மலேசியரும் உலகத் தரம் வாய்ந்தவற்றை தயாரிக்க முடியும் என்பதை நிருபிக்கிறார் மலேசியாகினி வீடியோ பிரிவின் முன்னாள் பணியாளரான இந்திராணி கோபால்.
இந்திராவின் முதல் தயாரிப்பு உலகப் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. அவரது “The Game Changer” என்ற ஆவணப் படம் அவ்விழாவில் திரையிடப்படும்.
அப்படத்தின் கதையில் சூசன் சுலோட்னிக் என்பவர் அமெரிக்கா, நியுயோர்க் வூட்பர்ன்ஸ் சீர்திருத்தக்கூடத்தில் வைக்கப்பட்டிருப்பவர்களின் மறுவாழ்வுக்கு நடனத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார்.
நியுயோர்க், ஹோப்ஸ்டிரா பல்கலைக்கழக புல்பிரைட் மாணவரான இந்திரா, கடந்த ஏழு ஆண்டுகளாக சிறைக்கைதிகளைத் திருத்தி சிறைக்கு வெளியில் அவர்களை நல்வாழ்க்கைக்கு தயார்படுத்த சுலோட்னிக் கையாண்ட முறையை ஆவணப்படமாக தயாரித்தார்.
இந்த ஆவணப்படம் இதற்கு முன்னர் நிகழ்ந்திராத வகையில் 14 திரைப்பட விழாக்களுக்கு, இப்போது நடைபெறவிருக்கும் உலகப் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா உட்பட, தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
கேன்ஸ் தயாரிப்பாளர்களின் கனவு
“கேன்ஸ் ஒவ்வொரு திரைப்பட தயாரிப்பாளரின் கனவாகும்” என்று கூறிய இந்திரா, ஒரு பெரிய விழாவில் தாம் ஒரு சிறு பிரிவில் மட்டுமே பங்கேற்கிறேன் என்றார்.
இந்த விழாவின் இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக தாம் தேர்வு பெற்றிருப்பது தமது எதிர்காலத்திற்கான முதல்படியாக அமையும் என்றாரவர்.
மலேசியாகினி அதன் டிவி பிரிவை 2006 ஆம் ஆண்டில் தொடங்கிய போது இந்திரா அதன் முதல் பணியாளர்களில் ஒருவராவார். அவர் ஆங்கிலம் மற்றும் தமிழ் டிவி செய்தி தயாரிப்பில் பங்கேற்றார். அதன் வழி மலேசியாகினி டிவி மிக உயர்ந்த வீடியோ செய்தி தளமாக வளர்ச்சியடைந்ததற்கு உதவினார்.
சுருக்கமான செய்தி பகுதிகளைத் தயாரித்துக் கொண்டிருக்கையில் இந்திரா அவரது முதல் விருதை 2007 ஆம் ஆண்டில் சுதந்திர திரைப்பட விழாவில் பெற்றார். “She is my son” என்ற தலைப்பைக் கொண்ட அவரது அந்த ஆவணப் படத்தை யுடியூப்பில் இதுவரையில் 2.2 மில்லியன் தடவைகள் பார்க்கப்பட்டுள்ளன.
இந்திராவின் வெற்றி எதிர்பார்க்கப்பட்டதே
இந்திராவின் வெற்றியை தாம் எதிர்பார்த்ததாக மலேசியாகினியின் டிவி பிரிவுக்கு அப்போது தலைமையேற்றிருந்த சுபியன் ஷுகுர் கூறினார்.
“தமது கதையின் பொருளோடு இணைந்துவிடும் தனித்தன்மை இந்திராணிக்கு இருக்கிறது என்பதை நான் அறிவேன்.
“அவரது தயாரிப்பு இப்போது கேன்ஸ் விழாவுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது என்பது எனக்கு வியப்பை அளிக்கவில்லை, ஏனென்றால் திரைப்பட தயாரிப்பாளர் என்ற முறையில் அவர் அங்கு சென்றடைவார், அல்லது சன்டான்ஸ் அல்லது இரண்டு விழாக்களிலும் பங்கேற்பார் என்பதை எப்போதும் நான் எதிர்பார்த்தேன். அவர் நமக்கு பெருமை சேர்ப்பார்”, என்று சுபியன் மேலும் கூறினார்.
