-கீ. சீலதாஸ், வழக்குரைஞர், செப்டெம்பர் 29, 2015.
மலேசிய கல்வி அமைச்சர் மாட்ஸீர் காலிட், மூவினப்பள்ளிகளையும் ஒரே இடத்தில் அமைப்பதைப் பற்றி சிந்திக்கவேண்டுமெனக் கூறியுள்ளார். தேசிய ஒற்றுமைக்கு கல்வி ஒரு முக்கிய காரணமாக இருக்குமானால் அதற்கான முன்நடவடிக்கைகளையும் நிச்சயமாக மேற்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதில் எந்தச் சிக்கலும் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளலாம். ஆனால், மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் 9.8.1965 இல் பிரிந்து சென்ற போது அந்நாட்டிலுள்ள இனவாரி மொழிப்பள்ளிகளை மூடிவிட அன்றைய பிரதமர் லீ குவான் யூ எடுத்த முடிவைச் சுட்டிக்காட்டும் மாட்ஸீர் காலிட், சிங்கப்பூரில் இயங்கிய மலாய், சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளை மூடிவிடவேண்டுமென்று எடுக்கப்பட்ட முடிவானது எத்தகைய திட்டங்களோடு அவை மூடப்பட்டன என்பதை விளக்கத் தவறிவிட்டார்.
அதோடு, மேலோட்டமாக மொழிவழிப் பள்ளிக்கூடங்களை மூடிவிட வேண்டும் என்று கூறும் போது, இந்த நாட்டில் அது சீன மற்றும் தமிழ்ப்பள்ளிக்கூடங்களை மட்டுமே குறியாகக் கொண்டிருக்கிறது என்ற சந்தேகத்தைத் தவிர்க்க முடியவில்லை. ஏனெனில், மலாய் தேசிய மொழி. அது நிச்சயமாகத் தழைத்தோங்க வேண்டும். அதன் வளர்ச்சிக்கு எந்த ஊறும் நேராதவாறு பார்த்துக் கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும்.
சிங்கப்பூரில் நான்கு அதிகாரத்துவ மொழிகள்
சிங்கப்பூர் கல்வி முறையைப் போற்றி அதைப் பின்பற்ற வேண்டும் என்பவர்கள் அதன் உண்மையான, பலனளிக்கும் தன்மையையும் தரத்தையும் உணர்ந்து அதை வெளிப்படுத்தத் தயங்கக்கூடாது. சிங்கப்பூரை பார் என்று சொன்னால் மட்டும் போதாது. அங்கு எது எப்படி செய்யப்படுகிறது என்பதை மூடிமறைக்காமல் கூற வேண்டும்.
சிங்கப்பூரில் நான்கு மொழிகள் அதிகாரத்துவ மொழிகளாகும். மலாய் தேசிய மொழியாகும். இந்த நான்கு மொழிகளும் அவற்றின் தகுதியை நிலைநாட்டிக்கொள்ள வேண்டுமாயின் அதற்கு வலிமையான கல்வித் திட்டம் தேவை. இந்தக் கல்வித் திட்டத்தின் வழி நான்கு மொழிகளுக்கும் பாதுகாப்பு இருக்கும். இந்தப் பாதுகாப்பை எவ்வாறு வழங்குவது? இங்குதான் சிங்கப்பூர் அரசின் தூரநோக்குப் பார்வையை உணர வேண்டும். மலாய்மொழியும்; ஆங்கிலமும் கட்டாயப்பாடங்கள். அவ்வாறே தாய்மொழியும் கட்டாயமாக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் வழி தமிழ்ப் பெற்றோரின் பிள்ளைகள் அரசினர் பள்ளியில் கற்க தொடங்கும் போது அங்கே தமிழ் கட்டாயமாகக் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
சீனம், ஆங்கிலம் மற்றும் மலாய் போன்ற மொழிகளுக்கும் இதே நிலைதான்.
