உலகத் தமிழர்களுக்கு தமிழர் என்ற அங்கீகாரமில்லை -அதை அடையும் தலைவனுமில்லை !

contentwriting_1கல்வியா, செல்வமா, வீரமா என்ற பாடலை இன்று சரஸ்வதி
சபதம் படம் மூலம் கண்டேன்.

ஆயிரமாயிரம் இலக்கியங்கள்,
இதிகாசங்கள் , வரலாறுகள் , மாநாடுகள் , பேருரைகள் ,ஊடக இன உளைச்சல்கள் எதுவுமே தமிழின அடையாளத்தை உலக தமிழ் தலைவனை, பிரதிநிதி அங்கிகாரத்தை பெற வில்லை.

அந்த கல்வியும், செல்வமும், வீரமும் எந்த இலக்கை கொண்டது ?

தனி மனிதன் வாழ்வியல் பெருமை ,திருக்குறள் , திருமறைகள்.சமயம் ,கல்வி ,பொருளாதாரம், அரசியல் எல்லாம் வாய்மைக்கு கிடைத்த வெட்டிகளா?
இந்த தமிழர் இனம் ஆனாதையான வந்தேறிகளா?

உலகில் அங்கிகாரம் இலாத இனம் இந்த தமிழன் இனம். தமிழ் மொழிக்கு பெருமைகள் பல இருப்பினும், இந்த இனம் இறங்குமுக நிலையில் தாழ்ந்தே உள்ளோம். பல நூறு படங்களும், பல ஆயிரம் முதுகை நிமிர்த்திய தத்துவ பாடல்கள் வந்தும் செவிடன் காதில் ஊதிய சங்காய் ,மங்காய் போட்டது போட்ட இடத்தில கிடக்குது. தமிழன் உலக அரசியல் தெரியாத ,நகர்வு இல்லாத கண்ணில்லாத நத்தைகள் கூட்டமா ?

ஒரு இனத்தின் வரலாறு தெரிந்தும் ,அந்த இனம் அரசியல் பார்வையில் விடுபட்டால் கால போக்கில் சான்றுகள் செத்து மீட்டு எடுக்க முடியாத நிலையில் பல உலக இனங்கள் அழிந்துள்ளது கண்கூடு. அந்த வரிசையல்தான் தமிழர் இனமும் இந்தியன் பட்டியலில் தமிழன் இன அங்கிகாரமில்லாமல் புதுப்பிணை இன்றி உள்ளான்,
உலகம் முழுவதும் நமது தமிழின அறிவார்கள் பலர் நம் வரலாற்றை, இலக்கிய ஆணி வேர்களை அசைத்தும், அதன் விழுதுகளை கழற்றியும், வேர்களை பிராண்டியும் இன்று தடங்கள் வரை எழுதியும், இனம் என்ற “தமிழன் மண் சுய ஆட்சி” தனித்துவம் பெறவில்லை. எந்த ஒப்பாரியும் எடுபடவில்லை. அரிப்புக்கு அட்டகளை நிரப்பிய தலைப்புகளுக்கு பஞ்சமில்லை. நூல் வெளியீடுகளுக்கும் ஓய்வில்லை. ஆனால் இலக்கு தொலைந்த தூரங்கள் தொடர்கின்றன.

லுமுரிய தீவுகள் , பிறகு ஆப்ரிகன் கண்டம் இந்தியாவின் தெற்கே தோன்றிய குமரிக்கண்டங்கள் வழி முதல் இனம் மூத்த இனம் என்றெல்லாம் பெருமை பேசும் நம முனோர்கள், இன்று இன அடையாளம் தொலைத்த நாடோடிகளாக வந்தேறிகள் என்று சொல்லும் அளவிற்கு மண் முன் உரிமையில் தோற்று உள்ளோம்!
தமிழீழத்தை தவிர தமிழனுக்கு உலகில் தனி அங்கீகாரம் இல்லை.

LTTE ஈழத தமிழ் போராளிகளின் தலைவர் மாவீரன் பிரபாகரனுக்கு பிறகே தமிழர்கள் யர்ர் என்ற வியப்பு உலகத தலைவர்களிடையே பெருகியது.
இந்தியாவின் தமிழ் மாநிலத்திலும் பிறகு இன்னும் பல நாடுகளில் தமிழர்களின் பெருமைகளை பேசும் தமிழர்களுக்கு மட்டுமே குண்டு சட்டி சவால் செய்தார்களே தவிர உலக சமூக ,அரசியல் மற்றும் பொருளாதார அரங்கில் வெறும் அமுக்கிகலாக இன தலைமைத்துவம தலைவன் இல்லாத இனமாக இன்று வரை இருக்கிறோம் ஏன்?
நமது நாட்டு அரசியல் தமிழ்த தலைவர்கள் எண்ணங்களில் இத்தகைய விடுதலை சிந்தனை அறவே இல்லை என்று சொல்வதற்கில்லை. தமிழன் என்ற இன அரசியல் அடிபட்டுவிடுவோம் என்ற பயம்தான் காரணம்.

கடந்த 200 ஆண்டுகளாக மட்டுமே ஐரோப்பியர்கள் சுய ஆய்வில் தமிழகம் முழுதும் தங்கள் ஆராய்ச்சி பசிகளுக்கு தமிழன் பால் தீனி போட்டுக்கொள்கிறார்களே தவிர, தமிழர்களின் அடையாளங்களான நமது கலை, கலாசார, பண்பாடுகளை, மொழி ,சமய, இலக்கிய இன்னும் பல நாகரீகங்களை இவர்கள் படைத்தாலும் அவை உலக மதிப்பீட்டில் எந்த உயர்வையும் தரவில்லை எனலாம்.

