மலேசியத் தமிழர் வாழ்வில் மகிழ்ச்சியான தருணம் அடுத்தாண்டு மலரவிருக்கின்றது. அம்மகிழ்ச்சியைக் கொண்டாடும் நிலையில் நம்தமிழர் வாழ்வு அமைந்துள்ளதா என்றாராயும் முன்னர், இம்மகிழ்ச்சி நிச்சயம் கொண்டாடப்பட வேண்டிய மரபாக அமைய வேண்டுமென்பதே நமது அவா. 2016-ஆம் ஆண்டு, மலேசியாவின் தமிழ்க்கல்வி 200 ஆண்டை அடைகிறது. பல்வேறு இன்னல்களுக்கும் இடர்களுக்குமிடையே தமிழ்க்கல்வி வளர்ச்சியானது 200 ஆண்டுகளை அடைவது போற்றற்குரியதாகும். இவ்வளர்ச்சிப் பாதைக்குப் சிலர் உரமாகியும் பலர் உரமிட்டும் உள்ளனர் என்பதை யாரும் மறந்துவிட முடியாது; மறுத்துவிடவும் முடியாது!
மலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்க்கல்விக் கொண்டாட்டத்தின் முன்னிட்டுப் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தமிழ் அறவாரியம் மேற்கொண்டு வருகிறது. தொன்மையைத் தொடர வேண்டுமென்பதாலும் வரலாற்றைப் புதுப்பிக்க விழையும் நோக்கிலும் மலேசியத் தமிழ் அறவாரியம், ‘மலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்க்கல்வி (1816-2016)’ எனும் கருப்பொருளில் தமிழ்க்கல்வி மாநாடு ஒன்றனை ஏற்பாடு செய்துள்ளது.
நாள் : 31 அக்டோபர் 2015
காலம் : காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
இடம் : பெர்டான சிச்வா அரங்கம், மலாயாப் பல்கலைக்கழகம், கோலாலம்பூர்
ஒருநாள் கருத்தரங்காய் நடக்கவிருக்கின்ற இம்மாநாடு மூன்று முக்கிய நோக்கங்களை அடிப்படையாய்க் கொண்டு மலரவிருக்கின்றது. அவையாவன:
- தமிழ்க்கல்வியை தொடர்ந்து நிலைபெறச் செய்தல்.
- தமிழ்க்கல்வியைச் சமூகப்படுத்துதல்.
- தமிழ்ப்பள்ளிகள் 80% தேர்ச்சியடைவதையும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 100% கல்வியறிவைப் பெறுவதையும் உறுதிசெய்தல்.
பெருமையைக் கொண்டாடும் இனமாக மட்டுமில்லாமல், தொடர்நடவடிக்கைகளை மேற்கொண்டும் காலத்திற்கேற்ற மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டும் உருமாற்றங்களை உருவாக்கிக்கொண்டும் வாழ்வதே நம்மினத்தின் இற்றைத் தேவை! முயற்சி ஆங்காங்கே காணப்பட்டாலும், தொடர்முயற்சி இன்றியமையாதது என்பதை நாம் அறிய வேண்டும். அவ்வகையில் காலத்திற்கேற்ற தேவையாய் மலர்ந்திருப்பது இக்கொண்டாட்டமாகும்.
ஆதலால், தமிழ்ப்பள்ளியையும் தமிழ்க்கல்வியையும் நிலைநிறுத்த உங்களாலான எண்ணங்களை, திட்டங்களை, திட்டவரைவுகளை, தொடர்நடவடிக்கைகளைத் தமிழ் அறவாரியத்தொடு பகிர்ந்துகொள்ள அரிய வாய்ப்பொன்றனை ஏற்படுத்தித் தருகிறோம். தமிழ் ஆர்வலர்கள், பற்றாளர்கள் அனைவரும் இப்பொன்னான முயற்சி வெற்றிபெற எங்களொடு தோள் கொடுப்பீர்களெனப் பெரிதும் நம்புகிறோம். மேல்விபரங்களுக்குத் தமிழ் அறவாரியத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.
தொடர்புக்கு: 03-26926533
இன்தமிழை இணைந்து வளர்ப்போம்!
தமிழோடு உயர்வோம்!
நிகழ்சிக்கு வாழ்துக்கள் ! பெருமை பட வேண்டியே நிகழ்வு …… நான்காவதாக ஒவ்வரு தமிழனும் தன் பிள்ளைகளை தமிழ் பள்ளியில் சேர்ப்பதை உறுதி செய்தலையும் சேர்த்து கொண்டால் இன்னும் சிரபாகே இருக்கும்
தமிழ் அறவாரியத்தின் முயற்சியை வரவேற்கின்றோம். கல்வி துணை அமைச்சர் கமலநாதனும் இது சம்பந்தமாக இன்று ஒரு கலந்துரையாடலை ஆசிரியர் வர்க்கத்துடன் நடத்துவதாக அறிகின்றோம். அரசாங்கமும் தமிழ் அறவாரியமும் ஒன்றிணைந்து ஆக்ககரமான செயலைச் செய்வதை வரவேற்கின்றேன்.
இம்மாநாட்டை முன்னிட்டு பேசப் படும் விடயங்களில் கீழ் குறித்தவற்றையும் கவனத்தில் கொள்ளுங்கள்:-
(1) தமிழ் வளர்ச்சியைப் பற்றி நாம் பேசும்பொழுது இதுகாறும் நம் கவனம் பெரும்பாலும் தமிழ் பள்ளிக் கூடங்கள் மீதும், தமிழ் போதனை மீதும்தான் அதிகமாக இருந்து வந்துள்ளது. இது ஒரு புறம் இருக்க, தமிழ் மொழியை தாய் மொழியாகக் கொண்டவர்கள் தமிழ் பேசுவதால் தன் கௌரவமோ அல்லது பிள்ளைகளின் கௌரவமோ தாழ்ந்து விடும் என்று என்னுகின்றார்களே அதனை நீக்க சில செயல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். “தமிழ் பள்ளியே எங்கள் தேர்வு” என்று பிரதமர் அலுவலகத்தின் கீழ் இயங்கி வரும் தமிழ் பள்ளி நடவடிக்கைக் குழு எடுத்த பிரச்சாரத்தைப் போன்று தகுந்த யுக்திகளுடன் செயல்பட்டால் முதலில் நம் மக்களின் மனதில் தமிழ் மொழியைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையை நீக்கி மறு மலர்ச்சியை ஏற்படுத்தலாம்.
2) தமிழ் மொழியில் இளங்கலைப் பட்டம் பெற இந்நாட்டில் நமக்கு இருக்கும் ஒரே இடம் மலாயா பல்கலைகழகம். இங்கே தமிழ் மொழி என்பது முழு நேர பாடத் திட்டமாக இருந்து வருகின்றது. இந்நாட்டில் தமிழ் மொழி ஆர்வலர்கள் பலர் வயது தாண்டியவர்கள் என்பதால் இவர்கள் பல்கலைகழகத்தில் சேர்ந்து படித்து தத்தம் மொழி ஆற்றலை வளர்த்துக் கொள்ள முடியாத நிலை உள்ளது. இதற்கு மருந்தாக மலாயா பல்கலைகழகம், பல்கலைகழக பதிவிற்கு தகுதி பெற்றோருக்கு ‘Pendidikan Jarak Jauh’ (PJJ) என்னும் முறையில் தமிழ் மொழி இளங்கலைப் பட்டத்திற்கு தமிழ் மொழி போதனா முறையை மேற்கொள்ள வழி வகுக்கலாம். இதற்கு வாய்ப்பு அதிகமாகவே உள்ளது காரணம் பல்கலைகழகங்களுக்குக் கொடுக்கப் படும் அரசாங்கத்தின் மானியம் தற்சமயம் குறைக்கப் பட்டுள்ளதால் மலாயா பல்கலைகழகம் தனது சுய வருமானத்தைப் பெருக்க பல வழி வகைகளைத் தேடிக் கொண்டிருக்கின்றது. இந்நேரத்தில் வருமானத்தைப் பெருக்கும் இதைப் போன்ற பாட திட்டங்களுக்கு அப்பல்கலைகழகம் முன் வரும் என்று நம்பலாம். இதை அரசியல் ரீதியாக இல்லாமல் மொழி ரீதியாக தமிழ் அறவாரியம் அங்குள்ள நம் பேராசிரியர்களின் வழி கொண்டு செல்வோமானால் நல்வழி பிறக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதே நேரத்தில் மாணவர் பதிவு அருகி வரும் இந்திய ஆய்வியல் பிரிவுத் துறைக்கு புத்துயிர் ஊட்டியதாகவும் இருக்கும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த பலனும் கிடைக்கும்.
