தமிழ் வளர்ச்சியைப் பற்றி நாம் பேசும்பொழுது இதுகாறும் நம் கவனம் பெரும்பாலும் தமிழ் பள்ளிக் கூடங்கள் மீதும், தமிழ் போதனை மீதும்தான் அதிகமாக இருந்து வந்துள்ளது. இது ஒரு புறம் இருக்க, தமிழ் மொழியை தாய் மொழியாகக் கொண்டவர்கள் தமிழ் பேசுவதால் தன் கௌரவமோ அல்லது பிள்ளைகளின் கௌரவமோ தாழ்ந்து விடும் என்று என்னுகின்றார்களே அதனை நீக்க சில செயல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
“தமிழ் பள்ளியே எங்கள் தேர்வு” என்று பிரதமர் அலுவலகத்தின் கீழ் இயங்கி வரும் தமிழ் பள்ளி நடவடிக்கைக் குழு எடுத்த பிரச்சாரத்தைப் போன்று தகுந்த யுக்திகளுடன் செயல்பட்டால் முதலில் நம் மக்களின் மனதில் தமிழ் மொழியைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையை நீக்கி மறு மலர்ச்சியை ஏற்படுத்தலாம்.
தமிழ் மொழியில் இளங்கலைப் பட்டம் பெற இந்நாட்டில் நமக்கு இருக்கும் ஒரே இடம் மலாயா பல்கலைகழகம். இங்கே தமிழ் மொழி என்பது முழு நேர பாடத் திட்டமாக இருந்து வருகின்றது. இந்நாட்டில் தமிழ் மொழி ஆர்வலர்கள் பலர் வயது தாண்டியவர்கள் என்பதால் இவர்கள் பல்கலைகழகத்தில் சேர்ந்து படித்து தத்தம் மொழி ஆற்றலை வளர்த்துக் கொள்ள முடியாத நிலை உள்ளது.
இதற்கு மருந்தாக மலாயா பல்கலைகழகம், பல்கலைகழக பதிவிற்கு தகுதி பெற்றோருக்கு ‘Pendidikan Jarak Jauh’ (PJJ) என்னும் முறையில் தமிழ் மொழி இளங்கலைப் பட்டத்திற்கு தமிழ் மொழி போதனா முறையை மேற்கொள்ள வழி வகுக்கலாம். இதற்கு வாய்ப்பு அதிகமாகவே உள்ளது காரணம் பல்கலைகழகங்களுக்குக் கொடுக்கப் படும் அரசாங்கத்தின் மானியம் தற்சமயம் குறைக்கப் பட்டுள்ளதால் மலாயா பல்கலைகழகம் தனது சுய வருமானத்தைப் பெருக்க பல வழி வகைகளைத் தேடிக் கொண்டிருக்கின்றது.
இந்நேரத்தில் வருமானத்தைப் பெருக்கும் இதைப் போன்ற பாட திட்டங்களுக்கு அப்பல்கலைகழகம் முன் வரும் என்று நம்பலாம். இதை அரசியல் ரீதியாக இல்லாமல் மொழி ரீதியாக தமிழ் அறவாரியம் அங்குள்ள நம் பேராசிரியர்களின் வழி கொண்டு செல்வோமானால் நல்வழி பிறக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதே நேரத்தில் மாணவர் பதிவு அருகி வரும் இந்திய ஆய்வியல் பிரிவுத் துறைக்கு புத்துயிர் ஊட்டியதாகவும் இருக்கும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த பலனும் கிடைக்கும்.
நாம் எவ்வளவுதான் தமிழ் மொழி கற்க, கற்பிக்க மேலும் தொடர்ந்து தமிழ் மொழி வளத்தைப் பெருக்க மேல் நிலைப் பள்ளிகளில் முயற்சி கொண்டாலும் தரமான தமிழ் மொழி நூல்கள் கிடைக்க வில்லையானால் தமிழ் மொழியை எப்படி வளர்ப்பது?. 1960 – 2000 -ம் ஆண்டுகள் வரை நமக்கு தமிழ் நாட்டில் இருந்து சிறந்த அறிஞர்கள் எழுத்தார்கள் எழுதிய நூல்கள் கிடைத்ததுபோல் இன்று நமக்கு சுலபமாக கிடைப்பதில்லை.
தமிழ் மொழி நூல்கள் விற்கும் நம்முடைய புத்தக கடைகளும் அரிதாகிக் கொண்டே வருகின்றது. இந்நிலையில் ஒரு மாற்றம் நமக்கு வேண்டும். தமிழ் அறவாரியம் முன் நின்று முதலில் தமிழ் மொழி நூல்கள் கிடைக்க ஒவ்வொரு மாநில தலைநகர்களிலும் தமிழ் புத்தக விற்பனை மையங்களை நிறுவ வழி காண வேண்டும். தற்பொழுது கோலாலம்பூரில் இருக்கும் புத்தக வெளியீட்டாளர், விற்பனையாளர்களைக் கொண்டே இதனைத் தொடங்கலாம். செய்வீர்களா? பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் சிந்தனைக்கு நாளை சந்திப்போம், சிந்திப்போம்.
200 ஆண்டுகள் தமிழ் ப்பளிகள் மாநாடு யோசிக்க தவறிய நல்ல
கருத்து. தமிழ் அறவாரியத்தில் இதையெல்லாம் யோசிக்க தகுந்த தமிழ் உணர்வுள்ள தலைவர்கள் இல்லை. ஆரம்பத தமிழ்பபள்ளிகளின் மேகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக அரசு ரீதியில் போதனா வசதியில் தமிழ் மொழி மேம்பாட்டுக்கு இது எதையும் செய்ய வில்லை. கல்வி உயர்வில் ஸ்ரீமுருகன் அலட்டிக்கும் அளவுக்கு யுக்க்தியும் இல்லை. எல்லாம் தேய் பிறைதான். தமிழ் மொழி விண்மீன் பிம்பங்கள் துயரத்தில் உள்ளது. கட்டுரையாளர் பெயர் சொன்னால் இன்னும் போகலாம். அனால் நன்று என்று 49 மார்க் தரலாம்.
என்னுகின்றார்களே என்பதை திருத்தி இருக்கலாம்.
யாரப்பா இந்த வேலையைச் செய்தது? எம்முடைய கருத்தையே ஒரு கட்டுரையாகப் போட்டு எமக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்துள்ளீர்கள் ஆசிரியர் அவர்களே! நல்லது செய்திருக்கின்றீர்கள். இக்கருத்தைப் பற்றி மேலும் ஆழமாக அலச வேண்டியுள்ளது. நாம் அனைவருக்கும் இக்கட்டுரைத் தலைப்பை ஒட்டிய பல சம்பவங்கள் நடந்திருக்கலாம். அதனை இங்கே பகிர்ந்து கொண்டு எப்படி தாய்மொழி கற்பதும் கற்பிப்பதும், தாய்மொழியில் கலந்துரையாடுவதும் நமது அறிவையும் ஆற்றலையும் பெருக்கும் என்பதைப் பற்றிச் சிந்தித்துக் கருத்துப் பகிர்வு செய்து கொள்வது உலக வாழ் தமிழர்களுக்கு நல்லதொரு விருந்தாகும். நாளை சந்திப்போம். சிந்திப்போம்.
