வரலாற்றி முதல் முறையாக தேசிய இனமான தமிழ் இனத்திற்கு மாபெரும் இன எழுச்சி மாநாடு நாம் தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் மே 24 திருச்சியில் நடைபெற உள்ளது.
கடந்த 18 மே 2009 தமிழீழத்தில் நடந்த இனப்படுக்கொலையில் தமிழர்கள் அழிந்து விட்டர்கள், தமிழினம் அழிந்துவிட்டது என உலக ரீதியில் பலர் கருதிக்கொண்டுடிருக பட்சத்தில், எந்த நாளில் வீழ்ந்தமோ அதே நாளில் எழுவோம் என அனைத்து தமிழர்களும் “நாம் தமிழர்” என்ற தேசிய அடையாளத்தோடு எதிர்வரும் மே 24 நாம் தமிழர் கட்சி ஏற்பாடில் திருச்சியில் நடைபெறும் இன எழுச்சி மாநாட்டில் மலேசியா தமிழர்களையும் கலந்துக்கொள்ளுமாறு மலேசியா நாம் தமிழர் இயக்க தேசிய ஒருங்கிணைப்பாளர் மு.அ. கலைமுகிலன் அழைப்பு விடுத்தார்.
மதத்துக்காக திரண்ட தமிழன், சாதிக்காக கூடிய தமிழன், வரலாற்றி முதல் முறையாக தான் பிறந்த இனத்திற்காக தமிழனாய் ஒன்று கூடுவோம் என்று கலைமுகிலன் தெரிவித்தார்.
மலேசியாவிலிருந்து நாம் தமிழர் இயக்க பொறுப்பாளர்கள் 20 பேர் கொண்ட குழு இந்த மாநாட்டில் கலந்துக்கொள்ள உள்ளனர். ஆகையால், இந்த அழைப்பினை ஏற்று மலேசியா தமிழர்களும் இந்த மாநாட்டில் கலந்துக்கொண்டு சிறப்பிக்கமாறு மலேசியா நாம் தமிழர் இயக்கம் பணிப்பண்புடன் கேட்டுக்கொள்கிறது.
வென்றாக வேண்டும் தமிழ்
ஒன்றாக வேண்டும் தமிழர்
தொடர்புக்கு: 013-5227795
sunambu அப்படி போடுங்க
தம்பி கலை முகிலன் தமிழ் இனத்துக்கு குரல் கொடுக்கிறான் ! தமிழன் அல்லாதவன் ஏன் தேவை இல்லாமல் புலம்புகிறான் ? நாம் தமிழர் தோழர்களை பார்த்து, மலேசிய தமிழ் இன எதிர்பாளர்களும் தொடை நடுங்குகின்றனர் ! இதுவும் தமிழனின் வெற்றியே !
எங்கள் வயிற்றில் பிறப்பவன்
சிங்கத்தை வாட்டப் போகும்
தமிழனென்பதால் அழித்தாயா மூடனே.
இதோ நாங்கள் சூழுரைக்கின்றோம்
நாங்கள் வளர்ந்து வாழ்க்கைப்பட்டு
தாயாக தமிழன் கரு சுமந்து
அவன் பிறந்து உன்னையழிக்க
நெடுகாலம் ஆகுமடா.
நன்று செய்தாய் மூடனே.
இன்றே வருகிறோம்.
தமிழச்சி கருவில் ஆணாக.
தமிழ்தாய் நாட்டையாழ
நன்றி: tamilnanbargal.com
திரு நந்தா அவர்களே.அழகான
பூவில் பூச்சிக்கல் தொல்லையை
ஒலிக்க மருந்து தெளிக்கப்பட
வேண்டும்.
தமிழனென்ற அடையாளத்தை நமக்கு இம் மண்ணில் அடையாளம் காட்டி அந்தச் சிறப்பை நமக்காக விட்டுச் சென்றவர் இந்த மா மாந்தரான பிரபாகரன் அவர்கள் மட்டும்தான். இந்த அடையாளத்தை இனிமேல் பேணி வளர்ப்போம். மதம், சாதி இவற்றையெல்லாம் கடந்து நிற்ப்பது இந்த அடையாளம். இந்த நாளிலிருந்து இனிமேல் நாமெல்லாம் ஒன்றுக் கூடுவோம்; ஒற்றுமையாய் வாழக் கற்றுக் கொள்வோம். கூடிவாழ்ந்தால் கோடி நன்மை. நாம் மதத்தின் பெயரால் இனிமேல் திசை மாறிச் செல்லக் கூடாது; மொழி, இனமென்ற போன்னானப் போர்வையில் நாம் கூடிவாழ்ந்தால் நாம் மகிழ்ச்சியாக இருப்போம்; காட்டிலே வாழும் மிருகங்கள் கூட கூடியிருக்கும் போது மற்றக் கொடிய விலங்குகள் அவைகளை வேட்டையாடுவதில்லை; கூட்டத்திலிருந்து பிரிந்து தன்னந் தனியாக போகும் போது தான் மற்றக் கொடிய விலங்குகள் அவைகளை சுலபமாகக் கொன்று உணவாக்கிக் கொல்லு கின்றது. இன்று நம்மில் பலர் நம்மை விட்டு அப்படி பிரிந்து சென்றப் படியால், தங்களுக்குக் தாங்களே முடிவைத் தேடிக் கொண்டு விட்டார்கள். இந்த அரிய வுண்மையை உணர்த்தாவது இனிமேலாவது நாம் செயல்படுவோம்.