நமது நாட்டிலுள்ள தமிழ் மற்றும் சீனமொழிப்பள்ளிகளை படிப்படியாக மூடிவிட்டு அனைத்து இன மாணவர்களயும் தேசிய மொழியை முதன்மையான கற்பித்தல் மொழியாகக் கொண்ட ஒரே பள்ளியில், தேசியப்பள்ளியில், இணைக்க வேண்டும் என்று சமீபத்தில் கல்வி அமைச்சர் மாட்ஸீர் காலிட் கூறியிருந்தார். இந்நோக்கத்திற்கு குறைந்தபட்சம் 65 ஆண்டுகால வரலாறு உண்டு.
ஆனாலும், நமது தேசிய கல்வி அமைவுமுறையைப் பொறுத்தவரையில் தாய்மொழிப்பள்ளிகள் தொடந்து கல்விச் சட்டத்தின் கீழ் தனிப்பட்டே இயங்கி வருகின்றன. அம்முறை மாற்றப்பட வேண்டும் என்ற கருத்து மீண்டும் தலையெடுத்துள்ளது.
கல்வி அமைச்சர் தெரிவித்த கருத்தைத் தொடர்ந்து அது குறித்து கல்வி அமைச்சருடன் விவாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மேற்கொண்ட முயற்சியின் விளைவாக நேற்று பிரதமர் துறை அமைச்சர் செனட்டர் அப்துல் வாஹிட் ஒமாருடன் நாடாளுமன்ற வளாகத்தில் ஒரு கலந்துரையாடல் நடந்தது.
அரசியல் நோக்கமற்ற அந்நிகழ்வு ஒரு பண்பான சூழ்நிலையில் சுமார் 90 நிமிடங்கள் நீடித்தது. கடந்த 65 ஆண்டுகாலமாக திரும்பத் திரும்ப எழுப்பப்பட்டுவரும் இப்பிரச்சனையின் பின்னணியை அமைச்சருக்கு விளக்கி இளம் வயதில் மாணவர்கள் தங்களுடைய கல்வியை தாய்மொழியில் கற்பதின் அவசியத்தையும் அதன் பலன்களையும் அவரின் கவனத்திற்கு கொண்டு வருவது மட்டுமே இச்சந்திப்பின் முக்கிய நோக்கம்.
தனது இளமை கால அனுபவங்களை பகிர்ந்து கொண்ட வாஹிட், என்றாவது ஒருநாள் நமது நாட்டில் அனைத்து இனங்களும் ஒருமித்த உணர்வுடனான நிலையில் வாழ்வதைக் காண வேண்டும் என்றும், அதில் புரிந்துணர்வும் நல்லிணக்கமும் இருக்க வேண்டும் என்றார்.
தாய்மொழிக் கல்விக்கான ஆதங்கத்தை வெளிபடுத்திய குழுவினர், அரசியலுக்காக தாய்மொழிக்கல்விக்கு எதிரான குரல் அவ்வப்போது எழுப்பப்படுவது புரிந்துணர்வுக்கும் நல்லிணக்கத்திற்கும் தடங்கலாகவே இருந்து வருகிறது என்றனர். கடந்த கால அனுவங்களை வைத்து பார்க்கும் போது இன ஒற்றுமை தற்போது சவாலாக இருப்பதற்கு காரணம் தாய்மொழிப்பள்ளிகள் அல்ல, மாறாக அரசாங்கத்தின் இனவாத கொள்கை அமுலாக்கம்தான் என்றனர்.
இந்த சந்திப்பில் நியாட் அமைப்பைச் சார்ந்த டத்தோ தஸ்லிம், சுவராம் மனித உரிமை இயக்கத்தின் தலைவர் கா. ஆறுமுகம், தமிழ் அறவாரியத்தின் தலைவர் அ. இராகவன், சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியத்தின் தலைவர் கா. உதயசூரியன், சிலாங்கூர் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் லா. சேகரன், அதன் செயலாளர் இரா. இராமச்சந்திரன், தமிழ் அறவாரியத்தின் ஆய்வாளர் ஜீவி காத்தையா, நியாட் அ மைப்பின் அ தோன் மற்றும் அபு பாக்கார் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைத்தனர்.