3) நாம் எவ்வளவுதான் தமிழ் மொழி கற்க, கற்பிக்க மேலும் தொடர்ந்து தமிழ் மொழி வளத்தைப் பெருக்க மேல் நிலைப் பள்ளிகளில் முயற்சி கொண்டாலும் தரமான தமிழ் மொழி நூல்கள் கிடைக்க வில்லையானால் தமிழ் மொழியை எப்படி வளர்ப்பது?. 1960 – 2000 -ம் ஆண்டுகள் வரை நமக்கு தமிழ் நாட்டில் இருந்து சிறந்த அறிஞர்கள் எழுத்தார்கள் எழுதிய நூல்கள் கிடைத்ததுபோல் இன்று நமக்கு சுலபமாக கிடைப்பதில்லை. தமிழ் மொழி நூல்கள் விற்கும் நம்முடைய புத்தக கடைகளும் அரிதாகிக் கொண்டே வருகின்றது. இந்நிலையில் ஒரு மாற்றம் நமக்கு வேண்டும். தமிழ் அறவாரியம் முன் நின்று முதலில் தமிழ் மொழி நூல்கள் கிடைக்க ஒவ்வொரு மாநில தலைநகர்களிலும் தமிழ் புத்தக விற்பனை மையங்களை நிறுவ வழி காண வேண்டும். தற்பொழுது கோலாலம்பூரில் இருக்கும் புத்தக வெளியீட்டாளர், விற்பனையாளர்களைக் கொண்டே இதனைத் தொடங்கலாம். செய்வீர்களா? பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் சிந்தனைக்கு நாளை சந்திப்போம், சிந்திப்போம்.
தமிழ் பள்ளிகள் ,தமிழ் கல்வி என்று வாய் கிலிய பேசுகிறோம் , நமது நாடில் தமிழின் பயன் பாடு எந்த அளவில் இருக்கிறது
.சீனன் கடை திறந்தால் அவன் கடையின் பெயரை சீனத்தில் எழுதுகிறான் , மடத் தமிழன் கடை திறந்தால் ஆங்கிலத்தில் மட்டும் எழுதுகிறான் , லிடேல் இந்திய என்று பெயர் வைத்தாள் மட்டும் போதாது , தமிழன் தமிழனாக வாழவேண்டும் . samy enai என்று ஏன் ஆங்கிலத்தில் எழுதி இருகிறது
என்று கேடால் முதலாளியை கேள் என்கிறான் கடை பையன் , முதலாளி ம இ க வில்
bc அரசியல் தலைவனின் கடையிலேயே இந்த அலங்கோலம்
,தமிழனும் உருப்பட மாடான், தமிழும் உருப்படாது !!!!!!!!!!!!!!!!!!!!!!
வாழ்த்துக்கள் .
இப்படி ஒரு நல்ல செய்திப் பகுதியில் “தமிழனும் உருப்பட மாடான், தமிழும் உருப்படாது” என்று எழுதினால், எழுதுவது தமிழனா? அல்லது பிறரா?. தமிழ் மொழி வளர்ச்சியில் பிரச்சனைகள், குறைகள், குற்றங்கள் எதிர்மறை சித்தாட்டம் எல்லாம் கால காலமாக இருக்கு என்பது எல்லோருக்கும் தெரியும். அதனை சொல்லிக் கொண்டு இன்னும் இப்படி கையாலாகத் தமிழனாக எவ்வளவு நாளைக்குத்தான் வாழப் போகின்றோம்? பிரச்னைக்கு வழி சொல்லுங்கள் என்றால், பிரச்சனையையே, பிரச்சனையாக்கிக் கொண்டிருந்தால் பிரச்சனை எப்பொழுது தீர்வது? தமிழ் மொழி மேலோங்குவதர்க்கு வழியை சொல்லுங்கன்னா “தமிழனும் உருப்பட மாடான், தமிழும் உருப்படாது” என்று கூறினால் இவர் தமிழுக்கும் தமிழருக்கும் எதிரியாக நின்று சாபம் விடுகின்றாரோ என்று என்ன வேண்டியுள்ளது.
தாய்மொழி கல்வி பற்றியும், அவரவர் சொந்த மத வழிபட்டுச் சுதந்திரம் பற்றியும் அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இனி எவனாவது வழிபாடு பற்றியோ, தாய்மொழி கல்வி பற்றியோ கேள்வி எழுப்பினால் அவனை ‘பொட்டா’ சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று ஒரு தீர்மானம் போடுங்கப்பா…இல்லேனா இன்னும் 20 வருஷத்துக்கு அப்புறம் இங்கே ‘டமில்’ இருக்கும் ஆனால் தமிழும் தமிழ்ப்பள்ளியும் இருக்கா….புரியுதோ மக்கா…?
தமிழ் மொழி மேலோங்க இன்றைக்கு மேலும் சில ஆலோசனைகள்:-
1) நாம் தமிழ் மொழி கற்றலுக்கு முக்கியத்துவம் கொடுத்து நம் இளைய தலைமுறையினரிடையே தமிழ் மொழி பற்றுதலையும் பயன்பாட்டையும் வளர்க்கப் பாடு படுகின்றோம். ஆனால் தமிழ் மொழி கற்பித்தலுக்குத் தமிழ் ஆசிரியர்களின் பங்களிப்பு என்னவென்பதை நாம் அறியவில்லை. பெரும்பாலுமான தமிழ் ஆசிரியர்கள் தமிழ் மொழி பற்றும், தமிழ் போதனா முறை பயிற்சியும் பெற்றுப் பள்ளிகளில் போதித்து வருகின்றனர் என்பதை நாம் அறிவோம். இதில் ஒரு சிறிய பகுதியினர் மாத சம்பளம் கிடைத்தால் போதும், கற்பிற்றலைப் பொறுத்த வரையில் உணர்ச்சியற்ற இயந்திரமாக செயல்படுவதையும் நாம் அறிவோம். ஒரு சில தலைமை ஆசிரியர்களிடம் உரையாடும் பொழுது, சில ஆசிரியர்கள் மறு நாள் நடத்தும் பாடத்திற்கு தேவையானவற்றை முதல் நாளே தயார் செய்து கொண்டு வகுப்புக்கு வரும் பழக்கம் இல்லை என்று கூறுகின்றார்கள். இது இளைய தமிழ் பள்ளி ஆசிரியர்களிடமும், நீண்ட கால அனுபவம் பெற்ற ஆசிரியர்களிடமும் ஒருங்கே உள்ளது என்பதை நானும் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களில் இருந்த பொழுது கண்டு வந்துள்ளேன். இதை மறுக்கப் பல தமிழ் ஆசிரியர்கள் முன் வரலாம் காரணம் இவர்கள் மேற்கூறிய குறைக்கு மாறுபட்டவர்களாக இருப்பார்கள். குறையுள்ள தமிழ் ஆசிரியர்களின் தரம் மேம்படவில்லையானால் யாரை குறை சொல்வது? இது அதற்கும் மேலாக இருக்கும் ஆசிரியர் பயிற்சி கல்லூரி விரவுரையாளர்களை நோக்கிப் போக வேண்டும். அவர்கள் எப்படி தமிழ் ஆசிரியர்களை தயார் படுத்துகின்றார்கள் என்பதையும், அதை மேலும் மேம்படுத்த என்னென்ன வழிகள் உள்ளன என்பதை பற்றியும் தமிழ் மொழி போதனா அறிஞர்கள், அனுபவசாலிகள் இந்த மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்பிக்கும் பொழுது எடுத்துச் சொல்ல முன்வரவேண்டும். மேலும் கல்வி இலாகாவில் தமிழ் பள்ளி கண்கானிப்பாளர்களாக இருப்போர் ஒரு நல்ல தலைவராக இருந்து தமிழ் பள்ளி ஆசிரியர்களை வழி நடத்த முயற்சி செய்ய வேண்டும். இவர்களுக்கு கொடுக்கப் படும் நிருவாக சம்பந்தப் பட்ட வேலைகளைப் பூர்த்தி செய்ய மட்டுமே வேலை நேரம் போதுமானதாக இருந்தால் தமிழ் பள்ளி ஆசிரியர்களை கண்காணிக்க எப்படி போதுமான நேரம் இருக்கும்? இதனை கல்வித் துணை அமைச்சர் கமலநாதன் கவனிக்கட்டும்.
