நம் நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் 150 ஆண்டுகளுக்கும் குறையாத வரலாற்றினைக் கொண்டவை என்றால் அது மிகையாகாது. 524 தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் அரசும், அரசு சாரா இயக்கங்களும், பெருந்தகையாளர்களும், பொதுமக்களும் உறுதுணையாக, இன்றும் இருந்து வருகின்றார்கள் என்பது வெள்ளிடைமலை.
அவ்வகையில், தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்ட வரைவு, மலேசியக் காற்பந்து சங்கம், ஆசியக் காற்பந்து சங்கம், தேசியப் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றம், கோல கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம், சிலாங்கூர் இந்தியர் விளையாட்டு பேரவை ஆகியவற்றுடன் இணைந்து மலேசியாவிலுள்ள அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளுக்கும் காற்பந்துகளை இலவசமாக அளிக்கவுள்ளது. ஆசியக் காற்பந்து கூட்டமைப்பின் சி.எஸ்.ஆர் (CSR) தலைவரான டாக்டர் அண்ணாதுரை அவர்களின் முயற்சியில் “One World Futbol” வாயிலாகச் சுமார் 5000 காற்பந்துகள் பெறப்பட்டன. அக்காற்பந்துகள் நாட்டிலுள்ள 524 தமிழ்ப்பள்ளிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும்.
இந்நிகழ்ச்சிக் குறித்த கூடுதல் விபரங்கள் பின்வருமாறு:-
திகதி : 2 ஆகஸ்ட் 2015
நேரம் : 8.00 காலை – 5.00 மாலை
இடம் : புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு மையம்.
ஜாலான் பாராட், புக்கிட் ஜாலில், 57000 கோலாலம்பூர்
கூட்டரசு பிரதேசம் கோலாலம்பூர், மலேசியா.
(Institut Sukan Negara, Bukit Jalil.
Jalan Barat, Bukit Jalil, 57000 Kuala Lumpur,
Wilayah Persekutuan Kuala Lumpur, Malaysia.)
தமிழ்ப்பள்ளிகளிலுள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, சிறிய பள்ளிகளுக்கு 3 முதல் 10 காற்பந்துகளும் பெரிய பள்ளிகளுக்கு 20 முதல் 40 காற்பந்துகளும் வழங்கப்படவுள்ளன. இக்காற்பந்துகள் “Ultra Durable Balls” என்று அழைக்கப்படும் வகையிலானவை. இவை உயர் தரமானவை; உறுதியானவை; மேலும் நீண்ட காலம் பயன்படுத்தக்கூடியத் தன்மையையும் கொண்டவை.
இந்நிகழ்ச்சியோடு, தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான காற்பந்து சிறப்புப் பயிற்சியையும்; பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான சமச்சீர் சத்துணவு தொடர்பான சொற்பொழிவும்; சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளன. மேலும், இந்நிகழ்ச்சியில் கூட்டரசு பிரதேசம், சிலாங்கூர் மாநிலத்திலுள்ள அனைத்துத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாமல் விளையாட்டுகளிலும் உற்சாகமாக ஈடுபடவும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் இந்தியச் சமூகத்தினர் மத்தியில் விளையாட்டின் முக்கியத்துவத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுவதாகப் பேராசிரியர் டத்தோ முனைவர் என்.எஸ் ராஜேந்திரன் கூறினார்.
இந்நிகழ்ச்சியின் வாயிலாகச் சிலாங்கூர், கூட்டரசு பிரதேசத் தமிழ்ப்பள்ளிகளில் அடையாளம் காணப்பட்ட சுமார் 120-150 மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்றுநர்களால் காற்பந்து பயிற்சிகள் வழங்கப்படும். அம்மாணவர்களுக்குக் காற்பந்து விளையாட்டில் ஆர்வம் மேலோங்குவதுடன் அவர்களின் விளையாட்டு ஆற்றலையும் மேம்படுத்த வாய்ப்புகள் வழங்கப்படும். இதன் விளைவாக மாணவர்களின் தன்னம்பிக்கையும் மேலோங்குகின்றது. இந்நிகழ்ச்சியின் வழி பள்ளிகளில் மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கும் ஆசிரியர்களுக்கும் விளையாட்டு நுட்பங்களைக் கற்று கொள்ள வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
தொன்று தொட்டு இந்தியர்கள் விளையாட்டுத் துறையில் குறிப்பாகக் காற்பந்து விளையாட்டிலும் பீடுநடை போட்டு நாட்டிற்குப் பெருமை சேர்த்திருக்கின்றனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இவ்வகையான பாரம்பரியமும் பெருமையும் தொடர வேண்டுமென்பது தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்ட வரைவுக் குழுவினரின் அளப்பரிய அவா ஆகும்.
