கோடிக்கணக்கான பணம் நமது பிரதமரின் வங்கிக்கணக்கில் பதிவாகி உள்ளதாக வெளியான தகவல் இன்று மக்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது. மலேசியாவில் ஊழலும் இலஞ்சமும் உள்ளதை தவறாமல் அரசாங்கத்தின் பட்டுவாடா கணக்காய்வு துறை ஒவ்வொரு வருடமும் வெளியிட்டு வந்தாலும், அதைக்கண்டு யாரும் அலட்டிக்கொள்வதில்லை.
ஆனால், தற்போது வெளியாகியுள்ள ஊழல் விவகாரம் பூதாகாரமான வகையில் உருவாகி பிரதமர் நஜிப் ரசாக் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை ஆட்டம் காணச் செய்துள்ளது என்கிறார் சுவராம் என்ற மனித உரிமைக் கழகத்தின் தலைவர் கா. ஆறுமுகம்.
2008-இல் அரசாங்கம் 1எம்டிபி என்ற ஒரு நிறுவனத்தை உருவாக்கியது. அதற்கான தலைவர் பிரதமரும் நிதியமைச்சருமான நஜிப் ரசாக் ஆவார். இந்த நிறுவனத்தின் நோக்கம் மலேசியாவின் பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்துவது ஆகும். அதன் வழி மக்கள் வளமாக வாழவும் வழி பிறக்கும் என்பதாகும்.
இது சார்பாக மேலும் விவரித்த வழக்கறிஞருமான ஆறுமுகம், இந்த 1எம்டிபி சார்பாக மலேசிய அரசாங்கம் கடன் வாங்கலாம். இந்தக் கடனை அது அயல் நாட்டு வங்கி, உள்நாட்டு வங்கி அல்லது பணத்தை வட்டிக்கு பட்டுவாடா செய்யும் அனைத்துலக நிதி சந்தையிலும் வாங்கலாம். ஆனால், அது பெரும் இந்த கடனுக்கு அரசாங்கம் உத்தரவாதம் அளிக்க வேண்டும். பிறகு வாங்கிய கடனுக்கு தவறாமல் வட்டியைக் கட்ட வேண்டும்.
சுருக்கமாக சொன்னால், இந்த 1எம்டிபி இதுவரையில் வாங்கிய கடனின் மதிப்பு ரிம 4,200 கோடியாகும் (ரிம 42,000,000,000). இதற்கு சுமார் 6 விழுக்காடு வருடாந்தர வட்டியாகக் கட்ட வேண்டும். அதாவது ஒரு வருடத்திற்கு வட்டி மட்டும் ரிம 2 கோடி 52 லட்சம் (ரிம 2,520,000,000) ஆகும். அதாவது ஒவ்வொரு நாளும் சுமார் ரிம 69 லட்சம் (ரிம 6,900,000) வட்டி கட்ட வேண்டும். வருமானம் வந்தால் வட்டி கட்டலாம், ஆனால் இவர்கள் செய்த முதலீடுகளில் வருமானம் இல்லாததால் தொடக்கத்தில் குறைவாக இருந்த கடன் அதிகரித்து தற்போது இந்த ரிம 4,200 கோடியை அடைந்துள்ளது.
இந்த ஒரு நாளுக்கு கட்டும் வட்டி பணத்தில், ஓர் அழகான பாலர்பள்ளியுடன் அனைத்து நவீன வசதிகளும் கொண்ட தமிழ்ப் பள்ளியை கட்டலாம். ஒரு மாதம் கட்டும் வட்டி பணத்தில் அது போன்ற 30 பள்ளிகளை நிறுவலாம்.
அல்லது, ரிம100,000 மதிப்புள்ள 70 வீடுகளை வறுமையில் உள்ள மக்களுக்கு இனாமாக ஒவ்வொரு நாளும் வழங்கலாம் என்கிறார் ஆறுமுகம்.
இந்த 1எம்டிபி செய்த முதலீட்டின் மதிப்பு எவ்வளவு என்று பார்த்தால் அதிலும் ஊழல்தான் உள்ளது. அரசாங்க நிலத்தை குறைந்த விலையில் வாங்கி அதை அதிக விலைக்கு அரசாங்க நிறுவனங்களுக்கு பட்டுவாடா செய்வது, அதிக விலை கொடுத்து மின் உற்பத்தி நிலையங்களை வாங்கியுள்ளது, அயல் நாட்டில் செய்யப்பட்டுள்ள பயன் இல்லாத மூதலீடுகள் போன்றவை அம்பலமாகியுள்ளன.
