இந்த இழி நிலையை துடைத்தெறியாமல் இந்த இனம் மீளாது டே சாதிவெறி பிடிச்ச நா..களா ஒரு சாதிக்குளே திருமணம் செய்யணும் காதலிக்கணும் என்றால் உன் சாதிக்காறன் நெய்யிற உடையை அணி அவன் விளைவிக்கிற உணவை உண் மருத்துவம் விஞ்ஞானம் போக்குவரது எல்லாத்தையும் உன் சாதிக்குள்ளேயே கட்டமைத்து உன் சாதிக்கு என்று நாட்டை உருவாக்கி தனியா போ!
தாழ்த்தப்பட்ட சாதிக்காறன் விளைவித்த உணவை நக்கும் போது உனக்கு சாதி உணர்வு வரவில்லையா டே நா..களா ஒரு வாரம் தாழ்த்தப்பட்டவனின் எந்த பொருளும் உபயோக படுத்தமாட்டணு இருங்கடா பாப்போம் நாறி போய் விடுவீங்களடா!
நீ தாழ்த்தப்பட்டவன் என்று சொல்லி அடிக்கலாம் அவன் வலிதாங்காமல் திருப்பி அடிப்பன் என்று சொன்னா வன்முறையாளன்!
நல்லா இருக்கடா உங்க சட்ட திட்டம் எல்லாம் நீங்கள் நாசமாதன் போவீங்கள்.
சாதியெனும் பேதமையை தகர்த்தெறிவோம்!
-ப..யன்
தேனீ சொல்வதில் ஒரு வகையில் நல்லது ..(தயவு செய்து சமயத்திலும் தெலுங்கர் மலையாளிகளும் தமிழரை விட்டு பிரிந்து செல்லுங்கள் தமிழர் தொடர்ந்து நலமாகவே மேம்பட்டு வாழ்வார்) அவர்கள் பிரியா மாட்டார்கள் , தெலுங்கர்கள் மலேசியாவில் தமிழர்களை பயன்படுத்தி எப்படி முன்னேருகிறார்கள்னு பாருங்க, இந்தியனு சொல்லி அரசில் லாபம் பார்ப்பவர்கள் தெலுங்கர்கள், அப்படினா அவர்கள் புத்திசாலிதானே? அந்த காலத்தில் நம் பிறந்த பத்திரத்தில் பங்கசா என்ற இடத்தில் தமிழ்னு எழுதி இருக்கும, ஆனால் இப்ப இந்தியன் இருக்கு , இதை பயன் படுத்தி மற்ற இனங்கள் எப்படி தமிழர்களை பயன் படுத்துகிறார்கள் என்று பாருங்க , இதுக்கு யார் காரணம் ?
தமிழர் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துக் கொள்ள வேண்டும். நாம் தமிழர் என்று சொல்லாமல் இண்டியன் என்று சொல்வதால் நம் உரிமைகளை பிறருக்குத் தாரை வார்த்துக் கொடுக்க வேண்டியுள்ளது. அதனால் நமக்குத்தான் தீமை, இழப்பு, நம்முடையதை பங்கிட்டு தின்று விட்டு நம்மையே ஏழை மக்கள் என்று கூறும் அவமானம் ஏற்படுகின்றது. அதனால்தான் நாம் தமிழர் உள்நோக்கி சிந்தனை (inward thinking’) செய்வோம் என்று கூறுகின்றேன். இதனால் நமது பிற இன சகோதரர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படப் போவதில்லை காரணம் அவர்களும் அவ்வாறேதான் அவர் இனத்திற்கு உள்நோக்கி சிந்தனை செய்கின்றனர். ‘Fair and Square’. நேரம் இருக்கும்பொழுது இது தொடரும்.