அதற்கேற்ப இளம் விளையாட்டாளர்களைத் தமிழ்ப்பள்ளிகளிலேயே உருவாக்குவதில் அனைத்துத் தரப்பினரின் பங்கு மிகவும் அவசியமானதும் காலத்திற்கேற்ற நடவடிக்கையுமாகும்.
வாழ்த்துகள்! சரியான வழியில் மாணவர்கள் வழி நடத்தப் படுகின்றனர். விளையாட்டுத் துறையில் நமது எதிர்காலம் சிறப்பாகவே இருக்கும். நாம் நிச்சயம் உயர்வடைவோம்!
இது [போன்ற சின்ன சின்ன மகிழ்ச்சி தான் நமக்கு . இருந்த அமைச்சர் பதவியில் ஒன்று பறிபோய் ஒன்றுதான் irukku. அது பற்றி கவலை illai. நம் மாணவர்களின் உயர் கல்வி நிலை என்ன . அது பற்றியும் கவலை illai. என்ன உலகமடா ithu.
என்னதான் தமிழர்கள் விளையாட்டுதுறையில் கெட்டிக்காரர்களாய் இருந்தாலும் தேர்வு செய்யப்படும்போது வாய்ப்பளிக்கப்படுவதில்லை .ஆகவே வசதியுள்ளவர்கள் தமிழர்களுக்கென்று தனிப்பட்ட காற்பந்து குழுவை ஏற்படுத்தி நிர்வகிக்கவேண்டும் .
சின்ன சின்ன ஆசை. பந்து அடித்துப் பார்க்க ஆசை. பந்து கொடுப்பதற்கு முன் எத்துனை பிள்ளைகளை பெற்றோர் புறப் பாட நடவடிக்கை நேரத்தில் பந்து விளையாட அனுப்பி வைக்கின்றார்கள்?. மேலே படத்தில் இருப்பவர்களுக்கு இது தெரியாதோ? ஏதோ கடமைக்கு பந்து கொடுக்கின்றோம் என்று கூறி சீட்டுக்கு அடி போடுகின்ற மாதிரி தெரியுது.
இந்திய மாணவர்களின் விளையாட்டுத் துறையில் முன்னேற ஆர்வம் காடும் அதே வேலையில் தமிழ் மொழி கற்று சிறப்புத் தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்களுக்கு பொது பல்கலைக்கழகம் நுழைய உரிய அங்கீகாரம் கிடைக்க ஆவன செய்யவும்.
காட்டும் அதே வேளையில் என்று மாற்றி அமைக்கவும்!!
வாழ்த்துகள்் என் சிறு வயதில் தேர்தலின் போது வாக்குக் கேட்டு வரும் வேட்பாளர்கள் வெறும் காற்பந்துகளையும் ஜெர்சிகளையும் மட்டுமே கொடுத்துச் சென்றது நி்னைவுக்கு வருகிறது.
பாரம் மூன்று வரை பள்ளி காற்பந்து விளையாட்டின் போது வெறுங்காலில் உதைத்த அனுபவம்…. இன்று பந்து மட்டும் என்ற நிலை
மாறி கார்ப்பந்து காலணிகளும் வழங்கிட வேண்டும். 5000 பந்துகள் …2 லச்சம் வந்து இருக்கும் 1 லச்சத்தை காலணிகளுக்கு கொடுத்து இருக்கலாம். பாவம் பிள்ளைகள்… இன்னும் காலின் வெறுமை புரியவில்லை.