கூட்டிக் கழித்து பார்க்கும் போது மக்களை வளமாக வாழ வைக்க அரசாங்கம் போட்ட இந்த 1எம்டிபி முதலீட்டு திட்டம் அரசாங்கத்தை கடனாளியாக ஆக்கியுள்ளது. இதை நிவர்த்தி செய்ய அரசாங்கம் மக்களின் பணத்தைதான் பயன் படுத்துகிறது.
வட்டி கட்ட வழி செய்யவும், கடனை நிருவகிக்கவும் பணத்தை தேட அரசாங்கம் மக்களின் வயிற்றில் கை வைத்த போதுதான் இந்தப் பிரச்சனை மேலும் சூடு பிடித்தது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜிஎஸ்டி வரி அமலாக்கம் செய்யப்பட்டது. இதனால் விலைவாசி உயர்வு மக்களை தாக்கி திக்குமுக்காட வைத்துள்ளது.
இதோடு, தற்போது இந்த 1எம்டிபி பணப்பட்டுவாடா செய்யப்பட்ட போது, சுமார் ரிம 260 கோடி (ரிம 2,600,000,000) பிரதமர் நஜிப்பி ன் ‘அம்பேங்’ வங்கிக் கணக்கில் அயல் நாட்டிலிருந்து நுழைந்துள்ளதாக ஆதாரங்களுடன் அனைதுலக நிதியறிக்கை பத்திரிக்கையான வால் ஸ்திரிட் ஜெர்னல் செய்தி வெளியிட்டது.
இதை தனது சுய தேவைக்காகப் பயன் படுத்தவில்லை என்கிறார் பிரதமர். அப்படியென்றால் யாருடைய தேவைக்காக பயன் படுத்தப் பட்டது என்ற கேள்வி எழுகிறது. பொருளாதார நெருக்கடியும் குறைந்த வருமானமும் மக்களை தாக்கியுள்ள இந்தச் சூழலில், அரசாங்க மாற்றம் மட்டும் போதாது என்கிறார் ஆறுமுகம்.
ஊழலும் இலஞ்சமும் அற்ற ஓர் அரசாங்கம் வேண்டும். அதை பெறுவது கடினம். ஆனால், முடியும். முதல் கட்டமாக மக்கள் விழிப்புணர்ச்சி அடைய வேண்டும். மாறி மாறி கொள்ளையடிக்கும் கும்பலுக்கு மக்கள் பலியாவதை நிறுத்த மாற்று சிந்தனைக்கு வித்திட வேண்டும். நாம் அடிமைத்தன அரசியலுக்கும் பண அரசியலுக்கும் சோரம் போகாமல் இருக்க வேண்டும்.
அது சாத்தியமா என்ற கேள்விக்கு, “அதுவும் ஒரு போராட்டம்தான். மக்களாட்சி என்பதை தாரை வார்த்துக் கொடுக்காமல், அதில் பங்கு பெற வேண்டும்.” அடுத்த கட்டம் மக்களுடையது என்கிறார் ஆறுமுகம்.
ஐயா ஆறுமுகம் சொல்வது நியாயமே!! மக்களும் தெளிந்துள்ளனர். ஊழலற்ற அரசாங்கத்தை உருவாக்க மக்கள் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் அல்லது எடுக்கலாம் என்று ஓரளவு விளக்கியிருந்தால் இன்னும் நன்றாக அமைந்திருக்கும்!!! உண்மையான மக்களாட்சி மலர மக்கள் ஜனநாயகத்தை நன்கு அறிந்திருக்க வேண்டும். மக்கள் உரிமையைப்பற்றி தெளிவு பிறந்திருக்க வேண்டும்!! இல்லையேல் குறிப்பிட்டதுபோல சிங்கத்திடமிருந்து தப்பித்து முதலை வாயில் மாட்டிக் கொண்டது போலத்தான் இருக்கும் மக்களின் நிலை!!! எத்திசையில் திரும்பினாலும் கொள்ளையனும் கொலைக்காரனும்தான் கண்ணுக்கு தெரிகிறார்கள்!!!