மலேசியா வாழ் தமிழர்கள் தமிழ் மொழி என்றாலே “அது எனக்கோ அல்லது என் பிள்ளைக்கோ சோறு போடுமா” என்ற கேள்வியைத்தான் முதலில் கேட்கின்றார்கள் அல்லது அதன் வழியேதான் சிந்திக்கின்றார்கள். “அறிவு” என்பது பொருள் ஈட்ட உதவி புரியும் கல்வி என்ற அறியாமையில் வாழ்வோரின் சிந்தனை இது. இவ்வாறு சிந்திப்பதால் அறிவை ஒரு சிறிய வட்டத்திற்குள் அடக்கி விடும் என்பதை அறியாதார். அப்புறம் இவர்கள் தம் பிள்ளைகளோ அல்லது தாமோ அறிவாளியாக வாழ வேண்டும் என்று நினைப்பது ஒரு பொய்யானா வாழ்க்கைதானே?
நேற்று வயது முதிர்ந்த அன்பரைச் சந்தித்தேன். நான் படித்த இடைநிலைப் பள்ளியில் , நான் பிறந்த வருடத்திலேயே அவர் ஆசிரியராகப் பணியாற்றியவர் என்று கூறியதும் எமக்குத் தூக்கி வாரிப் போட்டது. தன் பிள்ளையைப் படிக்க வைத்து ஒரு ஆசிரியராக்கி மண வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து அவ்வாழ்க்கையே மண்ணாகிப் போனதைப் பற்றி என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். நான் அவரிடம் ஒரே வார்த்தையைத்தான் சொன்னேன். “உங்கள் மகனுக்குக் கல்வியை கொடுத்த அளவுக்கு உலக அறிவை நீங்கள் கொடுக்கவில்லை” என்றேன். அவர் மகன் பெற்ற கல்வி தமிழ் அல்லாத கல்வி. அவரும் ஒப்புக் கொண்டார். என் மகனுக்கு கல்வியை ஊட்டினேன் ஆனால் தாய்மொழியை ஊட்டவில்லை என்று வருத்தப் பட்டுக் கொண்டார். பெற்ற தாயின் மொழி அறியாதலால் வந்த வினை! மலாய் மொழியில் இலக்கியங்கள் குறைவு. அதிலும் அறிவான விசயங்களைப் பேசும் இலக்கியங்களோ இன்னும் குறைவு. ஆங்கில மொழியில் அறிவார்ந்த இலக்கியங்கள் பல. அதிலும் சேக்ஸ்பியர் கால ஆங்கில இலக்கியம் இன்று காண்பது குறைவு. தமிழ் மொழி இலக்கியமும், அறிவுச் சிந்தனையை வளர்க்கக் கூடிய தமிழ் அறிஞர்களின் உரை நூல்களும் என்னில் அடங்கா. ஆனால் தாய்மொழியைக் கற்காமல் இவ்வறிவைப் பெறுவது எங்கனம்? இப்பொழுது கை நிறைய சம்பாதிக்கும் அம்மகனின் அறியாமையால் அவன் வாழ்க்கை சீரழிந்து கொண்டிருக்கின்றது என்று புலம்பினால் என்ன பயன்? ஆங்கிலம் சோறு போட்டது ஆனால் கூடவே சோதனையையும் கொடுத்தது காரணம் புத்தகத்தைப் படித்த அம்மகன் இப்பூவுலகத்தைப் படிக்காமல் போய் விட்டான். கண் கெட்டப் பிறகு சூரிய வணக்கமா?
ஹிந்துக்கள் ஞானிகள் வுலகுக்கு ஞானத்தை கற்பிப்பவர்கள்,அதாவது ஞானிக்கே ஞான வுபதேசம் கொடுப்பவர்கள்.
மாணவர்களுக்கு திருக்குறளை / திருவாசகத்தை போதிதாலே போதும்.அது ஆசிரியருக்கு வுடல்/மனம் ரீதியாக பல தொல்லை கொடுக்கும்.ஆறு வருடம் காலம் மிகையே.நாம் மதிக்க படவேண்டியவர்,மிதிக்க பட வேண்டியவர் அல்லர்.
வாழ்க நாராயண நாமம்.
தமிழ் பள்ளி வாழ தேவமணி போல தமிழ் படிக்க தெரியாத மட சூன்யக்காரன் தலைவனாக வர வேண்டும் தமிழ் MIC அரசியல்வதிகாளால் sri முருகன் tambhi ராஜஹ்வால் அழிந்து வருவதே உண்மை
ஞானிக்கு உபதேசம் என்பது அந்த பரமனாலேயே கருத்து அளவில் உணர்த்தப் படும். மாலங்கனுக்கு ஸ்ரீ கண்டர் பரமேஸ்வர ஆகமத்தை விளக்கிய போதே ‘நான்மறைக்கு’ பொருள் விளங்கியது. சைவ வைதீகர் இந்து என்ற போர்வையில் சைவரை இது நாள் வரை திசை திருப்பியதை திருமூலர் அன்றே மறுத்தார். ‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே’ என்று கூறி சிவாகமத்தின் சாரத்தை தமிழில் உரைத்தார். தமிழ் அறியாதார் சைவத்தை அறியார். தமிழர் அவர்தம் சமய நெறியை அறிய வைப்பது தமிழே என்று நாம் உணர்ந்தால், தமிழ் மொழி மீது நமக்குத் தாழ்வு மனப் பான்மை வராது.
ஏன் தேவமணியை மட்டும் தணித்து வைய வேண்டும்? அவரைத் தேர்ந்தெடுத்த அத்துனை ம.இ.க உறுப்பினர்களையும் வையுங்களேன். இந்நாட்டில் ம.இ.க. – வால் தமிழ் வளர்ந்தது தானைத் தலைவரோடு முடிந்து விட்டது.