பொன் ரெங்கன் …… பந்து காலனி தந்து சிறப்பாக விளையாடினாலும் நாளை மாநில தேசிய குழுக்களில்இடம் கிடைப்பது குதிரை கொம்பு . நம்ம கலர் அப்படி .
வேதையன், கவலைப்படாதீர்கள்! காலம் மாறும். எல்லாக் காலங்களிலும் ஒரு “தோல்வி நாடாக” வே நாம் முத்திரைக் குத்தப்பட்டால் ஏதோ ஓர் அரசியல்வாதிக்காவது ரோஷம் வரும். அப்போது தான் நமது அருமை அவர்களுக்குப் புரியும்!
1970வதுகல்லில் மற்றவர்கள் நிலம் , மாடு போன்றவை வாங்கிக்கொண்டார்கள். நான் வசித்தா தோட்டத்தில் பந்தும், ஜெஎசியும்
வாங்கினார்கள் , பந்தும், ஜெஎசியும் வாங்கனவங்க கிளிசிட்டாங்க ,நிலம் வாங்கனவங்க போலைசிகிட்டாங்க ……..எதையும் யோசிச்சு செய்யுங்க கண்ணு
………வாங்கன நாமம் போதும்னு நினைக்கிறேன்
தயவு செய்து அணைத்து தமிழர்களும் தங்கள் பிள்ளைகளை தமிழ் பள்ளிக்கு அனுப்பவும்
ஹமிட் சொல்வதைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என்றே தெரிவில்லை. தமிழ் பள்ளி ஆசிரியர்களே அவர்தம் பிள்ளைகளை தேசிய ஆரம்ப பள்ளிகளுக்கு அனுப்புவதைக் கண்கூடாக காண்கின்றேன். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் கேட்டீர்களானால் நெஞ்சு வெடித்து விடும். ஒரு தமிழ் ஆசிரியை சொன்னார். அவரின் முதல் மகனை தமிழ் பள்ளியில் போட்டு சரியாகப் படிக்க வில்லையாம். அதனால் இரண்டாவது பெண் பிள்ளையை தேசிய பள்ளியில் சேர்த்தாராம்!. இன்னொரு தமிழ் பள்ளி ஆசிரியை சொன்னது. அவரின் முதல் மகள் ஒரு சிறந்த தமிழ் பள்ளியில் படிக்க, இரண்டாவது மகளை மத்தியானம் (Afternoon School) ஆரம்பமாகும் தமிழ் பள்ளியில் சேர்த்தால் போக்கு வரத்து பிரச்சனை வரும் என்று கூறி அவர் படித்துக் கொடுக்கும் தமிழ் பள்ளிக்கு அருகாமையில் இருக்கும் தேசிய பள்ளியில் சேர்த்தாராம்!. இப்படி தமிழர் அவர்தம் தாய்மொழியை தத்தம் பிள்ளைகளுக்கு கற்றுவிக்க முன் வராத பொழுது இப்பிள்ளைகள் எப்படி அறிவார் தமிழரின் வரலாற்றை? எப்படி அறிவார் தமிழரின் உண்மை சமய நெறிகளை. அதனால்தான் இந்துத்துவா மத வியாபாரிகள் இப்பேர்பட்ட தமிழரை மத மூட நம்பிக்கையில் அழுந்தி வைத்து தொடர்ச்சியாக அறியாமையில் வைத்திருக்க முடிகின்றது.
தேனி அவர்களே தமிழ் சோறு போடும் என்பது உங்கள் கருத்தில் வெளிப்படுகிறது.சோறு போடும் தமிழ் பள்ளிக்கு விசுவாசம்தான் காணவில்லை.
தமிழ் நம் தாய் மொழி. சோற்றை நாம் தான் தேடிக்கொள்ளவேண்டும். தயவுசெய்து தமிழ் சோறு போடுமா என்ற முட்டாள் தனமான கேள்விகளை கேட்டு தங்களின் அறிவிலித்தனத்தை காட்டிக்கொள்ளவேண்டாம். தமிழ் எனக்கு சோறு போட வில்லை. அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. தமிழ் என் உயிர். என் தாய்க்கு சமம். ஆங்கிலம் எனக்கு வாழ்வளித்தது.அதற்க்கு நான் நன்றி கடமைப்பட்டுள்ளேன். தமிழுக்கு என்னால் முடிந்ததை நான் செய்யவேண்டும் அதுவே என் ஆசை.