உண்மைதான் ஆறு, ஆனால் உண்மையை வெளியே காட்டிக்கொள்ளாமல் என்னமாய் நாடகம் ஆடுகின்றனர், அதற்க்கு அரசாங்கத்திற்கு எல்லா வகையிலும் ஆதரவாக அரசாங்க பணியாளர்கள் ஒத்து ஊதும் புலனாய் குழுவினர், உண்மை தெரிய.ஒதூலைப்பார்கலா? நேர்மை இருந்திருந்தால் எதிர் கட்சியினர் மூவரை போட்டிருக்கலாமே, பக்காத்த்ருடர்களிடமே திருட்டை கண்டுப்பிடிக்கச்சொன்னால் நடக்கிற காரியமா? எது எப்படியோ நஜிப்போடு 14ம் தேர்தலும் வரவேண்டும், அதுவே உண்மை சனநாயகத்தை கொனுவரும்!!??
எமகண்டன் !!!!
அல்தாந்துயா நஜிப்பின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்ட 2.6 பில்லியன் வெள்ளி என்ன ஆனது என்றா கேட்டீர்? 21-3-2013லும் 25-3-2015லும் இரண்டு தவணைகளாக ஆம்பெங்கில் [AmBank} போடப்பட்டது அப்பணம். 5-5-2013ல் பொதுத்தேர்தல். 30-8-2013ல் ஒரு வங்கிக் கணக்கு மூடப்பட்டது. 9-3-2015ல் மற்றொரு வங்கிக் கணக்கு மூடப்பட்டது. பணம் எங்கே போயிருக்கும் என நீங்களே கிரகித்துக் கொள்ளுங்கள். இந்த லட்சணத்தில் நஜிப்தான் நிதியமைச்சரும் கூட. அடுத்த பொதுத்தேர்தலில் வாக்களிக்க கூடிய விரைவில் 15 லட்சம் அந்நிய நாட்டினரை இறக்குமதி செய்யவுள்ளது அரசாங்கம். அதற்கும் துட்டு வேணுமே! அடுத்து எதிலே கையை நுழைக்கலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறார் நமது மாண்புமிகு நிதியமைச்சர். நம் நாட்டில் கம்யூனிஸ்டுகள் இன்னும் இருந்திருப்பார்களேயானால் எத்தனை ஊழல் பெருச்சாளிகளை சுட்டுத் தள்ளியிருப்பார்களோ தெரியாது.
நாம் இந் நாட்டில் ஓரங்கட்டப்பட்டு 58 ஆண்டுகளாகி விட்டது ஆனாலும் நம்மவர்களுக்கு இன்றும் இது புரியாமல் இருக்கிறது தான் வெட்ககேடு – இது புரிந்த பெரும்பாலோர் புலம் பெயர்ந்து மேற்கு நாடுகளுக்கு சென்று விட்டனர். சீனர்கள் எல்லாவற்றையும் புரிந்து கொண்டவர்கள் -அவர்களுக்கு பணத்தின் பலம் தெரியும் புரியும் – இதனால் தான் முழு மூச்சாக பணம் பண்ணுவதிலேயே இருக்கின்றனர்- அத்துடன் குடும்பத்தில் ஒருவரையாவது வெளிநாட்டில் படிக்கவைக்கின்றனர். நம்மவர்கள் குடித்து விட்டு சாலையை அளந்து கொண்டிருக்கின்றனர்.
திருடாதே திருடா திருடாதே https://www.youtube.com/watch?v=S-jHNs31dJs
அய்யா திரு கா ஆறுமுகம்.எளிய தமிழில் 1MDBயில் அரங்கேறிய முறைகேடுகளை புரிந்துக்கொள்ளும் விதமாக கட்டுரையை வடிவமைத்துள்ளீர்கள்.நன்றிகள்.இந்த கட்டுரையை மலேசியாகினி ஆங்கிலம்.மலாய்மொழியில் மொழிமாற்று செயிதால் அம்னோ தொகுதி தலைகளும்.கம்பத்து மக்களுக்கும் செயிதி போய்ச்சேரும் .
நம்ப திருடுனா தண்டனை. இவன் மொள்ளமாரி இவனுக்கு என்ன தண்டனை.
வட்டிப்பணம் என்பதால் நவீனப் கழிப்பறைக் கட்ட மறந்து விடலாம்! எதற்கும் நினவு படுத்தங்கள்!