தமிழ் மொழியை ஆரம்ப காலத்தில் யாழ்ப்பாணத் தமிழர்கள் தமிழ் ஒரு கூலிக்காரன் மொழி என்பதாக அதற்கு ஒரு பெயர் வாங்கிக் கொடுத்துவிட்டனர். அதே சமயத்தில் தமிழ்ப்பள்ளியில் படித்து அமைச்சர் ஆனார்களே அதன் பிறகு அவர்கள் பிள்ளைகள் யாரும் தமிழ்ப்பள்ளிகளுக்குப் போகவில்லை. வசதிப்படைத்தவன், பணம் உள்ளவன் யாரும் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பவில்லை. ஏன்? இதைவிடக் கேவலம் நண்பன் பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியரும் தமிழர் நலனுக்காக உழைத்தவரும் சாமிவேலுவிடம் வாழ்நாள்பூராவும் போராடியவரும் கூட ஆதி குமணன் அவர்கள் தனது பையனைத் தமிழ்ப் பள்ளிக்கு அனுப்பவில்லை. வீட்டில் கூட அவருக்குத் தமிழ் மொழிப் பயிற்சி கொடுக்கவில்லை! பெரியவர்களைக் கேவலப்படுத்துவதாக நினைக்க வேண்டாம். சராசரித் தமிழன் என்ன நினைக்கிறான்? மேலே குறிப்பிட்டவர்கள் தான் அவனுக்கு எடுத்துக்காட்டு. அவர்கள் வழியே தனது வழி என்று நினைக்கிறான். தவறில்லையே! தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்தியவர்கள் யார்? நல்லதே நடக்கும் என எதிர்பார்ப்போம்!
தமிழ் சோறு போடுமா என்று இங்கு மட்டும் அல்ல பெரும்பாலான தமிழர்கள் அப்படி கேட்கிறார்கள் -அறிவு கெட்ட ஈன தமிழர்கள். தன்னுடைய தாய் மொழிக்கு மரியாதை கொடுக்க தெரியாத -வேண்டாத ஈன ஜென்மங்களை என்ன சொல்வது? சீனர்களை பாருங்கள்— அவர்கள் எங்கிருந்தாலும் அவர்களின் மொழிக்கு முதன்மை தருவார்கள்– எந்த மட தமிழனுக்கும் சிறிது மொழிப்பற்று வேண்டுமானால் சீனர்களிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்– இதைப்பற்றி நான் முன்பே கூறி இருந்தேன் — நம்மவர்கள் எந்த எத்தனை மொழி வேண்டுமானாலும் கற்று கொள்ளலாம் ஆனால் நம் தாய் மொழி முதன்மையில் இருக்க வேண்டும். நம்மவர்களில் அறிவு சூன்யமுள்ளவர்கள் அதிகம் போலும்– என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை– பார்பனனின் மூளை சலவை இவ்வளவு தூரம் நம் வாழ்கையில் விளையாடி கொண்டிருக்கிறது. சுய மரியாதை இல்லா ஜென்மங்கள்– நான் சொல்வது நானே ஆகாயத்தை நோக்கி உமிழ்வதற்கு சமம் ஆனாலும் உண்மை அதுதானே — என் விரக்தியின் பிரதிபலிப்பு.
Mr En Thaai Tamil, Dont compare our Tamils to Chinese. Because nowadays 90% Chinese are ‘bananas’.(look like Chinese but speaking English)Even they dont practice speaking in their language at home…They more prefer English..We Tamils are not like that worse. Only the elite class shunning tamils schools. Dont worry..There are not much elites in our society so the rest at least will send their kids to Tamils School.
தமிழ் படித்தால் சோறு கிடைக்குமா ? நிச்சயம் கிடைக்கும் …இலங்கையில் 1965 அண்டு முதல் தாய்மொழி கல்வி அமூலில் உள்ளது ..கீழ்
தட்டு –மேல் தட்டு தமிழர்களின் பிள்ளைகள் எல்லாம் பாலர் வாக்கு முதல் பல்கலைகழகம் வரை தமிழில் தான் பயிலவேண்டும் இது சட்டம் ..பிரிட்டிஷ் பாடத்திட்டம் பின்பற்ற படும் இலங்கையில் எல்லா பிரிட்டிஷ் ஆங்கில விஞ்சான புத்தகங்களும் தமிழில் மொழி பெயர்க்கபட்டு உள்ளன (தென் கிழக்கு ஆசிய நாடுகளில் 12 வகுப்பு 4 பாடங்கள் சித்தி பெற்றால் எந்த வெளிநாடு பல்களிகலகங்களிலும் அனுமதி இலகையருக்கு மாத்திரமே முடியும்) …வெளி நாடுகளில் இன்று பணிபுரியும் இலங்கை தமிழா வைத்தியர்கள் (பிரிட்டின் நாட்டில் அரச மருத்துவ மனைகளில் பணிபுரியும் 10 மருத்துவர்களில் ஒருவர் தமிழில் படித்த ஈழ தமிழர் )..பொறியியல் நிபுணர்கள் அனைவரும் தமிழில் பயின்றவர்கள் ..
பெரியரில்லாதவர் சொன்ன நிலை தமிழ் நாட்டில் இல்லையே. தமிழில் படிக்காமலேயே தமிழ் நாட்டில் இளங்கலைப் பட்டம் பெற்று விடலாமே. என்னே தமிழ் நாட்டுத் தமிழரின் பெருந்தன்மை!
தங்க தமிழகத்தில் DARKDAR பட்டம் கூட விலைக்கு வாங்கலாம் ..முன்னாள் இலங்கை ஜனாதிபதி ஜெயவர்தன …மற்றும் நேரு ஆகியோருக்கு உலகின் முதல் தர பலகலை கழகங்கள் DOCTOR பட்டம் கொடுத்தும் இவர்கள் மறந்தும் இதை பெயரின் முன்னால் போடவில்லை ..ஹி ஹி ஹி தலிவர் கேட்டு ..பயமுறுத்தி வாங்கிய DARKDAR பட்டத்தை கொழுவிக்கொண்டு துள்ளும் துள்ளல் ..புல்லரிகின்றது
தமிழ் அறவாரியம் நடத்திய ஒரு நாள் மாநாட்டில் குடும்ப நிகழ்வுகளால் கலந்துக் கொள்ள முடியாமல் போனது. இருப்பினும் எமது கண்ணும் காதுமாக நிகழ்வில் கலந்து கொண்டவர் சொன்னது. “அம்மாநாட்டின் வழி பெரியதொரு மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது”. அம்மாநாட்டின் வழி தீர்மானம் போட்டதைப் படிக்கும் பொழுது மேலே சொன்னவரின் கருத்து உண்மை என பட்டது. தமிழ் அறவாரியம் தன்னை தமிழ் பள்ளிகளின் வழி தமிழ் கல்வி போதனைக்கு மட்டும் வட்டம் கட்டி செயல் பட்டால் தமிழ் எங்கனம் இந்நாட்டில் வளரும்? இந்நாட்டுத் தமிழ் பள்ளியில் தமிழ் கல்வி படிப்பிக்க ஆரம்பித்து 200 வருடங்களாகி விட்டனவே. இன்னும் அந்த சிறிய வட்டத்திற்குள்ளேயே தமிழைப் பார்பதுதான் “தமிழைப் பற்றிய தாழ்வு மனப் பான்மை” என்பது. ஏன் உங்களுக்குள் இப்படி ஒரு சிறிய வட்டத்தை ஏற்படுத்திக் கொள்கின்றீர்கள்? அங்கே இருப்பவர்களில் தமிழர் அல்லாதோரும் பொறுப்பு வகிப்பதாலா? இந்நாட்டில் நாம் தமிழ் மொழியை பெரியதொரு வட்டத்திற்குள் கொண்டு வருவது பிறருக்கு நெருடலாக இருக்கும் என்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லையே! தமிழ் மொழிக்கு தமிழர் தலைவராக இருக்க வேண்டும் என்று தமிழர் எழுச்சிப்பறை சொல்வது இதனால்தான். “இடைநிலைப்பள்ளிகளில் தமிழ்மொழிப் பாடம் கட்டாயப் பாடமாக்கப்படவேண்டும்” என்று தீர்மானம் மட்டும் போட்டு விட்டால் போதுமா? அதன் செயல் வடிவத்தை தமிழ் அறவாரியத்தால் முன் வைக்க முடியுமா? அனைத்து தமிழ் மாணவர்களும் தமிழ் மொழியை ஆரம்பக் கல்வியாகப் பெற்றிருந்தால் மட்டுமே அத்தீர்மானம் செயல் வடிவத்திர்க்குக் கொண்டு வர முடியும். அவ்வாரில்ல்லாமல் யாரோ ஒருவர் முன் மொழிந்து பின்னொருவர் வழிமொழிந்து பயனற்ற தீர்மானத்தைப் போட்டு என்ன பயன்? உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று சொன்னது இது போன்ற தீர்மானங்களைத்தான்.