2) தமிழ் படி, தமிழ் படி என்று சொல்லி ஊக்கம் கொடுத்தால் மட்டும் போதாது! SPM தேர்வில் அடுத்த ஆண்டு தமிழ் இலக்கியம் பரீட்சையில் உட்கார தமிழ் இலக்கிய பாடப் புத்தகங்களை தருவித்துக் கொடுக்காமல் தமிழ் இலக்கியம் படி என்றால் என்ன பிரயோசனம்? புதிய தமிழ் இலக்கிய பாட புத்தகங்களை தேர்ந்தெடுக்கும் முன் அப்புத்தகங்கள் மாணவர்களின் பயனீட்டிர்க்கு உள்ளதா அல்லது அதனை போதனை வகுப்புகளுக்கு தக்க நேரத்தில் விநியோகிக்க முடியுமா என்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் காணாமால் SPM இலக்கிய பாட நூல்களை மாற்ற ஆணையிட்ட அறிவாளி யார்? இதெல்லாம் நானே இராஜா, நானே மந்திரி என்று திட்டங்களைப் போடுவோர் நடந்துக் கொள்ளும் முறையால் வரும் பிரச்சனை! இன்று வரை அடுத்த வருட SPM பாட கவிதை நூல் முழுமையாக வெளிவராமல் இருப்பதை நான் அறிவேன். இதற்கு பொறுப்பேற்றவர்கள் யார்? மலாயா பல்கலைகழக ஆய்வியல் துறையா? அவர்களைக் கேட்டால் இந்நூல்களை தயார் செய்து அச்சடித்து மாணவர்களுக்கு விநியோகம் செய்ய எங்களிடம் மானியம் வந்து சேரவில்லை என்று சொல்வார்கள் அல்லது இன்னும் தயாரித்துக் கொண்டிருக்கின்றோம் என்று சொல்வார்கள். நீங்கள் நூல்களைத் தயாரித்து மாணவர்களுக்கு விநியோகம் செய்வதற்குள் கோழி கூவி விடிந்து விடும். இப்படி இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் மொழி மற்றும் இலக்கியம் போதிப்பதில் ஏனோ தானோ என்று இருந்தால் நாளை மலாயா பல்கலைகழகத்தில் தமிழ் படிக்க எத்துனை பேரை தேர்தெடுக்க முடியும் சொல்லுங்கள்? அங்கே என்னடான்னா தமிழ் மொழி படிக்க பல்கலைகழக பதிவு புள்ளி தரத்தை 3.0 – க்கும் சற்றே குறைக்க சொன்னாலும் முடியாது என்று மலாயா பல்கலைகழக நிருவாகத் துறையினர் சொல்லி விட்டனர் என்று பேராசியர்கள் புலம்புகின்றார்கள். அப்புறம் எப்படி நாம் தமிழ் மொழி வளர்ச்சியை கீழிருந்து மேல் வரை மேம்படுத்துவது? இது ஒரு நபரோ அல்லது ஒரு தரப்பினரோ செய்து முடிக்கும் காரியமல்ல. பிரச்னையை சொல்லி விட்டோம். இனி தமிழ் அறவாரியம் இதனை கருத்தில் கொண்டு அனைத்து தரப்பினரையும் சந்தித்து இந்நாட்டில் தமிழ் மொழி கீழிருந்து மேல்வரை மேம்பாட்டிற்கு வழி காணுவது தங்கள் கையில். நாங்களே தமிழ் மொழி காப்பாளன் என்று சொல்லி மார் தட்டும் ம.இ.க. மந்திகளிடம் தயவு செய்து இதனை விட்டு விடாதீர்கள். அப்புறம் அவர்கள் ‘panas macam tahi ayam’ போன்றுதான் நடந்துக் கொள்வார்கள். போதும் நாம் அரசியல்வாதிகளின் பொய் பேச்சை நம்பி ஏமாந்தது. நம் கையே நமக்கு உதவி என்று தமிழ் அறவாரியம் தமிழை முன்னேற்ற வழி கோலுவதே எதிர்காலத்தில் நற்பலனை கொண்டு வரும். மீண்டும் எங்களை நம்ப வைத்து மோசம் செய்து விடாதீர்கள்!. மீண்டும் நாளை சந்திப்போம், சிந்திப்போம்.
மணியம் சார், நீங்கள் சொல்லுகின்ற குற்றச்சாட்டுக்கள் கலையப்பட வேண்டும் என்பது தான் இந்த மாநாட்டின் நோக்கம். குறைகள் சுட்டிக் காட்டப்பட வேண்டும். அப்போது தான் குறைகள் எப்படிக் கலையப்பட வேண்டும் என்பது பற்றி ஒரு முடிவுக்கு வர முடியும். கடைசியாகச் சொன்னீர்கள் அல்லவா “உருப்பட மாட்டான், உருப்படாது” அந்த அவநம்பிக்கை வேண்டாம். நாம் 200 ஆண்டுகளைக் கடந்துவந்து விட்டோம்.இந்த உருப்படமாட்டான், உருப்படாது என்பது நமக்குப் புதிது அல்ல. ஆனாலும் வளர்ந்து விட்டோம். இனிமேல் நாம் நேர்மறையாகவே சிந்திப்போம். வாழ்க! வளர்க!
அமீனோ கட்சிக்காரன் 2.6 பில்லியன் எப்படி சம்பாதிப்பது என்று யோசிகின்றான். பல கோடி வெள்ளி மதிப்பிலான குத்தகைகளை எப்படி பெறுவது என்று யோசித்து பணம் சம்பாதிகின்றான். நம்மவர்களோ இன்னமும் சில்லைரத்தனமான சுடுகாட்டுப் பிரச்சனையும், கோவில் பிரச்சனையும் மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றோம். ‘Micro’ பிரச்சனை நம் கண்ணுக்கு பூதமாக தெரிகின்றது. ‘Macro’ பிரச்சனைதான் அடிப்படை பிரச்சனை என்பது ஏனோ நம் கண்ணுக்குத் தெரிய மாட்டேன்கிறது. ‘samy enai’ என்று சீனன் எழுதி வியாபாரம் செய்கின்ற எண்ணெய், பயன்படுத்தி மீண்டும் பதப் படுத்தப் பட்ட எண்ணெய் (‘adulterated oil’). இதுதான் ‘சாமி எண்ணெய்’ – யா? கூர் கெட்டவன் சொல்லுகின்றான் என்றால் நம் மதி எங்கே போனது? யார் அந்த எண்ணையை வாங்கச் சொன்னது. இப்படிதான் நம்மவர்கள் தமிழ் மொழி என்று வந்து விட்டால் சில்லரைப் பிரச்சனைகளைப் பற்றிதான் பேசுவார்களே ஒழிய பிரச்சனையைக் களைய வேண்டி பெரிய அடிப்படை பிரச்சனைகளை பார்க்க மாட்டார்கள். காலம் மாறுது நம்ம கருத்தும் மாற வேண்டும்.
நான் இங்கு குறிப்பிட விரும்பும் கருத்தை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் , தமிழ் இனி மெல்ல சாகும் என்று பாரதி சொன்னான் .நமக்கு கோபம் வர வில்லை அவன் மகா கவி, 1980 கலில் தலைநகரில் பெயர் பலகையில் தமிழில் எழுதுங்கள் என்று சுற்றி திரிந்தவன் நான் , தலைநகர் கண்ணனை கேளுங்கள் தலைநகர் மணியம் யார் என்று .இந்தியன் கடை க்கு ( ந ) விற்கு பொட்டு வைக்காததால் இநதியன் என்று இருந்ததை அக்கடையின் உரிமையாளரிடம் எடுத்து கூரி திருத்தினோம். ஆயுள் காப்புறுதி நிறுவனங்களில் , வங்கிகளிலும் ,தமிழ் வேண்டும் என்று அதிகாரிகளை சந்திக்க நடையாய் நடந்தோம் , நான் ஆறு ஆண்டுகள் தமிழ் படித்தவன் .
தமிழர் கடைகளில் தமிழ் இல்லையே என்பதுதான் என் கோபம் ஆதங்கம் . ஆறு ஆண்டுகள் தமிழ் படிக்கிறோம் ,தமிழின் பயன்பாடு கேள்விகுறிதான். தமிழ் மணிமன்றம் , தமிழ் நாளிதழ்கள் ,தமிழ் வளர்த்தன , நமது நாடில் தமிழ் ரோஜா செடி நாம் தான்,தண்ணீர் ஊற்றி உரமிட்டு வளர்க்க வேண்டும், பல தமிழர் கடைகளில் எனக்கு சண்டைக்காரன் என்று கேட்ட பெயர் , பொருட்களின் பெயர் ஏன் தமிழில் இல்லை என்று கேட்டால் தகறாரு ,
இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர் குறிப்பாக இலக்கியம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் பற்றாக் குறையை முக்கியமாக கவனிக்கவும். இருக்கும் ஆசிரியரை பதவி உயர்வு கொடுத்து கல்வி இலாக்காக்கு மாற்றலாகி சென்றபின் ஏனோதானோவென்று ஆமை நகரும் வேகத்தில் தற்காலிக ஆசிரியரை நியமிக்கின்றனர். தற்காலிக ஆசிரியருக்கோ இலக்கியம் படித்துக் கொடுக்கக் கூடாது என்ற நிபந்தனை வேறு. இப்படி இருக்கையில், தமிழ் மொழியை பாடமாக கொள்ளும் மாணவர்களுக்கு எத்தனை சிரமங்கள்!! தமிழ் மொழியை அழிக்கும் நோக்கத்துடன் செயல் படும் இந்த சூழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆவன செய்ய வேண்டும்!!!!