இந்தச் சந்திப்பின் போது தமிழ் அறவாரியத்தின் தலைவர் இராகவன் அவர்கள், தமிழ் அறவாரியம் வெளியிட்டு வரும் தமிழ்க்கல்வி கட்டுரைத்திரட்டு மலர்களை (Tamil Education Journal) வாஹிட் அவர்களுக்கு வழங்கினார்.
தமிழ் மொழியின் நிலைத்தன்மைக்கு உண்மையாக சிந்திப்பவர்களுக்கும் அதன் மீது உண்மையான பற்று இருப்பவர்களுக்கும்தான் இத்தகைய செயலைச் செய்ய வரும். ம.இ.க. கல்விக்குழு என்றாவது கல்வி அமைச்சரைக் கண்டு தாய்மொழி பள்ளிக்கூடங்கள் நிரந்தரமாக இருக்க வேண்டியவை. அதன் வளர்ச்சிக்கு வில்லங்கம் விளைவிக்காவண்ணம் அரசாங்க கல்வி கொள்கை இருக்க வேண்டும் என்று பேசி இருப்பார்களா? இன்றும் ம.இ.க. கல்விக்குழு செத்தப் பாம்பாகத்தான் சிவனே என்று இருக்கின்றது. “நான் கொடுத்த அறிக்கையை பத்திரிகையில் போட்டுடிட்ங்களா?” என்று தமிழ் பத்திரிகை நிருபர்களைப் பார்த்து கேட்கத்தான் தெரிகின்றதே ஒழிய அந்த செய்தி தமிழ் பத்திரிகையில் வந்ததா அல்லது தமிழ் பத்திரிக்கையைப் படிப்போமே என்ற அக்கறை இல்லாத விளம்பரப் பிரியர்கள்தான் ம.இ.க – வில் இன்று அதிகமாக காண முடிகின்றது. இம்முயற்சியை மேற்கொண்ட இச்செய்தியில் குறிப்பிடப்பட்டோருக்கு நன்றியும் வாழ்த்துக்களும் உரிதாகுக.
கடந்த 65 ஆண்டுகாலமாக திரும்பத் திரும்ப எழுப்பட்டுவரும் இப்பிரச்சனையின் பின்னணியை அமைச்சருக்கு விளக்கி இளம் வயதில் மாணவர்கள் தங்களுடைய கல்வியை தாய்மொழியில் கற்பதின் அவசியத்தையும் அதன் பலன்களையும் அவரின் கவனத்திற்கு கொண்டு வருவது மட்டுமே இச்சந்திப்பின் முக்கிய நோக்கம் —- பிச்சைக் கேட்பதற்கு சமமானது இது. அரசியல் சாசனத்தில் குறிப்பிட்ட ஒன்றுக்கு இவ்வளவு கெஞ்சி கூத்தாட வேண்டுமா? தாய்மொழி கல்வி பற்றி கேள்வி எழுப்புபவன் அல்லது முரணான கருத்து சொல்பவன் – அவன் எவனாக எந்த கொம்பனாக இருந்தாலும் பிடித்து உள்ளே போட வேண்டும் என்று உறுதியாகவும் அறுதியாகவும் சொல்வதை விட்டு விட்டு இப்படிக் கெஞ்சுவது கேவலமாக இல்லையா? இன்னும் எத்தனைக் காலம் தான் இப்படிக் கூனுக் குருகி நிற்கப் போகிறோம்?
சார் தேனீ தமிழ் அல்லாதவர்கள் தமிழை புகழ் பாடியது அந்த காலம்
இப்போ அவர் அவர் தாய் மொழியை நன்றாக எழுத படிக்க கற்றுக்கொண்டு வருகின்றனர் . அகவே நீங்கள் சொல்லும் தமிழர்கள்
முதலில் தமிழர்கள் தான என்று பாருங்கள் சார் . தமிழர்களுக்கு தமிழ் உணர்வு 200 ஆண்டுக்கு முன்பு தான் தெரியும் . அதையும் ஒரு ஆங்கிலன் சொல்லி தான் தெரியும் . ம இ க வில் இப்பொது யாரு ஆத்திகம இருக்கா ..?
இந்த கலந்துரையாடல் பற்றி மஇகா-வின் கருத்து உரை எப்படி இருக்க வேண்டும் என மஇகா தலைவர் மற்ற மஇகா தலைவர்களுக்கு பாடம் நடுத்துவதாக ஒரு கற்பனை !
