இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம் (29/9/2015)

இருதயம் மனித உறுப்புகளில் மகத்தான பங்கான பங்காற்றுகிறது. 24 மணிநேரமும் உறங்காமல் இயங்குவதால்தான் 29-heart-600நம்மால் நிம்மதியாக உறங்கி எழுந்து அன்றாட பணிகளை செய்யமுடிகிறது. நமக்கான அயராது உழைக்கும் இதயத்தின் ஆரோக்கியத்தைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை, கண்டதையும் சாப்பிடுகிறோம் தேவையற்ற பாரங்களை மனதில் ஏற்றிக்கொள்கிறோம் விளைவு இருதயம் நோய்க்கு ஆளாகிவிடுகிறது. மாரடைப்பு ஏற்பட்டு இருதயத்திற்கு இடைஞ்சல் என்றால் மட்டுமே நாம் அதைப்பற்றி கவலைப்படுகிறோம். இதயத்தைப் பாதுகாக்கவும் இதயநோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் செப்டம்பர் 29 ம் நாள் உலக இருதய தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

இதய நோயிலிருந்து தப்பிக்க வல்லுனர்கள் கூறும் வழிமுறைகள்:

*அவை, தொலைக்காட்சி பார்ப்பதை குறைக்க வேண்டும்; தொலைக்காட்சி முன் குறைந்த நேரத்தையே செலவிட வேண்டும். நாளொன்றுக்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல் தொலைக்காட்சியை பார்ப்பவர்களுக்கு 125 சதவீதம் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

*உயர் ‌புரூ‌க்டோஸ் உணவுகளை தவிருங்கள்; பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் குளி‌‌ர்பானங்களில் உள்ள உயர் ட்ரை கி‌‌‌‌‌ளிசராய்ட் அளவு மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

*உப்பு அதிகளவில் பயன்படுத்துவதால் உடலில் ரத்தக்கொதிப்பு அதிகரிக்கும். இதன் மூலம் இதய நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

*ரத்தத்தில் கொலஸ்ட்ரால், சர்க்கரை, பிபி போன்றவற்றின் அளவை சீரான அளவில் வைத்திருக்க வேண்டும்.

*காய்கறிகள் அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

*கொழுப்பு இல்லாத இறைச்சி, மீன், ஆலிவ் எண்ணெய், மக்காச்சோளம், சூரிய காந்தி எண்ணெய் வகைகள் இருதயத்துக்கு பாதுகாப்பளிக்கின்றன.

*புகையை தவிர்க்கவும் ; புகை பழக்கம் இதயத்தின் தமனிகளை பாதித்து குறுகலாக செய்கிறது. புகை இலையில் உள்ள கார்பன் மோனாக்சைடு ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை குறைக்கிறது. இதனால் ரத்த அழுத்த பிரச்சனை ஏற்படும், இவை நாளடைவில் பெரிய பாதிப்பை கொண்டுவரும். மேலும் புகை பிடிப்பவரின் அருகில் இருப்பதையும் தவி‌ர்பது அவசியம்.

*நல்ல தூக்கம்; தூக்கமின்மை என்பது மனதளவிலும் உடலளவிலும் உபாதைகளை கொண்டு வரும். மேலும் இருதய தமனிகளில் கால்சியம் அளவை அதிகரிக்க செய்யும். இதனால் ‌பிளேக், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும்.

*உடற்பயிற்சி அவசியம்; ஒவ்வொரு நாளும் ஒரு அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்து வந்தாலே இருதய நோய் வருவதிலிருந்து 60 சத‌வீத‌ம் தப்பிக்க முடியும்

*ஒரு நாளுக்கு சராசரியாக 10 ஆயிரம் அடிகள் நடக்க வேண்டும்.

*சிரிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்வது, இதய நோயிலிருந்து விடுபடுவதற்கு சிறந்த மருந்து.

நன்றி

http://www.dinamalar.com/news_detail.asp?id=1081103