நன்றி திரு. எஸ். மணியம் அவர்களே. தங்களின் தமிழ் பற்றை அறியாதவன் நான். தங்கள் தமிழ் தொண்டை மெச்சி வரவேற்கின்றேன். அதே சமயத்தில் இயலாமையின் ஆதங்கத்தால் வரும் வார்த்தையை நிந்தனையாகச் சொல்லாமல் இருக்கப் பாருங்கள்.
தமிழ் மொழி வளர மேலும் சில வேண்டுதலைகள்:
1) 6 வருடம் தமிழ் தமிழ் பள்ளியில் படித்து UPSR தேர்வில் மலாய் மொழியில் தோல்வியுற்று ‘Remove Class’ என்ற மொழி மேம்பாட்டுக்காக இடைநிலை வகுப்பிர்க்குச் செல்கின்றார்களே நம் தமிழ் பள்ளி மணாவர்கள், அவர்கள் நிலையையும் சீர் தூக்கிப் பாருங்கள். இவ்வாறான மாணவர்களுக்கு இடைநிலைப் பள்ளியில் போதிக்கும் நம் இந்திய ஆசிரியர்கள் சொல்வது: (அ) 6 வருடங்கள் தமிழ் பள்ளியில் படித்து அப்பிள்ளைகள் தமிழ் மொழி முறையாக படிக்கவும் எழுதவும் தெரியாது வருகின்றனர். அப்படியானால் அந்த 6 வருடம் தமிழ் பள்ளியில் இவர்களுக்கு ‘Kelas Pemulihan’ நடத்தப் படவில்லையா? அவர்களின் தமிழ் மொழி கற்றல் என்பதின் நிலைதான் என்ன? என்று இடைநிலைப் பள்ளி ஆசிரியர்கள் கேள்வி கேட்கின்றார்கள்.. தமிழ் மொழியே அவர்களுக்கு வரவில்லை என்றால் இன்னும் இதர மொழி ஆற்றலைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். 40 மாணவர்களில் ஓரிருவர் எதுவுமே மண்டைக்கு ஏறாமால் அல்லது ஏற்ற முடியாமல் இருப்பது ஏற்புடையதே. ஆனால், ஒரு வகுப்பில் 10 -15 மாணவர்களுக்கு இந்த நிலை என்றால் குறை எங்கே உள்ளது? இடைநிலைப் பள்ளி ஆசிரியர்கள் என்னைப் பார்த்து, நீங்கள் எல்லாம் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தில் இருந்துக் கொண்டு என்ன செய்கின்றீர்கள்? ன்று கேட்கும் பொழுது வெட்கித் தலை குனிய வேண்டியுள்ளது. இத்துணைக்கும் தரம் குறைந்த மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை ‘Kelas Pemulihan’ நடத்த கல்வி இலாக சில பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கின்றது. அப்படியே சிறப்பு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லையானால் போதனா முறையில் அனுபவமிக்க ஆசிரியர்கள் களம் இறங்கலாமே. மனம் உண்டேல் மார்க்கம் உண்டு. தமிழ் பள்ளி ஆசிரியர்கள் இதற்கு தகுந்த பதில் அளிக்க வேண்டும். வெறும் மறுப்பாக இருக்கக் கூடாது. அதை நிவர்த்திச் செய்ய என்ன செய்ய முடியும் என்ற ஆலோசைனையை கொடுங்கள்.
தமிழ் மொழி தொன்மையான, மென்மையான, அன்பான, பண்பான, செம்மையான ஓரினத் தாய்மொழி (இன்னும் etc etc) என்றெல்லாம் நாம் பேச வல்லவர்கள். தமிழ் மொழி இயல், இசை, நாடகம், அறிவியல், கணிதம், கணினி, சட்டம், கட்டிடவியல் இன்னும் என்னென்ன துறைகள் இருக்கின்றனவோ அதற்கெல்லாம் தகுதியும், ஏற்பும் உடைய மொழி என்றும் பெருமைப் பட்டுக் கொள்ளுவோம். இவ்வளவு இருந்தும் ஏன் தமிழ், தமிழர் சமயத்திற்கு உதவாத மொழியாக்கப் பட்டது? ஏன் மதம் மாறிப் போனத் தமிழர்களுக்கு அவர்தம் கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மத நெறிகளோ, வழிபாடுகளோ தமிழில் கற்க, கற்றுவிக்க வல்லமை பொருந்தியதாக இருந்தும் தமிழர் அவர்தம் ஆலய வழிபாட்டை தமிழில் செய்ய முடியாமல் போனது? தமிழ், “அவாக்கள்” மொழியில் “நீச மொழி” என்பதால்தானே?. அவாக்கள் நம் மொழியை நீச மொழி, ஆலய வழிபாட்டிற்கு இயலாத மொழி என்றால் அந்த வழிபாடு தமிழருக்கு எதற்கு? சோற்றில் உப்பு போட்டு சாப்பிடும் ஒவ்வொரு தமிழரும் பதில் சொல்ல வேண்டிய கேள்வி இது. தி.பி. 3 – ம் நூற்றாண்டிலே வாழ்ந்த திருமூல நாயனார் அன்றே இதனை அறிந்து தமிழர் சிவ வழிபாட்டிற்கு உரிய காமிக ஆகமத்தின் மந்திரங்களை தமிழில் சொல்லிப் போந்தாரே, அந்த தமிழ் மந்திரங்கள் இன்று சிவாலயங்களில் உச்சரித்து வழிபட தகுதியற்றனவாகி விட்டதா? நாடு நலம் பெற வேண்டி பல்லாயிரக்கான வெள்ளியை தீயில் கரியாக்கி புரியாத மொழியில் வேள்வி செய்யும் சிவாச்சாரியார்களுக்குக் கூட இது தெரியாதா? இந்த சிவாச்சரியார்களின் உடம்பில் ஓடும் இரத்தம் தமிழர் இரத்தமா?. அந்த வேள்விக்கு வரிசைப் பிடித்து காத்து மக்கு மந்திகள் போன்று நின்று கேட்கும் நம் இனம் என்ன கழுதைகளா? ஏன் தமிழுக்கும், தமிழருக்கும் இந்த அவல நிலை? ஏன் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழருக்கு இந்த அவல நிலை? தமிழன் என்பான் எடுப்பார் கைப்பிள்ளை என்பதனாலா? இதில் நமக்கு மாற்றம் வேண்டும். நிச்சயமாக மாற்றம் வேண்டும். தமிழ் அறவாரியம் உண்மையாக இந்நாட்டில் தமிழுக்குத் தொண்டு செய்யும் இயக்கமாக இருந்தால் மலேசியா அர்ச்சகர் சங்கத்துடனும், ஆலய இயக்கங்களுடனும் பேசி காமிக ஆகமத்தின் தமிழ் மந்திரங்களாக பத்தாம் திருமுறையில் இரண்டாம் தந்திரமாக இருக்கும் மந்திரங்களையே சிவாலையங்களில் பூசனைக்கு உரிய மந்திரங்களாக செபித்து வழிபாடு செய்ய ஆவன செய்ய வேண்டும். தமிழரிடையே இருக்கும் பிற தெய்வ வழிபாடுகளுக்கு அத்தெய்வத்திர்க்கு உரிய பிராத்தனை பாமாலைகளைக் கொண்டு அருச்சித்து வழிபடலாம். அதை விடுத்து ஒரு தெய்வத்திற்கு சொல்லும் சம்ஸ்கிருத மந்திரத்தில் தெய்வத்தின் பெயரை மற்றும் மாற்றி அதே மந்திரத்தை பல்வேறு தெய்வ வழிபாட்டிற்கு சமஸ்கிருதத்தில் உச்சரித்து அருச்சனை செய்து எம் தமிழர்களை இந்நாட்டு அருச்சகர்கள் ஏமாற்றியது போதும். இனியும் இந்த ஏமாற்று வேலை வேண்டாம். மலேசிய தமிழ் அறிவாரியத்திர்க்கு தமிழை தமிழ் வழிபாட்டு மொழியாக்க வேண்டிய கடமையும் கடப்பாடும் உள்ளது என்பதையும் மறந்து விடாதீர்கள். இல்லையேல், தங்கள் செயல் நடவடிக்கை முழுமை பெறாத நடவடிக்கையேயாகும். இன்னும் 200 ஆண்டுகள் போனாலும் தமிழுக்கு வயதுதான் ஏறுமே ஒழிய மதிப்பும் மாண்பும் ஏறாது. இது தமிழருக்கும் அவ்வாறே. இதையும் தங்கள் மாநாட்டில் விவாதியுங்கள். கம்பளத்தின் அடியில் போட்டு மறைத்து விடாதீர்கள். அப்புறம் தங்கள் இயக்கத்தின் மீது நான் வைத்திருக்கும் மதிப்பும் மண்ணாகி விடும்.
பூசாரிகளுக்கும் அர்ச்சகர்களுக்கும் தமிழ் மொழியை திணிப்பதற்கு முன் பள்ளிகளில் தமிழ் மொழி நிலை கொள்ள ஆவன செய்யவும். இடைநிலைப் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை தமிழ் மொழி உறுதியுடன் நிலை கொண்டால் நாளடைவில் ஆலய வழிபாடுகளிலும் மாற்றம் கொள்ள வழி உண்டு!!!