இந்நாட்டில் தாய்மொழியான தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் எத்தனை முறை வேண்டுமானாலும் திருப்பி திருப்பி உயிரை விட தயாராக இருக்க வேண்டும். காலை சாப்பாட்டை முடித்து கொண்டு மாலை விருந்துவரையில் உண்ணாவிரதம் இருக்க தயாராக வேண்டும். (தமிழனை இளித்தவாயன் என்று நிச்சயமாக நம்பி கொண்டு) தமிழனை எவ்வளவு கேவலமாக பேச முடியுமோ அத்தனையும் பேசி “தமிழன் இளித்தவாயன்” என்று நினைத்தாயா ? என்று ஆவேசமாக பேசி வேஷம் போட வேண்டும். அப்போதுதான் நமக்கும் தமிழ் உணர்வு இருப்பது நிரூபணம் ஆகும்.
ஒருவன் கம்பை எடுத்தால், நாமும் கம்பை எடுக்க வேண்டும் என்பது அவசியமல்ல. கம்பை எடுத்தவன் கையை உடைக்க பலமிருந்தால் அதனை கம்பைக் கொண்டே அடித்து உடைக்கலாம். அவ்வாறு செய்ய பலமில்லையானால், கம்பை எடுத்தவனிடம் நயமாகப் பேசி தானே கம்பை கீழே போட வைக்கலாம். இரண்டு வகையிலும் வெற்றிதான். வழிதான் வேறு. நிலைமையைப் புரிந்துக் கொண்டு நேரத்திற்கு ஏற்ற தாளம் போடுபவரே புத்திசாலி.
“தமிழனை எவ்வளவு கேவலமாக பேச முடியுமோ அத்தனையும் பேசி “தமிழன் இளித்தவாயன்” என்று நினைத்தாயா ? என்று ஆவேசமாக பேசி வேஷம் போட வேண்டும்”.
சிரிப்போ சிரிப்பு போங்க ஐயய்யோ 1 மலேசியா. இப்படியெல்லாம் பேசுவது கை வந்த கலையோ? இனிமேல் நானும் இப்படி பேச கற்றுக் கொள்ள வேண்டும்.
“இந்நாட்டில் தாய்மொழியான தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் எத்தனை முறை வேண்டுமானாலும் திருப்பி திருப்பி உயிரை விட தயாராக இருக்க வேண்டும்.”
அதெப்படி “எத்தனை முறை” வேண்டுமானாலும் திருப்பி திருப்பி உயிரை விட முடியும்?. இதைத்தான் “இளிச்சவாயன்” ம.இ.க. தலைவர்கள் என்று சொன்னீர்களோ. இப்படிபட்ட பேச்சைக் கேட்டு அதன் பொருளை உணராமல் கை தட்டும் கூட்டம் இளிச்சவாயன் கூட்டம்தான்.
MIC – சப்பிகள் சப்பி கொண்டுதானே இருக்க முடியும்–முதுகு எலும்பில்லா ஈன ஜென்மங்கள்.
அவரவர் தாய்மொழியை படிப்பது அவசியம். அதனால் தமிழர் அல்லாதவர் தமிழருக்கு நண்பராக இருக்க முடியாது என்பதல்ல கருத்து. எப்படி தமிழர் மற்ற இனமான சீனர், மலாய்க்காரர் போன்றோடு நண்பராக வாழுகின்றோமோ அவ்வாறே பிறருடனும் வாழலாமே. ஆனால் தமிழனை “இளிச்சவாயன்” என்று நினைத்துக் கொண்டு எம்மைப் போலவே தமிழில் பேசி எம்முதுகில் குத்துபவனை என்றும் தமிழர் நண்பராக ஏற்றுக் கொள்ள முடியாது. இதனை பிறர் அறிந்துக் கொள்ள வேண்டும். தமிழருக்கு தமிழ் உணர்வு 200 ஆண்டுகளுக்கு முன்புதான் தெரியுமா? இதுவரை இந்த புதிய கண்டு பிடிப்பை யாரும் என்னிடம் சொல்லவே இல்லையே!தென் இண்டியாவில் இன்று பிற வட்டார மொழிகள் வாழுகின்றன என்றால் அதில் தமிழருக்குப் பெரும் பங்கு உண்டு. இல்லையேல் பிற மொழிக்காரர்கள் இன்னமும் சமஸ்கிருதம்தான் படித்துக் கொண்டிருப்பீர்கள் என்பதை மறந்து பேசாதீர்கள்.