இந்நாட்டில், தமிழ் மொழி பல்கலைக்கழகம் வரை உயர தமிழ் அறவாரியம் போட்ட தீர்மானங்கள் என்ன? ஒன்றுமில்லை! பிற இன சங்கங்கள் அவர்தம் இன மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் படிக்க கல்வி உதவித் தொகை என்றும், வட்டியில்லா கடன் என்றும் கொடுத்து அவர்தம் இளைய தலைமுறையினரை கல்வியில் மேம்படுத்துகின்றன. அவ்வாறே அவர்தம் சங்கங்களில் உறுப்பினாராக இருப்போரின் பிள்ளைகளுக்கு மட்டும் எஸ்.பி.எம். மற்றும் எஸ்.டி.பி.எம் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்குகின்றன. ஏன் தமிழ் அறவாரியம் மலாயா பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வியல் துறையில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு உதவி நிதி வழங்கக் கூடாது? அரசாங்கத்திடம் இருந்து கோடிக்கணக்கில் கிடைக்கப் பெறும் பணத்தில் ஒரு பகுதியைக் கொண்டு இந்த நிதியை முன்னமே ஏற்படுத்தி இருக்கலாமே!. தமிழ் படித்த வருமானம் குறைந்த பல தமிழ் மாணவர்கள்தான் அங்கே படிக்கின்றனர். அவர்களுக்கு நிதி உதவி செய்வதில் ஏன் சுணக்கம்? இதுவரை செய்யவில்லை! இனியாவது செய்வீர்களா? இந்த கடமை தமிழ் அறவாரியத்திர்க்கு மட்டும் அல்ல MIED – க்கும் உண்டு. தேசிய நில நிதி மேம்பாட்டு கூட்டுறவு சங்கத்திற்கும் உண்டு. பேராக் மாநிலத்தில் இந்திய கல்வி அறவாரியம் பதிவு செய்து வைத்துக் கொண்டு வெறுமனே காலம் ஓட்டுவோருக்கும் உண்டு இந்த கடமை. இன்னும் தமிழர், தமிழ் மொழி சம்பந்தப் பட்ட பல இயக்கங்களுக்கும் இந்த கடமை உண்டு. தமிழ் மொழி பல்கலைக்கழகத்தில் நிலைத்து நிற்க அடுத்த ஆண்டு மலாயா பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்குத் தகுந்த கல்வி உதவித் தொகை வழங்கப் படும் என்று தமிழ் அறவாரியமும், MIED – யும் முதலில் விளம்பரம் செய்ய முன் வாருங்கள். மற்றவர் பின்னே வருவார்கள். வெற்று வேட்டுத் தீர்மானங்கள் தமிழையும், தமிழரையும் உயர்த்தாது.
என்று நாம் பொருளாதாரத்திலும் ,கல்வியுலும் பின்தங்கி இருக்கின்றோமோ ,என்று ஒற்றுமை இன்றி இருக்கின்றோமோ அது சமுதாயத்திற்கு பின்னடைவைத்தான் கொடுக்கும் .இதற்கு விடிவு நம் ஒற்றுமைதான் .வாரம் ஒருமுறை தமிழ் பாடம் உயர்நிலை பள்ளிகளில் கற்றுக்கொடுக்கப்பட்டால் அது அவர்கள் இடையே மொழி உணர்வை தக்க வைக்கும் .தேர்வுகள் தேவை இல்லை .