“நாளடைவில்” என்றால் இன்னும் இருநூறு ஆண்டுகள் கழித்தா?. கடந்த இருநூறு ஆண்டுகளில் இதைச் சாதிக்க முடியாது கோணங்கித் தனமாக இன்னும் நாளடைவில் என்போர் தமிழரா? தமிழ் மொழி இந்நாட்டில் தமிழ் முதல் பல்கலைகழகம் வரை நிலைக் கொள்ள முதலில் தமிழ் நமக்கு ஆரம்பமாக வேண்டிய இடம் தமிழுக்குத் தலைவனாகிய சிவாலையத்தில். தலைவனுக்கே தமிழ் ததிகினத்தோம் போட்டால், தமிழர்களுக்கு தமிழ் எப்படி போய் சேரும். “நாடினேன் நாடிற்று நமச்சிவாயமே” (4:11:7) என்று திருநாவுக்கரசர் சொல்லுகின்றார், “எனக்குத் தலைவனாகிய சிவபெருமானை நாடி நமசிவய மந்திரத்தை உச்சரித்த மாத்திரத்தில் அவன் எம்மை நாடி வந்தான்”. முதலில் தமிழுக்கு முதல்வனாகியவனுக்கு தமிழில் மரியாதை செய்ய தெரியாத இனத்திற்கு தமிழ் வருமா? வராதா? நாளை நாளை என்று சொல்லிச் சொல்லிதான் தமிழரை வாழத் தெரியாத சமூகம் என்று பச்சைக் குத்தினீர்கள் . இன்று “தமிழ்க்கல்வியைச் சமூகப்படுத்துதல்” என்று சொல்லி விட்டு, நம் பண்பாட்டின் ஒரு பகுதியாகிய சமயத்தை நீக்கி விட்டு தமிழைத் தனிமைப் படுத்தினால், அது எப்படி தமிழைச் சமூகப் படுத்துவதாகும்? தமிழ் அறவாரியம் எதிர்வரும் மாநாட்டில் இதற்குப் பதில் சொல்லட்டும்.
நம் தாய் மொழியை நாம் எங்கேயும் திணிக்க தேவை இல்லை -இப்படி பேசுவதே தவறு என்று தெரியவில்லையா? இதிலிருந்தே தமிழின் நிலை புரிந்து இருக்க வேண்டுமே– நம் மொழி நம்முடைய கலாசாரத்தில் எங்கும் இருக்க வேண்டும்
நம்முடைய வாழ்கையில் பிணைந்து இருக்க வேண்டும். ஆனால் தமிழ் பேசுவதையே அநாகரிகம் என்றும் தமிழுக்கு முன்னுரிமை இல்லாமலும் தமிழ் பற்றே இல்லாமலும் இருக்கும் நம்மவர்களை பற்றி என்ன சொல்ல?
//தொன்மையைத் தொடர வேண்டுமென்பதாலும் வரலாற்றைப் புதுப்பிக்க விழையும் நோக்கிலும் மலேசியத் தமிழ் அறவாரியம், ‘மலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்க்கல்வி (1816-2016)’ எனும் கருப்பொருளில் தமிழ்க்கல்வி மாநாடு ஒன்றனை ஏற்பாடு செய்துள்ளது.//
தமிழ் அறவாரியத்தின் சீரிய சேவைக்கு சிரம் தாழ்ந்த பாராட்டுக்கள்.
தேனீயின் சிரத்தை மிக்க கருத்துக்கள் சிறப்பு. அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டியது நமது கடமை.
பெருமையும், மகிழ்ச்சியும் அடையும் இத்தருணத்தில், மனதை வருடும் வேதனை என்னவென்றால், ஏன் நம் தமிழர்களில் பலருக்கு இத்தனை மெத்தனப்போக்கு ? அவரவருக்கு மொழிப்பற்றும், இனப்பற்றும் அவசியம் அமைந்திருக்க வேண்டும், ஏன் நம்மினத்திற்கு அந்த சூடு, சுரணை இல்லை ?
நம் நாட்டில் “பகாசா மலேசியா” என்றிருந்த மலாய் மொழியை போராடி “பகாசா மெலாயு” என மாற்றிக்கொன்டான் மொழிப்பற்று நிறைந்த மலாய்க்காரன். தங்களின் வாழ்விலும், தொழிலிலும் தங்கள் மொழி வற்றாது தங்களின் மிக முக்கிய அடையாளமாக ஆக்கிக்கொன்டான் சீனன். ஆனால் தமிழன் ? “தமிழ் சோறு போடுமா ?” எனக் கேட்கிறான். இதற்குக் காரனம் என்ன ? உண்மையிலேயே நாம் பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்பதால் தானே ?
தமிழுக்கு “அரசியல் ரீதியில்” அங்கிகாரம் அவசியம். “ஒரே மொழிப்பள்ளி” எனும் பல்லவியுடன் மற்ற மொழிப்பள்ளிகளுக்கு சங்கு ஊதக் காத்திருக்கும் அரசியலில் இது சாத்தியமா ? (முக்கியமாய் நம்மை பிரதிநிதிப்பதாய் கூறும் அரசியல்வாதிகள் அவசியம் தமிழ் கற்றிருக்க வேண்டும் எனும் சட்டம் ஒன்று இயற்ற வேண்டும், இயலுமா நம்மால் ?
பொருளாதார ரீதியில் மொழிக்கு முக்கியத்துவம் வேண்டும். கல்வித்தேர்ச்சியில் அவரவர் இன மொழித்தேர்ச்சி அவசியமாக்கப்படவேண்டும். இதுவும் சட்டமாக்கப்படவேண்டும்.
இவற்றுக்கு நாம் என்னென்ன வியூகங்கள் அமைக்க வேண்டும் என்று சிந்திப்போம். தமிழ் பற்றாளர் மணியம் அவர்கள் “தமிழ் இனி மெல்ல சாகும் என்று பாரதி சொன்னான்” என்று குறிப்பிட்டுள்ளார். அதே பாரதி “கனவு மெய்ப்படவேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார் அல்லவா, “நீருயர நெல்லுயரும்” என்பதைப்போல் மொழி உயர நமது வாழ்விலும் நலமும் வளமும் பெருகட்டும்.
//40 மாணவர்களில் ஓரிருவர் எதுவுமே மண்டைக்கு ஏறாமால் அல்லது ஏற்ற முடியாமல் இருப்பது ஏற்புடையதே. ஆனால், ஒரு வகுப்பில் 10 -15 மாணவர்களுக்கு இந்த நிலை என்றால் குறை எங்கே உள்ளது?//
நண்பர் தேனீ அவர்கள் கூறுவது சிந்திக்கப்பட வேண்டிய விடயமே, தற்கால சூழலில் ஒரு பள்ளியில் 300 மாணவர்கள் 6ம் ஆண்டில் பயில்கின்றனர் என்றால், அவர்களில் மிகச்சிறந்த 50/60 மாணவர்களுக்கு முதன்மை வகுப்பளித்து பல சலுகைகளுடன் சிறப்பான போதனைகளுடன் தேர்வுக்கு தயார் செய்கின்றனர். இவர்களில் பின்தங்கிய மாணவர்கள் கடைசி வகுப்புக்களில் கவனக்குறைவுடன் கையாளப்படுகின்றனர். பல பள்ளிகளில் இது நடக்கிறது தாங்களும் அறிந்திருக்கக்கூடும். பின்தங்கிய இந்த மாணவர்கள், பொருளாதாரத்திலும் பின்தங்கியிருக்கும் போது அவர்கள் நிலை மேலும் சீர்கெடும், ஆசிரியர்களும் கண்டுகொள்ளாமல், பெற்றோரும் கவனம் செலுத்தாமல் விடப்படும் இந்த இளவல்கள் கல்வியில் தாழ்ந்த நிலைக்குச் சென்றுவிடுகின்றனர், இதற்கு ஆசிரியர்களூம் மிக முக்கிய காரணமே இல்லையென்பதல்ல, ஆனால், பெற்றோரும், வாழ்க்கைச்சூழலும், பொருளாதாரமும் கூட இம்மாணவர்களின் கல்வி வடிவமைப்பில் மிக முக்கிய பங்காற்றுகிறது என்பது மறுப்பதற்கில்லை.
