குலா: கம்போங் தை லீயை பாரம்பரிய சொத்தாக அறிவிக்க வேண்டும்

Kg Tai Lee-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், ஏப்ரல் 5, 2015.

 

கம்போங் தை லீ யின் உரிமையாளர் 1977 ஆம் ஆண்டில் அங்கு வசிக்கும்  மக்களை  வெளியேற்ற  நீதிமன்றத்தில்  ஒரு வழக்கு  தொடர்ந்தார். உயர்நீதி மன்றத்தில்  15 நாட்களாக நடந்த இந்த வழக்கின் முடிவில்  அங்கு  வசித்து  வரும் 53 குடும்பங்களுக்கும் தலா 10 ஆயிரம் வெள்ளி இழப்பீடு கொடுக்கும்படி  டிசம்பர் 12, 2013  இல் உத்தரவிடப்பட்டது.

 

அந்த வழக்கின் தீர்ப்பில் திருப்தியடையாத  அங்கு வசித்த மக்கள் அந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீட்டு நீதி மன்றத்தில் , அவர்கள் அங்கேயே நிரந்தரமாக  தங்க  அல்லது அதிகப்படியான இழப்பீட்டை வழங்க உத்தரவிட  வேண்டும் என்று தாக்கல் செய்திருந்த மனு இன்னும்  நிலுவையில் உள்ளது. ஏப்ரல் 9, 2015 இல் நடைபெற இருந்த இந்த  வழக்கு தேதி குறிப்பிடப்படாமலேயே தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 

இக்கால கட்டத்தில் 100 ஆண்டுகளாக  அங்கு  வசித்து வரும் மக்களுக்கு   வெறும் 10,000 வெள்ளியைக் கொடுத்து  வெளியேறச் சொல்வது மனிதாபமற்ற செயலாகும். அவர்கள் வேறு இடத்தில் குடி பெயர்ந்து புதுவாழ்க்கையை அமைத்துக்கொள்ள  குறைந்தது 1 லட்சம் வெள்ளியாகிலும் தேவைப்படும் என்பதை நீதி மன்றம் கருத்தில்  கொள்ள வேண்டும்.

 

அந்த  கிரமத்து  மக்கள் மிகுந்த  மன உளைச்சளில் உள்ளார்கள். மேல்  முறையீட்டு  நீதிமன்ற தீர்ப்பு அவர்களுக்குச்  சாதகமாக  அமையவில்லையெனில் அவர்களின் நிலை  என்னவாகும் என்பது  அவர்களின் கவலை.

 

மூன்று  தலைமுறைகளாக  வாழ்ந்து  வரும் அங்குள்ள இந்தியர்களூக்கு அந்த  நிலம் 1914ல்  ஒதுக்கப்பட்டத்து. 100 ஆண்டுகளுக்கு மேலாக  குடியிருக்கும் அவர்கள் அங்கு நிரந்தரமாக  வாழவும் அல்லது  அப்படி  வெளியேறும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டால் அதற்கு இழப்பீடு பெறவும் உரிமையுடையவர்கள். இதனைக் கருத்தில் கொண்டு நடப்பு  அரசாங்கம் ஏழ்மை  நிலமையில் உள்ள இவர்களுக்கு  உதவ முன் வர வேண்டும்.

 

பாரம்பரிய சொத்தாக அறிவிக்கப்பட வேண்டும்

 

பேராக் மாரில மந்திரி புசார் ஜனவரி 3, 2010 இல் “ கோத்தோங் ரோயொங் “ நிகழ்ச்சியைத் தொடக்கி வைக்க அங்கு வந்திருந்த 1 kulaபொழுது, இப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தர  தீர்வை  காணும்படி  ஈப்போ  நகராண்மைக் கழகத்தை  பணித்திருந்தார். ஆனால் இது நாள்வரை அக்கழகம்  எந்த  ஒரு நடவடிக்கையும்  எடுக்கவில்லை.

 

இந்த நிலப்பிரச்சனைக்கு தீர்வு காண  இங்கு வாழும் மக்கள் ஒற்றுமையுடனிருந்து நில  உரிமையாளரை எதிர்கொள்ள வேண்டும் என்று டாக்டர்  ஜெயபாலன்  அவர்களைச் சந்தித்த பொழுது கேட்டுக் கொண்டார்

 

வழக்கு நடைபெறும் நாளில் எல்லா குடியிருப்பு வாசிகளும் அவர்களின்  ஒருமித்த பலத்தை வெளிப்படுத்தும் வகையில்  நீதி  மன்றம்  செல்ல பேருந்து ஒன்று  ஏற்பாடு செய்யவேண்டுமெனவும் அப்பொழுது   ஒரு மனதாக  முடிவு செய்யப்பட்டது.

இந்தியர்கள 100 ஆண்டுகளாக வாழும் இந்த கிராமத்தைப்  பாரம்பரிய சின்னமாக  அறிவிக்க அரசாங்கத்தை வலியுறுத்த  வேண்டும்  என்ற  முயற்சியில்  குழு  ஒன்றை அமைக்கவும் அப்போது உடன்பாடு காணப்பட்டது.

 

இந்தப் பிரச்சனையை  நான் நாடாளுமன்றத்தில் எழுப்பிய பொழுது , சுற்றுலா துறை அமைச்சர் நஸ்ரி அதற்கு தகுந்த  நடவடிக்கை  எடுக்க ஏதுவாக அந்த இடத்தைப் பார்வையிட  வருவதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

 

“மக்களுக்கு முன்னுரிமை”  என்று  கூறிக் கொள்ளும்  இந்த அரசாங்கம் அங்குள்ள  மக்களைச் சந்தித்தித்து இந்தப் பிரச்சனைக்குத்  தீர்வுகாண இது நாள் வரை  ஒரு  பிரதிநிதியைக்   கூட இந்த  கிரமத்திற்கு  அனுப்பவில்லை என்பது  குறிப்பிடத் தக்கது.

என்ன நேரினும் இறுதி வரை  இந்த  கிரமாவாசிகளுடனிருந்து  நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்று  உறுதி கூறுகிறேன்.