இந்தியாவில்7 கோடிதமிழர்வாழ்ந்தாலும், அவர்களையும்மற்றமொழிகளையும்மதிக்காமல்ஹிந்தியைஅந்நாடுதிணித்துகொண்டுஇருக்கிறது. இங்கேதமிழர்பெரும்பாலும்வாழ்ந்தாலும், நம்மவர்களேஹிந்திபாடல், படம்என்றுகலைநிகழ்ச்சி, ரேடியோ, tvகலீல்புகுத்துவதுகேவலம்
வாரம் ஒரு நாள் இடைநிலைப் பள்ளியில் நடக்கும் ‘POL’ வகுப்பிற்கு நம் மாணவர்கள் போவதைப் பற்றி பேசுவது நல்லது என்று நினைக்கின்றேன். ஆரம்ப கல்வியைத் தமிழ் பள்ளியில் பயின்ற மாணவர்களுடன், தமிழ் அறிவே இல்லாமல் வரும் மலாய் பள்ளியில் படித்த தமிழ் மாணவர்களுடன் சேர்த்து ஓர் ஆசிரியர் பாடம் சொல்லிக் கொடுத்தால் எப்படி இருக்கும்? இரு பிரிவினரின் தரம் அறிந்து, அவர்களை இரு பிரிவாகப் பிரித்து போதிக்க ஒதுக்கப் பட்ட 2 மணி நேரத்தில் எந்த அளவிற்கு கற்பிக்க முடியும்? இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழ் பள்ளியில் இருந்து திறமை மிக்க மாணவர்கள் அவ்விடத்தில் தாங்களுக்கு வேண்டிய கல்வியைப் பெற முடியாது என்று எண்ணி வசதி படைத்த சிலர் தங்கள் பிள்ளைகளை நகரத்தில் இருக்கும் தனியார் தமிழ் பிரத்தியேக வகுப்பிற்கு அனுப்பி வைக்கின்றார். ‘POL’ வகுப்பிற்கு மட்டம் போடுகின்றார்கள். இன்னும் பல தமிழ் பள்ளியில் படித்து இடைநிலைக்கு வந்த மாணவர்கள் ‘POL’ வகுப்பிற்கு போவதே இல்லை. அவர்தம் பெற்றோரும் பிள்ளைகளை அந்த வகுப்பிற்கு அனுப்பி வைப்பதில் அக்கறை காட்டுவதில்லை. அப்புறம் எப்படி தமிழ் மொழி வளரும்? இதைப் பற்றி தமிழ் அறவாரியம் அவர்தம் மாநாட்டில் பேசியதாகத் தெரியவில்லை. இப்பிரச்சனையைக் களைய எவ்வொரு தீர்மானமும் முன் வைத்ததாகத் தெரியவில்லை. இந்நாட்டில் தமிழ் மொழியை வளர்ப்பதில் தமிழ் அறவாரியம் இன்னும் சிறு பிள்ளையாகவே சிந்தித்துக் கொண்டு இருக்கின்றது. வயது முதிர்ந்த பிள்ளையாக தமிழ் அறவாரியம் மாறியதாக தெரியவில்லை. அவர்களுக்கு சிந்தனை மாற்றம் தேவைப் படுகின்றது. தமிழ் பெற்றோர்களுக்கும் சிந்தனை மாற்றம் தேவைப் படுகின்றது. தேர்வு தேவை இல்லையானால் ஒரு மாணவனின் அடவு நிலையை எவ்வாறு தீர்மானிப்பது? பிற இனத்தவர் தமிழ் போதிக்கும் ஆரியராக இருக்கும் இடைநிலைப் பள்ளியில் பரீட்ச்சை வைக்காமலேயே தேர்வு புள்ளிகள் போட்டு கொடுப்பதாக ஆசிரியக் குருவி ஒன்று காதோரமாக சொல்லி விட்டுப் போகுது. இதை படிப்போர் மனதில் இரசியமாக வைத்துக் கொள்ளுங்கள் காரணம் தமிழ் படித்து தமிழ் ஆசிரியராக வரும் பிறருக்கு தமிழ் மொழி மீது பற்று ரொம்ப அதிகம்!
தமிழ் பள்ளியில் ,இந்திய மாணவர்கள் ,குறிப்பாக தமிழ்மாணவர்கள் அதிகரிக்க.இந்தியர்கள் அதிகமாக வாழும் பகுதியில் தமிழ் பள்ளியை கட்ட வேண்டும்.வசதியற்ற சூலல் ,தூரம்,பொருளாதாரம் .இது போன்ற இடர்களை முதலில் களையவேண்டும் . முன்பு தோட்டங்களில் இருந்த பள்ளிகளை ,புறநகர் ,அல்லது நகர்களில் இந்தியர்கள் அதிகமாக வாழும் பகுதியில் கட்டவேண்டும் .மேலும் ,இழந்த தமிழ் பள்ளி உரிமைகளை புதிப்பிக்க வேண்டும் .
தமிழ் பள்ளி பட்டணங்களிலும், புற நகர்பகுதிகளிலும் கட்ட வேண்டும் என்பது எல்லோருடைய அவாதான். அரசாங்கம் நிலம் தர வேண்டுமே! நமக்கென்று கேட்கும் பொழுது இல்லை என்ற பதில்தான் மாநில அரசாங்கத்திடம் இருந்து வருகின்றது. நிலம் தேடி அலையும் கல்விக் குழுக்கள் அலைந்து, அலைந்து நிலப் படங்களைக் கொண்டு போய் தக்காரிடம் கேட்டால், இது கொடுக்க முடியாது. இது இன்னொரு தேவைக்கு ஒதுக்கப் பட்டுள்ளது என்று சாக்குப் போக்குதான் பதிலாக வருகின்றது. ஒரே முடிவு. கல்வி அமைச்சே இதில் முன் நின்று நிலத்தைத் தேடித்தந்து தமிழ் பள்ளியைக் கொடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் வற்புறுத்த வேண்டும். இல்லையேல், தனியார் உதவியுடன் நிலத்தை வாங்கி தனியார் தமிழ் பள்ளிகளை நாமே அமைத்துக் கொள்ள வேண்டும்.
முதலில் ஆரம்ப கல்விக்கு வரும் மாணவர்க்கு இடை நிலை செல்ல விருக்கு மாணவர்க்கு தேவையான பயிற்சி கொடுக்க முன் ஏற்பாடு செய்யுங்கள்
.எல்லாதிற்கும் பெற்றொரை நோக்கி விரல் நீட்டுவதை நிறுத்தவும்.
பிள்ளைகள் தேறவில்லை என்றால் முழுமையாக ஆசிரியரே காரணம்.
பெற்றொரை மறந்து விட்டு யோசித்தால் தெரியும் தவறு யாருடையது யென்று,
இன்று பாண்டிதுரை வசந்தம் நிகழ்ச்சி படும் மோசம்,
யாரையோ தர்காக்க முயற்சியே,
வாரியத்தில் வுள்ளவர்கள்,நன்கொடையாளர் இவர்களின் வாரிசுகளே நல்ல நிலை வகிக்குகின்றனர்,
பாரத நாட்டியம்,நடனம்,கடைசி ஆண்டுவரை இவர்களே மேடையில் அசத்துகின்றனர்,
காரணம் மற்றவரால் பயிற்சிக்கு வர இயலவில்லை,மற்றும்2,
பெராலிஹன் வகுப்பில் சென்று பாருங்கள் கள்ளம் கபடம் தெரியாத அந்த பிஞ்சு முகங்களை,
மலாய்,ஆங்கிலம் எதுவும் தெரியாது ஆறு வருடம் என்ன செய்தார்கள் தமிழ் பள்ளியில்,
ஒரு மலாய் சீன மாணவனிடம் ஏதேனும் கேட்கும் போது செவிட்டு வூமை ஜாடை மொழிக்கு நிகராக தோன்றுகிறது,
கேட்டால் பொறுப்பு பெற்றொர் கவனக்குறைவு,
ஆசிரியர்களை தலையில் தூக்குவதை நிறுத்தவும்,
7யெ அதுவே மாணவர்க்கும் ஆசிரியர்க்கும் தேவை,ஆனால் பின் தங்கிய மாணவரின் நிலை,அம்போ சிவா சம்போதான்,
நாராயண நாராயண
.