இதற்கு நல்ல ஆசிரியர்கள் தேவைப்பட்டது.. மலேசிய மாநில தமிழாசிரியர்கள் சிங்கப்பூருக்கு சென்றது ஆச்சரியமல்லவே!. புகழ்பெற்ற பாரதிதாசன் தமிழ்ப்பள்ளி, உமறுப் புலவர் உயர்நிலைப்பள்ளி இந்த சிங்கப்பூர் கல்வித் திட்டத்திற்கு வழிவிட்டன.
பள்ளிகளில் சமயப் போதனை இல்லை
இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தாற்போல் சிங்கப்பூர் பள்ளிக்கூடங்களில் சமயப் போதனைத் தவிர்க்கப்பட்டது. அதோடு தேசிய ஒருமைப்பாடு மற்றும் தேசிய சேவை போன்றவற்றின் மகத்துவம் கற்பிக்கப்பட்டது.
சிங்கப்பூரின் கல்வித் திட்டத்தைப் பற்றி பேசுவோர் அது நல்கும் பல நல்ல அம்சங்களை ஏற்றுக் கொள்ளதயாராக இருக்கிறார்களா என்பதை வெளிப்படுத்தவேண்டும். அதைவிடுத்து, சிங்கப்பூர் மலாய், சீன, தமிழ்பள்ளிகளை மூடிவிட்டதால் தேசிய ஒற்றுமையைக் கண்டது என்றால், இந்த நாட்டில் உள்ள தாய்மொழிப்பள்ளிகளை அழிக்க வகுக்கப்படும் திட்டங்களில் ஒன்று சர்க்கரைப்பூசிய செய்தியாக வருவதில் உள்ளே கசப்பு இருப்பதை மறந்துவிட முடியாது.
கரைந்து விடுகிற வாக்குறுதிகள்
இந்தக் காலக்கட்டத்தில், நம்மை துன்புறுத்துகின்ற ஒரு சூழலையும் கவனத்தில் கொள்வது பொருந்தும்.
அம்னோவின் தலைமைத்துவத்தால் கொடுக்கப்படும் வாக்குறுதிகள் கால மாற்றத்தால், தலைமைத்துவ மாற்றத்தால் கரைந்துவிடுகிற தரத்தைக் கொண்டது என்பது நாம் அறிந்த உண்மையாகும்.
அம்னோ, நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு செயல்படுகிறதா அல்லது இன, சமய கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் சிரத்தைக் கொண்டிருக்கிறதா என்பதை தெளிவுப்படுத்தும் பொறுப்பு அதற்கு உண்டு.
இங்கே மற்றுமொரு உண்மையை கருத்தில் கொள்ள வேண்டும். சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும், கடந்த அறுபது ஆண்டுகளாக, சீன, இந்திய சமூகங்கள் அம்னோ அளித்த வாக்குறுதிகளை நம்பி செயல்பட்டன.
மலாயா, மலேசிய சமுதாயத்தோடு அவர்கள் ஒன்றுபட்டு விட்டனர். இதை ஒரு சில அம்னோ தலைவர்களும், அவர்களை ஆதரிப்பவர்களும் உணராதது ஒருபுறமிருக்க, உதட்டளவில் இந்தச் சமூகங்களின் தியாகங்களை அங்கீகரித்து விட்டு அடுத்தாற்போல் அவர்களை ஒதுக்கும், அவமதிக்கும் பழக்கத்தை நிறுத்திக்கொண்டு விட்டார்களா என்பது தெளிவுப்படுத்தப்பட வேண்டும்.
“சிங்கப்பூரை பார் என்று சொன்னால் மட்டும் போதாது”. அவர்கள் நான்கு மொழிகளையும் அரசாங்க அதிகாரத்துவ மொழிகளாக்கி அவற்றிக்கு சம அந்தஸ்த்து கொடுத்து வளர்த்தார்கள். அதனால் அங்கே அச்செயலை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். இங்கே அப்படியா?. அண்ணன் எப்ப போவான் திண்ணை எப்ப கிடைக்கும் என்ற தோரணையில் அல்லவா இந்த அரைகுறை மந்திரி அரசல் புரசலாகப் பேசுகின்றார்!. இவனையெல்லாம் ஒரு கல்வி அமைச்சராகப் போட்டு இந்நாட்டில் இருக்கும் கல்வி நிலையை மேலும் சீர்குலைக்கப் பார்கின்றார்.
