போர் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கெதிரான குற்றங்களைப் புரிந்துள்ள இலங்கை அரசு உடனடியாக தமிழ் அரசியல் கைதிகள் மேற்கொண்டுள்ள சாகும் வரை உண்ணாவிரதத்தை ஒரு சுமூகமான தீர்வுக்கு கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார் சுவராம் மனித உரிமை இயக்கத்தின் தலைவர் கா. ஆறுமுகம்.
இலங்கை முழுவதும் 14 சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள 216 தமிழ் அரசியல் கைதிகள் இரண்டாவது முறையாக தங்களின் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் கடந்த 8-ஆம் தேதிமுதல் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் சிலர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பிபிசி தமிழோசை செய்தி அறிவித்துள்ள அதே வேளையில் இன்னும் பலர் வலுக்கட்டாயமாக மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள், “தாயகத்தையும் மக்களையும் நேசித்தோம், எமக்கு விடுதலை கிடைக்கவில்லை சிங்கள பேரினவாதத்திடம் இருந்து. ஆகையால் எமது உயிர்களை அர்ப்பணிக்கிறோம், அன்பு மக்களே, நன்றி! – தமிழ் அரசியல் கைதிகள்” என்ற உருக்கமான குறுஞ்செய்தியை இன்று செம்பருத்தியிடம் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில், கிருபாணந்தன் செல்லதுரை, குசாந்தன் சந்திரலிங்கராஜா மற்றும் கிருபாகரன் மகாதேவன் என்ற மூவரும் மலேசிய அரசாங்கத்தால் கடந்த வருடம் மே மாதம் கைது செய்யப்பட்டு திரும்பவும் இலங்கைக்கு அனுப்பட்ட அகதிகள் ஆவர். இவர்களில் முதல் இருவர் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையாளர் அலுவலகத்தில் அகதிகளாக பதிவானவர்கள். மற்றும் ஒருவர் அகதி பதிவுக்கு காத்திருந்தவர். உண்ணாவிரதம் இருக்கும் இவர்களின் உயிருக்கு ஆபத்து வரும் நிலை உருவாகுமேயானால் அதற்கு மலேசிய அரசாங்கமும் உடந்தையாக இருந்தது என்ற பழி வரலாற்றில் பதிவாகும் என்கிறார் வழக்கறிஞருமான ஆறுமுகம்.
இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தம்மை பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று கடந்த மாதம் 12ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியிருந்தனர். ஆனால், நவம்பர் 7 ஆம் தேதிக்கு முன்னதாக இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வு வழங்கப்படும் என்று இலங்கை அதிபரால் வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து அவர்கள் அதனை கைவிட்டிருந்தனர்.
அனைதுலகச் சமூகமும், பல நாடுகளின் ஊடகவியலாளர்களும், அரசியல்வாதிகளும் இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் தொடர்பான மனித உரிமை பிரச்சனைகளை உலக அளவில் எழுப்பியுள்ளார்கள். ஆனால், மனித உரிமை ஆணையத்தின் ஆலோசனைகளை புறக்கணித்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தமிழர்கள் மற்றும் அவர்களுக்கு சாதகமானவர்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கை பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கிறது. குற்றச்சாட்டு அல்லது விசாரணை இன்றி தடுத்து வைக்கும் முறையை ஒழிக்க வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.
புதிய அதிபர் இலங்கையில் ஜனநாயகத்தை நிலை நாட்டுவேன் என உத்திரவாதம் கொடுத்து, அரசியலமைப்புத் திருத்தங்கள் செய்வதாக கோடிகாட்டியுள்ளார். இது சார்பாக நல்லிணக்கத்துக்கு உண்மையான அர்த்தம் கொடுக்க தமிழ் அரசியல் கைதிகள் சட்டத்தின் அடிப்படையிலேயே புறக்கணிக்கப்படுகின்ற கலாச்சாரம் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
நம் உடன் பிறப்புகள் நிலையை என்னும் போது மனம் கனக்கிறது– ஏன் நம்மவர்களுக்கு இந்த இழி நிலை? எல்லாம் ஒற்றுமை இன்மையால் வந்த வினை– எத்தனை ஆயிரம் உயிர்கள் வாங்கப்பட்டன? தமிழர் தலைவன் என்று கூறிக்கொள்ளும் ஈன விதை இல்லா பிண்டங்கள்- என்ன சொல்லி என்ன பயன்? இந்தியா என்று பெருமை பேசும் ஜென்மங்களுக்கு சூடு சொரணை கிடையாது–
சிரியா நாட்டு அகதிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மலேசியா இலங்கை அகதிகளை திருப்பி அனுப்பியது மனித அபிமானம் அற்ற போக்கை காட்டுகிறது. தமிழ் அகதிகள் சார்பாக பேச தமிழர்கள் தான் முன்வர வேண்டும். ஐயா ஆறுமுகம் அவர்களுக்கு நன்றி
MIC – கம்மனாட்டிகளுக்கு விதை இல்லையே! பிறகு யார் பேச முடியும்? நம்பிக்கை மன்னன் அந்த ஈன ஜென்மங்களைத்தானே தன்னுடன் வைத்திருக்கிறான்.
