விவேகானந்தா ஆசிரமம் ஒரு பண்பாட்டு மையமாக உருவாக வேண்டும்

Vivekenanda Ashram1சுமார் 110 வருடங்களுக்கு  முன்பு உருவாக்கப்பட்ட சுவாமி வேகானந்தா ஆசிரமம் ஒரு பண்பாட்டு மையமாக உருவாக்கப்பட வேண்டும் என்கிறார் கா. ஆறுமுகம். எனவே, அதை ஒரு தேசிய பாரம்பரிய சின்னமாக  அரசிதழில்  பதிவு  செய்ய  வேண்டும் என்று கோரிக்கை விடுப்பவர்கள் அதை மறு பரிசீலனை செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

இதற்கு முன்பு அரசியல் அமைப்புகளும், சமூக இயக்கங்களும் ஆசிரமம் மேம்பாட்டுக்கு போவதை தடுக்க எடுத்த முயற்சிகளை பாராட்டுவதாகவும் ஆனால் அதே வேளையில், பண்பாட்டு வளர்ச்சிக்கு சமூகத்தின் சுய தேவைக்கான மேம்பாடு தேவைப்படுவதாக ஆறுமுகம் கூறுகிறார்.

Arumugam_Suaram”அவையரங்கம், பயிலரங்கம், நூலகம், கண்காட்சி மையம், தங்குவதற்கு சில விடுதிகளும் கொண்ட ஒரு பண்பாட்டு மையமாக உருவாக்கலாம். ஆனால், தற்போதுள்ள அதன் வரலாற்றுச் சான்றுகளாக உள்ள முகப்பு தோற்றமும், விவேகானந்தர் சிலை மற்றும் அங்குள்ள முதன்மையான மண்டபமும் பாதுகாக்கப் பட வேண்டும்” என்கிறார்.

விவேகானந்தா  ஆசிரமத்தைத்  தேசிய  பாரம்பரிய  சின்னமாக  அரசிதழில்     பதிவு செய்தால் அதன் பிறகு அந்த இடத்தில் மேம்பாடு எதையும் செய்ய இயலாது. அதோடு ஒரு முக்கியமான சமூகத்தின் சொத்துடைமையை இழக்க நேரிடும்.

இந்த இடம் போகுவரத்திற்கு வசதியான் இடத்தில் அமைந்துள்ளதால், இதனை நமது பண்பாட்டு மையமாக உருவாக்கி அதன் வழி நமது மொழி, கலை, இயல், இசை, நாடகம் போன்றவற்றை வளர்க்கவும் ஊக்குவிக்கவும் பயன் படுத்தலாம். அவ்வகையில் அது நமது சமூகத்தின் ஒரு சொத்துடைமையாகவும் இருக்கும்.

“இது சார்பாக விவேகானந்தா  ஆசிரமத்தின் பொறுப்பாளர்கள் தங்களது வாணிப மேம்பாட்டை கைவிட்டு விட்டு, அதன் வழி நமது சமூகம் பண்பாட்டு வழியில் பயனடையும் திட்டங்களை முன் வைக்க வேண்டும்”

அரசிதழில் பதிவு செய்து விட்டு அந்த இடத்தை ஒரு காட்சி பொருளாக வைத்திருக்க ஆசைப்படுபவர்கள், அதை ஒரு பண்பாட்டு மையமாக உருவாக்கினால் கிடைக்கும் பயனையும் ஒரு கணம் சிந்தனையில் எடுத்துக் கொள்ளுமாறு வழக்கறிஞருமான ஆறுமுகம் கேட்டுக்கொள்கிறார்.