அண்மையில் மலாயா பல்கலைகழக இந்திய ஆய்வியல் பிரிவு பேராசிரியர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கும் தருவாயில் அவர் சொன்னது. “தமிழ் சோறு போடுமா என்று கேள்விக் கேட்டு நம் பிள்ளைகளைத் தமிழில் பட்டப் படிப்பு படிக்க அனுப்பாமல் இருக்க வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டார். இதனை நம் மக்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள் என்றும் வேண்டினார். உண்மையில் நாம் தமிழர் நம் மொழிக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் குறைந்து கொண்டே வருகின்றது என்பதைதான் அவரின் கூற்று அறிவிக்கின்றது. முன்பு ஒரு நாள் கரிகாலன் என்பவர் செம்பருத்தியில் எழுதும் பொழுது “தமிழ் சோறு போடுகின்றதோ இல்லையோ, நான் என் பிள்ளைகளைத் தமிழ் மொழியில் பட்டப் படிப்புக்கு அனுப்பி வைப்பேன்” என்று உணர்ச்சிப் பொங்க கருத்து எழுதினார். அந்த உணர்வு மலேசிய தமிழரிடம் வர வேண்டும். இதையே ஒரு அச்சாரமாக வைத்து பல்கலைகழகப் பதிவுக்கு (CGP >3.0) தகுதியுடைய தமிழ் மொழியிலும் தேர்ச்சியும் பெற்ற 6-ம் படிவ மாணவர்களுக்கு இந்திய ஆய்வியல் துறையில் படிக்க ஆர்வத்தை நாம் கொடுக்க வேண்டும். இதற்கு உறுதுணையாக ஸ்ரீ முருகன் நிலையம் மீண்டும் தனது உண்மையான தமிழ் மொழி சேவைக்குத் திரும்ப வேண்டும். இந்நிலையத்தில் அரசியலைப் புகுத்தி, அரசியலில் குளிர் காய அதனை ஓர் ஏணிப்படியாக்கிக் கொள்வதில் இருந்து ஸ்ரீ முருகன் நிலையம் விலக வேண்டும். இல்லையேல் இந்நிலையம் இதுநாள் வரை செய்து வந்த நற்காரியம் மக்களால் காலப் போக்கில் மறக்க நேரிடும்.
தமிழ் வாழ வேண்டும் வளர வேண்டும் என ஆசைப்படுகிறேன் ,சென்ற 5 ஆண்டுகளாக முயன்று வருகிறேன் .தமிழினம் ஒன்றுபட்டு பொருளாதாரத்தில் முன்னேறினால் மொழியும் செழிக்கும் .நம் தமிழர்கள் வெவ்வேறு தெய்வங்களை வழிபட்டாலும் நாம் யாவரும் இறைவழிபாட்டின் முடிவில் ஒரே சொற்களை கூறிவந்தால் அந்த சொற்கள் ஒருகாலகட்டத்தில் நம் இனத்தை ஒன்றுபடுத்தும் என நம்புகிறேன் .இதை 6 வயது சிறுவர் முதல் அனைவரிடமும் வலியுறுத்தி வருகிறேன்.நம் இனம் ஒன்றுபட்டு நம்மில் வறிய நிலையில் உள்ளவர்களை தூக்கி விட வேண்டும். நம்மினத்த்ரிடேயே அறியாமையும் , வறுமையும் மதுவும் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். இதற்கு ஒவ்வொரு thamilanum கை கொடுக்க வேண்டும்.தலைமையும் வேண்டாம் தலைமைத்துவத்திற்கான சண்டையும் வேண்டாம்
நீங்க எப்படி தான் கூவினாலும் ….தமிழ் பள்ளிக்கு ஆப்பு நிச்சயம்….மலேசியா இந்தியர்களின் மக்கள் தொகை குறைந்து வருவதும் ஒரு மறுக்க முடியாத காரணம்…மறைமுகமான இன படு கொலை அவ்வப்போது மலேசியா போலிசால் அரங்கேற்றபடுகிறது……போதாதுக்கு நமக்குள்ளே வெட்டிக்கொண்டு சாவது இன்னொரு பக்கம்…..இது போக குடும்பத்துக்கு ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகள் இருப்பது கன்றாவி fashion ஆகிவிட்டது……அதுமட்டும் அல்லாமல் …..விவாகரத்து மற்றும் தனித்து வாழ்வது அன்றாட வாழ்கையில் ஒன்றாகிவிட்டது …….அப்படியே தப்பி தவறி பிள்ளைகள் பிறந்தால் …கொஞ்சம் வசதி இருந்தால் போதும் …international school பக்கம் கிளப்பிக்கொண்டு செல்கிறார்கள் ….இப்படி இருக்க …ஒட்டு மொத்த மலேசியா இந்திய அரசியல் சாணக்கியர்கள் தங்களது அரசியல் கட்சிகளுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் கூஜா தூக்கவே நேரம் போதவில்லை….மேலும் தமிழ் மொழி அறிவு இல்லாத மலேசியா இந்திய அரசியல் சாக்கடைகள் மலேசியா இந்தியர்களை குழப்பி கொண்டு அவர்களும் குழம்பி விட்டனர் …சபாபாபாஹ் …இப்பவே கண்ணு கட்டுதே ………
தமிழ் பள்ளி எண்ணிக்கைக் குறையலாம். ஆனால் பட்டணத்தில் தமிழ் பள்ளியில் படிக்கும் நம் பிள்ளைகளின் கல்வித் தரம் நிச்சயமாக மேம்பாடு அடைந்துள்ளது. கல்வி அமைச்சின் தகவல்களும் அவ்வாறே காட்டுகின்றன. நம்பிக்கையே நம் பலம். தமிழ் பள்ளியில் படித்த பல ஆயிரம் மாணவர்கள் பல்கலைகழகங்களில் தரமான கல்வி பெற்று சிறந்த வாழ்க்கையைப் பெற்றுள்ளார்கள். மலாய் பள்ளிக்கு அனுப்பி வைத்த பிள்ளைகளில் கல்வியில் பின் தங்கியோரும் ஏராளம். தமிழ் பள்ளி மாணவர்களின் வெற்றிக்கு கடந்த 10 வருடங்களுக்கு மேல் தமிழ் பள்ளி ஆசிரியர்கள் சிறந்த சேவையை வழங்கி வந்துள்ளனர். தமிழர் என்ற உணர்வோடு அறிவாளியாக வாழும் வரையில் தமிழ் தொடர்ந்து வாழும். தமிழ் வாழ்வதும் வீழ்வதும் நம் கையிலே.
நம் தமிழ் “குடி” மக்களுக்கு என்ன சொல்ல? இப்போது எல்லாம் தமிழ் திரைப்படங்களில் எம்மாதிரியான காட்சிகள் காண்பிக்கப்படுகிறது? சுய சிந்தனை இல்லா இந்த குடி மக்களுக்கு “தண்ணி” மட்டுமே முக்கியம். அத்துடன் நம்முடைய துரோக உடன் பிறப்புகளுக்கு மொழி இனப்பற்று கிடையாது. இதை எல்லாம் சொல்லுவத்ர்க்கே கூசுகிறது ஆனாலும் உண்மை அதுதானே? எங்காவது ஒரு தமிழன் தெரியாத இன்னொரு தமிழனுக்கு ஒரு புன் சிரிப்பையாவது உதிர்த்து இருப்பானா? எதிரி போல் தானே பார்க்கிறான்?