ஊழல் அற்ற நேர்மையான வெளிப்படையான அரசாங்கத்தை அமைக்க முதலில் அவ்வாறான அரசியல் கட்சிகள் உருவாக வேண்டும். இங்குதான் மக்களின் விழிப்புணர்வு தேவைப் படுகின்றது. அரசியல் கட்சிகளின் பண பலம்தான் கட்சித் தொண்டர்களை ஊழல்வாதிகளாக்குகின்றது. அரசியல் கட்சிக்கு வெளியே இருக்கும் நகர்புற மக்கள் விழிப்புணர்வுடன் தங்கள் ஒட்டு உரிமையைப் பயன் படுத்துகின்றனர். பேராசிரியர் மு.வ. சொல்லியது போல் இவர்கள் ஜனநாயகம் என்னும் பெட்டிக்கு சாவியாக இருக்கின்றார்கள். இதற்கு நேர்மாறாக இருக்கும் புறநகர் மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு வர வேண்டும். அது இன வாரியாக இல்லாமல் மத வாரியாக இல்லாமல் இந்நாட்டின் எதிர்கால மேன்மைக்கான விழிப்புணர்வாக இருக்க வேண்டும். நடக்குமா இது மலாய்க்காரர்களிடையே?. ஆட்சி மாற்றம் என்பது நகர் மற்றும் புறநகர் மக்களிடையே வர வேண்டிய விழிப்புணர்வாக இருக்க வேண்டும். இதில் ஒரு கை தட்டினால் ஓசை எழும்பாது.
இன்று ஓரினம் தலைநகரில் இன தூவேஷத்தைத் தூண்டி மக்களிடையே இனக்கலவரத்தை ஏற்படுத்தி நாட்டின் அரசியல் பேடியை காப்பாற்றுவதற்கு மக்கள் எண்ணத்தை திசை திருப்ப பார்கின்றது. இதனை தடுக்க இன்னும் மத்திய சேமப் படை வந்த பாடில்லை. இப்ப சொல்லுங்கள் மக்களுக்கு விழிப்புணர்வு வராமல் வைத்திருப்பதே ஒவ்வொரு அரசாங்க கிளைகளின் வேலையாக இருக்கும் பொழுது எப்படி மக்களுக்கு விழிப்புணர்வு வரும்?
தேனீ தங்களின் கருத்து தேனாக இனிக்கிறது. அறிவின் சுடர் நீங்கள்! ஆழமான சிந்தனை. ஒரு அழகான கட்டுரைரை இது சார்பாக தாங்கள் எழுத வேண்டும். நன்றி
நான் இப்பக்கத்தில் தேனியின் கருத்தை தான் முதலில் படிப்பேன் .அறிபூர்வமாக எழுதுவதில் வல்லவர் .ஆன்மிகம் ,அரசியல் எல்லாவர்ற்றிலும் சிறந்த கருதுக்களை தான் படைப்பர் .
நன்றி வாசகர்களே. பாராட்டுகளை எதிர்பார்த்து யாம் எழுதுவதில்லை. கணினி முன் உட்காரும் பொழுது எது எம் மனதில் தோன்றுகின்றதோ அதைத்தான் எழுதுகின்றேன். சில நேரங்களில் கடினமான வார்த்தைகளாகவும் இருக்கலாம். ஆன்மிகம் என்று வரும்பொழுது அங்கே எமது உணர்ச்சியை எவ்வளவு அடக்கி வாசிக்க முடியுமோ அந்த அளவிற்கு அடக்கி வாசிப்பேன். இதுவே தமிழ் மொழி, தமிழர் என்று வந்து விட்டால் நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன் என்றாகி விடும். கட்டுரையாளர் திரு. ஆறுமுகம் அவர்களும் அவ்வாரனவாறே என்பதை பல நிகழ்வுகளில் அவரின் பேச்சைக் கேட்டதிலும், அவரின் கருத்துக்களைப் படிப்பதிலிருந்தும் அறிந்து வைத்துள்ளேன். நல்லவர்கள் தொண்டு நம் மக்களுக்கும் இந்நாட்டுக்கும் நிறைய தேவை. தொடரட்டும் கட்டுரையாளரின் சிறப்பான மக்கள் சேவை.
இன்னும் எவ்வளவோ இருக்கோ தெரியலங்க சார் , மக்கள்தான் பாவம்
நான் இப்பக்கத்தில் தேனியின் கருத்தை தான் முதலில் படிப்பேன் .அறிபூர்வமாக எழுதுவதில் வல்லவர் .ஆன்மிகம் ,அரசியல் எல்லாவர்ற்றிலும் சிறந்த கருதுக்களை தான் படைப்பர் . மேலும் பண்பாகவும் எழுதுவர்.