இந்து மதத்திற்கு என்று ஒரு மாமன்றம் வைத்திருக்கின்றார்களே அதன் மேல்மட்ட தலைவர்களில் ஒருவர் இப்படி சொன்னார். “ஏன் சம்ஸ்கிருத மந்திரத்தை தமிழ் மாணவர்களுக்கு போதிக்க வேண்டும் அதை தமிழில் போதிக்கலாமே” என்று கேள்வி கேட்டதற்கு பதில்: “நாங்கள் தமிழ் மாணவர்களை மட்டும் பார்க்கவில்லை அங்கே தெலுங்கு மலையாளி மாணவர்களும் இருக்கக் கூடும். அதனால் சம்ஸ்கிருத மொழி மந்திரங்களை அனைவருக்கும் பொதுவாகப் போதிக்கின்றோம்” என்று சொன்னார். என்னுடைய கேள்வி ஒன்றுதான் இந்நாட்டில் எத்துனை மலையாளிகள், தெலுங்கர்கள் தமது பிள்ளைகளை தேவார திருமுறை வகுப்பிற்கு அனுப்பி வைக்கின்றனர்?. தமிழரே அவர்தம் பிள்ளைகளுக்கு தமிழர் சமய போதனையை கற்றுக் கொடுக்க ஆர்வம் காட்டுவதில்லை. அப்புறம் எப்படி இந்த மாமன்றத்தார் தெலுங்கு மலையாள வம்சாவளி பிள்ளைகளைப் பற்றி பேசுகின்றார்கள்? இதற்கு ஒட்டு மொத்த காரணம் என்ன தெரியுமா?. இந்த மாமன்றத்தார் இந்து தர்மத்தை தமது தலை மீது தூக்கி வைத்துக் கொண்டு சம்ஸ்கிருத மொழியை வளர்ப்பதில் காட்டும் ஆர்வத்தை தமிழ் மொழியில் இருக்கும் தேவாரங்களை நம் பிள்ளைகளுக்கு கற்று தெளிவித்து தமிழரின் சமயத்தை மேலோங்க வைப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதை மனதில் வைத்துக் கொண்டுதான் “தேவாரம் திருமுறைகள்” மட்டும் இந்து மதம் இல்லை என்று சொன்னார். அதிலிருந்து யாம் தெரிந்துக் கொண்டது என்னவென்றால் இவருக்கு தமிழரின் சமயத்தில் இருக்கும் அறிவு சுழியம்தான் (‘zero’). இதிலிருந்து நமக்குக் கிடைப்பது என்ன? நாம் இண்டியன் என்று சொல்லிக் கொள்வதால் நம்முடைய சமயத்தின் தமிழ் வேதமாகிய திருமுறைகளைக் கற்காமல் பிற இனத்திற்காக மாற்றான் வேதத்தை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். இப்ப பிற இனத்தார் தமிழர் சமய வேதத்தை கற்க முன் வர வேண்டாம். இருந்தாலும் தமிழர்கள் பிற இனத்தாரின் நன்மைக்காக ஆரிய வேதங்களை கற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லாமல் சொல்கின்றனர் அந்த மாமன்றத்தார். இப்ப நஷ்டம் யாருக்கு, இலாபம் யாருக்கு?. லாபமா நஷ்டமா நைனாப் பையா? இதனால்தான் பிறருக்குக்காக நாம் இண்டியன் என்று சொல்லிக் கொண்டு தமிழரின் சமயத்தைப் புறக்கணித்து நமக்கு சம்பந்தமே இல்லாத ஆரியரின் மதத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆட வேண்டாம் தமிழர்களே என்று அறிவுறுத்துவது. இது தமிழரின் மனதை உறுத்தினால் சிந்தியுங்கள், தெளியுங்கள், திருந்தி தமிழரின் சமயத்தில் மட்டும் நில்லுங்கள். நாம் உருப்படுவோம். மலேயனுக்கு தமிழர் பதில் சொல்லத் தேவை இல்லை. மலையாளிகளோ, தெலுங்கர்களோ, ஹிந்திக்காரர்களோ பதில் சொல்லிக் கொள்ளட்டும். நாம் தமிழர் ஒதுங்கி நின்று நிம்மதியாக வேடிக்கையைப் பார்ப்போம். எப்படி சரியா?.
நானும் தமிழன் தான் . தமிழன் என்பதற்காக தமிழன் செய்யும் தவறுகளுக்கு சரி என்று சொல்ல இயலாது . தமிழ் மற்றும் தமிழன் மற்ற இன மொழி களுக்கு இணையாக தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்பதே எல்லோரின் அவா . உமது கூற்று ஆதங்கமாக இருப்பின் நன்றே . நேடிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே . அதுபோல தமிழன் தவறாக நடப்பின் அதை கண்டு நல்ல தமிழர்கள் தலை குனிவதும் உண்மையே . நாம் தமிழராயினும் நமது எண்ண அலைகள் வேறு . எனவே தான் நம்மில் பல சிந்தனைகள் . நம் இனம் மொழி வாழ வேண்டும் என்பதற்காக மற்ற இனத்தவரை நீர் காரி உமிழ்வது நாகரிகமல்ல .