நம் மக்கள் கருத்து கந்தசாமியாக இருந்து கருத்துச் சொல்லிச் சொல்லி ரொம்பவும்தான் களைச்சுப் போயிட்டாங்க!. யாருக்கும் இந்நாட்டில் தமிழ் மொழி மேம்பாட்டிற்கு கருத்து சொல்ல இனியும் துப்பில்லாமல் போய் விட்டது. இருந்தாலும் பரவாயில்லை. இன்னும் சில விஷயங்களைப் பற்றி சொல்லவும் விரும்புகின்றேன். அதில் ஒன்று, புதிய தமிழ் பள்ளி கட்டடங்களைக் கட்டுவதற்கும், இருக்கும் கட்டடங்களை மேம்படுத்துவதற்கும் பிரதமர் துறையின் கீழ் செயல் படும் கூட்டம் தமிழ் பள்ளி மேலாளர் வாரியத்திற்கு நேராக பணத்தைக் கொடுத்து செயல் படுத்தச் சொன்னார்களே அது எப்படி போய் கொண்டிருகின்றது என்பதைப் பற்றி யாரும் கவலைப் படுவதாக தெரியவில்லை. இதோ கட்டடம் ஏறிடுச்சே. எல்லாம் நல்லாதானே போய் கொண்டிருக்கின்றது அப்புறம் என்ன கவலை வேண்டிக் கிடக்கு என்று பலர் கேள்வி கேட்கலாம். ஏறிக் கொண்டிருக்கும் கட்டடத்தின் விலை, கொடுக்கப் பட்ட மானியத்தை விட எப்படி மேலே போனது? கட்டப் படும் கட்டடத்தில் இருக்க வேண்டிய வசதிகள் இல்லாமல் கட்டப் படுகின்றது என்ற குறை எப்படி வருகின்றது? கேள்வி கேட்டால் எல்லோரும் பதில் சொல்லாமல் நழுவுகின்றனர். இப்படி ஒரு பள்ளியில்!. இன்னொரு பள்ளியிலோ, கொடுத்த பணத்தைக் கொண்டு பள்ளிக் கட்டத்தைக் கட்டாமல் நான் கொண்டு வருகின்றேன் நன்கொடையை என்று சொல்லிக் கொண்டு அகலக் கால் வைத்து இன்று கட்டிடத்தை துவங்க முடியாமல் மாணவர்களும் பெற்றோரும் இன்னமும் கட்டடம் வருமா? வாராதா? என்று மயக்கத்தில் இருக்கின்றனர். தமிழ் பள்ளி மேலாளர் வாரியத்தை அமைக்க வழி காட்டியதே தமிழ் அறவாரியம்தான். ஆனால் இப்பொழுது இந்த அறவாரியத்திர்க்கு அந்த கட்டடங்கள் எழுப்பப் படுவதில் எவ்வொரு அறிவுரையோ, வழிகாட்டுதலோ கொடுக்க எந்த ஒரு அதிகாரமும் இல்லை. பணம் அரசாங்கத்தால் கொடுக்கப் படுகின்றது. அதை நிருவாகிக்க 7 பேர் கொண்ட ஒரு குழு. அதில் யார், யார் இருக்க வேண்டும் என்பதில் கூட தனக்கு வேண்டப் பட்டோரே முன் மொழிந்து வழி மொழிந்து நியமித்தப் பிறகு, இன்று பணம் வழிந்து போகும் இடம் கூட தெரியாமல் போய் கொண்டிருக்கின்றது. இதற்கு காரணம் கட்டிடத் துறையிலும் சரி, நிருவாகத் துறையிலும், சட்டத் துறையிலும் சரி எதிலும் அனுபவமில்லாதவர்கள் உறுப்பினர்களாக இருந்தால் எதைப் பார்த்து இவர்கள் கட்டிட குத்தகையாளர்களைத் தேர்ந்தெடுத்து, செலவு வகைகளைக் குறைக்கவும், தகுந்த ஆலோசனைகளைப் பெற்று திட்டங்களை செயல் படுத்தவும் திறமை கொண்டிருக்கின்றார்கள்? இறுதியில் ஜோகூரில் ஒரு பள்ளி பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளதே அதைப் போலவே பள்ளி மேலாளர் வாரியங்கள் அமைக்கப் பட்ட பள்ளியில் நடந்தாலும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை. இப்போ இங்கு கருத்து போட்ட உடனே இன்னும் ஒரு வாரத்தில், “எல்லாம் வேகமாக சரியாக நடந்து கொண்டுதான் இருக்கின்றது” என்று சம்பந்தப் பட்டவர்கள் வேகமாக பத்திரிகையில் அறிக்கை விடுவார்கள். “ஆயி பாத்த கலியாணம் போயி பாத்தாதான் தெரியும்முன்னு” எங்க ஊரு வழக்கப் பேச்சு இருக்கு. அதான் கதை.
இப்படி தமிழ் பள்ளி மேலாளர் வாரியத்தை அமைக்க தமிழ் அறவாரியம் உதவி செய்தால் மட்டும் போதாது. மலேசிய தமிழ் பள்ளிகளில் அமைக்கப் படும் பள்ளி மேலாளர் வாரியத்தில் அரசியல் சார இயக்கங்களுக்கு (NGO) ஒதுக்கப் படும் இரு இடங்களில் ஒரு உறுப்பினரை தமிழ் அறவாரியம் முன் மொழிந்து ஏற்றுக் கொள்ள, கல்வி அமைச்சிடம் தக்க அங்கிகாரம் பெற்று செயலில் இறங்க வேண்டும். இவ்வாறு செய்வதால் இந்நாட்டில் தமிழ் பள்ளிகளின் வளர்ச்சியிலும், தமிழ் மொழி சமூகமயமாக்கப் படுவதிலும் தமிழ் அறவாரியத்திர்க்கு நாடாளாவிய அளவில் தக்க அங்கீகாரம் கிடைக்கும். இதுவே தமிழ் அறவாரியம் தமிழுக்கு தொண்டாற்ற சிறந்த வழி. வெற்றிப் பெற முன்கூட்டியே நல்வாழ்த்துக்கள்.
இன்று கணினி மயமான காலத்தில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம். அதிலும் இணையம் உலக வாழ் மக்களை நொடிப் பொழுதில் இணைக்கின்றது. இணையம் இல்லாத தமிழ் எதிர்காலத்தில் எழுச்சி பெற வழி இல்லாமல் போய் விடும். இதனை நாம் எல்லோரும் அறிவோம். ஆதலால், நம் தமிழ் பள்ளிகளில் கணினி பாடம் ஒரு துணைப் பாடமாக வாரத்திற்கு ஒரு நாள் வீதம் நடத்தப் படாமல், இப்பாடத்திர்க்கான நேர ஒதுக்கீட்டை அதிகரிக்க தமிழ் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் மூலம் வழி வகைகளை தமிழ் அறவாரியம் காண வேண்டும். இருக்கின்ற பாடத்தையே நடத்த முடியாமல் தினருகின்றோம் அதில் இது வேறா என்று மறு பதில் சொல்ல வேண்டாம். ஒரு சில பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் சங்க உதவியுடன் முறையாக ஓர் ஆசிரியரை பயிற்றுனராக வைத்துக் கணினி கல்வி போதிக்கப் பட்டு வருகின்றது. இன்னும் ஒரு சில பள்ளிகளில் கணினி கூடம்தான் இருக்கின்றதே ஒழிய அங்கே படிப்பவர்கள் மாணவர்கள் அல்ல பல்லியும், கரப்பான் பூச்சியும்தான். மாணவர்களை அக்கணினி கூடம் பக்கம் மாதத்திற்கு ஒரு முறை அனுப்புவதும் குதிரைக் கொம்பாக இருக்கின்றது. நம் மாணவர்களுக்கு கணினி பாடம் எட்டாக் கனியாகி விட்டால் பிற மொழி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை விட நம் மாணவர்கள் இப்பிரிவில் பின் தங்கியவராகி விடுவர். கணினி பாடத்திற்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டு விடாதீர்கள். இப்பொழுது இங்கே தமிழில் தட்டச்சு செய்து கொண்டு உலக வாழ் தமிழர்களிடையே தமிழில் உரையாடிக் கொண்டிருக்கின்றேனே அதுதான் சம்பந்தம். தமிழ் வெறும் அச்சடித்த தாளில் மட்டும் பார்க்காமல் கணினி உலகிலும் வெற்றி நடை போடுகின்றது. அதற்கு செம்பருத்தியே மிகச் சிறந்த உதாரணம். அப்புறம் கணினி தமிழ் அவசியம் என்று சொல்லவும் வேண்டுமோ? தமிழ் அறவாரியம் பெற்றோர் சங்கங்களின் உதவியுடன் தமிழ் பள்ளிகளில் கணினி பாடமும் அத்துடன் தமிழ் மென்பொருள் உபயோகத்திற்கு அரசாங்கத்திடம் இருந்து தேவையான மானியங்களைப் பெற்று செயல்படுத்த ஒரு பெரிய தொகையைப் போட்டு வேண்டுதலையை முன் வையுங்கள். எல்லாம் எங்கப்பன் சிவபெருமானால் நல்லதே நடக்கும்.
கோவில்களுக்குக் கொடுக்கப் பட்டு வீணாகும் மானியத்தை இவ்வகையில் தமிழ் கல்வி மேம்பட நல்ல முறையில் செயல் படுத்தலாம் என்றால் பெருவாரியான அறிவார்ந்த தமிழர் ஏற்றுக் கொள்வார்கள் என்பதில் எனக்குச் சற்றேனும் சந்தேகமில்லை. இதற்கு காணரம் இருக்கின்றது. பல்லாயிரம் வெள்ளியை தீயிலிட்டு வேள்வி செய்யும் இண்டிய சமூகத்திற்கு எதற்கு அரசாங்க மானியம்? இன்று மதத்தைப் பொறுத்த வரையில் இண்டியன்களெல்லாம் பணக்காரர்களே. மதம் என்று சொல்லிக் கேட்டாலே சிற்றின்பத்தை நம்பி பணம் செலவழிக்க இண்டியன்கள் தயார்! அதனால் அரசாங்க மானியத்தை நல்வழிக்கு திசை திருப்பினால் தமிழ் வளரும். தமிழர் வாழ்வார். .
தமிழ் அறவாரியம் மாநாடு அரசாங்கமும் ,தமிழ் அறவாரியமும் ஒன்றிணைந்து ஆக்ககரமாக செயல் படுவதை வரவேற்ப்போம் .காலத்திற்க்கேற்ற மாற்றங்கள் தமிழ்ப்பள்ளியும் ,தமிழ்க்கல்வியும் நிலை நிறுத்தப்பட வேண்டும் தமிழ் பற்றார்களும் ஆர்வலார்களும் இணைந்து நடத்தும் இக்கருத்தரங்கு போற்றற்க்குரியதாகும் முயற்சி திருவினையாகும் .இப்பொன்னான முயற்சிக்கு தோள்கொடுக்காவிட்டாலும் ,எதிர் வினை ஆற்றாமல் இருப்பது நலம் !