கோலாலம்பூர், செந்தூலில் பிறந்த இந்திராணி, ஸ்தாபாக் ஆயர் பனாஸ் பெண்கள் பள்ளியில் கல்வி பயின்றார். மலேசியாகினியில் பணியாற்றிக் கொண்டிருக்கையில், மலேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பல்லூடக தொடர்பு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
தமக்கு எவ்விதத் தடங்களும் ஏற்படுத்தாமல், உதவிகள் அளித்த மலேசியாகினியின் சுபியன் ஷுகுர், பிரமேஷ் சந்திரன் மற்றும் ஸ்டீபன் கான் ஆகியோருக்கு இந்திராணி நன்றி கூறினார்.
இந்திராணிக்கு உதவுவோம்
மலேசியாகினியின் தலைமை நிருவாகி என்ற முறையில் இந்திராணி குறித்து நாங்கள் அளவற்ற பெருமைப்படுவதாக பிரமேஷ் கூறினார்.
வாய்ப்பு கிடைத்தால் மலேசியர்கள் என்ன செய்ய முடியும் என்பதை அவர் உலகிற்கு காட்டியுள்ளார். அவர் நாடு திரும்பி, மலேசியாவின் திரைப்படத் துறையை வலுப்படுத்த உதவுவார் என்று தாம் நம்புவதாக அவர் மேலும் கூறினார்.
புகழ் மிக்க ஆவணப்பட தயாரிப்பாளர் இந்திராணிக்கு உதவி தேவைப்படுகிறது. பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ்சிற்கு செல்ல அவருக்கு அமெரிக்க டாலர் 5,000 (ரிம18,5120) தேவைப்படுகிறது. அவர் அங்கு செல்வதற்கு, சாத்தியமான கோலாலம்பூர் இடைவேளை வருகை உட்பட, மலேசியாகினி நிதி திரட்டும் நடவடிக்கையை மேற்கொன்டுள்ளது.
“இந்திராணி நமது ஆதரவைப் பெறுவதற்கான தகுதியைப் பெற்றிருக்கிறார் என்று நாம் நம்புகிறோம். அவரை கேன்ஸுக்கு அனுப்பி வைக்க உதவுமாறு நாம் நமது வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம்”, என்று பிரமேஷ் சந்திரன் வேண்டிக்கொண்டார்.
இந்திராணி மே மாதம் கேன்ஸுக்கு செல்ல உதவி அளிக்க விரும்பும் வாசகர்கள் அவர்களின் நன்கொடையை கீழ்க்கண்ட மலேசியகினியின் வங்கி கணக்கில் சேர்க்கலாம்:
Account name: Mkini Dotcom Sdn Bhd
Bank: Maybank
Account No: 514178153586
Branch: Seapark, Petaling Jaya
Swift: MBBEMYKL
பணம் செலுத்தியதற்கான விபரங்களின் நகலை தயவு செய்து [email protected] அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அது நிதி பெற்றுக்கொண்டதை உறுதிப்படுத்தி தெரிவிக்க உதவியாக இருக்கும்.
சபாஷ்.வாழ்த்துக்கள்.ஆனால் இவ்வளவு திறமையானவர்கள் இருந்தும் ஏன் kini TV தமிழில் வருவதில்லை.?
சபாஷ்.வாழ்த்துக்கள் இந்திராணி கோபால்.
தமிழில் வந்தால் எத்தனை தமிழர்கள் அதை பார்த்து ஆதரவு தருவார்கள் ? எல்லாம் சினிமா செண்டிமெண்ட்ஸ் ஈடியட்ஸ் .தமிழன் சினிமா நா பணத்தை இறைத்து வாய பிளந்து பார்ப்பான் .
நம் இனத்தின் பெருமைகளை பேசுவதை ஒரு கொள்கையாக கடை பிடிப்போம்.