mohan சொல்வதை வரவேற்கிறேன். சிரியா நாட்டு அகதிகளுக்கு ஒரு விதமாகவும், இலங்கை நாட்டு தமிழ் அகதிகளுக்கு ஒரு விதமாகவும் நம் நாட்டின் கூறுகெட்ட அரசியல்வாதிகள் நடந்து கொள்வது மிகவும் கேவலமாக உள்ளது. ம.இ.கா. வினரை விட்டுத் தள்ளுங்கள், தறுதலைகள். மலேசிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்,[தமிழர்கள்] என்னதான் கிழிக்கிறார்கள்?
ஐய்யா கா . ஆறுமுகம் அவர்களே .உங்களுக்கு ஒரு உண்மை செய்தி !! சமீபத்தில் நான் வசிக்கும் இடத்தில் ஒரு இலங்கை தமிழர் குடும்பம் உண்டு . ஒரு நாள் இங்குள்ள உணவகத்தில் அவர்களை சந்தித்தேன் .அப்பொழுது ஜோகூர் மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற மாவீரர் தினத்தில் கலந்து கொள்ளுமாறு அழைத்தேன் .ஆனால் அவர்கள் மிக அலட்சியமாக புறக்கணித்தனர் .இதை அங்கே நேரில் கண்ட எனது நண்பர் என்னிடம் விசாரித்தார் .பிறகுதான் அவர் மூலமாய் புரிந்தது .அவர்கள் ஈழ அகதிகள் அல்ல என்றும்,போர் நடைபெற்ற பகுதியை சேர்ந்தவர்கள் அல்ல என்றும் ,அவர்கள் அனைவரும் தலைநகரில் ஐநா அகதிகள் அட்டையை தவறான குறிப்புகளை கொடுத்து பெற்றவர்கள் என்று . இது ஒரு எடுத்து காட்டுதான் .ஆனால் இன்னும் நிறைய உண்டு . ஐய்யா ஆறுமுகம் அவர்களே , உண்மையான ஈழ அகதிகள் என்றால் நம்மால் இயன்ற உதவிகள் செய்யலாம் .ஆனால் பொய் தகவல் கூறி நம்மை ஏமாற்றும் இலங்கை தமிழர்களும் உண்டு .
சிங்கம் அவர்களே எதிர்க்கட்சி இந்திய தலைவர்களால் ஒன்னும் புடுங்க முடியாது என்பது நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும் காரணம் அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இல்லை .சீரியா நாட்டு அகதிகளுக்கு அம்னோ அரசாங்கமே உதவ முன் வந்துள்ளது ,ஆகவே மலாய் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அகதிகள் விவகாரத்தில் எந்த வேலையும் இல்லை .மஇகா வினர் தறுதலைகள் என நீங்களே கூறி விட்டீர்கள் .தமிழர்கள் ஆகிய நாம் ஒற்றுமையாய் இருந்தால் சாதிக்கலாம் .ஒன்று படுவோமா ?
.
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்.. இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டேன்..! பொங்கும் தமிழர்களுக்கு இன்னல் விழைந்தால்..! சங்காரம் தமிழென்று சங்கே முழங்கு..! சங்கே முழங்கு..! என்ற புரட்சி கவிஞரின் பாடலை கேட்டுக் இரசித்துக் கொண்டு இருப்போம்..?
saivam
அகதிகள் விஷயத்தில் கூட இன பாகுபாட்டை கொண்டிருக்கிறது இந்த கூறு கெட்ட அரசாங்கம்.நம் பிரதிநிதிகளின் லட்சணம் அப்படி உள்ளது.என்ன செய்வது நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.
இன பாகுபாடு எல்லா விசயங்களிலும் இருக்கின்றது– இது தினசரி நடக்கின்றதுதானே– நம்மையே வந்தேறிகள் என்று சொல்லும்போது அகதிகளை என்ன செய்வார்கள்–அதிலும் தமிழர்கள் என்றால் இளக்காரம் – நம்மை எவ்வளவு கேவலமாக நடத்தமுடியுமோ அவ்வளவும் அதற்க்கு மேலும் செய்வான்கள் இந்த நாதாரிகள்.
இங்கும் எங்கும் அகதிகளாக இருப்பவர்கள் தமிழீழ தலைவர் அண்ணன் பிரபாகரனுடன் இருந்த உண்மையான போராளிகள். அதே வேளையில் காட்டிக்கொடுத்த எட்டப்பன் கருணாவின் கையாட்களும் உண்டு. எதையும் மிக எச்சரிக்கையுடன் முன்னெடுத்து செல்ல வேண்டிய இக்கட்டான கால கட்டம் இது. நன்றி!
எல்லா இயக்கங்களிலும் துரோகிகள் உண்டு . நாம் தான் அதனை பெரிதாக்கி பயப்படுகிறோம் . இது வெlளையன் வித்தித்த விதை