கொட்டும் தேனீயைக் கண்டு துஷ்டரைக் கண்டது போல் தூர விலகுகிறார்களோ ஒருசில தமிழர்கள்?? என்ன செய்வது அனுபவப் படிப்புக்கு மீறியது வேறேதுமுண்டோ!! தேன் வேண்டுமெனில் தேனீ கொட்டு அனுபவித்தே ஆகவேண்டும் என்பது அர்த்தமற்றது என்பதை அவர்களும் நன்கு அறிந்துள்ளனர்!!!!! வேற்றுமையில் ஒற்றுமையை காணுங்கள்!! சிந்திப்போம் செயல் படுவோம்!!
சார் தேனீ நீங்கள் மலேசியாவிலே உள்ள அனைத்து தமிழ் பள்ளிக்கும் போய் பாருங்க எத்தனை தமிழர் பிள்ளைகள் தமிழ் பெயரில் இருகின்றனர் என்று . அதிலும் தமிழ் பெண்கள் தமிழர்களை திருமணம் செய்வது அவ்வளவாக விரும்புவதும் இல்லை , சிங்கப்பூரில் வேலை செய்யும் பல பச்சை தமிழசிகள்
தெலுகனையும் மலையாளிகளையும் காதல் செய்கின்றனர் என்று
தெரியும் . இது என் கடைக்கு திருமண பதிரிக்கை கொடுக்க வருபவர்களின் பிள்ளைகளின் கதை . முதலில் நாம் யார் என்று நம் பிள்ளைகளுக்கு சொல்லி வளர்க்க வேண்டும் . இல்லை என்றால் கலப்படம் செய்த உணவு உதவாது என்பது போல தமிழ் மொழியும் இல்லாமல் போய்விடும்
யாம் எமது வட்டாரத்தில் இருக்கும் தமிழ் பள்ளிகளுடன் ஓரளவுக்கு தொடர்பு வைத்துள்ளேன். தமிழர் பிள்ளைகளுக்கு சிறந்த பெயர்களை வைத்துள்ள தமிழர்களும் உண்டு. அவ்வாறு இல்லாமல் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பெயர் வைத்த பெற்றோரும் உண்டு. எல்லாம் சோதிடமும் எண் கணிதமும் நம்மவர்களை ஆட்டிப் படைக்கும் மாயம். வேற என்ன?. அங்கிட்டு மட்டும் என்ன வாழுதாம். மலையாளிகளுக்கு மலையாளப் பெண்ணைப் பார்க்கலாம் என்றால் அவர் என்ன பணிக்கர் குடும்பமா? இவர் என்ன மேனன் குடும்பமா? என்று கேள்வி கேட்டு அவமானப் படுத்துகின்றார்கள் என்று ஒரு ஊர்குருவி காதோரம் வந்து சொல்லிட்டுப் போவுது. அதற்குப் பதில் தமிழர் பெண்களையே திருமணம் செய்து கொண்டு நிம்மதியாக வாழ்ந்து விட்டுப் போகலாம் என்று சொல்லி அழுகின்றார் மலையாள நண்பர் ஒருவர். இன்னொரு குடும்பத்தில் சொல்லக் கேட்டது. “நாங்கள் தெலுங்கு இனத்தவரில்தால் பொண்ணு பார்த்தோம். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. அதனால்தான் எங்க மூன்று பையன்களுக்கும் தமிழ் பெண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணோம்”. எல்லா தென் இந்திய மொழிகள் பேசும் மக்களிடையே இந்த பிரச்சனைகள் உள்ளது. இது தமிழருக்கு மட்டும் சொந்தமான பிரச்சனை அல்ல.