“இந்த நாட்டில் உள்ள தாய்மொழிப்பள்ளிகளை அழிக்க வகுக்கப்படும் திட்டங்களில் ஒன்று சர்க்கரைப்பூசிய செய்தியாக வருவதில் உள்ளே கசப்பு இருப்பதை மறந்துவிட முடியாது”
இதுதான் கசப்பான மருந்தை குழந்தைகளுக்கு இனிப்பான குப்பியில் அடைத்து கொடுப்பது என்பது. இந்த மந்திரி நம்மையும் ‘பச்சைப் புள்ளைங்கன்னு’ நினைச்சிட்டாரு டோய்! நாங்க பாலும் குடிப்போம் கண்ணுக்குத் தெரியாமல் கள்ளையும் குடிக்கும் பெரியவர்கள் என்பது இந்த மந்திரிக்குத் தெரியாமல் போச்சே!
ஊழல் நம்பிக்கை நாயகனின் ‘1 Malaysia’ எப்படி கரைந்துப் போனதோ அப்படியே தே.மு. அரசாங்கம் கடந்த 57 வருடங்களாக கொடுத்த வாக்கு உறுதிகளும் தேர்தல் முடிந்த பின்பு மறைந்துப் போயின.
“உதட்டளவில் இந்தச் சமூகங்களின் தியாகங்களை அங்கீகரித்து விட்டு அடுத்தாற்போல் அவர்களை ஒதுக்கும், அவமதிக்கும் பழக்கத்தை நிறுத்திக்கொண்டு விட்டார்களா என்பது தெளிவுப்படுத்தப்பட வேண்டும்”.
ஐயா, எத்துனை ம.இ.க. – வின் பொதுக் கூட்டங்களுக்கு வந்த, இந்நாள் மற்றும் முந்நாள் பிரதமர்கள் ‘இண்டியன்கள் இந்நாட்டில் டாக்டராகவும், லாயராகவும் பெரும்பான்மையாக இருப்பதை பார்த்து நான் பெருமை படுகின்றேன்” என்று சொன்ன உடனே மேடைக்குக் கீழே அமர்ந்திருக்கும் விசிலடிச்சான் குஞ்சுகள் ஆராவாரித்து கை தட்டியது கண் கொள்ளாத காட்சி ஐயா. என்னமோ இவன் அப்பன் வீட்டு பணத்தில் நம்ம பிள்ளைகள் இனாமாக படித்து விட்டு வந்து டாக்டராகவும், லாயராகவும் வேலை செய்கின்றார்களாக்கும்? நம்ம பெற்றோர் அவர்தம் பிள்ளைகளை மேல்நிலை படிப்பிற்கு படிக்க வைக்கும் கஷ்டத்தில் ஒரு 10% சதவீதமாவதும் இவன் இனம் அனுபவிக்குமா?. கீழிருந்து மேல் வரைக்கும் எல்லாம் இனாம். போதுமடா சாமி இவர்களின் ஆட்சியும் தே.மு. – யின் ஆட்சியும். கதை கந்தாலாயிடுச்சி.
இந்த நாட்டில் இனங்களுக்கிடையே ஒற்றுமை குறைந்ததற்குக் காரணம் தாய்மொழிப் பள்ளிகள்தான் என்று கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. இதற்கான ஆய்வு ஏதும் இல்லை. இது நல்புத்திக்கு ஒவ்வாத ஒரு கூற்று!!!
இந்நாட்டில் மலாய்க்காரர்கள் விகிதாச்சாரத்தில் கூடுதலாக இருப்பதால் அவர்களுக்கு உரிமைகள் அதிகமாக கொடுக்கப்படுவது கூட தவறில்லை.