தேனீ wrote on 22 October, 2015, 0:13…தமிழ் பள்ளி எண்ணிக்கைக் குறையலாம்….
குறைந்து கொண்டே போகலாம்…..கை விரல்களில் எண்ணும் எண்ணிக்கை வரையிலும் குறையலாம் ….இல்லாமலும் போகலாம் தமிழ் பள்ளிகளின் அடையாளமும் காணமல் போகலாம்……எல்லாமே சாத்தியமே ….என் பேரக்குழந்தைகள் தமிழ் பள்ளிகள் படிக்க வில்லை என்றால் அது என் மகனின் தவறல்ல …!!
காலத்தின் சூழ்நிலையை அறிந்து நிஜத்தில் நாம் வாழ்வது அவசியம். கனவுலகில் வாழ வேண்டாம். கடந்த கால நினைவலைகள் நமக்கு ஆரம்பமாவது தோட்டத்தில். அன்று தோட்டங்களில் இண்டிய மக்கள் தொகை அதிகமாக இருந்தது. வசதிக்கேற்றவாறு அனைத்து தென் இண்டியன்களும் அவர்தம் பிள்ளைகளை ஆரம்ப நிலையில் தமிழ் பள்ளிகூடத்திற்கு அனுப்பி வைத்தனர். இன்று நிலைமை மாறி விட்டது. இண்டியன்கள் பெரும்பாலோர் பட்டணங்களிலும், புறநகர் பகுதிகளிலும் குடியேறி விட்டனர். அதற்கேற்றாற்போல் மொழி அடிப்படையில் தென் இண்டியன்களிடம் இன பாகுபாடு வந்து விட்டது. அதனால் தமிழர் அல்லாதோர் அவர்தம் பிள்ளைகளை தமிழ் பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதை பெருமையாக நினைப்பதில்லை. அது அவர்களுக்குச் சிறுமையாக தோன்றுகின்றது. அவர்கள் அவர்தம் பிள்ளைகளை பெரும்பாலும் ஆரம்பக் கல்விக்கு மாலாய் மொழி பள்ளியில் சேர்ப்பதையே மகிழ்ச்சியான செயலாக கொள்கின்றார்கள். இதற்கு விதிவிலக்காக இருப்பவர்களும் உண்டு. ஆனால் இவ்வாறானவர்கள் மிகவும் சிறுபான்மையினரே. அடுத்து, தோட்டப் பாட்டாளிகள் வெளியேறிய பிறகு அங்கு தமிழ் பள்ளியில் படிப்பதற்கு பிள்ளைகள் இல்லை. இது காலத்தின் கோலம். இதற்கு நாம் விதி விலக்கல்ல. ஆதலால், இனி வரும் காலங்களில் தமிழ் பள்ளிகளின் எண்ணிக்கை கிராமப்புற பகுதிகளிலும், தோட்டப் புற பகுதிகளிலும் குறையலாம். இதற்கு நிவர்த்தி, பட்டணத்தில் குடியேறிய தமிழர்களின் பிள்ளைகள் தமிழ் கல்வி பெறுவதற்கு தோட்டப் புறத்தில் மூடப் படும் பள்ளியின் உரிமத்தைக் (லைசென்ஸ்) கொண்டு நகர்ப்புறங்களில் புதிய தமிழ் பள்ளிகள் உருவாக்க முயற்சி செய்ய வேண்டும். பிரதமர் இலாகாவின் கீழ் செயல்படும் தமிழ் பள்ளி மேம்பாட்டுக் குழு நடவைக்கை எடுத்தாலும் அது ஆமை வேகத்தில்தான் சென்று கொண்டிருக்கின்றது. முதல் பிரச்சனை பட்டணங்களில் தகுந்த நிலத்தைத் தேடி அரசாங்கத்திடம் இருந்து பெறுவது என்பது சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி தடுப்பான் என்ற கதையாகத்தான் உள்ளது அரசாங்க நிலத்தைப் பெரும் காரியம். நம்மிடம் அரசியல் பலம் இல்லை. ம.இ.க. தலைவர்கள் அரசியல் பலம் இருந்த காலத்தை வீணடித்து விட்டு இப்பொழுதுதான் தீர்மானங்கள் போடுகின்றார். அரசாங்கத்தின் பகுதி உதவி பெரும் தமிழ் பள்ளிகளை, அரசாங்கம் முழு உதவிப் பள்ளிகளாக மாற்ற வேண்டுமாம்! இந்த தீர்மானங்கள் எத்துனை தடவை போட்டாகி விட்டது? ஆனால் செயல் வடிவத்தில் ம.இ.க. சாதித்ததுதான் என்ன? இருந்தும் 200 ஆண்டுகள் தமிழ் பள்ளி விழாவை எல்லோரையும் விட ம.இ.க. முந்திக் கொண்டு பத்து மலையில் நடத்தி விட்டது காரணம் அவர்களுக்கே என்றும் முதல் மரியாதை வர வேண்டும் என்பதால். செயல் வடிவில் எது எப்படி போனால் அவர்களுக்கு என்ன? ‘Kalah tak apa, mesti ada gaya’ என்பதுதான் ம.இ.க. வின் அன்று முதல் இன்று வரை உள்ள சித்தாந்தம். அதற்கேற்றபடிதான் அவர்கள் செயலும் இருக்கும். அவர்களில் இன்று பெரும்பாலோனருக்கு தமிழ் அறிவும் இல்லை, தமிழ் படிப்பதும் இல்லை என்பதில் இருந்து இதனை நாம் அறிவோம். “பேரு பெத்த பேரு, தாகம் நீலு லேது’ என்று தெலுங்கில் ஒரு வழக்கு உண்டு. அதுதான் அவர்களின் கதை. அதனால் நாம் அவர்களைப் பற்றி கவலை கொள்ளத் தேவை இல்லை. நம்முடைய தற்கால பிரச்சனை, இருக்கும் தமிழ் பள்ளிகளில் அல்லது இருக்கப் போகும் தமிழ் பள்ளிகளில் மாணவர்கள் கல்வி கற்றல் திறனையும், தேர்ச்சி விகிதத்தை உயர்த்தினாலுமே போதும். இதுவே இந்நாட்டில் தமிழ் கல்வி வளர நாம் ஆற்றும் பெரிய தொண்டாகும். மற்றவை அடுத்த மடலில்!
சீன பள்ளிகள் தனியார் பள்ளிகள் போல் செயல் பட்டு கொண்டிருக்கின்றன, நாம் இன்னும் அரசாங்கத்தையும் அரசியலையும் நம்பி கொண்டிருக்கிறோம் . தமிழ் பள்ளிகள் நமது நாடில் எதிர் காலத்தில் இருக்குமா !! இருக்காதா !! என்பது அல்ல கேள்வி , தமிழ் நமது நாட்டில் இருக்குமா !! என்பதுதான் நமது கேள்விக்குறி . அரசாங்க உதவியுடன் தமிழ் பள்ளிகள் இயங்க வேண்டும் , ஏழை தமிழன் தான் அதில் தமிழ் கற்க வேண்டும் , என்ற கொள்கையில் தமிழன் வாழ்ந்து கொண்டிருந்தால் தமிழ் மெல்ல சாகும் என்று நம் பாட்டன் பாரதி சொன்னனே அதுதான் பலிக்கும் . தமிழின் பயன் பாடு , நான் தமிழன் எனக்கு தமிழ் எழுத பேச தெரிய வேண்டும் , என்று தமிழனுக்கு சுய சிந்தனை வந்து விட்டாள் தமிழ் நமது நாட்டில் வாழும் வளரும் . ஏழை ,பணக்காரன் , பாமரன் , உயர் அதிகாரி , என்று பேதம் இன்றி , தமிழ் என் தாய் மொழி , தொன்மையான . மொழிக்கும் , கலாச்சாரத்துக்கும் உரியவன் நான் என்று உயரிய சிந்தனையோடு , நம் நாட்டு தமிழன் வாழ்ந்தால் 200 வருடங்கள் இல்லை , 2000 வருடங்கள் கூட தமிழ் வாழும் .தமிழர் தம் வாழ்விலும் ,நிகழ்வுகளிலும் தமிழ் ஒன்றென கலந்திருக்க வேண்டும். தமிழ் பேசும் தமிழ் கலாச்சாரம் மிக்க தமிழனாக மலேசியா தமிழன் திகழ வேண்டும் . உலக தமிழர்கள் அனைவரும் நம்மை உதாரண தமிழனாக போட்ற வேண்டும் .
ஆஸ்ட்ரோவும் தமிழ்மொழி வளர்ச்சியில் இணைக்கப்பட வேண்டும். தமிழை – தமிழர்களை நம்பியிருக்கும் ஆஸ்ட்ரோ போன்ற பெரிய நிறுவனங்களின் ஒத்துழைப்பும் நமக்குத் தேவை!