண்டிருக்கும் கூட்டத்தினரை வெல்ல வாழ்த்துக்கள்
தமிழர்களே இனிமேலாவது விழித்து கொள்ளுங்கள் .
ஒரு நல்ல சுமுகமான வலிமுறைகளை
கையாண்டு இந்த பிரசனைக்கு
ஒரு முடிவு கட்டவேண்டும்
பொன் ரங்கன் அவர்களே, நீங்கள் எப்போதும் அடுத்தவனையோ குறை சொல்கிறீர்கள். பஞ்சாபிகாரனும் மலையாளியும் தெலுங்கனும் இந்நாட்டில் குறைவுதான், அவரகள் சாதிக்கிறார்கள் என்ன செய்வது?
மறைத்து வெடிக்கும் மின்னலுக்கு புரிந்தது குப்பையில் கிடக்கும் குண்டுமணிக்கு புரியாதது வியப்பில்லைதான். ஆய்வு என்பது குறை காண அல்ல அறிவிக்க . தவறு இருக்குமாயின் தவிக்கவும். பல்லி போல துண்டித்து துடிக்க தயார். பொது புத்தி எனக்கு தேவை இல்லை. எதை வைத்து சாதிக்கிறார்கள் என்று எழுதுங்கள். ஒட்டு போட்டு சாதிக்கிரார்களா வேட்டு வெச்சி சாதிக்கிறார்காளா? தலைமைத்துவ குடுமியா தொண்டில் கொண்டைகாலா? பயனீட்டாளர்கள் 1.8 மில்லியன் தமிழர்கள். தமிழை விளம்பர வித்தைக்கு மட்டும் நக்குவது ஏன் ? இந்தியன் பட்டயத்தில் அவர்கள் தமிழர்களை விழுங்கவில்லை என்று சொல்லுங்கள் ? தமிழகத்தில் நடக்கும் அதே திட்டமிட்ட அழிப்புகளை சுய குருதியோடு குத்தி பாருங்கள் மணியம் கலப்பில் கயமைத்தனம் வேண்டாம்.. என ஆய்வுக்கு கணக்கில் கருத்தை முன் வையுங்கள். ஒரு வரி இரண்டு வரி விசமத்தில் விவாதம் அது குப்பையில் கிளறல். புளுக்கல்தாம் மிஞ்சும். குண்டுமணிகள் கிடைக்காது.நன்றி.