இந்தியர்கள் “மேம்பாடு” அடைந்தது எப்போது? மாகாதிர் காலத்திலா? நஜிப் காலத்திலா?”, என்ற விவாத மேடை நிகழ்ச்சி சுமார் 180-க்கும் அதிகமானோர் மத்தியில் உணர்வு பூர்வமாக நடைபெற்றது.
விவாதத்தில் பங்கெடுத்த ஹிண்ட்ராபட என். கணேசன், எஸ். கே தேவமணி, மக்கள் கூட்டணியின் சார்ல்ஸ் சந்தியாகோ, சேவியர் ஜெயகுமார், ஜெயகுமார் தேவராஜ் தெளிவான அறிவு சார்ந்த வகையில் தங்களின் விவாதங்களை முன்வைத்தனர்.
“மேம்பாடு” எதைக் குறிக்கிறது என்பதைப் பற்றியும், மக்களின் மேம்பாடு எவை என்பதும் அலசப்பட்டது.
என்ன தலைப்பு இது? என்ற வினாக்களை தொடுத்தவர்கள் காணொளியை கண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம்.
தொடக்க நேரம் 8.30 ஆக இருந்தது, ஆனால் மக்கள் 8.00 மணிக்குள்ளாகவே கூடியதால், நிகழ்ச்சி 15 நிமிடம் முன்னதாக 8.15-க்கு தொடக்கப்பட்டது ஒரு மாற்றமாக இருந்தது. அதோடு நேரம் இரவு 11.30-யை தாண்டியும் மக்களின் கருத்து பரிமாற்றம் தொடர்ந்தது நிகழ்ச்சிக்கு மேலும் மெருகு சேர்த்தது.
சுவராம் தலைவர் கா. ஆறுமுகம் நிகழ்ச்சிவை பொறுப்பாகவும் பொறுமையாகவும் வழி நடத்தியது சிறப்பாக இருந்தது.
“அடுத்த விவாத மேடை எப்போது?” என்ற வினாக்களை பலர் கேட்ட தாகவும், அதிகமானோர் கலந்த கொண்ட விவாத மேடை இதுதான் என்று பெருமை பட்டுக்கொண்டார் மலேசியகினி ஸ்டுடியோ நிர்வாகி சுபியன்.
ஜீவி காத்தையா ஒருங்கிணைத்த இந்த நிகழ்ச்சி மிகவும் நன்றாக அமைந்தது என்றார் மலேசியகினியின் முன்னோடியான பிரமேஸ் சந்திரன்.
அரசியல் வாதிகள் பேச்சை ஊடுருவி பார்க்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும். தேவமனியின் சாமி கொடுத்தாலும் பூசாரி கொடுக்கமாட்டான் என்ற பேச்சை மேலோட்டமாக பார்த்தால் திட்ட அமலாகங்கள் நிறைவேறாமல் போனதற்கான காரணத்தையும் , பழியையும் அரசு ஊழியர்களின் மீது சுமத்திவிட்டு ,பிரதமரும் அரசியல் வாதிகளும் ஒன்றுமே செய்ய முடியாத அப்பாவிகள் போல் தோன்றும் . இப்படி ஒரு மாயையை அவரும் அவரை சார்ந்தவர்களும் தொடர்ந்து அரங்கேற்றிக் கொண்டே இருக்கிறார்கள். கேட்பவர்களும் “அச்சச்சோ …. என்ன கொடுமை இது !” என்று தாழ்வாயில் மணிக்கட்டு பதிய பரிதாபமாய் நிற்ப்பார்கள். இதுதான் அரசியல் வாதிகளின் கை தேர்ந்த நடிப்பு. நம் மக்களின் அப்பாவித் தனம். பிரதமர் என்பவர் இந்நாட்டின் சகல அதிகாரமும் வாய்ந்த நிர்வாகஸ்தர். அவர் கட்டளைக்கு அடிபணிய மறுப்பவர் தேச நிந்தனைக்கு ஒப்பான தவறை புரிபவர்.மேலும் தமது அதிகாரிகளை கட்டுக்குள் வைக்க தெரியாத ஒருவர் நாட்டை ஆளும் தகுதியற்றவர் ஆவார். இதெற்கெல்லாம் வாய்ப்பே கிடையாது. உதாரணத்திற்கு இந்நாட்டு மக்கள் அனைவரும் எதிர்த்த, அரசு பணியாளர்களும் கூட வெறுத்த பொருள் சேவை வரி (GST) எப்படி பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் குறித்த நாளில் அமலுக்கு வர முடிந்தது? அத்திட்டத்தை நினைத்த மாதிரியே அமல் படுத்த பிரதமாரல் முடியும் என்றால் இந்திய சமூகத்திற்கான திட்டங்களை பிழை இல்லாமல் நிறைவேற்றவும் அவரால் முடியும். ஆனால் இத்தியர் மேம்பாட்டில் மனதார , உளப்பூர்வமான அக்கறையும் , ஈடுபாடும் அதற்க்கு முக்கியம். ஆனால் தேவமணி போன்றவர்கள் பிரதமரின் கடமை புறக்கணிப்பை ஏதேதோ காரணங்கள் சொல்லி அவரின் செல்லப்பிள்ளையாக தங்களை காட்டிக்கொள்ள முண்டியடித்துக் கொண்டு இருக்கும் போது, பிரதமருக்கு என்ன கவலை. பினாங்கு மாநில ,புவா பாலா அவலத்தை சார்ல்ஸ் சந்தியாகோ சமாளித்த லட்சணத்தை பார்த்தீர்களா..? அதுவும் இப்படி பட்ட ஒன்றுதான். ஆக பதவியை தற்காத்துக் கொள்வதற்காக தங்களின் தலைவர்களின் மனம் கோணாத வகையில் அடிவருட தயாரக இருக்கும் அரசியல் வாதிகளை நம் மக்கள் நம்ப தயாராக இருக்கும் வரை நம் சமுதாய அவலம் நெடுங்கதைதான் . என்று தணியும் இந்த சுதந்திர தாகம்…பராசக்தி…என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
ஒரு சில குறைகள் இருந்தாலும் , மொத்தத்தில் விவாத மேடை அருமை. ஆங்கிலத்தில் உரையாடிய பெண்மணியும், மற்றொரு இளைஞரும், துடிப்பான கருத்துக்களை எடுத்து வைத்தனர். பொன் ரங்கனுக்கு இன்னும் சில நிமிடங்கள் பேசுவதற்கு வாய்ப்பளித்திருக்கலாம். நிறைய விஷயங்கள் அறிந்து வைத்துள்ள போராட்டவாதியான ஜி.வி.காத்தையா பேசாதது பெரிய ஏமாற்றமே!
நல்ல முயற்சி ஆனால் ஓலி அமைப்பு முறை அவ்வளவு தெளிவாக இல்லை. அதனால் சொல்லிய விஷயம் அவ்வளவு தெளிவாக விளங்கவில்லை.
மீண்டும் நமக்குள்ளேயே குண்டு சட்டி குதிரை கதைதான்.இந்த விவாத மேடைக்கு அம்னோ பிரநிதி வந்திருக்க வேண்டும்.அதேபோன்று தமிழர் அல்லாதவர் மக்கள் கூட்டனி பிரநிதியும் இடம் பெற்றிருக்க வேண்டும். நமக்குள்ளேயே விவாதித்து எந்த பலனும் இல்லை.