பிற இனம் நம்மைப் பார்த்து காறி துப்புவதையும் கண்டு ஈர மரக்கட்டையாக வாழும் தமிழர்களை தட்டி எழுப்ப நெத்தியல அடிச்ச மாதிரி நச்சின்னு சொன்னாலும் பலருக்குப் புரியல. அன்பான மொழியில் சொன்னாலும் சிலருக்கு புரியல. அடுத்து நம்ம இனத்தவருக்குப் புரிய வைக்க புதியதொரு முறை இருந்தால் கண்டுப் பிடித்துச் சொல்கின்றேன். அதற்குள் தமிழன் தாமாக காணாமல் போய் விடுவான். அப்புறம் சொல்லி என்னத்தைச் செய்ய. கண் கெட்ட பிறகு சூரிய வணக்கம் என்று இப்ப ரொம்ப பேரு சொல்லி சலித்துக் கொள்கின்றார்களே. அவ்வாறுதான் இருக்கும் நம் நிலைமையும்.
தேன் தனக்காக மட்டும் தேனை சேகரித்து வைத்ததில்லை. பிறரும் உண்டு களிப்புரட்டுமே என்றுதான் சேகரித்து வைக்கும். அதை எடுத்துப் பருக கொஞ்சம் பக்குவப்பட்ட ஞானம் வேண்டும்.
நம்மவர்களுக்கு என்ன சொன்னாலும் உரைக்காது -ஏறாது- திருவள்ளுவர் அவ்வை -பாரதி -இவர்கள் சொல்லியே திருந்தாத இந்த ஜென்மங்கள் எப்போது திருந்தும்? vijay தொலைகாட்சியில் வரும் நீயா நானா என்ற நிகழ்ச்சியை பார்த்தல் தமிழ் நாட்டு தமிழர்களின் மன நிலை புரியும்– எவ்வளவு சுயநலமும் மட்டரக எண்ணங்களும் உள்ளவர்கள் என்று புரியும். இப்படி இருக்கையில் எப்படி நம் இனம் முன்னேறும் என்று எனக்கு புரிய வில்லை– அத்துடன் ஈழ தமிழர்கள் இன்றும் சிலோன் தமிழர்கள் என்று கூறி கொண்டு மற்ற தமிழர்களை மட்டமாக பார்த்து ஒற்றுமையுடன் கலந்து உறவாட முயல்வதில்லை. சிங்கப்பூரில் வேலை செய்யும் தமிழ் நாட்டு தமிழர்கள் சிங்கை தமிழர்களுடன் கலப்பதில்லை. நம்மவர்கள் இப்படி ஒற்றுமை இல்லாமல் இருந்தால் எப்படி நாம் முன்னேறுவது?
ஜாதி சமய பேத எல்லாம் சோத்த கண்ட பறக்குது..வருத்தப்ப வருத்தப்ப கஞ்சி வருத்தப்ப..
பாட்டுதான் ஞாபகம் வருது,இங்கே வாழும் மலாய்க்காரன்,சீனன் என்ன ஜாதி? அது எப்படி அவர்கள் நடத்தும் கடைகளில் நம்மவன் வெட்டு வெட்டுன்னு வேட்டுறான்? அங்கெல்லாம் ஜாதி பேதம் வேலை செய்யதா? உலகிற்கே வாழ கற்று கொடுத்த தமிழனை இடையில் வந்த ஆரிய கூத்தாடிகள் எப்படி எல்லாம் முட்டாளாக்கி விட்டார்கள் என்று நினைக்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது.இனியாவது நமது இளையோரிடம் சரியான பாதையை காட்டுவோம்..
கரிகாலன அவர்களே தமிழர்கள் சீன மலாய் கடையில் சாபிடுகிறார்கள் , அதற்க்காக தமிழர்கள் எத்தனை பேர் அவர்களை வீட்டிற்கு அழைக்குறாங்க? அல்லது திருமணம் பண்ணுறாங்க?
ஜாதி வெறியில் இன்னும் உருண்டுக் கொண்டிருந்தால் இந்த ஜென்மமென்ன எத்தனை ஜென்மமாயினும் ஜாதி வெறியனின் நிலை இதுதான்.. தெளிந்த சிந்தனையுடன் ஒன்று பட்டு வாழ வழி காணுங்கள்!!! சிந்திப்போம் செயல் படுவோம்!!
இன்னமும் இந்த பகுதியில் ஜாதி வெறி ஓயவில்லை !