நம்மை கூறு போட்டுள்ள மலேசியர் இந்தியர்களின் அரசியல் கட்சிகளில் உள்ள தலைவர்களும் உச்ச மன்ற உறுப்பினர்கள்
கூண்டோடு ஒன்று கூடுவதும் DAP .PKR கட்சியின் இந்தியர் தலைவர்கள் என்ற திமிர் இல்லாமல் ஒரு கட்சி அமைத்து,
ஐதாண்டுகள் தவணை முறையில் ஆட்சி பொறுப்பு அதாவது அடுத்த பொது தேர்தல் அளவில் பொறுப்பு வகித்தால் அரசியல் திறமைகள்
வெளிப்படும்.
சமூதாயம் உருப்படும். பிரிந்து கிடக்கும் ஐபிஎப் . ஒரே தலைவன் சொந்தக் கட்சி ஜமாய்க, மாறாத மக்கள் சக்தி, வெறும் இந்தியர் நீதி கட்சி, உருப்படாத பி பி பி, மயங்கி கிடக்கும் கலப்பு கெராகன்.
இரண்டாய் நீதிமன்றம் போன ம இ கா இவைகள் யாவும் ஊரு இரண்டுப்பட்டால் கூத்தாடிக்கு அதாவது பிரதமருக்கும் எதிகட்சிக்கும் கொண்டாட்டம் நமக்கு திண்டாட்டம் என்ற நிலையில் இருந்து மாறலாம். இந்த புது அரசியல் சித்தாந்தம் தெளிய நம் இன மனிதர்கள் என்ன செய்யலாம்.
ஒன்று : முதலில் சொன்ன ஓர் கட்சி ஓர் இனம்.
இரண்டு: இதற்கு ஒத்துவராத பைத்தியங்களை வேரோடு வீட்டுக்கு அனுப்புவது.
மூன்று: இந்தியனுக்கு கட்சிகள் தேவை இல்லை என்று கட்சி தலைகளை ஓட ஓட விரட்டுவது. காசுமீது ஆசை இல்லாத மனிதனை தேடுவது.
நாட்டில் ஐந்து லட்சம் இந்தியர்கள்தாம் ஓட்டுபோட வருகிறார்கள் கட்சிகள் முதல் இயக்க தலைவர்கள் வரை இவர்கள் ஒரு லட்சம் தலைவர்கள் இருப்பார்கள் ? இப்போதெல்லாம் ஒருவரை பார்த்து இன்னொருவர் நண்பர் என்று அழைப்பது இல்லை. தலைவர் என்று அழைப்பதை ஒரு தலைமைத்துவ கலாசார அழிவை இந்த சமூகம் கண்டுள்ளது.
கூட்டி கழித்துபபாருங்கள்?! தாமானுக்கு பத்து தலைவன் தெருவுக்கு இரண்டு தலைவன். இதில் பேடிகள் தலைவர்கள் வேறு. பேடிகள் கூட்டம் ஒரு அத்தி இரண்டு அத்தி மூன்று நான்கு என்றும் போகும்.
மனசாட்சி இல்லாதவர்கள் எல்லாம் தலைவர்கள் ?
நாட்டின் இந்தியர்க வறுமைக்கு பஞ்சமில்லை ! தலைவர்கள் கூட்டம் தெருவுக்கு தெரு பேய் ஆட்டம் ஆடுது.
சமீபத்தில் முடி சூடா மன்னர் என்ற புத்தகம் படித்தேன் . உலக அரங்கை தன பேச்சால், திறமையால், நிர்வாக நிபுணத்துவத்தால் வாழ்பவர் தலைவர் பதவியே வேண்டாம் என்ற The Law Of Attraction என்றும் the leader who had no tittle வாழ்கையின் மெய்யான உண்மையை எழுதி உள்ளார். அவர் எங்கே நாம் எங்கே ?
இங்கே பிச்சை பாத்திரங்களுக்கு மகுடி ஊதும் மடமை எங்கே ? என்று யோசிக்க வைத்தது. அதில் ஒரு மென்மையான் வழியில் உலகத்தை அசைக்க முடியும் என்ற மகாத்மாவின் தத்துவத்தை முன் வைத்து பேசி உள்ளார். ..
ஒரு மிகப்பெரிய சாதனையின் காட்சியே ஒரு மனிதன் மற்றவர்களுக்கு அளிக்கும் ஒரு சிறந்த அன்பளிப்பு என்கிறார் அயன் ரெண்ட என்ற அறிஞர் …என்று எழுதி உள்ளார்.
நம்மில் யார் அந்த மிகப்பெரிய மனிதன் என்று இந்த இனம் தேட மனித நேயம் படைத்த அறிவாளிகள் திரள்வோம் இந்த இனத்தை மீட்டு எடுப்போம். அரசியல்வாதிகள் நம்மை காப்பாற்ற போவதில்லை. இந்த மனிதம் மிகப்பெரிய சவாலுக்கு காத்துள்ளது. அடையாளம் காணுங்கள்.
மகாதீரும் நிஜிப்பும் அன்வாரும் முகிடினும் அஹ்மீட்டும் யிசாமும் கைரியும் நம்மை காக்க போவதில்லை. ஒரு மனிதனை தேடுங்கள். அவன் அரசியல் வாதியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மகாத்தமா நாட்டின் சுதந்திரம் பெற அரசியல் வாதியாக இல்லை. மக்களின் மனிதராகத்தான் அதை சாதித்தார்.
அது அவரின் சத்திய சோதனை. அவரின் வரலாறை மற்றவர்கள்தான் எழுதினார்கள், பத்திரிக்கைகள் எழுதி தலைவர்களை வாட்டம் பெரும் ஈன பழக்கமும் ஒழிய வேண்டும். தலைவனை தூக்கி தலைவிதிகளை எழுதும் இவர்கள் நல்ல மனிதர்களை எழுதட்டும். இனம் உருப்படும்.
-பொன்.ரங்கன்