ஏன் kini TV தமிழில் வருவதில்லை.? Anonymous அருமையான கேள்வி. இதற்கான பதில் உங்களுக்கு நன்றாகவே தெரியும், அப்படி இருக்கையில் ஏன் இந்த கேள்வி? kini TV தமிழில் வந்தால் எத்தனை பேர் ஆதரவு கொடுப்பார்கள். உலகமே வியாபார அச்சில் இயங்குகிறது. ஆதாயம் இருப்பின் எந்த மொழியிலும் வெளிவரும். அது சரி நாட்டில் ஏழு நாளிதழ் வெளிவருகின்றன. இந்த ஏழு நாளிதழ்களுக்கு தமிழரின் ஆதரவு எப்படி என்று அறிந்தவர்கள் இங்கு எழுதினால் நமது தமிழ் மொழி பற்று எந்த நிலையில் இருக்கிறது என்று விளங்கிவிடும். அதன் பின் kini TV தமிழில் வருமா?,இல்லையா? என்று கேட்போம்.
தமிழும் உலக மொழி ஆனால் இன்னும் வணிக மொழியாகவில்லை.
ஊடகவியல் கலையில் தமிழை உயர்த்திப்பிடிக்க இந்திராணி போன்ற தமிழர்கள் உதவினால் நாமும் பண உதவி செய்யலாம். கேன்ஸ் விருதளிப்பில் மொழி பிரிவினைவாதம் இன வெறிகள் எல்லாம் இல்லை ஆனால் தமிழ் மொழி ஆர்வளர்க்ளதான் இலையோ இல்லை ?தமிழ் நாட்டின் ஆவணப்படங்கள் கொண்ட குடும்பி சண்டையும் முகநூளில் அண்ணன் தங்கையை காதல் பண்ண கதையும் ஓடுது. இந்திராணி போன்றவர்களுக்கு பிரதமர் அல்லது பல்லூடக அமைச்சர் ஒன்னும் செய்யா மாட்டாங்களா?
IS தீவிரத்தில் இந்தோனேசியாவில் சூடு பட்டவனை இங்கு அடக்கம் செய்ய முடியுது “The Game changerukku ” அரசின் பண மாற்று வழி இல்லியா? Mr Air Asia கூடா வர மாட்டாரா? ஆனந்தா , நாதன் , ஞானலிங்கம், மற்றும் நாட்டின் 10 அதிக பணக்காரர்கள் எல்லாம் ஏழைகளா? நாட்டுல CSR என்று திமிலங்க நிறுவனங்கள் உழுவ மீனுக்கு மண் புழு போட முடியாதா? இவளோ பேசும் நான் என் பென்ஷன் பணத்தில் இருந்து RM 100 அனுப்பி வைக்கிறேன். IJN கு கட்ட வேண்டிய இந்த மாத பணம் bulan depan !!! Minta மாப் IJN >
pon rangan அவர்களே– நீங்கள் கூறியவர்கள் உதவி செய்ய மாட்டார்கள்– அவர்கள் எல்லாம் அதிகாரத்தில் உள்ளவர்கள். malaysiakini யை சேர்ந்த இந்திராணிக்கு எப்படி உதவுவர்? IS – மலாய் முஸ்லிம் -ஆண்டவனின் பிள்ளைகள். பிரதமனா இந்திராணிக்கு உதவ போகிறான்? நம்பிக்கை? துங்கு வோடு எல்லாம் முடிந்து விட்டது–இன ஒற்றுமையும் பெருந்தன்மையும். இப்போது எல்லாமே சின்னபுத்தி –காகாதிமிர் ஆரம்பித்து வைத்தது.
US $5000– ஆனந்தாவுக்கு மாபெரும் சமுத்திரத்தில் ஒரு சிறிய தூசி. நடக்குமா?
சில தினங்களில் 50.வெள்ளிஅனுப்பிய தற்க்கான வங்கி சிலிப் எண்ணை பதிவு செயிகிறேன்.
வாழ்த்துகள். என் பங்காக நான் ரிம 50.00 அனுப்புகிறேன்.