காட்டுப் பெருமாள் நூல் வெளியீடு

Kattu Perumal book launch1மலேசிய சோசலிசக் கட்சி, ‘புஸ்தாக்கா கீரி மற்றும் செம்பருத்தி பதிப்பகம் ஏற்பாட்டில் ‘காட்டுப் பெருமாள் – FOLK HERO OF SUNGAI SIPUT’ நூல் வெளியீடும் கருத்துக்களமும் நடைபெறவுள்ளது.

 

தோட்டத் தொழிலாளர்களின் தோழன் ‘காட்டுப் பெருமாள்’ , 1940-களில் சுங்கை சிப்புட் வட்டாரத்தில் காலனித்துவ ஆட்சிக்கும் முதலாளித்துவ சுரண்டலுக்கும் எதிராகத் துணிந்து போராடியவர். அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இருந்தபோது காட்டில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துகொண்டே, இவர் தோட்டத் தொழிலாளர்களைப் போராட்டத்திற்கு ஒருங்கிணைத்தார். சுங்கை சிப்புட் வட்டாரத்தில், மலாயா தேசிய விடுதலை இராணுவத்தில் 5-வது ரெஜிமெண்டின் 32-வது படைப் பிரிவுக்குத் தலைமை தாங்கினார். ஆட்சியாளர்களால் இவர் வேட்டையாடப்பட்டாலும், தோட்டப்புற மக்களால் இன்றும் மதிக்கத்தக்கத் தலைவராக இருக்கிறார்.

 

தோட்ட மக்களின் உரிமைக்காகப் போராடியத் தோழர் காட்டுப் பெருமாள் அவர்களின் செய்தி தொகுப்பு நூல் மற்றும் அது தொடர்பான கருத்தரங்கு கீழ்க்கண்ட விபரப்படி நடைபெறவுள்ளது:-

 

நாள்   :- 04.07.2015 (சனிக்கிழமை)

நேரம்  :- மாலை மணி 7.00 – 11.00

இடம்  :- கோலாலம்பூர் சிலாங்கூர் சீன மண்டபம், கோலாலம்பூர்

KL Selangor Chinese Assembly Hall (KLSCAH) , Kuala Lumpur

 

அரங்கம் 1 : நூல் வெளியீடு

 

பேச்சாளர்கள் :-

1.   டாக்டர்.ஜெயக்குமார் – சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர்

2.   தோழர் காத்தையா – முன்னாள் தொழிற்சங்கவாதி

3.   தோழர் சிம்மாதிரி – ஜசெக, பஹாங் மாநிலத் துணைத்தலைவர்

 

 

 

அரங்கம் 2 :- கருத்துக்களம் ‘காட்டு பெருமாள் ஒரு பகுப்பாய்வு

 

நடுவர் :- தோழர் அருட்செல்வன்- பி.எஸ்.எம். மத்தியச் செயற்குழு உறுப்பினர்

உரையாளர்கள் :-

 

1.   தோழர் சிவன் – சுவாராம் தலைவர்

தலைப்பு :- ஓர் இளைஞர், காற்பந்து வீரர், கலைஞர், குடும்பஸ்தர் – அனைத்தையும்

விட்டு ஆயுதம் ஏந்த காரணமென்ன?

2.   தோழர் கா. ஆறுமுகம் – சுவாராம் ஆலோசகர் / செம்பருத்தி.காம் ஆசிரியர்

தலைப்பு :- ஏன் காட்டுப் பெருமாளும் இந்தியர்களும் மஇகா அல்லாமல் மலாயா

           கம்யூனிஸ்ட் கட்சியைத் தேர்வு செய்தனர்?

3.   தோழர் சாமிநாதன் முனுசாமி – பி.எஸ்.எம். நூசாஜெயா கிளைத் துணைத் தலைவர்

தலைப்பு :- ஏன் வீரசேனன் மற்றும் கணபதியை போல் காட்டுப் பெருமாள்

           பிரபலமாகவில்லை?

4.   தோழர் சாந்தலட்சுமி பெருமாள் – ஆசிரியர், ஜொகூர் பாரு

தலைப்பு :- ஆயுதப் போராட்டமும் மலாயா மக்கள் பார்வையும்

5.   தோழர் செல்வம் – பி.எஸ்.எம் மத்திய செயற்குழு உறுப்பினர்

தலைப்பு :- மலாயா கம்யூனிஸ்ட் கட்சியினர் விடுதலை போராளிகளா அல்லது

           பிரிடீஷ்காரர்கள் கூறியதுபோல் தீவிரவாதிகளா? மலாயா மக்களை அவர்கள்  

           விடுவித்தனரா அல்லது அச்சுறுத்தினரா?

Kattu Perumal book launch2