இன்றைய ஆசிரியர்களின் உண்மை நிலை தெரியாமல் நாம் பேசுவதில் அர்த்தமில்லை. ஆசிரியர்கள் மாணவர்களின் அடைவு நிலையைக் கல்வி அமைச்சின் இணையப் பகுதியில் நாள், வாரம், மாதம் அடைவு நிலை என்று பதிவு செய்ய பகுதி நேரம் போய் விடுகின்றது. அந்த இணைய தளத்திற்குள் செல்லவே பெரும்பாடாக இருக்கின்றது. அதை முடித்து விட்டு வகுப்பறைக்கு வந்து மாணவர்களுக்குப் போதனையை தொடக்கும் பொழுதே தலைவலி வந்து விடுகின்றது. அப்புறம் நாங்கள் எங்கே மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவது என்று ஒரே பாட்டை பாடுகின்றார்கள் ஆசிரியர்கள். ஆசிரியர்களுக்கு கொடுக்கப் படும் நிருவாக சம்பந்தப் பட்ட கோப்புகளை யார் செவ்வனே தயார் செய்து வைத்திருக்கின்றாரோ அவரே சிறந்த ஆசிரியர்! அவர் மாணவர்களுக்கு முறையாக போதிக்கவில்லையானாலும் கல்வி இலாக்காவின் பதிவில் இவர்தான் சிறந்த ஆசிரியர்! மாணவர்களின் அடைவு நிலை கோப்புகளை மாவாட்ட, மாநில கல்வி அதிகாரிகளின் மனதிற்கு ஒப்பும் வகையில் வைத்திருக்காமல் அவ்வாசிரியர் எவ்வளவுதான் சிறந்த முறையில் வகுப்பறையில் மாணவர்களுக்குப் போதித்தாலும் அவர் கடைசி பெஞ்ச் ஆசிரியர் என்று ‘prestasi’ புள்ளி போட்டுக் கொடுத்தால், அந்த ஆரிசியருக்கு எப்படி மாணவர்களுக்குப் போதிக்க ஆர்வம் வரும்? இது தமிழ் பள்ளியில் மட்டும் அல்ல. மற்ற பள்ளிகளிலும், இடைநிலைப் பள்ளிகளிலும் இதே நிலைதான். ஆசிரியர்களிடம் இருக்கும் பிரச்சனை ஒரு சிறிய பகுதிதான். பெரிய பிரச்சனை நம் கல்வி திட்டத்திலும், அதனை செயல் படுத்தும் முறையில்தான் உள்ளது. பெரிய பிரச்சனை கல்வி அமைச்சிடம் இருந்துதான் வருகின்றனது. இதற்குள் அடுத்த வருட யுபிஎஸ்ஆர் பரீட்ச்சை புதிய முறையில் நடத்தப் பட உள்ளதை இந்த வருடம்தான் தெரிவித்து அதற்குள் நடைமுறைக்குள் கொண்டு வந்தால், ஆசிரியர்தான் என்ன செய்வார்? மாணவர்தான் என்ன செய்வார்? இன்றைய கல்வி போதனையில் பெரிய பிரச்சனை கல்விக் கொள்கைகள் தயாரிப்பதிலும் அதனை செயல் முறைப் படுத்துவதிலும்தான் உள்ளது.
காரணம் சொல்பவர்கள் காரியம் சாதிப்பதில்லை,
அப்படியானால் குழந்தைகளை வாவசன் பள்ளிக்கு அனுப்பினால் எந்த சங்கடமும் வராது.தமிழ் பள்ளியை பொறுத்த மட்டில் பெற்றொர் பொறுப்பில்லை கவனக்குறைவு மற்றும்2.அனால் வாவசன் பள்ளியில் இதுபோன்ற குறை கூரல் இல்லை.எல்லா வசதியும் வுண்டு.
வாவசன் செல்பவர் மலாய் மொழியில் சிறந்தும் அந்நிய மாணவருடன் சகஜமாக பேசி பழகுவதை ஆனந்தமாக ரசிக்கலாம் ஆனால்,6ஆண்டு தமிழ் பள்ளியில் சேர்த்து அவர்கள் இடைநிலை பள்ளிக்கு சென்று அவமானம் படும்போது ரத்த கண்ணீர் தான் வரும்.யாம் மிகைபடுத்தி கூரவில்லை தயவு கூர்ந்து நேரில் சென்று காணுங்கள்,நிலைமை நிலவரம் தெளிவாக புரியும்.
மனிதரில் பல குணம்,அதில் ஒன்று அவர்கள் வைபவத்தில் சிறப்பா சமைத்து தயார் நிலையில் இருக்கும் பரிமாறும் பொது அவர்களுக்குள் அடிதுகொல்வர் அதை கண்ட மக்கள் அங்கிருந்து களைந்து செல்வர் அதன் பின் இவர்கள் நல்ல பெரிய தலை இலை போட்டு ஆற அமர சாப்பிடுவார்கள்.
அதபோல் தான் தமிழ் பள்ளி நிலவரமும்.தமிழ் பள்ளியில் தான் 7யெ எடுக்க முடியும்,கேட்பாற்ற சூலல்.
இன அடிபடையில் நடதபடுகின்றனர் மாணவர் ஆசிரியர் தேர்வும் அப்படியே,எம்மிடம் போதிய ஆதாரம் வுண்டு.
நாராயண நாராயண.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எனும் பழமொழி இங்கு எடுபடாது. தனியொரு பள்ளியில் நடைபெறும் தனிப்பட்ட பிரச்சனைகளை ஒட்டு மொத்த தமிழ் பள்ளிகளுக்கு ஒட்டி வைத்துப் பேசுவது தகாது. மேலும் ஒரு குறிப்பிட்ட தமிழ் பள்ளியைப் பற்றி , பெற்றோர் என்ற நிலையில் நின்று கொண்டு கருத்து எழுதுவோரின் அவலட்சனத்தை முன்னமே அப்பள்ளியின் ஆசிரியர்கள் செம்பருத்தியில் பகிர்ந்து கொண்டதை இன்னும் மறக்கவில்லை. தமிழ் பள்ளி ஆரியர்களை ஒட்டு மொத்தமாக குறை சொல்லும் பெற்றோர் முதலில் அவர்தம் முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொள்வது நல்லது.
அப்பள்ளியில் என் அணைத்து பிள்ளைகளையும் சேர்த்து படிக்கவைதோம் சில பிரச்சனைகள் தோன்றும் போது, யாம் பொறுமை கொண்டு தவிர்ததுண்டு.
ஆதலால் என் மீது என் குடும்பமே நம்பிக்கை இல்லா நிலையை தொட்டுவிட்டது.
கடைசி மகன் இறுதி ஆண்டின் விளையாட்டு போட்டியில் வஞ்சிக்க பட்டார்.நாங்கள் முறையாக பெற்றொர் சங்கம்,பள்ளி,போன்ற தரப்பிடம் சந்திப்பின் அதிர்ப்தி காரணம் கல்வி இலாகாவிடம் சென்றோம்.
இன்னும் பல தரப்பிடம் கொண்டு சென்று இருக்க முடியும் ஆனால் தவிர்த்துவிட்டோம்.முன்னாள் எம் செயல்பாடு முற்றிலும் வேறு இன்று வேறு காரணம் குழந்தைகள் தவறான வழிக்கு செல்ல யாமே காரனமாகிவிடகூடாது என்பதால்,ஆதலால் யாம் சாத்வீக வழியை கற்று கொடுத்தோம்.