ஆனால் மற்ற இனத்தவர்கள்!!!!! மதிக்கப்படுகிறார்களா …இல்லை.
கல்வி வாய்ப்பு சமமா …இல்லை. தேசியப் பள்ளியில் மற்ற இன மாணவர்கள் மதிக்கப்படுகிறார்களா…இல்லை. உயர்கல்வி வாய்ப்பு திருப்திகரமா….
இல்லை. அரசு வேலை வாய்ப்பு….திருப்திகரமா….. இல்லை.
விளையாட்டுத் துறைகளிலாவது வாய்ப்பு உண்டா….இல்லை.
அப்புறம் எங்கிருந்து புடுங்கும் ஒற்றுமை!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கட்டுரை ஆசிரியரின் கூற்றுப் படி அங்கு பள்ளிகளில் சமயப் பாடங்கள் போதிப்பது இல்லை என்பது தெரிகிறது. ஆனால் இங்கு பள்ளிகளில் சமயப் படங்கள் போதிப்பதோடு பள்ளி வளாகத்தில் சமய மடங்களையும் கட்டி வைத்துக் கொண்டு தொலுகைக்கே நேரம் சரியாக இருக்கிறது.நான் படித்த காலத்தில் பள்ளிகளில் படிப்புதான் முக்கியமாக இருந்தது பள்ளிகளில் சமய மடங்களும் இல்லை. சமயப் பள்ளிகள் இருந்தும் இப்படியொரு அவல நிலையில் பள்ளிகள் நடக்கின்றன.
மலேசியர்களை இனவாரியகவும் மதவாரியாகவும் பிரிப்பது BUMIPUTRA என்ற ஏலெழுத்து சனியன் …. ஒரு மொழி எந்த மனித ஜென்மத்தையும் பிரித்ததாக வரலாறு இன்னும் உருவாக்கப்படவில்லை.
பல இனங்கள் வாழும் ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட இனத்துக்கு மட்டும் சிறப்புரிமை,சிறப்புச்சலுகை என்றால் அப்பொழுதே அங்கு இன ஒற்றுமைக்கு சவக் குழி தோண்டப்பட்டுவிட்டது என்றுதான் அர்த்தம்.தாய் மொழிப் பள்ளிக்கும் இன ஒற்றுமைக்கும் சம்பந்தமே இல்லை.இந்த சிறப்புச் சலுகைகள்தான் மலாய்காரர்களை மற்ற இன மொழிகளுக்கு எதிராக காழ்ப்புணர்சியை தூண்ட உதவுகிறது.எல்லா இனங்களுக்கும் சம உரிமை அந்தஸ்து சட்டப்பூர்வமாக கொடுக்கப்பட்டால்தான் மலேசியா போன்ற பல்லினம் கொண்ட நாடு உருப்படும்.
ஆங்கலம் போதனா மொழியாக வேண்டும். தாய் மொழி கட்டாய தேர்வாக இருக்க வேண்டும். தாய் மொழி தேறினால் மட்டுமே பல்கலை கழகத்தில் அனுமதிக்கப்பட வேண்டும். செயவான்களா?
இன்றைய பட்ஜெட்டில் கொடுக்கப் பட்டச் செய்தி. 72,000 பூமிபுத்ரா மாணவர்கள் மாரா கல்வி உதவித் தொகையுடன் மேற்கல்வி பயின்று வருகின்றனர்! அரசாங்கப் பணமா? மக்கள் பணமா? இன்னும் மாநில மத்திய அரசாங்கங்கள், அரசு சார்பான நிறுவனங்கள், மாநில அறவாரியங்கள் என்று எவ்வளவு பூமிபுத்ரா மாணவர்கள் கல்வி உதவித் தொகையுடன் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் படித்து வருகின்றனர்? இது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்! நம் மாணவர்களின் நிலை என்ன? இதை காணும் நம் உயர் கல்வி மாணவர்கள் யாருக்காவது இனப் பற்று வருமா? வராதா? எங்கே இருக்கின்றது பிரச்சனை? தாய்மொழிப் பள்ளிகளிலா?