நமது இலக்கியங்களும் இதிகாச வரலாற்று பெருமைகளும் நமக்குள் பேசி எழுதி பிற நாட்டு நவீன இலக்கியமும் கூட மாநாடுகள் நடத்தியும் தமிழன் பெருமை இன்னும் மண் புழுவை போல உள்ளே ஓடிக்கி வாழ்த்த உயிர்ப்பில் கண்டதையும் வெந்ததையும் முழுங்கி நமக்குள் பெருமை பாராட்டி விழாக்கள் முதல் வீதி வரை நிற்கிறோம்.

வரலாறு அறிந்தும் அதை முறையாக வெளிபடுத்தாத இனமாக உலக அரசியல் விவேகம், மூலதனம் இல்லாதவர்களாக உள்ளோம். ஆனால் இந்த கட்சி அரசியல் தலைவனை அந்தக கட்சியின் தலைவனின் நிர்வாக குடைச்சலுக்கு புத்தி சொல்லும் அவலத்துக்கு குறைச்சல் இல்லை. ஊடக மற்றும் மனித வள மேம்பாடுகள் முன்னேறியுள்ளா நவீன காலத்தில் கூட ஒரு இனத்தின் உரிமைக்கு கூட்டு முயற்சி எடுக்க எந்த தலைவரும் முன் வரவில்லை. ஒரு வேளை தமிழீழ தலைமைத்துவத்துக்கு வந்த விபரீதம் இந்தியாவின் தமிழ் மாநிலத்திலும் அல்லது பிற நாட்டின் வந்தேறி தமிழர்களுக்கு வந்தால் மட்டுமே இன நடுக்கம், நில நடுக்கம், உயிர் நடுக்கம், விரட்டல் விரீதம் வந்தால் திருந்துவோமா?

உலகத் தமிழர்களுள் மலேசியத் தமிழர்களின் வரலாறுகள்தாம் தொடர் வரலாறுகளாக உள்ளது. அதிலும் அறிவாளித்தனமான எழுத்தாளர்களும், எடுத்தாளர்களும் இந்தியனை முன் நிறுத்தி தமிழனை அமுக்கியதை பார்க்கலாம். இந்தியாவின் தமிழ் மாநிலம் அல்லது தெற்கு மாநில பகுதியில் இருந்துதான் அதிகமான தமிழர்கள் மலேசியாவுக்கு வந்தனர்.

மாறாக இந்தியன் என்ற வட மாநில மனிதர்கள் இறக்கு மதி மிகக் குறைவேயாகும். ஆனால் தமிழிலும் ஆங்கிலத்தில் எழுதிவர்கள் பொருளியல் ஆசைக்கு வரலாற்று அடிமைகளாக உண்மைகளை மறைத்து “இந்தியன்” என்றே தங்கள் பதிப்பை மொக்கையாக்கினார்கள்.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் காலத்தில் இருத்த மலையா ,சிங்கபூர் ,,பர்மா , சிறிலங்கா ,தென்னாபிரிக்கா ,பிஜி ,மொரிசியஸ் ,போன்ற நாடுகளில் தொழிலாளர் தேவைகளை அடைய அதிகமான தமிழர்கள்தாம் ஏழ்மையின் காரணமாக சொற்ப விலைக்கு விலைபோனார்கள் எனலாம். இந்த தொழிலாளர் மனித ஆற்றல் இன்றும் ஏழ்மையின் பிடியில் பிச்சைக்கார சம்பள கூண்டில் தவிக்கிறார்கள்.

இப்படி அடிப்படைக்கே ஆபத்து என்ற சூழலில் மூழ்கி தவிக்கும் மூச்சி விட முடியாமல் அரசியல் பலவீன வறுமையில் வாழும் தலைவர்களால் சமூதாயதுக்கும் மொழிக்கும் என்ன நன்மை ?

தமிழர்களை அடக்கி ஆளும் உலகப போக்கில் அடிப்பட்டு கிடக்கும் இனமாக “ஒரு ரகசிய இன அடிமைத்தன ஆளுமை” தமிழர்களை குறிவைத்து ஓடுக்கப்படுவதாக நான் உணர்கிறேன்.

ஒவவெருவரும் ஒரு சிறந்த அறிவாளியாகத்தான் பிறக்கிறான் என்று ஆன்மிக வாதிகளும், மனித வள நிபுணர்களும் சொல்ல கேள்வி பட்டுள்ளோம். 12 கோடி தமிழர்களை பெற்றுள்ள நம் இனம் காக்க ஒரு சிறந்த அறிவாளியையும் பெற வில்லையா என்ற பயம் எழுகிறது ?

இன்னும் 5-10 ஆண்டுகளில் உலகத் தமிழ் இனதுதுக்கு இன அங்கிகாரம் பெற ஒரு தமிழின தலைவன் வந்தால் மட்டுமே நாம்
தப்பிப்போம் ‘ ஒரு இனத்தின் அங்கீகாரமே உலகின் அடையாளம்”

வாழ்கையின் ஊடே தமிழ் இனம் காப்போம் !

-பொன் ரங்கன் 
து .தலைவர் ,நாம் தமிழர் மலேசியா