“ம.இ.க. – வில் இப்போ யாரு ஆத்திகமா இருக்கா” – ன்னு கேட்டால் எல்லோரும் நாத்திகமா போயிட்டாங்கன்னு சொல்ல வருகின்றீர்களா? அப்படி ஒன்னும் எனக்குத் தெரியலே. ம.இ.க. தலைவர்களெல்லாம் நேரத்திற்கு ஏற்றபடி, பாபாக்களுக்கும், குருஜிகளுக்கும் சலாம் போடுவதைப் பார்த்தால் இவர்கள் புதியதொரு மதத்திற்கு மாறி போய் விட்ட மாதிரி எனக்குத் தெரியுது. அதனால அவர்கள் ஆத்திகம் பேசினால் என்ன நாத்திகம் பேசினால் என்ன?
என்னாது தமிழர்களுக்கு தமிழ் உணர்வு 200 ஆண்டுக்கு முன்பு தான் தெரியுமா? அப்போ சோழ மன்னன் யாரு? உங்கக்கா புருஷனா?
எல்லாப் பள்ளிகளிலும் தமிழ், மலாய், சீனம், ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளும் எல்லா இனம் மாணவர்களும் கற்றுக்கொள்வதற்கும் கற்பிப்பதற்கும் கட்டாயம் ஆக்கப்பட வேண்டும். எதிர் கால மலேசியர்கள் எல்லாருடைய கலாசாரத்தையும் தெரிந்திருப்பது அவசியம். இந்த முறையில் பாடங்கள் போதிக்கப்படுவது காலத்தின் கட்டாயம். மலேசியர்கள் எந்த ஒரு இனவாதத்திற்கும் அடிவருடிகளாக இருப்பது என்பது அவசியமற்றதாகி விடும் என்பதை கவனத்தில் கொள்வோம். தேசிய கீதத்திலும் ருகுநேகாராவிலும் பதிவிட்டத்தை போன்று “துஹான்” என்ற சொல் பதம் உண்மையானால், ஆரம்பப்பள்ளி, இடைநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி என்ற முறை படி எல்லா மொழிப் பள்ளிகளும் ஒரு குடையின் கீழ் இயங்குவது என்பது மலேசியர்களுக்கு பெருமைக்குரியதே.
சார் பாசே புக் லே பாருங்க
பேர் ச து ஆன் ஆகம ஹிந்து என்று இருக்கும் . அதிலே நிறைய தலைவர்கள் வேறே இருகாங்க . இதெல்லாம் அரைகுறை அறைவேர்காடு மதத்தை உருவாகுது போல இருக்கு . 2
செகோல வாவசன் எல்லா மொழி பாடங்களையும் கட்பிக்கிறதே,சிறப்பான கட்டிடம்,திடல்,பயிற்சி பெற்ற ஆசிரியர் மற்றும்2.அதில் நம் வரிபணமும் வுள்ளதே,ஏன் விரயம் செய்வானே.நாம் அரசாங்கடையே நம்பி வாழ்பவர்,ஏன் அரசின் சலுகையை ஏற்பதில்லை.(பணம் சேர்வதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், சேர்ப்பதற்கான முயற்சி உண்டாகும். இருப்பதையும் இழப்பதற்கான விதி இருந்தால் சோம்பல் உண்டாகும்.)குறள்0371.ஏதேனும் எதிர்கால கலாசார சிக்கல் இருப்பின் மக்களுக்கு பகிரவும்,நன்றி வாழ்க நாராயண நாமம்.
அப்படினா பெரிய குடையாதான் பார்குனும்……ம்ம்ம்.
வீணே மாறி மாறி குறை சொல்வதை நிறுத்திவிட்டு தமிழ் மொழி காக்க, முயற்ச்சிகளை மேற்கொள்ளும் அன்பர்களுக்கு ஆதரவு கரம் கொடுப்போம்!!
முதலில் தமிழர்களை காக்க நடவடிக்கை எடுங்கள் . அச்செயல் பினாங்கிலும் , சிலாங்க்கூரிலும் தொடங்கட்டும் . வெறும் போட்டோவும் சவடாலும் வேண்டாம்
திராவிட