பெர்னாமா, அஸ்ட்ரோவில் தமிழ் செய்திகள் வேண்டும் – தமிழர் குரல் அமைச்சரை சந்திக்கும் !

contentwriting_1பெர்னாமா தமிழ் செய்தி மற்றும் ஹலோ மலேசியா பேசும்
படம் ( Talk Show ) இரண்டும் சமீபத்தில் நிறுத்தியதற்கு சமுதாய
தலைவர்கள் மௌனியாகி போனது நமது மிச்சங்கள் தொலைத்த விதியை அயர்ந்து தூங்கும் அறியாமையை அலச வேண்டுகிறேன்.

தமிழர் குரல் சமூக நல இயக்கம் தமது இராண்டாம் ஆண்டு விழாவை மிக சிறப்பாக கொண்டாடடியது. தமிழா சமூக ஆர்வலர் பெரியவர் திரு சாமுவேல் ராஜ் அவர்கள் தலைமையில் இயக்க சின்னமும் வெளியிடு
செய்தனர்.

தமிழர் இனம், தமிழ் மொழி கல்வி என்ற இரண்டு வட்டத்தில் இருந்தாலும் கால கட்டம் ,கட்டாயம் கருதி தமிழர் பொருளாதாரம் தமிழர் நற்பண்புகள் என்ற முனைப்பையும் இயக்கம் முன் எடுத்துள்ளது.

ஊடக உறவில் வாழும் இந்த நவீன காலத்தில் பெர்னாமா தமிழ் செய்தி முடக்கம் மற்றும் அஸ்ட்ரோ தமிழ் செய்திகள் தொடக்கபடாமல் இருப்பது தமிழுக்கு இவர்கள் எதிரிகள் போன்ற ஒரு கடுப்பை கிளப்பி உள்ளனர் என்று தமிழர் குரல் துணைத தலைவரும் உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்க இயக்குனருமான திரு .பொன் ரங்கன் கூறுகிறார்.

இப்போது மலாய் சீன ஆரம்ப, இடை நிலப்பளிகளில் படிக்கும் தமிழ் மாணவர்களுக்கு அடிப்படை தமிழும் அவர்களின் பெற்றோர்களுக்கு தமிழ் போதனை மற்றும் “அன்பு” எனும் குடும்ப உறவுகள் பயிற்சிகளும் நடத்துகிறோம் என்று தமிழர் குரல் இயக்கத தலலவர் திரு. கு. செல்வக்குமார் மக்கள ஓசை தமிழர் குரல் இயக்க பொறுப்பாளர்களிடம் சமீபத்தில் நடத்திய சிறப்பு சந்திப்பில் தெரிவித்தார்.

உதவித்தலைவியாக விமலா , செயலர் திரு நெடுஞ்செழியன் , இளஞர் தகவல் இயக்குனர் திரு சிவா , யுவதிகள் இயக்குனர் செல்வி உமா ,கல்வி இயக்குனர் திரு ராமசந்திரன் அனைவரும் தமிழர் குரல் வளச்சிக்கு பெரும் சேவையாற்றி வருகின்றனர்.

தமிழர்களின் தமிழ் மொழி, இனம் ,கலாசார மாண்புகளுக்கு பெரும் சவால் விடும் அந்நிய மோக ஊடக விந்தைகளால் மலேசியத தமிழர்களின் உணர்வுவுகள் கலைந்த நிலையில் ஒரு தவிப்பும் குழப்ப மோகத்திலும் திசை தெரியா கூட்டத்தில் அலையும் பயத்தில் இருந்து வெளி வர ஒரு புது மகா பாரதம் நடத்த வேண்டிய காட்டயத்தில் உள்ளோம்.

இடை நிலைப்பள்ளிகளில் பாரம் ஒன்று முதல் பாரம் மூன்று வரை தமிழ் மொழி மறுப்பும் கவனத்தில் கொண்டு 6ம் ஆண்டு முடித்து இடை நிலை பள்ளிகளுக்கு போகும்போதே தமிழ்பபள்ளிகளில் தமிழ் மொழி தொடர வேண்டும் என்ற மடல் உரிமத்தை பெற்றோர்கள் கேட்டு பெருவார்களேயானால் இடை நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தமிழ் மொழி ஆசிரயர்கள் தேவையை உணர்ந்து தயார் ஆவார்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்த பெற்றோர்களின் விழிப்பு நிலைக்கும் தமிழர் குரல் வித்திட்டு உள்ளது.

பொருள் இல்லாதார்க்கு இவ்வுலகம் இல்லை …என்ற உணர்வை மெய்ப்பிக்க விரைவில் தமிழர் குரல் சொத்து கூட்டுறவு நிறுவனத்தை அமைக்கும் பணியிலும் இறங்கி உள்ளது. இன்னும் தமிழர் கலாசார மாண்புகள் ,இன பெருக்கம் , தமிழர் திருமண உறவுகள்,அரசியல் அரசு தொடர்புகள் போன்ற பயிற்சிகளும் நடத்த தக்க தமிழர்களையும் நேரத்தையும் பணத்தையும் எதிர்ப்பார்க்கிறோம். உலக இந்தியன் பட்டியலில் தமிழர்கள் தனித்தமிழர்களாக எழுந்து வளர தமிழர் சார்ந்த இயக்கத் தலைவர்கள் உணர்வுடன் முன் வர வேண்டும்.

இன்னும் பத்து நாட்களில் இன்னொரு சுதந்திர நாளை கொண்ட்டாட போகிறோம் ஆனால் ஒரு தேசிய இனத்திற்கு ஊடக மொழி வளப்பம் என்பது இறங்கு நிலையில் இன்னும் இருக்கும் மிச்சங்களை தோற்று நிற்பது என்ன சுதந்திரம் என்று நமது இளையர்கள் கேற்பது நமது எண்ண உணர்வுகளை வெக்கிடச்செய்கிறது. எதிர்வரும் 19/8/15 மாலை 6 மணிக்கு சந்திப்புக்கு பிறகு பெர்னாமா மற்றும் அஸ்ட்ரோ நிர்வாகத்தை சந்திக்க தமிழர் இயக்க தலைவர்களை தேடுகிறோம். 016 6944223 என்ற எண்ணுடன் தலைவர்கள் தங்கள் பதிவுகளை செய்ய வேண்டுகிறோம்.

மன நலம் மண் உயிர்க்கு ஆக்கம் இன நலம் எலாப்புகழும் தரும்.

-பொன்.ரங்கன்