என் மகன் வெற்றிபெற்றார் ஆசிரியர் பிராமணருக்கு சமம் ஆனால் இங்கே யாம் கண்டது வேறு.சிற்றினம் சேராதே என்ற அறிவுரையை கேளாது தமிழ் பள்ளியில் செர்பித்தது மாபெரும் குற்றம் உணர்ந்தேன்.அதே மகன் இடைநிலை பள்ளிக்கு செல்லும் போது பெரளிஹன் வகுப்புக்கு செல்ல ஆணை கொடுத்தனர்.
அங்கே திருத்தி போம் ஒன்றுக்கு கொண்டு சென்றனர்.நாராயணன் கொடுக்கிறார் ஏற்பது இந்த தாசனின் கடமை,பொறுமை பெரிய அஸ்திவாரம்.
வாழ்க நாராயண நாமம்.
“ஆசிரியர் பிராமணருக்கு சமம் ஆனால் இங்கே யாம் கண்டது வேறு.சிற்றினம் சேராதே என்ற அறிவுரையை கேளாது தமிழ் பள்ளியில் செர்பித்தது மாபெரும் குற்றம் உணர்ந்தேன்.”
இத்தகைய மகத்தான வார்த்தைகளைத்தான் அவலட்சனம் என்றேன். அகத்தின் அழகு முகத்தில் தெரியும். உள்ளத்தின் அழுக்கு வார்த்தையில் தெரியுது. எவ்வளவு குறள் படித்து எழுதி என்ன பயன்? நல்ல சிந்தனை உள்ளோருக்கு பிராமணரும், சிற்றினமும் தெரியாது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று திருமூலர் சொல்லியது புரியாமல் தமிழ் பள்ளிக்கு தன் பிள்ளைகளை அனுப்பி வைத்ததே பெரிய குறை என்று நினைக்கின்றேன்.
சீனர்கள் அவர்கள் அறிவு திறமையால் இன்று வணிகத்தில் கோடி கட்டி பரகின்றனர் . அனால் தமிழர்களின் நிலை அது இல்லை . படித்தவுடன் வேலை கேட்க போகும் இடம் சீன நிறுவனமே . இப்போது அவர்கள் சீனாவில் இருந்தோ இல்லை இங்கே உள்ள சீனர்களுக்கே முதல் சலுகை தருகின்றனர். தமிழ் மொழி தமிழ் இனம் என்று உயர்த்தியும் பிற தென் இந்தியர்களை கேவலபடுத்தி பேசும் தமிழ் எழுர்ச்சிபடை போன்றவர்களுக்கு ஒன்றை சொல்லி கொள்கிறேன் . உங்கள் கருத்துகளை முக புத்தகத்தில் போட்டால் தமிழ் பள்ளிக்கு தமிழர் அல்லாதவர்கள் பிள்ளைகளை அனுப்ப மாட்டார்கள் . தமிழ் அல்லாதவர்களுக்கு தமிழை தாங்க வேண்டிய அவசியம் என்ன உள்ளது ? ஆகவே உங்கள் நாவை அடக்கி பேசுங்கள் .
அவலட்சனம் என்றால் என்ன?,வுணர்வு அடிபடையில் வாதம் துவங்கவோ முடிவாய் கொள்வதோ கூடாது.பிராமணர் அறிவை போதிப்பவர் ஆனால் யாம் கண்டதோ வேறு,அதாவது மாறானவை ஆகவே சிற்றினம் சேராதே குரலின் கருத்தை வுணர்ந்தேன் வெளிபடுதினேன்.
எனக்கு ஒன்றுமட்டும் புரியவில்லை சிற்றினம் என்றால் சிலருக்கு மட்டும் ஏன் மூக்குக்கு மேல் கொபம்வருகிறது.
அனால் சிலர்க்கு நாம் கொண்டுவந்த சங்கதி விளங்கவில்லை ஆனால் விரண்டாவாதம் செய்ய சளைப்பே இன்றி சிந்திக்கின்றனர்.
கட்டாயம் அவர்கள் 7,16,25,திகதிகளில் பிறந்தவராய் இருப்பார்.
என்ன செய்ய வாங்கிய வரம்,
வாழ்க நாராயண நாமம்.
பரம் சொல்வது உண்மைதான். தமிழர் அல்லாதவர் தமிழ் படித்து விட்டுதான் இன்று தமிழ் பள்ளி மீதும், தமிழ் மொழி மீதும், தமிழர் மீதும் தாழ்வு மனப்பான்மையை வைத்துள்ளீர். எப்படி மலாய்க்காரர் அல்லாதவர் மலாய் மொழியை படித்து அம்மொழியின் மீது பற்று இல்லாமால் இருக்கின்றாரோ அதேபோன்ற நிலையைதான் இன்று தமிழர் அல்லாதவரிடமும் நாம் காண்கின்றோம். இதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை. இதனால் தமிழருக்கு ஒரு பயன் உண்டு. தமிழ் மொழி சார்ந்த அல்லது தமிழ் மொழியைக் கொண்டு தொழில் செய்ய வேண்டிய இடத்தில் இனி தமிழருக்கு வேலை வாய்ப்புக்கள் அதிகமாக கிடைக்கும். நன்றி தோழர்களே. எப்படி வந்தாலும் தமிழ் படித்தவர்க்கு தமிழ் சோறு போடுது பார்த்தீர்களா. இதனால்தான் மானமுள்ள தமிழர் அனைவரும் அவர்தம் பிள்ளைகளை ஆரம்ப கல்வி பெற தமிழ் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பது. சீனர்கள் எப்படி அவர்தம் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனரோ அதைப்போலவே நாம் நம் பிள்ளைகளை தமிழ் பள்ளிக்கு அனுப்புவதை கடமையாக கொள்வது காலத்தின் கட்டாயம். இதை நம் மக்களிடையே ஒருவருக்கொருவர் பேசி மேம்படுவது நலம்.