7,000 -க்கும் மேற்பட்ட தமிழ் ஆசிரியர்கள் இந்நாட்டு அரசாங்கத்தில் வேலை செய்து கை நிறைய சம்பளம் வாங்குகின்றனர். இன்னும் தமிழ் மொழி ஊடங்கங்களில், அச்சங்கங்களில், இவற்றை இயக்க தமிழ் மொழி மென்பொருளை பயன்படுத்தத் தெரிந்த வேலையாட்கள், நீதிமன்றங்களில் மொழி பெயர்ப்பாளர்களாக, இணையத்தில் தமிழ் சார்ந்த பக்கங்களை தயார் செய்து கொடுக்கும் தொழில் என்று பலவாறாக பலருக்கு தமிழ் சோறு போடுகின்றது. உண்மையை அறியாமல் அல்லது உணராமல் பலர் தமிழை பழிக்கின்றனர் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது. தமிழ் நிச்சயம் சோறு போடும். இதற்கு மேலும் தமிழ் ஒரு புண்ணிய காரியம் செய்யும். இரவில் தொடரும்.
நாம் பள்ளிக்கூடங்கள் முதல் பல்கலைக்கழகங்கள் வரை அரும்பாடு பட்டு படித்து பட்டம் பெரும் உலகியல் கல்வி, நம் உயிர் உடலைப் பிரிந்து போம்பொழுது அதுவும் அழிந்து விடும். அழியும் தன்மையுடையதற்கு உலகியல் கல்வி என்றும், என்றுமே அழியாத கல்விக்கு “ஞானம்” என்றும் தமிழர் குறித்தனர். இங்கே ஞானம் என்றது இறைவனைப் பற்றிய மேய்யரிவேயாம். இதுவே ஒவ்வொரு உயிருடன் நின்று அடுத்தடுத்து வரும் பிறப்பில் அந்த உயிருடன் தொத்து நிற்கும். இதைத்தான் தமிழர்கள் முன் தவப்பயன் என்பது. தமிழர், இத்தகைய மெய்ஞான அறிவைப் பெற உதவுவது அவர்தம் தாய் மொழியாகிய தமிழே. தமிழரின் இறை சிந்தனையை தமிழை விட்டால் நீங்கள் பிற மொழியில் பெற முடியாது. தமிழ் கற்று தமிழர் வேதமாகிய திருமுறைகளை உய்த்துணர்ந்தால் மெய்ஞானத்தில் சிறந்து நின்று நன்னெறி பெறுவர் என்று அப்பர் பெருமான் கீழ்காணுமாறு குறிக்கின்றார்:
“நமச்சி வாயமே ஞானமுங் கல்வியும்
நமச்சி வாயவே நானறி விச்சையும்
நமச்சி வாயவே நாநவின் றேத்துமே
நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே? (5.90.2)
நமசிவாய எனும் மந்திரத்தின் ஆற்றலை உணர்ந்து உர்ச்சரிப்போருக்கு ஞானமும் கல்வியும் கைகூடி வருமென்றும் அதனால் அறம் பொருள் இன்பம் எனும் நன்னெறி கைகூடப் பெற்று உயிர் முத்தி பேரின்பம் பெரும் என்பது இத்தேவார திருமுறையின் பொருளாகும். நாமும் நம் பிள்ளைகளும் தினமும் ஓதத்தக்க மந்திரமாகும். தமிழைக் கற்றோருக்கு கிடைக்கக்கூடிய அரும்பெரும் புண்ணியம் இதுவாகும்.
காற்பந்துக்களை வகுப்பறையிலா விளையாடுவது?? இன்னும் எத்தனையோ தமிழ் பள்ளிகளில் மைதானமே இல்லையே .. இவனுங்க எல்லாம் லூசா இல்ல லூசு மாதிரி நடிக்கிறானுன்களா