அவலட்சணம் என்று சொன்னதற்கு மன்னிக்கணும் காய். தாங்கள் இன்னும் பத்தாம் பசலியாக இருப்பதைப் பார்த்தால் எமக்கு தங்கள் மீது பரிதாபம்தான் வருகின்றது. பிராமணர் என்பார் பிரம்மத்தை உணர்ந்து பூசிப்பவர் ஆவர். அவர்தம் வருணாசிரம கோட்பாட்டின் அடிப்படையில் மற்றொரு பிராமணருக்கு மட்டுமே அறிவைப் போதிக்க முடியும். குருவாக இருக்க முடியும். இல்லை என்று மறுத்தால் வேதாந்தத்தை பிராமணரால், பிராமணர் அல்லாதவருக்கு குருவாய் நின்று போதிக்க முடியுமா? இன்று காலம் மாறி விட்டது கருத்தும் மாறி விட்டது. அறிவுள்ளோர் எவரும், தகுந்த கல்வித் தகுதி பெற்றோர் எவரும் தமிழ் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றலாம். அதனால் அவ்வாசிரியர்களைப் பார்த்து சிற்றினம் என்று தாழ்த்திப் பேசுவதால் தங்களை உயர்ந்தோர் என்பவருக்கு எங்கனம் அறிவு புத்தியில் ஏறும்? இதுதான் தங்கள் பிள்ளைகளின் அடைவு நிலை குறைந்ததர்க்குக் காரணமோ? தான் குருவை விட உயர்ந்தவன், எல்லாம் தெரிந்தவன் என்று நினைக்கும் மாணவனுக்கு கல்வி அறிவு எதற்கு? குரு வழிபாட்டில் நின்று ஏமாந்து இப்பொழுது திருவள்ளுவர் பக்கம் நாடி இருக்கின்றீர். திருவள்ளவர் தங்களை கை விட மாட்டார் என்று திண்ணமாக நம்பலாம். இப்பொழுது எண் கணிதத்திற்குப் போய் உள்ளீர். இது எங்கு போய் முடியப் போகின்றதோ! சிவ. சிவ.
காலத்தின் கட்டாயத்திற்கு அப்பாவி மக்களை பலியிடுவத்தின் நோக்கம்.
வாவசன் பள்ளிக்கு அனுப்புவதின் மூலம் எல்லா குழந்தைகளும் இடைநிலை செல்லும் பொது களங்கமோ கலக்கமோ சிறிதேனும் இருக்காது.
வசந்தத்தில் சொல்கின்றனர் யு பி எஸ் ஆர் முடிந்த பின் இடையில் வரும் இரு மாத இடைவெளி காலத்தில் பெற்றொர் கற்று கொடுக்க வேண்டுமாம்,ஆனால் ஆறு வருடம் இவர்கள் என்ன செய்தார்கள்?,
பெட்ரோர்களே வாவசன் பள்ளியில் பயிலும் மாணவனிடம் நேரில் சென்று விசாரித்து அறியவும்.
வாவசன் பள்ளியை நேரில் சென்று காணுங்கள்,பின் முடிவுசெய்யுங்கள்.
திரு.பாண்டிதுரை தமிழ் பள்ளி வாசமே நுகராதவர் ஆனால் தமிழ் செய்தி,நிகழ்ச்சி வுணர்ந்து நடத்தவில்லையா?,
தமிழ் பள்ளியில் பட்டதாரி ஆசிரியர் கிடையாது அவர்களுக்கு ஆசிரியர் துறையே இறுதி வாய்ப்பு,பிழைப்புக்கு வந்தவர்கள்,வேடமோ தியாகி.
வளர்ந்து வரும் காலத்திற்கு எதிர் நீச்சல் போட்டு காலத்தை வெற்றி கொள்ள எது தம் அன்பு குழந்தைக்கு சிறந்தவை என்று நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்,
வசதிகள் நிறைந்து கிடக்கிறது ,அங்கே தமிழ் போதனையும் வுள்ளது,
வுங்கள் மாணவரும் எ கள் பெற்று வுங்கள் வுழைப்பை கௌரவிக்க ஒரு வாய்ப்பை கொடுத்து பாருங்கள் வாருங்கள் வாவசனுக்கு,
வாழ்க நாராயண நாமம்.
ம.இ.க. என்று கட்சி இருக்கே, அந்த கட்சியில் தமிழில் வசன நடையில் சிறப்பாகப் பேச வல்லவர் தானை தலைவர் என்று ஒருவர் இருந்தார். அவர் காலத்தில் பண்டிதன் அரசியல் பேச்சுத் திறனில் சிறந்து விளங்கிப் போனார். பின்னர் வந்த ம.இ.க. தலைவர்களில் தமிழில், அழகான வசன நடையில் பேச வல்லவர் டத்தோ சரவணன் அவர்கள். இன்று தமிழ் மலர் பத்திரிகை படிக்கையில், எங்கள் தமிழ் இயக்கத்தின் ஏற்பாட்டில் மலேசியப் பெண் எழுத்தாளர்களின் எழுச்சி மிகு நூல் வெளியீட்டில் டத்தோ சரவணன் அவர்கள் பாடிய கவிதை வரிகள் கண்ணைப் பறித்தது. இதோ:
“ஆயிரம் சாஸ்திரம் அறத்தை மறந்தது
பாய்கின்ற கணையோ பின் வழி வந்தது
நேர்வழி அபிமன்யு தேர்வழி யெனும்
போர்வழி யேதோ பாதை புரண்டது.
துள்ளி எழுந்த தலைவனுக்கு கெதிராய்
வெள்ளிகள்தானே விரைவாய் பறந்தது
ஒற்றை இரவில் ஓங்கிய துரோகம்
உற்றவர் வகுத்தனர் ஊழலின் வியூகம்
துரோணர் தடுத்தும் துரோகம் சூழ்ந்தது
வரலாறு இதனை வெட்கமென்றது
சரியாய் உடைத்தான் சக்கர வியூகம்
வறியார் உடைத்த சூழ்ச்சிகள் அதிகம்
மௌன சாட்சிகள் மனதை உறுத்தும்
தவறிய தழும்பே தர்மத்தை நிறுத்தும்
தரையை தொட்டது சில காலமே
மேலே காத்திருக்கு சிம்மாசனமே”
நடந்து முடிந்த ம.இ.க. தேர்தலில் இராமனின் குறுஞ் செய்திகள் விளையாடி, மணியானவர்களின் வியூகத்தில் வீழ்ந்ததை எண்ணி பாடிய கவிதை என்பது நமக்கு இங்கு தேவை இல்லை என்றாலும், இப்படி சிறந்த தமிழில் பேச வல்லார்களுக்கு ம.இ.க. வில் இடமில்லாமல் ஆக்கிய ம.இ.க. தொண்டர்கள் தமிழை வளர்க்க வல்லவர்களா என்று எண்ணிதான் இக்கவிதையை இங்கே மீண்டும்
பிரசுரித்தேன்.
சரவணன் அவர்கள் அறிமுகம் செய்தது லிட்டல் இந்தியாவே லிட்டல் தமிழ்நாடு அல்ல என்பதை தாழ்மையுடன் குறித்துக்கொள்ள வேண்டுகிறோம்.ஆதலால் ஹிந்துவே எங்கும் எதிலும் அறிக நன்று.சரவணன் கவிதையில் அடிபடையாக வைத்தது திராவிடத்தை அல்ல என்பதை கண்டு தெளிக,நன்மையோ/தீமையோ வேதமே வழிகாட்டி மஹா பாரதம்/ராமாயணம்,எப்படி வாழவேண்டும்/எப்படி வாழகூடாது என்பதை போதிக்கும் காவியம்,
வாழ்க நாராயண நாமம்.